Advertisement

ரொம்ப சந்தோஷம் த்தா வீடு வாங்கிருக்கான பையன் ம்ம்ம் உருப்படியா ஒரு காரியம் பண்ணிருக்கான்என்று மெச்சுதலாய் கூறியவர்சரி எப்போ பால்காச்சா போறான்” 

அதுக்கு தாண்ணே போன் பண்ணது இந்த வாரத்துல நல்ல நாள் எதுன்னு பாத்து சொன்னிங்கன்னா அன்னைக்கே கிரஹபிரவேசம் வச்சுறலாம்” 

அப்டியாத்தாஎன்று யோசனை செய்தவர் மனைவியிடம் நாட்காட்டியை எடுத்து வருமாறு பணிக்க வேகமாக சென்று எடுத்து வந்து கொடுத்த அன்னம்என்னங்க யார் போன்ல?” என்று கணவரிடம் கிசுகிசுப்பாய் கேட்பது தெளிவாகவே கேட்டது இவர்களுக்கு 

நம்மபுள்ள வீடு வாங்கிருக்கானம் இம்புட்டு நாள் கழிச்சு உருப்படியா ஒரு சோழி பண்ணிருக்கான்என்று அவுட்டு சிரிப்பு சிரித்தவரின் சிரிப்பு குரல் விஷ்ணுவை மேலும் திகைப்புக்குள்ளாகியது 

நினைவு தெரிந்த நாளிலிருந்து பரமசிவம் வாய்விட்டு சத்தமாக சிரித்து பார்த்ததில்லை சிரிப்பார் ஆனால் எவரும் அறியா வண்ணம் சிரிப்பை அடக்கி கொண்டு நகன்று விடுவார் அது தான் அவரது குணம், தந்தையின் சிரிப்பை காண முடியவில்லையே என்ற ஏக்கத்தைவிட அவருக்கு சிரிக்க தெரியுமா? என்ற ஆச்சர்யம் தான் மேலோங்கி இருந்தது அவனிடத்தில் 

ம்ஹும் அவன குறை சொல்லாட்டி உங்களுக்கு தூக்கமே வராதுஎன்று நொடித்து கொண்டவர்இப்போவாவது எம்புள்ளய பராட்டணும்னு தோணுச்சேஎன்று நாட்காட்டியை கொடுக்க

சிரிப்புடன் வாங்கி கொண்டவர்அவன் எனக்கும் புள்ள தான் அதென்ன ஓம்புள்ள எம்புள்ளன்னு பிரிச்சு பேசுத நம்ம புள்ளைன்னு சொல்லுத்தாஎன்று கண்டிப்பான குரலில் அன்பான வேண்டுகோளை வைக்க விஷ்ணுவிற்கு இன்னும் அதிர்ச்சியாக தான் இருந்தது 

அவனை பொறுத்தமட்டில் பரமசிவம் என்பவர் கோபகாரர் கண்டிப்பு நிறைந்தவர் இம்மெனும் முன் முறைப்பை காட்டியே பயத்தை தருவிப்பார்  என்று அதுவரை எண்ணி வந்தவனின் எண்ணமெல்லாம் பொய்த்து போனது விஷ்ணுவின் முகத்தில் தெரிந்த கண நேர மாற்றங்களை அங்குலம் அங்குலமாய் கவனித்து கொண்டு தான் இருந்தாள் வைதேகி 

நாளைமறுநாள் வைத்து கொள்ளலாம் என்று பரமசிவம் கூறிடசரிண்ணே அப்டியே பண்ணிறலாம்  எல்லாரும் நாளைக்கே கிளம்பி வந்துருங்க அது தான் சரியா இருக்கும்என்ற தங்கையின் பேச்சை மறுக்கமால் 

சரிம்மாஎன்றவர் மனைவியிடம் அலைபேசியை நீட்டிஇந்தா புள்ளைங்க கிட்ட பேசுத்தாஎன்று கூறிவிட்டு சென்றுவிட 

சாவித்ரி ஜெகநாதன் வைதேகி மூவரிடமும் அரைமணி நேரத்திற்கும் மேலாக பேசிவிட்டு இறுதியாக மகனிடம் பேச தொடங்கினார் அன்னம்அம்மாஎன்றதும் 

டேய் விஷ்ணு எப்டி இருக்கஎன்று ஆசையோடு கேட்டவர்புதுசா வீடு வாங்கிருக்கியாக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்குடா உங்கப்பாரு முகத்துல சிரிப்பு கொள்ளல எம்புட்டு சிரிப்பு, மனுஷரு வாழ்நாள்ல வாய்விட்டு சத்தமா சிரிச்சு இன்னைக்கு தாண்டா பாக்கேன் மனசு குழுந்து போய் கெடக்குஎன்று உணர்ச்சி பெருக்குடன் கூறியவரின் கண்களில் நீர் திரண்டது

எனக்கும் அது தான்ம்மா ஆச்சர்யமா இருக்கு இது நம்ம அப்பா பரமசிவமான்னுஎன்றவன்கண்டிப்ப மட்டுமே பாத்து பழகுன எனக்கு அவரோட இயல்பான குணம் என்னனு தெரியாம போச்சும்மா கோபப்படும் போது நம்ம மேல பாசமே இல்லையோன்னு நிறைய தடவை நினைச்சு கவலைபட்டுருக்கேன் ஆனா  அதெல்லாம் இல்லன்னு நிரூபிச்சுட்டாரு“, உணர்ச்சி பூரவமாக பேசியவன்இன்னைக்கு நைட்டு எதுக்கும் பாத்து இருங்கஎன்று எச்சரிக்க

எதுக்குடா

பரமசிவம் சிரிச்ச சிரிப்புக்கு மழை கொட்டோ கொட்டுன்னு கொட்ட போகுது வைகையே பிச்சுகிட்டு போக போகுதுஎன்று கேலி பேசினான் விஷ்ணு

உனக்கு கொழுப்பு ஜாஸ்தி ஆகிருச்சு எம்புட்டு தகிரியம் இருந்தா வீட்டுக்காரரையே கேலி பண்ணுவ நா உனக்கு அம்மாவ இருக்கலாம் ஆனா அவருக்கு எல்லாமே நான் தான் எனக்கு அவரு தான் கண்டிப்பு காட்னாலும் புள்ளைங்க ஒத்த ருவாய்க்கு பொருள் வாங்கினா எம்புட்டு சந்தோஷப்படுறாரு தெரியுமா?” என்று கணவனை விட்டு கொடுக்காது பெருமையாய் பேச

ம்மா போதும் போதும் நீங்க பேசுரதை எல்லாரும் கேட்டுகிட்டு தான் இருக்காங்கஎன்று முன்னால் அமர்ந்திருந்த அனைவரிடமும் பார்வையை செலுத்தி புன்னகையுடன் கூறியவன் சற்று நிமிடம் பேசிவிட்டே அழைப்பை துண்டித்தான்

மூவரும் உணவை முடித்து கொண்டு எழுந்து விடவிஷ்ணு நம்ம வீட்டு ஆளுங்க அப்றம் இங்க சென்னையில உனக்கு தெரிஞ்சவங்கள மட்டும் கூப்பிடு போதும் நாளைகழிச்சு பால் காய்ச்சனும் எல்லாத்தையும் ரெடி பண்ணிருடா அவசரம் அவசரமா எதையும் பண்ணிட்டு இருக்க கூடாது வீடு ரெடியா தானே இருக்குஎன்று கேட்டார் சாவித்ரி

ம் அதெல்லாம் ரெடி அத்தை சின்ன சின்ன வேலை மட்டும் பாக்கி இருக்கு நாளைக்கு முடிஞ்சிரும்என்றதும்சரிடா சாப்ட்டு போய் தூங்குங்க எனக்கு தூக்கம் வருதுஎன்று கூறிவிட்டு ஜெகநாதனையும் அழைத்து கொண்டு சென்று விட 

அவன் உண்டு முடிக்கும் வரை பொறுமையாய் அமர்ந்திருந்தாள் வைதேகி, வீடு வாங்கியதை பற்றி ஏதாவது பேசுவான் என்று எதிர்பார்த்தவளுக்கு எதுவும் பேசாமல் உணவை விழுங்கி கொண்டிருந்தவனை கண்டு கோபம் எழ ஏமாற்றத்துடன் எழுந்து செல்ல முற்பட்டவளை கைபிடித்து நிறுத்தவும் வீடு பற்றி தான் கூற போகிறான் என்றெண்ணி ஆசையோடு வைதேகி திரும்பி பார்க்க

கொஞ்சம் குழம்பு ஊத்து தேவிம்மாஎன்றதும் கோபம் தாருமாறாய் தலைக்கேறியது ஒன்றுக்கு இரண்டாக கோபமாக ஊற்றிவிட்டு சென்றுவிட 

அவள் கோபத்தின் காரணம் என்னவென்று புரியாமல் சமையலயறையை பார்த்தவன் தோளை குலுக்கிவிட்டு உணவை முடித்து கொண்டு எழுந்து சென்றுவிட்டான் , பாத்திரங்களை கழுவி ஒழுங்குபடுத்திவிட்டு அறைக்குள் வந்தவளுக்கு அலைபேசியில் முழ்கி இருந்தவனை கண்டு மேலும் கோபம் எழுந்தது

என்ன ஏது என்று ஒரு வார்த்தை பேசவில்லை ஏறெடுத்தும் பார்க்கவில்லையென்றதும் படுக்கை விரிப்புகளை சரி செய்தவாறே அவன் செயல்களை பார்த்து கொண்டிருந்தவளின் உள்ளம் குமுறியதுகொஞ்சமாவது நிமிர்ந்து பாக்குறாரா பாரு இதுக்கு எதுக்கு என்ன கல்யாணம் பண்ணிக்கணும் செல்போனையே கட்டிக்கிட்டு அழவேண்டியது தானே?” என்று தனக்கு தானே கோபம் மேலோங்க பேசி கொண்டவள் அவன் பார்ப்பதாய் இல்லை என்று தெரியவும் வேகமாக படுக்கையில் விழுந்து போர்வையை தலைமுதல் கால் வரை போர்த்தி கொண்டு படுத்து கொண்டாள்

அதுவரை அலைபேசியை பார்த்தவாறே அவள் செய்கைகளை கண்டும் காணாதது போல் இருந்த விஷ்ணு அலைபேசியை அதன் உரிய இடத்தில் வைத்துவிட்டு விடி விளக்கை மட்டும் எரியவிட்டவன்தேவிம்மா நாளைக்கு என்ன சீக்கிரம் எழுப்பிவிடுடா நிறைய வேலை இருக்குஎன்று தகவலாய் மொழிந்துவிட்டு போர்வையை போர்த்தி படுத்து கொள்ள

முதுகு காட்டி படுத்திருந்தவள் வேகமாக அவன் புறம் திரும்பிஇப்போ கூட என்கிட்ட சொல்லணும்னு தோணனைலஎன்று காரமாக கேட்க

என்ன சொல்லணும்என்று கூறுவதற்கு ஏதும் இல்லாதது போல அசட்டடையாய் கேட்க

விசுக்கென எழுந்து அமர்ந்த வைதேகி.. அப்ப நா உங்களுக்கு ஒரு மனுஷியாவே தெரியலை வீடு வாங்கிருக்கிங்களே என்கிட்ட சொல்லணும்னு தோணுச்சா எல்லாம் கல்யாணம் நடக்குறதுக்கு முன்னாடி தான் தேவிம்மா தேவிம்மான்னு உருகுறது கேக்காமலே எல்லாத்தையும் சொல்றது, இப்போ நா யாரோ ஒருத்தி அப்டி தானேஎன்று வாதாடியவளுக்கு கண்ணை கரித்து கொண்டு வந்தது 

சிரிப்பை அடக்கியபடி அவள் பேசுவதை கேட்டு கொண்டிருந்தவன்இப்போவும் தேவிம்மான்னு உன்ன பாக்குற நேரமெல்லாம் ஐஸ்கட்டியாட்டம் உருகிட்டு தானே இருக்கேன்என்று அமர்ந்திருந்தவளை தன் கைவளைவிற்குள் கொண்டு வந்தவன்உனக்கு ஒரு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு சொல்லலை இந்த வாரம் என்ன ஸ்பெஷல்ன்னு உனக்கு ஞாபகம் இருக்கா?” என்று புருவம் உயர்த்தி கேட்க

ம்ஹும் எனக்கு எதுவும் ஞாபகம் இல்ல நீங்களே சொல்லுங்கஎன்று வீம்பு கொண்டு முகத்தை திருப்பி கொள்ள 

வர வர டீச்சரம்மாவுக்கு மறதி ஜாஸ்தியாகிருச்சு இந்த வாரம் உன்னோட பிறந்த நாள் அதாவது நீ இந்த பூமியில வந்து குதிச்ச நாள்என்று வைதேகியின் முகத்தை தன் புறம் திருப்பியவன்அதுவே உனக்கு மறந்து போச்சாஎன்று மூக்கோடு மூக்கை உரசியபடி கேட்க

அவன் பாவனையில் சிலிர்த்தவள்ஆமால்ல மறந்தே போயிட்டேன் மாமா..”என்றவளின் கோபம் காற்றோடு காற்றாய் கரைந்து போனதுகல்யாணம் பண்ண பிறகு மறதி ஜாஸ்தி ஆகிருச்சு ஒருவேளை சேர்க்கையே சரியில்லையோஎன்று முகவாயில் ஒற்றை விரல் வைத்து யோசனை செய்த வண்ணம் கேட்கவும் விஷ்ணு முறைத்து பார்க்க

அவன் முறைப்பை கண்டுசும்மா உள்ளுலாயி மாமாஎன்று கன்னத்தை பிடித்து ஆட்டி சிரித்தவளின் சிரிப்புகள் அடுத்த வினாடி அவன் அதரங்களுக்குள் ஐக்கியமாகிட அடுத்தடுத்த தீண்டலில் பெண்ணவள் நெகிழ்ந்து குழைந்து உருகி போனாள் அவனிடத்தில்.

ஆதவன் கண்விழிக்கும் முன் எழுந்து கொண்ட வைதேகி அயற்ச்சியுடன் உறங்கி கொண்டிருந்தவனுக்கு போர்வையை போர்த்திவிட்டு கலைந்த கேசத்தை கொண்டையிட்டு முகம் கழுவி வெளியே வந்தவள்  அழைப்பு மணி ஓசை கேட்டு மணியை பார்க்க நான்கு என காட்டியது 

இந்த நேரத்துல யாரு?” என்ற யோசனையும் பயமும் கலந்த உணர்வுகளோடு மெதுவாக கதவை திறந்து பார்க்க எதிரில் துப்பட்டாவால் முகத்தை முழுதும் மறைத்து கொண்டு நின்றவளை கண்டு பயந்து போனவள் முகத்தில் இருந்த துணியை கழட்டியவாறேஹாய் வைத்திஎன்று முகத்தை காட்டவும் தான் உயிர் வந்தது வைதேகிக்கு 

உள்ள வாஎன்றவள்இப்டியா வந்து பயமுறுத்துவ யாரோ என்னமோன்னு பயந்துட்டேன் சொல்லாம கிளம்பி வந்துருக்க வர்றேன்னு நேத்தே போன் போட்டுருக்க வேண்டியது தானே ரயில்வே ஸ்டேஷனுக்கு அவர அனுப்பிருப்பேன்லஎன்று  கதவை சாத்த

ப்ச் இது திடீர் பிளான் நானே எதிர்பாக்களை நேத்து துவராகேஷ் போன் பண்ணி சஞ்சளாவை பத்தி வருத்தமா பேசுனான் அதான் கிளம்பி வந்துட்டேன், சரி எங்க அந்த பிராடுஎன்று சோபாவில் அமர்ந்து கொண்டு கேட்க

தூங்கிட்டு இருக்காரு வைசு நானே உனக்கு கால் பண்ணி விஷயத்தை சொல்லலாம்னு இருந்தேன் நீயே வந்துட்ட! நாளைக்கு புது வீட்டுக்கு பால் காய்ச்சுறோம்என்று கூறியவாறே அடுபடிக்குள் சென்றாள் வைதேகி 

இது எப்போ சொல்லவே இல்ல அந்த பக்கிஎன்று அதிர்ச்சியுடன் கேட்டு கொண்டே வைதேகியின் பின்னால்  சென்றவள் பாத்திரங்களை ஒதுக்கி வைத்து திண்டில் அமர்ந்து கொண்டாள்

எனக்கே நேத்து தான் சொன்னாரு சர்ப்ரைஸாம்…”என்று

ஏகத்துக்கும் இழுத்து நிறுத்தியவள் காபி கப்பை நீட்ட 

மணத்தை நாசியின் வழியே ஏற்றியபடி மிடறு மிடறாக பருக தொடங்கினாள் அதற்குள் வைதேகி சென்று முறைவாசல் வேலைகளை முடித்துவிட்டு விஷ்ணுவிற்கு காபி எடுத்து சென்று கொடுத்தவள் வைஷாலியின் வருகையை பற்றி கூற

முகம் கழுவி வெளியே வந்தவன்  வைஷாலியின் அருகில் அமர்ந்தவாறுநீ எப்போ வந்த போன் பண்ணிருந்தா உன்ன பிக்கப் பண்ண வந்துருப்பேன்லஎன்று காஃபியை அருந்தி கொண்டே கேட்க

வந்துட்டேன்ல அப்றம் என்ன வந்துருப்பேன்ல வந்துருப்பேன்லன்னு ரெண்டு பேரும் ஒரே மாதிரி கேக்குறிங்கஎன்று சலித்து கொண்டவள்ஏண்டா வீடு வாங்கிருக்க ஒரு வார்த்தை சொல்லணும்னு தோணனைலஎன்று கோபமாக கேட்க

நேத்து தான் எல்லார்கிட்டயும் சொன்னேன் எல்லாம் ரெடி பண்ண பிறகு சொல்லிக்கலாம்னு விட்டுட்டேன்என்று டம்ளரின் அடிப்பகுதியில் இருந்த மிஞ்சிய காஃபியை அருந்தியவாறு கூறியவன்அப்றம் அம்மா எப்டி இருக்காங்க பரவாயில்ல தானே வீட்டுக்கு வந்துட்டாங்களா?” 

ம் வந்துட்டாங்க முன்ன விட இப்போ நல்லா இருக்காங்கடா துவரகா நேத்து போன் பண்ணான் சஞ்சுவையும் பாக்கணும்னு தோணுச்சு அதான் கிளம்பி வந்துட்டேன் மிட்நைட்ல தான் கிளம்பினேன்என்று விளக்கம் கொடுத்தவள் 

வைத்தி இன்னைக்கு நீ ஃபிரி தான கூட வர்றியா சஞ்சுவ பாத்துட்டு வந்துரலாம்என்று அழைக்க

ம் ஓகேப்பா போயிட்டு வரலாம் நானும் அவள பாக்கணும் ரொம்ப நாள் ஆச்சு பாத்து சாப்ட்டு கிளம்பலாம்என்றவள் விஷ்ணுவிடம் திரும்பிவிணு நீங்க வர்றிங்களா?” என்று கேட்க 

இல்ல தேவிம்மா எனக்கு முக்கியமான வேலை இருக்கு அதை முடிச்சுட்டு லன்ச் டைமுக்கு வறேன் நீங்க போயிட்டு வாங்கஎன்றவன் கடிகாரத்தில் நேரத்தை பார்த்துவிட்டு எழுந்து நடைப்பயிற்சிக்கு கிளம்பி சென்றுவிட்டான் 

வைஷாலி குளித்துவிட்டு வருவதாக கூறி அறைக்கு சென்றுவிட வைதேகி தொலைக்காட்சியை உயிர்ப்பித்து பாடலை ஒலிக்க விட்டவாறு காலை உணவை தயார் செய்ய தொடங்கினாள், சற்று நேரத்தில் சாவித்ரியும் ஜெகநாதனும் எழுந்து வந்துவிட காஃபி கலந்து எடுத்துவந்தவளை இருவரும் அதிர்ச்சியும் ஆச்சர்யமுமாய் பார்த்தனர்

Advertisement