Advertisement

அவன் சிரித்து விட்டு “ஏ (EA) ஃபர்ஸ்ட் ஃப்ளோர் காபி டே” இன்பர்மேஷன் போதுமா என்று கேட்டுக் கொண்டிருக்கவும் மறுமுனையில் எந்த பதிலும் இல்லை

 அவன் யோசனையுடன் திரும்பவும் அங்கு சிரித்துக்கொண்டே கவி நின்றிருந்தாள்.

 உடனே அவன்,”ஹரி எங்கே?” என்று கேட்கவும் சற்று தடுமாறியவள் சமாளித்துக்கொண்டு,” நான் பிரண்டோட வந்தேன்” என்றாள். 

“எங்கே உன்னோட ஃப்ரண்ட்? என்று அவன் கேட்க அவள் அவனை தன் இருக்கைக்கு அழைத்து வந்தாள் கவி.

அதுவரை வேறு யாரோ என்று எண்ணியிருந்த கண்மணிக்கு அவள் யாரை பார்க்க வேண்டும் என்று தேடினாளோ அவனே வந்து நிற்கவும் கை கால் புரியவில்லை. 

இவன் எப்படி இங்கு என்று யோசிக்கும் போதே கவி கூறிய தன் அத்தை பையன் நினைவு வர மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றாள். 

அரவிந்த் அவளை ஆச்சரியமாக பார்க்க அவள் தலையை கவிழ்த்து கொண்டாள். 

ஆனாலும் கவி விடாமல்,” என்னடி இவ்வளவு நேரம் நல்லாத்தான இருந்த?”

என்ன திடீர்னு  இப்படி இவனுக்கு மரியாதை எல்லாம் கொடுக்கிற?”

 “இது ஒரு அட்டு பீசு”

 “நீ போய் இதுக்கெல்லாம்  பயந்துட்டு”  என்றாள்.

கவி சொல்வதை கவனியாமல் அரவிந்தும் தலை கவிழ்ந்து பார்க்கவும் கவி,” அவர்களிடம் என்ன ஏதாவது தொலைந்துவிட்டதா?” 

இல்ல நான் மொக்கை போடுறனு “இன்டைரக்டா ஆக்டிங்ல காட்றீங்களா” என்றாள். 

அப்போதுதான் கண்மணி தன் தலையை உயர்த்தி அரவிந்தை பார்த்தாள். 

அவன் இன்னமும் தேடுவது போல் பாவனை செய்து கொண்டே  அவளின் செய்கைகளை கவனித்துக்கொண்டிருந்தான். 

இப்போது பார்த்து அரவிந்தின் மொபைல் சத்தமிடவும் அவசரமாக எடுத்து ,”ஹலோ” என்றதும் அவி! என்றான் ஹரி.

 “அங்க என்ன பண்ணிட்டு இருக்க நீ?”

” உன்னோட ஆளு உன்ன பாக்காம பேசாம இளச்சி போயிட்டா தெரியுமா?”  என்று அவி கூறியதும் ஹரி சிரித்து விட்டான். 

பிறகு தன் மொபைலை கவியிடம் நீட்டினான் அவி. 

அவள் எதுவும் பேசாமல் இருக்கவும்,” ஹரி வேண்டுமென்றே இருமினான். 

அவ்வளவுதான்,” என்ன ஆச்சு அத்தான்? உடம்பு முடியலையா?” என்றாள் கவி. 

அவன் வேகமாய் இன்னொரு தடவை ப்ளீஸ் ப்ளீஸ் என்று கெஞ்சவும் அவள் சிரித்துவிட்டு “டேய் ஹரி!  நீ அடி வாங்கப்போற பாரு” என்று  கூறவும் இப்போது அவன் சிரித்து விட்டான்.

சிறிது நேரத்திற்குப் பின் ஹரி,” கவி” என்றழைத்தான்.

அவள் ம்… என்று முனகியதும் “ஐ லவ் யூ”

“ஐ… லவ் யூ சோ மச்”

 “உன்ன உனக்காக மட்டும் நேசிக்கிறேன்” கவி 

ஒவ்வொரு விநாடியும்

 உனக்காகவே காத்திருக்கும்

 என் நேரம் 

உனக்காகவே துடிக்கும் 

என் இதயம் 

உன் தலை கோத துடிக்கும்

 கரங்கள் 

உன் பிம்பத்தை நோக்கும்

 என் கண்கள்…

 இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் “மைடியர் ஏஞ்சல்”.ஒரு லைன்ல சொல்லணும்னா “நான் நீயாகி போனேன்” என்று கூறியவன் “என்ன கவி இன்னும் என் மேல இருக்கிற கோபம் குறையவில்லையா?” என்று கேட்டான். 

அதற்கு கவி,” இல்லை அத்தான்! எனக்கு இந்த நிமிஷமே உங்கள பாக்கணும் போல இருக்கு” என்று கூறியதும்,” இது போதும் கவி! நான் போன வச்சிடறேன்” என்று கூறி வைத்து விட்டார். 

கவி எழுந்து சற்று தூரம் வந்ததும் அவி அவளிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தான். 

“அவனுக்கு அவள் செய்யும் ஒவ்வொன்றும் வித்தியாசமாய் தெரிந்தன”

ஏன் அவளுக்கும் கூடத்தான் அது புரியவில்லை. 

“அவன் நாளைக்கு என்ன ப்ரோகிராம்?” என்று கேட்க,” தாரிகையோட மேரேஜ்”  என்றாள் அவள். 

அவன் சிரித்து விட்டு,” நான் ஒன்னும் பூனையும் இல்ல! அதே மாதிரி நீயும் எலியும் இல்ல”

“சோ,” பயப்படாத! நான் உனக்கு கடிச்சு எல்லாம் வைக்க மாட்டேன்” என்றதும் அவள் சிரித்துவிட்டாள். 

பிறகு எழுந்து கவியிடம் சென்றான். 

கவி சிரித்த முகத்துடன் வருவதைப் பார்த்து ” எங்க பியூஸ் போச்சோ இங்க பல்பு பிரகாசமா இருக்கு” என்றான். 

அவள் அவனை அடிப்பதற்காக துரத்தவும் அவன் கண்மணியின் பின்னால் நின்று கொண்டு அவளை தள்ளி விடுவதாக பயமுறுத்திக் கொண்டே இருந்தான்.

 ஒருவழியாய் மூவரும் கிளம்பினார். 

கண்மணியை அவள் வீட்டில் விட்டுவிட்டு வரும் வழியில் கவியிடம் திரும்ப அவள் அவனிடம் ஏண்டா இந்த மாதிரி எல்லாம் லுக் விட்டு பயமுறுத்துற!  ரோட்டை பார்த்து காரை ஓட்டு.

 வீட்டுக்கு சீக்கிரம் போகலாம்

 இன்னைக்கு எங்க வீட்ல ஸ்பெஷல் என்றாள். 

ஓகே என்று கூறி விட்டு காரின் வேகத்தை அதிகரித்தவன் கவியின் வீட்டின் முன் தன் காரை நிறுத்தினான். 

கார் சத்தம் கேட்டதும் ஓடிவர 2  “ஹட்ச் டாக்ஸ்” எங்கே காணோமே? 

இங்கே இல்லன்னா, அப்போ எங்க வீடுதான்! என்று கூறிக்கொண்டே  மேட்டில் காலை வைத்தவன் வழுக்கிக் கொண்டே செல்ல அங்கு அவனுக்கு நேராய் பீங்கான் பாட்டில்களில் செயற்கை  செடிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. 

“ஆன்ட்டி என்னை காப்பாத்துங்க!!! உங்க வீட்டு பிசாசுங்க , ஏதோ மந்திரம் போட்டு வச்சிருக்காங்க” என்று அலறினான் அவி.

அவன் அந்த பூச்செடிகளை நெருங்கும் சமயத்தில் அவனுக்கும் பூச்செடிகளுக்கும் இடையில் ஓர் தலைகாணியை முட்டுக்கொடுத்தாள் அபி. 

“அவன் அப்பாடா! பிழைத்தோம்” என்று நினைக்கையில்,” அவன் கால்கள் நகர மறுத்ததை உணர்ந்து கீழே பார்த்தான்”. 

மீண்டும் “ஆன்ட்டி அங்கிள்” என்று கத்தவும் அவனை வெளியில் இழுத்தன இரு கைகள். 

அவன் யாரென்று திரும்பவும் அங்கு நின்றிருந்த கோகுலை  பார்த்து கைகளை நீட்டி “நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு” என்று பாடிக்கொண்டே சென்று அவனை அணைத்துக் கொண்டான். 

சிறிது நேரம் கழித்து அபியும் அக்சுவும் சோபாவின் பின்புறம் இருந்து வெளியில் வந்தனர். 

அவர்களைப் பார்த்து “இருடா மச்சான் வரேன்” என்று கூறிவிட்டு வேகமாக அவர்களைத் துரத்தினான்.

இருவரும் கவியின் பின்னால் ஒளிந்துகொண்டு அவனுக்கு அழுகு காட்டினர். 

அவன் ,”சரி பொழச்சி போங்க!” என்று கூறியதும் இருவரும் அவன் பின்னால்   செல்லவும் அவன் திடீரென திரும்பி இருவரையும் தன் இரு கைகளால் பிடித்துக்கொண்டான். 

அவர்கள் ,” அத்தான் ப்ளீஸ்!” என்று கேட்டும் அவன் விடாமல் அவர்களின் காதை பிடித்து திருகி கொண்டிருந்தான். 

திடீரென அபி,” கோகுல் அந்த பெட்ரூம திறடா! சீக்கிரம் ஓடிப்போய் திற” என்றதும் கவி அவளிடம்,” என்னடி?” என்று கேட்டாள். 

அவள் பதிலேதும் சொல்லாமல் அந்த அறையை உற்றுப் பார்க்க சிறிது நேரம் கழித்து அதிலிருந்து சேரனும் தேவகியும் வெளியில் வந்தனர்.

அபியும் அக்சுவும் அவர்களைப் பார்த்து சிரித்துக் கொள்ள,” கவி தன் பெற்றோரிடம் என்னம்மா இவ்வளவு நேரம் எங்க இருந்தீங்க?”

” நான் கூட நீங்க வெளியில போயிட்டீங்களோனு  நெனச்சேன்”. 

இல்லன்னா, “உங்க செல்ல அவி அலற  அமைதியாய் இருப்பீங்களா?” என்றாள். 

அதற்குள் கோகுல்,” அக்கா அவங்கள  தான் இவங்க உள்ளே வச்சு பூட்டிட்டாங்களே! அப்புறம் எப்படி அவங்க காப்பாற்றுவது?” என்றான். 

கவி அவர்களை நோக்கி வேகமாய் வர அனைவரும் சிறிது பயந்து விட்டனர். 

ஆனால்,” அருகில் சென்று தன் தங்கைகளை இரு கைகளை நீட்டி அணைத்துக்கொண்டு நல்ல வேலை பண்ணிட்டீங்க டி!”

 “ரொம்ப நாளா நானே செய்யணும்னு நினைச்சேன்”

 ஆனா,”முடியல “

அதான்,” என் தங்க கட்டி, நீங்க பண்ணிட்டீங்களே” என்று கூறவும் தேவகி அவர்கள் மூவரையும் பார்த்து “கழுதைங்களா நில்லுங்கடி” என்று துரத்தவும் அவர்கள் சேரன்  பின்னால் ஒளிந்து கொள்ள வேறு வழியின்றி அவர்களை விட்டுவிட்டார் தேவகி. 

பின்பு அனைவரும் சாப்பிட அமர அவர்களுக்குப் பரிமாற தேவகி தொடங்கிய போது அவரையும் தங்களுடன் வரும்படி கூறினான் அவி.

 அவர் இல்லை என்று வாய் எடுக்கும் போதே தன் கணவனின் கண்ணசைவில் உட்கார்ந்துவிட்டார். 

அவரவர் அவர்களுக்குத் தேவையானதை அவர்களே பரிமாறிக்கொண்டனர். 

ஒருவழியாய் இரவு உணவு முடிந்து அவன் வீட்டுக்கு கிளம்பினான்.

அவனை வழியனுப்பி விட்டு அனைவரும்  உறங்கச் சென்று விட்டனர்.

ஆனால் கவிக்கு தான் ஆனந்தத்தில் உறக்கமே வரவில்லை.

அவள் ஆசைப்படியே அவள் கணவன் அவளை புரிந்து கொண்டு விட்டான். 

அந்த ஆனந்தத்தில் டைரியை எடுத்து அவள் அதில்

” மரணத்திலும் சிரிக்கிறேன் 

உன்னை கணவனாய் பெற்றதற்காக 

ஆனால் 

ஜனனத்திலும் இறந்தேன்

 உன்னை காணாத வரை” 

 இந்த வரிகளை எழுதிவிட்டு அப்படியே உறங்கிப் போனாள்.

அலாரம் அடித்த ஓசையினால் கண்விழித்தவள் அவசரமாய் சென்று குளியலறைக்குள் புகுந்து குளித்துவிட்டு வெளியில் வந்தவள் தன் ஈரக் கூந்தலை துவட்டிக்கொண்டே  நேற்றைய தினத்தை  நினைத்து அகமகிழ்ந்தாள்.

பின்பு தன் எளிய ஒப்பனைகளை முடித்துக்கொண்டு கீழே வந்தாள் கவி.

 வீடியோ கேம் விளையாடிக்  கொண்டிருந்த கோகுல் தன் தமக்கையை நோக்கிவிட்டு ,”பாவம் மாமா!” என்று கூறவும் அபியும் அக்சுவும் சிரித்துக்கொண்டே கவியை ஓரக்கண்ணால் பார்த்தனர்.

அதற்குள் அங்கு வந்த தேவகி தன் மகளுக்கு திருஷ்டி கழித்து விட்டு உணவை ஊட்டி விட அங்கிருந்த அனைவரும் ,”ஓஹோ!” என்று கத்த கவிக்கு புரை ஏறிவிட்டது. 

தேவகி கவியின் தலையில் தட்ட சேரன் தண்ணீர் எடுத்துவர ஓட அபியும் அக்சுவும் கவியின் கண்களை துடைத்து விட கோகுல் கவியின் தொண்டையை மென்மையாக வருடிக் கொடுத்தான். 

சிறு அமைதிக்கு பின்,” சரி! எல்லோரும் அவங்க வேலையை பார்க்காமல் வெட்டியா என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்று கூறி விட்டு கவி ஓட அனைவரும் அவளை துரத்திக் கொண்டே வரவும் வேகமாய் கதவை நோக்கி ஓடியவள் எதிரே வந்த ஹரிகேஷ் மார்பில் முகம் புதைத்தாள்.

“வாங்க மாப்பிள்ளை!”  என்று தேவகியும் சேரனும் கூறி வரவேற்க “ஹாய் மாம்ஸ்” என்றனர் குட்டிஸ் மூவரும்.

 சிரித்துக் கொண்டே,” என்னடா கவி இது! எல்லோரும் நம்மையே பார்க்குறாங்க?” என்று கூறவும் திரும்பியவள் தன் குடும்பத்தினரின் பார்வையில் முகம் சிவந்தாள். 

கோகுல்,” ஹரியிடம் மாமா அக்கா நல்லா மூட்ல இருக்கும்போதே கூட்டிட்டு போய் விடுங்கள்”

 “இந்த இரண்டு வேதாளங்களும் எதையாவது சொல்லி மூடக் கெடுத்தாலும் கெடுத்துடுங்க” என்று அபியும் அக்சுவையும் பார்த்து கூறவும் டேய் “முளைச்சு மூணு இலை விடல”

” நீ எல்லாம்  என்னமா பேசுற?”

” நில்லுடா” என்று கூறிக்கொண்டே அவனை துரத்திக்கொண்டு வெளியில் சென்று விட்டனர். 

“நீங்க கிளம்புங்க லேட்டாகிடுச்சி” என்று சேரன் கூறவும்  கவிஹரி சிரித்துக்கொண்டே விடைபெற்றனர். 

நம்மவர்கள் திருமண மண்டபத்தில் நுழையும்போதே அவர்களை புன்னகையுடன் வரவேற்றனர் மகேஷ் பாமா தம்பதியினர் (தரீகாவின் பெற்றோர்). 

கவி மணப்பெண் தோழிகளுடனும் ஹரிகேஷ் மணமகன் தோழர்களுடனும்  சேர்ந்து கொண்டனர்.

ஏற்கனவே தாரிகையின் அருகில் இருந்த கண்மணி  கவியை அழைக்கவும் அங்கு கண்மணியுடன் சேர்ந்து கொண்டு மணப் பெண்ணுக்கான அவர்களின் கேலியை ஆரம்பித்தனர். 

கண்மணி தாரிகையை பார்த்து “கண்ணன் வரும் வேலை அந்தி மாலை காத்திருந்தேன்” என்று பாடவும் தாரிகையின் முகம் ரோஜாவின் நிறமானது. 

அடுத்து கவி,” அதோ!  உங்கள் ராஜகுமரன் பவனி வருகிறார்”

” கொஞ்சம் உங்கள் தலையை நிமிர்த்தி அவரை பார்க்குமாறு அவரின் தூதில் கூறியுள்ளார்” என்று கூறவும் மூவரும் சிரித்துக்கொண்டே அந்த பக்கம் பார்த்தனர்.

பட்டு வேட்டி மற்றும் சட்டை துண்டுடன் அசோக் மணமகனாக உலாவர அரவிந்த் மற்றும் ஹரி அவனுக்கு துணையாக உடன் வந்தனர்.

அரவிந்தை அங்கு எதிர்பார்க்காத கண்மணி அவனை ஆச்சரியமாக பார்க்க அவன் அவளை பார்த்துக் கண் சிமிட்டினான்.

 அதே மாதிரி ஹரி கவியை ரசனையுடன் பார்க்க அவள் முகம் சிவந்து கண்மணியின் புறம் திரும்பவும் அதே சமயம் அரவிந்தின் லீலையினால் முகம் சிவந்த கண்மணியும் கவியின் பக்கம் திரும்ப இருவரும் மோதிக் கொண்டனர். 

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர். 

அப்போது அங்கு வந்த கோகுல் கவியிடம்,” அக்கா அபி கூப்பிடுறா?”

” அந்தப்பக்கம் தோட்டத்தில் இருக்கா!”

” போ போய் பாரேன் ரொம்ப அவசரம்” என்று கூறவும் அவள் அவசரமாய் சென்றாள். 

அவள்  செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவன் வாய்விட்டு சிரித்தான் கோகுல்.

அவனை ஒரு மார்க்கமாய் பார்த்தாள் கண்மணி.

அதற்குள் கோகுல் சிஸ்டர் முறைக்க வேண்டாம்.

 பின்னாடி இதுக்கெல்லாம் “தேங்ஸ்” சொல்லுவீங்க. 

சரி!

” உங்களுக்கும் வேலை வந்தாச்சு” என்று கூறிவிட்டு அவன் செல்லவும் அந்த இடத்தை அரவிந்தன் நிரப்பினான்.

 திடீரென அவனது அருகாமை தந்த கிளர்ச்சியில் அவள் வேறு புறம் வேடிக்கை பார்ப்பது போல் அவன் பார்வையை தவிர்த்தாள்.

 அவன் அவளது செய்கைகளை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.

அவள் பேசாமல் இருக்கவும் அரவிந்த் அவளிடம் “ஐஸ்”  உன்கிட்ட நான் நிறைய விஷயம் பேசணும்?

” நீ எப்ப ஃப்ரீ னு  சொன்னா நாம பேசலாம்!” என்று கூற அவன் என்ன சொல்வான் என்பதை  நினைத்து அவள் கனவுகளில் மூழ்கி விட்டாள். 

அவன் குறும்புடன் ,”ஓகே பெல்! நீ இப்போ ரொம்ப பிசியா இருக்க போல அப்புறம் பார்க்கலாம் ” என்று கூறிவிட்டு அவள் பதிலை எதிர்பாராமல் சென்றுவிட்டான்.

Advertisement