Advertisement

நான் சரியாத்தான் புரிஞ்சுகிட்டேன் மாமா. நீங்க தானே என்கிட்ட சொன்னீங்க.  நீ எப்பவும் என் கூடயே இருக்கனும். அப்பதான் நான் ஜெயிக்க முடியும். சாதிக்க முடியும்ன்னு. நீங்களா தான் வந்து எனக்கு இந்த மொபைல் போனை வாங்கி கொடுத்து வார்த்தைக்கு வார்த்தை நான் உன்னை நேசிக்கிறேன்னு சொல்லி அன்ப, பாசத்தை கொட்டி நீங்க நான் எவ்வளவு சொல்லியும் கேட்காம பிடிவாதமா இரவு முழுவதும் மெசேஜ் பண்ணிங்க. என்னையும் மெஸேஜ் பண்ண வச்சிங்க. என்னையும் அந்த காதல் வட்டத்துக்கு உள்ளே இழுத்துவிட்டு பேச வச்சி அளவில்லாத காதலை அள்ளி கொடுத்து உருக வச்சிங்க.   அப்போ மட்டும் நீங்க படிக்கலையா? மாமா. இப்பதான் புதுசா படிக்கிறீங்களா?  இப்படி படிக்கணும்னு நினைக்கிறவங்க நான் வேண்டாம் வேண்டாம்னு விலகிப் போனேன்ல.  அப்போ எதுக்கு என்கிட்ட வழிய வந்த அத்தனை காதல் வசனம் எல்லாம் பேசனிங்க.  அப்ப தெரியாதா நான் கூட இருந்தா  உங்களால படிக்க முடியாதுனு.  எதையுமே செய்யறத்துக்கு முன்னாடி யோசிச்சி  இருக்கணும்.  உருகி உருகி பேசிட்டு இப்ப வந்து கொஞ்ச நாள் விலகி இருக்கணும்னு சொல்றீங்க.  உங்களுக்காக என்ன வேணாலும் பண்றேன் மாமா.  நான் சொன்னது உண்மைதான் மாமா.  இப்பவும் சொல்லுவேன். உங்களுக்காக என்ன வேணாலும் பண்ணுவேன்.  அதுக்காக உங்களையே  விட்டுட்டு போன்னு சொன்னா அதை என்னால பண்ண முடியாது மாமா.

“என்ன மலர் நீ புரிஞ்சுக்கவேனு நினைச்சு தானே உன் கிட்ட சொன்னேன்.  ஆனா நீ இப்படி லூசுத்தனமா பேசுற.  நான் எங்கடா உன்ன விட்டுட்டு போறேன்னு சொன்னேன். நான் படிக்கணும்.  நைட் எல்லாம் மெசேஜ் பண்ணிக்கிட்டு இருந்தா படிக்க முடியாது. அதனால கொஞ்ச நாளைக்கு சரியா பேச முடியாதுன்னு தான் சொல்றேன். விலகி போறேன் நான் சொல்லலடா தங்கம். நல்லா புரிஞ்சுக்கோடா” என்றான் முத்து.

“நீங்க படிச்ச அறிவாளி இல்லையா. அதான் அழகா பேசறீங்க.  ரெண்டுக்கும் வித்தியாசம் காட்டுறீங்களா?  கொஞ்ச நாளைக்கு சரியா பேச முடியாதுன்னு சொல்றதுக்கும், விலகி போறேன்னு சொல்றதுக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்க முடியும்னு  நினைக்கிறிங்க மாமா.  இப்போ என்ன நான் பேசினா உங்களால படிக்க முடியாது. அவ்வளவு தானே. சரி இதுக்கு மேல நான் உங்க கிட்ட பேசல. நீங்களும் என்கிட்ட பேச வேண்டாம்.  நீங்க நல்லா படிங்க.  உங்க லட்சியத்த மட்டும் பாருங்க மாமா.  இனி என்ன தேடி வர வேண்டாம்.  உங்க காதல், உங்களோட பழகின இந்த கொஞ்ச நாள் காதல் வாழ்க்கையே போதும்.  அதை நினைச்சிட்டே வாழ்க்கையை முடிச்சிக்கிறேன்” என்று மலர் எழுந்தாள்.

“முத்து எழுந்த வேகத்தில் மலரின் கன்னத்தில் ‘பளாரென்று’ ஒரு அறை விட்டான்.  என்னடீ நான் இவ்வளவு தூரம் பொறுமையா என்னோட நிலைமையை எடுத்து சொல்லிக்கிட்டு இருக்கேன்.  நீ பாட்டுல வாழ்க்கையை முடிச்சிக்கறேன், நினைவு அது இதுனு இஷ்டத்துக்கு பேசிட்டு போற.  ஆமா அன்னைக்கு சொன்னேன். நீ என் கூடவே இருக்கணும்னு.  அதை நான் மறக்கல.  இப்பவும் நீ என் கூட தான் இருக்கணும்.  நேரம் கிடைக்கும்போது பேசுறேன்னு  தான சொல்றேன்.  விட்டுட்டு போறேன்னு  நான் சொன்னேனா. புரிஞ்சுகோடீ” என அவள் கன்னத்தைத் தொட.

“அவன் கையை தட்டிவிட்டாள்.  இதுக்கு பெயர்தான் காதலா.  காதல்னா கடைசி வரைக்கும் எல்லாத்துலயும் கூடவே இருக்கணும். பாதியில் பேச முடியாதுன்னு விட்டுட்டு போறதுக்கு பேரு காதல் இல்ல. ஒருவேளை உங்களுடைய காதல் அத்தியாயத்தில இப்படித்தான் எழுதியிருக்கும் போல”, என மலர் கூற.

“ரொம்ப பேசாதடீ.  காதல பத்தி  நீ பேசுற. உன் காதல சொல்லுனு  இன்னைக்கு வரைக்கும் எத்தனை முறை ஆசையா கேட்டு இருப்பேன்.  என் மேல முழுசா உயிரையே வச்சிருக்கேன்னு  தெரியும்.  ஆனா இதுவரைக்கும் ஒரு முறையாவது உன் காதலை எங்கிட்ட மனசுவிட்டு சொல்லி இருக்கியா?.  எத்தனை முறை கேட்டேன் ஒரு தடவை சொல்லுடீ  ‘நான் உன்னை நேசிக்கிறேன்’ னு  அதுவும் எனக்கு பிடிச்ச  தமிழ்ல.  இன்னைக்கு வரைக்கும் சொல்லி இருப்பியா.  பெருசா பேச வந்துட்டா.  உயிரையே வச்சிருக்காளாம்.  ஆனா காதல மட்டும் சொல்ல மாட்டாளாம். இதோ பாரு நான் சொல்ல வந்தத உன்னால புரிஞ்சுக்க முடிஞ்சா புரிஞ்சுக்கோ. இல்லன்னா என்ன வேணா பண்ணு.  நான் ஏற்கனவே பிரிமினிலறி, மெயின் எக்ஸ்காம் ரெண்டும் பாஸ் பண்ணிட்டேன். கண்டிப்பா இந்த முறை இன்டர்வியூலயும் பாஸ் பண்ணுவேன். பாஸ் பண்ணியே ஆகணும்.  அடுத்து  ஒரு கலெக்டரா தான் இந்த ஊருக்கு  திரும்பி வருவேன்.
நல்லா ஆகுங்க. யார் வேண்டாம்னு சொன்னாங்க. உங்களுக்காக இங்க ஒருத்தி காத்திட்டு இருக்கானு மட்டும் மறந்துடாதிங்க மாமா உதடுகள் துடிக்க.
என் மனசு முழுக்க நீ மட்டும் தான் இருக்க மலரு. எத்தனை வருஷம் ஆனாலும் நீ தான் எனக்கு பொண்டாட்டி.  இதை யாராலும் மாத்த முடியாது.  அது வரைக்கும் உனக்கு பொறுமை இருந்தா எனக்காக காத்திட்டு இரு.  இல்லன்னா நீ என்ன வேணா முடிவு எடுத்துக்கோ.  உன்னுடைய அத்தியாயத்தில் காதல்னா என்னன்னு நீ யோசிச்சுக்கிட்டு இருக்கியோ எனக்கு தெரியாது.  ஆனா என்னோட அத்தியாயத்தில காதல்னா ரெண்டு மனசும் ஒருத்தர ஒருத்தர் முழுசா புரிஞ்சுக்கிட்டு விட்டுக் கொடுக்கிறது தான் காதல்.  எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவங்களே ஜோடி சேர்ந்து  வாழ்றது தான் காதல்.   என்னோட மனசுல நீ மட்டும் தான் இருக்க.  நான் உன்னை முழுசா புரிஞ்சுக்கிட்டேன்.  என்ன தவிர நீ வேற யாரையும் நினைக்க மாட்டேனு எனக்கு தெரியும்.  எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீ மட்டும் தான் எனக்கு பொண்டாட்டி.  நீயும் என்னோட மனச முழுசா புரிஞ்சுக்கோ  மலர்” என்று மீண்டும் அவள் கன்னத்தைத் தொட.

மலரின் கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் பதிலாக வந்தது.

“மலர் நீ அழுதா என்னால தாங்கமுடியாதுடா. நான் நேரம் கிடைக்கும் போதெல்லாம் உன் கிட்ட பேசுறேன். புரிஞ்சுக்கோடா.  ப்ளீஸ்” என்று கூற.

அங்கு இரு மனங்களுக்கு இடையே சற்று நேரம் மௌவுனமே பதிலாக இருந்தது.

“முத்துவே அவளின் மௌனத்தை உடைத்து, நான் எப்போதும் உன்னை விட்டு போக மாட்டேன் மலர்.  இது நான் உயிரா நினைக்கிற உன் மேல சத்தியம்.  என் காதல் மேல உனக்கு நம்பிக்கை இருந்தா நீ என்னோட முடிவை ஏத்தக்குவனு நான் நினைக்கிறேன்”  என்று முத்து கூற.

“மலர் முத்துவின் விழிகளைப் பார்த்து நான் காதலை சொல்லன்னு இவ்வளவு கோபப்படுறிங்களே.  ஏன் மாமா என்னோட மனசுல இருக்கற காதல் அந்த வார்த்தையில் தான் இருக்கா.  அதைச் சொன்னா தான் காதலா?  சொல்லலனா காதல் இல்லனு நினைக்கிறீங்களா? நம்மளோட காதல் உணர்வுகளை ஒரு வார்த்தையில அடக்கிட முடியாது. வெளிப்படுத்திடவும் முடியாது மாமா.  வாழ்நாள் முழுவதும் பேசி முடிச்சாலும் காதல் உணர்வுகளை முழுமையா சொல்லிட முடியாது.  அவ்வளவு கொட்டிக்கிடக்குது மாமா.  மனசு நிறைய கிடக்குது.  அதை எப்படி ஒரு வார்த்தையில முடிக்க சொல்றீங்க.  உங்களோட எதிர்பார்ப்பு அந்த ஒரு வார்த்தையில்தான் இருக்குதுன்னா அது எப்போது சொல்லனும்னு தோணுதோ அப்ப நான் சொல்றேன். ஆனா என்ன பொறுத்த வரைக்கும் என்னோட மனசுல நீங்க மட்டும் தான் இருக்கீங்க. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீங்க மட்டும் தான் என்னோட புருஷன்.  இதை யாராலும் மாத்த முடியாது மாமா” என மலர் அழுதாள்.

“இதை நீ சொல்லித்தான் தெரியனுமா? மலர்.  நமக்குள்ள எவ்வளவு சண்டை வந்தாலும் நம்மகிட்ட முழுமையான புரிதல் இருக்கிற வரைக்கும் அந்த ஆண்டவனே விதியால சதி செஞ்சாலும் நம்மள பிரிக்கமுடியாது மலர்” என்று முத்து  உணர்ச்சி வேகத்தில் மலரை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.

மலரின் பூவுடல் அந்த அணைப்பில் துவண்டு போனது. முத்து மலரின் நெற்றியில் இதழ் பதிக்க. மலரோ தனது இதழை அவன் மார்புக் கூட்டிற்கு பரிசாக கொடுத்து இருந்தாள். இருவரது அன்பிலும்  அழகான காதல் உருவாகியிருந்தது.

“ஊருக்குள் நுழைந்த ஆனந்த் மலர் சொன்ன இடத்திற்கு அருகில் வந்தவன் அந்த வீடா தான் இருக்குமோ?” என சிந்தனையில் அருகில் இருந்த வீட்டைப் பார்த்துக் கொண்டே வர.  எதிரில்  துள்ளிக் குதித்து ஓடிவந்த ஆட்டுக்குட்டி கவனிக்காமல் முன்னாலிருந்த குழியில் கால் வைத்து இடறி அதன் மேல் விழுந்தான். சிறிய குட்டி என்பதால் அவன் விழுந்த வேகத்தில் அதன் காலில் அடிபட்டு கத்தத் தொடங்கியது.

“ஆட்டுக்குட்டியின் சத்தம் கேட்டு செண்பகம் வெளியில் ஓடி வந்தாள். ஆட்டுக்குட்டியை பார்த்து ஓடி வந்து கையில் தூக்கி வைத்து காலை பிடித்து பார்த்தாள்.  காலில் அடிபட்டு இருக்கும் போல. அடப்பாவி! சின்ன குட்டினு  கூட பாக்கல. கால உடச்சிட்டியே.  மனுஷனா நீ”  என அவனை பேச தொடங்கினாள்.

“ஏங்க.  தெரியாம தான”  என்று ஆனந்த் ஆரம்பிக்க.

செண்பகம் அவனை ஒரு வார்த்தை கூட பேச விடாமல் எரும மாடு மாதிரி இருக்க.  கண்ணு தெரியாம போய்டுமா?  பார்த்து நடக்க தெரியாதா?.

“ஏங்க நா அந்த வீட்ட பார்த்துட்டு வந்தேன். இந்த குட்டி இருந்தது தெரியாம  தடுக்கி விழுந்துட்டேன்.  வேணும்னே  பண்லங்க”  என்று ஆனந்த் கூற.

“அவன் பேச்சையே செண்பகம்  காது கொடுத்து கேட்காமல் முதல்ல யாருய்யா  நீ. உன்னை இதுக்கு முன்னாடி இந்த ஊர்ல பாக்கவே இல்லையே”  என செண்பகம் கேட்க.

“நான் இந்த ஊருக்கு புதுசா  போஸ்ட் மாஸ்டர் வந்து இருக்கேன். எனக்கு தங்க கொடுத்த வீடு  இங்க இருக்குனு சொன்னாங்க.   இந்த வீடு தானானு சந்தேகமா  அங்க பார்த்து கிட்டே வந்தேன்.  இந்த  ஆட்டுக்குட்டியை கவனிக்கல” என்றான்.

சின்ன கவனக் குறைவு தான் மொத்த  வாழ்க்கையவே  புரட்டிப் போடும்.  அங்க என்ன ஆடுதுனு  இங்கே வந்த குட்டிய  பார்க்காம  விழுந்திங்க.  கவர்மெண்ட் வேலைல. அதனால வானம் பார்த்து தான் நடக்கனுமோ.

“ஏங்க தெரியாம தான் கேக்குறேன்.  உங்க ஊர்ல பொண்ணுங்க எல்லாமே திமிருபுடிச்சவங்களா தான் இருப்பிங்களா?”   என்றான் ஆனந்த் .

அடுத்த நொடியே செண்பகத்திற்கு வந்ததே கோபம்.” எங்க ஊரு  பொண்ணுங்க எல்லாம் திமிருபிடிச்சவங்களா?  உள்ள வந்த உடனேயே என்னத்த கண்டுபிடிச்சிங்க.  எங்க ஊரு பொண்ணுங்கள பத்தி என்ன தெரியும் உனக்கு.  வந்தமா உன்னோட வேலையை மட்டும் பார்த்தமானு  இரு.  இல்லன்னா பேசுறதுக்கு வாய் இருக்காது” என்றாள் செண்பகம் .

“ஒன்னு மட்டும் தெளிவா தெரியுது.   இந்த ஊர்ல எல்லா பொண்ணுங்களும் பஜாரிங்க தான்.  எல்லாம் திமிரா தான் பேசுறீங்க. இந்த பொண்ணுங்க சாகவாசமே  வேணாம்டா சாமி” என தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு ஆனந்த் நகர.

செண்பகம் தனது விரல்களால் சொடக்கு போட்டு,  ஹலோ மிஸ்டர் நில்லுங்க என்றாள்.

தொடரும்….

Advertisement