Advertisement

நடந்த நிகழ்வுகளுக்கு இடையில் நண்பனின் இல்லம் வந்த விஜயன் வீடு பூட்டியிருப்பதை கண்டு அவனுக்கு அழைப்பு விடுக்க. துவாரகாவின் இல்லம் வருமாறு கூறிவிட்டு அலைபேசியை வைத்துவிட்டான் விஷ்ணு.

அரைமணி நேர பயணத்தில் அடித்து பிடித்து பதைப்பதைப்புடன் உள்ளே நுழைய, மயான அமைதி அவ்விடத்தை ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருந்தது. விசாலாட்சியை தவிர்த்து விஜயன் வைஷாலி உட்பட மற்ற மூவரும் துவாரகேஷை முறைத்து பார்த்தபடி இருக்க.

அனைவரின் முறைப்புகளையும்  வஞ்சமில்லாமல் வாங்கி கொண்டவனின் அடி வயிறு கதி கலங்கியது. கூடியிருந்தவர்களை பார்த்ததுமே துவாரகாவிற்கு புரிந்து போனது விஷயம் தெரிந்துவிட்டது என்று  ‘சைலண்டா வந்து சாமாதனம் பண்ணுவான்னு பாத்தா இப்டி வத்தி வச்சு வானரத்தையெல்லாம் ஒன்னு கூட்டிடாளே சரவெடிஎன்று உள்ளுக்குள் நொந்தவன் பயத்தில் எச்சிலை கூட்டிவிழுங்கியபடி பேந்த பேந்த விழிக்க.

உடல் விரைக்க துவார பாலகர்களை போல இம்மென்றால் அடிக்க தயராய் இருந்தனர் நட்புக்கள் இருவரும்.பொய்யுரைத்து வர வைத்தவனை ஏண்டாஎன்ற ரீதியில் பாவமாய் பார்க்க அவன் முகமோ ஜகஜோதியாய் ஜொலித்து கொண்டிருந்தது உக்கிரத்தில்.

ம்மாஎன்று வேகமாக விசாலாட்சியின் அருகில் சென்று தரையில் மண்டியிட்டு அமர்ந்துஉங்களுக்கு ஒன்னும் ஆகலையே?” என்று பார்வையில் தவிப்பை தேக்கி கொண்டு கேட்க.

ஏண்டா இதுக்கு மேல ஏதாவது ஆகணுமா என்ன?’ என்ற கேள்வியில் திரவகத்தை அள்ளி ஊற்றியது போல துடித்து போனான் துவாரகேஷ். 

ம்மா..என்று கரகரப்பான குரலில் அழைக்க.

ஏண்டா இப்டி பண்ண? ஒரு வார்த்தை இந்த மாதிரின்னு சொல்லிருந்தா நாங்க வேணாம்னா சொல்லிருப்போம்.இப்டி யாருக்கும் தெரியாம இந்த மாதிரி ஒரு காரியம் பண்ணிட்டியே துவாரகா நீ இப்டி நடந்துப்பண்ணு நா நினைச்சு கூட பாக்கலைஎன்று ஆற்றாமை பொங்க பேசினான் விஷ்ணு.

கோபத்தை காட்டியிருந்தால் கூட போகிற போக்கில் மறந்து போய் விடலாம் போல, அவன் பார்வையில் இருந்த கோபம் வார்த்தையில் இல்லை என்றதும் துவண்டு போனான் துவாரகேஷ். விஷ்ணு கூறுவது போல முன்பே அனைவரிடமும் சொல்லியிருக்கலாம் தான். ஆனால் அவளிடம் தன் மனதை கூறி அவள் விருப்பம் தெரிந்த பின் சொல்லிக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இருந்தவனுக்கு அவ்வேளையில் இரண்டாம் பட்சமாய் எடுத்த முடிவை செயல் படுத்துவதை தவிர்த்து வேறு வழி தெரியவில்லை. அனைவரின் முன்பும் சூழ்நிலை கைதியாய் அமர்ந்திருந்தான் துவாரகேஷ்.

சாரிடா எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை அவள ஊர விட்டு போகவிடாம தடுக்க தான் இப்டி பண்ணேன். நா பண்ணது நியாம்னு சொல்ல வரல, கோபத்துல அவ எடுத்த முடிவு தப்பா தடம் மாறி போயிற கூடாதுன்னு தான் அவளுக்கே தெரியாம கேட்காம தாலி கட்டுனேன் விஷ்ணுஎன்று விளக்கம் அளிக்க.

துவாரகேஷின் விளக்கத்தை அங்கிருந்தவர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை. மகனின் பேச்சில் உணர்ச்சியற்று அவனை வெறித்தவர்செஞ்ச காரியத்தை நியாயப்படுத்தி பேசுனா எல்லாம் சரின்னு அர்த்தமில்ல துவாரகாஎன்ற தன் தாயின் குரலில் கண் கலங்கி துவாரகேஷ் அவர் முகம் பார்க்க.

கனவுல கூட நினைச்சு பாக்கலை என்னோட பையன் இப்டி ஒரு தப்பு பண்ணுவான்னு, கடைசி நேரத்துல கூட உன்கிட்ட பேசுனேனே அப்பயாவது மனசுல இருந்ததை சொல்லிருக்கலாமேடா? நா அவகிட்ட பேசி புரிய வச்சிருப்பேனே, அத விட்டுட்டு யாருமே இல்லாதவன் மாதிரி அவள கல்யாணம் பண்ணிருக்க. 

நா இன்னும் உயிரோட தாண்டா இருக்கேன்என்று ஆவேசமாக பேசியவரின் உள்ளம் அக்னிபர்வதமாய் கொதித்தது.

உன்ன நினைச்சு பல தடவை பெருமை பட்டுருக்கேன் ஆனா இன்னைக்கு நீ பண்ண காரியத்தை நினைக்கும் போது வெட்கபடுறேன். என்னோட பையன் பொறுமைசாலி எதுலயும் அவசரபுத்திய காட்ட மாட்டான் மத்தவங்க மனசு புரிஞ்சு நடந்துப்பான்னு எத்தனையோ நாள் சந்தோஷப்பட்டுருக்கேன். இன்னைக்கு அதையெல்லாம் பொய்யாகிட்ட துவாரகா.

என்னோட வளர்ப்பு பொய்யாகிருச்சு, உனக்கு நல்லது கெட்டது சொல்லி வளத்துருக்கேன்னே தவிர எது நல்லது எது கேட்டது எதுன்னு சொல்லி காட்டாம விட்டுட்டேன் எல்லாம் என்னோட தப்பு தான்என்று நம்பிக்கை உடைந்து போன விரக்தியில் வேதனையுடன் பேச.

ஏம்மா இப்டியெல்லாம் பேசுறீங்க உங்க வளர்ப்புல தப்பில்ல நான் தான் தப்பு பண்ணிட்டேன். விருப்பம் இருந்தாலும் இல்லைன்னாலும் அந்த பொண்ணுகிட்ட கேக்காம தாலி கட்ட கூடாது, புத்திக்கு தெரிஞ்ச விஷயம் மனசுக்கு தெரியலை அவ என்னவிட்டு போக கூடாதுன்ற ஒரு வேகத்துல இப்டி பண்ணிட்டேன்ம்மா என்ன மன்னிச்சிறுங்கம்மாஎன்று கண்ணீர் விட்டு அவர் காலை பற்றினான் அருமை புதல்வன்.

ம்ஹும், சுலபமா விளக்கம் கொடுத்துட்ட ஆனா என்னால ஏத்துக்க முடியலைடா. நீ பண்ண காரியத்தை ஜீரணிக்க முடியலை துவாரகா, என்னோட நம்பிக்கை மொத்தமும் போச்சுஎன்றவர் சஞ்சளாவை பார்த்துஅவ என்னோடா மருமக தான் அதுல எந்த மாற்றமும் இல்லஎன்றவர் கண்ணீர் வழிய மன்னிக்க மாட்டாறா என்ற ஏக்கத்துடன் பார்த்த மகனிடம். 

என்னால உன்ன மன்னிச்சு மகனா ஏத்துக்க முடியாதுஎன்று அனுமதியின்றி வழிந்த விழிநீரை துடைத்து கொண்டு எழுந்து அறைக்கு சென்றுவிட்டார் விசாலாட்சி. 

நம்பிக்கை உண்மையின் பிரதிபலிப்பு. அது செயலற்று பலம் இழந்து போய்விட அவன் வார்த்தைகளும் காரணங்களும் வலுவிழந்து போயின.

விசாலாட்சி சென்ற திசையை ஜீவனற்று பார்த்தவன் துவண்டு போய் கசங்கிய முகத்துடன் தரையில் அமர வேகமாக விஜயனும் விஷ்ணுவும் அவன் அருகில் வந்து அமர்ந்தனர். இருவரையும் கலங்கிய விழிகளுடன் நோக்கியவன் சட்டென அணைத்து கொண்டுநா பண்ணது தப்பு தான்என்று கண்ணீரில் கரைய.

சரி விடுடா அம்மா தானே பேசுனாங்க அழுகாத நீ இந்த மாதிரி பண்ணிட்டியேன்னு வருத்துல பேசிட்டு போறாங்க அழுகாத எல்லா சரியாகிரும்என்று இருவரும் ஆறுதல் கூற.

அம்மாவோட மனசை உடைச்சுட்டேன் அவள பத்தி யோசிச்சேன், என்னோட எதிர்கால வாழ்க்கைய பத்தி யோசிச்சேன், இப்டி பண்ணா அம்மா என்ன ஆவாங்கன்னு யோசிக்காம விட்டுட்டேன்என்று வலி நிறைந்து கூறியவனை ஆற்றும் வழி தெரியாது இருவரும் விழிபிதுங்கி ஒருவரை ஒருவரை பார்த்து கொள்ள.

சரி விடுடா பண்ணது பண்ணிட்ட அழுதா எல்லாம் சரியா போகுமா? செய்யிறதுக்கு முன்னாடி யோசிக்கணுமே தவிர செஞ்சிட்டு பீல் பண்ண கூடாது துவாரகா. ஆன்ட்டி மனவருத்ததுல தான் பேசினாங்களே தவிர மனசார பேசலை எல்லாம் சரியாகிரும், நீ பண்ணதை மறந்து மனசார உன்ன மன்னிக்க அவங்களுக்கு கொஞ்சம் டைம் கொடுஎன்று தேற்றும் விதமாய் பேசியவள்.

நல்ல விஷயம் சொல்ல வந்த எங்களுக்கு ஷாக் கொடுத்ததுமில்லாம இப்டி அழுது வடியிறயே பக்கி ஆம்பளை பசங்க அழுக கூடாதுடா முதல கண்ணை துடைஎன்று அவன் மனதை மாற்ற வேண்டி வைஷாலி வேடிக்கையாய் பேச.

விருட்டென நிமிர்ந்தவன்ஏன்? அழுதா என்ன? பொண்ணுங்க மட்டும் தான் அழணும்னு ஏதாவது ரூல்ஸ் இருக்கா? உங்களுக்கு வர்ற கார்ப்ரேஷன் வாட்டர் எங்களுக்கு வந்தா உங்களால பாக்க முடியாதா?, மனசுல இருக்குற பாரம் குறையிற வரைக்கும் அழுது தீர்த்துட்டு நீங்க நீண்ட ஆயுசோட இருக்கணும் எல்லாத்தையும் மனசுக்குள்ள போட்டு அடக்கி வச்சு அடக்கி வச்சு அல்பாயுசுலயே நாங்க போயிறனும் அப்டி தானே?. 

நா அழுவேன் இடம் பொருள் எல்லாம் பாக்க மாட்டேன் அழுதா தைரியம் இல்லாதவன் எதையும் ஃபேஸ் பண்ண தெரியாதவன்னு அர்த்தம் இல்ல, கோபம் சிரிப்பு மாதிரி இதுவும் ஒரு உணர்வு தான். கட்டுப்படுத்த முயற்சி செய்ய கூடாதுஎன்று மூச்சு விடாமல் படபடவென பட்டாசாய் பொறிந்து விட்டு அங்கிருந்தவர்களின் முகம் பார்க்க, ஒருவர் முகத்திலும் ஈ ஆடவில்லை சற்று முன் வரை அழுதது இவன் தானா என்ற ரீதியில் விழிகள் விரிய பார்த்து கொண்டிருந்தனர் ஒருத்தியை தவிர.

துவா மாமா இந்தாங்க தண்ணி குடிங்கஎன்று கண்ணாடி கிளாஸை நீட்டிய கரத்திற்கு சொந்தமானவளை நிமிர்ந்து பார்த்தவன் என்ன நினைத்தானோ கண்களை துடைத்து கொண்டு வாங்கி மடமடவென குடித்துவிட்டு மூச்சு வாங்கினான்.

முகத்தில் மெல்லிய வேதனை விரவஇதுவும் ஒரு அனுபவம் தான் ஒரு விஷயம் செய்யிறதுக்கு முன்னாடி,அது பாதகமான செயலா இல்லையா?, அதனால மத்தவங்க மனசு எந்த அளவுக்கு பாதிக்கப்படும், நம்மலாள அவங்கள ஃபேஸ் பண்ண முடியுமா?, அவங்க நம்பிக்கைய காப்பத்த முடியுமா?, எதையும் யோசிச்சு செய்யணும்ன்ற விஷயத்தை நல்லா புரிஞ்சுகிட்டேன்.

மனுஷங்க சொல்றதை விட அனுபவம் சொல்றது தான் மண்டையில உரைக்கிற மாதிரி சட்டுன்னு பதியிது. சரி அத விடுங்க என்னோட பிரச்சனை நா பாத்துகிறேன் திருட்டு கல்யாணம் பண்ணவனுக்கு அதனால வந்த பிரச்சனைகளை சமாளிக்கிற திடம் இருக்கு நா சரி பண்ணிக்றேன்என்று ஈரம் படர்ந்த விழிகளை இரு கையால் துடைத்து கொண்டு. 

நீ ஏதோ நல்ல விஷயம்னு சொன்னியே என்னது அத சொல்லுஎன்று புத்துணர்வுடன் புது தெம்பு பிறந்த விதமாய் வைஷாலியிடம் கேட்க.

ஹப்பாடா இப்போயவது விஷயத்துக்கு வந்தியேஎன்று அலுத்து கொண்டவள்மேரேஜ் டேட் பிக்ஸ் பண்ணியாச்சுடா நேர்ல பாத்து சர்ப்ரைஸா சொல்லலாம்னு தான் வந்தோம் இங்க என்னடான்னா ஏதேதோ கூத்து பண்ணி வச்சுருக்கஎன்று அங்கலாய்த்து கொள்ள.

பின்னதை விடுத்து முன்னதை பற்றி கொண்டான்.கல்யாணமா..!என்று அதிர்ந்தவனின் மனவருத்தமெல்லாம் இருந்த தடம் தெரியமால் போனது. இது நாள்வரை அவன் வாழ்வில் விடியல் துளிர்க்காத என்று காத்திருந்த காத்திருப்புகள் வீண் போகவில்லை என்ற எண்ணமே மகிழ்ச்சியை தருவிக்க. 

டேய் விஜி நிஜமாவா! எப்போடா கல்யாணம் எங்க வச்சு?” என்று ஆச்சர்யத்துடன் தாமரை முகமாய் கேட்க.

அவன் கண்களில் மின்னிய ஆர்வத்தை கண்டு நெக்குறுகி போனவன்அடுத்த வாரத்துல முதல் நாள்என்று ஆர தழுவி கொண்டான் நண்பனை.

உறவுகள் அளிக்காத உணர்வுகளை தோழமையில் கண்டான் விஜயன். 

விழிகள் நனையரொம்ப சந்தோஷமா இருக்குடா நிஜமாவே என்ன பேசுறதுன்னு தெரியலைஎன்று உணர்ச்சி பொங்க பேசிய துவாரகேஷ் விஷ்ணுவையும் சேர்த்து அணைத்து கொள்ள. 

மூவரின் முக்கோண நட்பு பரிமாணங்களில் பெண்கள் மூவரும் மெய் சிலிர்க்க. தங்களுக்கு இது போல் நட்பு அமையவில்லையே என்ற ஏக்கம் மனதை நிரப்ப, கண்களில் பொறாமை தீ ஜொலிக்க பார்த்து கொண்டிருந்தனர். நட்பிற்கு இலக்கணம் தேவையில்லை. பாகுபாடு கலைந்த, இலக்கியத்திலும் காணாத நட்பை இது நாள்வரை அனுபவித்ததோடு மட்டுமல்லாமல் அதை அணுவணுவாய் ரசித்தனர்.

ஃபிரெண்ட்ஸ் படத்தையும் மிஞ்சிட்டிங்கடா நீங்க சரியான த்ரி இடியட்ஸ். என்ன பண்றோம் பேசுறோம்னு தெரியாம எதையாவது பண்ணிட்டு அடுத்த நிமிஷம் எதுவுமே நடக்காத மாதிரி பேசுறீங்க பழகுறிங்க. அப்ப..ப்பா.. உங்க நட்பை பாத்து உடம்பு புல்லரிக்குதுஎன்று மெய்யாலுமே மெய் சிலிர்த்தவள் கர்வத்துடன் அவர்களின் நட்பை மெச்சினாள் வைஷாலி.

அதே தான்! நா சொல்ல நினைச்சதை நீயே சொல்லிட்ட வைசு இவங்க மூணு பேரையும் ஒரு விஷயத்தை தவிர வேற எதுலயும் சேத்துக்கு முடியாதுஎன்று வைஷாலியின் கூற்றை ஆமோதித்த வைதேகி.

நமக்கு நல்லது பண்றேன்னு சொல்லி நாலு பக்கத்துக்கு மூச்சுவிடாம பேசி கோபத்தை வர வைக்கிறதுல மூணும் பேரும் ஒன்னு. ஒரே குட்டையில ஊறுன மட்டைங்கஎன்று நொடித்து கொள்ள. அதே அதே என்று பெண்கள் மூவரும் கேலி இழையோட நகைக்க தங்களின் குண ஒற்றுமையை கண்டு ஆண்கள் மூவரும் அசடு வழிய சிரித்தனர். 

காலம் நொடி பொழுதில் மாற்றத்தை கொண்டு வருவதில்லை என்றாலும், நீண்ட காத்திருப்பிற்கு பின் பன்மடங்கு மாற்றம் கொண்டு உரிய இடத்தில் சேர்ப்பித்து விடுகிறது!.

தொடரும்..

ஒரு சின்ன வேதனை வந்தாலும் தலை கோதுங்கின்ற கை நண்பன் கை..

நாம் என்ன சாதனை செய்தாலும் அது நண்பன் தருகிற நம்பிக்கை..

கண்ணனுக்கு கோயிலுண்டு.. கர்ணனுக்கு ஏனில்லை.

நட்புக்கொரு கோயில் கட்டு அதிலொன்றும் தவறில்லை..

எங்களின் வீடு இன்று ஒரு ஏழை நிலா தான்.. எங்களின் பின்னால் நட்புக்கொரு தாஜ்மஹால் தான்

ரோஜா தோட்டம் பூக்கள் தூவி வாழ்த்து கூறும்

சொர்க்கம் வந்து எங்கள் வீட்டில் தீபம் ஏற்றும்

ஒரு நாள் தானே ஒரு பண்டிகை கொண்டாட்டும்

எங்கள் வான் மீது தினம் பௌர்ணமி வந்தாடும்

வர்ணங்களாக தனித்து வந்தோம் வானவில்லாக சேர்ந்து நின்றோம்.

*************

 

Advertisement