Advertisement

                                                                                

மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்

மேகம் 12

 

“ தூரி… நேரம் ஆச்சு… இன்னும் எவ்வளவு நேரம்டி மேக்கப் பண்ணுவ… போட்ட வரைக்கும் போதும் வா…. ” என அவள் வீட்டு சோபாவில் அமர்ந்தபடி கத்திக் கொண்டிருந்தான் அவன்.

அவன் வந்து ஒரு மணி நேரத்திற்கும் மேல் இருக்கும்… இதோ ஒரு பத்து நிமிஷம்… என்று சொல்லி போனவள் பத்து பத்து நிமிடங்கள் ஆகியும் வந்த பாடில்லை…. பொறுமை இழந்தவன் எழுந்து சென்று கதவைத் தட்ட..

“ வந்தாச்சு….”  என்று கதவைத் திறக்க… இமைக்க மறந்து நின்றான்..

அவள் புடவை உடுத்த எடுத்துக்கொண்ட நேரம் தான் அத்தனையுமே தவிர ஒப்பனைக்காக அல்ல.. கரும் பச்சை வண்ண பட்டுடுத்தி எந்தவித ஒப்பனையும் இன்றி இயற்கையாக இருந்த அழகோடு எழில் ஓவியமாய் திகழ்ந்தவளைக் கண்டு மயங்கித் தான் போனான் மன்னனவன்..

“ டேய் !! என்னடா பண்ற… ” என்று மனசாட்சியின் கேள்விக்கு  

“ பார்த்தா தெரியலை சைட் அடிக்கிறேன்.. ” என அசால்ட்டாக பதில் தந்தவனைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டது அது..

யுகா…. என அவன் முன் கையை இடம் வலமாக அசைக்க… அதில் தெளிந்தவன்

“ எக்ஸ்க்யூஸ் மீ… இங்க என்னோட ஃப்ரெண்ட் மிஸ். தூரிகா இருந்தாங்களே அவங்க.. ” அவளுக்கு பின் தேடியவனை போலியாக முறைத்து தோளில் அடித்தவள்

“ அவங்கள அப்புறமா பாக்கலாம்.. இப்போ நாம போகலாமா.. ? ” என்று கேட்க.. இதழ்களில் பூத்த புன்னகையுடன் தலையசைத்து இடது கையால் அவளை முன் போகச் சொல்லி பின் தொடர்ந்தான்..

இடை வரை இருந்த கார் கூந்தலை தளர பின்னி இருந்ததால் அது அவள் அடி எடுத்து வைத்து நடக்க… தாளத்திற்கேற்றாற்போல் ஆடிக்கொண்டிருந்தது.. எப்பொழுதும் கூந்தலை விரித்துப் போட்டு அல்லது போனி டைலோ தான்  போடுவாள்… இன்று புடவையில் இருக்கிறாள் அதற்காகத்தான் பின்னல். அது கூடுதல் அழகை கொடுத்தது..

ஆனாலும் ஏதோ ஒன்று குறைவது போல…

என்ன என்ன என நியூரான்களை தட்டி எழுப்பி சிந்திக்க பூ மட்டும் மிஸ்ஸிங் விடை கிடைத்தது..

“ நீ வெளிய இரு… நான் தண்ணி குடிச்சிட்டு வரேன்.. என வேகமாக கிச்சனில் நுழைந்து பிரிஜை திறந்து தேடினான்.. உள்ளே பூ ஏதும் இருக்குமோ என !

“ உனக்கெல்லாம் காதலிக்கத் தகுதியே இல்ல டா.. ஹா ஹா ஹா ” என்ற மனசாட்சியின் குரல் கேட்டு..

“ ஏன் ஏன்…. ” என சீறினான்

“ அது அப்படித்தான்… ” என அவன் பிபியை எகிற வைத்தது. பின்னர் போனால் போகிறது என

“ பூவெல்லாம் நீயா அவளுக்கு வாங்கிக் கொடுத்து அவ அதை வெச்சத பார்த்து ரசிக்கணும்டா.. இதையெல்லாமா சொல்லிக் கொடுக்கணும் ஆண்டவா.. ” என அது புலம்ப..

அசடு வழிந்து.. “ சரி சரி கண்டுக்காத இப்போ தான் ஃபர்ஸ்ட் டைம் லவ் பண்றேன்.. அப்படித்தான் இருக்கும் போகப் போக கத்துக்கறேன்… ” என்றவன் முதுகில் அடி.. விழ..

ஆ வென திரும்பினான்.. தூரிகா நின்றிருந்தாள்..

“ என்ன இப்படி வித்தியாசமா பாக்குற.. ” என்றான் அவள் பார்வை புரியாமல்..

“ நீ இப்ப யார் கூட பேசிட்டு இருக்க ? ” எனக் கேட்டு அவனை அதிர வைத்தாள்..

‘ ஐயையோ.. யுகா இப்படி மாட்டிகிட்டயே என்ன சொல்லி சமாளிக்க என் மனசாட்சி கூட பேசிட்டு இருந்தேன்னு சொன்னா என்ன பண்ணுவா ’

“ ம்ம்.. உன்ன பைத்தியம்னு சொல்லுவா.. ”  என மனசாட்சி உள்ளிருந்து கவுண்டர் கொடுக்க..

“ ஏய் !! உன்னால தான் எல்லாமே… தயவு செஞ்சு மறுபடியும் ஆரம்பிச்சுடாத.. ” என்று அதனை அடக்கி விட்டு

“ அதெல்லாம் ஒன்னுமில்ல தூரிகா என் ஷோக்கு டயலாக் சொல்லிப் பார்த்தது இருந்தேன்.. வா போகலாம்.. ” என அவளைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தான் வேறு எதுவும் கேட்டு வைக்கும் முன்..

வரும் வழியில் கோவிலில் நிறுத்தி பூ வாங்கி கொடுக்க அவளுக்கு எதும் வித்தியாசமாகபடவில்லை..

“ தாங்க்ஸ் டா… ” என வாங்கி சூடிக் கொண்டாள்.

இறைவனை வணங்கி விட்டு வர.. சற்று நேரம் அமர்ந்து செல்லலாம் என்றவளுடன் மண்டபத்தின் ஒரு ஓரமாய் அமர்ந்தான்..

அவள் கண்களை மூடி தூணில் சாய்ந்தவாறு அமர்ந்திருக்க அவளுக்கு எதிராக அமர்ந்து அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்..

தலைக்கு குளித்து இருந்தால் அவளது சிகை அவளது சொல் கேளாமல் காற்றோடு கபடி ஆடிக் கொண்டிருக்க.. அவள் காதோரமாய் எடுத்து விட விட அது மறுபடி மறுபடி முன்னே வந்துகொண்டிருந்தது..

“ ப்ச் ” என விட்டுவிட்டாள்..

இவனுடைய கைகள் அவள் விட்ட வேலையை தொடர பரபரத்தன.. ஆனால் இருக்கும் இடம் கருதி கைகளை கோர்த்து கொண்டு அமைதியாக இருந்தான்..

கண் விழித்தவள் போகலாமா எனக் கேட்க… என்ன கேட்கிறாள் என்று தெரியாமல் தலையசைத்து எழுந்து நடந்தான்..

அவளை அழைத்துக்கொண்டு பயணப்பட்டான் அவன் இல்லம் நோக்கி…

இன்று அவன் வீட்டில் பால் காய்ச்சுகிறார்கள்… அவனுடைய அப்பாவிற்கு அரசாங்க வேலை… தற்போது பணியிட மாற்றம் வந்து அவர் வேறு மாநிலம் செல்வதால் அம்மாவை அழைத்து தன்னுடன் வைத்துக்கொள்ள புதிதாக வீடு பார்த்துள்ளான் அவனுடைய ரேடியோ ஸ்டேஷனுக்கு பக்கமே.. ஐந்து வருடங்களாக சம்பாதித்ததில் தனக்கென சேர்த்து வைத்ததை வைத்து அந்த வீட்டை வாங்கி விட்டான்.. ஆனால் எல்லோரிடமும் வாடகை என்றுதான் சொல்லியிருந்தான்.. தோழியிடம் கூட..

“ ஹேய் பெயிண்டிங் சூப்பரா பண்ணி இருக்காங்கடா… லுக்கே மாறிடுச்சு.. ” என வீட்டை சுற்றிப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்… அவளது ரசனைகளை ரசித்துக் கொண்டிருந்தான் அவன்..

இந்த வீடு அவளுக்காக அவன் வாங்கியது முழுக்க முழுக்க அவளது விருப்பங்களை கொண்டு மாற்றியமைத்து இருக்கிறான்.. ஆனால் அவனது காதல் கண் கொண்டு பார்த்தால் மட்டுமே தெரியும் !! மற்றவருக்கு இயல்பான ஒன்றுதான்..

எப்பொழுது அவள் தான் அவனுக்கு எல்லாம் என உணர்ந்தானோ அப்போதிலிருந்து அவன் செயல் சிந்தனை ஒவ்வொன்றிலும் தூரிகாவின் பிம்பம் பிரதிபலிக்கும்..

அவளிடம் இன்னும் சொல்லவில்லை.. அவளுக்கும் தன்னை பிடிக்கும் என்ற அசாத்திய நம்பிக்கை அவனிடம்… ஆனால் பிடித்தம் வேறு ! காதல் வேறு ! என்று யார் யுகாவிற்கு புரிய வைப்பது..

“ தூரிகா நல்லநேரம் முடியப்போகுது பால் காய்ச்சிட்டு அப்புறம் வந்து பார்க்கலாம்.. ” என அழைத்துச் சென்றான்..

“ என்னவோ போடா.. ஆண்டி வர்ற வரைக்கும் வெயிட் பண்ணி இருக்கலாம் இல்ல.. நீ வேற ஒரு நாள் பிக்ஸ் பண்ணி இருக்கலாம்.. ரெண்டும் இல்லாம என்னை இதுல இழுத்துவிட்டுட்ட.. ” என புலம்பிக் கொண்டே சென்றவளை ஒரு ரகசிய சிரிப்புடன் தொடர்ந்தான்.. அவனுக்கு மட்டும் தான் தெரியும்.. அவளை பால் காய்ச்ச வைக்க செய்த தில்லுமுல்லு வேலைகள்..

ட்ரெயினில் வருகிறேன் என்ற குடும்பத்தவரை தடுத்து பஸ்ஸில் டிக்கெட் போட்டு தருவதாகச் சொல்லி வேண்டுமென்றே மறந்து வேறு வழியில்லாமல் அன்றைய தினம் மாலையில் வந்து சேருமாறு அமைந்த ட்ரைனில் போட்டுக் கொடுத்து.. அதற்கு அம்மாவிடம் அர்ச்சனைகளை பெற்று தூரிகாவின் பெற்றோரை சமாளித்து கடைசியாக அவரது ஆருயிர் தோழி கம் காதலியை சமாதானம் செய்து…. இது எல்லாம் அவளுக்கு எங்கே தெரிய போகிறது ??

என்ன இருந்தாலும் நீ கிரேட் டா.. என அவனுக்கு அவனே தட்டிக்கொடுக்க உள்ளிருந்து கேவலமாக அவனை பார்த்து வைத்த மனசாட்சியின் கண்ணைக் குத்தி விட்டு திரும்பினான்..

அதுவரை அவளோடு சேர்ந்து வருவதாய் பெயர் சொல்லிக் கொண்டு தூய்மை இந்தியா திட்டத்திற்கான சைலென்ட் சப்போர்ட்டராக நிலம் கூட்டிவந்த முந்தானையை எடுத்து இடுப்பில் சொருகிக்கொண்டு.. அடுப்பிலிருந்த காய்ச்சிய பாலை எடுத்து தனக்கும் அவனுக்கும் ஊற்றிக் கொண்டிருந்தவளை.. சமையல் அறையின் சுவரில் சாய்ந்து.. ஒரு காலை ஊன்றி மார்புக்குக் குறுக்காக கைகளை கட்டிக் கொண்டு அவளை பார்த்து இருந்தான் யுகா..

இன்று போல் அல்லாமல் உரிமையாக இந்த வீட்டின் மகாலட்சுமியாய் என்று பிரவேசிக்க போகிறாளோ என எண்ணிப் பெருமூச்சு விட

“ இப்ப எதுக்குடா இந்த பெருமூச்சு… ” என்றவாறு பால் கப்பை அவனிடம் நீட்ட..

அதனை பெற்றுக் கொண்டபின் “ ப்ச் ” என்றவாறு வரவேற்பறைக்கு வர அவனை கூர்மையான பார்வையோடு பின்தொடர்ந்தாள்.. அங்கிருந்த சோபாவில் அமர்ந்து அவனை தொடர்ந்து அவளும் அமர்ந்தாள்.

“ உனக்கு ஏதாவது பிரச்சினையா யுகா.. ” என்றவளைப் புரியாது பார்த்தான் அவன்..

“ இல்ல பேசிகிட்டு இருக்க.. இருக்க வேறு ஏதோ யோசிக்க ஆரம்பிச்சுடுற.. தனியா பேச சிரிக்கிற.. அப்பப்போ எதையோ நினைத்து பெருமூச்சு விடுற.. நான் கேட்டா ஒன்னும் இல்லைன்னு சொல்ற.. ” என கவலையுடன் கேட்டவளைப் பார்த்து அவன் மனம் உருகிப் தான் போனது

உள்ளிருந்த மனசாட்சியயோ ஹா ஹா ஹா ஹா என பெருங்குரலெடுத்து சிரித்தது..

“ இப்ப எதுக்கு நீ கெக்கபிக்கன்னு சிரிக்குற ? ” என அதனிடம் பாய

“ இல்ல உன்ன லூசுன்னு சொல்லாம சொல்ரா.. நீ என்னமோ அதை பார்த்து பீல் பண்ணிட்டு இருக்க அதான் எனக்கு சிப்பு சிப்பா வருது.. ” என மேலும் சிரிக்க

“ எனக்கு எதிரி வேற எங்கேயும் இல்லை.. கூடவே இருக்கிற நீ தான் என்னோட முதல் எதிரி.. முதல்ல உன்ன போடனும் ” என அதன் தலையை தட்டி விட்டு அவளிடம் திரும்ப.. அவள் வேற்று கிரகவாசியைப் போல பார்த்து வைக்க. இவன் நொந்தே போனான்..

“ இப்ப என்னடி ?? ”

“ நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம என்னடா யோசிச்சுட்டு இருக்க.. ”

“ ம்ம்.. உன்கிட்ட சொல்லலாமா வேண்டாமானு யோசிச்சேன்.. சொன்னா நீ எப்படி எடுத்துக்குவன்னு.. ” எனத் தயங்க..

“ பரவாயில்ல சொல்லு.. ”

“ ஷ்யூர்…. ”

“ ஷ்யூர் சொல்லு.. ” என்ன சொல்லப் போகிறானோ என்ற பதட்டத்தை முகத்தில் காட்டாது இருக்க பிரம்மபிரயத்தனம் செய்துவிட்டாள்..

“ எல்லாம் உன் சகவாசத்தால தான் டி.. ஏன்னா நீயே ஒரு லூசு பாரு.. அதான் உன்னோட சேர்ந்து நானும் இப்படி ஆயிட்டேன் ” என எழுந்து ஓட..

“ டேய் !!!! நில்லுடா.. எரும.. ” என துரத்திச் சென்றாள்..

அவன் அங்கிருந்த படுக்கை அறையினுள் புகுந்திட இவள் பிரேக் அடித்தாற்போல் நின்று

“ வெளிய வந்துடாத கொன்னுடுவென்.. என மிரட்டி விட்டு வரவேற்பறைக்கு வந்தாள்..

அழைப்பு மணி அழைக்க எழுந்து சென்று கதவை திறந்தாள்.. யுகாவின் நண்பன் தான்..

அவனுடைய ரூமில் இருந்த யுகாவின் பொருட்களை எல்லாம் ஏற்றி வந்திருந்தான்.. இருவருக்கும் ஏற்கனவே பரிச்சயம் உண்டு என்பதால்

“ ஹாய் பிரபா.. உள்ள வாங்க.. ” என்றாள்

“ ஹாய் தூரிகா.. திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணி கொண்டு வந்தாச்சு… அவன் எங்க ?? ”

“ ரூம்ல இருக்கான்.. ஒரு நிமிஷம்.. ” என்றவள், “ யுகா.. கொஞ்சம் வெளிய வாயேன் ”  என்றாள்..

“ வந்தா நீ அடிக்கமாட்டினு சத்தியம் பண்ணு.. அப்பறம் வரேன் ” என உள்ளிருந்து குரல் கொடுக்க..

அவளுடன் வந்த பிரபாவை பார்த்து அசடு வழிந்தவள்

‘ அசிங்கப்படுத்துறானே !! ’ என எண்ணிக்கொண்டு

“ பிரபா வந்திருக்காரு திங்க்ஸ் எல்லாம் எடுத்து வைக்கணும் வெளிய வா.. ” என்றாள் பல்லை கடித்துக்கொண்டு.

படாரென கதவை திறந்து வெளியே வந்தவன் பிரபாவை புன்னகையுடன் வரவேற்று “ வாடா திங்க்ஸ கொண்டு வரலாம்.. ” என இழுத்துச் சென்றான்..

“ ஏன்டா ஆபிஸ்க்கு லீவு போட்டு ரெண்டு பேரும் விளையாடிட்டா இருக்கீங்க.. ”

ஒரு அசட்டுச் சிரிப்பை உதிர்த்து எதுவும் கூறாமல் பொருட்களை கொண்டு சென்றான்.

அனைத்தையும் வைத்த பிறகு பிரபா விடைபெற “ நா லஞ்ச் வாங்கிட்டு வரேன்.. ” என நழுவி விட்டான்.

அவளிடம் இருந்து தப்பிக்கவே அவனது இந்த வேகம் என்பதை உணர்ந்தவள் சிரிப்புடனே பொருட்களைப் பிரித்து எடுத்து வைத்த தொடங்கினாள்..

சாப்பாட்டுடன் வீடு திரும்பியவன் கதவைத் திறக்க முடியவில்லை..

கதவின் தாழ்ப்பாள் போடவில்லை.. ஒருவழியாய் மொத்த பலத்தையும் கொடுத்து சற்றே திறந்து இருந்த இடைவெளியை பயன்படுத்தி உள்ளே வந்தவன் மறைத்து நின்றான்..

வீட்டிற்குள் ஒரு ஒற்றையடிப் பாதை மட்டுமே நடப்பதற்காக விட்டு வைத்து மற்ற இடங்களில் எல்லாம் பொருட்களை பிரித்து போட்டிருந்தாள்..

“ இவள.. ” என்றவன் பார்வையை சுழற்ற ஒரு ஓரமாக கன்னத்தில் கைவைத்து எதிரே உள்ள பொருட்களை வெறித்தபடி அமர்ந்திருந்தாள்..

தட்டுத்தடுமாறி கிச்சனை அடைந்து வாங்கிவந்த உணவை வைத்துவிட்டு அவளிடம் வந்தான்..

“ என்னது இது ?? ”

“ அது உனக்கு அரேஞ்ச் பண்ண கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாம்னு…. ” என இழுத்தாள்

“ எது நீ பண்ணி இருக்கிறது எனக்கு ஹெல்ப்பா… ”

அவள் எதுவும் பேசவில்லை..

“ முன்ன பின்ன இந்த வேலை எல்லாம் செஞ்சு இருக்கியாடி… ”

“ ம்ஹும்.. ”

“ அப்புறம் எதுக்கு உனக்கு இந்த வேலை.. எனக்கும் எதுவும் எடுத்து வைக்கத் தெரியாது அம்மா வரட்டும்னு இருந்தேன்.. நீ தான் வரிஞ்சு கட்டிக்கிட்டு களத்துல இறங்கினியே… நீயே செய்ய வேண்டியது தானே.. ”

“ ப்ச் போடா… நான் என்னவோ இதெல்லாம் ஈசின்னு நெனச்சென்.. ” என அவள் சிணுங்க..

அவன் காதல் கொண்ட மனமும் சிணுங்கத்தான் செய்தது..

“ சரி சாப்பிடலாமா ? இது எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்… ”

சாப்பிட்டுவிட்டு அவன் சோபாவில் தஞ்சமடைய இவளுக்குத்தான் மனம் கேட்கவில்லை.. தன் வீட்டில்  பொருட்கள் எங்கெங்கு வைத்திருக்கிறது என படம் ஓட்டிப் பார்த்தாள்..

“ யு கேன் டூ இட் தூரிகா… ” என தனக்குத் தானே சொல்லிக்கொண்டு எடுத்து வைக்க ஆரம்பித்தாள்..

நேற்று இரவு வெகுநேரம் கழித்தே வந்தவன் ஒரு மூன்று மணி நேரம் தான் உறங்கி இருப்பான்.. இப்போது புலன்கள் எனக்கு கொஞ்சம் ஓய்வு கொடேன் என கெஞ்ச சோபாவிலேயே உறங்கி விட்டான்.

“ யுகா கொஞ்சம் இத பிடியேன்… ” என்றவளுக்கு பதில் கிடைக்காது போக திரும்பி பார்த்தாள்.. அவன் தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருப்பவனைப் பார்க்க பாவமாக இருந்தது..

ஒரு குஷனை எடுத்து தலைக்கு கொடுத்தவள் அவன் நெற்றியில் பூத்திருந்த வியர்வைப் பூக்களைக் கண்டு பேன் ஓட விட்டு அவள் வேலையைப் பார்க்கச் சென்றாள்..

மாலையில் எழுந்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை… காலையில் அவள் பரப்பி வைத்திருந்த கடைகளெல்லாம் காணாமல் போயிருந்தன.. ஒரு சில கனமான பொருட்கள் மட்டுமே இருந்தன.. தூரிகாவையும் காணவில்லை..

கிட்செனில் இருந்து சத்தம் வர எழுந்து சென்றான்..

இவன் வரவை உணர்ந்தவள் “ வா யுகா நல்ல தூக்கமா… என்ன ஷோ டைம் மாத்து மாத்துன்னு சொல்ற… மொதல்ல நீ மாத்து.. நேரம் கெட்ட நேரத்துல தூங்கி எழுந்தா இப்படி தான் இருக்கும்.. ஒரு அக்க….” என பேசிக் கொண்டே சென்றவளை தர தரவென பிடித்து இழுத்து வந்தான்..

“ என்னடி இதெல்லாம் ???? ” என அங்கே ஒழுங்காக வைக்கப் பட்டிருந்த பொருட்களை பார்த்துக் கேட்டான் அடக்கப் பட்ட கோவத்துடன்..

“ என்ன… ” இவள் கூலாக கேட்டு வைக்க.. அவன் பொறுமை பறந்திருந்தது..

“ உன்ன யாரு இந்த வேலையெல்லாம் செய்ய சொன்னா.. நான் கேட்டேனா உன்னை இந்த வேலையை எல்லாம் செய்ய சொல்லி… வந்தா வந்த வேலையை மட்டும் பார்க்க வேண்டியது தானே !!.. ” என்றவனுக்கு மனம் முழுக்க குற்ற உணர்ச்சி.. இப்படி அவளை வேலை செய்ய வைத்துவிட்டோமே என்று.. அவன் மீதுள்ள கோவத்தை தான் அவளிடம் கொட்டிக் கொண்டிருந்தான்..

அவனுக்குத் தெரியும் தூரிகாவைப் பற்றி.. வீட்டிற்கு ஒரே பெண்.. அதிக செல்லம் கொடுத்து வளர்க்கப் பட்டவள்.. அவளது வீட்டில் சிறு துரும்பைக் கூட அவள் நகர்த்தியது இல்லை.. அதற்கு எந்த அவசியமும் இருந்ததில்லை.. அப்படி இருந்தவள் இப்படி வேலை செய்தது அவ்வளவு உவப்பானதாக இல்லை அது அவனுக்கே ஆனாலும் கூட..

அந்த கொதிப்பில் என்ன பேசுகிறோம் ஏது பேசுகிறோம் என்று தெரியாமல் பேசிவிட அதனை சிறிது நேரம் கழித்தே உணர்ந்தவனுக்கு ஹையோ என்றானது..

தவிப்புடன் அவளைப் பார்க்க கண்கள் கலங்கி இருந்தது.. அவனை ஒரு வெற்றுப் பார்வை பார்த்தவள் சோபாவில் கிடந்த அவளது அலைபேசியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள்.. அவன் சுதாரிப்பதற்குள் காம்பௌண்டு தான்டி இருந்தாள்..

எத்தனை இதமாக இனிமையாக ஆரம்பித்த இந்த நாள் இப்படியா முடிய வேண்டும் என்று இருந்தது அவனுக்கு.. அவனையே நொந்து கொண்டவன் அவள் வரும் போது பர்ஸ் எடுத்து வராதது நினைவிற்கு வர அவசரமாக வீட்டைப் பூட்டிக் கொண்டு அவனது பல்சரைக் கிளப்பினான்..

விழிகளில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டே நடந்தவளைக் கண்டு இவனுக்கு வலித்தது…

“ தூரிகா.. ப்ளீஸ்.. சாரி.. நான் சொல்றத ஒரு நிமிஷம் கேளேன்.. ப்ளீஸ்… ” என அவன் கெஞ்சிக் கொண்டே வர கண்டுகொள்ளாமல் நடந்தாள்..

“ தூரிகா….. ” என அவன் கை பிடித்து நிறுத்த..

“ ஹேய் !!!! யார் நீ… கையை விடு மொதல்ல… ” வார்த்தைகளை கடிந்து துப்பி விட்டு அவள் முன்னேறினாள்..

‘ உனக்கு இது தேவ தான்… ’ என அவனது மனசாட்சியும் படுத்த தடுமாறித்தான் போனான்..

“ வண்டியில ஏறு.. நான் தானே உன்னை கூப்பிட்டு வந்தேன்.. நானே கொண்டு போய் விடுறேன்.. ” என்றான் முகத்தை இறுக்கமாக வைத்து..

“ உன்னைக் கேட்டேனா… என்னைக் கொண்டு போய் விட சொல்லி… உன் வேலையை மட்டும் பாரு.. ” அவன் வார்த்தைகளைக் கொண்டே திருப்பி அடித்தாள்.. அதற்காக அவனுக்கு கோவமோ வருத்தமோ எல்லாம் இல்லை..  வந்தால் தானே அதிசயம் ! காதலில் இதெல்லாம் சகஜமப்பா !! மாறாக இதழ்களில் புன்னகை..

அதைக் கண்டு அவள் மேலும் என்ன செய்திருப்பாளோ.. இவன் வேகமாக வண்டியை ஓரம் கட்டி விட்டு எதிரே இருந்த கோவிலுக்குள் அவளை இழுத்துச் சென்றான்..

கோவிலுக்குள் வந்துவிட்டால் மற்ற எல்லாமே அவளுக்கு இரண்டாம் பட்சம் தான்.. தன் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வந்து எதிரே உள்ள இறைவனிடத்து மட்டுமே கருத்தினை வைப்பாள்..

அதை அறிந்து தான் அழைத்து வந்திருந்தான்.. அதுவும் வீண் போகவில்லை.. அவன் மீது இருந்த கோவமெல்லாம் வடிந்து இருந்தது.. ஆனால் அவன் முகம் மட்டும் பார்க்கவில்லை..

காலையில் அவர்கள் வந்திருந்த அதே கோவில்…! அதே மண்டபம் ! அதே தூண் !… அதே போல் எதிரெதிரே அமர்ந்திருந்தனர்.. ஆனால் அப்போதைய இதம் மட்டும் இல்லை..

‘ உன் வாயில தான் சனி பகவான் சாட் பூட் த்ரி விளையாடுராறு யுகா… ’ என தன்னையே நொந்து கொண்டான்..

இதற்கு முன்பும் இருவருக்கும் பல சண்டைகள் வந்து இருக்கின்றது.. ஆனால் அடுத்த நொடியே அதை மறந்துவிட்டு இயல்பாகி விடுவர்.. இன்று போல் அவளை அவன் அழ வைத்ததெல்லாம் இல்லை.. அதுவே அவனுக்கு மனதைப் பிசைந்தது..

“ தூரிகா… சாரிடி… ”

எந்தவொரு அசைவும் இல்லை அவளிடம்..

“ நான் சொன்னது தப்பு தான்.. ஆனா அது கோவத்துல சொன்னது… உன்னை வேலை செய்ய வெச்சுட்டமேன்னு என் மேல வந்த கோவம்… ஆனா அதை அசட்டுத் தனமா உன் மேல காமிச்சுட்டேன்.. ”

அவனுடைய இந்த விளக்கம் எல்லாம் அவளுக்கு தேவையானதாக இருக்கவில்லை.. அவனைப் பற்றி அவளை விட வேறு யார் அறிந்திட முடியும்.. ஏதோ ஒரு கோவத்தில் எப்படி தன்னைப் பார்த்து அப்படிக் கேற்கலாம் என கிளம்பி வந்துவிட்டாள்.. ஆனால் சில மணித்துளிகளிலேயே அது அவள் மேல் அவன் கொண்ட அக்கறையின் வெளிப்பாடு எனப் புரிந்தது.. அந்த நொடியே மாயமாய் மறைந்து இருந்தது.. கோவமெல்லாம்..

விழி திறக்காமல் அமர்ந்திருந்தவளைப் பார்த்து ஓய்ந்து போனான்..

“ போலாம்… ” என எழுந்துவிட்டான்..

‘ என்ன ஏதோ பேசிட்டு இருந்தான்.. திடீர்னு போலாம்குறான்.. ’ என அவள் விழி திறந்து பார்க்க அவன் கோவில் வாயிலை நெருங்கி இருந்தான்..

‘ விட்டுட்டு போயிடப் போறான் போடிஈஈ…..’ வேகமாக அவனை நோக்கி வந்தாள்..

அவன் பின்னே ஓடி வந்தவளைக் கண்டு ‘ உன்னை விட்டு மாமன் எங்கடி போயிடப் போறேன்… ’ என குஷி மோடிற்கு தாவி பல்சரைக் கிளப்பினான்..

அவளை வீடு வரை கொண்டு வந்து விட்டவன் அப்படியே வண்டியைத் திருப்ப

“ இப்போ நீ உள்ள வந்திட்டு போகல… ” ஆள்காட்டி விரலை காண்பித்து எச்சரிக்கும் விதமாய்.

நிதானமாக “ வரலனா என்னடி பண்ணுவ…. ” என்றான் இதழில் உறைந்த புன்னகையுடன்..

அவன் இப்படி திடீரென கேட்பானென அவள் கண்டாளா என்ன ?? அதையே சொல்லவும் செய்தான்..

“ இப்படி கேட்டா.. அதெல்லாம் உட்கார்ந்து யோசிக்கணும்.. ” என்றதும்

“ ஹா ஹா… ” என சிரிக்கத் தொடங்கினான்..

அவனது சிரிப்பும் அவளையும் தொற்றிக் கொள்ள இருவரும் சேர்ந்தே உள்ளே சென்றனர்..

“ ஒரு அஞ்சு நிமிஷம்… டிரஸ் சேஞ் பண்ணிட்டு வந்து காபி போடுறேன்.. ” என உள்ளே போனாள்..

கையில் கிடைத்த ஒரு குர்த்தியை எடுத்து அணிந்து கொண்டு வெளியே வர காபியுடன் காத்திருந்தான்..

“ ஹேய் !!! நான் வந்து போட்டு இருப்பேனே… ”

‘ நீ போடுவ அதை யார் குடிக்க.. ’ வெளியே சொல்லவில்லை..

“ அதனாலென்ன…. ” என தொலைக் காட்சியை இயக்கி அமர்ந்தான்.. அவன் வீட்டில் எப்படி இருப்பானோ இங்கும் அப்படியே தான் இருப்பான்.. அது என்னவோ தூரிகாவிடம் அவன் கலியுகத்தையனாகவே இருப்பான்… அது தான் அவர்களது நட்பிற்கு அழகான அடித்தளம்..

காபியை கையில் வைத்து கனவு கண்டு கொண்டிருந்தவனின் தலையில் தட்டியவள் காபியை கண் காட்ட..

“ ம்ம்ம்… ” என பருகத் தொடங்கினான்..

“ அங்கிள் ஆன்டி எப்போ வராங்க… ”

“ 9 க்கு ட்ரைன் வந்திடும்.. ”

“ ஒஹ் சரி… ”

அவன் விடைபெற்றுக் கிளம்ப… “ அம்மா அப்பா வரவும் பார்த்துட்டே போயேன்.. ” என்றாள் தூரிகா.

“ இல்ல நேரமாகிடும்… இந்த வீகென்ட் இங்க கூட்டிட்டு வரேன் அப்பா அம்மாவையும்.. ”

கதவு வரை வந்தவன்…

“ சாரி தூரி… ” என மன்னிப்பு கோரினான்.. அவன் மனம் ஆற மறுத்தது இப்படி பேசி அவளைக் காயப்படுத்தி விட்டோமே என்று !! ஆனால் அப்போது அறிந்திருக்கவில்லை பின்னாளில் அவன் அவளிடம் பேசாது கொல்லப் போகிறான் என..

“ டேய் மடையா உன்னைப் பத்தி எனக்குத் தெரியும்… கிளம்பு கிளம்பு… ” ஆனால் உண்மையில் அவனை அறியவில்லை… அதை அவளும் அறியவில்லை…

“ தாங்க்ஸ் டி…. ”

அத்தனை நேரம் அழுத்திக் கொண்டிருந்த பாரம் கரைந்து போயிருந்தது… அங்கிருந்து கிளம்பிச் சென்றிருந்தான் அவன் புது இல்லம் நோக்கி.

 

மேகம் கடக்கும்…                 

                    

                              

Advertisement