Advertisement

அடுத்த நாள் அழகாகவும் பலத்திருப்பங்களையும் கொண்டும் சூரியன் அதன் உதயத்தை தொடுத்திருந்தது.
விடியற்காலையில் விழித்த வெற்றிக்கு தன் காதலியை காணப் போகும் ஆவல் பெருகி இருந்தது.
அதன் வெளிப்படையாக முகத்தில் அக்மார்க் புன்னகை குடிக்கொண்டிருந்தது.
காலையில் எழுந்ததும் , அவன் சுறுசுறுப்பாக இருந்து வீட்டு வேலை அனைத்தையும் முடித்தவன் அவளுக்காக பார்த்து பார்த்து கிளம்பத் தொடங்கினான் வெற்றி.
வெற்றி , இந்த நான்கு வருடத்தில் ஒரு நாளும் தன்னை யாராவது இரசிக்க வேண்டும் என்றெண்ணி எல்லாம் கிளம்பியது இல்லை. காலையில் எழுந்திருப்பதே நேரம் தாமதமாக தான் இருக்கும் .இதில்  விரைந்து எழுந்து தன்னை சுத்தப்படுத்தி கொண்டு வேக வேகமாக ஏனோ தானோ என்று சமையல் செய்து விட்டு எஃபமிற்கு செல்ல ஆயத்தமாவான்.
இன்று தான் தன்னை அவள் இரசிக்க வேண்டும் என்றெண்ணி அவளுக்காக பார்த்து பார்த்து தயாராகினான்.
சிறிது நேரத்திலேயே கிளம்பியவன், ஆங்காங்கே குப்பை போல் கிடந்த அவனது சட்டைகள் யாவும் அவனை பாவமாக பார்த்து வைத்தது.
அதற்கும் மனசாட்சி என்பது ஒன்று இருந்திருந்தால் ,’ ஒழுங்கா பீரோவில் இருந்த எங்களை இப்படி செய்துவிட்டாயே ‘ என்று அவனை துவசம் செய்திருக்கிருக்கும். நல்ல வேலை அவன் தப்பித்து விட்டான்.
ஐந்தரை போல் கிளம்பி அவனது எஃபம் ஸ்டேஷனுக்கு சென்றவன் , அன்றைய உற்சாகத்துடன் காலை ஷோவை தொடங்கி வைத்தான்.
எப்போதும் பல தரப்பட்ட மக்களின் உற்சாகத்தை கொடுத்தவன் , இன்றும் அதேபோல் என்பதை விட ஒரு படி மேலவே அவனது ஷோ இன்று நன்றாக சென்றது..
காலை ஏழு மணிப்போல் ஷோ முடித்து வந்தவனின் முகம் அத்தனை பிரகாசமாக இருந்தது.
” பாருடா , இன்னைக்கு மச்சான் முகத்துல தான் இந்த சென்னையோட மொத்தம் வெளிச்சமும் இருக்குது போலயே ” என்று தன் நண்பனை கலாய்க்க
” கலாய்ச்சுக்க கலாய்ச்சுக்க , இன்னைக்கு உனக்கு டஃப் கொடுக்க போறதும் இல்லை, அடிக்கப் போறதும் இல்லை மாப்பி ” என்றவன் சிரித்த முகத்தோடு அவ்விடத்தை விட்டு நகர்ந்து விட்டான்.
நேரம் செல்ல செல்ல எப்போது டா மாலை ஆகும் என்று இருந்தது.
கௌதமோடு இருந்தாலும் ,அவன் அவனது உலகில் தான் சுற்றிக் கொண்டு இருந்தான்.
சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால் ,’ பிசிக்கலி ப்ரசண்ட் மெண்டலி ஆப்சண்ட் ‘.
மூன்று மணிப்போல் கிளம்பியவன் , கௌதமிடம் வந்து ” மச்சி நான் கொஞ்சம் வெளிய பொய்ட்டு வரேன்.நீ கொஞ்சம் அதுவரைக்கும் பார்த்துக்கோ ” என்று சொல்லி விட்டு சந்தோஷமாக கிளம்பினான்.
அவளுக்காகவே பார்த்து பார்த்து வாங்கிய கிஃப்டோட அவளை பார்க்க கிளம்பி சென்றான் வெற்றிமாறன்.
அவளை பார்ப்பதற்காக ஒரு பூங்காவிற்கு சென்று அமர்ந்தவன் , அவள் வரும் நேரத்திற்க்காக காத்திருக்க தொடங்கினான்.
அவள் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த அவனுக்கு நேரங்கள் ஏனோ யுகமாய் கடக்க தொடங்கியது.
அவள் எப்படி இருப்பாள்.? அழகாய் இருப்பாளா , இல்லை அடுத்தவர்களை கவரா வண்ணம் இருப்பாளா.? என அவன் எதை பற்றியும் சிந்திக்கவில்லை.
அவள் எப்படி இருந்தாலும் , அவனை பொறுத்தவரை அது அவனின் இசை… இசைமாறன் அவ்வளவு தான் என தன் பெயரோடு அவள் பெயரையும் இணைத்து கொண்டான்.
மூன்றறைக்கே வந்தவனுக்கு ஏனோ நேரங்கள் கடக்க மறுப்பது போல் தோன்றியது.
அவளிடம் எப்படியாவது பேசி , தன்னுடனே அழைத்து செல்ல வேண்டும் என்று எண்ணி இருந்தான் வெற்றிமாறன்.
‘3:45’
‘3:50’
‘3:59’ என நேரத்தை பார்ப்பதும் , அவள் வசிக்கும் இதயத்தை நீவு வதுமாக இருந்தான்.
‘4:00’ மணிக்கு அவன் வைத்திருந்த அலாரம் அடிக்க, அதை அணைத்தவனுக்கு பார்வை எங்கும் சுழலப்பட்டது.
நான்கை கடந்து மணி செல்லவும் , ப்ராகாசமாக இருந்த முகம் சிறிது சிறிதாக சுருங்க தொடங்கிய நேரம் பின்னாடியில் இருந்து ” மாறா…” என்ற அழைப்பு வரவும் இதயம் தாறுமாறாக துடித்தது.
அது அவள் தான்.. அவளே தான்.. அவனின் இசை தான் என்று அவனுக்கு புரிந்து விட்டது.
சட்டென எழுந்து நின்றவனின் முன்னால் வந்து ,” ஹாய் மாறா..” என்றாள் புன்னகை பூத்த முகத்தோடு..
” ஹலோ இசை..” என்றான் பட படத்த மனதை கட்டுபடுத்திய படியே..
மயில் பச்சை நிறத்தில் , ஆங்காங்கே பூக்களாய் எம்ப்ராய்டரி டிசைன் போட்டிருந்த குர்த்தா மற்றும் ஜீன்ஸ் அணிந்திருந்தாள். அதற்கு தகுந்தாற்போல் சின்னதாக ஒரு தோடு. பெரிதாக எந்த ஒரு அலங்காரமும் இல்லாமலே தேவதை போல் காட்சியளித்தாள் அவன் கண்களுக்கு…
” ஹான் , இதோ இப்போ உங்க முன்ன வந்து நின்னுட்டேன். ஆர் யூ ஹாப்பி மாறா.?” 
” வெரி ஹாப்பி இசை..” என்றவனுக்கு பேச்சே வரவில்லை.
” அப்புறம் எப்படி இருக்கீங்க மாறா..?”
” குட் டா. நீ.?” 
” யா சூப்பரா இருக்கேன் மாறா.. நான் இரசித்த குரலுக்குறியவரை பார்க்கனும்னு ஆசைப்பட்டேன். பார்க்கவும் செய்துட்டேன். நவ்,ஆம் வெரி ஹாப்பி ” என்றாள் உள்ளார்ந்து…
அடுத்து அவனுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. சிறிது நேரம் அமைதி காத்தான்.
“இப்படியே நாம நின்னுட்டு தான் இருக்கப் போறோமா மாறா.?”‌என்க
” சாரி..”என்றவன் அவன் அமர்ந்திருந்த சிட் ஔட்டை காட்டி ,” வாங்க , உட்கார்ந்து பேசலாம் “என்றவன் அவள் அமர்ந்ததும் அவனும் சிறிது இடைவெளி விட்டு அமர்ந்து கொண்டான்.
“ம்ம் , சொல்லுங்க வெற்றி எதுக்காக என்னைய உடனே பார்க்கனும்னு சொன்னீங்க. அதுவும் இல்லாமல் ஏதோ பிரச்சனைன்னு வேற சொன்னீங்களே ” என்றிட 
‘எப்படி சொல்வது’ என்று தயங்க 
அதனை புரிந்து கொண்ட அவள் ,” சரி ,ஒரு நிமிஷம் இருங்க அங்க ஸ்வீட் பாப்கார்ன் விக்கிறாங்க . நான் போய் வாங்கிட்டு வரேன் ” என்று எழுந்தாள்.
” நான் போய் வாங்கி வரேனே .நீங்க இருங்க ” என்று சொல்லி விட்டு சென்றான்.
வெற்றி சென்று அங்கே இருந்த கடைக்காரரிடம் ‘இரண்டு ஸ்வீட் பாப்கார்ன் கொடுங்க’ என்று சொல்லி காத்திருந்தவனுக்கு தன்னை யாரோ உற்று நோக்குவதாய் தோன்ற இசையை நோக்கினான். அவளும் அவனை பார்க்கவும் ‘நம்மாளு தான் போல ‘ என்று நினைத்து திரும்பினான்.
 “அண்ணா கொஞ்சம் சீக்கிரமா கொடுங்க ” என்று போனை நோண்ட , அப்போது ப்ர்தா போட்ட மங்கை ஒருவள் அவன் பக்கத்தில் வந்து நின்று அழைத்தாள்.
” சார்…” என்க 
” சொல்லுங்க..” 
” ஒரு ஃபைவ் ஹன்ரட்டுக்கு சேஞ்ச் கிடைக்குமா..??” என்று கேட்க 
” இருங்க பாக்குறேன் ” என்றவன் அவனின் பர்சை எடுத்து பார்த்தான். அதில் இருக்கவும் இரண்டு இரணூறு தாள்களும் ஒரு நூறு ரூபாய் தாளும் கொடுத்து ஐந்நூறு ரூபாயை பெற்றுக் கொண்டான்.
“தேங்க்ஸ்..” என்று விட்டு அவள் சென்றாள்.
பின் , ஸ்வீட் பாப்கார்ன் வாங்கிக் கொண்டு இசையிடம் வந்தவன் அவளிடம் ஒன்றை கொடுத்து விட்டு தான் ஒன்று எடுத்துக் கொண்டான்.
“ம்ம் , இப்போ சொல்லுங்க . உங்களுக்கு என்ன ப்ராப்ளம்னு . அப்புறம் நானும் ஒரு விஷயம் உங்க கிட்ட சொல்லனும் ” என்றவள் எந்த கவலையுமின்றி அதனை ருசிக்க தொடங்கினாள்.
“அப்போ நீயே சொல்லு இசை. நான் உன்னக்கப்புறம் சொல்றேன் ” என்க
” இல்லை பரவாயில்லை. நீங்களே சொல்லுங்கள் நான் கேட்கிறேன், அப்புறம் நான் சொல்றேன். பட் நீங்க எப்படி  அதை எடுத்துக்குவீங்கன்னு தான் எனக்கு தெரியலை ” என்றாள் ஏனோ தவறு செய்த குற்றவுணர்வோடு..
” அது எப்படி சொல்றதுன்னு தான் தெரியலை.பட் சொல்லி தான் ஆகனும்” என்றவன் நிதானித்து அவள் அலைப்புறியும் கண்களை பார்த்து ” என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா இசை” என்று அத்தனை காதலையும் ஒருங்கிணைத்து வசப்படுத்தும் குரலால் கேட்டான்..
“வாட்…???” என்றவள் உச்சக்கட்ட அதிர்ச்சியில் இருந்தாள்.
‘ஏதாவது தப்பா கேட்டோமோ ‘ என்று சிந்தித்தவன்
அவளுக்காக வாங்கி வந்த பாக்சை திறந்து ,அதில் இருந்த இரு இதயங்கள் இணைந்ததே போல் இருந்த மோதிரத்தை எடுத்து அவள் முன் மண்டியிட்டு தன் காதலை கூறத் தொடங்கினான்.
” இசை.. நான் எப்போ எப்படி உன்னை காதலிக்க ஆரம்பிச்சேன்னு தெரியலை. பட் உன்னோட எழுத்துக்கள் என்னை உன் வசம் இழுத்து கொண்டு வந்துடுச்சி.‌ எனக்கு காதல் பற்றின எந்த கனவும் இல்லாமல் தான் இருந்தேன். ஆனா இந்த ஆறு மாதத்தில் காதல் எப்படி இருக்கும்னு உணர வச்சது உன்னோட எழுத்துக்களும் உன் பாசமும் தான். உன்னோட பாசம் நேசம் எனக்கு நம் வாழ்க்கை முடியுற வரைக்கும் வேணும்னு நினைக்கிறேன். எஸ் ஐம் இன் லவ் வித் யூ இசை. வி யூ மேரி மீ..?” என தன் காதலை கூறி அவள் முகத்தையே பார்த்து இருக்க ,
” என்ன பண்றீங்க மாறா நீங்க..? முதல எந்திரிங்க . ஹோ காட் ,இப்படி நீங்க ப்ரோப்பஸ் பண்ணுவீங்கன்னு தெரிஞ்சா , நானே முதல் சொல்லியிருப்பேனே . இதெல்லாம் ஒரு ப்ராங்க்ன்னு” என தலையில் கைவைத்து தேய்த்தாள் இசை.
அவளின் செயலில் அதிர்ச்சியடைந்த வெற்றி எழுந்து நின்று அவள் முகத்தையே பார்த்தான்.
” இசை., இப்போ நீ என்ன சொல்ல வர.? எனக்கு சரியா கேட்கலை ” என தவறாக கேட்டது போல் திருப்பி கேட்க 
” உங்க காதுல சரியா தான் விழுந்துருக்கு மாறா.. நான் இந்த லெட்ட்ர்ஸ் அனுப்பினது எல்லாம் ஒரு ஃபன்னுக்காக தான் . ஆனா நீங்க இப்படி வந்து ப்ரோப்போஸ் பண்ணுவீங்கன்னு நான் சுத்தமா எக்ஸ்பெக்ட் பண்ணலை ” 
” அப்போ , நீ அனுப்பின லெட்டர்க்கு எல்லாம் என்ன அர்த்தம் ” என்றவனின் குரலில் அத்தனை கோபம் நிறைந்திருந்தது.

Advertisement