Advertisement

அமிர்தாவின் மரணம் நிகழ்ந்து முழுதாக ஒரு திங்கள் (மாதம்) முடிந்திருந்தது சஞ்சளாவிடமும் சிறு சிறு மாற்றங்கள் தென்பட்டன, எப்போதும் தனிமையை உடன் வைத்திருப்பவள் மெல்ல மெல்ல சகஜ நிலைக்கு திரும்பியிருந்தாள் இரண்டு வார்த்தைகள் பேசுமிடத்தில் ஒரு வார்த்தையோடு முடித்து கொள்வாள் அதுவே துவரகேஷிற்கும் விசாலாட்சிக்கும் சற்று ஆறுதலாகவும் பெரிதாகவும் இருந்தது 

மனம் சஞ்சலம் அடைந்தாலோ அல்லது ஏதேனும் முடிவுகள் எடுக்க குழப்பமாக இருந்தாலோ அல்லது தனிமை சற்று பயம் அளிப்பதாக இருந்தாலோ அந்த நேரங்களில் மட்டும் அமிர்தாவின் தையல் இயந்திரத்தின் மீது படுத்து கொண்டு மானசீகமாக பேசுவாள் சஞ்சளா, அது தினமும் நடக்கவில்லையென்றாலும் வாரத்தில் இரண்டு மூன்று முறைகள் தையல் இயந்திரத்திடம் பேசுவதை வழமையாய் வைத்திருந்தாள்

துவாரகாவின் இல்லம் வந்த சில நாட்களிலேயே தன் வீட்டில் இருந்த பொருட்களை இயலாதவர்களுக்கு கொடுத்து உதவியவள் தன் அன்னையின் அழியா சின்னம் என்று தையல் இயந்திரத்தை மாத்திரம் தன்னுடன் வைத்து கொண்டாள் 

இரவு இல்லம் வந்த துவராகேஷ் தையல் இயந்திரத்தின் மீது தலை வைத்து கைகளை தலையணையாய் முட்டு கொடுத்து வளைந்து அமர்ந்திருந்தவளை கண்டு அருகில் வந்தவன்சஞ்சும்மாஎன்று அழைக்க

நிமிர்ந்து பார்த்தவளிடம்இந்தா அட்மிஷன் ஃபார்ம் ஃபில் பண்ணி கொடுஎன்று முதுகலை படிப்பிற்கான விண்ணப்ப படிவத்தை நீட்டினான்

எதுவும் பேசாமல் வாங்கி பார்த்தவள் “எதுக்கு துவா சார் இது? உங்களுக்கு எதுக்கு சிரமம் நா ஏதாவது வேலைக்கு போறேனே போதும் படிச்சதுஎன்று அலுத்து கொண்டவள் விண்ணப்ப படிவத்தை அருகில் இருந்த செல்பில் வைக்க

உன்ன இங்க யாரும் பாரமா நினைக்கல சஞ்சு உனக்கு மேல படிக்கணும்னு ஆசை இருக்குன்னு எனக்கு தெரியும் அதனால தான் வாங்கிட்டு வந்தேன் நீ படிச்ச அதே காலேஜ் தான் படிக்க போற! நீ ஃபில் பண்ணி மட்டும் கொடு“, கனிவாய் பேசினால் மறுத்து பேச கூடும் என்றெண்ணி அதிகாரமாய் கேட்டவன் அழுத்தமாக நிற்க

ப்ச் எதுக்கு சார்..” என்று சுணங்கி இழுத்தவள் அவன் பிடிவதமாய் நிற்பதை கண்டு மனமில்லாமல் வேகமாக படிவத்தை நிரப்பி கையெழுத்திட்டு அவனிடம் நீட்டினாள் 

கார்டியன் என்ற இடத்தில் அவன் நாமத்தை எழுதியவன்ஓகே சஞ்சும்மா நா பாத்துகிறேன்என்று கூறிவிட்டு அறைக்கு சென்றுவிட

அவளுக்கு தான் என்னவோ போல் இருந்தது இதுவரை ஒட்டாமல் இருந்தவர்களின் பிரதிபலன்களை ஏற்று கொள்ளவதில் தயக்கம் மேலோங்க அவள் மீதே கழிவிரக்கம் தோன்றியதுமுதல் வேலையாக அம்மாவின் காப்பீட்டு பணம் வந்ததும் அவரிடம் கொடுத்துவிட வேண்டும்என்றவளின் சிந்தனையை கலைத்தார் விசாலாட்சி 

கூப்பிடுறது கூட காதுல வாங்காம அப்டி என்ன யோசனை பண்ணிட்டு இருக்க? வா சாப்பிடலாம் அப்பவே பசிக்கிதுன்னு சொன்னியே?” என்று கூறிவிட்டு செல்ல ஆயசமாய் உணர்ந்தவள் அவர் பின்னோடு சென்றாள்.

கடிகார முள் எட்டை தொட ஐந்து நிமிடங்கள் தான் இருக்கிறது என்று காட்ட அவசர அவசரமாக சமையலை செய்து கொண்டிருந்தாள் வைதேகி, அவளின் வேகத்தை கண்ட சாவித்ரிவைத்தி எதுக்கு இப்போ பதருற அவன் வந்தா கொஞ்ச நேரம் பொறுக்க மாட்டானாமா?” என்றவரின் குரல் அதட்டலாய் வெளிப்பட்டாலும் அவளின் செயலை கண்டு சிரிப்பு தான் வந்தது சாவித்ரிக்கு

இல்ல சித்தி மதியம் வரேன்னு சொன்னாங்க வரல சாப்ட்டாங்களோ இல்லையோ? வந்ததும் சாப்பாடு எடுத்து வைக்க சொன்னா பசியோட உக்கார வைக்க முடியதுல அதான்! வேகமா பண்ணிட்டு இருக்கேன், உங்க மருமகன் வேற பசி தாங்க மாட்டாருஎன்று பேசிக்கொண்டே கடகடவென வேலையை முடித்தவள்ஹப்பா முடிஞ்சது அவ்ளோ தான்என்று இறுதி அலங்கரமாய் சாம்பாரில் கொத்தமல்லி தழையை தூவி இறக்கி வைக்க அதே நேரம் விஷ்ணுவும் உள்ளே நுழைந்தான் 

வாசம் பிடித்து கொண்டே வந்தவனின் கால்கள் தன்னிச்சையாக சமையல் அறை வாசலில் வந்து நின்று விடதேவிம்மா இன்னைக்கு என்ன ஸ்பெஷல்டா வாசமே ஆள தூக்குது மதியம் சாப்டாததுக்கு பசி இன்னும் அதிகமாகுது நா போய் ஃபிரெஸ் ஆகிட்டு வறேன் ஒரு பிடி பிடிக்கனும்என்று பசியின் தூண்டுதலில் ஆர்வத்தோடு உரைத்துவிட்டு செல்ல 

சொல்லலைஎன்று கண்ணால் ஜாடைகாட்டிய வைதேகியிடம்சரிதான்என்று புன்னகைத்து தலையாட்டிய சாவித்ரி உணவுகளை எடுத்து வைக்க உதவினார் 

இரவு உணவிற்காக  விஷ்ணுவின் வரவை நோக்கி ஜெகநாதன் சாவித்ரி இருவரும் அமர்ந்திருக்க,டிராக் சூட்டும் வெள்ளை நிற பனியனும் அணிந்து கொண்டு வந்து அமர்ந்தவன் சிறு தயக்கத்திற்கு பின் மெதுவாகஅத்தைஎன்று அழைக்க 

நிமிர்ந்து பார்த்தவர்என்னடா?” 

நா.. ஒரு விஷயம் சொல்வேன் அப்பா..கிட்ட நீங்க தான் பேசி புரிய வைக்கணும்! நா எது பண்ணாலும் அதுல ஒரு காரணம் இருக்கும்னு உங்க ரெண்டு பேருக்கும் தெரியும் கல்யாணம் முடிஞ்சு சென்னை வந்த பிறகு சொல்லிக்கலாம்னு இருந்தேன் ஆனா.. அதுக்குள்ள என்னென்னவோ நடந்துருச்சுநீங்க என்ன தப்பா நினைக்க கூடாது என்னடா இப்டி பண்றானேன்னுஎன்றவன் ஜெகனாதனிடம் பார்வையை திருப்பி மாமா நீங்களும் தான்!” என்று இருவரையும் மாறி மாறி பார்த்த வண்ணம் பீடிகையுடன் பேச

கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் குழப்பத்துடன் பார்த்து கொண்டவர்கள்நீ முதல விஷயம் என்னனு சொல்லுடா தப்பா சரியான்னு நாங்க சொல்றோம்என்றார் சாவித்ரி, தண்ணீர் எடுத்து வந்த வைதேகி பரிமாறியபடியே விஷ்ணுவின் பேச்சை கேட்க தொடங்கினாள்

அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு கூறலாம் என்றிருந்தவன் தீடீர் இழப்பின் காரணமாகவும் வேலையின் அழுத்தம் காரணமாகவும் சில வாரங்கள் செல்லட்டும் என்று அமைதியாக இருந்துவிடவிஷயத்தை கூறுவதற்கு நேரம் பார்த்து கொண்டிருந்தவனுக்கு பேச்சை தொடங்குவதற்கான வாய்ப்பு கிடைத்ததும் மேலும் தள்ளிபோட மனமில்லாமல் சொல்லியே ஆக வேண்டும் என்ற முடிவில் தயங்கி தயங்கி பேச தொடங்கினான்

அவன் தயங்குவதை கண்டு மூவரும் ஆர்வத்துடன் என்ன சொல்ல போகிறான் என்று கவனத்தை அவன் மீது பதித்திருக்கபுதுசா வீடு வாங்கிருக்கேன் அத்தைஎன்றதுமே ஆர்வம் மறைந்து மூவரிடத்திலும் அதிர்ச்சி வெளிப்பட்டது, அவர்களின் பார்வையை பொருட்படுத்தாதுஅப்பாகிட்ட என்னால பேச முடியாது நா அவரு முன்னாடி போனாலே முகத்தை திருப்பிகிட்டு போவாறு நீங்க தான் அவர்கிட்ட எடுத்து சொல்லி கிரஹபிரவேசத்துக்கு வர சொல்லணும்என்று உணவை பிசைந்து கொண்டே கேட்டவன் கெஞ்சலாக எதிர்பார்ப்பு மிகுந்த பார்வையில் சாவித்ரியை பாரத்தான்

முன்பே ஏன் கூறவில்லை என்ற கோபம் எழுந்தது வைதேகிக்கு சாவித்ரி ஜெகநாதன் இருவரின் முகமும் கண வினாடியில் சப்பென்று வாடி போகஏண்டா விஷ்ணு இங்க இருக்க உனக்கு பிடிக்கலையா?” என்று அனிச்ச மலரை போல வாடிய குரலில் சாவித்ரி கேட்க

அய்யோ அத்தை..” என்று பதறியவன்தப்பா எடுத்துக்காதீங்க இங்க இருக்க பிடிக்காம வேற வீடு பாக்கலை எத்தனை நாளைக்கு தான் மாமியார் வீட்டுல உக்காந்து சாப்டுறதுஎன்று கீழ் கண்ணால் உணவை அளந்து கொண்டே கூறியவனின் அதரத்தில் புன்னகை தவழ 

மாமியார் வீடா..?” என்று திகைத்த சாவித்ரிஇது எப்போட உனக்கு மாமியார் வீடாச்சு?” என்று திகைப்பு மாறாமல் கேட்க 

பின்ன உங்க பொண்ண கல்யாணம் பண்ணிகிட்டேனே இது எனக்கு மாமியார் வீடு தானே கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி இது என்னோட அத்தை வீடு இப்போஅப்டியில்லையே..”என்று அழுத்தம் கொடுத்து இழுத்து நிறுத்தியவன் ஜெகநாதனை பரிந்து பேசுமாறு பார்வையால் ஜாடை செய்து அழைத்தான்

சன்னமாய் சிரித்து கொண்டவர் மனைவிக்கு புரிய வைக்கும் முயற்சியில் இறங்கினார்சவிம்மா வைதேகிய கல்யாணம் பண்ணிகிட்டான்ல அதான் மாப்பிள்ளை கௌரவம் பாக்குறான் உங்க குடும்பத்துக்கு தன்மானம் பாக்க சொல்லியா தரணும்என்றவரின் வஞ்ச புகழ்ச்சியின் அர்த்தம் புரிந்து கணவனை முறைத்து பார்க்க, விஷ்ணு வாயில் உணவை அடைத்து கொண்டே சிரிப்பை அடக்க முயன்றான் என்றால் வைதேகி வாய்விட்டே சிரித்து விட்டாள் 

அவள் சிரிப்பதை கண்டு எரிச்சலுடன்ஏய் நம்ம குடும்பத்தை பத்தி தான் அவரு பேசுறாரு நீ என்னடான்னா சிரிக்கிற?’ 

சித்தப்பா உண்மைய தானே சித்தி சொல்றாரு உங்க அண்ணனும் சரி உங்க அக்கா! அதான் என்னோட அம்மாவும் சரி தன்மானம் பாக்குறதுல கோல்ட் மேடலே கொடுக்கலாம் அவ்ளோ வீம்பு பிடிவாதம் சுயகௌரவம்னு மிஞ்ச ஆளே கிடையாது, அவங்க நகல் மட்டும் எப்டி இருக்கும்என்று புருவம் உயர்த்தி விஷ்ணுவை கேலி செய்ய முறைப்பை மீறிய புன்னகை அவன் அதரங்களில் படர்ந்தது 

சவி குட்டிஎன்று கெஞ்சலை விடுத்து கொஞ்சலில் இறங்கஓஹோ.. “என்று வைதேகி நமட்டு சிரிப்புடன் தலையாட்ட 

நீங்க சாதாரணமாவே பேசுங்க சவி குட்டியெல்லாம் வேணாம் நீங்க வேலைக்கு போன பிறகு ரெண்டு வாண்டுகளும் இந்த பேரை சொல்லியே கிண்டல் பண்ணுங்கஎன்று முகத்தை சுருக்கி வைத்து சங்கடமான பாவனையுடன் கூற

சரி சரிஎன்று தலையாட்டியவர்இப்போ தான் அவங்களுக்கு கல்யாணம் ஆகிருக்கு சின்னஞ்சிறுசுக கொஞ்சம் அப்டி இப்டி இருப்பாங்க ம்மா நம்ம முன்னாடி பேசி பழக கொஞ்சம் சங்கோஜபடுவாங்க, அதுமட்டுமில்ல முதல் தடவையா பொறுப்பா குடும்பஸ்த்தனா யோசிச்சு வீடு வாங்கிருக்கான் அவன் வாழ்க்கையில முன்னேறுறது நமக்கு சந்தோஷம் தானம்மா கல்யாணத்துக்கு முன்னாடி அவனோட விருப்பப்படி இங்க எத்தனை நாள் வேணாலும் தங்கி இருக்கலாம் ஆனா இப்போ அப்டியில்ல போற போக்குல யாராவது ஏதாவது ஒரு வார்த்தை பொண்ண பத்தியோ பையன பத்தியோ பேசிட்டாங்கன்னா நீ சும்மா இருப்பியா சொல்லு

புதுவீட்டுக்கு குடி போறேன்னு சொல்றான் சந்தோஷமா போய் வாழ்க்கைய வாழுங்கன்னு நாமா தான் அறிவுரை சொல்லி வாழ்க்கைய வாழ கத்துகொடுக்கணும் ஒவ்வொன்னுக்கும் நம்மள நம்பி அவங்க இருக்க கூடாது சவிம்மா தனியா தானே போறான் சண்டை போட்டு போகலையே இதே சென்னையில தான் இருக்க போறான் பாக்கணும்னா போய் பாத்துட்டு வந்துரலாம் நம்ம பொண்ண பாக்க வரகூடாதுன்னு சொல்லிருவானா என்ன?” என்று விஷ்ணுவிடம் பார்வையை திருப்பி மிரட்டுவது போல கூற

அவரின் சாமர்த்தியமான பேச்சை கண்டு புருவம் உயர்த்தி மெச்சி கொண்டவன் சாவித்ரியின் பதிலை எதிர்பார்த்து ஆவலோடு அவர் முகத்தை பார்க்க யோசனை செய்தபடியேநீங்க சொல்றதும் சரி தான் முதல் முதலா வீடு வாங்கிருக்கான் சந்தோஷம் தான்படனும் அதவிட்டுட்டு என்ன மாதிரியெல்லாம் யோசிக்கிறேன் என்னோட பிள்ளைங்க என்னவிட்டு எங்க போயிர போறாங்கஎன்று தலையில் லேசாக தட்டி கொண்டவர்சரிடா அண்ணாகிட்ட பேசுறேன்என்றதும் தான் தாமதம்

சூட்டோட சூடா இப்போவே பேசிறுங்க அத்தை இந்த வாரத்துலயே பால் காய்ச்சி ஆகணும்என்று அவசரப்படுத்தினான் விஷ்ணு 

டேய் இன்னேரம் துங்கிருப்பாருடா  காலையில பேசிக்கலாம் என்ன அவசரம்

இல்ல தூங்கிருக்க மாட்டாரு எனக்கு தெரியும் நீங்க பேசுங்க ஸ்பீக்கர்ல போட்டு பேசுங்க அத்தை, என்ன சொல்றாருன்னு நானும் கேட்கணும்என்று எண்களை அழுத்தி சாவித்ரியிடம் நீட்ட

நீ இருக்க பாரு எல்லாத்துலயும் அவசரம்என்று நொடித்து கொண்டே மறுமுனையில் அழைப்பு ஏற்கும் வரை காத்துகொண்டிருந்தவர் அழைப்பு ஏற்கப்பட்டும் மறுமுனையில் கனத்த அமைதி நிலவவேஅண்ணா நா சாவித்ரி பேசுறேன்என்று பெயரை கூறவும்சொல்லுத்தாஎன்று பேச தொடங்கினார் பரமசிவம் 

பாத்திங்களா நான் தான் லைன்ல இருப்பேன்னு அமைதியா இருந்துருக்காறு தங்கச்சின்னதும் பேசுறாருஎன்று கிசுகிசுக்கும் குரலில் சாவித்ரியிடம் குறையாய் கூற

சும்மா இருடாஎன்று அடக்கியவர் விஷயம் இன்னதென்று கூற மறுமுனையில் பரமசிவத்தின் பேச்சை கேட்ட விஷ்ணு அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றான் 

Advertisement