Advertisement

அவளின் உயிர் தோழியான கண்மணி இன்று பார்த்து விடுமுறை எடுத்துக் கொள்ள அவளுக்கு ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாய் தோன்றினாலும் ஒருபுறம் வருங்கால கணவனை நினைத்து தன்னையே மகிழ்ச்சியாய் மாற்றிக் கொண்டாள்.

 “கவி எப்போது மகிழ்ச்சியாய் இருந்தாலும் டைரி எழுதுவது வழக்கம்”

“அதேபோல் தான் அவளைப் பெண் பார்க்க வந்தபோதும் எழுதி வைத்திருந்தாள்

அந்த வரிகள்,

 உன்னுடையவளாய்  நான் இருக்க

 இன்னும் ஏன் தாமதிக்கிறாய்

உரிமையோடு கூட்டிச்செல்ல 

“அவள் அதை மீண்டும் மீண்டும் தன் மனதில் சொல்லிக் கொண்டே இருக்கவும் அவளுக்கு மனம் அமைதியானது”

 அனைவரும் வீட்டிற்கு கிளம்ப மேனேஜரா தினேஷ் தாரிகாவையும் கவியையும் காத்திருக்க சொன்னான்.

 அவர்கள் என்னவென்று அவனிடம் வினவ,” அவன் ஆபிசை டெக்கரேட் செய்துவிடுங்கள்” என்று கூறி சென்றான். 

“இருவரும் வேகமாய் தங்களது டெக்கரேஷன் வேலைகளை தொடங்கினர்” 

“அவர்களின் இரண்டு மணி நேர உழைப்பில் அலுவலகம் மிகவும் அழகாய் தெரிந்தது”

 பிறகு இருவரும் தங்கள் வீட்டிற்கு கிளம்பினர் 

வி ஒரு எலக்ட்ரானிக்ஸ் கடைக்குச் சென்று தன் தம்பிக்கு தேவையானதை வாங்கிக்கொண்டு சாலையை கடப்பதற்காக தக்க சமயத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள் 

“அப்போதுதான் அவசரமாய் வந்து கொண்டிருந்த லாரி அந்தப் பெண்ணின் மேல் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது”

” கண் இமைக்கும் நேரத்தில் நடந்து விட்ட இந்த சம்பவத்தை யாரும் கவனிக்கவில்லை” 

கவி அவசரமாய் சென்று அங்கு பார்க்க அவள் ரத்த காயங்களுடன் கிடந்தாள்.

 ஆட்டோ ஒன்றை பிடித்துக்கொண்டு பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு அவளை அழைத்துச் சென்றாள்.

அடிபட்ட பெண்ணை மருத்துவமனையில் தன்னுடைய தோழி என்று கூறி சேர்த்தாள்” 

உள்ளே சிகிச்சைக்கான ஏற்பாடுகள் நடக்க ,”இங்கு கவி அந்தப் பெண்ணுடைய பையில் ஏதாவது விபரம் கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருந்தாள்“.

“அப்போது தான் அவளின் ஐடி கார்டை பார்த்தாள்

 அவள் பெயர் எழிலரசி என்றும் அவளும் தன்னைப் போலவே ஒரு கட்டுமான கம்பெனியில் வேலை செய்கிறாள் என்பதும் அவளுக்கு தெரிய வந்தது.

ஐடி கார்டின்  பின்புறமிருந்து ஒரு விசிட்டிங் கார்டு விஅதை எடுத்துப் பார்த்தவள் அந்த கார்டில் உள்ள போன் நம்பருக்கு போன் செய்தாள்

அவள் அமைதியாய் பார்த்திருக்க அடுத்த முனையில் இருந்து ,”ஹலோ என்ற கம்பீரமான குரல் கேட்டதும் அவள் அவனிடம் விவரங்களை கூற அவனும் கேட்டுக் கொண்டு இன்னும் இருபது நிமிடத்தில் மருத்துவனைக்கு வருவதாக தெரிவித்தான்“.

” அவன் கூறியது போலவே சரியாய் இருபது நிமிடத்தில் அவன் அங்கு வந்து சேர்ந்தான்”

வி அமைதியாய் கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்திருந்ததால் கவியை அவன் அறியவில்லை”

அவன் அவளின் அருகில் சென்று,” எக்ஸ்க்யூஸ் மீ” என்று வினவும்,” நிமிர்ந்து பார்த்தவளுக்கு பேரதிர்ச்சி!”

 “ஏனெனில் அங்கு வந்திருப்பது நம் ஹரியே தான்”

” அவளைவிட அவனுக்குத்தான் இன்னும் கஷ்டகாலம்”

 “ஒருபுறம் தனக்கென நிச்சயிக்கப்பட்டவள் மறுபுறம் தன் காதலி”

இப்போது அவன் மனம் மதில் மேல் பூனையாய் நின்றது.

 

“ஒருபுறம் அதிர்ச்சி இன்னொருபுறம் வெட்கம் என கவி அவதியுற வெளியில் இருந்து வந்த நர்ஸ் ஒருத்தி பி பாசிட்டிவ் ரத்தம் அவசரமாக தேவைப்படும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள் மேடம் என்று கவியிடம் கூறினாள்”

 “அவள் அவன் முகத்தை பார்க்க அதில் மிகவும் பிரியமானவர்களைக்கப் போகும் வலி தெரிய ஒரு நொடி தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு டாக்டரைப் பார்க்கச் சென்றாள்

“அவள் சென்று ஒரு மணி நேரம் ஆகியும் திரும்பாததால் அவளை தேடி வந்தவனுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி” 

“ஏனெனில் கவி இப்போது ரத்த தானம் செய்து கொண்டிருந்தாள்

 “இங்கு கவி தன் நினைவை இழந்து கொண்டிருக்க எழில் தன் நினைவை பெற்றுக் கொண்டிருந்தாள்” 

“எழில் தன் முழு நினைவையும் பெற்றுவிட முதலில் அவள் பார்த்தது ன் அருகில் படுத்திருந்த கவியைத் தான்!”

“மாசு மருவற்ற முகம் பெண்ணுக்குரிய அழகுடன் அவள் விளங்கியதை அவளால் நன்றாக உணர முடிந்தது”

“அவளிடம் தெரிந்த அன்பின் பார்க்கப்பட்டாள் எழில்”

 எழிலிடம் தெரிந்த அசைவினால் அவள் அருகில் வந்த ஹரி அவளிடம்,” இப்போது எப்படி இருக்கிறது?” என்று கேட்கவும் அவன் புறம் திரும்பியவள் 

மகிழ்ச்சியுடனும் வருத்ததுடனும் ( மகிழ்ச்சி கலந்த வருத்தம்) அவனிடம்,” நீங்கள் எப்படி சார் இங்க?” என்று கேட்டு நிறுத்தினாள். 

அவன் அமைதியாய் ,”சொல்கிறேன் ஆனால் இப்போது அல்ல” 

“அப்புறம்” என்றாள்.

“அவளும் தலையசைத்துவிட்டு விழி மூடி உறங்க ஆரம்பித்து விட்டாள்

” ஆனால் அவனின் மனப் போராட்டம்தான் நொடிக்கு நொடி அதிகரித்துக் கொண்டே இருந்தது”

அவன் தன் கண்களை மூடிக்கொண்டு ஜன்னலின் ஓரம் நின்றிருந்தான்.

 திடீரென யாரோ முனகும் சத்தம் கேட்டு திரும்பியவன்,” து கவியின் குரல் என்பதை அறிந்து அவள் அருகில் சென்றான்“.

 “இப்போது அவள் உறங்கவில்லை சிரித்துக்கொண்டே உறங்கி விட்டாள்

இரவு இருவருக்கும் உணவு வாங்கி வந்தவன் அவர்களை எழுப்பலாமா என்று யோசித்துக்கொண்டே நிற்கவும் அங்கு வந்த நர்ஸ் சில மாத்திரைகளை கொடுத்து விட்டு சாப்பிட்ட பின் அதை எழிலுக்கு தரச் சொன்னார்.

அவளை எழுப்ப எழுந்தவள் இன்னும் கவி கண்விழிக்காததை கண்டு அவன் சென்று கவியை எழுப்பினான்.

 கண்விழித்தவள் அவனைப் பார்த்ததும் விழிகளைத் தாழ்த்தி கொண்டாள்.

அவன் ,”சாப்பிட வா” என்று அழைத்ததால் செல்ல ஒரு அடி எடுத்து வைத்து இருப்பாள் அதற்குள் அவள் செல்லில் அழைப்பு மணி ஒலிக்க எடுத்து பேசினாள். 

“தேவகி தான் அழைத்திருந்தார்” 

“அவர்கள் அனைவரும் கவியின்  பாட்டி வீட்டிற்கு சென்றிருப்பதாகவும் வர மூன்று நாட்கள் ஆகும் என்று கூறிவிட்டு வீட்டில் பத்திரமாக இருந்தது கொள் என்றார் 

அவளும் சரியெனச் சொல்லி விட்டு,” கோகுலுக்கு தேர்வு  இருக்குமா” என்றாள்.

 அதற்கு ,”தேவகி இன்னும் டைம் இருக்கு”

  “நீ கவலைப்படாதே,சரியாய் சாப்பிட்டு  வீட்டை பூட்டிவிட்டு தூங்கு”

“அப்புறம் மாப்பிள்ளை வந்தாரானால் எங்களுக்கு போன் செய்” ன்றார்.

அவளும் அவனை பார்த்துக்கொண்டே,” ஓகே மா” என சொல்லி போனை அணைத்தாள்.

 இப்போது அவள் பேக் மற்றும் மற்ற பொருட்களை எடுத்துக் கொண்டு கிளம்ப தயாராகி விட்டு,” எழிலிடம் சென்று உடம்பை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்”

” நீங்கள் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்”

” மீண்டும் சந்திக்கலாம்”

” போய் வருகிறேன் ” என்று கூறினாள்.

 பின்பு அவனிடம் திரும்பி,” நான் சென்று வருகிறேன் எழிலை பார்த்துக்கொள்ளுங்கள்” என்று கூற அவன்,” அவளை சாப்பிட்டுவிட்டு செல்

“நீ ரொம்ப சோர்வாய் இருக்கிறாய்” என்றான்.

ஆனால்,” அவள் வேண்டாம் என்று கூறி மறுத்து விட்டு கிளம்பி விட்டாள்

“வீட்டிற்கு வந்தவள் மனம் ஏனோ ரணமாய் வலித்தது” 

“இன்னொருபுறம் இத்தனை நாள் கண்ட கனவுகள் அனைத்தும் றைந்தது போன்ற உணர்வு”

 அவள் மிகவும் சிரமப்பட்டு உறங்கினாள்.

அதேபோல்ரியின் மனமும் வாடிப்போய் இருந்தது.

 “நான் என்ன பிழை செய்தேன்!”

” இவள் என் மேல் ஏன் கோபமாய் செல்கிறாள்” என்று எண்ணிக் கொண்டிருந்தான்.

 அவன் அப்படியே அமர்ந்திருக்கும் போது அவனிடம் ஒரு நம்பரை கொடுத்து அதற்கு கால் பண்ண சொன்னாள் எழில்.

 அவனும் கால் பண்ணி அவளிடம் கொடுத்து விட்டு சற்று தூரமாய் சென்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். 

“அவன் மனம் எழிலை முதன்முதலில் சந்தித்த நினைவு கூர்ந்தது” 

அது ஒரு பெரிய 5 ஸ்டார் ஹோட்டல்.

அங்கே தான் பெரிய பெரிய கம்பெனிகளின் முக்கியமான மீட்டிங் மற்றும் அக்ரிமெண்ட் வேலைகள் எல்லாம் நடக்கும்.

அப்படி ஒரு அக்ரீமெண்ட் மீட்டிங்கிற்கு செல்லும்போது தான் அவளைப் பார்த்தான் 

எழில் பெயருக்கு ஏற்றார் போல் அழகாய்  இருந்தாள்.

 எலுமிச்சை நிறத்தில் ஒல்லியாய் கொடி போன்ற உடலுடன் அடர்த்தியான கருங்கூந்தல் உடன் அவன்முன் தோன்றினாள் அவள்.

 அன்று அவன்பால் அவளின் மனம் சென்று விட்டது.

 ஆனால் இதுவரை  அவளிடம் தன்னுடைய காதலை சொன்னதில்லை.

 இருப்பினும் அவன் ஒவ்வொரு முறை சொல்ல நினைக்கும் போதெல்லாம் தொண்டை வரும் வரும் வார்த்தைகள் வாயை எட்டுவதில்லை.

திடீரென அறையை திறக்கும் ஓசை கேட்டு திரும்பியவன் அங்கு எழிலின் உறவினர்கள் வருவதைப் பார்த்து அவர்களிடம் சென்றான்.

 அவர்கள் அவனிடம்,” நாங்க இனிமேல் பார்த்துக்கிறோம் நீ போய் ரெஸ்ட் எடுப்பா” என்றார் ஒரு பெரியவர்.

 அவன் எழிலை பார்க்கவும் அவர்களை அவனுக்கு அறிமுகப்படுத்தினாள்.

 “இவர் என்னுடைய அப்பா ராம்சரண்

அவங்க அம்மா ரோகினி”

என்னோட தங்கை சாகித்தியா என சொல்லிவிட்டு அவர்களிடம் திரும்பியவள், வர் ஹரிகேஷ் என்னுடைய தொழில் முறையில் தெரிந்தவர்”  என்றாள்.

அவள் அப்படிக் கூறியது அவனுக்கு மிகவும் அதிர்ச்சி தான்.

இருந்தாலும் சமாளித்துக் கொண்டு அவர்களிடம் விடைபெற்று தன் வீட்டிற்குச் சென்றான்.

“அவன் வீட்டின் உள்ளே நுழைந்ததும் அவனை சாப்பிட அழைத்தார் அணு

 அவன் பதில் ஏதும் சொல்லாமல் மாடியிலுள்ள தன் அறைக்கு சென்றுவிட்டான்.

 அணுகாவனை பின்தொடர்ந்து செல்லவும் கனிஷ்கர் அவளை தடுத்து நிறுத்திவிட்டு,” வேண்டாம் அவனை கொஞ்ச நேரம் தனியாக விடு” என்றார்

அவரும் அமைதியாக சமையல் அறையில் புகுந்து விட்டார்.

அடுத்த நாள் காலை ரேவதி வீட்டிற்கு சென்றாள் கவி.

அவளை எதிர்பார்க்காத ரேவதி அவளை  உள்ளே அழைத்து வந்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு விருந்துக்கான ஏற்பாடுகளை கவனிக்கலானார். 

அவர்கள் பேச்சு  சத்தம் கேட்டு ஹாலுக்கு வந்த கவின் கவியைப் பார்த்துக் கொண்டே,” அடடா! கவி எப்படா வந்தநல்லா இருக்க தானே?” என்று கேட்டு கைகளை நீட்டினார்.

“இப்போது தான் மாமா வந்தேன் என்று கூறிக்கொண்டு அவர் நீட்டிய கைகளுக்கு இடையில் புகுந்தாள்.

அவர் அவனை உச்சி முகர்ந்து தலையை வருடிக் கொடுக்க அதில் அவள்  மனம் லேசானது போன்ற உணர்வு. 

அப்போதுதான்  ஊரில் இருந்து வந்தான் அரவிந்த்.

 அவன் அவளைப் பார்த்ததும்,” ஏய்! கவி  நீ எங்கே  இங்கே?” என்று கேட்கவும் 

“ஏன்டா நான் எல்லாம் வரக்கூடாதா என்ன!” 

“இது எனது மாமாவின் வீடு

 “அதனால் தான் வந்தேன்” என்றாள்

ஹலோ மேடம்! இது எங்களுக்கும் வீடுதான் புரியுதா” என்று அவன் கேட்க, 

“யாரோ கத்துகிறார்கள் என்கிற மாதிரி அவள் பாட்டுக்கு தன் அத்தை கொடுத்த காம்ப்ளான் கலந்த பாலை அருந்தி கொண்டே டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்” 

“உன்னை பிறகு பார்த்துக்கொள்கிறேன்”  என்று கூறி விட்டு அவன் அறைக்குள் சென்று விட்டான் 

“திடீரென ஒரு சேனலில் நீண்ட நாட்களாய் காதலித்த  கதாநாயகியின் காதல் தோல்வியில் முடியும் காட்சி வரவும் டிவியை அணைத்து விட்டு சமையலறைக்கு சென்றாள்

அங்கு ரேவதி  காய்கறிகளை அப்போதுதான் நறுக்கி முடித்திருந்தார். 

அவரை அமர வைத்துவிட்டு அவர் சொல்லச் சொல்ல அதேபோல் சமையல் செய்து கொண்டிருந்தாள் கவி.

 சமையல் வேலை முடிந்த பின் அனைவரும் சேர்ந்து மதிய உணவை ஒரு கட்டு கட்டினர். 

” அவர்களிடம் மாலையில் கோவிலுக்கு போகலாமா?” என்று கவி கேட்கவும் “அனைவரும் சரி” என்று கூறினர்.

அரவிந்த் மட்டும் கவியின் காதில் ஏதோ கூற அவள் சிரித்துக்கொண்டே தன் அத்தையை பார்த்தாள்.

” அந்தப் பார்வையின் பொருள் பிடிபடவும் இருவரையும் பார்த்து உதை வாங்கப் போறீங்க” என்றார் ரேவதி. 

 அவர்களுடைய உரையாடல் புரியாத கவின்,” அரவிந்திடம் என்னடா சொன்ன நீ?” 

“கவி இப்படி சிரிக்கிறா?” என்று கேட்டார் 

“அதற்கு அவன் இல்லப்பா நீங்க அம்மாவாகவும் அம்மா நீங்களாகவும் இருந்திருக்கணும்” 

“கடவுளே கொஞ்சம் கன்பியூஸ் ஆகிட்டாரு போல” என்று கூற  டேய் உன்னை என்று அவனை துரத்தினார்

 கவி தன் பங்கிற்கு பக்கத்திலிருந்த உருட்டு கட்டையை எடுத்துவந்து கொடுத்தாள்.

அதை வாங்கிய ரேவதி கவியை நோக்கி அடிப்பது போல் பாவ்லா செய்ய முனைந்ததும் கவின் பதறிவிட்டார். 

ரேவதி மட்டும் சிரித்துக்கொண்டு,” இதுதான் சாக்குனு இவ்வளவு பெரிய உருட்டு கட்டையை எடுத்து தருவியா நீ”  என்று கேட்டார்.

” ரொம்ப பாசம் தான் போங்க”

 “என்னால தாங்க முடியலை” என்றாள் கவி

” சரி போய் சீக்கிரம் ரெடியாகி வா”  என்று அவளை விரட்டி விட்டு அவரும் சென்று தயாரானார் 

ஆனால் அரவிந்த் டயார்டாக  இருக்கிறது என்று கூறி கோவிலுக்கு வரவில்லை. 

“அதேசமயம் அணுகா ஹரியிடம் கோவிலுக்கு போயிட்டு வரலாம் போல இருக்குடா கண்ணா” என்று கூறினார். 

ஹரியும் சிரித்துக் கொண்டே,” சரி போகலாம்மா”  என்றான். 

“அடுத்த 20 நிமிடத்தில் அவர்கள் இருவரும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலை அடைந்தனர்”.

Advertisement