Advertisement

5

இருவரும் ஒருவழியாக பெண்ணை தேர்வு செய்தாகிவிட்டது.. அடுத்த குழப்பம் எந்த கால கட்டத்தில் வாழ்ந்த எந்த பெண் என்பது தான்.

ரியா குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தாள்.. தேவ் மீண்டும் பிளையிங் ஷூவை மாட்டிக்கொண்டு ரிமோட் மூலம் கண்ட்ரோல் செய்தபடி சுற்றிக் கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் ரியாவால் மூச்சு விட முடியாமல் போக..  “ஆக்சிஜென் லெவல் லோ.. லெவல் லோ..” என்று ஒலிபெருக்கி கூவியது.

“டோரா சேஞ் மை பிரீத்திங் கேன்” என்று ரியாவின் குரல் கேட்டு டோரா பாஸ்ட் மோடிற்கு தன்னை மாற்றிக்கொண்டது. 

கால்களின் கீழ் சக்கரங்கள் வந்தன.. கைகள் நீண்டுகொண்டு போய் ஒரு பிரீத்திங் கேனை எடுத்துவந்து ரியாவின் முகத்தில் இருந்த பழைய குழாயை நீக்கிவிட்டு புதியதை மூச்சுக்குழாய் போல் பொருத்தியது. அதன் பின்னரே அவள் சீராக மூச்சுவிட்டாள்.

“தேங்க்ஸ் டோரா..”

“டோரா இஸ் ரியாஸ் செர்வண்ட்.. நோ தேங்க்ஸ் ரியா” என்று கம்ப்யூட்டர் வாய்ஸில் பேசியபடி அங்கிருந்து சென்றது.

“தேவ் இஸ் இன் டேஞ்சர்.. டேஞ்சர்” என்று அவன் கட்டியிருந்த வாட்சிலிருந்து இப்போது கீச்சிட்ட சத்தம் வர..

ரியா சென்று பார்த்தாள்.. அவளோடு சென்ற டோரா தன் கையிலிருந்த பயோ சென்சாரை வைத்து சோதனையிட அவன் உடலில் ஒரு துளி நீர் கூட இல்லை என்று காண்பித்தது..

பதறிய ரியா உடனடியாக அவளது அறைக்குள் சென்றாள்.. அரைமணி நேர போராட்டம்..

முதலில் ஒரு அறையை தன் கை ரேகைகளால் திறந்தாள். அதன் பின் ஒரு அறை அதில் கால் ரேகைகளை உபயோகித்தால்.. மீண்டும் ஒரு அறை அதில் பயோ மெட்ரிக் மூலம் கண்ணிலுள்ள கருவிழியை உறுதி செய்தபின் கடைசியாக ஒரு அறை அதில் இதய துடிப்பை வைத்து அவளுடையது என்று தெரிந்தபின்னரே திறந்தது அந்த லாக்கர்..

அதிலிருந்து ஒரு சிறிய பாட்டிலை எடுத்தவள் மெதுவாக திறந்து ஒரே ஒரு துளியை மட்டும் எடுத்துவிட்டு கவனமாக மூடினாள். அந்த அதிசய திரவம் ஆவியாகவிடாமல் தடுக்க அந்த அறை முழுத்திலும் சில வாயுக்களை நிரப்பி இருந்தனர்.

அந்த துளியை எடுத்துவந்து தேவ்வின் வாயில் விட்டாள். அவன் கண்விழித்து பார்த்தான். “தேங்க்ஸ் ரியா..”

“நீ தேங்க்ஸ் சொல்லனும்னா உன்னோட பென்டென் வாட்ச்சிற்கு தான் சொல்லணும்.. அதுதான் அலெர்ட் செஞ்சுது”

“தேங்க்ஸ் பென்டென்” என்றான் தேவ் அவனது வாய்ஸ் ரெகக்னிஷன் வாட்ச்சிற்கு.  “இட்ஸ் ஓகே தேவ்” என்று அதிலிருந்து கீச்சிட்ட குரலில் பதில் வந்தது. அதை அப்படி வடிவமைத்திருந்தனர்.

தேவ் இப்போது ரியாவை பார்த்து, “நீ எவ்வளவு பெரிய உதவி செஞ்சிருக்க.. ரொம்ப ரொம்ப நன்றி”

“இதுல என்ன இருக்கு தேவ்? நீ என் பிரென்ட் உனக்கு செய்யாம யாருக்கு செய்ய போறேன்”

“நீ செஞ்ச ஹெல்ப் அப்படி ரியா.. பூமியில இருந்து கடைசியா கிடைச்ச தண்ணீரை எல்லாரும் எப்படி பாதுகாத்து வெச்சிருக்காங்க அதிலிருந்து ஒரு துளியை எனக்கு கொடுத்திருக்க நீ கிரேட் ரியா” என்றான் மனதார. 

ஒவ்வொருவரும் பாதுகாக்கும் பொக்கிஷம் அந்த அச்சிறு பாட்டிலில் இருக்கும் தண்ணீர். ஒரு துளியை பருகினால் மீண்டும் உடலில் வறண்ட பாகங்கள் எல்லாம் மென்மையாகிவிடும்.

அதற்குள் காலக்ஸி பாக்ஸ் ஆப் ஆகிவிட்டது. தேவ் மீண்டும் அதை ஆன் செய்துவிட்டு காத்திருக்க.. “தேவ் ஆர் யு ஓகே” என்றபடி கம்ப்யூட்டர் வாய்ஸில் டோரா அருகில் வர..

“ஹ்ம்ம் பைன் டோரா..” என்றான் அதன் தலையில் தட்டி. இப்போது தேவும் டோராவும் நட்பாகிக் கொண்டனர்.

“சரி யாரை செலக்ட் செய்ய்ய…” “எனக்கும் அதுதான் கன்ப்யுசென்.. யாரை செலக்ட் செய்யுறது..”

தேவ் தீவிரமாய் யோசித்திருக்க.. ரியாவும் முட்டி மோதிக் கொண்டிருக்க.. இவ்விருவரையும் பார்த்துவிட்டு “செலக்ட் அக்கோர்டிங் டு தெயர் நேம்” என்றது டோரா.. 

“செம ஐடியா.. என்ன இருந்தாலும் ரோபோ ரோபோ தான்யா” என இருவரும் பெயர் பட்டியலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அந்த செங்கல் பெட்டியில் அதாங்க காலக்ஸி பாக்ஸ்.. அதில் வருட ரீதியாக வாழ்ந்த முன்னோர்களின் பெயர்களை பார்த்திருந்தார் இருவரும். அவர்களோடு டோராவும் இணைந்து கொண்டது.

முன்னோர்கள் என்றால் என்ன முறை சொல்லி அழைப்பது அனைவரும் வயதானவர்கள் தானே அதனால் பாட்டி என்றே அழைத்தனர் டோராவின் வழிகாட்டுதலில்.

“செம்பியன் மாதேவி..??” என்று கேட்டபடி தேவ் புருவத்தை உயர்த்தினான்.

“இது யாரோட பாட்டி”

“என் பாட்டி தான்”

“அப்போ ரிஜெக்டட்”

“ஹே இதெல்லாம் ஓவர்.. வேணுனா உன்னோட பாட்டியையும் தேடறேன் அப்பறம் சொல்லு” – தேவ்

“அப்போ ஓகே கண்டின்யு” – ரியா

“உலகமா தேவி”

“வாவ் செலக்ட் பண்ணிப்போமா..!!”

“நோ ரிஜெக்டட்..”

“ஏன்.. ஏன்.. ஏன்”

“நீ மட்டும் என் பாட்டியை ரிஜெக்ட் பண்ணுவே நான் பண்ண கூடாதா”

“சைலென்ஸ்” என்று டொராவே அந்த பெட்டியை வாங்கி கையில் வைத்துக்கொண்டு தேட ஆரம்பித்தது.

“நான் ரெண்டு பேர்த்தோட பாட்டியையும் சொல்றேன் ஓகே வா பாருங்க” என்றது கம்ப்யூட்டர் வாய்ஸில்.

“ஓகே” என்றனர் இருவரும்

“தேவசேனா – தேவயானி.. ஆதிகாலம்” என்றுவிட்டு டோரா இருவரையும் பார்க்க..

“நோ” என்று தலையசைத்தனர்.

“நீள்நெடுங்கண்ணி – வாள்நெடுங்கண்ணி.. அடுத்தகாலம்”

“நோ” என்று தலையசைத்தனர் இப்போதும்.

“ராமாத்தா – சுப்பாத்தா.. இடைப்பட்ட காலம்”

“பிக் நோ…”

“சரோஜா தேவி – அஞ்சலி தேவி கடந்தகாலம்”

“இன்னும் பெட்டெர் ஆஹ் பாரு டோரா.. பார்வேர்ட் பண்ணு..” என்றனர் இருவரும் கோரஸாக.

தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த டோரா.. அந்த பெட்டியையே பார்த்தது.. பார்த்தபடி அசையாமல் அமர்ந்திருந்தது.

“என்னாச்சு டோரா” என்று தேவும்..

“சொல்லு டோரா இப்போ எங்க பாட்டி பேரென்ன” என்று ரியாவும் கேட்டபடி காத்திருக்க..

மென்மையாய் உச்சரித்து டோரா அவர்களது பெயரை.. “சங்கமித்ரா – சிவபரணிகா” என்று.

தேவ் ரியா இருவருக்கும் ஆனந்தம் பெறுக.. ஒருவரை ஒருவர் பார்த்தபடியே 

“பிக்ஸ்ஸ்ஸ்ஸ்….” என்றனர்.

*****

6

சங்கமித்ரா – சிவபரணிகா டோராவிற்கும் இந்தப் பெயர்கள் பிடித்துப்போக அவர்களையே தேர்வு செய்தது.

தேவ் எழுந்து சென்று அந்த செங்கல் பெட்டியை தூரத்தில் எடுத்து வைத்துவிட்டு வந்தான்.  “சுவிட்ச் ஆஃப் ஆல் தி லைட்ஸ்” என்றான் ரியாவிடம்.

“ரியா ஹியர்.. லைட்ஸ் ஆஃப்” என்றதும் அவளது கட்டளைக்கேற்ப அனைத்து விளக்குகளும் அணைந்தது.

டோரா அதன் கண்களை சுவற்றில் பதிக்க.. கண்ணிலிருந்து லேசர் போல் கூரிய ஒளி சுவரில் பட்டு திரைபோல் விரிந்தது.. அடுத்து என்ன செய்யவேண்டும் என்று ரியா தேவ்வை ஏறிட..

தேவ் எழுந்து சென்று அந்த செங்கல் பெட்டியில் தாங்கள் தேர்வு செய்த பாட்டியின் பெயர்களை பதித்துவிட்டு டோராவின் பின்னால் வந்து அமர்ந்தான். அவனோடு ரியாவும் அமர்ந்திருந்தாள் பூமியைக் காணும் ஆவலில்.

அறை முழுக்க மிகபிரமாண்டமான வெளிச்சம் ஒன்று மின்னல் போல் அதீத சக்தியுடன் வந்து மறைய.. இருவரின் கண்களிலும் ஷீல்டு கிளாஸ் இருந்தமையால் கண்கள் பொசுங்கிவிடாமல் அவ்வொளியில் இருந்து தப்பினார்.

மெதுவாக கண்களை திறந்தாள் ரியா..  திரையில் காலம் சுழன்றுகொண்டிருந்தது.. ஒவ்வொரு கோள்களும் மோதுவதுபோல் வந்து வந்து சென்றிருக்க.. சிறிது நேரத்தில் வேகமெடுக்க.. கடைசியில் ஓரிடத்தில் நின்றிருந்தது.

உருண்டையாக அழகிய நீல நிறத்தில்.. வெள்ளை கலந்து ஆங்காங்கே பச்சை கலந்து சுழன்றுகொண்டிருந்தது அந்தக் கோள்.

“குய்ய்…” என்றொரு விசில் சத்தம் கேட்க.. அதுவும் வெகு அருகில் கேட்க..

“உன் வேலையா” என்று தேவ் ரியாவை பார்க்க.. அதேபோல் தான் ரியாவும் தேவ்வை பார்த்துவைத்தாள். ஆனால் ஒலி எழுப்பியது டோரா.. இவர்களை விட பூமியை பார்க்க அதற்கொரு ஆர்வம்.

இமைக்கவும் மறந்து பார்த்திருந்தனர் மூவரும்.. “டேய் தேவ்!! எர்த் சூப்பரா இருக்குடா” “எப்படி எல்லாம் இருந்திருக்கு பாறேன்.. இந்த மாதிரி ஒரு எடத்துல வாழ நமக்கு குடுத்து வெக்கலயே”

“சரி சரி தூரமா இருந்து பார்த்தது போதும்.. பாட்டி வயசு அடி.. கிட்டக்க போய் பாப்போம்.. நானும் நோட்ஸ் எடுத்துக்க ரெடி ஆகுறேன்” என்று தன்னை தயார்படுத்திக்கொண்டு ரியா கூறியதும் தேவ் எழுந்து சென்று ஒரு வயதை பதிவு செய்துவிட்டு வந்தான். 

திரையில் மீண்டும் காலச்சக்கரம் சுழலுவதுபோல் தோன்றி மறைய..

என்ன பார்.. நான்

கைய தட்ட உண்டாச்சு உலகம்.

ஹே நான் சொன்ன பக்கம்

நிக்காம சுழலும்

டேய் என் கூட சேர்ந்து

கூத்தாடும் நிழலும்

உள்ளார எப்போதும்

உல்லாலா.. உல்லாலா..

என்று ஒரு வீட்டினில் இசை பரவியிருக்க..

பாடலுக்கேற்ப தலையை ஆட்டிக்கொண்டு.. அவரால் முடிந்த ஸ்டெப்புகளை போட்டுகொண்டு.. தள்ளாடும் வயதில் ஒரு கையில் தடியுடன் வலம் வந்து கொண்டிருந்தார் ஒரு வயதான பெண்மணி.

“இது என்ன மியூசிக் சூப்பரா இருக்கு கேக்கவே..” என்று ரியா தன்னை அறியாமல் எழுந்து ஆடிக் கொண்டிருந்தாள்.

“இது பேட்டை சாங்.. கண்ணம்மா பேட்டை போக வேண்டிய ஏஜ்ல பாட்டி பேட்டை சாங்க்கு ஆடிட்டு இருக்கு..” என்றது டோரா பொறுக்கமுடியாமல்.

டோரா கூறியதுபோல் அந்த வயதான பெண்மணி சிறிது தூரத்தை கடக்கவே வெகுநேரம் எடுத்து. அவ்வளவு கஷ்ட்டப்பட்டு தடி ஊன்றி இப்போது எதற்காக நடக்கிறார் என்றால்.. அவரது மறுகையில் இருந்த உடைந்துபோன பிளாஸ்டிக் மக்கை தூக்கி ஏரியத்தான். அவர் செல்லும் பாதை முழுதும் இதுபோல் பல பிளாஸ்டிக்காலான கழிவுகள் தான் நிறைந்திருந்தது. அதில் பாதிக்கு பாதி பாட்டி வீசி எறிந்ததுதான்.

அவரை கண்டதுமே ரியாவின் முகம் மாற,  “டேய் தேவ்!! என்னடா உன் பாட்டி இப்படி இருக்காங்க” என்றாள்.

“அது என் பாட்டி இல்ல.. உன் பாட்டி சிவபரணிகா தான்” என்றான் ஒரு சிரிப்போடு..

“என்னது என் பாட்டியா..” என்றவள் திரையில் தெரிந்தவரை பாசத்தோடு பார்த்திருந்தாள்.

சிறிது நேரத்திலேயே திரையில் மீண்டும் ஒரு சுழற்சி ஏட்பட்டு நின்றது.

இளமை திரும்புதே

புரியாத புதிராச்சே

இதய துடிப்பிலே

பனிக் காத்தும் சூடாச்சே

ஹே துள்ளி குதிக்குது நெஞ்சம்

தூக்கம் வரவில்லை கொஞ்சம்

நாளை வரும் என அஞ்சும்

மீண்டும் முதற்ப்பருவம்

முன்பு பார்த்ததுபோலவே இன்னோரு வயதான பெண்மணி கைநிறைய பாலித்தீன் பைகளை கொண்டுபோய் மதிலைத் தாண்டி எறிந்துவிட்டு வந்தார்.. எரியும்முன் இளமை திரும்புதே என்று பாடத் தவறவில்லை..

தெருவரை செல்ல உடலில் தெம்பில்லை.. அப்போதுகூட குண்டு எரித்தலில் தங்கம் வென்றவர் போல வீசி எறிந்தார் மதிலைத் தாண்டி.. அது அவ்வழி சென்ற ஒருவரின் தலையில் அடித்து விழுந்து அவர் காட்டு கத்தலில் கத்திக் கொண்டிருப்பதெல்லாம் பாவம் பாட்டியின் செவிகளை எட்டவில்லை.

“டேய் இது உன் பாட்டி டா.. என்னடா இன்டெரெஸ்டிங்கா ஒன்னுமே இல்ல.. இப்போ எப்படி எர்த் பத்தி தெரிஞ்சுக்கறது” என்று ரியா கூறுவதை காதில் வாங்காமல் யோசனையில் இருந்தான் தேவ்.

“ரியா ஒரு சின்ன தப்பு நடந்திருச்சு..”

“புரியல”

“ஏஜ் அதிகமா கொடுத்துட்டேன்”

“என்ன ஏஜ் குடுத்த டா!!” என்று வினவ

“அட் ஏஜ் டுவெண்ட்டிக்கு பதிலா நயென்டி கொடுத்துட்டேன்” என்றான்.

“என்னது நயென்டி ஆஹ்.. அவ்வளவு வருஷம் எல்லாம் பூமில உயிரோட இருந்திருக்காங்களா” என்று அதிர்ச்சியானாள்.

“நம்ம பாட்டிங்க இருந்திருக்காங்க பாரேன்” என்றான் அவனும்.

இவர்களால் இனி ஒன்றும் பிரயோஜனம் இல்லை.. இந்த வயதில் இவர்களை வைத்து எந்த ஒரு செய்தியும் இனி கிட்டப் போவதில்லை என்று உணர்ந்து செங்கல் பெட்டியில் வயதை மாற்ற எழுந்தான் தேவ்.

அவன் தலையிலேயே தட்டிய டோரா, “பிளாஸ்டிக் ஈஸ் டேன்ஜரஸ்.. பாலித்தீன் ஈஸ் டேன்ஜரஸ்.. பிளாஸ்டிக் ஈஸ் டேன்ஜரஸ்.. யுவர் வேஸ்ட் பாட்டிஸ்.. வேஸ்ட்டிங் எர்த்ஸ் சாயில் பெர்டிலிட்டி” என்றது.

அப்போதுதான் தேவ் ரியா இருவரும் அதை கவனித்து குறிப்பெடுத்தனர்.

அதற்குள் முப்பது நிமிடம் முடிந்திருக்க அதுவே திரையை மூடியிருந்தது.

*****

Advertisement