Advertisement

அடுத்த இரண்டு நாளில் ப்ரியாவசந்த், கோவை வந்தனர் தாய் வீட்டுக்கு.. இப்போதுதான் தன் பெண், கண் நிறைந்து இருந்தாள் சுமதிக்கு. அப்படியே அவளை பார்க்க சொந்தங்கள் வந்தது போக இருந்தது… வீடு பழைய கலை கொண்டது.
முரளி போன் செய்து தன் தங்கைக்கு சொல்லியிருந்தார் ப்ரியாவின் வரவுபற்றி.. மறுநாளே வந்து பார்த்தார்கள் ப்ரியாவை.
சம்பூரணம் பாட்டி, தாத்தா வந்தார்கள்.. ‘விழா அன்று வரமுடியாது முரளிப்பா… 
என் மருமக இங்க வரணும்… 
நான் இவங்க, அண்ணியோட… நாத்தனார் பேத்திக்கு சீர்… அத்தோட.. நம்ம தொழில்தான்… நம்ம கூடவே இருப்பாப்படி… வீட்டு மனுஷங்க போகனுமப்பா…
அதான்… பேத்திய பார்த்துட்டு போலாம்னு வந்தேன்… 
ரெண்டுபேரும் விருந்துக்கு வரணும்… இந்த தரம்…
அது உங்க அத்த வீடு….
அப்புறம்தான்… உனக்கு அண்ணி வீடு.. புரியுதா ப்ரியா” என சட்டமாக சொல்லவும் செய்தார்… சிரியவர்களுக்குதான் தயக்கமெல்லாம்… பெரியவர்களுக்கு, அதன் நெளிவு சுளிவு தெரியும்… அவர்கள் வேண்டுமென முடிவு செய்துவிட்டால்… இணைத்துக் கொள்வார்கள்…
சுமதி, சிரித்தபடியேதான் இருந்தார்… ஒன்றும் செய்ய முடியாது… உறவை பழக்கிக் கொள்… எனும் சிரிப்பு அது.. மேலும் ப்ரியாவிற்கு இந்த மூன்றுமாதம்… நிறைய கற்று தந்தது, எங்கு பட்டும் படாமல் இருக்க வேண்டும், யாரிடம் உரிமை காட்ட வேண்டும் என… எனவே ப்ரியா இனிமையாகவே பேசினாள் சம்பூரணத்திடம்…
இதில் நிறைய பேசவேண்டி இருந்து.. மகாக்குதான். தன் வீட்டுக்கு முதல் முறையாக வருகிறாள்… நிறைய மாற்றங்கள் வேறுபாடுகள் என வீட்டை சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டிருந்தாள்…
முரளி “வாம்மா, வீட்ட பாரு” என அழைத்தார்…
“பரவாயில்ல ண்ணா” என்றார்…
“வா… மகா..” என்றவர் தானே அழைத்து சென்றார்.. சுவாமி, இவர்களை விட்டு, அப்போதுதான் மில்லுக்கு கிளம்பினார்… 
முரளி, தன் தங்கையிடம் ‘முன்னாடி இது இருந்தது… அத மாத்தி இப்படி வைச்சிருக்கோம்’ என நிறைய விளக்கினார்.. 
எப்போதும் மாடிக்கு போவதில்லை முரளி.. இன்று தங்கைக்காக சென்றார் அங்கு.. ரோட்டை பார்த்தமாதிரி ஒரு பால்கணி… இருவரும் அதில் அமர்ந்து வெகு நேரம் பேசினார்… யாரும் தொந்தரவு செய்யவில்லை… சுமதி பிள்ளைகள் அங்கு போகாமல் பார்த்துக் கொண்டார்… 
சம்பூரணத்தை, சுமதியும் ப்ரியாவும் சமாளித்தனர். ம்…. அப்படியிருந்ததும் அவர்களின் பேச்சு… மெதுவாக, முரளியின் இன்கம்டாக்ஸ் டீட்டைல்ஸ்.. வரை கலெக்ட் செய்துவிட்டார் பச்சையம்மாள் சம்பூரணம்..
அமருக்கு, இவர்கள் வருவது தெரியும்.. காலையில் வேலையிருப்பதால் கிளம்பிவிட்டான்.. இப்போது மதியம் மில்லுக்கு சென்று… சுவாமியையும் அழைத்து வந்தான் உணவுக்கு… மரியாதைக்காக.
விருந்து சற்று தூக்கலாகவே செய்திருந்தார் சுமதி… ப்ரியாவின் வீட்டினரையும் அழைத்திருந்தனர்… எனவே சம்மந்திகளால் வீடு நிறைந்தது.. விருந்துபச்சாரம் முடிந்து கிளம்பும் நேரமும் வந்தது.
முதலில் வசந்த், வீட்டினர் கிளம்பினர்… அவர்கள் சென்றதும் ப்ரியாவையும் வசந்தையும் ரெஸ்ட் எடுக்க மேலே அனுப்பினார் சுமதி.
சுவாமி ரெடியாக இருந்தார் கிளம்ப… அவருக்கு இந்த ஏற்பாடுகள்.. ஒரு கேள்வியை தந்தது… எனவே ‘மகா… கிளம்பலாம்’ என அவசரபடுத்தினார். சம்பூரணம்.. பொறுமையாகவே இருந்தார்.. அவரின் ஒரு கண் முரளியிடமும் மறுகண் அங்கு மருமகளிடமும் இருந்தது.
மகா, உள்ளே தன் அண்ணி உண்டு கொண்டிருக்க… பரிமாறியபடியே பேசிக் கொண்டிருந்தார்… கணவர் அழைக்கவும் “ஒரு பத்து நிமிஷங்க… அண்ணி சப்பிட்டுடன் போலாம்” என்றார்…
முரளி “மாப்பிள்ளை.. என் அம்மா நகை.. இருக்கு, 
அத்தோட ஊரில் இருந்த நிலம் எல்லாம் வித்து இங்க வாங்கினது… கொஞ்சம் இருக்கு… 
எல்லாம் மகா பேருக்கு மாத்தனும்… 
நாளைக்கு ஏற்பாடு பண்றேன்… மறுப்பு சொல்ல கூடாது நீங்க…” என சேர்த்தே முடித்தார்… சுவாமிக்கு எப்படி உணர்வது என தெரியவில்லை. பெண்ணுக்கு திருமணம் செய்யும் போது.. மாப்பிள்ளை உறவு… சற்று சங்கடமும் வெட்கமும் வந்தது அவருக்கு.. கோவம் வரவில்லை… சரியான புரிதல்…
“மச்சான்.. இதென்ன… இப்போ.. இந்த பேச்சு… நாங்கதான் மாப்பிள்ளைக்கு செய்யணும்” என்றார் சிரித்தபடியே மறுப்பாக..
முரளி “அது இன்னும் ஆரம்பிக்கவே இல்லை மாப்பிள்ளை. 
இது அண்ணனாக தங்கைக்கு செய்வது… 
இதில் பிள்ளைகளை சேர்க்க வேண்டாம்மே….” என்றார் அவரும் சிரித்தபடியே. சம்பூரணம்… இவர்கள் இருவரின் பேச்சை குறுகுறுவென கேட்டுக் கொண்டிருந்தார்… நடுவில் ஏதும் பேசவில்லை.
“எனக்கு என்ன சொல்லனும், தெளியலை…. 
நான் எதுவும் சொல்ல முடியாது மச்சான்.. 
எல்லாம் உங்க தங்கையை கேளுங்க…” என்று விட்டார்.
அப்போதே மகாவிடமும் பேசிவிட்டார் முரளி. முதலில் மகா மறுத்தாலும்… தன் மாமியாரின் பார்வை… தன்னை நோக்காமல் இருப்பதை பார்த்து.. ஒன்றும் சொல்லாமல் இருந்து கொண்டார். 
ப்பா… இந்த பேச்சு வார்த்தையில் சம்பூரணத்திற்கு அப்படி ஒரு திருப்தி…
அமைதியாக பேசிவிட்டு கிளம்பினர். மகாக்கு. எல்லாம் இருந்தாலும்… மாமியாராக… அவளின் பிறந்த வீட்டில் கொடுப்பார்களா… என எண்ணம்… அது தீர்ந்தே போனது இந்த நேரத்தில்… சம்பூரணத்திற்கு. ஆக… பணம் எப்போதும் முக்கிய பங்கு உறவில்…
மறுநாள்… ப்ரியாவின் தாலிபெருக்கும் வைபவம் இனிமையாக நடந்தது… அப்போதே தன் அங்காளி பங்காளி மத்தியில் மகாவுக்கு சொந்தமான நகை… பத்திரம் எல்லாம் தட்டில் வைத்துக் கொடுத்துவிட்டார்கள் சுமதுமுரளி தம்பதி. ஆக முதலில் அண்ணன் தங்கை உறவு இன்னும் இறுகியது.
அப்போது எல்லோரிடமும் மகாவின் பெண்ணை அமருக்கு மணமுடிக்க பேசிக் கொண்டிருக்கிறோம்… என சொல்லப்பட்டது.. எனவே சொந்தங்களுக்கு நிறைய… தீனியோடு அந்த வைபவம் நிறைவடைந்தது. ப்ரியா இன்னும் இரண்டு நாட்கள் தாய் வீட்டில் சீரடிவிட்ட்டு… பெங்களூர் கிளம்பினாள்.
நாட்கள் நகர தொடங்கியது… சுமதி மெல்ல அமரின் திருமண பேச்சை எடுத்தார் சம்பூரணத்திடம்… பெண்ணுக்கு எப்போது படிப்பு முடியும், ஜாதகம் பார்ப்பதா… வேண்டாமா.. பெண் பார்க்க எப்போது வருவது… என எல்லா பேச்சு வார்த்தையும் பாட்டியிடம்தான் சென்றது.
ஜாதகம் பார்க்க வேண்டாம்…. இருவரின் நட்சத்திரம் வைத்து திருமணத்திற்கு நாள் குறித்துவிடலாம் என முடிவு செய்தனர்… அபி ஊரிலிருந்து வரும்போது… நிச்சையம் பெண்பார்ப்பு எல்லாம் சேர்த்து ஒருநாள்  வைத்துவிடலாம்… இப்போது திருமணத்திற்கு நாள் குறிக்கலாம் என பேசிக் கொண்டனர்.. ஆக அதிலேயே நாட்கள் நகர்ந்தது.
அபி ஜெர்மனிலிருந்து வருகிறாள்… இந்த முறை… அமர்… கொச்சின் வந்திருந்தான், காரில்… அவளை… அழைக்க வந்திருந்தான். இரவு.. கிட்ட தட்ட நடுநிசியில் வந்தது அவளின் ப்ளைட்.. ஆனாலும் ஒருமணி நேரம் கடந்தது…
அவளை பார்க்கும் நேரத்திர்க்காக அவனின் கண்கள் தவமிருந்தன… அந்த அலட்சியம் எங்கோ சென்றுவிட்டது போல… அபியின் வருகையறிந்து… மையலான பார்வையுடன் வழிபார்த்து நின்றிருந்தான்..
ப்பா… அழகாக மாறியிருந்தாள் அபி… இன்னும் நளினம் கூடி… நிறமும் கூடி.. இருந்தாள். எல்லா போர்மாலிடிஸ்.. முடித்து அபி வரும் வரை… அமரின் கண்கள்.. அவளையே மொய்த்துக் கொண்டிருந்தது.
பிரிவு எப்போதும் நேசத்தை அதிகாரிக்கும்.. அபி அருகில் வர வர.. அமர் பரபரப்பானான்.. ஏனோ உடல் பொருள் ஆவி எல்லாம் அவளின் அந்த புன்னை முகத்தில் நிலைக்க… இந்த பிசினஸ் மேன்… கோச்… மகன்… ரவுடி.. என அவனின் அவதாரங்கள் எல்லாம்.. மெல்ல கஷண்டுகொள்ள.. தீராதா காதலன் பார்வையால் அவளை தாக்க தொடங்கினான்…
ஆனால், அவளுக்கு அந்த பரபரப்பு இல்லை போல… அபி “கோச்” என்றாள் கண்ணில் சிரிப்புடன்.. அமர் குரலே வராமல் நிக்கவும்..  அவனை இயல்பாக்கும் எண்ணத்தில் லேசாக எம்பி கழுத்தோடு அவனை அணைக்க… காதலன் அமர்… காற்றாகி, அவளை இடுப்போடு அள்ளிக் கொண்டான் “பத்தாது அபி…” என்றான்.. காதலான குரலில்… எங்கு இருக்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல்.. அப்படியே கட்டிக் கொண்டான் அவளை.
கண்கலங்கியது அவளுக்கு சுதாரித்து “பத்தும்… பத்தும்… “ என சொல்லியபடியே தள்ளி நடந்தாள். தானும் ஓடி வந்து, அருகில் இருந்த  லக்கேஜ்ஜை ஒரு கையால் இழுத்து கொண்டு அவளின் கையை விடாமல் பற்றிக் கொண்டான்.. அவர்களின் காதலும் அந்த பெட்டியுடன் வந்தது… பொறுமையாக வந்தனர் பார்க்கிங்கு… அதே பொறுமையாக பேசியபடியே காரேடுத்தான் அமர். 
ப்பா… நெடுந்தூர பயணம்… கூடவே, நெடுநாள் பார்க்காத காதலி இப்போது அருகில்… பேச்சே வரவில்லை அவனுக்கும் அவளுக்கும்… அவர்களின் சுவாசமும்… கண்ணும், உதடும் அவர்களின் பேச்சை கேட்க்காமல்… தங்களின் துணையை ஆவலாக பார்த்துக் கொண்டே இருந்தது…
ஒருகட்டத்தி… அமர் வண்டியை நிறுத்திவிட்டான்.. ஒரு காபி ஷாப்பாக்க பார்த்து, வந்து காபி குடித்து… இயல்பாகி… அதன் பின்… வீட்டு விஷயங்கள் பேசினார்… வேறு தோன்றவில்லை…
அபி “உங்க போன் கொடுங்க… அப்பாக்கு சொல்லிடலாம்” என்றாள்.
“தூங்குவாங்களோ… என்னமோ, டிஸ்டப்பண்ண வேண்டாமே” என்றான்.
கூடவே “உன்… ரவுடி அண்ணனனுக்கு சொல்லு… நீ வந்துட்டேன்னு…
நான் எதோ… உன்னை கடத்திடு போய்டுவேன்ர மாதிரியே பார்த்திட்டிருந்தான்… வரும்போது…” என்றான்.
அபி “ச்சு… சும்மா அண்ணன் சொல்ல கூடாது… 
அண்ணன் நிம்மதியா தூங்குவான்… 
அப்பாக்கே சொல்லலாம்” என்றாள்…
அமர் “நீ, போன் பண்ணு அவனுக்கு… எல்லாம் என்னை நினைச்சே தூங்காம இருப்பான்” என்று சொல்லி வேண்டுமென்றே.. அமரை அழைத்து சொல்ல வைத்தான்.
அபி சொன்னது போல்… அகிலன் உறங்கவேல்லாம் இல்லை போல, அபியிடம் “கிளம்பிட்டீங்களா… எங்க இருக்கீங்க..” என்றான்.
அபி அமரிடம் கேட்டு, இருந்த இடம் சொல்ல… அகிலன் “இப்போ வண்டி எடுத்தா… சரியா… த்ரீஹன்ட் ஆப் ஹெர்ஸ்ல வந்திடலாம்… 
நடுவுல எங்கயும் நிக்க கூடாது…
மோர்னிங் செவென் தெர்ட்டிக்கு சிட்டிகுள்ள வந்திடலாம்…
மோஸ்ட்லி எயிட்… நீ, வீட்டுக்கு வந்திருக்கணும்… சரியா” என்றான் அண்ணன் கட்டன் ரைட்டாக…. 
மீண்டும் அவனே “அப்பாக்கு மெசேஜ் மட்டும் போடு… நான் பார்த்துகிறேன்” என்றான். அபி போனை வைத்துவிட்டு… 
அமரிடம் “எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்திடம்னு சொல்லிட்டான்…
எதுக்கு அண்ணனுக்கு போன் பண்ண சொன்னீங்க, 
தூங்கிட்டிருந்தான் போல, கோவமா பேசறான்…” என்றாள்.
மீண்டும் காரை சற்று தள்ளி நிறுத்தி… தன்னவளை எட்டி அனைத்துக் கொண்டான்.. அபி “ம்… என்ன கோச்… வண்டி லைட்” என எதோ சொல் வர… நிமிர்ந்து அவளின் உதட்டில் விரல் வைத்து… “ஷ்ஷ….” என்றவன்..  அன்று போல இன்றும் பட்டும்படாமல் உதட்டில் முத்தமிட்டு விலகினான்.. ஒருபெருமூச்சொடு வண்டி எடுத்தான்.
அபி மீண்டும் பொறுமையாக தன் தந்தைக்கு மெசேஜ் செய்துவிட்டு “ஏன் அண்ணன்கிட்ட பேச சொன்னீங்க” என்றாள் ஆராய்ச்சியாய்…
அமர் “ ஒண்ணுமில்ல சும்மாதான்….” என்றான்.
“சொல்லுங்க… ஏன் ஏதாவது சொல்லிட்டானா..” என்றாள் ஆராய்ச்சியாய்…
“ஹேய்… சொல்லிடுவானா அவன்… சும்மா பேச சொன்னேன்” என்றான்.
அபி முறைத்தாள் “ஹேய்… இது பாய்ஸ் தாட்… உனக்கு புரியாது, விடேன்” என்றான்.
அபி “என்ன… நீங்க நல்லவன்னு சொல்ட்ரீங்களா… எங்க அண்ணனுக்கு” என்றால்… கிண்டலாக…
“ஆமாம் உங்க அ(நொ)ண்ணன் பெரிய சிபிஐ ஆபிசரு… போடி” என்றான்.. அபியும் எப்படியெல்லாமோ கேட்டும்.. திரும்ப பேசவில்லை அவன்.. சொல்லவேயில்லை அமர்.
சரியான நேரத்திற்கு வந்துவிட்டான் அமர்.. ஆனாலும் சிட்டியை நெருங்கும் முன்… காரை நிறுத்தி, இறங்கி… ஒரு அரைமணி நேரம்..  சும்மா.. அவளுடன் பேசியபடியே கடத்தியே… பின்தான் வந்தான், அபி வீட்டுக்கு. அபிக்கு எதோ புரிவது போல் இருந்தது… கேட்கவில்லை.. சிரித்தபடியே அமர்ந்து கொண்டாள்.
அபியின் வீட்டில் இருவருக்கும் நல்ல வரவேற்பு… அமரை பிரெஷ்ஷப் செய்துவர ஒரு அறைக்கு அனுப்பினர்… 
அமர் “இல்ல மாமா கிளம்பரேன்…” என சொல்லியும் விடவில்லை அவனை.. அவனுக்கு இருந்த டையடில், சற்று படுத்தான்… அங்கு உறங்கியும்விட்டான்..
பின் ஒருமணி நேரம் சென்றுதான் எழுந்தான்… குளித்து அதே உடையணிந்து வெளியே வர… அதனை பார்த்து… அகிலனின் புது உடையிலிருந்து ஒன்றை எடுத்து கொடுத்தார்… மகா… அமர் ‘வேண்டாம் வேண்டாம்’ என்க… யார் விட்டார்கள் அவனை… 
உடைமாற்றி வந்தபின், அபியை அழைத்து அமரவைத்து உணவு பரிமாறினார் இருவருக்கும்.. அமர் தயங்கவெல்லாம் இல்லை, ஏதோ பலநாள் பழகியவன் போல, பாட்டியுடன் வம்பு பேசிக் கொண்டே உண்டான்.
சுவாமி… இவனிடம் “தேங்க்ஸ் ப்பா…“ என்றார்.
“மாமா… இது என் வேலை… நோ தேங்க்ஸ்…” என்றான் அபியி பார்த்து சட்டென.. கண்சிமிட்டி… சிரித்தபடியே…
“நான் இப்போ கிளம்பிடுன் அமர்…” என்றார் சம்மந்தம் இல்லாமல். அபி விழிக்க…
அமர் லேசாக சிரித்துக் கொண்டு… “நான் இப்போ கிளம்பிட்டேன் மாமா…” என்றான்.
“நீ இருப்பா… நான் சும்மா சொன்னேன்” என்றார்..
அமர் “இல்ல, அப்பா தனியா பார்க்கணும்,
நான் கிளம்பறேன்… மாமா…. 
வரேன் அத்த…” என்றவன் அப்போதுதான், உள்ளிருந்து வந்த பாட்டியிடம் “பாட்டி கம்பனிக்கு வாங்க… உங்கள் மாதிரி ஒரு ஆள் எனக்கு ஹெல்ப்க்கு வேண்டும்” என்றான் சிரித்தபடியே..
அவரும்.. “நீ கம்பனிய மட்டும் என் பேரில் எழுதி கொடு பேரா…. மத்தத நான் பார்த்துக்கிறேன்…” என்றார் சலிக்காமல்… சம்பூரணம்.
“எனக்கு இப்படியொரு பாட்டி இல்ல…
அதிஷ்ட்டமெல்லாம் அந்த… ரவுடிக்குதான்..” என்றான் அவரிடமே…
அவர் “அபிதானே உன்னோட அதிஷ்ட்டம்… நீ கவலையே படாத… அவ பார்த்துப்பா எல்லாம்” என்றார்..
அமர் “ம்கூம்… எங்க…” என் இழுத்து தன்னவளை நோக்க… அவள் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள்..
“அப்புறம், வரேன் அபி…” என்றான். கிளம்பியும்விட்டான்… ஒருவழியாக. அபிக்கு மனதேயில்லாமல் நின்றாள்.. வாசல்வரை வந்து வழியனுப்பினாள்.

Advertisement