Advertisement

என்ன அப்டி பாக்குறிங்க அத்தை காஃபிய குடிங்க ஆறிட போகுது அப்றம் என்ன குத்தம் சொல்ல கூடாது கஷ்டப்பட்டு போட்டுருக்கேன்என்று அவளே காஃபி தயாரித்தது போல தற்பெருமை பேச

நீ எப்போ வந்த சொல்லவே இல்ல ஏண்டி எதுவுமே சொல்லிட்டு பண்ண மாட்டீங்களா அவன மாதிரியே வந்து வச்சுருக்கஎன்று சிடுசிடுப்பை காட்டியவர்சரி எப்போ வந்தஎன்று மீண்டும் கேட்க

ஒவ்வொருத்தருக்கும் தனி தனியா பதில் சொல்றதுக்கு பதிலா போன் பண்ணிட்டே வந்துருக்கலாம்என்று அலுத்து கொண்டுகொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் அத்தை வந்தேன் காஃபி குடிச்சுட்டேன்என்று ஜெகநாதனின் அருகில் அமர்ந்தவள்

எப்டி மாமா இவங்கள சமாளிக்கிறீங்க கொஞ்ச நேரத்துக்கே என்னால சமாளிக்க முடியல இத்தனை வருஷமா இவங்க கேக்குற கேள்விக்கெல்லாம் சளைக்காம பதில் சொல்லி இன்பமோ துன்பமோ அடியோ உதையோ எல்லாத்தையும் பொறுத்துகிட்டு வாழுறிங்களே யூ கிரேட் மாமாஎன்று உதட்டை பிதுக்கியவள்  ஜெகநாதனின் தோள் தட்டி மெச்சுதலாய் கூற

என்னம்மா பண்றது நமக்கு வாச்சதை வச்சு தானே வாழ முடியும் வேற ஒன்ன கடையில போயா வாங்க முடியும்என்று போலியாய் அலுத்து கொண்ட கணவரை முறைத்து பார்த்தவர் 

.. அப்போ இத்தனை நாள் சகிச்சுக்கிட்டு தான் வாழ்ந்துருக்கிங்க இனிமே என்கூட பேசாதிங்கஎன்று முகத்தை திருப்பி கொண்டு கோபமாக எழுந்து சென்று விட

ஹப்பா வந்தவேலை முடிஞ்சிருச்சுஎன்று கைகளை தட்டி எழுந்த கொண்ட வைஷாலி மாமா நான் சொன்னேன்னு இப்டி சட்டுன்னு பேசிட்டிங்களே கொஞ்சம் யோசிச்சிருக்க வேணாம்என்று போலியாய் அனுதாபம் கொண்டவள் காஃபி டிரேயை எடுத்து கொண்டு நகர்ந்துவிட 

ஜெகநாதனுக்கு உதட்டளவில் சிறு புன்னகை மலர்ந்தது தன் மனைவியின் கோபம் எத்தனை மணி நேரத்திற்கு தாக்குபிடிக்கும் என்பதை அறிந்தவராய் அன்றைய நாளிதழை புரட்ட தொடங்கினார் 

சற்று நேரத்தில் வேலைகளை முடித்த வைதேகி துவாரகாவின் இல்லம் செல்ல தயராகி வெளியே வர விஷ்ணுவும் காவல் நிலையம் செல்ல கிளம்பி இருந்தான் காலை உணவை முடித்து கொண்டு விஷ்ணு கிளம்பி சென்றுவிட ஜெகநாதன் அலுவலகம்  கிளம்பி சென்ற சிறிது நேரத்திலேயே சாவித்ரியிடம் கூறிவிட்டு இருவரும் துவராகேஷ் இல்லம் சென்றனர்

ஒன்பது மணியாகியும் எழாமல் அசந்து உறங்கி கொண்டிருந்தவளை எழுப்ப மனமில்லாமல் துவாரகேஷ்

விசாலாட்சியிடம் விடைபெற்றுக் கொண்டு சென்றுவிட விசாலாட்சியும் தன் வேலையை கவனிக்க சென்றுவிட்டார்

வீட்டு வாசலில் பேச்சு சத்தம் கேட்டு வெளியே எட்டிப் பார்த்தவர் வைதேகியும் வைசாலியும் உள்ளே நுழைவதை கண்டு புன்னகையுடன் எதிர் கொண்டுஎன்னம்மா சொல்லாம கொள்ளாம வந்துருக்க வீட்டு பக்கமே வராதவளையும் கூட கூட்டிட்டு வந்திருக்கஎன்று வைஷாலியை குறிப்பிட்டு கூற

என்ன ஆன்டி பண்றது நாங்க வர்றது தெரிஞ்சு நீங்க வீட்ட பூட்டிட்டு போய்ட்டா அதா சொல்லாம வந்தோம்என்று கிண்டல் பேசினாள் வைஷாலி

உன்னோட வாய் கொழுப்பு கொஞ்சம் கூட குறையல வாயாடிஎன்று வைஷாலியின் தலையில் சன்னமாக கொட்டியவர் வைதேகியிடம் திரும்பிஎன்ன வைதேகி நீ மட்டும் வந்துருக்க விஷ்ணு வரலயா?” 

இல்ல ஆன்டி அவருக்கு முக்கியமான வேலை இருக்குன்னு சொல்லி கிளம்பிட்டாங்கஎன்றவள்சஞ்சாளாவ பாக்கனும்னு சொன்னா அதான் கூட்டிட்டு வந்தேன் ஆன்ட்டி இறந்த அன்னைக்கு இவளால வர முடியலஎன்று கூற

நா கூட துவாரகாகிட்ட கேட்டேன்ம்மா அப்ப தா தெரியும் இவளோட அம்மாக்கு உடம்பு முடியலண்ணுஎன்றவர் வைஷாலியிடம்இப்போ எப்டிமா இருக்காங்க இன்னும் ஹாஸ்பிடல்ல தா இருக்காங்களா இல்ல வீட்டுக்கு வந்துட்டாங்களா?” என்று கவலை தேய்ந்த குரலில் கேட்க

நேத்து தான் ஆன்டி வீட்டுக்கு கூட்டிட்டு வந்தோம் இப்போ கொஞ்சம் பரவாயில்ல ஹப்பா ஒரு மாசம் ஹாஸ்பிடல்ல இருந்து ரொம்ப அவஸ்தை பட்டாச்சுஎன்று அங்கலாய்த்து கொண்டவள்சஞ்சளா எங்க ஆன்டி?” என்று வீட்டை சுற்றி பார்வையை அலைய விட்டபடி கேட்டாள் வைஷாலி 

தூங்கிட்டு இருக்காம்மாஎன்றவர்என்ன சொல்றதுன்னே தெரியலம்மா முன்னவிட இப்போ கொஞ்சம்  பரவாயில்ல ஏதோ ஒரு வார்த்தை ரெண்டு வார்த்தை பேசுறா, ஆனா முன்ன மாதிரி துருத்துருன்னு வாய் ஓயாம பேசுற பேச்செல்லாம் எங்க போச்சுண்ணே தெரியலை அவ அம்மா இறந்து முழுசா ஒரு மாசம் ஆகிருச்சு ஆனா இன்னும் அமிர்தா நினைப்புல தான் இருக்கா நானா போய் சாப்ட கூப்டனும் சட்டுன்னு வர மாட்டா ரெண்டு மூணு தடவை போய் கூப்டாதான் எந்திரிச்சு வருவா, அவள பாக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கும்மா இப்டியே எத்தன நாளைக்கு இருப்பா சொல்லுங்க? அவ அம்மாவ நினைச்சு நினைச்சு இவளும் போய் சேந்துருவா போல உடம்பெல்லாம் வத்தி போய் இருக்கா ஒன்னு ரூம்ல அடங்கி கெடப்பா இல்ல தையல் மெஷின்ல தலைய வச்சுட்டு கண்ண மூடி ஏதேதோ யோசனை பண்ணிட்டு இருப்பா  வெளிய கூட்டிட்டு போனா கொஞ்சம் மனசு மாருவான்னு பாத்தா எங்கயும் வர்றதே இல்லஎன்று அடுக்கடுக்காய் குற்றச்சாட்டுகளை வைத்தவர்  

ஏதோ மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்குறது  அவன்கிட்ட கொஞ்சம் நல்லா பேசுறா அதுவும் அவன் கேக்குற கேள்விக்கு மட்டும் பதில்! மறுபடியும் பழைய குருடி கதவ திறடிகனக்கா விட்டத்த பாக்க ஆரம்பிச்சிருவா இல்ல தரைய வெறிக்க ஆரம்பிச்சிருவா அவள எப்போ பழையபடி பாக்க போறன்னே தெரியலஎன்று நிராசையான மூச்சை வெளியிட்டவரின் பேச்சு மற்ற இருவரையும் கவலையடைய செய்தது 

நீங்க கவலைபடாதீங்க ஆன்ட்டி எல்லா சரியாகிரும் அவகிட்ட நா பேசுறேன் யாரும் எதிர்பா்க்காத ஒரு இழப்பு! நமக்கே கஷ்டமா இருக்கும் போது பாவம் அவ அவளோட மனசு என்ன பாடுபடும்என்ற வைசாலிநீங்க ரெண்டுபேரும் பேசிட்டு இருங்க நா போய் அவள எழுப்பிவிடுறேன்என கூறிவிட்டு செல்ல மற்ற இருவரும் பேசி கொண்டே மதிய உணவை தயாரிக்க சென்றனர்

அறை கதவை மெதுவாக திறந்து உள்ளே சென்ற வைசாலி சஞ்சளாவை தட்டி எழுப்ப மெல்ல எழுந்து அமர்ந்தவள் கண்களை கசக்கியபடி எதிரில் இருப்பவளை கண்டு அதிர்ச்சியும் ஆச்சர்யமும் மேலோங்க உடன் அழுகையும் வர தயாராய் இருக்கஅக்காஎன்று கட்டி கொண்டவளை அணைத்து ஆறுதல் படுத்தியவள்

என்ன சஞ்சும்மா மணி என்ன ஆகுது இன்னும் தூங்கிட்டு இருக்க சிக்கிரம் எந்திரிச்சு குளிச்சு சாப்ட்டுருக்க வேணாமா இப்டியா இருக்குறது பாக்கவே நல்லா இல்லஎன்றவாறே கலைந்த தலைமுடியை சீர் செய்துவிட

அழுகை முட்டி கொண்டு வந்தது சஞ்சளாவிற்குஇல்லக்கா அம்மா இறந்துட்டாங்கன்னு என்னால இப்பவும் நினைச்சு கூட பாக்க முடியல எப்பவும் என்ன விட்டு அவங்களும்  அவங்கள விட்டு நானும் பிரிஞ்சதே இல்ல ஆனா இப்போ மொத்தமா என்ன விட்டு போய்ட்டாங்க எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலைக்கா துணி எடுத்து கொடுக்குறதுல இருந்து தலை துவட்டி விடுறது வரைக்கும் எல்லாமே அவங்கள எதிர்பார்த்தே இருந்த எனக்கு இப்போ தனியா எல்லாத்தையும் செய்யும் போது கொஞ்சம் தடுமாற்றமா இருக்கு அதே நேரம் ரொம்ப கஷ்டமா இருக்குக்கா யாருமே இல்லாத மாதிரி இருக்குஎன்று தேம்பி அழுதவளை தோளோடு அரவணைத்து கொண்டவள்

என்ன பேச்சு பேசுற சஞ்சு நாங்களாம் இல்ல உன்ன அப்டியே விட்டுருவோமா என்ன? இந்த மாதிரியெல்லாம் பேசாத, இது சஞ்சளாவே இல்ல அவ எப்டி இருப்பா தெரியுமா எந்நேரமும் சிரிச்ச முகமா கலகலன்னு துருதுருன்னு மத்தவங்கள சதோஷப்படுத்தி தானும் சந்தோஷமா இருப்பா! இன்னொரு தடவை யாருமே இல்லன்னு உன்னோட வாயில இருந்து வார்த்தை வந்துச்சு நா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாதுஎன்று கண்டிப்புடன் கூறி ஆள்காட்டி விரல் நீட்டி எச்சரிக்க கண்ணீரை துடைத்து கொண்ட சஞ்சளா வைஷாலியின் மடியில் தலை வைத்து படுத்து கொண்டாள்

அவள் தலையை பரிவாக கோதி விட்டவாறே “எல்லாரும் நிரந்தரமா இந்த உலகத்துல இருக்க போறது இல்ல சஞ்சு என்னைக்காவது ஒரு நாள் போய் சேர போறவங்க தான் அம்மா போய்ட்டாங்கன்னு நீ இப்டியே இருந்தா நாங்க எப்டி சந்தோஷமா இருப்போம் சொல்லு?, உன்ன பாக்கும் போதெல்லாம் எங்களுக்கு எவ்ளோ வருத்தமா இருக்கு தெரியுமாஇது எதிர்பாராத இழப்பு தான் ரொம்ப கஷ்டமாவும் வேதனையாவும் தான் இருக்கும்! என்னால புரிஞ்சுக்க முடியிது ஆனா அதுக்காக உன்ன நீயே வறுத்திகிறது சரியாநேரத்துக்கு சாப்ட வேணாமா? சாப்டாமா இருந்தா எல்லாம் சரியாகிருமா சொல்லு?

நீ இன்னும் பாக்க வேண்டியது நிறைய இருக்கு வாழ்க்கையில இருக்குற சுக துக்கங்கள், நன்மை தீமைகள், நல்லவங்க கேட்டவங்கன்னு கடினமான பாதைகளை கடக்க வேண்டி நிலைமைகள் நிறைய இருக்கு ஒவ்வொரு விஷயத்துக்கும் நீ இப்டி சோர்ந்து போய்ட்டா உன்னால எப்டி வாழ்க்கைய வாழ முடியும்என்று உத்வேகம் அளிக்கும் விதமாய் பேசியவள்

பாவம் துவாரகா எவ்ளோ ஃபீல் பண்றான் தெரியுமா? எதுக்காகவும் யாருக்காகவும் கலங்குனது இல்ல அவனோட அப்பா இறந்ததுக்கு அழுதது அதுக்கு பிறகு உனக்காக அழுதான் நேத்து அவன கன்வைன்ஸ் பன்றதுகுள்ள போதும் போதும்னு ஆகிருச்சு, சஞ்சும்மா வாய் விட்டு அழுகிற அளவுக்கு ஒருத்தவங்களோட அன்பு கிடைக்கிறது ரொம்ப கஷ்டம் அந்த மாதிரியான அன்பு உனக்கு கிடைச்சிருக்கு பின்ன எதுக்காக நீ யாருமே இல்லன்னு ஃபீல் பண்ணனும்

நடந்து முடிஞ்சத பத்தி நினைச்சு கவலைப்படுறதுல ஒரு பிரயோஜனமும் இல்ல எந்நேரமும் பறிகொடுத்தவ மாதிரி இப்டி அழுது வடியாம குளிச்சு முடிச்சு ரெடியாகி வெளிய வா உள்ளேயே முடங்கி இருக்காத அப்டியே ரெண்டு நாளைக்கு தேவையான டிரஸ்சும் எடுத்து வச்சுக்கோ எதுக்குனெல்லாம் கேள்வி கேட்க கூடாது சொல்லிட்டேன்என்று கறாராய் கூறி சஞ்சளாவை குளியலறைக்குள் தள்ளி கதவை சாத்திவிட்டு படுக்கையை சீர் செய்து அறையை விட்டு வெளியே வர சமையலின் நெடி மூக்கை துளைத்தது

கண்களை மூடியபடியே சமையல் அறை வாசலில் வந்து நின்றவள்ம்ம் என்ன ஒரு வாசம் சமையல் வாசத்துலயே வயிறு பசிக்க ஆரம்பிச்சுடுச்சேஎன்று நாசியின் வழியே வயிற்று பசியை அமிழ்த்தி கொள்ள

என்னப்பா போன காரியம் என்ன ஆச்சு நீ போய் பேசுனதுல ஏதாவது மாற்றம் தெரிஞ்சதா?” என்று பொறியலில் கவனத்தை செலுத்தி கொண்டே கேட்டாள் வைதேகி

நா போய் பேசி சரியாகாம யாராவது இருப்பாங்களா குளிச்சிட்டு இருக்காஎன்றவள்நா ஏதாவது ஹெல்ப் பண்ணவா?” என்று புருவம் உயர்த்தி கேட்க 

இந்த வெங்காயத்தை உரிச்சு  சின்ன சின்ன தா கட் பண்ணி கொடு சிக்கிரம் கட் பண்ணனும்என்று அவசரம் காட்ட

இன்னும் டைம் இருக்குல  பின்ன என்ன அவசரம்” 

நாம சாப்டோம் ஆனா காலையில சாப்பாடே சாப்பிடாம ஒருத்தி இருக்காளே அவளுக்கு பசிக்காதாஎன்று சஞ்சளாவை நினைவுபடுத்தி வைதேகி கூற

அவள மறந்தே போனேன் ப்பா.. “என்று உதடுகளை குவித்து வார்த்தைகளை இழுத்து நிறுத்தியவள்ஆனாலும்…  எனக்கு இவ்ளோ பெரிய பனிஸ்மெண்ட் கொடுக்க கூடாதுஎன்று பாவமாக முகம் சுருக்கி வெங்காயத்தை பார்த்து கூறினாள் வைஷாலி

போதும் போதும் வாயாடி பேசுனா பேசிட்டே இருப்ப போய் சொன்ன வேலைய செய்என்று விசாலாட்சி அதிகாரமாய்  சொல்ல

நம்மள அழ வச்சு பாக்குறதுல அவ்ளோ சந்தோசம் வா வைசு போலாம்என்று வராத கண்ணீரை துடைத்துவிட்டு  சென்றவளை பார்த்து சன்னமாய் சிரித்த வைதேகி

என்ன வாய் பேசுறா பாவம் விஜி அண்ணா இவள எப்டிதான் சமாளிக்க போறாரோஎன்று மனதில் நினைத்துக்  கொண்டவள் சமையலில் கவனத்தை செலுத்தினாள்

கண்கள் இரண்டிலும் நீர் வடிய மூக்கை உறிஞ்சியபடி வெங்காயத்தை உரித்து முடித்தவள் “அவனுக்கு பிறகு நீ தான் காரணமே இல்லாம என்ன அழ வச்சிருக்க? என்ன ஒரு ஒற்றுமை உங்களுக்குள்ள அந்த மரமண்டைக்கு தான் புரியல கண்ணிரோட மதிப்பு உனக்குமா புரியல வெங்காயமேஎன்று தனியாக புலம்பி கொண்டிருந்தாள் வைஷாலி

பாதியிலேயே சமையலை விட்டுவிட்டு வந்த வைதேகி தனியாக பேசி கொண்டிருப்பவளின் பின்னால் வந்து நின்றுஉன்ன என்ன பண்ண சொன்னா நீ என்ன பண்ணிட்டு இருக்க இது தான் நீ வெங்காயம் கட் பண்ற லட்சணமாஎன்று முறைத்தவள்கொடு நானே கட் பண்ணிக்கிறேன் நீ கட் பண்ணி கொடுத்து எப்போ நா சமைச்சு முடிக்கிறதுஎன்று வெடுக்கென வாங்கி கொண்டு செல்ல

ஹும் ஒரு மனுஷி தனியா புலம்புனா கூட தப்பா என்ன உலகமடா சாமி அண்ணே மாதிரியே தங்கச்சியும் வந்து வாச்சிருக்காளேஎன்று சலிப்புடன் முணுமுணுத்தவள்  சஞ்சளா கிளம்பி விட்டாளா என்று பார்க்க சென்றாள்

உடைமாற்றி கொண்டு  தயாராகி தலையை கால்களுக்கு முட்டு கொடுத்து அமர்ந்திருந்தவளை கண்டதும்கடவுளே…” என்று மனதில் அலுத்து கொண்டவள்கிளம்பி உள்ளயே உக்காந்திருக்காட்டி வெளிய வர வேண்டியது தானேஎன்று நொடித்து கொண்டே கைபிடித்து வெளியே அழைத்து வர கிட்ட தட்ட சமையலும் நிறைவடைந்திருந்தது 

Advertisement