Advertisement

கவி,” கண்மணியிடம் அரவிந்தின் வைப் ஆக  நீ வந்தா தாங்க எல்லாரும் ரொம்ப சந்தோஷப் படுவோம்”  என்று கூற அதற்கு கண்மணி என் பாக்கியம் என்றாள். 

அவ்வளவு தான்! 

“அவளைத் தூக்கி ஒரு சுற்று சுற்றிவிட்டு நான் ஒரு போன் கால் பண்ணிட்டு வரேன்” என்று கூறி பால்கனி பக்கம் சென்று விட்டாள் கவி.

கண்மணி  சென்று சோபாவில் அமர்ந்து டிவி பார்க்கவும்,” அரவிந்த் மெதுவாய் வந்து அவளிடம் பசிக்குது மேடம்!”  என்றதும் அவசரமாய்  தூக்கிவாரிப் போட்டு விட்டது அவளுக்கு.

பிறகு அவளருகில் இருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு சமையலறைக்குள் சென்று சமைக்கத் தொடங்கி விட்டாள்.

அவன் சிறிது நேரம் டிவி பார்த்துவிட்டு மீண்டும் சமையலறைக்குள் சென்றான். 

“அவளிடம் ஏதேனும் உதவட்டுமா? என்று அவன் கேட்டதற்கு ஒரு நிமிடம் என்று கூறி மசாலாவின் ருசியை அறிந்து கூறுமாறு கூறினாள்”. 

“அவனும் சாப்பிட்டுவிட்டு சூப்பர்! 

 ஆனா எனக்கு ரொம்ப பசிக்குது” என்றான். 

அதற்கு அவள் அவனிடம்,” சரி நீங்க ஏதாவது பேசிட்டு இருங்க நான் அதுக்குள்ள செய்து முடித்து விடுகிறேன்” என்றாள்.

அவன் சாவகாசமாய் சமையல் அறை சலவைக் கல்லில் அமர்ந்து கொண்டான். 

“அவள் வேகமாக கட்லெட்டிற்கு தேவையான அளவு மாவை எடுத்து டிஃபரண்ட் ஷேப் செய்து கொண்டிருந்தாள்”. 

“அவன் அந்த வடிவங்களுக்கு ஏற்றாற்போல் மசாலாவை உள்ளே வைத்து எண்ணெயில் வறுத்து எடுத்தான்”. 

“ஓரளவு முடியும் தருவாயில் அரவிந்த் கண்மணியிடம் ஐ லவ் யூ மை பியூச்சர் என்று கூறிவிட்டு தயாரித்து வைத்திருந்த கட்லெட்டுகளையும் அதற்கான சட்டினியையும் எடுத்துக் கொண்டு உணவு மேசை மீது வைத்துவிட்டு அவள் முன்பு வந்து நின்றான்”. 

அவன்,” அந்த லூசு வரதுக்குள்ள உன்னோட பதில சொல்லு”

” இல்லைன்னா நாம ரெண்டு பேரும் அடுத்த ஜென்மத்தில் தான் பேச முடியும்” என்றதும் அவள் அவனிடம் ,”இதைப்பற்றி நீங்கள் கவி கிட்ட பேசுங்க”

” அவ என்ன சொன்னாலும் எனக்கு ஓகே!” என்றாள் கண்மணி.

“இது என்ன வேடிக்கையான பேச்சு!” என்று அரவிந்த் கோபமாய் கேட்கவும் அவள் முதன் முறையாய் அவனிடம் உங்களுக்கு சஸ்பென்ஸ் ஆக இருக்கட்டும்னு நெனச்சேன், ஆனா அது முடியல”

” சரி நீங்க என்னோட ஆன்சர் கேட்டீங்க இல்ல!  உங்களுக்கு முன்னாடியே கவி நீ எங்களோட அரவிந்தன் வைப் ஆ வந்தால் சந்தோஷம்!” என்று கேட்டாள். 

“அதற்கு நான் அது என்னோட பாக்கியம் கவின்னு சொன்னேனோ இல்லையோ என்ன தூக்கி சுத்த ஆரம்பிச்சுட்டா அரவிந்த்”.

“இப்ப கூட இந்த விஷயத்தை பத்தி பேச தான் போயிருக்கா!” என்றவளிடம் ,”சாரி ஸ்வீட் ஹார்ட்!” என்றான் அரவிந்த். 

“அதற்கு கண்மணி அவனிடம் கவி மாதிரி ஒரு பொண்ண பாக்குறது ரொம்ப கஷ்டம் அதிலயும் உங்களுக்கும் எனக்கும் அவ ஒரு பிரண்டா கிடைப்பதற்கு நான் கொடுத்து வச்சிருக்கணும்” என்றாள்.

அப்போது அங்கு வந்த கவி,”  டேய்! ஹரி உன்ன கால் பண்ண சொன்னார்” என்று கூறிவிட்டு,” சரி டிபன் ரெடியா வாங்க சாப்பிடலாம்!” என்றதும் மூவரும் சிறிது நேரம் பேசி விட்டு கிளம்பினர். 

இப்படியே மீதமிருந்த நான்கு நாட்களும் சென்றன. 

இந்த நாட்களில் கண்மணியும் அரவிந்தும் தங்களைப்பற்றி ஒருவருக்கு ஒருவர் நன்றாக புரிந்து கொண்டனர்.

மும்பை பயணம் முடிந்து அவர்கள் கிளம்புகையில் அரவிந்தும் அவர்களுடன் இணைந்து சென்னை வந்தான்.  

அவர்களை வரவேற்க ஹரி விமான நிலையத்தில் காத்திருந்தான்.

இன்னும் நான்கு நாட்களில் திருமணம் என்பதால் நாளையிலிருந்து இருவரும் விடுமுறை எடுத்துக் கொண்டிருந்தனர் ஹரியும் கவியும். 

அதே சமயம் கவி கண்மணியையும் தன்னுடன் அழைத்துக் கொண்டாள். 

கவியின் திருமணம் என்பதாலும் இதற்கு முன்பு அவ்வளவாக விடுமுறை எடுக்காத தாலும் அவளுக்கும் விடுமுறை அதிகமாகவே கிடைத்தது. 

இருவரும் சென்று தங்கள் அலுவலகத்தில் தங்கள் மும்பை பயண அலுவல்களை  கூறி விட்டு வீட்டிற்கு வந்தனர்.

“வீடு முழுவதும் உற்றார் உறவினர் கூட்டம் ஒருபுறமும் இன்னொருபுறம் நண்பர்கள் கூட்டம் என மண்ணில் ஒரு சொர்க்கமாய் அவர்களின் வீடுகள் காட்சியளித்தது“. 

“கவியின் பள்ளி மற்றும் கல்லூரி தோழர்கள் மற்றும் அலுவலகம் தோழர்கள் உறவினர்கள் ஹாஸ்டல் பிரெண்ட்ஸ் என அனைவரும் குழுமி இருக்க தன் அக்காவின் திருமணம் என்பதால் அபி அக்ஷயா மற்றும் கோகுலின் பிரண்ட்ஸ் தேவகி சேரன் குடும்பத்தாரின் சொந்த பந்தங்கள் ரேவதி மற்றும் அரவிந்தின் விருந்தினர்கள் என்று கவியின் வீடு மிகவும் அழகாய் காட்சி அளித்தது“.

“அதேபோல் ஹரியின் வீடும் தொழில்துறை சார்ந்தோர் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என திருமண களை கட்டியது”. 

“முதல் வேலையாய் பெண்கள் அனைவரும் கவியை தள்ளிக்கொண்டு நகைக்கடைக்கு சென்று அவளுக்கு தேவையானவற்றை முதலில் வாங்கி விட்டு பின்பு மற்றவர்களுக்கும் தேர்ந்தெடுத்தனர்”.

“அதே சமயம் இங்கு ஹரியின் குடும்பத்தினர் மாங்கல்யம் வாங்குவதில் ஈடுபட்டிருந்தனர்” 

“கிட்டத்தட்ட ஒரு மணி நேர தேடலுக்குப் பின் தன் வருங்கால மனைவியின் கழுத்தில் ஜொலிக்கப் போகும் அந்த மாங்கல்யத்தை அனைவரின் விருப்பப்படி தேர்ந்தெடுத்தான் ஹரி”. 

அடுத்து அவர்களின் உடை தேர்ந்தெடுக்க வேண்டும். 

அதற்கு அரவிந்த் மற்றும் கண்மணியை உடன் அனுப்பி வைத்துவிட்டு பெரியவர்கள் மற்ற வேலைகளைப் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.

“கவிக்கான உடையை ஹரியும் ஹரிக்கான உடையை கவியும் தேர்ந்தெடுப்பதாக முடிவு செய்தனர். 

அதேபோல் அந்த உடைகளை இப்போது ஒருவருக்கொருவர் பார்ப்பதில்லை என்றும் முடிவு செய்தனர்”

இப்படியே நாட்கள் செல்ல நாளை திருமணம் என்று நெருங்கிவிட இருவருக்கான   சம்பிரதாயங்களும் நடைபெற்றன. 

“அக்கா மாமா சித்தி சித்தப்பா பெரியப்பா பெரியம்மா அண்ணா அண்ணி  மாமி தாத்தா பாட்டி அத்தை என உறவு பட்டாளமே சூழ கவி அடுத்த நாள் காலையில் தன் மணவாளன் அருகில் அமர்ந்தாள்”. 

அய்யர் மந்திரம் கூற  மங்கள நாதங்கள் முழங்க அனைவரின்  கைகளில் இருந்தும் மஞ்சள் அரிசி மழை பொழிய பெற்றவர்கள் மற்றும் நண்பர்களின் வாழ்த்து மழையில் ஹரி தன் கையிலிருந்த மாங்கல்யத்தை கவியின் கழுத்தில் பூட்டினான்”. 

“ஏற்கனவே அந்த அரக்கு நிற பட்டு புடவையில் அழகாய் பெண்ணுக்குரிய நாணத்தோடு அமர்ந்திருந்தவள் நெற்றியில் குங்குமத்தை எடுத்து வைத்து தன் மனைவியாக்கிக் கொண்டான் ஹரி”. 

இந்த தருணத்திற்காகவே காத்திருந்த இருநெஞ்சமும் மகிழ்ச்சி வானில் பறந்து கொண்டிருந்தனர்.

அடுத்து போட்டோ செக்ஷன் மற்றும் மற்ற சடங்குகள் என அன்றைய பகல் பொழுது இனிமையாய் முடிந்தது. 

இரவிலும் கூட அவர்கள் மறு வீட்டு அழைப்பு மற்றும் விருந்து என்று அலைந்து ஒருவழியாய் இரவு 8 மணிக்கு வீட்டை அடைந்தனர்.

மீண்டும் இரவு உணவு இனிதே நிறைவு அன்றைய நாள் ஒரே ஆட்டம் கொண்டாட்டமாய் முடிந்தது. 

அடுத்து அவர்கள் இருவருக்கு மட்டுமே சொந்தமான  இரவுக்கு அவர்களை தயார் செய்யத் தொடங்கினர்.

 ஒப்பனைகள் அனைத்தும் முடிந்ததும் சாஸ்திர முறைப்படி கவி அவர்களது அறையினுள் காலடி எடுத்துவைத்தாள்.

விளக்குகள் ஏதும் இல்லாவிட்டாலும் அந்த இருளிலும் பட்டு வேட்டியில் கம்பீரமாய் ஜன்னல் அருகில் நின்றிருந்த தன் கணவனை அவளால் நன்றாக பார்க்க முடிந்தது. 

அவள் தன் கையில் இருந்த பால் சொம்பை மேசை மீது வைத்துவிட்டு அவன் அருகில் சென்று நின்று கொண்டாள்.

” அரவம் கேட்டு திரும்பியவன் கவி என்றதும் அவனை வணங்கினாள்”.

” கவி என்னது இது எல்லாம் ?” என்று அவளை கடிந்து கொண்டு கட்டிலில் அமரச் செய்தான்.

பிறகு அவளிடம்,” என்னை உனக்கு எவ்வளவு பிடிக்கும் கவி?” என்றதும் தான் கொண்டு வந்திருந்த பரிசுப் பெட்டியை நீட்டினாள். 

“அவன் அதை வாங்கிக் கொண்டு பதில் சொல் கவி!” என்றான். 

“அதற்கு அவள் அதைத் தான் கொடுத்து இருக்கிறேன்” என்று கூறவும் அவன் அவசரமாய் அந்த கிப்ட்டை ப்பன் செய்தான். 

அதில் ஒரு புத்தகம் போன்ற வடிவத்தில் இருந்த அந்த நோட்டை திறந்தால் “என் இனிய அத்தானுக்கு” என்ற வாக்கியங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. 

அதற்கடுத்து வந்த எல்லா பக்கங்களிலும் அவனை நினைத்து வெவ்வேறு உணர்ச்சிகளில் அவள் எழுதியிருந்த கவிதைகள் இடம்பெற்றிருந்தன. 

“அழகாய் அவள் மனதை அவளின் கவிதைகள் மூலம் படித்தவன் அவளருகில் சென்று இதற்கு நான் என்ன ஈடு செய்ய வேண்டும்?” என்று கேட்க அதற்கு அவள் “வாழ்நாள் முழுவதும் உங்கள் அன்பு மட்டும் ஹரி” என்றவாறு உரிமையுடன் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். 

அவன் ,”நிச்சயமாய் கவி ” என்று கூறினான். 

“விண்ணிலும்

 என் மையலை

 வரைய ஆவல்தான்

 ஆனால்

 நீ உன் விழி 

என்னும் விண்ணில்

 தீட்டியுள்ள மையலே போதும்

 உன் மன்னவனுக்கு”

“அடுத்து வந்த நாட்களில் கவி ஒரு நல்ல மனைவி மற்றும் மருமகளாக புகுந்த வீட்டையும் நல்ல மகள் மற்றும் அக்காவாக பிறந்த வீட்டையும் ஒரு நல்ல தோழியாக தன் நண்பர்களையும் கவனித்துக்கொண்டாள்”. 

ஹரி- கவி திருமணம் முடிந்த ஒரே மாதத்தில் அரவிந்த்- கண்மணி திருமணம் நிச்சயமானது. 

மனிதர்களின் மனம் மாறும் இந்த காலத்தில் தேவகி ரேவதி மற்றும் அணுகாவின் குடும்பங்கள் இன்றும் பின்னிப் பிணைந்திருக்கின்றன.

 நட்பு என்பது 

ஒரு தலைமுறையோடு

 நின்று விடுவது அல்ல

அது தலைமுறை 

தலைமுறையாய்

பறை சாற்ற வேண்டிய உறவு

உனக்காக என்றில்லாமல்

 பிறருக்காக என்று 

நீ செய்யும் 

ஒவ்வொன்றும்

 போற்றப்பட வேண்டிய விஷயம். 

உறவுகளைப் பேணிக் காத்துக் கொள்ளப் பழக வேண்டும் இல்லையெனில் உனக்கென ஒரு உறவும் இருக்காது. 

ஆனால் நட்பில் இரண்டே விஷயங்கள் தான் உண்டு.

“உன்னை நேசிப்பவர்களிடம் நீ குழந்தையாகவும் நீ நேசிப்பவர்களிடம் தாயாகவும் நடந்துகொள்ள வேண்டும்”. 

கவி தன் வாழ்வில் பல தடைகளை தாண்டி தன்னுடையவனை அடைந்திருக்கிறாள். 

அவள் வாழ்வு மேன்மேலும்  செம்மையுற வாழ்த்தி விட்டு அவர்களை விட்டு நாம் விலகி விடுவோம். 

இனி ஒவ்வொரு விடியலும் அவளுக்கு வாழ்க்கை புதையலைத் தேடி அமையட்டும்.

Advertisement