Advertisement

அதிகாலை தென்றல் ஆனந்தமாய் தாலாட்ட மெல்ல மலர்ந்து கொண்டிருக்கும் மலர்களின் மணத்தோடும் பறவைகளின் பல்வேறு வகையான கீதங்களின் சத்தத்தோடும்  கண் விழித்தாள் கவிநிலவு. 

அந்தப் புலர்கின்ற பொழுதை பார்க்கும் போதே அவள் மனம் அமைதியான நதியைப் போல் ஆகிவிடும்.  

கண்விழித்தவள் வாசலுக்கு வர அங்கே ஏற்கனவே சாணம் தெளித்து கோலம்  போடப் பட்டிருப்பதைப் பார்த்து சிரித்துக்கொண்டே வயலின் நடுவே இருந்த வரப்பில் நடந்தாள். 

புல்லின் மேல் வீற்றிருந்த பனித்துளி அவள் காலுக்கு இத்தை அளிக்கவும் மெதுவாய் சென்று தன் தோட்டங்களை கவனித்து விட்டு வீட்டிற்கு வந்தாள். 

அங்கு வீட்டில்,” அவளது அம்மாவான ‘தேவகி’சமையல் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தார்”

கவி சென்று தன் தங்கைகள் (அக்சயா, அபிநயா) மற்றும் தம்பி (கோகுல்)யின் லன்ச் பேக்கை தயார் செய்து கொண்டிருக்கவும் அவளது அம்மா அவர்கள் அனைவரையும் சாப்பிட அழைத்தார். 

அனைவரும் சாப்பிட்டு முடித்தவுடன் கவி,”ன் அப்பாவான சேரனிடம் அப்பா இன்று உங்களுக்கு ஏதோ முக்கியமான வேலை இருக்கிறது என்று ஞாபகப்படுத்த சொன்னிங்க மறந்துடாதீங்க” என்றாள். 

அவர் சிரித்துக் கொண்டே ,”சரிம்மா நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறிவிட்டு கிளம்பவும் குட்டீஸ் அவர்களது பள்ளிக்கு கிளம்பி சென்றுவிட்டனர். 

இப்போது அவளும் வேகமாய் தன்னுடைய வேலைக்கு புறப்பட்டு கொண்டிருந்தாள். 

அவளின் பொருட்களை ஒருமுறை சரிபார்த்துவிட்டு அவளிடம் பேகைக் கொடுக்கும் போதே இன்று முடிந்தவரை சீக்கிரம் கிளம்பி வா என்றார் தேவகி. 

அவளும்,”சரிம்மா என்று கூறி விட்டு கிளம்பி விட்டாள்”

அவள் சென்றதும் தேவகி வீட்டு வேலைகளை பார்க்க ஆரம்பிக்கவும் சரியாய் காலிங்பெல் அழைக்கவும் அவர் சென்று கதவை திறந்தார். 

அங்கு அவருடைய கல்லூரி தோழியான “சித்திரலேகா” (எ) “ரேவதி” நின்றிருந்தார். 

நீண்ட காலம் கழித்து தன் தோழியை கண்ட மகிழ்ச்சியில் இருவரும் கட்டிக்கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். 

பிறகு தேவகி அவரை உள்ளே அழைத்து வந்து உட்கார சொல்லிவிட்டு சேரனுக்கு போன் செய்து வரும் போது ‘ஐஸ்கிரீம்’ வாங்கி வரச் சொல்லவும் அவர் சிரித்து விட்டு  அவரிடம் “என்னம்மா! சின்ன வயசு ஞாபகம் வந்திருச்சா? கூட வேணும்னா குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கிட்டு வரவா”? என்று கேட்கவும் “வாங்கிட்டு வந்தா நைட் சாப்பிட்டு உண்டு இல்லனா வசதி எப்படி”? என்றார்.

“கண்ணம்மா நைட் ஒருவேளை தான் நிம்மதியாக சாப்பிட முடியும்”

 “அதில் கையை வைக்காதே நான் வாங்கிட்டு வரேன்” என்று கூறி போனை அணைத்தார்

தேவகியும் ரேவதியும் பேசிக்கொண்டே வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தர். 

சரியாய் மாலை 4 மணிக்கு அக்சயாவும்  அபிநயாவும் வீட்டுக்கு வந்தனர்

 வீட்டில் ரேவதியை எதிர்பார்க்காத இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

அபி அக்சுவிடம் “என்ன அக்சு? யாரோ வந்திருக்காங்க போல” என்றாள். 

அதற்கு அக்சு அவளிடம் “ஏய் என்னடி? ஈசியா யாரோன்னு சொல்லிட்ட அவங்க லெவலுக்கு எல்லாம்” என்று கூறும்போதே தேவகி இருவரின் காதையும் திருகிக் கொண்டு “ஆண்டி கிட்ட சாரி சொல்லுங்கடி” என்றார்

அதற்கு இருவரும் முடியாது என்று கூறவும் தேவகி அவர்களை நோக்கி கையை நோக்கவும் இருவரும் அவரிடமிருந்து தப்பி  ரேவதியின் அருகில் சென்று நின்று கொண்டார்கள். 

அவர்களை நாலு சாத்துடி என்று தேவகி கூறவும் அதற்கு ரேவதி நாலு என்ன எட்டே சாத்தறேன் என்று சொல்லி கையை நோக்கவும் இருவரும் அமைதியாக சிரித்துக் கொண்டே நிற்க இருவரையும் தன் தோளின் மேல் சாய்த்துக் கொண்டார். 

அவர்கள் இருவரும் அவரின் இரு கன்னத்திலும் முத்தம் இட்டு “மை ஸ்வீட் ஆன்ட்டி” என்று கூறவும் தேவகி அவர்களை “ஹோம் வொர்க்” பண்ண சொல்லி விரட்டினார்.

 அவர்கள் சென்றதும் ரேவதி ,”தேவகியிடம் பிள்ளைங்க நல்ல வளர்ந்துட்டாங்க இல்ல தேவா” என்றார். 

அதற்கு தேவகி அவரிடம் “ஆள் மட்டுமில்ல வாயும் சேர்ந்தே வளர்ந்துடுச்சி” என்று கூறிவிட்டு அவரைப் பார்க்கவும்,” அவர் என்ன தேவா “என்றார். 

“நீ நம்ம ‘அரவிந்த்’ பற்றி எதுவுமே சொல்லலையே!” என்று கேட்டார். 

அதற்கு ரேவா சிரித்துவிட்டு,” அதுசரி நீயும் கேக்கல,அதான் நானும் சொல்லவில்லை” என்றவரை முறைத்துவிட்டு,” சரி இப்பவாது சொல்லு” என்று கேட்டார்.

ரேவதி,” அவரிடம் அரவிந்த் இப்போ மும்பையில ஒர்க் பண்றான்”

“அவன் உங்க எல்லாரையும் கேட்டதா சொல்ல சொன்னான்”. 

“அப்புறம் இன்னும் ஒன் மன்த் தான் இருக்கு”. 

“நானும் அங்கயே போய் விடுவேன் என்று நினைக்கிறேன்”. 

“அதுக்கப்புறம் உன்ன வந்து பார்க்கலாம் முடியாது”. 

“அதான் இன்னிக்கு வந்துட்டேன்” என்றவரை தன் மடியில் சாய்த்துக் கொண்டு அவரின் கண்ணீரை துடைத்து விட்டார். 

இருவரும் இப்படியே சோகக் கண்ணீர் வடித்துக் கொண்டே இருக்க கவியும் சேரனும் வந்து விட்டனர்.

சேரன் ரேவதியை வரவேற்க அவரும் தன் அண்ணனின் வரவேற்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். 

கவி அமைதியாய் ரேவதியின் கால்களில் விழ அவர் அவளை ஆசீர்வதித்து விட்டு அவளை தன்னுடன் அணைத்துக் கொண்டு உச்சி முகர்ந்தார்.

பின்பு தேவகியிடம் தான் வாங்கி வந்திருந்த ஐஸ்கிரீமை கொடுக்கவும் அவர் அனைவரையும் அழைத்து அவர்களுக்கு பரிமாறினார். 

இப்படியே இவர்கள் பேசிக் கொண்டிருந்து விட்டு இரவு உணவை முடித்துக் கொண்டு ரேவதி கிளம்பவும் தேவகி அழுவது போலாகிவிட்டார். 

ரேவதி,” தேவகியிடம் நீ இன்னும் அந்த அழுமூஞ்சி தேவகி தானா”? என்று கேட்க அவரின் தலையில் குட்டு வைத்து விட்டு,” நீ மட்டும் என்னவாம் ஐஸ்கிரீம் என்றதும் அனைவரையும் மறந்து விட்டாய்” என்று கூற அனைவரும் தோழிகள் இருவரையும் பார்த்து சிரித்தனர். 

“சேரன் சென்று ரேவதியை வழியனுப்பி விட்டு வந்தார்”. 

வீட்டில் அனைவரும் உறங்க

 கவி மட்டும் மொட்டை மாடியில் நின்று கொண்டு வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். 

அவளுக்கு உறக்கம் வருவது போல் தோன்றவும் தன் அறைக்குச் சென்று படுத்தாள். 

காலையில் கதவு தட்டும் ஓசை கேட்டு கண்விழித்த கவி அப்போதுதான் மணியை பார்த்தாள்” 

“அது காலை மணி எட்டு என்று காட்ட அவள் அவசரமாய் சென்று கதவை திறந்தாள்”. 

அங்கு கையில் பட்டு புடவை மற்றும் சிறுநகை பெட்டியுடன் தேவகி நின்றுகொண்டிருந்தார். 

அவரிடம் “என்னம்மா இதெல்லாம்”? 

“நான் ஆபிஸ்க்கு போக வேணுமா வேணாமா”? என்று கேட்டாள் கவி. 

“அதற்கெல்லாம் இப்போது பதில் சொல்ல எனக்கு நேரமில்லை கவி”

 “அவ்வளவு வேலை இருக்கு!”

” நீ போய் குளிச்சுட்டு இதெல்லாம் போட்டுக்கிட்டு நான் கூப்பிடும் போது வந்தா போதும்” என சொல்லிவிட்டு அனைத்தையும் அவள் கையில் திணித்து விட்டு சென்றுவிட்டார். 

அவளும் குளித்து விட்டு அந்த பட்டுப்புடவையை உடுத்தி வந்தாள்.

 அப்போது அவள் அறைக்கு வந்த அபியும் அக்சயாவும் அவளிடம் ” நீ மட்டும் எப்படி அக்கா இவ்வளவு அழகா பொறந்த? 

“இந்த தேவகி எங்க ரெண்டு பேருக்கும் வஞ்சனை பண்ணிட்டா” என்று கூறிவிட்டு அவளிடம் இரண்டு அடியையும் சன்மானமாக பெற்றுக்கொண்டார்கள். 

மீண்டும் அவளிடம் அபி,” அக்கா உனக்கு ரெண்டு குட் நியூஸ்” இருக்கு. 

“சொல்லட்டுமா” என்று கேட்கவும் அவளிடம் ,”சீக்கிரம் சொல்லுடி “என்று கவி கேட்க “அக்கா கோகுல் வீட்டுக்கு வரான்”. 

ஒரு வாரம் ஹாஸ்டல் லீவ்வாம்.

அதான் இப்ப அப்பா போன் பண்ணினார் என்று அவள் கூறியதும்,” ஏய்! இத இவ்வளவு லேட்டாவா சொல்லுவீங்க?”

“நாமளும் அப்பா கூட போயிட்டு வரலாமா?” என்று கேட்டவளின் தம்பி பாசத்தில் ஆதங்கத்துடன் பார்த்தனர் இருவரும். 

அடுத்து அக்சயா அவளிடம்,” இன்னொரு நியூஸ் என்னன்னு நீ இன்னும் கேட்கலையே அக்கா” என்று கேட்டு விட்டு அவளைப் பார்த்து கண் சிமிட்டினாள். 

அதற்குள் தேவகி கவி என அழைக்கவும் “அழகு பதுமையாய் அவள் நடந்து  வர அவளின் அருகில் இரு பதுமைகளாய் அபிநயாவும் அக்சயாவும் அழகாய் வந்தனர். 

“ஏதோ ஒரு உந்துதல் அவள் மனதில் அனைவரும் அவளையே பார்ப்பது போல் தோன்றியது”. 

அபி அவளிடம் “அக்கா உன் ராஜகுமாரனை பாரேன்! அவர் உன்னையே தான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்” என்று கூறினாள். 

அவனைப் பார்க்க ஆவலாய் துடித்த  மனதை கடிவாளம் போட்டு அடக்கிக்கொண்டாள். 

இப்போது தேவகி அவளிடம்  பழச்சாறு அடங்கிய தட்டை கொடுக்க அவளும் அமைதியாய் எடுத்துச் சென்றாள். 

அங்கு தன் மகனுக்கு ஏற்ற மருமகளை கண்டுவிட்ட சந்தோசத்தில் அமர்ந்திருந்த ‘அணுகா’ அவளைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு ஒரு ஜூஸ் டம்ளரை எடுத்துக் கொண்டார்

அதே போல் தன் மனைவியின் முகத்தை வைத்தே முடிவை கண்டுகொண்ட ‘கனிஷ்கர்’ அமைதியாய் கவியின் உபசரிப்பை ஏற்றுக் கொண்டார். 

அடுத்து “யாருக்கோ பெண் பார்க்கிறார்கள் எனக்கென்ன வந்தது என்பது போல் உட்கார்ந்திருந்தான் ஹரிகேஷ்”. 

அவள் பெண்ணுக்குரிய சிறு நாணத்துடன் தலை கவிழ்ந்து கொண்டே அவன் முன் நிற்க அவன் சிறு எரிச்சலுடன் ஜூஸை எடுத்துக் கொண்டான். 

அவள் அவன் முகத்தை பார்த்து இருந்தால் கண்டிப்பாக அது அவளுக்குப் புரிந்திருக்கும். 

ஆனால்,” அவள் தான் குனிந்த தலையை நிமிர்த்தவே இல்லையே என்ற எரிச்சல் அவனுக்கு”

அவள் உள்ளே சென்றதும் ,”அணுகா தேவகியின் முகம் பார்த்தார்”. 

அவரின் முகம் சம்மதத்தை தெரிவிக்கவும் ,”இப்போது தன் மகனை நோக்கினார் அணு”. 

அவன் பிடிவாதமாய் அமர்ந்திருந்தான்.

அவனிடம் பேச சிறிது அவகாசம் வேண்டி அவர் ,”தேவகியிடம் கவியின் விருப்பத்தையும் கேட்க சொல்லி அனுப்பினார்”. 

அவர் சென்றதும் தன் கண் சைகையின் மூலம் தன் கணவரை பார்க்க,”கனிஷ்கரும்ரியை அழைத்துக் கொண்டு வெளியில் சென்றார்”.

 ஹரி அமைதியாய் நிற்க கனிஷ்கர் பேச்சை ஆரம்பித்தார் 

டேய் ஹரி நீ இன்னும் “அந்த எழிலை மறக்கவே மாட்டாயா?” 

“அவள் நம் குடும்பத்திற்கு ஒத்து வருவாளா”? 

“நீயே சொல்” என்று கேட்டவரிடம்,” எனக்கு அவளைத்தான் பிடித்திருக்கிறது” என்றான்.

 “இப்போது முடிவா என்னதான் சொல்கிறாய்?” என்று கேட்கவும் அவன்,” எனக்கு இவளைப் பிடிக்கவில்லை” என்று கூறியவனை முறைத்துவிட்டு உள்ளே சென்றார். 

கணவரின் நடையிலிருந்தே நடந்ததை யூகித்து விட்டு ,”சேரனை பார்த்து புன்னகைத்துக் கொண்டே எங்களுக்கு சம்மதம் என்று கூறினார் அணு“.

” தேவகியும் தன் கணவருடன் அமர்ந்துகொண்டு எங்களுக்கும் சம்மதம்” என்றார்

“சரி இப்போதே தட்டை மாற்றிக்கொள்ளலாம்”. 

“திருமணம் மட்டும் பிறகு வைத்துக்கொள்வோம்”. 

ஏனெனில்,” ஹரி இப்போது வெளிநாடு செல்ல வேண்டும்” என்று கூறி சமாளித்தார் அணுகா.  

பெரியவர்கள் அனைவரும் இங்கு மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருக்க இங்கு அபியும் அக்சயாவும் கவியை படுத்திக் கொண்டிருந்தனர்.

 அக்கா “மாமாவை பாரேன் எவ்வளவு அழகாய் அமைதியாய் இருக்கிறார்” என்று ஒருத்தி கேட்க அது மட்டும்இல்லடி “ஆள் ரொம்பவும் ரொமான்டிக்காவும் தெரிகிறார்” என்று இன்னொருத்தி கூறவும் சீ..போங்கடி என்று கூறிவிட்டு தன் வீட்டுத் தோட்டத்துக்குள் வேகமாக ஓடினாள் கவிநிலவு. 

அதே சமயம் தன் பெற்றோரின் பேச்சுப் பிடிக்காமல் ஹரியும் தோட்டத்திற்கு வந்து கொண்டிருந்தான். 

அவள் ஒரு புள்ளி மானைப் போல் துள்ளிக் குதித்து வரும் போதே “எனக்கென எனக்கெனவே பிறந்தவன்  இவனோ” என்று பாடிக் கொண்டே சென்றாள்.

அவளை அங்கு எதிர்பார்க்காத ஹரிகேஷ் இதுதான் சமயம் சொல்லி விடலாம் என்று எண்ணி அவளை பார்க்க அவனுக்கு ஏனோ சொல்ல மனம் வரவில்லை. 

அதனால் அவன் அமைதியாய் செல்வதற்கு திரும்பவும் திடீரென அவனை கடந்து ஓர் சாரைப்பாம்பு செல்லவும் அவனையும் மீறி “ஆஆஆ” என்று கத்திவிட்டான். 

குரல் கேட்டு ஓடிவந்த கவி அவனை முழுவதும் கூட பார்க்காமல்,” என்ன ஆச்சு?” என்று கேட்க அவன் ,”பாம்பு ” என்று சொல்ல அவள்,” அவசரமாய் என்ன கடித்து விட்டதா?” என்று கவலை தொனிக்கும் குரலில் கேட்டாள். 

“அதெல்லாம் ஒன்றுமில்லை” என்று ஹரி கூறியதும் தான் அவளுக்கு உயிர் வந்தது. 

அவள் அமைதியாய் நிற்க அவன் சென்றுவிட்டான். 

“அவனின் அருகாமை விலகி விட தனிமையை வெறுத்துக் கொண்டே தோட்டத்தில் அமர்ந்திருந்தாள் கவி”. 

“அவள் அலுவலகத்திற்கு கிளம்பும் போது கோகுல் அவளிடம் அவன் “ப்ராஜெக்ட்” விசயமா சில பொருட்களை வாங்கி வரச் சொல்ல அவளும் சரி என கூறிவிட்டு கிளம்பினாள்“.

“அதேபோல் அபியும் அக்சயாவும்  அவளிடம் மாலையில் கோவிலுக்கு செல்லலாமா?” என்று கேட்க ,”கண்டிப்பாக போகலாம்” என்றவளின் இரு கன்னத்தையும் பிடித்துக்கொண்டு “என் செல்ல அக்கா” என்றனர் இருவரும். 

அவள் தன் அலுவலகத்திற்கு நுழைந்ததுமே தாரிகை அவளிடம் இன்றைக்கு “ஆப் டே தான் ஆபீஸ்” 

“நாளைக்கு நம்ம ஆபீஸ்ல பெங்க்சன்” என்றாள். 

“கவிக்கு இது மிகவும் சந்தோஷமான விஷயம் தான்”.

 ஆனாலும் மனதில் ஒரு நெருடல் இருவரும் பேசிக் கொண்டே உள்ளே செல்ல அப்போது அவர்கள் எதிரே வந்த அசோக் தாரிகையை பார்த்து “வெண்மேகம் பெண்ணாக உருவானதோ” என்று பாடவும் அவள் முகம் செவ்வானமாய் மலர்ந்தது. 

ஆனால்,” அவன் இன்னும் விட்டபாடில்லை

 இப்போது “செவ்வானம் சேலையை கட்டி வந்தது வீதியிலே” என்று பாடவும் அவள் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விட அவன் பாடாமல் அவள் முகத்தை நோக்க கவி அப்போது அங்கிருந்து விலகி விட்டாள். 

“அவர்கள் இருவரும் நிச்சயமானவர்கள் என்பதால் யாரும் அவர்களின் இந்த அட்டகாசத்தை கண்டுகொள்ள மாட்டார்கள்”

 “கவி அமைதியாய் தன் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள்”.

Advertisement