Advertisement

33

“அம்மா இவங்க யாருன்னு நீங்களே உங்க வாயால சொல்லுங்கம்மா” என்றான் உதிரன்.

“அவ என்ன சொல்றது நான் சொல்றேன்டா” என்றார் லதா.

“இவ என் கூட பிறந்து என் வாழ்க்கையை கெடுத்தவ”

“லதா” என்று கத்தினார் சீதா.

“சீய் நீ வாயை மூடு”

“அதைத்தான் நானும் சொல்றேன் நீ வாயை மூடு. நீ கெட்ட எண்ணம் பிடிச்சவன்னு தெரியும் ஆனா எந்தளவுக்குன்னு இப்போ தான்டி புரியுது. உனக்கு ஏன் இந்த மாதிரி எண்ணமெல்லாம் வந்துச்சு”

“என்னை இப்படி ஆக்குன பெருமை உன்னையும் உன் புருஷனையும் தான் சேரும்”

“போதும் நிறுத்து அவரைப்பத்தி நீ பேசுற வேலை வைச்சுக்காத” என்று சீதா சொல்ல “நான் அப்படித்தான் பேசுவேன். அவன் ஒரு அயோக்கியன் நீ ஒரு மோசக்காரி” என்றார் லதா.

“கொஞ்சம் நிறுத்தறீங்களா விட்டா பேசிட்டே போறீங்க. உங்களைவிட யாரும் யாரையும் மோசம் பண்ணிடலை” என்றாள் சினமிகா.

“ஏய் என்ன திமிரா… நீ எப்படிடி என்னை பேசலாம்”

“உங்ககிட்ட பேசி நேரத்தை வேஸ்ட் பண்ண விரும்பலை. ஏங்க அடுத்து என்னவோ அதை செஞ்சிடுங்க” என்றாள் சினமிகா உதிரனிடம்.

“சொல்லிட்டேன் சிமி இன்னும் கொஞ்ச நேரத்துல சித்தப்பா போலீஸ் கூட்டிட்டு வந்திடுவாங்க”

“என்ன போலீஸ்ன்னா நாங்க பயந்திடுவோமா. என்ன தப்பு பண்ணோம், எதை உன்னால நிரூபிக்க முடியும்” என்றார் அவர் அலட்சியமாக.

“ஆதாரமா நான் தான் இருக்கேனே” என்றாள் வினயா.

“உங்க குடும்பத்துக்கு மான அவமானமே இல்லையா??” என்றார் லதா ஆங்காரமாய்.

“எங்களைப்பத்தி நீங்க கவலைப்படத் தேவையே இல்லை. எங்களை நாங்க பார்த்துக்குவோம்” என்றான் உதிரன்.

“வினய் என்னைப்பாரு நிஜமாவே நான் உனக்கு வேணாமா” என்றான் அபிஷேக் இப்போது நேரடியாய் வினயாவிடமே.

“வேணாம்”

“நம்ம குழந்தை”

“நீயே எனக்கு வேணாம்ன்னு சொல்றேன் அப்புறம் அந்த குழந்தை மட்டும் எதுக்கு??” என்றவள் இடைவெளிவிட அபிஷேக்கின் முகம் சிவந்தது.

“அப்படி பொறுப்பில்லாம உன்னை மாதிரி நான் சொல்வேன்னு எதிர்பார்க்காத. சரியோ தப்போ உருவான கருவை அழிக்க நான் காரணமா இருக்க மாட்டேன். எல்லாம் புரிஞ்சு தெரிஞ்சு எனக்கு ஒரு வாழ்க்கை அமைஞ்சா அதை சந்தோசமா ஏத்துக்குவேன்” என்று அவள் தெளிவாய் உரைத்திட அவன் முகம் கருத்தது.

“வினய் எனக்கு சொத்து ஆசை உண்டு. உன்னை வைச்சு அதை அடையணும்ன்னு நினைச்சது உண்மை தான். அதுக்காக நீயே வேணாம்ன்னு நான் நினைச்சதேயில்லை. நீ எனக்குன்னு நினைச்சு தான் நான் இதெல்லாம் செஞ்சேன்”

“சத்தியமா சொல்றேன் உன் வாழ்க்கையை கெடுக்கணும்ன்னு ஒரு நாளும் நான் நினைச்சதில்லை. உதிரன் ப்ளீஸ் சொல்லுங்க உங்க தங்கச்சிக்கு” என்று புலம்பவே ஆரம்பித்துவிட்டான் அவன்.

“இந்த விஷயத்துல எங்க முடிவைவிட அவளோட முடிவை தான் நாங்க மதிக்கறோம். சாரி அபிஷேக் நீ என்ன சொன்னாலும் நீ செஞ்சது சரியில்லை. அது உனக்கும் தெரியும், இப்போ நீ பீல் பண்ணி எதுவும் ஆகப் போறதில்லை”

“உதிரன் ப்ளீஸ் நீங்க சொன்னா அவ கேட்பா. எனக்கு வினய் எங்க பாப்பா எல்லாரும் வேணும் ப்ளீஸ்” என்றவனின் கண்கள் கலங்கித்தான் போனது.

“டேய் நீ எதுக்குடா அவன்கிட்ட கெஞ்சிட்டு இருக்க. உனக்கு நானிருக்கேன், உன்னை என் மகன் மாதிரி தானே வளர்த்தேன். எங்கண்ணன் அண்ணி செத்ததுல இருந்து நீ எங்ககிட்ட தானே வளர்ற. என்னைக்காச்சும் நான் உன்கிட்ட வேற்றுமை காமிச்சு இருக்கேனாடா” என்றார் லதா.

“உங்க மகனா நினைச்சிருந்தா நல்லதை சொல்லி வளர்த்திருப்பீங்க” என்று சினமிகா சொல்ல திரும்பி அவளை முறைத்தார் லதா.

“அவங்களை எதுக்கும்மா முறைக்கறீங்க. எனக்கும் அந்த டவுட்டு பல நாளா இருக்கத்தான் செய்யுது. எனக்கு நீங்க நல்லது பண்றீங்களா கெட்டது பண்றீங்களான்னு நானும் யோசனையில இருக்கத்தான் செய்யறேன்”

“அபி” என்றார் லதா அதிர்ந்து. சில நொடிகளிலேயே தன்னை சுதாரித்துக் கொண்டவர் “என்னடி இதுக்கு தான் நீ உன் மகன் மருமகன்னு எல்லாரையும் இங்க கூட்டிட்டு வந்தியா?? அபியையும் என்னையும் பிரிக்க பார்க்கறீங்களா. போடி இங்க இருந்து போ உன்னால நான் நிறைய இழந்திருக்கேன் போடி” என்று தன் உடன்பிறந்தவரை பிடித்து ஆக்ரோஷமாய் வெளியில் தள்ளப் போக “அத்தை” என்று வீடே அதிர கத்திய அபிஷேக்கின் குரலில் தான் அடங்கினார் அவர்.

அதே வேகத்தில் அவன் புறம் திரும்பியவர் “என்ன சொன்னே?? சொல்லுடா என்ன சொன்னே??”

“உங்க காதுல சரியா தான் விழுந்துச்சு அத்தை” என்று அழுத்தம் திருத்தமாய் உரைத்தான் அவன்.

“போதும் நீங்க எனக்கு நல்லதுன்னு சொல்லி செய்ய சொன்னதும் போதும், நான் செஞ்சதும் போதும். எனக்கு எந்த சொத்தும் வேணாம், எனக்கு வினயும் எங்க குழந்தையும் போதும். விட்டுடுங்க எங்களை, அவ என்னை மன்னிச்சு ஏத்துக்கணும். எனக்கு இப்போ அது மட்டும் தான் வேணும்” என்றான் அவன்.

“நீ என்ன வேணா செஞ்சிட்டு போ எனக்கு கவலையில்லை. என்னை நீ எப்படி கூப்பிட்டே சொல்லு, ஏன் அப்படி கூப்பிட்டேன்னு சொல்லு”

“அத்தை அம்மாவாக முடியாதுன்னு இப்போ தான் தெரிஞ்சுக்கிட்டேன். எங்கம்மா என்னோட நல்லதை தானே பார்த்திருப்பாங்க. பாருங்க உங்களால ஒரு நல்ல பொண்ணோட மனசை நான் உடைச்சிட்டேன். எனக்கு நீங்க வேணாம்” என்றான் அழுத்தமாய் அவன்.

“வினயா உன் முடிவு என்ன??” என்றாள் சினமிகா அவளிடம் திரும்பி இப்போது.

“என் முடிவுல எந்த மாற்றமும் இல்லை”

“நல்லது”

“நீங்க என்ன நினைக்கறீங்க??” என்று இப்போது தன் கணவனின் புறம் திரும்பினாள் சினமிகா.

“மனசுல நினைக்கிறதை சொல்லிடவா??”

“சொல்லுங்க அதுக்காக தான் கேட்கறேன்”

“இப்போ வேணாம் இன்னொரு நாள் சொல்றேன். சரி நான் சித்தப்பாக்கு போன் பண்றேன்” என்று அவன் போனை எடுக்க “ஒரு நிமிஷம்” என்றார் லதா.

“என்ன??” என்றான் உதிரன்.

“எப்படி கண்டுப்பிடிச்சே??”

“அதை தெரிஞ்சுட்டு நீங்க என்ன பண்ணப் போறீங்க??”

“சீதா” என்று குரல் கொடுத்தார் லதா.

“சொல்லு உதிரா” என்றார் அவன் அன்னையும்.

“அதை இவங்க நாளைக்கு காலையில தெரிஞ்சு வெந்து போகட்டும்மா” என்றவன் திரும்பி தன் மனைவியை ஒற்றை பார்வை பார்க்க அவள் அவன் பின்னோடு சென்றாள்.

“அவன் இப்போ உன்னை சும்மாவிட்டு போறான் எதுக்குன்னு எனக்கு தெரியலை. சீக்கிரம் வருவான்னு நினைக்கிறேன்” என்றுவிட்டு சீதாவும் வெளியேற வினயா அவர் பின்னோடு செல்லப் போக அபிஷேக் முன்னே வந்தான்.

“வினய் நிஜமாவே நீ என்னைவிட்டு போறியா??”

“வேற என்ன பண்ணனும் நானு”

“ப்ளீஸ் வினய் என்னை மன்னிச்சு ஏத்துக்கோ”

“அது நடக்காது”

“நீ மன்னிக்கற வரை நான் காத்திருக்கேன் வினய்”

“அதுவும் நடக்கவே நடக்காது”

“நடக்கும்”

“நடந்தா பார்க்கலாம்” என்றவளின் முகத்தில் இகழ்ச்சி தெரிந்தது.

அவளும் வெளியேற போக “வினய் என்னை மன்னிச்சுடு” என்று அனத்திக் கொண்டே இருந்தான் அபிஷேக். அவள் பின்னோடே அவனும் வெளியேறினான்.

“போகலாமா வினயா” என்று தங்கையின் அருகே வந்தான் உதிரன்.

“ஹ்ம்ம் போகலாம் அண்ணா… அப்பா வர்றாங்க போலீசோடன்னு சொன்னீங்க ஏன் வரலை??”

“வேணாம் போகலாம் வா”

“ப்ளீஸ் அண்ணா போலீஸ்க்கு சொல்லுங்க”

“வேணாம் வினயா போலீஸ் வேணாம்”

“ஏன் அண்ணா என் பேரு கெட்டிடும்ன்னு வேணாம்ன்னு சொல்றீங்களா??”

“அது மட்டும் காரணமில்லை”

“அப்போ அதுவும் காரணம்”

“வினயா” என்றான் அழுத்தமாய், பின் தன் மனைவியை பார்க்க அவள் வினயாவின் அருகில் வந்தாள்.

“வினயா உங்க அண்ணன் சொன்னா சரியா தான் இருக்கும். எதையும் யோசிக்காத வா போகலாம்”

“எனக்கு மனசே ஆறலை அண்ணி”

“எல்லாமே மாறிடும் வா” என்று ஆறுதல் சொல்லி அவளை அழைத்துச் சென்றனர்.

——————-

“சிமி இன்னைக்கு என்ன ஸ்பெஷல்?? வீடே கமகமன்னு இருக்கு??”

“இன்னைக்கு உங்க பிறந்தநாள்ன்னு அத்தை சொன்னாங்க, அதான் விசேஷம்??”

“இன்னைக்கா இல்லையே இன்னும் பத்து நாள் இருக்கே என்னோட பிறந்தநாளுக்கு”

“நீங்க வைகாசி மாசம் விசாக நட்சத்திரத்துல தான் பிறந்தீங்கன்னு அத்தை சொன்னாங்க. இன்னைக்கு தான் வைகாசி விசாகம் உங்களோட நட்சத்திர பிறந்தநாள் இன்னைக்கு தான்”

“பாருப்பா எனக்குக்கூடதெரியலை என் பொண்டாட்டிக்கு தெரிஞ்சிருக்கு”

“பொண்டாட்டின்னா இதெல்லாம் தெரிஞ்சிருக்க வேணாமா??”

“உன்னை தான் எனக்கு முழுசா தெரியலை”

“யார் தெரிஞ்சிக்க வேணாம்ன்னு சொன்னா”

“எங்கே நீ தான் ஒத்துழைக்க மாட்டேங்கறீயே??”

“பேச்சு வேற பக்கம் போறாப்புல இருக்கு”

“புரிஞ்சா சரி”

“சரி நீங்க போய் குளிச்சுட்டு ரெடியாகுங்க நாம கோவிலுக்கு போயிட்டு வந்திடலாம்”

“நான் குளிச்சுட்டேன் அப்போவே பசிக்குது சாப்பிடலாம்ன்னு தான் வந்தேன், அம்மா எங்கே??” 

“அத்தை கோவில்க்கு போய் இருக்காங்க. நம்மளை வரச்சொன்னாங்க சீக்கிரமே” என்றவள் அவனிடம் பேசிக்கொண்டே அவனுக்கு பொங்கலை தட்டில் வைத்துக் கொடுத்தாள்.

“ஏதோ நெய் வாசனை அடிக்குதே அதை என் கண்ணுல காட்ட மாட்டியா??”

“எல்லாமே உங்களுக்கு தான் ஆனா கோவிலுக்கு போயிட்டு வந்து தருவேனாம். உங்களுக்கு ஸ்பெஷலா இன்னைக்கு புது ஸ்வீட் ஒண்ணு செஞ்சிருக்கேன்”

அவன் சாப்பிட்டு முடிக்கவும் சினமிகா வேறு உடை மாற்றி வரவும் சரியாக இருந்தது. “நீ சாப்பிடலையா??”

“கோவில்க்கு போயிட்டு வந்து சாப்பிடறேன்”

“ஏன்??”

“ப்ளீஸ் போயிட்டு வருவோம்”

“வினயா எதுவும் பேசினாளா??”

“நேத்து பேசினேன்”

“எப்படி பேசறா??”

“நல்லா தான் இருக்கா”

“அவ முடிவுல எதுவும் மாற்றமிருக்கா??”

“இல்லை ஏன் மாற்றம் வேணும்ன்னு நீங்க நினைக்கறீங்களா??”

இல்லையென்பதாய் அவன் தலை ஆடியது. வெளியில் வந்தவன் ஆட்டோ பிடிக்க மேற்கொண்டு எந்தவித பேச்சு வார்த்தையும் இன்றி அவர்கள் பயணம் கோவிலை நோக்கிச் சென்றது.

இவர்கள் அங்கு சென்று சேரவும் உதிரனின் சித்தப்பாக்கள், அத்தைமார்கள் அவர்களின் வாரிசுகள் என்று அனைவருமே அங்கு வந்திருந்தனர். சற்றே ஆச்சரியமாக இருந்தாலும் அவன் அதை பெரிதுப்படுத்தவில்லை. எல்லோரிடமும் சகஜமாகவே உரையாடினான். 

கோவிலில் பூஜை முடிந்து அவர்கள் ஓய்ந்து ஒரு ஓரத்தில் அமர்ந்தனர். அவனின் அத்தை மங்கையர்க்கரசி மெல்ல பேச்சை ஆரம்பித்தார்.

“ஏன் உதிரா எங்ககிட்ட எல்லாம் ஒரு வார்த்தை கூட கேட்காம அப்படி செஞ்சே??”

“எப்படி??”

“நான் எதைச் சொல்றேன்னு உனக்கு தெரியாத மாதிரி கேட்கறே??”

“நிஜமாவே எனக்கு நீங்க எதைப்பத்தி பேசறீங்கன்னு தெரியலை அத்தை தெளிவாவே சொல்லிடுங்க” என்றான் அவன்.

“சொத்தெல்லாம் அரசாங்கத்துக்கிட்ட ஒப்படைச்சு இருக்க, அதைத்தான் கேட்கறேன்”

“சொத்தை நான் எங்க கொடுத்தேன். சொத்தெல்லாம் தான் எல்லாரும் பிரிச்சுக்கிட்டோமே”

“சரிப்பா நம்ம வம்சத்துகிட்ட இருந்த புதையலை எதுக்கு ஒப்படைச்ச”

“அது அரசாங்கத்துக்கு சொத்தமானது அத்தை. அதை நல்ல காரியத்துக்கு பயன்ப்படுத்தச் சொல்லி ஒப்படைச்சுட்டேன். அதிலென்ன தப்பிருக்கு”

“நாங்களும் அந்த சொத்துக்கு வாரிசு தான் எங்களையெல்லாம் ஒரு வார்த்தை கேட்க வேணாமா??” என்றவரின் பேச்சில் இப்போது கோபம் தெரிந்தது.

“கோவில்ல வைச்சு பேச வேண்டிய விஷயமா இது” என்று வாயை திறந்தார் சீதா.

“உங்க வீட்டுக்கு வர்றதுக்கு எங்களுக்கு பயமாயிருக்கு. பார்க்க உங்களை மாதிரியே இருந்துக்கிட்டு உங்க தங்கச்சி பண்ணது எல்லாம் எங்களுக்கும் தெரியும். எல்லாம் சக்தி சொல்லிட்டான்” என்றார் பெரியத்தை ராஜேஸ்வரி.

“உங்களை அவங்க எதுவும் செய்யலையே”

“நம்ம வினயா வாழ்க்கையை கெடுத்தது உன் மாமன் மகன் தானே” என்று பதில் சொன்னார் அவர்.

“வினயா வாழ்க்கையை எப்படி சரி பண்ணனும்ன்னு எனக்கு தெரியும். நீங்க யாரும் அவளைப் பத்தி கவலைப்பட தேவையில்லை. சித்தப்பா, சித்தி, வினயா” என்று அவன் அழைக்கவும் அவனின் சித்தப்பா சிவக்குமார், சித்தி, தங்கை மூவருமே திரும்பினர்.

“என் மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்கா இல்லை உங்களுக்கும் என் என் மேல எதுவும் மனத்தாங்கல் இருக்கா அத்தைங்க மாதிரி” என்றான் அவன்.

“நீ தான் எங்க மூத்தப்பிள்ளை உன் அருமை தெரியாம இவ்வளவு நாள் நாங்க தப்பு பண்ணிட்டோம் உதிரா. இனிமே அப்படியில்லை நீ எது செஞ்சாலும் அது எங்க நல்லதுக்கா தான் இருக்கும்” என்றார் அவர் உறுதியாய்.

“உங்களுக்கு சித்தப்பா” என்று பெரிய சித்தப்பா சக்தியை பார்த்தான்.

“எனக்கு பெரிசா எதுவும் தோணலை உதிரா. இந்த புதையல் விஷயத்துல எனக்கு உன் மேல எந்த வருத்தமும் இல்லை அவ்வளவு தான்” என்று முடித்துவிட்டார் அவர்.

“ஏன் சக்தி அவனுக்கு பயந்து பேசறீயா நீ??” என்று தம்பியின் மீது பாய்ந்தார் ராஜேஸ்வரி.

“இல்லைக்கா புதையல் இன்னைக்கு இல்லைன்னாலும் நாளைக்கு அது அரசாங்கத்துக்கு தான் போய் சேரும். தவிர நம்ம உதிரன் அதை கோவிலுக்கு தான் கொடுத்திருக்கான். எனக்கு அதுல சந்தோசம் தான். நம்ம வம்சத்துல பெரிய பாட்டி தாத்தா எல்லாம் அந்த காலத்துலேயே கோவில் கட்டணும்ன்னு ஆசைப்பட்டாங்கலாம்”

“அது நடக்க முடியாம போயிடுச்சாம். அப்போ சொத்து தகராறுல ஒரு குடும்பமே அழிஞ்சு போச்சுன்னு எங்கப்பாக்கு அவங்க பாட்டி சொல்லியிருக்காங்க. அந்த பாவம் தான் நம்ம குடும்பத்தை தொடருதுன்னு சொல்வாங்க”

“ஒரு ஒரு தலைமுறையிலயும் சொத்து தகராறு வந்து குடும்பம் பிரிஞ்சு தான் போகுது. அது ஒரு சாபமே ஆகிப்போச்சுன்னு சொன்னாங்க. யோசிச்சு பார்த்து அது உண்மை தானே. நாமளும் அதைத்தானே செஞ்சிருக்கோம்”

“குடும்ப ஒற்றுமையைவிட நமக்கெல்லாம் சொத்து தான் பெரிசா போச்சுல” என்று நீண்ட விளக்கமளித்தார் அவர்.

“ஓ!! திருந்திட்டியா நீ!!” என்றார் அவரின் தங்கை மங்கையர்க்கரசி.

“நான் திருந்தவெல்லாம் இல்லை நடந்ததை சொன்னேன். ஏற்கனவே நடந்ததை நாம மாத்த முடியாது குறைஞ்ச பட்சம் நாம ஒத்துமையாவாவது இருக்கலாம்ன்னு நினைக்கிறேன். வினயாக்கு ஒரு பிரச்சனைன்னதும் உதிரன் தான் முன்னாடி வந்து நின்னான். என்ன ஏதுன்னு எதுவும் யோசிக்கலை”

“நீங்க எப்படியோ போங்க. எனக்கு இப்போ தெரிஞ்சாகணும் இந்த புதையலைப்பத்தி எங்ககிட்ட கூட சொல்லாம நீ ஏன் கவர்மென்ட்க்கு முதல்ல இன்பார்மேஷன் கொடுத்தே” என்றார் அவனின் பெரியத்தை ராஜேஸ்வரி.

“அரசாங்கத்துக்கு சொல்லணும்ன்னு சொன்னது நானு” என்ற குரலில் மற்றவர்கள் திரும்பி சினமிகாவை பார்த்தனர்.

“நீ யாருடி சொல்ல??”

“என் பொண்டாட்டி அத்தை அவளுக்கு எல்லா உரிமையும் இருக்கு. சொன்னது அவளா இருக்கலாம், ஆனா எண்ணம் என்னோடது தான்” என்றவனின் நினைவுகளில் அந்நாள் மீண்டும் நிழலாடியது.

“இப்போ உதிரன் செஞ்ச காரியத்துனால எல்லாம் சரியா 

Advertisement