பகுதி – 06
“என்ன கண்ணா கேள்வி கேட்கிறேன்ல, நீ கனாக் கண்டு கிட்டு நிக்கிற” என்று ஆச்சி கேட்க.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல ஆச்சி” என கண்ணன் எழிலையே பார்த்துக் கொண்டு நிற்க.
“அங்கு என்னலே பார்வை. சோசியக்காரன் இன்னைக்கி நாள் நல்லா இல்லைன்னு சொல்லிட்டான்லே. அவள இன்னைக்கே மென்னு முழுங்கிடாதலே. இன்னைக்கு ஒருநா நீ போயி உன் தம்பி முத்து கூட படுத்துக்கோ நாளைக்கு எல்லாம் நடக்கும்” என்று ஆச்சி கூற.
என்னது முத்துக் கூடவா? என்ன ஆச்சி சொல்றீங்க. அதுக்கா இந்த பில்டப்பு கொடுத்தீங்க. அப்புறம் எதுக்கு அவளுக்கு தலை நிறைய மல்லிகை பூ எல்லாம் வச்சி விட்டாங்க.
“ஏலேய்! கூறு கெட்டவனே. அவ பொட்ட புள்ள. தோட்டத்தில பூ மலர்ந்து கிடக்கு. கட்டி வச்சது வீணாக போக கூடாதுனு தலையில வச்சு விட்டா உங்க ஆத்தா. இதுல என்னத்தடா கண்டுபிடிச்ச. உன் பொஞ்சாதி ஒரு ராவுல எங்கேயும் தொலைஞ்சு போய்டமாட்டா. போ போய் படுலே. காலையில பேசிக்கலாம்” என்று கூறிவிட்டு ஆச்சி முருகேசன் தாத்தாவைப் பார்க்க. ‘உத்தரவு மகாராணி’ என்று ஆச்சியின் பின்னாலேயே தாத்தா செல்ல அனைவரும் சிரித்தனர்.
“இப்போ எதுக்குடா எல்லாரும் இப்படி சிரிக்கிறீக. என் பாசக்கார கிழவன நான் கூட்டிட்டு போறேன். இதுல உங்களுக்கு என்ன சிரிப்பு வேண்டி கெடக்கு. நான் கண்ணால பாக்குறத அவரு செயலா செஞ்சி முடிப்பாருலே. அதுதான் எங்களுக்கு இருக்குற அன்பு. இன்னைக்கு வரைக்கும் ரெண்டு பேருமே இப்படி அந்நியோன்னியமா இருக்குறோம்னா அதுக்கு காரணம் நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சு வச்சிருக்குறது தாம்லே. நீங்க சிரிக்கிறீர்களேனு எல்லாம் நாங்க வருத்தப்பட மாட்டோம்லே. என் உசிரு போற கடைசி நிமிஷம் வரைக்கும் இந்த மனுஷன் என் கூடவே இருக்கணும். அவரு மடியில தான் என் உசுரே போகணும். இதுதான் என் கடைசி ஆசையும் கூட” என்று ஆட்சியை கூற.
“முருகேசன் தாத்தா ஆச்சியை பிடித்து தன்னோடு தோளில சாய்த்துக் கொண்டவர் நீ இல்லாத வெறும் வாழ்க்கைய நான் மட்டும் வாழுவேனா தங்கம். உன் கூடவே வந்துடுவேன்தாயி” என கண்கலங்க..
“அவர்களின் அன்பை பார்த்து அனைவரும் பெருமிதப்பட்டார்கள். சரி போங்க நேரமாகுது” என்று கூறிவிட்டு ஆச்சியும், தாத்தாவும் உள்ளே போக..
“கண்ணனின் அப்பா, முத்து அவர்களும் உள்ளே சென்றனர். இப்படியே ரெண்டு பேரும் நிக்காம போய் படுங்க. நீ கண்ணனோட அறைக்கு போய் தூங்குமா. கண்ணா நீ கிளம்பு முத்துகூட போ” என்று கூறிவிட்டு மாரியம்மாளும் உள்ளே போக.
எழிலும் கண்ணனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே இருக்க. இருவரின் மனங்களும் மௌனமாக இருந்தாலும் இரு ஜோடி விழிகளும் ஆயிரம் கதைகள் பேசியது.
என்ன என்பதைப் போல எழிலின் கண்கள் கண்ணனை கேள்விக்குறியோடு பார்க்க..
“இவ ராத்திரி பாத்துக்கறேனு வேற காலையிலேயே சொன்னாலே இப்போ என்ன சொல்ல போறான்னு தெரியலையே”, என கண்ணன் அவளது விழிகளை சந்திக்க முடியாமல் நிலத்தைப் பார்க்க.
“எழில் கண்ணனின் அருகில் சென்று யாரோ என்ன விவாகரத்து பண்றதா வீராப்பா சொன்னாங்கனு கேள்விப்பட்டேன். இப்ப என்ன அப்படி பாக்குறீங்க. எப்போ விவாகரத்து பண்ணலாம்னு யோசனையா?”, என்று கேட்க.
“கண்ணன் அவளது வார்த்தைகளின் வலி தாங்க முடியாமல் அவள் கன்னத்தில் “பளாரென்று”, ஓங்கி ஒரு அறை விட்டான். கொன்னுடுவேன்டீ. தாலி கட்டிய கையோடு மஞ்ச கயிறு ஈரம் கூட காயாம நீ பாட்டுக்கு கிளம்பிப் போய்ட்ட. உன்னோட பேசவே எனக்கு புடிக்கல தான் . அவ்வளவு கோபம் கழுத்து வரைக்கும் மனசு நிறைய இருக்கு. கல்யாணம்னா உனக்கு அவ்வளவு விளையாட்டா போயிடுச்சா. நான் ரத்தமும் சதையும் உள்ள உயிருள்ள மனுசன்டி. ஏன்டி இது உனக்கு தெரியல. ஏன் என் மனச இப்படி காயப்படுத்தி வேடிக்கை பார்க்கிற. ஏன்டீ என்ன உனக்கு பிடிக்கலையா? ஏன் இப்படி என்ன அழ வச்சி வேடிக்கை பாக்கற” என்று தவிப்போடு கேட்டான்..
எழில் அவன் அடித்த கன்னத்தை தனது கைகளால் பிடித்துக் கொண்டு அசையாமல் நின்றாள். அவள் வாங்கிய அடி அவளுக்கு கொஞ்சம் கூட வலிக்கவில்லை. அதற்கு மாறாக மனதிற்கு இனிமையாக இருப்பதாகவே நினைத்தாள்.
“எழிலின் இந்த செயலைப் பார்த்து கண்ணனின் விழிகள் அவளது விழிகளையே ஊடுருவின. அவன் வாழ்வே அவள்தானே என்பதை உணராமல் இப்படி பேசுறாளே” என்று தவிப்புடன் அவளை நோக்க… அப்போதுதான் அவள் விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்ததைப் பார்த்தான். என்ன செய்வதென்று அறியாமல் கண்ணனின் இதயம் தவிக்க. உதடுகள் துடிக்க அவளை ஊடுருவினான். மனமோ தடுத்தது. என்ன செய்வதென்று மனதிற்குள் சிறு அலை அடித்தது போல மனம் துடிக்க.
எழில் தன் உணர்வுகளை கண்ணீராக கொட்டினாள். கண்ணனோ இனம்புரியாத உணர்வில் தத்தளிக்க. இவளோ ஏக்கப் பார்வையோடு கண்ணனை நோக்க.. அந்த உணர்வுகளில் இருந்து விடுபட முடியாமல் தவித்தான் கண்ணன்..
“மாமா என் மேல இன்னும் உங்களுக்கு கோவம் இருக்கா?” என்று கேட்டாள்.
“நீ தான்டி என் உசுரு. ஆனா என் பேச்ச கேட்காம நீ பண்ற சில விஷயங்கள் எனக்கு பிடிக்கல எழில். அத மட்டும் புரிஞ்சி நடந்தா நம்ம வாழ்க்கை சொர்க்கம் தான். நீ எனக்கு மட்டும் தான் வேணும். எனக்காகவே இருக்கனும். நமக்காக நாம வாழனும். நீ இந்த மாதிரி வெளிய போறது, பொதுச்சேவைனு சுத்தறதுலாம் விட்ருமா. என் கூட வயலுக்கு வந்து அங்க இருக்கற வேலைய பாரு” என கண்ணன் கூற.
“நான் என் லட்சியத்த எதுக்காகவும் விட்டுத்தர மாட்டேன் மாமா. நீங்க போய் படுங்க” என அவனது பதிலை எதிர்பாக்காமல் உள்ளே போய் கதவை மூடிக் கொண்டாள்.
“சரியான திமிரு புடிச்சவ. கொஞ்சம் கூட என்னோட பாசத்தை புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறா என்று கண்ணன் கோபத்தோடும், ஏக்கத்தோடும் முத்துவின் அறைக்கு சென்றான். அங்கு அப்போது தான் முத்து மலருக்கு குறுஞ்செய்தி அனுப்ப செல்லை கையில் வைத்துக்கொண்டு ஆர்வத்தோடு எழுத்துக்களை தட்டச்சு செய்து கொண்டிருக்க. அதைப் பார்த்த கண்ணன் என்னடா நேரமாகுது. இன்னும் தூங்காம செல்ல கைல வச்சிக்கிட்டு என்ன பண்ற.. தள்ளிப்படு” என்று சொல்லிக்கொண்டே கண்ணன் முத்துவின் அருகில் அமர்ந்தான்.
“அடப்பாவி. இப்பதான் மலருக்கு மெசேஜ் பண்ணலாம்னு செல்ல கையில எடுத்தேன். அதுக்குள்ள கரடி மாதிரி வந்து உட்கார்ந்துட்டானே. இவனும் நிம்மதியா இருக்க மாட்டான். நம்மளையும் நிம்மதியா இருக்க விட மாட்டான் போல இருக்கே. என்ன ஆனாலும் சரி மலருக்கு மெசேஜ் பண்ணியே ஆகணும் “, என்ற முடிவோடு முத்து செல்போனைப் பார்த்துக் கொண்டே இருக்க.
“இன்னும் என்னடா பண்ற. உன்னைய தூங்க சொன்னேன். அந்த செல்ல வச்சுட்டு தூங்கு”, என்று கண்ணன் மீண்டும் கூற.
“கண்ணா நீ இப்படி சிடுமூஞ்சா இருந்தா அண்ணிக்கு எப்படி உன்னை பிடிக்கும். கொஞ்சமாவது அன்பா ரொமான்ஸா அண்ணிகிட்ட பேசி பாரு. சந்தோசம்னா என்னனு அப்போ புரியும். உனக்கு தூக்கம் வந்தா போய் தூங்கு. நான் மலர் கிட்ட பேசணும்” என்று சுவற்றின் ஓரமாக முத்து எழுந்து சாய்ந்து அமர்ந்து கொண்டான்.
“டேய்! இப்பவே மணி பத்து ஆகப்போவது. இதுக்கு மேல என்னடா பொட்ட புள்ள கிட்ட பேச்சு வேண்டி கிடக்கு. ஒழுங்கா தூங்குற வழியபாரு” என்று கூற.
“ஒரு பத்து நிமிஷம் கண்ணா. நீ தூங்கு” என்று கூறிய முத்து மலருக்கு குறுஞ்செய்திகளை அனுப்ப தொடங்கினான்.
மலர் தூங்கிட்டியா? என்று முத்து அனுப்பு. உரையாடல் இனிதாக தொடங்கியது.
“இன்னும் இல்ல மாமா. தூங்குற மாதிரி காரியத்தையா பண்ணி இருக்கீங்க. எப்படி தூக்கம் வரும்” என்று மலர் கூற.
“நான் என்ன பண்ணினேன் மலர் உன்னோட அந்த மயக்கும் மைவிழி பார்வை தான் எல்லாத்தையும் தன்னால பண்ணி வைக்குதே. அந்த கண்ணுல ஏதோ மந்திரம் போட்டு வச்சிருக்க மலர். அப்படியே சுண்டி இழுக்குது” என்று முத்து கூற.
“அது மந்திரமும் இல்ல. மயக்கும் விழியும் இல்ல மாமா. அத்தனையும் உன் மேல வச்ச பாசம். என் தலைல வச்சிருந்த மல்லிகை பூவே அதுக்கு உதாரணம்” என்று மலர் கூற..
“ஒரு மலருக்கு இன்னொரு மலர் உதாரணமா. எத வச்சி சொல்ற” என முத்து கேட்க.
“இந்த பூ மாதிரி தான் உங்க மனசும் மாமா. ரொம்ப மென்மையானது” என மலர் அனுப்ப..
முத்துவின் மனதில் சில்லென காதல் அலையடிக்க.. இதழ்கள் பிரிய மெதுவாக சிரித்தான்.
“கண்ணன் சிரிப்பு சத்தம் கேட்டு, டேய்! எரும மாடு இன்னும் தூங்கலையா? மணி என்ன ஆகுது” என்று கேட்க.
“இதோ தூங்குறேன் கண்ணா. பதினொருமணி தான் ஆகுது. நீ தூங்கு” என்று கூற. கண்ணன் மீண்டும் கண்ணயர்ந்தான்.
என் உதட்டு சிரிப்பாலே
உன் மனச களவாட போறேண்டி
உன் உசுரே நான்தானே.
என முத்து அனுப்ப..
மலர் மென்மையான இதழ்களில் புன்னகையை உதிர்த்து விட்டு,
காதலையே கனவாக்கி
இமைகளுக்குள் மூடிவைக்க
மாமனவன் ஓரப் பார்வைக்கு
தவமாய் தவம் கிடந்தேனே….
என்று மலர் அனுப்ப..
முத்து மீண்டும் வாய்விட்டு சிரிக்க.
“கண்ணன் கோபமாக எழுந்து, டேய்! இன்னுமா நீ தூங்கல. செல்ல உடைச்சு போட்டுருவன். மரியாதையா தூரமா போய் படுடா” என்று கூற.
“நீ இவ்ளோ நேரம் தூங்காம என்ன பண்ற கண்ணா. நீ முதல்ல தூங்கு” என்று கோபமாக கூறிவிட்டு முத்து மெத்தைய விட்டு கீழே இறங்கி அமர்ந்துகொண்டான். மீண்டும் தனது குறுஞ்செய்தியை தொடங்கினான்.
“கண்ணன் மணியை பார்க்க இரண்டு மணி ஆகியிருந்தது. இந்த காதல் இப்படியெல்லாம் ஆட்டி வைக்குது.. இவ நம்மள இப்படி ஆம்போனு விட்டு போய்ட்டாளே. இவளுக்கு ஏன் இதெல்லாம் தெரிய மாட்டேங்குது. இவ தங்கச்சி மட்டும் உஷாரா இருக்கா பாரு”, என்று கண்ணன் சளித்துக் கொண்டு படுத்தான். நமக்கு கொடுத்து வச்சது இவ்வளவு தான் போல என்று முணகிக் கொண்டு கண்களை மூடினான்.
மனசெல்லாம் உன்ன எண்ணி
கண்ணே நான் காத்திருக்கேன்
உன் நெனப்ப நெஞ்சுக்குள்ள
உசுரா தேக்கிவச்சேன்…
என்ற முத்து அனுப்ப இப்படியே மணி நான்கை தொட்டிருந்தது.
“மீண்டும் தூக்கம் கலைந்து முறைத்துப் பார்த்த கண்ணன் முத்து செல்போனும் கையுமாக சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து பயங்கர கடுப்பாகி நீயெல்லாம் மனுஷனாடா. பொழுது விடியப்போவுது. இன்னுமா தூங்கல. அந்த காதல கொஞ்சம் அடக்கி வாசி. போய் தூங்குடா. அந்த புள்ளை பாவம் இல்ல. பேசின வரைக்கும் போதும். மரியாதையா வந்து படு” என்று கண்ணன் கோபமாக மிரட்ட.
இதோ ஒரு நிமிஷம் என்று கூறிவிட்டு நின்று கொண்டே மலருக்கு மீண்டும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினான்.
முத்துவுக்கும் மலருக்கும் அன்றைய இரவு உறங்காமலே முடிந்து விடியத் தொடங்கியது. குறுஞ்செய்திகளை முடிக்க மனமில்லாமல் முடித்துக் கொண்டனர்.
நீண்ட இரவு நீலவானத்தில் விடியலைத் தேடி அலைந்தது. கண்ணனின் மனமோ முத்துவின் தீராத காதலைக் கண்டு உள்ளுக்குள் தன்னவள் கொடுத்த இதழ் முத்தத்தினை எண்ணி ஒருவித ஈர்ப்பு அவனுக்குள் நீரூற்றாய் பிரவாகமெடுத்து ஓடத் தொடங்கியது.
தொடரும்….