Advertisement

மின்னொடு வானம் நீ
12
வீட்டுக்கு சென்ற நரேனுக்கு… பயங்கர க்ல்ட்டி பீலிங்க்ஸ்… தூக்கமே வரவில்லை அவனுக்கு… சும்மா இருந்தவன… ஏதோ கேட்டு, சொல்லி… ஏத்திவிட்டுட்டனோ…. என எண்ணியபடியே இருந்தான் நரேன். 
அமருக்கு போன் செய்து கொண்டே இருந்தான் விடிகாலை ஐந்து மணி வரை… விடிய விடிய அழைத்தும்… மெசேஜ் செய்தும் போனை எடுக்கவில்லை அமர்…. போனையும் ஆப் செய்யவில்லை… வெட்டவெளியை வெறித்து பார்த்தே படுத்திருந்தான்.. மொட்ட மாடியில். 
இங்கே நரேன், எப்போதடா விடியும் தன் அண்ணனிடம் சொல்லலாம்… அவனை போய் பார்த்து கேட்கலாம் என நினைத்து புரண்டு புரண்டு படுத்திருந்தான்…
இங்கே அமர் வீட்டில், கீழே… எல்லோரும் ஹாலில்தான் இருந்தனர்… பிரியாவை முரளி “உள்ள போய் தூங்குடா… “ என அனுப்பி வைத்தார்.. அவளும் மனதேயில்லாமல்தான் சென்றாள் “ப்பா… அம்மா எழுந்தா கூப்பிடுங்க ப்பா” என தயங்கிய குரலில் சொல்லி சென்றாள்.
மெதுவாக உள்ளே அழைத்து சென்றார் சுமதியை… ஆனால் சுமதி “விடுங்க… என்னை… அவன் சொன்னத கேட்டு அவன ரெண்டு அடி போடாம… நீங்க, ஏன் சும்மா இருந்தீங்க” என சுமதி தன் கணவரை கடிய தொடங்கினார்…
முரளி “பேசாம படு…. எதையாவது பேசாத” என அவரும் கடிந்து கொண்டார்.
அந்த இரவு… பெற்றோர் இருவரும் கண்ணசரவேயில்லை எனலாம்… எப்போதடா விடியும் என்ற நிலை சுமதிக்கு… ஏதோ… உள்ளே சென்ற பாணத்தின் தாக்கத்தில் உளறியிருப்பான்… காலையில் வந்து “அம்மா… எல்லாம் சும்மா, நீ எப்படி ரீயாக்ட் பண்றேன் பாக்கத்தான் சொன்னேன்னு சொல்லுவான்… 
அமர்… அப்படியெல்லாம் இல்ல…
அவனுக்கு அந்த மகா இருக்கிறதே… தெரியாதே… 
அப்புறம் எப்படி அவங்க அப்பாகிட்ட சொன்னான்… உங்க தங்கச்சி பொண்ணுதான்னு…
மெல்ல முரளியை அழைத்தார் சுமதி “ஏங்க… அவனுக்கு யார் சொன்னா… மகா பத்தி” என்றார் ஆராயும் எண்ணத்தில்…
முரளிக்கும் அதே யோசனைதான். ஆனால் ஒரு தொழிலை நிர்வகிக்கும் மகன், வெளியுலகம் தெரிந்தவன்… அவனுக்கு இன்னும் தன் குடும்ப நிலை தெரியாது என எண்ணுவது… தன்னுடைய முட்டாள்தனமல்லவா… என தோன்றியது..
தன் பதிலுக்காக காத்திருக்கும் தன் மனையாளின் பார்வை புரிய… “நம்ம பையனுக்கு வயது 28, இன்னும் அவன் சின்ன பையன் கிடையாது…
நாமலே சொல்லியிருக்கணும்…
இப்போ அவனுக்கே தெரிஞ்சியிருக்கு..
ஆனா… எந்த விதமா தெரிஞ்ச்சதுன்னு தெரியலையே…
ம்ச்சு….” என்றார் குரலில்தான் எத்தனை இறுக்கம்… நானே என் மகனிடம் சொல்லியிருக்க வேண்டாமா என்ற இறுக்கம்… தன் மனைவியின் பேச்சை கேட்டது தப்போ என்ற எண்ணம் வந்தது அவர்க்கு.
சுமதிக்கும்  சற்று அந்த எண்ணமும் வந்தது. ஆனால்… எல்லாவற்றியும் விட, இப்போதைய நிலையில், எல்லா கோவமும் மீண்டும் மகாவின் மீதே திரும்பியது… இன்னும் எங்களை விடாமல் துரத்துகிறாள்… இப்போது என் பையனின் மனதையும் களைத்திருக்கிறாள் என மொத்தமும் மகா மேல் திரும்பியது…
நாம், வாழ்வில் ஒருமுறை தவறினால்… அந்த தவறை சரி செய்ய வாழ்நாள்  முழுவதும் போரட வேண்டும்… மகாவிற்கு சரியாக பொருந்தியது…
எப்படியோ தன் கணவருக்கு, இதில் பங்கு இல்லை… அது ஒருவகை நிம்மதியை தர.. மெல்ல தன் கணவரிடம் “ஏங்க… சொன்னா, நம்ம பையன் புரிஞ்சிப்பான் தானே” என்றார்…
முரளிக்கு என்ன சொல்லுவது… எப்படி சொன்னாலும் காயபடப்போவது தன் மனைவிதான் எனவே அமைதியாக “ம்… “ என்றவர்… “தூங்கு சுமதி… காலையில் பேசிக்கலாம்” என்றார்.
எங்கே உறங்க, சுமதிக்கு அது வரவேயில்லை… எப்படி அவனிடம் பேசலாம்.. என யோசித்துக் கொண்டிருந்தார் அவர்.  
பாவம் ப்ரியாவிற்கும் உறக்கம் வரவில்லை… ஏன் அண்ணன் இப்படி என எண்ணியபடியேதான் இருந்தாள்… இப்படி வீட்டிலிருப்பவர்களின் எண்ணம் எல்லாம் அமரில் குவிய… அமரின் எண்ணம் எல்லாம்… அவளிடமே குவிந்தது…
அமருக்கு, உள்ளே சென்றிருந்த சரக்கு.. எப்போதோ, தன் வேலையை முடித்துக் கொண்டு… ஜெகா வாங்கியிருந்தது… அந்த மொட்டைமாடியில் எப்போதும் போல் இன்றும்… எதையோ தேடியபடியே படுத்திருந்தான்…
மனமெல்லாம் அவளை குறித்த தேடல்தான்… அபி… அபி… 
இப்படியா என்னை படுத்துவா… 
அதான் வேண்டாம்னு சொல்லிடோமில்ல…. 
ச்சு…. போடி… வேண்டாம்னுதான் போக முடியலையே….
நான் பண்ண தப்புக்கு நீ என்ன பண்ணுவ…
இன்று சொல்லனும்ன்னு எந்த அவசியமும் இல்லையே… 
ஏன் டா, அமரா இப்படி பண்ணின… 
ப்ரியாக்கு வேற நிச்சையம்… 
வேலையே நிறைய இருக்கு… இதில் நீ வேற ஒரு குழப்பத்தை கொண்டு வந்திருக்க… என மனம் முன்னுக்கு பின் முரனானாலும்… நிம்மதியாக உணர்ந்தான் அமர்… பாரமெல்லாம் இறங்கிய உணர்வு… 
பெருமூச்சு வந்தது அமரிடமிருந்து… 
பீல் பெட்டெர் அமர்… 
பீல் ஹாப்பி… வீட்டுக்கு தெரியாம இருக்கறது தான் சங்கடம்… 
சோ… நடந்தது நல்லதுக்குதான்…
விடுடா அமரா… பார்த்துக்கலாம்… 
காலையில் போய் என்ன சொல்லுராங்கன்னு கேட்கலாம், பார்க்கலாம்…
என்ன பண்ணிட்டேன்… லவ் தானே… 
அவ என் அத்த பெண்ணுன்னுன்றதால பிடிக்கலையே…. அவளும் குரலும்தானே… முதலில்… 
ம்.. அப்பறம்தான் அத்த… பொண்ணு எல்லாம்….
எப்படி டி இவ்வளோ சூப்பர் வாய்ஸ்… 
தேன் குரல்டி உன்னோடது… 
கண்மூடிக் கொண்டான் அமர்… மெல்லிய குரலில் அவள் பாடியது கேட்டது… அவ்வளவு தூரத்தில்தான் இருந்தால் அபி, அவனுக்கு…. 
அபி.. என அமரின் உதடுகள் முனுமுனுக்க… மனதில் எதோ ஒரு நம்பிக்கை துளிர்விட… அமர் உற்சாகமானான்.. இப்போது நேசம் முழுதாக பரவ தொடங்கியது… அமருள்… மென்மையான குளிர் காற்றில், அபியின் நேசமும் சேர்த்து வீசியது போல… அதனை கனவாக்கி.. சுகமாக உறங்கி போனான் அமர். 
மறுநாள் காலை… எல்லோருக்கும் என்ன வைத்திருந்ததோ அந்த விடியல், ஆனால் அமருக்கு நம்பிக்கையை வைத்திருந்தது… கரைகானத நம்பிக்கை தந்தது… அவள் எனக்குதான் என சொல்லிக் கொண்டே எழுந்தான்… அமர்.
கீழே சுமதி, உறக்கமேயில்லாமல் எழுந்து வெளியே ஹாலுக்கு வந்தார்… எல்லோரும் பாரங்கல்லை விழுங்கிய நிலை… சுக்கு கஷாயத்தால் அதை தீர்க்க முடியாது என தெளிந்து கொண்டார் முரளி… ஒரு முடிவோடு அவரும் ஹாலுக்கு வர…
அப்போதுதான் ருக்கு பாட்டி வந்திருந்தார்… காலை நேர வேலை தொடங்கியது… எனவே தன் மனைவியிடம் பேசிவிடலாம் என எண்ணி “சுமதி…” என தொடங்க.. 
அமர், கீழிறங்கும் சத்தம் கேட்டது… வரும்.. அவனையே சுமதி பார்க்க தொடங்கினார்… எப்போதும் போல் இருந்தான் ‘இங்கே இடி விழுந்ததா…’ எனும் பாணியில் இறங்கி வந்தான். சுமதிக்குதான் இடி எங்கையோ விழல டா, என் மேல்தான் விழுந்தது என பார்வை பார்த்து நிற்க… அவன் நிற்கவில்லை.
ஜாக்கிங் டிரஸ்சில்… யாரையும் திரும்பி பார்க்கவில்லை. அவனின் இந்த செயலை பார்த்ததும் சுமதிக்கு, வருத்தம் போய் கோவம் வந்தது… 
ஆனால் உள்ளுக்குள் அமர் பதறிக் கொண்டிருந்தான்… ஏன்.. இப்படி இருக்காங்க… மயக்கமாகியது இன்னும் சரியாகவில்லையா… என அவரை பார்த்ததும் பயம் வந்தது… அப்படி ஒரே இரவில்… கலங்கியிருந்தார் சுமதி. 
முடி அதிகம் அவருக்கு… இடைதாண்டிய கூந்தல்… நீளமாய்… பாம்பு போல் இருக்கும் எப்போதும் பின்னியே வைத்திருப்பார்… இன்று அதை தூக்கி கொண்டையாக போட்டிருந்தார்.. எப்போதும் மின்னும் மஞ்சள் முகம்தான்… இன்று கருத்து… வீங்கி… முக்கியமாக பயமும், கவலையும் அப்பிய முகமாக… சுமதி தன் கணவனின் கை பிடியில் நிற்க… கூடவே அவனை பார்க்கும் குற்றவாளி பார்வை… அமர் சற்று ஆடிபோனான்…
நேற்று நடந்தது எல்லாம் நினைவில் ஆட… இப்போது தன் அம்மாவின் நிலையை ஒர கண்ணால் பார்த்தபடியேதான் இறங்கினான்…. இருவரும் ஒன்றும் பேசவில்லை… கட கடவென அவர்களை கடந்து வெளியே சென்றுவிட்டான்…
சுமதி, பிள்ளைகளின் படிப்பு, விளையாட்டு… உடை… பாக்கெட் மணி.. பிரிண்ட்ஸ் இப்படி எல்லாம்… அவர்கள் விருப்பம்தான்.. ஆனால், அதிகாலை எழ வேண்டும், பக்தி வேண்டும்… கண்ணை உறுத்தாத உடை வேண்டும்… பெரியவங்க பேசினா நின்னு கேட்கணும்… இப்படி போன்றவற்றில் கறார்… அந்த பார்வையிலேயே நீ செய்தது தவறு என சொல்லிவிடுவார்… தம் பிள்ளைகளுக்கு…
அப்படிதான் சொல்லித் தந்தார் இதுவரை… ஆனால், எல்லாம் இப்போது எதிராய் நிற்பதாய் தோன்றியது… அமைதியாக உள்ளே சென்றார் தன் பதியுடன்.. முரளி “போ.. சுமதி… குளிச்சிட்டு வா” என்றார்..
அவரும் அமைதியாக சென்று தன் வேலைகளை முடித்து வரவும், ருக்கு பாட்டி.. காபியுடன் அறை வாசலில் நின்று அழைத்தார்… “தம்பி… தம்பி” என 
முரளி வெளியே வர… காபியை கொடுத்தவர் “என்னாச்சு… சுமதிக்கு ஏதாவது முடியலையா…” என்றார்… அவர் இன்னும்  கிட்சனுக்கு வராமல் இருப்பதை பார்த்து..
“இல்ல க்கா… நேத்தி படுக்க கொஞ்சம் லேட் ஆச்சு, அதான்… தோ வந்திடுவா..” என பதில் சொல்லி அனுப்பினார்…
அதற்குள் சுமதி புடவையை கட்டி, தன் தலையை துடைத்தபடியே நின்றிருந்தார், முரளி உள்ளே வந்து  “இந்தா… காபி” என்றார்… அமைதியாக வாங்கிக் கொண்டார்.. 
முரளி “சுமதி.. அவன்ட்ட… இப்போ எதுவும் கேட்காத, விடு அவன… ப்ரியா என்கேஜ்மென்ட் முடியட்டும்… பொறுமையா பேசலாம்…” என்றவர் தொடர்ந்து காபியை குடிக்க…
சுமதி நேற்று இருந்த அதே மனநிலையில் “உங்களுக்கு… அவங்கள பத்தி தெரியுமா” என்றார் விசாரணையான கேள்வி…
முரளி பதிலே சொல்லவில்லை.. பொறுமையாக முழுதாக காபியை குடித்து முடித்து.. தன் மனைவியை முறைத்தபடியே… “நான் உன் மீது வைத்த நம்பிக்கையை… நீ என்மீது வைக்கவேயில்லை… ம்…. “ என அழுத்தமாக சொல்லவும், சுமதியின் தலை தாழ்ந்தது… நான் இவரிடம் இப்படி கேட்டிருக்க கூடாது என எண்ணியது மனம்.
“இல்ல, தெரியாம… ஏதோ… யோசனையில… மன்னிச்சிடுங்க…” என கணவரின் அருகில் வந்தார் சுமதி.
முரளி ஏதும் சொல்லாமல் உட்கார் என்பதாக கண்காட்ட.. அமைதியாக அமர்ந்தார்.. மீண்டும் குடி என்பதாக ஒரு கண்ணசைவு தன் கணவனிடமிருந்து வர… முழுதாக குடித்தார் அந்த காலை பாணத்தை.
இப்போது நிமிர்ந்து பார்த்த சுமதியின் கையை பற்றிய முரளி.. ”கொஞ்சம் குழப்பிக்காமா… இரு… 
நிச்சையம் முடியற வரைக்கும்… 
சத்தம் வரகூடாது… 
எதா இருந்தாலும்… அப்புறம்தான்… 
அவன்கிட்ட ஒரு வார்த்தை நீ கேட்க கூடாது…
புரியுதா “ என்றார்.
சுமதி ஏதும் சொல்லவில்லை… அமைதியாகவே இருந்தார்… முரளியும் அதட்டவில்லை… குளிக்க சென்றுவிட்டார்… ஹாலில் பேச்சு சத்தம் கேட்டது.. பக்கத்துக்கு வீட்டிலிருந்து நரேனும், சபரியும் வந்திருந்தனர்…
நரேன் “எங்க அமர், எழுந்துட்டானா…” என்றான் பரபரப்பாக.
சுமதி “ம்… ஜாக்கிங் போயிட்டான்…” என்றார் என்ன குரலிது… ஒன்றும் கேட்க முடியவில்லையே… என்ற ஆதங்க குரல்.
சபரி “மாமா, எங்கத்த..” என்றார்.
சுமதி அழ தொடங்கினார் “என்னடா சபரி, இப்படி வந்து நிக்கிறான்… எது வேண்டாம்னு நினைச்சி ஒதுங்கி நிற்கிறானோ…” என சொல் சொல்ல… ஜெயந்தி சபரியின் அம்மா வந்தார் பரபரப்ப்பாக…
“எங்க அவன், கூப்பிடுறா.. அவன.. 
இருக்கானா இல்லையா… சரியான கல்லுளிமங்கன்… 
எப்படிடா, எங்க அண்ணுக்கு இப்படி ஒரு பையன்….
இவன் வயிற்றில் இருந்தபோ… யாரையும் பத்தி கவலை படமா போனவ… இப்போ திரும்பியும் ஆரம்பிக்கிராளா…
கூப்பிடுடா அவன… கேட்கலாம்…
எல்லாம் சொல்லி கொடுத்திருப்பாங்க…” என்றார். சுமதியின் அழுகை பெரிதாகியது… நரேனுக்கு உதர தொடங்கியது. எப்போதும் இரு தாய்களும் கண்டிப்புடன்தான் இருப்பார்…
தினமும் மூன்று முறை போன் முலமும்… நேரம் கிடைக்கும் போதெல்லாம் நேரிலும் சந்தித்துக் கொள்ளும்… உற்ற தோழியர் இவர்கள்.
ஆதியிலிருந்து… அமர் பிறந்து ,அவனை கையிலெடுத்து வரும்போது முரளியின் தங்கையாக ஆரத்தி எடுத்தது… ஜெயந்திதான்… அன்று தொட்டு… வாசல்தான் வேறுவேறு… மக்கள் எல்லாம் தம்மக்கள் என்பதாகத்தான் அவர்களின் பாசம்.  
எனவே, ஜெயந்தி வெளிபடுத்தும் இந்த ஆதங்கம்… சற்று கம்மிதான். சுமதி போல் அமரமுடியவில்லை ஜெயந்திக்கு… ஏதோ, பயம்… எங்கே தன் அமரை… அவர்கள் தங்களுடன் இழுத்துக் கொள்வார்களோ… என பயம்.
அவன் விளையாட்டில் ஜெயித்து வரும்போதெல்லாம்… சுமதி, எங்கே இவன் வாழ்வில் படிப்பில்லாமல் போய்விடுவானோ என பயத்தால் பிதற்றும் போதெல்லாம்… எங்கள் அமர் என அவனையும் அவன் பரிசுகளையும்… புகழும் மற்றொரு தாய் ஜெயந்தி, 
எனவே… அவன் ‘காதல்’ என சொல்லவும் அதுவும்… இப்படி என சொல்லவும்… எதோ சிறுபிள்ளையை, மற்றவர்கள் எதோ, சொல்லி ஏமாற்றி விட்டனர் என்ற பயம்… 
அதே பயத்துடன் நடந்து கொண்டே இருந்தார். அந்த ஹாலை இத்தோடு… நானுற்றி  பத்து முறையானும் வலம் வந்திருப்பார்… அமர் சென்ற ஜாக்கிங்கை விட… இது அதிகம்தான்…
அவரின் சிந்தனையை கலைக்கும் விதமாக… குளித்து முடித்து வெளியே வந்த முரளி, ஹாலில் எல்லோரையும் பார்க்கவும், நரேன் சபரி வருவார்கள் என எதிர்பார்த்தார்தான், ஆனால் ஜெயந்தியை.. “என்னம்மா… இப்போ வந்திருக்க…” என கேட்க… 
“என்ன அண்ணா எங்கிட்ட மறைக்கலாம்னு பார்க்கிறீங்களா… “ என்றார் ஆற்றாமையாக.
முரளி… “அப்படியெல்லாம் இல்ல ஜெயந்தி… என்னமோ.. 
நமக்கு நேரம் சரியில்ல போல, இப்போ எதுவும் அவன் கிட்ட கேட்க வேண்டாம்…
நீங்க எல்லாம் முதலில் கிளபுங்க… 
நான் சாப்பிட்டு வரேன், பேசிக்கலாம்..” என விரட்டினார்…
ஜெயந்தி “சரி நான் எதுவும் கேட்கல, அவன பார்த்துட்டு போறேன்” என்றார்…
முரளி “ஜெயந்தி, முதலில் ப்ரியா அப்புறம்தான் அமர் புரியுதா… 
இப்போ அவனுக்கு எது சொன்னாலும் புரியாது…” என்றவர் சபரியை பார்த்து 
“சபரி… அந்த பொண்ணு எங்க இருக்கு… என்னான்னு விசாரிச்சு வை” என்றார்.
குற்றவுணர்வில் இருந்த நரேன்.. “மாமா அந்த பொண்ணு இங்க இல்ல.. ப்பாரின் போயிடுச்சி…” என்றான்.
சுமதி “அப்பாடா… அப்போ, இங்க அங்கன்னு கூட்டிட்டு சுத்த மாட்டான்… 
யாருக்கும் தெரியாதுல்ல… டா” என்றார்  குரலில்தான் எத்தனை ஆதங்கம், என் மகனா தவறு செய்தது… அப்படி இல்லியே என்ற அசைக்க முடியாத நம்பிக்கை…
நரேன்… “அதெல்லாம் இல்லத்த… அவன் அந்த பொண்ணுகிட்டயே சொல்லிட்டான், உனக்கும் எனக்கும் ஒத்து வராதுன்னு…” என்றான்.
சுமதி, ஜெயந்தி இருவருமே அசந்து போயினர்… கூடவே அப்பாடா.. என்ற பெருமூச்சு, சுமதி கரகரத்த குரலில் “தெரியும் டா என் பையன்… 
என் பேச்சை மீற மாட்டான்… 
அப்பா முருகா, ஞான பண்டிதா… செந்தில் ஆண்டவா… எங்க குடும்பத்த காப்பாத்திட்டப்பா… “ என சொல்லி ஜெயந்தியின் கைகளை பற்றிக் கொண்டார் அழுகையினுடே…
நரேன் “ஆனா, நேத்து ஏன் அப்படி சொன்னன்னு தெரியலையே…” என அதையும் கேட்டான்… அவர்களை பார்த்து.
இப்போது மீண்டும் அன்னையர் இருவருக்கும் பயம் வரபெற… திரு திருவென விழித்தனர்… 
சபரி சிரித்துக் கொண்டான்… “விடுங்க த்த, பார்த்துக்கலாம்… இப்போ நிச்சைய வேலைய மட்டும் பார்க்கலாம்…” என்று சொல்லி எழுந்து கொண்டான்.
சுமதியும் ஜெயந்தியும் தங்களுக்குள் எதோ பேசியபடியே இருக்க… முரளி..    “அக்கா” என ருக்கு பாட்டியை அழைத்து, எல்லோருக்கும் காபி தர செய்தார்… 
ஆனால் அமர் இன்னும் வந்த பாடில்லை… அமர் ஜாக்கிங்க சென்றானோ இல்லையோ… தன்னவளை நினைத்துக் கொண்டிருந்தான்… 
அந்த கபேயில், தான் பேசியது நினைவு வந்தது… எவ்வளவு பெரிய செல்பிஷ் நான்… அவர்கள் செய்த தப்புக்கு, என் மீது நம்பிக்கையும் நேசம் வைத்தவளை எப்படியெல்லாம் காயபடுத்தினேன்… நான் மட்டும்தான் நல்லவன்னு நினைப்பு… என இப்பொது தன்னை திட்டிக் கொண்டே நடந்தான்… 
எனை மாறும் காதலே…
எதையும் மாற்றும் காதலே…
காதலே… காதலே…
எதுக்காக கிட்ட வந்தாயோ…
எத  தேடி… விட்டு போனாயோ…..
விழுந்தாலும் 
நா ஒடஞ்சே போயிருந்தாலும்….
உன் நினைவிருந்தாலே போது…
நிமிர்ந்திடுவேனே நானும்….
அட காதல் என்பது மாயவலை…
சிக்காமல் போனவர்… யாருமில்லை…
சிதையாமல் வாழும் வாழ்வே தேவையில்லை” என எங்கோ அந்த அதிகாலை டி கடையில் பெருங்குரலெடுத்து கதற…
அமர் தன்னவளுக்கு மெசேஜ் செய்து கொண்டிருந்தான்.
               ##$#$#$#$$##$$#$$$$$#$#$##$#$#$#$#$
அபிக்கு, முதலில்  ஒரு பத்து நாள்… அந்த சூழ்நிலை ஒத்துக்கொள்ளவில்லை..  ஏதோ ஊரைவிட்டு தள்ளி வைத்து, ஒதுக்கப்பட்டதாக உணர்ந்தாள். கூடவே நேசமும் வாட்டியதில், தன்னையே அவள் நொந்து கொணடாள் எல்லாம் வெறுப்பாக இருந்தது…
அடுத்த ஒருவாரத்தில் முழுவதும் வீட்டு நினைவே… அதுவும் தனியாக பாஷை புரியாத ஊரில்… எதற்கெடுத்தாலும் அழுகை… எல்லாவற்றிலும் கோவம் என அபி வாடி போனாள்.
அடுத்த வாரம்தான் கல்லூரி சென்றாள்… அங்கே எல்லாம் புதிது… யாரையும் அவள் மனம் நண்பர்களாக ஏற்க மறுத்தது… எங்கும் வீட்டு நினைவே… அமர் நினைப்பு கூட இல்ல எனலாம். 
தினமும் அவள் ஸ்கைப்பில் பேசும் போது அவள் பாடும் ஒரே பல்லவி… நான் இந்தியா வரேன் என்பதாகத்தான் இருந்தது, சிறு குழந்தையானாள். இங்கு ஆள் அம்பு வாகனம் என உலாவந்தவளுக்கு, அங்கு… நாலு சுவற்றுக்குள் பையித்தியம் பிடித்தது.
தினமும் தன் அண்ணன் ஆதியை பார்ப்பதே.. அரிதாக இருந்தது… ஆதி  படிப்பு வேலை என அவனுக்கு நேரம் போதவில்லை… மேலும் அபி என்பவள்.. வளர்ந்தவள்… அவள் தன்னை கவனித்துக் கொள்வாள் என எண்ணியிருந்தான் ஆதி. ஆனால் அவனின் தங்கை குழந்தையாகவே இருந்தாள்.
இப்படியாக அபியின் நாட்கள் நகர… அவளின் அழுகை பல்லவியை கேட்க முடியாமல் அகிலன் சென்றான் அபியை தேற்ற.. ஆம் அகிலன்தான் ஜெர்மன் சென்றான் தன் வேலையெல்லாம் விட்டு தன் தங்கைக்காக சென்றான்… 
அவளுடன் ஒரு மாதம் இருந்து… முதலில் சுற்றி பார்த்து… பின் அந்த இடத்தை அவளுக்கு பழக்கி… பின் அவளை கல்லூரியில் விட்டு… என எல்லாம் பொறுமையாக செய்து இந்தியா வந்தான். 
எனவே இப்போதுதான் அபிக்கு எல்லாம் சரியாக தொடங்கியது… கொஞ்சம் அமரை தள்ளி வைக்க தொடங்க… இப்போது, அமரின் வான்வழி… செய்தி.. அவளின் அலைபேசி வந்தடைந்தது…

Advertisement