Advertisement

என் வாழ்க்கையில இப்படியெல்லாம் ஒரு டிராஜிடி நடக்கும்ன்னு நான் எதிர்ப்பார்க்கவே இல்லை சிமி. எல்லாரையும் மாதிரியும் ஒரு சாதாரண வாழ்க்கை தான் வாழ ஆசைப்பட்டேன்”

இப்பவும் நாம அப்படித்தானே இருக்கோம்”

நாம இப்ப மட்டுமில்லை எப்பவும் அப்படித்தான் இருப்போம். பணம் வந்திடுச்சுன்னு நமக்கு என்னைக்குமே கர்வமோ, அகங்காரமோ, திமிரோ, மண்டைக்கனம் வரவேக் கூடாதுன்னு நான் கடவுளை வேண்டிக்கறேன்”

நிச்சயமா நமக்கு அது வராதுங்க”

எனக்கும் தெரியுது ஆனாலும் சொல்றேன். இந்த ஒரு வருஷத்துக்குள்ள எவ்வளவு நடந்து போச்சுல்ல”

ஹ்ம்ம்”

உனக்கு என் மேல இன்னும் கோபம் இருக்கு தானே”

கோபம் இல்லை வருத்தம் தான்”

லதா சித்தி மேலே நான் கம்பிளைன்ட் கொடுக்கலைன்னு தானே”

உங்களுக்கு சித்தின்னு யாருமில்லை”

சரி அவங்க மேல நான் எந்தவித நடவடிக்கையும் எடுக்கலை அதானே”

ஹ்ம்ம்… ஏன்?? ஏன் அப்படி செஞ்சீங்க?? எனக்கு எவ்வளவு யோசிச்சும் பதில் கிடைக்கலை”

எதுக்கு யோசிச்சுட்டு என்கிட்ட கேட்டிருக்கலாம்ல”

நீங்க காரணமில்லாம செய்ய மாட்டீங்கன்னு தெரியும். அதனால தான் இப்போவரைக்கும் உங்களை நான் எதுவும் கேட்கலை. நீங்களா இப்போ இந்த பேச்சை எடுக்கலைன்னா நான் கடைசிவரை கேட்டிருக்கவே மாட்டேன்” என்றாள் அவள்.

தன் மனைவியை குறித்து அவனுக்கு பெருமிதம். தன் வாழ்நாள் முழுமையக்குமான சொத்து அவள் தான் என்பதை உணர்ந்தான்.

என்ன பார்க்கறீங்க??”

எனக்கு நீ தான் சொத்துன்னு நினைச்சேன்”

ஆஹான்”

என்ன கிண்டல் பண்றியா?? என்ன வேணா பண்ணிக்கோ ஆனா அதான் உண்மை. காசு பணமெல்லாம் வரும் போகும். மனைவியோட அன்பு கடைசி வரைக்கும் கூட வரும் தானே”

அப்போ நீ என் சொத்துன்னு நான் சொன்னதுல என்ன தப்பிருக்கு”

என்ன பதில் பேச மாட்டேங்கற”

என்ன சொல்லன்னு எனக்கு தெரியலை”

மாமா அந்த கடையை பத்தி சொன்னதும் நான் அதை லீஸ்க்கு எடுக்கலாம்ன்னு சொன்னதுல உனக்கொண்ணும் வருத்தமில்லையே”

இல்லை சரியா தானே சொல்லியிருக்கீங்க”

சரி இப்போ நானே கேட்கறேன். அவங்களை ஏன் விட்டீங்க”

அவங்களுக்கு சொத்து ஆசையை தவிர பெரிசா வேற எந்த எண்ணமும் இல்லை சிமி”

அதெப்படி சொல்றீங்க, அத்தை தான் சொன்னாங்கல்ல அவளுக்கு மாமா மேல ஒரு நோக்கமிருந்துச்சுன்னு”

அம்மா சொன்னதை நீ சரியா கவனிக்கலை. அப்பாவும் அம்மாவும் முன்னாடியே விரும்பி இருக்காங்க. அப்பா அம்மாவை பார்க்க போகும் போது இவங்களை அங்க பார்த்திருக்காங்க. அப்போ தான் கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டிருக்காங்க”

உனக்கு புரியுது தானே நான் என்ன சொல்ல வர்றேன். லதா சித்தி அவங்களா ஒரு கற்பனையை வளர்த்துக்கிட்டாங்க. எங்கப்பா அம்மாவோட பேரை சொன்னதும் அவங்களுக்கு தூக்கிவாரி போட்டிருக்கு. அதுக்கு அப்புறம் அப்பாவும் அம்மாவும் சேர்ந்ததும் அவளுக்குள்ள ஒரு பொறாமை எழுந்திருக்கு”

அப்பா நல்ல வசதியானவரு, ராஜ பரம்பரை இதெல்லாம் சேர்ந்து அவங்களுக்கு மேலே மேலே பொறாமை அதிகம் ஆகியிருக்கு. பாட்டி செத்த பிறகு தான் அம்மாவோட சொந்தமெல்லாம் நம்ம வீட்டுக்கு வந்து போக ஆரம்பிச்சிருக்காங்க. அந்த நேரத்துல தான் சித்தி எப்படியோ இந்த புதையல் விஷயத்தை தெரிஞ்சிருக்கணும்”

எங்கயோ எதோ இடிக்குதுங்க. இதெல்லாம் அன்னைக்கு அத்தை சொன்னது தானே. உங்க சித்தி மட்டுமில்லை சித்தப்பாவும் இந்த சொத்தை அடைய நினைச்சிருக்கார். அதான் எப்படின்னு யோசிக்கறேன்”

ஹ்ம்ம் நீ சொல்றது சரி தான். சித்திக்கு அம்மா மேல பொறாமை ஒரு பக்கம் தானும் பெரிய பணக்காரியா வரணும்ன்னு எண்ணத்துல அதை அடைய நினைச்சிருக்கலாம். ஆனா அவங்களை கல்யாணம் பண்ணிக்கிட்ட சித்தப்பாக்கும் அந்த எண்ணம் வந்திருக்கும்ன்னா ஒரு வேளை அவருக்கும் இந்த புதையல் பத்தி தெரிஞ்சிருக்கலாம்”

எப்படி??”

அப்பா ஒருத்தரா இந்த புதையலை எடுத்திருக்க மாட்டார்ன்னு எனக்கு தோணுது. அவர் எங்க இருந்தோ எடுத்திட்டு வந்து இங்க அதை மறைச்சு வைச்சிருக்கலாம். அவர் தனியா செஞ்சிருக்க வாய்ப்பில்லை, கூட ஒரு ஆளை சேர்த்து இருக்கலாம். அது லதா சித்தியோட கணவரா இருக்கலாம் இல்லை அவருக்கு நெருங்கிய உறவா இருக்கலாம்”

எது எப்படியானாலும் புதையலை காப்பாத்தி அரசாங்கத்துக்கிட்ட நாம சேர்த்தாச்சு. இப்போ தான் நிம்மதியே எனக்கு. அவங்களுக்கு தண்டனையும் வாங்கி கொடுத்திருக்கலாம் அவங்க வேற எதுவும் பண்ணலைன்னாலும் வினயா வாழ்க்கையில விளையாடினது தப்பு தானே”

பெரிய தப்பு தான்”

நீங்க அவங்களை சும்மா விட்டிருக்கக்கூடாது. சிமி ப்ளீஸ் நான் சொல்றதை புரிஞ்சுக்கோ, அவங்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்குறதுல என்ன நடக்கப் போகுதுன்னு நீ நினைக்கிறே. அவங்க திருந்திடுவாங்கன்னா, நிச்சயம் திருந்த மாட்டாங்க”

நம்ம மேல இன்னமும் வெறுப்பு தான் அதிகமாகும். நாளைக்கு வினயா வாழ்க்கையில ஒரு நல்லது நடந்தாலும் இவங்க வந்து பிரச்சனை பண்ணுவாங்க”

அதெல்லாம் யோசிச்சு தான் நான் அவங்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கணும்ன்னு நினைச்சேன்”

அவங்க பார்க்கணும் சிமி. நம்ம வினயா நல்லா வாழுறதை பார்க்கணும், அந்த அபிஷேக் தான் பண்ண தப்பை உணரணும்” என்று சொன்னவனின் முகம் ஒரு நொடி குரூரமாகி பின் இயல்பானது.

சரி அவங்க எப்படியோ போகட்டும் விடுங்க எனக்கு ஒரு விஷயம் தெரியணும். மாமா எழுதின குறிப்புகளை நானும் பல தடவை படிச்சிருக்கேன். ஆனா எனக்கு அந்த புதையல் எங்க இருக்குன்னு ஒரு சின்ன கெஸ் கூட வரலை நீங்க எப்படி கண்டுப்பிடிச்சீங்க??”

இப்போ தான் அதை என்கிட்ட கேட்கணும்ன்னு உனக்கு தோணிச்சா…”

இல்லை அப்போவே கேட்டிருப்பேன். அந்த சூழ்நிலையில இருந்த பிரச்சனையில வேற எதுவும் எனக்கு தோணவே இல்லை. வினயா பிரச்சனை மட்டும் தான் ஓடிட்டு இருந்துச்சு”

என்னால தான் வினயா வாழ்க்கை கெட்டுப்போச்சோன்னு எனக்கு இப்போ வரை குற்றவுணர்ச்சியா இருக்கு”

ஏங்க இப்படி யோசிச்சு பாருங்க. அபிஷேக்கை கட்டிக்கிட்டு அவளோட வாழ்க்கை எப்படி இருந்திருக்குமோ நீங்க அவளை அவன்கிட்ட இருந்து காப்பாத்திட்டதா கூட நினைச்சுக்கலாமே”

உண்மை தான் அந்த அபிஷேக் மாறின மாதிரி பேசுனதை கேட்டப்போ ஒரு நிமிஷம் நானும் கூட அவனை நம்பிட்டேன். அவன் மாறலைன்னு லதா சித்திக்கிட்ட அவன் சைகை காட்டினப்பவே தெரிஞ்சு போச்சு எனக்கு”

அதனால தான் நீ கேட்டப்போ பார்க்கலாம்ன்னு சொன்னேன். நல்ல வேளை வினயா அவனை நம்பிடுவாளோன்னு நினைச்சேன் அவ இப்போ வரை அவனை நம்பலை. அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுக்கணும் சிமி”

கண்டிப்பா அவளுக்கு நல்ல வாழ்க்கை அமையும் நீங்க வேணா பாருங்க. நீங்க யாருக்கும் எந்த கெட்டதும் செஞ்சதில்லை உங்களோட அந்த மனசுக்காகவே அவளைத் தேடி வந்து கட்டிப்பாங்க பாருங்க” என்று அவள் சொன்னதிற்கு ததாஸ்து சொல்லியிருப்பார்கள் போலும்.

ஹ்ம்ம் நீ சொன்னது மாதிரியே நடக்கட்டும்” என்றான் உதிரன்.

சரி ப்ளீஸ் எனக்கு எப்படி அந்த புதையலை கண்டுப்பிடிச்சீங்கன்னு சொல்லுங்க”

நீ சொன்ன குறிப்பை வைச்சு திரும்ப திரும்ப யோசிச்சு பார்த்தேன். எனக்கென்னமோ அதை வேற எங்கயோ வைச்சிருக்க மாட்டாங்கன்னு தோணிச்சு”

அப்போ அந்த குறிப்புல சொன்னது பொய்யா??”

இல்லை அந்த குறிப்பு உண்மை தான்” என்றவன் “சிமி அன்னைக்கு நீ மேல ரூம்ல இருந்தல்ல அப்போ கதவை சாத்தினது யாரு”

ஏங்க அதுவாங்க முக்கியம் நீங்க இதை முதல்ல சொல்லுங்க”

இல்லை அம்மா மாதிரியே இருக்கற இன்னொரு ஆள்ன்னு நீ ஒரு நாள் என்கிட்ட சொன்னே. அங்க இருந்து தான் நான் யோசிக்கவே ஆரம்பிச்சேன். வீட்டில பழைய ஆல்பம் எல்லாம் இருந்துச்சு. அதுல நான் லதா சித்தியை பார்த்திருக்கேன்”

நீ முதல்ல சொன்னப்போ எனக்கு அவங்க நினைவுக்கு வரவேயில்லை. தற்செயலா ஒரு நாள் மேல மத்த எல்லாரோட ரூம் சாவியை எடுக்க அம்மா பீரோவை திறந்தப்போ தான் அந்த ஆல்பத்தை மறுபடியும் பார்த்தேன். அங்க இருந்து தான் எனக்கு உறுதியாச்சு. சரி நீ சொல்லு மேலே ரூம்ல என்ன நடந்துச்சு அன்னைக்கு”

அன்னைக்கு நீங்க கீழ போனப்போ இந்த ரூம்ல என்ன தான் இருக்குன்னு தெரிஞ்சுக்கத்தான் நான் கதவை பூட்டினேன். லைட்டை ஆப் பண்ணிட்டு உள் ரூம் சன்னல் கதவை திறக்கலாம்ன்னு போனப்போ தான் அங்க இருந்த போட்டோவை பார்த்து எனக்கு அதிர்ச்சி ஆச்சரியம் ஆகிப்போச்சு”

அந்த ரூம்ல இருந்த பெரிய பாட்டியோட போட்டோ பார்த்தா ஏன்??”

அவங்க அவங்க தான் என் கனவுல வர்றவங்க. அந்த போட்டோவுல அப்படியொரு சாந்தமா இருந்தாங்க, ஆனா நான் கனவுல அவங்களை பார்த்த ஒவ்வொரு சமயமும் அப்படியொரு கோபம், ஆக்ரோஷம்ன்னு அவங்களை பார்க்கவே எனக்கு பயமா இருந்துச்சு”

இந்த சொத்து உங்க யாருக்கும் கிடைக்கக்கூடாது அதோட ரகசியம் என்னோட போகட்டும்ன்னு சொல்லி அவங்க நெருப்புல குதிச்சிடறாங்க. அன்னைக்கு கனவு கண்டு நான் எழுந்து உட்காரும் போது நீங்க தான் என் கையை பிடிச்சு சமாதானம் செஞ்சீங்க”

எனக்கு வந்த கனவு பொய்யில்லைன்னு அந்த நிமிஷம் எனக்கு தெரிஞ்சது. அப்போ தான் யாரோ ரூம்குள்ள வர்ற மாதிரி சத்தம் கேட்டுது. கதவை பூட்டினது நான் தான் சோ நீங்க வர்றதுக்கு வாய்ப்பில்லை. நான் எதை எதிர்ப்பார்த்தேனோ அது நடந்துச்சு”

நான் கதவுகிட்ட ஒளிஞ்சுக்கிட்டேன். அந்த அலமாரிக்கு பின்னாடி இருந்து தான் சத்தம் வந்துச்சு. அவங்க அலமாரியை நகர்த்துற சத்தம் தெளிவா கேட்டுது. அப்புறம் அந்த ஜாடியை அப்படியே தூக்கி வைச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன்”

அன்னைக்கு நீ அம்மா தான் கதவை திறந்தாங்கன்னு சொன்னேல்ல”

அதான் அத்தை இல்லைன்னு அப்புறம் ஒரு நாள் உங்ககிட்ட சொன்னேனே”

ஒரு வயசான ஒரு லேடியால அவ்வளவு வெயிட் தூக்க முடியுமா என்ன. ஏன்னா அந்த ஜாடியை நான் தூக்கியிருக்கேன் அது அவ்வளவு கனமா இருந்துச்சு தெரியுமா” என்றான் உதிரன் இடையிட்டு.

Advertisement