Advertisement

” உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையா தம்பி.?” என ஆராய்ச்சி செய்யும் பார்வை பார்க்க
“ப்பா..” என்றவன் தலை கவிழ்ந்து நின்றான்.
” சொல்லு டா..?”
” எனக்கு வேற ஒரு பெண்ணை பிடிச்சிருக்கு பா‌…”என்ற நொடி அவன் கண்ணத்தில் பரமசிவத்தை கை  பதிந்தது.
” ப்பா…” 
” என்னடா அப்பா , கேக்குறேன் என்ன அப்பா.. உனக்கு விருப்பம் இருக்கான்னு கேட்டு தானே அந்த பெண்ணை உனக்கு பார்த்தேன். ஆனா நீ இப்போ வந்து வேற ஒரு பெண்ணை பிடிச்சிருக்குன்னு சொல்லுற “
” ப்பா.. அப்போ எனக்கு எந்த பொண்ணு மேலையும் காதல் வரலை பா.ஆனா இப்போ அவ மேல வந்துருக்கு பா . அவளால மட்டும் தான் எனக்கு மனைவியா வர முடியும் ” என்க 
” அடிச்சேன்னா பாரு  , நாலு காசு சம்பாதிச்சிட்டா நீ பெரிய இவனா டா. உன்ன கேட்டு நாங்க சம்பந்தம் பண்ணி அந்த பொண்ணு அவ ஆசைய வளர்த்துகிட்டு நிக்கிறப்ப , நீங்க பெரிய இவராட்டம் எனக்கு வேற ஒரு பெண்ணை பிடிச்சிருக்குன்னு சொல்லு வீங்களோ ” என தந்தையாய் அப்பெண்னை நினைத்து கத்த 
” அப்பா , நான் செஞ்சது தப்பு தான் . ஆனா என்னால அந்த பொண்ணு கழுத்துல தாலி கட்ட முடியாது பா. எனக்கு  எல்லாமுமா என்னோட இசையால மட்டும் தான் இருக்க முடியும் பா. ப்ளிஸ் இந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திடுங்க ” என்று தந்தையிடம் கெஞ்சினான் மைந்தன்.
” ஒரு பொண்ணோட ஆசையை கெடுக்க  நான் விரும்ப மாட்டேன் டா. இந்த கல்யாணம் உன்னோட சம்மதத்துல தான் ஆரம்பிச்சது. அதுனால இந்த கல்யாணம் நடந்தே தீரும். இதை நிறுத்த முயற்சி செய்த அப்புறம் உனக்கு அப்பான்னு ஒருத்தன் இருக்க மாட்டான் பார்த்துக்கோ ” என்று எச்சரிக்கை விடுத்து அறைக்குள் புகுந்து கொண்டார்.
அவனுக்கு கத்தி அழுகனும் போலே இருந்தது. இப்படி ஒரு நிலை தன் வாழ்வில் வரும் என்று அவன் சிறிதும் நினைத்து பார்த்ததில்லை.
தன்னால் அம்மு என்ற‌ பெண்ணை திருமணம் செய்ய முடியாது என்று நிச்சயமாக தோன்ற , மனம் இசையை நோக்கி சென்றது.
அவளின் எழுத்துக்களை அணைக்கனும் போல் தோன்ற , அறைக்குள் சென்று முடங்கியவன் சிறிது நேரத்திலே பையை எடுத்து கொண்டு வெளியே வந்தான்.
தந்தையின் அறைக்குள் நுழைந்தவள் ,” என்னாலையும் ஒரு பொண்ணோட ஆசையை கெடுக்க முடியாது பா. அதுவும் என்னோட இசையோட ஆசையை கண்டிப்பா முடியவே முடியாது பா… ” என்று சொல்லி விட்டு வெளியேறினான்.
இதோ இப்போது அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருந்தான்.
சென்னை வந்தவுடன் , அவனது வேலை பளு அவனை எடுத்துக் கொள்ள , நாட்கள் எப்போதும் போல் சென்றது. 
அவளின் கடிதம் தினமும் கிடைத்தும் , அதனை படிக்க முயலும் போதெல்லாம் மனதளவில் ரத்த கண்ணீர் வடித்தான் வெற்றிமாறன்.
அப்படியே ஒரு மாதம் கழிந்து விட , ஒரு நாள் தந்தை அழைப்பு விடுத்து இன்னும் மூன்று மாதத்தில் உனக்கும் அம்முவுக்கும் திருமணம் ஒழுங்கு மரியாதையாக கல்யாணத்துக்கு வந்துவிடு என்று ஏனோ யாருக்கோ கல்யாணத்துக்கு அழைப்பு விடுப்பது போல் சொல்லி வைத்தார்.
பைத்தியம் பிடிப்பது போல இருந்தது அவனுக்கு . இதில் அந்த மணப்பெண் அம்மு வேற இரண்டு முறை அழைப்பு விடுத்திருந்தாள். அதை தவிர்த்த அவனுக்கு குற்றவுணர்வாக இருந்தது.
அப்போது தான் அவன் மனசாட்சி தக்க யோசனை கொடுத்து அவனின் நிலையை சரி செய்தது.
அறையில் மலாக்கா படுத்தபடி , இசையின் எழுத்துக்களை பதிந்திருந்த கடித்தத்தை நெஞ்சோடு அணைத்திருந்தான்.
‘ இப்படியே எவ்வளோ நாள் தான் இருக்க போற நீ ‘ என மனசாட்சி அவன் முன் தோன்றிட
” தெரியலையே..” 
‘ இது சரியில்ல வெற்றி. உனக்கு இசையை பிடித்திருக்குன்னா அதை நீ தான் தைரியமா பேசனும். இது ரெண்டு பொண்ணுங்களோட வாழ்க்கை சம்மந்தபடுதா டா ‘ 
” எனக்கு புரியுது டா . ஆனா இந்த கல்யாணத்தை நிறுத்த முயற்சி செய்தா , அப்பா உயிரோட இருக்க மாட்டேன்னு மிரட்டிட்டு இருக்காரு ” என்க 
‘ அப்போ நீ இசை கிட்ட சொல்லி , கல்யாணம் பண்ற வழியை பாரு மேன். இல்லன்னா அந்த பொண்ணு கிட்ட பேசு ‘
” அவ இப்போ வேணாம்னு சொல்லிட்டானா என்ன பண்றது. என்னால அவளை தவிர வேற யாரையும் மனைவியா ஏத்துக்க முடியாதே ” என்க 
‘ அப்போ சரி , நீயும் உன்னோட காதலை லெட்டர் மூலமா எழுதி இசை சொன்ன முகவரிக்கு அனுப்பு. கடைசி நேரத்துல உன்னோட இக்கட்டான சூழ்நிலையை சொல்லி எல்லார் முன்னாடியும் இசையை கூட்டிட்டு போய் நிறுத்தின்னா , பெரியவுங்களால எதுவும் பண்ண முடியாம கடைசில ஓத்துக்கிட்டு தான் ஆகனும் பாரேன் ‘ என அவனுக்கு மனசாட்சி ஐடியா வழங்க 
அதை கேட்டவனுக்கு நல்ல யோசனையாக தோன்றினாலும் பெற்றோரை நினைத்து வருந்தினான்.
” ஆனா , இப்படி பண்ணா பெரியவுங்களை அசிங்க படுத்திற மாதிரி ஆகிடுமே ” என்க
‘ இதை பார்த்தா இசை உனக்கு கிடைக்க மாட்டா வெற்றி. நான் சொன்னது போலவே பண்ணு. கொஞ்சம் நாள் கோபமா இருந்தாலும் அப்புறம் உங்களை ஏத்துக்குவாங்க டா ‘ என்றது அவன் மனசாட்சி.
“சரி டா…”
மனசாட்சி மறைந்து விட , இசைக்காக லெட்டர் எழுத தொடங்கினான் வெற்றி.
லெட்டரை எழுதி முடித்தவன் , அவள் சொன்ன முகவரிக்கு ஸ்பீட் போஸ்ட் செய்தான்.
******
அவசர அவசரமாக அவளது அலுவலகத்திற்கு கிளம்பிய இசை , வேகமாக வெளியே வந்து ஏதாவது போஸ்ட் வந்திருக்கிறதா என்று பார்க்க , அதுவோ காலியாக தான் இருந்தது.
காலியான போஸ்ட் பாக்ஸை கண்டதும் அவள் முகம் சுருங்கி விட ,அடுத்த நொடியே நார்மலான முகத்தை கொண்டு வந்தவள் , காலை உணவை முடித்து விட்டு அலுவலகம் சென்று விட்டாள்.
அலுவலகம் வந்தவளுக்கு வேலை இழுக்கு கொள்ள , வெற்றியின் நினைப்பை மறந்து விட்டு அவளது வேலையை செய்ய தொடங்கினாள்.
இதற்கிடையில் அவளது தோழி ஒருத்தி வந்து ,” என்ன மேடம் நீங்களும் ரொம்ப நாளா அந்த ஆர்.ஜே வெற்றி பின்னாடி சுத்துறீங்க . ஏதாவது ரெஸ்பான்ஸ் கிடைச்சதா என்ன ” என நக்கலாக கேட்க
” பச் , நீ வேற ஏன் டி கடுப்பேத்துற . அவனோட மைன்ட் என்ன நினைக்குதுனே எனக்கு தெரியலை ” 
” நானும் அவன் லெட்டர் போஸ்ட் போடுவான் போடுவான்னு பார்த்ததுட்டே இருக்கேன். ஆனா எதுக்கும் மசிய மாட்டேங்கிறான் டி ” என்று புலம்பினாள் இசை..
” பார்த்து டி.. கடிதம்னு பழைய ரூட்டை ஃபாளோ பண்ற , பார்ப்போம் எப்போதா உன்னோட வேலையை முடிக்கிறன்னு ” என சொல்லி நகர முற்பட 
” முடிச்சு காட்றேன் டி.. வெற்றி என்கிட்ட அவனோட காதலை சொல்ல தான் போறான். நீ வேணா பார்த்துட்டே இரு ” என்று வெற்றி மீது இருந்த நம்பிக்கையில் அவளிடம் சவால் விட்டாள் இசை.
” பாப்போம் பாப்போம் ” 
அன்று மாலையும் வீட்டிற்கு வந்தவுடன் போஸ்ட் பாக்ஸை திறந்து பார்க்க , அவள் முகம் பிரகாசமானது.
அதிலிருந்த லெட்டரை எடுத்தவள் , வேகவேகமாக அறைக்குள் நுழைந்து அதனை படிக்க தொடங்கினாள்.
‘என்னுள்ளே நுழைந்த என்னவளே..
காதலின் வாசம் அறியா என்னை
காதலோடு உயிரில் கலந்தாயே…
ஏனோ தானோ என்று நினைத்த 
உன் காதல் கடிதங்கள்.,
என்னை ஏங்கும் அளவிற்கு நிறுத்தியது..
நின் கடிதமே என்னை  மற்றற்ற
மகிழ்வை கொடுத்து வாழ வைக்கிறது…
நின் எழுத்துக்களே என்னை
உயிர்ப்போடு வைக்கிறது…
நின் காதலில் திளைத்து 
திக்குமுக்காடி மயங்கி  நிற்கும்
என்னை என்காதலோடு ஏற்பாயோ..!?
_என்றென்றும் உன் இசைமாறன் ‘
என அவனுக்கு தெரிந்த வகையில் அவனது காதலை சொல்லி இருந்தான் வெற்றிமாறன்.
அதை படித்த இசைக்கு எதையோ வென்ற மகிழ்ச்சி. அவளால் அதனை வார்த்தையால்  விவரிக்க முடியவில்லை.
இறுதியில் இசைமாறன் என்று அடிக்கோட்டிருந்த பெயரில் அவளின் மென்முத்தத்தை பதித்து நெஞ்சோடு அணைத்து கொண்டாள்.
பின்னர் ,வந்த நாளில் இருவரும் கடிதத்தின் மூலமாக பேசிக்கொண்டனர்.
எப்போதாவது இசை எதாவது பீசியூ மூலமாக அவனுக்கு அழைத்து பேசுவாள். 
அவளின் பேச்சுக்கள் மொத்தமும் அவனது அழகிய குரல் வளத்தை பற்றியே இருக்கும்…
இப்படியே  அவர்களது நாட்கள் நகர்ந்திட , திருமணத்திற்கு இன்னும் பதினைந்தே நாட்கள் என்றிருந்தது.
இதற்கிடையில் ,வெற்றியை வம்படியாக அழைத்து சென்று தாலி புடவை‌ எல்லாம் வாங்கி வந்தனர் பெரியோர்கள். 
மாப்பிள்ளை வீட்டில் தான் மூகூர்த்த புடவை எடுக்க வேண்டும் என்ற முறை இருந்ததால் , மணப்பெண் புடவை எடுக்க வரவில்லை.
பரமசிவம்- விஜயசாந்தி , ஞானவேல் – காந்திமதி மற்றும் பூங்கோதையின் பெற்றோர் பத்மநாபன் – வேதவல்லி என பெரியோர்களோடு சென்று ஏனோ தானோ என்று ஒரு புடவை எடுத்து கொடுத்திருந்தான் அவன்.
இரண்டு நாட்கள் அவனது பெற்றோர் அவனுடன் இருந்து விட்டே சென்றனர்.
‘ ஊருக்கு தன்னுடனே வரசொல்லி ‘ இருவரும் வற்புறுத்தியும் வேலை பளுவை காட்டி நழுவிக் கொண்டான் வெற்றி.
அவர்கள் சென்றதும் , அவளிடம் இதை பற்றி பேச வேண்டும் என்று முடிவெடுத்த வெற்றி அவளுக்கு லெட்டர் எழுதி போட்டிருந்தான். 
அந்த நாளே , அவனுக்கு ஏதோ நல்ல நாளாக அமைந்தது  போல , அவளே அவனது நம்பருக்கு அழைப்பு விடுத்திருந்தாள்.
அவன் எடுத்ததும் அவளை சந்திக்க வேண்டும் என்று கூறிட 
காதலர் தினத்தின் முந்திய நாள் பார்க்கலாம் என்று முடிவெடுத்தனர்.
அவளை முதல் முறை காணப்போகும் நாளுக்காக காத்திருக்க தொடங்கி இருந்தான் வெற்றிமாறன்.
ஆனால் விதியின் விளையாட்டு எவ்வாறு அமைந்திருக்கிறதோ.?

 

Advertisement