Advertisement

மீண்டும் கேட்கும் குழலோசை – 32.

முன் கதை சுருக்கம்:

 விஜயனுக்கு ஆதரவாக பேசி விஷ்ணுவிடம் வாங்கி கட்டி கொண்டதில் மறுநாள் வரை கோபத்தை பிடித்து வைத்திருக்கிறாள் வைதேகி. அவள் கோபத்தை தணிக்கும் விதமாய் பேசி சமாதானம் செய்தவன், வைதேகி நீண்ட நாட்களுக்கு பிறகு பணிக்கு கிளம்ப சமையலில் உதவுகிறான் விஷ்ணு. நேரம் பார்த்து கோவை செல்லும் விஷயத்தை விசாலாட்சியிடம் தெரிவிக்கின்றாள் சஞ்சளா. கோவை செல்வதை தடுத்து நிறுத்த வேண்டி தன் மனதில் உள்ளதை சொல்ல துவங்க இடையில் வந்து தடுகின்றான் மைந்தன் ஏனென்று கேட்டதற்கு விளக்கம் அளித்தவன் போகட்டும் என்று விட்டேரியாக உறைத்திட அந்த தாயினால் எதுவும் செய்ய முடியாமல் அமைதியாக சென்றுவிடுகிறார். வங்கி செல்ல வேண்டும் என்று துவாரகேஷிடம் உதவியாய் கேட்க. அவளிடம் என்ன ஏது என்று கேட்டு கொண்டதில் உண்டான குழப்பத்துடன் காவல் நிலையத்தில் அமர்ந்து சிந்தனை செய்தவனிடம் என்னவென விஷ்ணு கேட்க எண்ணத்தில் தோன்றியதை கூறுகிறான். அப்டியெல்லாம் இருக்காது என்று உறைக்கின்றான் நண்பன் இருந்தும் அவன் மனம் அமைதியடையவில்லை.

இனி:

அதிக பற்றுதல் இல்லையென்றாலும் ஏதோ ஓரளவுக்கு அங்கிருந்த இருவரிடமும் ஒட்டுதல் இருந்தது, ஆனால் இன்று அதுவும் தொலைதூரம் சென்றுவிட அவ்விடமே அந்நியமாய் தோன்றியது சஞ்சளாவிற்கு. 

அவளே ஏற்படுத்தி கொண்ட வினை தான். வாய் துறுத்துருக்க வேண்டா விதமாய் பேசிவிட்டவளே, கோபமாக சென்றவன் எப்போது வருவான் என்று எதிர்பார்த்து வாசலில் இரவு நேர காவலாளியாய் கண்கள் பூத்து அமர்ந்திருக்க, மனமெல்லாம் அவனே வியாபித்திருந்தான்.

உனக்கு இது தேவை தான். உன்ன யாரு பணத்தை கொண்டு போய் நீட்ட சொன்னது, பெரிய ரோஷகாரி தன்மானம் பாக்குறியாக்கும்? அதை தூக்கி குப்பையில போடு கோபமா போனவரு எங்க இருக்காறோ என்ன பண்றாறோ?’ என்று அவளது மனமே அவள் மீது கோபம் கொண்டு கடிந்தது.

விடிந்தால் கோவை செல்ல வேண்டும். ஜாம்பமாய் சொல்லிவிட்டாள் செல்கிறேன் என்று ஆனால் மனம் பிரிவை ஏற்க மறுத்து ஆர்ப்பாட்டம் செய்தது. பிரிந்து செல்வதை எண்ணி உணவு கூட கசப்பான மருந்தாய் தெரிய இரவு உணவை கூட தவிர்த்துவிட்டு அறைக்குள் அடைந்து கிடந்தாள் சஞ்சளா. 

விசாலாட்சி கூட அவளை அழைக்க வரவில்லை மகனின் உத்தரவுயாரையும் கட்டயப்படுத்த வேணாம் ம்மா பசிச்சா வந்து சாப்டடும்என்று கட்டளையாய் கூறிவிட்டு பணிக்கு சென்றுவிட அருமை புதல்வனின் பேச்சை தட்டாமல் அவரும் அமைதியாக இருந்துவிட்டார். 

அமிர்தாவின் இறுதி சடங்கிற்கான பணத்தை கொணர்ந்துவிட வேண்டும் என்று முன்பே அவள் எடுத்த முடிவு தான் ஆனால்..,இதுவரை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எண்ணமாகவே இருந்ததே தவிர கொடுக்க முற்பட்டதில்லை. காலையில் அவன் நடந்து கொண்ட விதம் அவனின் அலட்சியம் நிறைந்த பார்வை அவளுக்குள் அதீத வீம்பை வரவழைக்க பணத்தை கொடுத்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் அவன் வரவுக்காக வாசலை பார்த்தபடி காத்திருந்தாள்.

நுழைவாயில் இரும்பு கதவு திறக்கும் சத்தம் கேட்டதுமே அவளது கால்கள் பரபரப்பை அப்பி கொண்டன. அன்றைய வேலை அலைச்சலின் விளைவாக அதீத களைப்புடன் உள்ளே நுழைந்தவனை வழி மறித்து நின்றவள்இந்தாங்க உங்களுக்கு நா கொடுக்க வேண்டிய பணம்என்று கையில் இருந்த இளஞ்சிவப்பு நிற தாள்கள் அடங்கிய நோட்டுகளை நீட்ட. 

அவளது முகத்தையும் கரத்தினையும் மாறி மாறி பார்த்தவன்என்ன பணம்? நீ எதுக்கு எனக்கு பணம் கொடுக்கிற?’ என்று எரிச்சலாகவே கேட்டான் துவாரகேஷ்.

என்னோட அம்மாவுக்கு இறுதிகாரியம் பண்ணதுக்குஎன்றதும் அத்தனை கோபம் அவனுக்கு, அடிக்க துறுதுறுத்த கைகளை அடக்கி கொண்டவனின் முகம் கடுமையை பூசி கொள்ள.

பல்லை தட்டி கையில கொடுத்துருவேன் ராஸ்கல் அவ்ளோ தைரியமா உனக்கு. யாருக்கு வேணும் இந்த பணம்? வச்சுருக்க பயமாவோ இல்ல பாரமாவோ இருந்துச்சின்னா போய் இல்லாதவங்களுக்கு கொடு என்கிட்ட எதுக்கு கொடுக்கிற!என்று அடிக்குரலில் சீறியவன்.

எந்த வித எதிர்பார்ப்புமில்லாம நா செஞ்ச உதவிய எந்த அளவுக்கு கேவலப்படுத்த முடியுமே பண்ணிட்ட சஞ்சு. பணத்தை மதிக்க தெரிஞ்ச உனக்கு மனுஷங்க மனசை மதிக்க தெரியலை, அவங்க என்னோட அத்தை அவங்களுக்கு பண்ண இறுதி காரியத்துக்கு யாரும் எனக்கு பணம் கொடுக்க தேவையில்ல. அந்த.. அளவுக்கு இங்க யாரும் கையேந்திட்டு நிக்கிற நிலைமையில இல்ல, அதான் உனக்கு பிடிச்ச வாழ்க்கைய தேடி போக போறல்ல பின்ன எதுக்கு இந்த டிராமா போ எங்கயாவது போ என்ன விட்டுருஎன்று கடுகடுவென எழுந்த கோபத்தில் சிடுசிடுப்பை காட்டிவிட்டு வந்த வழியே திரும்பி சென்றுவிட.

பூஜை அறையை சுத்தம் செய்து கொண்டிருந்த விசாலாட்சி சத்தம் கேட்டு அறையில் இருந்து எட்டி பார்த்தவர்ப்ச் இவங்களுக்கு வேற வேலையே இல்ல அவங்களும் சொல்லிக்க மாட்டாங்க என்னையும் சொல்லவிட மாட்டாங்கஎன்று சலித்து கொண்டவர் உள்ளே சென்று மறைந்து கொண்டார்.

முகத்தில் அறைந்தார் போல பேசிவிட்டானேஎன்று உள்ளம் கொதிகலன் அளவிற்கு கொதிக்க. பைக்கின் சத்தம் தேய்ந்து கரையும் வரை அங்கேயே நின்று கொண்டிருந்தவள்வேணாம்னா போங்கஎன்று கோபமாக முணுமுணுத்தபடி காலடிகளை அழுந்த பதித்து வேகமாக விசாலாட்சியின் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

கையில் இருந்த பணத்தை வெறுப்போடு பார்த்துவிட்டு தொப்பென கட்டிலில் அமர்ந்தவளுக்கு அழுகை முட்டி கொண்டு வந்ததுச்சே இது வேற அப்பப்ப கார்ப்ரேஷன் வாட்டர் மாதிரி கொட்ட ஆரம்பிச்சிரும்என்று எரிச்சலுடன் விழி நீரை துடைத்து கொண்டு.

போறேன் எனக்கு என்ன ஆசையா? இங்க இருந்து உங்க முகத்தை பாக்குறத்துக்கு எங்கயோ போறேன் எப்டியோ போறேன்என்று ஆத்திரத்துடன் தனக்கு தானே பேசி கொண்டவள் ட்ராலியில் வேகமாக துணிகளை அடக்கி வைக்க தொடங்கினாள்.

முடிந்தவரை அனைத்தையும் எடுத்து வைத்து எதுவும் விட்டு போகவில்லையே என்று சோதனை செய்து பின் ட்ராலியை ஓரமாய் வைத்துவிட்டு நிமிர அறை வாசலில் நின்றவாறு அவளின் நடவடிக்கைகளை பார்த்து கொண்டிருந்தார் விசாலாட்சி. 

போக வேண்டாம் என தடுக்க தோன்றிய மனதை அடக்கி கொண்டு உள்ளே வந்தவர்என்னம்மா எல்லாம் எடுத்து வச்சுட்டியா எதுவும் விட்டுட்டு போகலையே? அப்றம் அங்க போன பிறகு அத எடுத்துட்டு வர மறந்துட்டேன் எடுத்துட்டு வர முடியுமான்னு கேக்க கூடாது இங்க எங்களுக்கு ஏகபட்ட வேலை இருக்கும்என வேண்டுமென்றே அவளை அலட்சியபடுத்தி பேசிவிட்டு அவள் முகத்தை பார்க்காது. 

எனக்கு தூக்கம் வருது போனவன் எப்ப வருவான்னு தெரியலை ஒருவேளை முழிச்சுட்டு இருந்தா சாப்பாடு போட்டுருடா அவனுக்குஎன்று அயர்ச்சியுடன் உரைத்துவிட்டு ஒருக்களித்து படுத்து கொண்டாரே தவிர உறங்கவில்லை. 

இருவருக்கும் மத்தியில் அல்லல் பட விசாலாட்சிக்கு விருப்பமில்லை. அவன் மீது கோபம் என்றால் அதை அவனிடம் தான் காட்ட வேண்டும், மனதில் உள்ளதை கேட்டால் தானே இன்னது என்று சொல்ல முடியும் அதை விடுத்து தன்னை விட்டு செல்வதா? என்ற கோபம் அவருக்கு.

விசாலாட்சியின் அலட்சியம் மேலும் அவளுக்கு கண்ணீரை வரவழைக்கநா யாருக்கும் வேண்டாதவளா போயிட்டேன் ஒரு வார்த்தை யாராவது போக வேணாம்ன்னு சொல்றிங்களா? போ போன்னு சொல்லாம விரட்டுறீங்க, மொத்தமா போறேன் யாருக்கும் தெரியாத ஒரு இடத்துக்கு போறேன் நா போன பிறகு என்ன பத்தி கவலைப்படுவிங்கஎன்று மூச்சு வாங்க சூளுரைத்து கொண்டவளின் மனமெல்லாம் அவனே நிறைந்திருந்தான்.

காதலை எந்த வகையிலும் சேர்த்து கொள்ள முடியாது வேண்டாம் என்று விலகும் போது வேண்டும் என்று அடம்பிடிக்கும், நேசத்தின் அருகாமை வேண்டும் என்று ஏங்கி தவிக்கும், ஆறுதலாய் தோள் சாய்ந்து கொள்ள மனம் அலைபாயும், உறக்கம் தொலைக்கும், உணவும் மருந்தின் அளவாய் மாறி உன்னதமான நேசத்தின் உணர்வுகளை உயிர்பிக்கும் பிரிவு என்ற சொல்லே உளியின் வலியை கொடுக்கும். 

இன்று அவளது நிலையும் அதே தான் உயிர் கொண்ட நேசிப்பின் முன் நின்று உள்ளத்தை கூற மனம் முனைந்தாலும், பிடித்து வைத்திருந்த வீம்பு சொல்ல வேண்டாம் என்று எல்லை வகுத்து தடுத்து நிறுத்தியது.  

நேரம் கடந்து கொண்டே சென்றதே தவிர சென்றவன் வரவில்லை, நேரம் செல்ல செல்ல அவளை பயம் பீடித்து கொண்டது, அய்யோ காணமே என்று மனம் பரிதவிக்க உடனே அவனுக்கு அழைப்பு விடுத்தாள் சஞ்சளா.

இதுகாறும் செய்த செயலை ஒருபோதும் கைமாறாக எண்ணியதில்லை அவன். இனி அனைத்தும் அவளுக்கு தான்ந்தான் என்ற மனதுடன் அன்று செய்த காரியத்திற்கு இன்று இழுக்கை ஏற்படுத்தி விட்டாளே, என்ற கோபத்தில் கொதித்து கொண்டிருக்க அவனின் அலைபேசி சன்னமாய் ஒலியெழுப்பியது. அவள் எண்ணை கண்டதுமே முகம் இரும்பை ஒத்த கடினத்தை பூசி கொள்ள வேண்டுமென்றே துண்டித்தவன் இருசக்கர வாகனத்தில் சாய்ந்தபடி தெருமுனையில் தான் நின்று கொண்டிருந்தான் துவாரகேஷ். 

அத்தனை வெறுப்பு அவனிடத்தில் மலரை நுகர்ந்து சென்ற வண்டை போல இரண்டு நாட்கள் சென்ற சுவடு தெரியவில்லை வேலைக்கு செல்வதும் வருவதுமாய் இருந்தவனுக்கு அந்த இரண்டு நாட்கள் இன்னும் நீடித்திருக்கலாமே..என்ற நிராசையான எண்ணம் தோன்றி மறைந்தது. 

மனம் கேளாமல் வாசல் படியில் வந்து அமர்ந்து கொண்டாள் சஞ்சளா. வந்தால் தன்னை தாண்டி தானே செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் இருளில் பார்வையை கூர்மையாக்கி கலவரமான முகத்துடன் அவன் உருவம் தென்படுக்கிறதா என்று விழிகளால் துழாவி கொண்டிருந்தாள்.  

தெரு முனையில் இருந்து பார்த்தால் அவன் இல்லம் தெரியும் இருட்டில் இருந்து அவள் காத்திருப்பை பார்த்து கொண்டிருந்தவன்இவ்ளோ ஆசை இருக்குதே பின்ன எதுக்கு இந்த வெட்டி வீராப்பு? பணமா கொடுக்குற பணம் நாளைக்கு நீ எப்டி ஊருக்கு போறன்னு  நானும் பாக்குறேன் என்னவிட்டு போயிருவியா இல்ல போக விட்டுருவேனா?, இதுவரைக்கும் உன்னோட விருப்பம் போல நடக்கணும்னு தான் நினைச்சிட்டு இருந்தேன் ஆனா இந்த நிமிஷத்துல இருந்து என்னோட விருப்பம் தான்என்று உறுதிபட உள்ளத்தில் கறுவிகொண்டவன் சற்று நேரம் அவள் தவிப்பதை பார்த்து ரசனையுடன் சிரித்தான். 

அவளின் தவிப்பை, விழிகளில் தோன்றும் எதிர்பார்ப்பை மேலும் மேலும் ரசித்து பார்க்க மனம் இடம் கொடாமல் இல்லம் வந்தவன் வாசலில் ஒருத்தி இருப்பதை பொருட்படுத்தாது அவளை கடந்து செல்ல. 

ஒரு நிமிஷம்என்ற வேக குரலில் திரும்பி பாரமால் நின்றவனின் உடல் மொழியே என்னவென கேட்க.

நாளைக்கு காலையில நாலு மணிக்கு பஸ்!. என்ன.. டிராப் பண்ண முடியுமா.. இல்ல கேப் புக் பண்ணி போய்க்கவா?” என்று கேட்கும் போதே குரல் தழுதழுத்தது.

Advertisement