Advertisement

மின்னொடு வானம் நீ….
22 
நாட்கள் எப்போதும் போல் சென்றது அமர்க்கும்… அபிக்கும். சுமதியும் சம்பூரணமும் நாள் கடத்தாமல் திருமண வேலையை தொடங்கினர்.
அழகாக பூ தொடுப்பது போல, அமர் அபியின் திருமணம் ஓவ்வரு நிகழ்வாக அதாவது, பெண் பார்ப்பது தொடங்கி… பத்திரிகை, புடவை, அழைப்பு… பந்தக்கால் போட… வரவேற்பு, திருமணம் என எல்லாம் இனிதாக நடந்தது. நடத்திக் கொடுத்துனர் பெரியவர்கள்.. 
திருமணத்திற்கு ஆதி வரும் நாளாக பார்த்து வைத்தனர்… ஆர்பாட்டமாக நடந்தது திருமணம்… சிறப்பாக செய்தனர். அகிலன்தான் எல்லா ஏற்பாடுகளும் செய்தான்… 
தன் தங்கையின் ரசனையறிந்து மேடையலங்காரம் முதல்… சாப்பாடு… ரிட்டர்ன் கிப்ட்ஸ்… வரை எல்லாம் பார்த்து பார்த்து செய்தான்.. என்ன அபியின் பக்கத்தில்… மாப்பிளைக்கு துணையாக, மைத்துனன் நிற்கவில்லை… அதற்கு ஆதிதான் நின்றான். இப்படி எட்ட இருந்தே… சுழன்றான் தன் தங்கையின் திருமணத்தில்… அகிலன். 
அழகான குங்கும வண்ண பட்டுடுத்தி… தன் மணாளன் அருகில் அமர்ந்து தலை தாழ்ந்து… திருமண் வாங்கிக் கொண்டாள் அபி… 
அபிராமிஅமர்நாத்தாக கண்கள் கலங்க… தன்னவனை பார்க்க… அவனும் பூரிப்புடன் தன்னவளை பார்த்துக் கொண்டிருந்தான்.. ‘பிடித்ததவள்… இன்றுமுதல் வழித்துணையாய்…’ அப்படி சாதித்துக் கொண்ட கர்வம் அமரின் முகத்தில் அப்பட்டமாக தெரிய… சின்னதாக கண்சிமிட்டினான் தன்னவளை பார்த்து.. அபியின் தாமரை முகம்… செந்தாமரை வண்ணம் கொள்ள… அவளும் அவன் தோளை, காதலாக இடிக்க… அங்கே… பெரிய சத்தம் கேட்டது… “ஓ.ஓ…….. ஒ…. “ என கேட்க… சுதாரித்துக் கொண்டார் தம்பதிகள்… வேறு யார் சத்தமிடுவது… நரேனுடன் சூழ்ந்த அமரின் நண்பர்கள் படைதான்.
அபிக்கும் அமருக்கும் எங்கும் நிறைவே… இறுதியாக குடும்ப போட்டோ எடுக்கும் போதுதான் வந்தான் அகிலன் மேடைக்கு… அதுவும் தன் தங்கையின் அருகில் சென்று அமருக்கு போட்டியாக மறுபுறம் தன் தங்கையின் தோளில் கைபோட்டபடி நின்று போட்டோ எடுத்துக் கொண்டான்… சின்னதாக சிரித்தனர் எல்லோரும்… அமர் அந்த பக்கம் திரும்பாமல் நின்று கொண்டான். 
இப்படியாக இந்த திருமணம் முடிந்தது.
திருமணம் முடிந்து மறுவீடு… அழைப்பு, விருந்தினர் வருகை என எல்லாம் முடிந்து… புதுமண தம்பதிகள்… தேன்நிலவுக்கு சென்றிருக்க… வீடே இப்போது ‘விரோச்’ என இருந்தது…
பழைய சொந்தம் புதிதாக இணையும் போது ஏதோ… யுக யுகமாக தோன்றிய கவலைகள் எல்லாம் சட்டென மறைந்த பிரமிப்பு… முரளியிடம்.. 
எத்தனை இருந்தாலும் அமைதியாக பெருந்தன்மையாக… தன் மகனுக்கு என்ற போர்வையில்… அனைத்துக்கும் துணை நின்ற தன் மனையாளின்  மேல் இன்னும் மையல் தீரவில்லை முரளிக்கு.
யாருமே இல்லா… அந்த மாலை நேரத்தில்… ஹாலில் அமர்ந்து முரளி, போனில் பேசிக் கொண்டிருந்தார்…
சுமதி, இளம் மஞ்சள் வர்ண.. இலகுவான செட்டிநாடு காட்டன் புடைவையில் இப்போதுதான் மாமியாராகிய.. தோரணையில்.. இன்னும் பரபரப்பாக கையில் தேனீருடன் அவசரமாக வந்தார் தன் கணவனிடம்… 
முரளி போன் பேசி முடிக்கவும் “இந்தாங்க…” என்றார்.. உள்ளே திரும்பி திரும்பி பார்த்தபடி…
முரளி “என்ன ம்மா… அங்கேயே பார்த்திட்டு இருக்க… என்னாச்சு..” என்றார் 
“இருங்க வரேன்” என மீண்டும் உள்ளே சென்றவர், கையில் சுண்டலுடன் வந்தார்.. “தாளிச்சிட்டு இருந்தேன் அதான்… ருக்கும்மா.. பாவம் உடம்பு முடியலை, அதான் அனுப்பிட்டேன்” என சொல்லியபடியே அமர்ந்தார் எதிர் ஷோபாவில்…
“நீ டீ குடிக்கல…” என்றார் கணவர்.. 
“ம்… மறந்துட்டு வந்துட்டேன்… உள்ளே இருக்கு” என சொல்லி சாய்ந்து கொண்டார் அந்த ஷோபாவில்..
முரளி தன் டீயுடன் எழுந்து சென்று, தன் மனையாளின் டீ கப்புடன் வந்தார்… முரளி “ஹேய்… இந்தா” என்றார் சுமதியின் அருகில் வந்து… 
கணவனின் செய்கையில் மனைவி “ஐயோ! ஏன், நான் எடுத்துக்க மாட்டேனா… 
கொஞ்சம் ஆரனும், அதான் வைச்சிட்டு வந்தேன்..” என்றார் அலட்டாமல்… 
சிரித்தபடியே “ஆரிடுச்சி குடி….” என்றார் மணாளன்…
லேசாக உதடு பிரிந்த புன்னகையில்… அந்த டீயை அருந்த தொடங்கினார்… ஏனோ அந்த இடம் இப்போது மௌனத்தால் நிறைந்தது… 
நீண்ட நாட்கள் ம்கூம்… வருடம் ஆகிறது இப்படி இருவரும் தனியே பிள்ளைகள் இல்லாமல் வீட்டிலிருந்து… எப்போது கணவன் மனைவி இடையே நல்ல பேச்சுகள் செல்வதுண்டு… பிள்ளைகள், சொந்தங்கள் என நிறைய வாக்குவாதமும் எழுவதுண்டு… 
ஆனால், இதுபோல் அடுத்து என்ன பேசுவது என தெரியாத… நேரம் கிட்ட தட்ட அவர்களின் வாழ்வில் வந்ததே இல்லை எனலாம்… எனவே தயக்கமான மௌனம் இருவரிடமும் நிற்க… 
இன்னும் தன் மகனின் திருமணத்திற்கு வைத்த மருதாணி அழியாமல், தன் ஆரஞ்சி வண்ணத்தில் சுமதியின் கைகளில் சிரிக்க… அதை பார்த்துக் கொண்டிருந்தார் முரளி… 
சுமதிக்கு எதோ போலாக… “எ… என்ன… ” என கேட்க..
தலை முடியில் ஆங்காங்கே வெள்ளி இழையோடிய… அந்த குடும்பஸ்த்தன்… இப்போது திணறினார்.. என்ன பேசுவது என தெரியாமல்…
“ம்…. ஒண்ணுமில்ல சும்மாதான்….
அமர், வந்தவுடன்… நாம… 
ஒரு மாசம்… கொடைக்கானல் போயிட்டு வரலாமா… 
உனக்கும் எனக்கும் கொஞ்சம் ரிலாக்ஸ்சா இருக்கும்…” என்றார் என்ன குரலது. சுமதிக்கு, எத்தனையோ வருடம் சென்று மீண்டும் புதிதாய் எதையோ ஒன்றரை தொட்டு சென்ற குரலாக தெரிய…
சுமதிக்கு தலை நிமிர்த்த முடியவில்லை… முரளி தன்னவளின் அருகில் அமர்ந்து கொண்டார்… மெல்லிய குரலில் “போகலாம்… கொஞ்ச நாள் நம்ம பசங்களுக்கும் தனிமை கிடைக்கட்டும்” என்றார்.
சுமதி அமர முடியாமல் எழுந்து உள்ளே சென்றுவிட்டார்… இதற்கென்ன பதில் சொல்லுவது… பிள்ளைகள் இப்போதுதான் திருமணம் முடித்திருக்கிறார்கள்… எப்போது வேண்டுமானாலும் அடுத்த அடுத்த நிகழ்வுகள் வரலாம்… இந்த மனிதர் இப்போது எங்கையோ போகலாம்னு சொல்றாரு… என ஒரு மனம் இடித்துரைத்தாலும்… ஒரு மனம்… போகணும் ரொம்ப நாளாச்சு என ஏங்கவும் செய்தது…
முரளி “சொல்லிட்டு போ டி… ஏற்பாடு பண்ணனும்” என்றார் செல்லும் தன் மனையாளை பார்த்து சிரித்தபடியே…
சுமதி “காலம் போகற கடைசியில்… கொடைக்கானல் கேட்க்குதா… வேண்ணா… காசி போகலாம்” என்றார் தங்கள் அறையிலிருந்து சத்தமாக…
“ஹா..ஹா………. ஹா….. சரி… அதுவும் போகலாம்… எனக்கு ரெண்டுபேர் மட்டும் போகணும் அவ்வளவுதான்… நான் ரெடி… நீ ரெடியா “ என்றார் இளமையான குரலில் வசீகரமாய் அந்த அறையின் வாயிலில் நின்று  சிரித்தபடியே…
“ஏன்… ஆபிஸ்ல வேலையில்லையா… இங்க என்ன பண்றீங்க… கிளம்புங்க முதல்ல…” என்றார்… மிரட்டலாக… ஆனால் குரல் குழையதான் செய்தது சுமதிக்கு…
“ஹா…ஹா… அப்டியா… 
சரி… ஏற்பாடு பண்றேன்… 
போறோம்” என சத்தமாக.. சொல்லியபடியே வெளியே கிளம்பிவிட்டார்…
 
நாட்கள் நரக…. அமரும் அபியும் தேன்னிலவிளிருந்து வந்திருந்தனர்… இப்போதுதான் அமரும் அபியும் சற்று கம்பெனி, வேலை என பொறுப்பாக அன்றாட பணிகளை செய்ய தொடங்கியிருந்தனர்..
சுமதியும் முரளியும்… தங்களின் நாட்களை கழிக்க… கொடைக்கானலுக்கு கிளம்பினர்.
நரேனுக்கு இப்போது பெண் பார்க்கும் படலம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது… பாவம்… நரேன், அவன் பார்க்க செல்லும் பெண்ணுக்கெல்லாம் திருமணம் முடிந்து விடுகிறது… 
எனவே நரேன் அதனை கொண்டாடிக் கொண்டிருந்தான்… ஒவ்வரு வாரமும். நரேனின் சிங்கள் மேன்.. பார்ட்டிக்கு, அமர்தான் சிக்கி சின்னா பின்னமானான்… அமர்தான் கம்பனி அந்த சோலோ பெர்பாமென்ஸ்க்கு… 
அது முடித்து வந்தால்… வீட்டில்… அவனின் மனைவி… முறுக்கிக்கொண்டு நின்றாள்.. அவளை நெருங்கி.. கொஞ்சி கெஞ்சி சமாதானம் செய்வதற்குள்… நடுநிசி… அதன் பின் எல்லாம் முடித்து… விடிந்துவிடும்… அமருக்கு… இப்போதும் அவன் கல்லூரிக்கு கோச்சிங்க்கு செல்கிறான்.
அபி படித்த படிப்புக்கு தக்க… அமரின் புது யூனிட்டின் பணிகளை பழக தொடங்கியிருந்தால்.. அகிலன் கூட முணுமுணுத்தான்… “நாங்களும்தான் யூனிட் போட்டிருக்கோம்… அங்க வந்து பழகாலாம்ல” என அபியிடம்தான் சொன்னான்.
அபி “நீ முன்னாடியே சொல்லியிருக்கணும், இப்போ என் வீட்டுக்காரர் சொன்னவுடனே என்னை கூப்பிடற…” என பதில் சொல்ல…
அகிலன் “பாருடா… சப்போர்ட்ட… “ என சிரித்தான்.. அபிக்கு இவர்களுக்குள் நடக்கும்… விளையாட்டு புரிந்து விட… தானும் அதற்கு தக்க பேச தொடங்கிவிட்டாள்… இருவரிடமும்.
ஆக வருடங்கள்… அபியின் காதலாலும்… அமரின் பொறுப்பாலும் நிறைய தொடங்கியது…. 
15 வருடங்கள் சென்று….
அமர், நரேனின் மகனை கையில் வைத்தபடியே…. “டேய்… எப்போ வருவ” என போனில் பேசிக் கொண்டிருந்தான்..
அந்த பக்கம் என்ன பதில் வந்ததோ… “ம்…. சீக்கிரம்” என்றான் வைத்துவிட்டான் போனை..
உள்ளே வந்தான் அமர்… சம்ருத், நரேனின் மகனை இறக்கி விட்டான்… அந்த மூன்று வயது வாண்டு… அங்கே சேரில் அமர்ந்திருந்த அமரின் மகள்… ”ஸ்ம்ருதா…” விடம் ஓடியது… ‘இது என்ன…. இ..இத் ஏ……ன்  நீ போட்டுருக்க…..” என மழலை மொழியில் சட்ட திட்டமாக அவள் போட்டிருந்த மாலையில் உள்ள பெட்டல்ஸ்சில் ஒவ்வரு இதழாக எடுத்துக் கொண்டே கேள்வி கோட்க… தொடங்கினான்…
ஸ்ம்ருதா… எதோ மெல்லிய குரலில் சொல்லிக் கொண்டிருந்தாள் அவனுக்கு புரியும் படி… தன் மடியில் அவனை அமர்த்திக் கொண்டு…
அதை பார்த்த ஒன்பது வயதான அமர் அபியின், இரண்டாவது மகன்… சுகேஷ் “எனக்கு மட்டும் மாலையில்ல, என்ன அவளுக்கு மட்டும் எல்லோரும் கிப்ட் கொடுக்குறீங்க…” என தன் அன்னையிடம் சண்டை… அங்கிருந்த டைனிங்க டேபிள் மேல் ஏறி நின்று கொண்டு… “அபி…. சொல்லுடி…” என ஏக வசனமாக கத்தினான் அப்படிதான் செய்தான்…
ப்ரியாதான்… “டேய் தங்கம்… வா… உனக்கு அத்த, பெரிய கிப்ட் வைச்சிருக்கேன்… நீ கீழ வா…. 
உனக்கும்… தன்வந்த்க்கு, கௌசிக்கு, மிருதுக்கு, வம்சிக்கு, ஸம்ருத்துக்கு எல்லோருக்கும் பெரிய கிப்ட் இருக்கு. 
வா… எல்லோரும் உனக்காகத்தான் வெயிட் பண்றாங்க….. வாடா தங்கம்…..” என கெஞ்சிக் கொண்டிருந்தாள்…
அபி அவசரமாக அந்த பக்கம் வந்து… ப்ரியாவின் அருகில் மெல்லிய குரலில் “அண்ணி, நீங்க போய் வசந்த் அண்ணாவ கூட்டி வாங்க, 
இல்லை ன்னா, அகிலன் அண்ணாதான் வரணும் இவன பார்க்க… 
நீங்க வசந்த அண்ணாவ கூப்பிடுங்க… பொறுமையா பேசி கூப்பிட்டு போவார்… 
கோச் வேற எங்க அண்ணனன காணம்னு… செம டென்ஷன்ல இருக்கார்… இவன இப்படி பார்த்தார் அவ்வளவுதான்……
நீங்க வசந்த் அண்ணாவ கூப்பிடுங்க…. ப்ளீஸ்…” என சொல்லிக் கொண்டிருக்க…
அமர் “அபி…..” என சத்தமாக அழைத்தான்…
அபி, ப்ரியாவிடம் கண்காட்டி செல்ல… ப்ரியா “அதான் சரி அண்ணி, ஆனா, அவங்க நரேன் அண்ணா கூடல்ல போயிருக்காங்க….” என்றாள்.
“அப்போ… மாமா கிட்ட சொல்லுங்க…” என்றவள் தன் கணவனை நாடி சென்றாள்… போனை எடுத்து காதில் வைத்தபடியே…
ஹாலில் ஸம்ருதாவை அமரவைத்து… தட்டுகள் பரப்பப்பட்டன… ஆதி… எல்லாவற்றையும் தன் இம்போர்ட்டடு கேமராவில்… சேமித்துக் கொண்டிருந்தான்… 
ஆதியின் மனைவி ஸ்வேதா… அகிலனின் மனைவி ஐஸ்வர்யாவும்… புதிதாக வாங்கிவந்த மேட்சிங் வளையலை தங்களின் மருமகளுக்கு அணிவித்துக் கொண்டிருந்தனர்…
சுமதியும்… மகாவும்… வந்து கொண்டிருந்த சொந்தங்களை மாடிக்கு உணவருந்த அழைத்துக் கொண்டிருந்தனர்… முரளியும் சுவாமியும் மேலே… கேட்டரிங்கில் நின்று கொண்டிருந்தனர்.. 
சபரியும்… சௌமியும்… வரவேற்பில் நின்று கொண்டிருந்தனர்… இப்போதும் அமருக்கு சபரிதான் எல்லாம். சபரியின் யோசனைப்படியே… வீட்டிலேயே இந்த சீர் பாங்ஷனை நடக்கிறது… எல்லாம் அவரின் ஏற்பாடுதான்… கேட்டரிங்க… அழைப்பு எல்லாம் இப்போதும் சபரிதான் அமருக்கு.
இங்கே எல்லோரும் வந்திருக்க… அமரின் நேர் எதிர் மைத்துனன் மட்டும் இன்னும் காணவில்லை. அதற்குதான் அபியை அழைத்தான்… அவளும் தன் அண்ணனுக்கு போன் செய்து கொண்டே வந்தாள்… கோச்சிடம் “என்னங்க…” என்றாள் ஒன்றுமே புரியாதது போல…
அமர் பல்லை கடிக்காத குறையாக “எங்கடி உங்க அண்ணன்… 
இவன் வந்தாதான்… எல்லா சடங்கும் செய்ய முடியும்… 
எங்க டி அவன்..” என்றான் காண்டாக…
இதை காதில் வாங்கிய ஐஸ்வர்யா ஸ்வேதாவிடம்…. லேசாக சிரித்தபடியே  “இவங்க ரெண்டு பெரும் சேர்ந்து நம்ம மண்டையாதான் ஒடைக்கிறாங்க……
என்னதான் பண்ணுவாரோ….” என்றாள் சலித்த குரலில்..
அபி “வந்திட்டே இருக்காங்க கோச்… நீங்க சாப்பிட்டு வாங்க, அதுக்குள்ளே வந்துடுவார்….
அண்ணன் வந்த உடனே… சடங்கு எல்லாம் பார்க்க்கனும்…
நீங்க சாப்பிட்டு வாங்க” என்றாள் அலட்டாமல், அமர் தன் மனையாளை வெட்டவா குத்தவா என பார்த்துக் கொண்டிருக்க… 
அகிலன் உள்ளே வந்தான்… அபி பார்த்துவிட்டு “வா ண்ணா… 
ஏன்தான் இவ்வளோ லேட் பண்ணுவியோ…” என சொல்லியவள் தன் அண்ணனின் அருகில் சென்று… “என் கோச்ச வில்லனாக்குறதே… நீதான்” என தங்கையாக அகிலனின் புஜத்தில் குத்தியபடியே சொன்னாள்.
அகிலன் “ஆமாம் புதுசா வில்லனாக்குறாங்க… அவன் ஏற்கனவே… ரவுடிதான்” என்றான் மெல்லிய குரலில்…
அமர் ஆசுவாசமாக “வாங்க” என அவனை பார்த்து சொல்லியவன்.. அகிலன் தலையசைப்பை ஏற்று கொண்டு… போனை எடுத்துக் கொண்டு நகர்ந்தான்.
ஸம்ருதா… அந்த சேரில் இருந்து எழுந்து அவனருகில் வந்த படி “ஹைய்….. மாமா எனக்கா…” என அகிலனின் கையிலிருந்த பாக்ஸ் பார்த்து கேட்க… அதன் மேல்… “ibacco’ என எழுதியிருந்தது… 
“பட்டு நீ எழ கூடாது… உட்காரு…. 
உனக்குத்தான்… 
இப்போ ப்ரிஜில ஸ்டோர் பண்றேன்… 
பத்து நிமிஷத்துல… பங்க்ஷன் முடிஞ்சிடும்… 
அப்புறம்… புல்லா… உனக்குத்தான்” என்றான் தன் மருமகளை ஏமாற்றாமல். இத்தனை நேரம் தன்னை விளையாட விடவில்லையே என சற்று… ஏக்கமாக அமர்ந்திருந்த அந்த குட்டி மலரின் கண்கள்… அழகாக விரிய… 
அகிலன் தன் தங்கையிடம்… “கூப்பிடு எல்ல்லோரையும்…. ம்… 
சீக்கிரம் பத்து நிமிஷம்தான்… 
அதுக்குள்ளே என் மருமகளா… ப்ரீ பண்றீங்க… 
இல்ல… உன் புருஷன் மாதிரியாகிடுவேன் பார்த்துக்க…” என்றான்.
அப்படியே அந்த ஐஸ்கேக்கை… ப்ரிஜில் வைக்க வரவும்… அங்கு… சுகேஷ்சை ஒரு பார்வை பார்த்தான்… அகிலன்… அவன் நின்ற கோலத்தை… 
அவ்வளவுதான்… சுகேஷ்… தன் அத்தையிடம் காட்டிய ஆட்டத்தை முடித்துக் கொண்டு… “த்த… நீ எனக்குதான் முதலில் கிபிட் கொடுக்கணும்” என பேரம் பேசியபடியே நகர்ந்தான்…
ப்ரியா “தேங்க்ஸ் மாம்ஸ்” என்றாள் அகிலனிடம்…
அகிலன் “அவன் ஏதாவது கேட்டானா… என்னை கூப்பிடு இங்கதான் இருப்பேன்” என்றான் சற்று மிரட்டலாக…
ப்பா…. எல்லோரும் ஒரு வழியாக வந்தனர் விழா நடக்கும் இடத்திற்கு….  எல்லாம் முறைகளும் திருப்தியாக நடந்து முடிந்த்து….
எல்லா சொந்தங்களும் உணவருந்தி கிளம்பிக் கொண்டிருந்தனர்… ஒவ்வருவரிடமும் சென்று பேசி… விடை கொடுத்து அனுப்பி என முரளியும் அமரும் அங்கு நின்று கொள்ள… அபி அவர்களின் அருகிலேயே நின்றாள்…
சுமதியும் ப்ரியாவும் இங்கு… உள்ளே… சுத்து வேலைகளை பார்த்தபடியே இருந்தனர்… நேரம் கடக்க… சொந்தங்கள் எல்லாம் சென்று, வீட்டு மனிதர்கள் மட்டும்தான் இருந்தனர்…
இன்னும் முரளி தம்பதியும்… அமர் தம்பதியும்தான் உண்ணவில்லை… மற்றவர்கள் எல்லாம் உண்டு முடித்துயிருந்தனர்..
இப்போது பிள்ளைகளுக்காக… வாங்கிய கேக்குடன் வசந்த… தங்களின் அறைக்கு சென்றான்… கொஞ்சம்… ரிலாக்ஸ் ஆகட்டும் பிள்ளைகள் என… எண்ணி அழைத்து சென்றார்.
பிள்ளைகளுக்கு வசந்த் செட்டாவான்… அகிலனோ… ஆதியோ… பொறுமை கிடையாது எனவே வசந்த்தான் எப்போதும் குழந்தைகள்… என வரும்போது…
எல்லாம் அந்த ஐஸ்கேக் முடித்து… பேசியபடியே படுத்து உறங்க தொடங்கினர்… ஸ்ம்ருதாக்கு உறக்கம் வராமல்… எழுந்து கீழே வந்தாள்…
அப்போதுதான் அமர்அபி உணவு முடித்து வந்திருந்தனர்… சபரி ண்ணா…  கேட்டரிங்கை… கணக்கு முடித்து அனுப்பிக் கொண்டிருந்தார்…
அதெல்லாம் பேசி முடித்து அமர் கீழே வந்து ஆசுவாசமாக அமர்ந்தான் ஷோபாவில்… அப்போதுதான் கீழே வந்த ஸ்ம்ருதா… தன் தந்தையின் அருகில் வந்து சத்தமில்லாமல் அரந்து கொண்டாள்… 
அமரும் ஆதியும் எதோ பேசிக் கொண்டிருக்க… தன் தந்தையின் மேல் சாய்ந்தபடியே அப்படியே உறங்கியும்விட்டாள்… அவனின் செல்ல மகள், அப்படியே தன் மகளை தன் மடியில் கிடத்திக் கொண்டான் நகராமல்..
அபி கவனித்து… “ஏங்க… அண்ணனன… தூக்கி போய் படுக்க வைக்க சொல்லவா” என்க…
“இல்ல… இருக்கட்டும்…. தூக்கினா… முழிச்சிக்குவா….” என்றான் தன் மகளின் நெற்றி தொட்ட முடிகளை காதோரம் ஒதுக்கியபடியே… 
சின்ன சின்ன இடங்களில் அமர் அப்படியே அடங்கிவிடுவான் இப்படிதான்… அபி.. என்ற பொறுமையான மின்னல் அவனை அதே திமிருடனும் அதே… அலட்சியத்துடனும் அப்படியே ஏற்று அவனின் வாழ்வை இப்படிதான் பூரணம்மாக்கியது… அமரும் அப்படியே… அவளின் காதலை முழுமையாக உணர்ந்து… சத்தமாக கூட பேசவராத தன் மெழுகு பாவையின் கண்ணசைவில்… தோற்றே நிற்கிறான்… (காதல் வாழ்தலில்தான் உள்ளது…) 

Advertisement