Advertisement

மின்னொடு வானம் நீ…
21 
அபி சென்று ரெண்டுமாதம் முடிந்திருந்தது… வேகமான நாட்கள், அதைவிட வேகமாக.. அபி, சுழன்று கொண்டிருந்தாள்… நிறைய பயிற்சி வகுப்புகள்… அதை தவிர… கம்பெனி விசிட்… செமினார்.. பேப்பர் சமிஷன் என நாட்கள் பறந்தது அவளுக்கு… கூடவே, அங்கேயுள்ள தமிழர்களின் பார்டிஸ்சில் பாடவும் செய்தாள்… தன் ப்பெஷனை விடாமல். அபி பிஸி.
இந்த நிலையில்… ப்ரியாவின் தாலிமுடியும் வைபவம் வந்தது… அதன் பொருட்டு… சுமதியும், முரளியும் முறையாக அழைக்க மகாவின் வீட்டிற்கு வந்திருந்தார்.. 
அமர்களப்பட்டது வரவேற்பு… சம்பூரணம், ஹாலில் அமர்ந்திருந்தார்… இப்போதெல்லாம் தன்வேலைகளை பார்க்கும் அளவுக்கு மட்டும்  நடமாடுகிறார்… வயது அவரை சற்று படுத்த தொடங்கியிருந்தது. ஆனாலும், தன் இடத்தை விட்டு தராமல்.. இன்னும் வீட்டு பொறுப்பை கையில் வைத்திருந்தார்.
இன்று இவர்கள் வருகிறார்கள் எனவும்… சமையலை தடபுடலாக்கினார்.. மெனுவை.. அவரே சொன்னார்.. நாலு வகை… ஸ்வீட், நாலுவகை டிபன் என விருந்தை அமர்களப்படுத்தினார். பாரபரப்பாக இங்குமங்கும்… எல்லோரையும் ஏவிக் கொண்டிருந்தார்… தன் தள்ளாமையை மறந்து..
இனிமையாக வரவேற்றார்.. காலை நேரத்திலேயே வந்திருந்தனர்… முரளி தம்பதி.
பெற்றோரின் வரவை பற்றி, மகாக்கு அழைத்து சொல்லியிருந்தான் அமர்… மகாவும் காலை உணவுக்கு வருமாறு கேட்டுக் கொண்டார்.. அதன் படியே நடந்தது..
வரவேற்று அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்… எந்த தயக்கமும் இல்லாமல் பேச தொடங்கினார்… சம்பூரணம். 
முரளியும் சுவாமியும் எதையும் பொருட்படுத்தாமல்.. தங்களின் பேச்சை தொடங்கினர்.
சுமதி, மகா.. இருவருக்கும் இயல்பான தொடக்க நேர தயக்கமே… அதன்பின்  இருவரும் ஸ்ரத்தை எடுத்து பேசினார்.. மகாக்கு, சுமதியின் இந்த மாற்றமே   போதுமானதாக இருந்தது.. 
முதலில் காபி தர செய்தார்… சம்பூரணம். அது ஒரு அரைமணி நேரம் கடந்திருக்க… பாட்டி “மகா… சாப்பிட கூப்பிடு… 
சாப்பிட்டு அப்புறம் பேசலாம்” என்றார் தன் மருமகளிடம். சொல்லியவர் உள்ளே சென்று… எல்லாவறையும் எடுத்து வைக்க செய்தார்..
அனைவரும் அமர்ந்தனர்… சம்பூரணமும் அமர்ந்து கொண்டார் அவர்களுடன் இப்போது கொஞ்சம் கலகலப்பாக சென்றது… பிள்ளைகளின் கலாட்டாக்கள்.. அவர்களின் லீலைகள் என பேச்சு சென்றது.
சம்பூரணம் நடுவில் வருத்தமும் பட்டார்… ‘எல்லாம் என்னாதான் ப்பா… பாவம் அவ’ என தன் மருமகளை பாராட்டவும் செய்தார்.
முரளி ஏதும் சொல்லவில்லை.. தாத்தா வைத்தியலிங்கம்.. சமாளிக்க தொடங்கினார் “விடு பூரணம்… எல்லாம் நல்லதுக்குதான்… 
இப்போ பாரு… உறவு அடுத்த தலைமுறையிலும் விடாமல் நெருங்கியிருக்கும்…” என்றார் அதட்டலான குரலில்.
‘சரிதானே’ என முரளியும் ஆமோதிக்க… சம்பூரணத்திற்கு அந்த தம்பதியை பிடித்தது.. அதுவும் முரளியின் அமைதி சம்பூரணத்தை ஈர்த்தது.. வாய்க்கு வாய்.. ‘முரளிப்பா… இது சாப்பிடு… 
இது எங்க மருமக ஸ்பெஷல்… 
உனக்கு சுகர் இல்லையே… அப்போ, இந்த ஸ்வீட் எடுத்துக்கோ…’  என கவனித்தார்… விருந்தோம்பல் என்பது சிலருக்குதான் கைவரபெரும்… அது சம்பூரணத்திற்கு வந்தது போல, முரளியும் கட்டுபட்டார் அவரின் அன்புக்கு..
மகாக்குதான் வருத்தமாக இருந்தது… ‘எத்தனை நாளை இழந்துவிட்டேன் நான்’ என தான் தோன்றியது.. எனினும் தன் மாமானார் சொன்னது போல, எல்லாம் நல்லதுக்கு என சமாதானம் செய்து கொண்டாள்.
வைத்தியலிங்கம், மிகவும் கவனமாக பேசினார்.. அவரால்.. தன் மனைவிபோல்… சட்டென ஏற்க முடியவில்லை… அதற்காக ஒதுங்கவில்லை.. அளவான பேச்சு… கொஞ்சம் அவர்களுக்கு தனிமை கொடுத்து… விலகியும் இருந்தார்… கம்பீரம் குறையாமல்.
வெள்ளியில் அழகான மயில் போன்ற குங்குமசிமிழை தன் நாத்தனார்க்கு பரிசாக கொடுத்து அழைத்தார்… “உன் மருமகளின் தாலி பெருக்கும் வைபவம்… வந்து முன்னின்று நடத்தி கொடு” என உரிமையாக அழைத்தார் சுமதி. 
கண்கலங்கியது மகாக்கு.. பிறந்தவீட்டின் ‘வா..’ என்ற அழைப்பு இத்தனை இனிக்குமா… இதுவரை… தன் கணவனின் மூலம்… எத்தனை… அழைப்பு… ஆனால் பிறந்த வீடு.. என்பது தனிதானே… பிறந்தவீடு பெண்களின் பலம்… எத்தனை வயதானால் என்ன. (தலைமுறைகள் போனால் என்ன.. என் அண்ணன்… என் பெரியப்பா மகள்.. சொல்லிக்கொள்வோம்… விடாமல் பற்றிக் கொள்வோம்… உறவுகளை…)
இரு குடும்பங்களும் அலட்டலில்லாமல் பேசிக் கொண்டிருந்தனர்.. அகிலன் இவர்கள் வருவது தெரிந்தே.. சீக்கிரம் வெளியே சென்றுவிட்டான். அபியின் வண்ண படம்… ஹாலில் இருக்க… சுமதியும், முரளியும் முதல்முறை.. பார்த்தனர் தங்கள் மருமகளை… அவளின் விழியே… அவர்களை முதலில் ஈர்த்தது.. எதோ… ப்ரியாவின் சாயல் தெரிந்தது… அவளிடம் போல, கற்பனையோ.. இல்லை சமாதானோ… அமர் கண்ட அதே சாயலை அன்னையும் கண்டார் அபியிடம்… எங்கோ பார்த்தது போல்… ஒரு தோற்றம்… 
தன் அமருமகளின் அழகு… சுமதியை வசீகரிக்கவே செய்தது… இப்போது புரிந்த்தது தன் மகனின் நிலை.. சீக்கிரம் திருமணம் வைக்க வேண்டும் என நினைத்துக் கொண்டார்.
உணவு முடிந்து… மீண்டும் ஒருமணி நேரம்… பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்பினர். 
#%#%#%#%#%#%##%#%#%
அடுத்த நான்குநாட்களில் விழா… அதற்கு நடுவில் அபி, அமரை ஒரு அரைகுறை விடியலில் அழைத்தாள்… அடித்து பிடித்து போனை எடுத்தான் அமர்.. 
அபி “ஹலோ… வீடியோ கால் கூப்பிடுங்க” என சொல்லி வைத்துவிட்டாள்… பாவம் அமர்க்கு தூக்கமே கலையவில்லை, ஒன்றும் புரியவில்லை… இப்படி இவள் அழைத்ததேயில்லை.. கொஞ்சம் கனவு… கொஞ்சம் கோவமாக தன்னவளை அழைத்தான் அமர்..
உடனே அட்டென் செய்தாள் அபி… அங்கே அவளை காணம்… ஸ்க்ரீனில்… ஆனால்… அங்கு பார்த்தால்… ஒரு ஊரே கூடி நிற்கிறது… சுற்றியும் விளக்குகள்.. மின்ன.. சின்ன சொர்க்கம் போல… நாலுபேர் இதமாக பாடிக் கொண்டிருக்க.. அமர் இங்கே கண்ணை நன்றாக கசக்கிக் கொண்டு அமர்ந்தான்…
இப்போது அபி ஸ்க்ரீனில் வந்தாள் “கோச்… பிரெஷ் ஆகிட்டு வாங்க… எல்லோரும் உங்கள பார்க்கணுமாம்…” என்றாள்.. அந்த போனின் முன் நின்று. 
அமர் “எதுக்கு அபி, என்னாச்சு” என்றான்..
அபி “ப்ளீஸ், சீக்கிரம் போயிட்டு வாங்களேன்… வந்து சொல்றேன்” சிணுங்கினாள்… ஹஸ்கி வாய்சில்… தொலைந்தே போனான்… அதில் காதலன்…
அடுத்த இரண்டு நிமிடத்தில் சொன்னபடி… வந்து அமர்ந்தான்.. பேஸ் வாஷ் செய்து.. தலையை கைகளால் கோதி. கொண்டே, எதோ பார்ப்பது போல் வந்து அமர்ந்தான்.. 
அபி “சூப்பர் கோச்… தேங்க்ஸ்” என்றாள் மீண்டும் அதே ஹஸ்கி வாய்சில்… இப்போது அந்த போனிருக்கும் ஸ்டான்டை… அந்த கும்பளின் அருகில் எடுத்து சென்றாள்..
முதலில் ஆதி வந்தான் “ஹாய்… மாப்பிள்ளை அமர்,….” என்றான் தமிழில்… அங்கு நிறையபேர் இளமை பட்டாளம் அமர்ந்திருந்தனர்… அவனை தொடர்ந்து, ஒரே சத்தம் “மாப்பிள்ளைளைய்ய்ய்யய்ய்ய்யி………….” என எழுந்தது.
அமர்க்கு தூக்கமெல்லாம் தொலைதூரம் சென்றது… நிமிர்ந்து அமர்ந்தான்.. அந்த சென்டிமீட்டர் மொபைல் திரையில்… முழு மீட்டருக்கும் ஏதேதோ முகங்கள்தான் தெரிந்தது.. அமர் அதிர்ச்சியாக பார்க்க…
ஆதி.. “உங்களுக்கு சர்ப்ரைஸ்… “ என்றான். அதற்குள் ஆதிக்கு பின்னிருந்து ஒரு பெண் வந்து கிள்ளை தமிழில்.. “உங்களுக்காக… மூணு சாங்… பன்னபோறோம்..  போர் யூ… என்ஜாயிங்… நொவ்” என சொல்லி.. அபியை அழைத்து அருகில் நிறுத்தினாள்.
ஏற்கனவே அங்கு பாடிக் கொண்டிருந்தனர்.. ஒரு ட்ரூப்… இப்போது அபி, போனின் அருகில் வந்து… “பார்க்கிறீங்களா… நமக்காக… ம்கூம்… உங்களுக்காக… எங்க ட்ரூப்… ஒரு சாங்… பாடுறாங்க” என்றாள்.
அமர், அந்த திருவிழாவில் தொலைந்தே போனான்… என்ன நடக்குது தெரியலை… எதோ சொல்றாங்க புரியலை என விழித்தபடியே அமர்ந்திருந்தான்…
அழாகான சாரி அணிந்த இரண்டு பெண்கள்… வேட்டியில் இரண்டு ஆண்கள் மென்மையான பழைய குரலில் “ம்… 
அம்பிகாவதி… கண்ட நிலா…
அமராவதியை தின்ற நிலா…
கம்பன் பாடிய வெள்ளை நிலா…
கவியிலாடிய பிள்ளை நிலா…ஆ….
கவியிலாடிய பிள்ளை… நிலா…ஆ…
அன்று வந்ததும் அதே நிலா….
இன்று வந்து அதே நிலா… 
சேச்ச…
என்றும் உள்ளதும் அதே நிலா…
இருவரு கண்ணுக்கும் ஒரே நிலா… ஆ…. 
இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா…” என லேசாக மியூசிக்குடன் கைகளை தட்டிக் கொண்டே பாடினர்.. இப்போது டியூன் மாறுது…
ஒரு முரட்டு ஆண் குரல்… “ராத்திரி நேரத்தில்…
நானொரு இராட்சன்… போல்வருவேன்…
அபியை தருவேன்…னென..
நீ, சொல்லும் நாள்வரை.. போரிடுவேன்…
வானம் வந்து சாய்ந்தாலும்…
அகிலன் என்மேல் வீழ்ந்தாலும்…
வேங்கை போல பாய்ந்து வந்து பெண்ணை தூக்குவேன்…..
சுவாமிநாதன் பொண்ணு வேண்ணும்…
சுவாமிநாதன் பொண்ணு வேண்ணும்….ஓ…ஓ..
சுவாமிநாதன் பொண்ணு வேண்ணும்….
மாடிமேல மாடி வைச்சு..
கோடி கோடி சேர்த்துவிட்ட சீமானே…
ஹலோ…ஹலோ… கமான் கமான் சீமானே…
ஆளு அம்பு..சேனை வச்சி போரடிக்கும் கோமானே…
ஹலோ ஹலோ கமான் கமான் கோமானே… “ என எல்லாம் இவனை கைகாட்டி பாடியது.. ட்ரூப்…பாட.. ஆதியும் கூட சென்று, இவனை கைகாட்டி, நின்று ஆடிக் கொண்டிருந்தான்… மீண்டும் ட்யூன் மாறியது… இப்போது மெல்லிய குரலில்… அபியும் அருகில் அழைத்து கொண்டு பாடியது… அந்த கூட்டம்…
“ம்… அழகு ஒரு மேகிக் டைச்… ஓஒ…
ஆசை ஒரு காதல் சுவிட்ச்… ஒவ்வ்…
அழகு ஒரு மேகிக் டைச்… ஓஒ…
ஆசை ஒரு காதல் சுவிட்ச்… ஒவ்வ்…
ஆயிரம் அழகியர் பார்த்ததுண்டு…
ஆனால்… அவள் போல் பார்த்ததில்லை…
வா… என்பதை விழியில் சொன்னால்…
மௌனம் என்றொரு… மொழியில் சொன்னால்…
அவளுக்கென்ன அழகிய முகம்…
அவனுக்கென்ன…
இளகிய மனம்… நிலவுகென்ன…
இரவினில் வரும் உறவுக்கென்ன…
உயிருள்ளவரை தொடர்ந்து வரும்…. ம்……” என பாடி முடித்து… கட்டை குரலில் “திஸ் சொங்க்ஸ் டெடிகேட் டூ… அமர்…. புது மாப்பிள்ளை…” என கத்தியது கூட்டம்… 
எல்லாம் வேற்று நாட்டுகாரர்களும் இருந்தனர்… இளமையால் துள்ளியது அந்த இடம்… எதோ டிரஸ் கோடு கூட உண்டு போல…எல்லாருக்கும். ஒரு முப்பது நபர்களுக்கான பார்ட்டிமட்டும் போல.. வண்ணமயமான அவர்களின் இரவில்… அபிஅமரையும் சேர்த்துக் கொண்டனர். இதெல்லாம் இளமையின் கொண்டாட்டங்கள்… இப்போது அதியின் மூலம் அமரின்  புகழ்… சென்றது. எனவே சும்மா ஒரு.. கலட்டாகாக… உருவாகினர்… 
அமர் “ஹேய்… தேங்க்ஸ் கைஸ்… நாட் எச்பெக்ட் திஸ்… 
தேங்க்ஸ் கைஸ்” என சொல்லியபடியே இருந்தான். யார், என்ன என தெரியாமல்.. அபிக்காக… தன்னையும் சேர்த்து வாழ்த்தும்… உரிமையுடன் கலாட்டா செய்யும்… நட்புகள்… அமரை கவரவே செய்தது போல… “யூ கண்டினியூ கைஸ்… 
மோர்னிங் கால் யூ… 
அன்தேன் தேங்க்ஸ்… போர் யுவர் சாங்..” என சொல்லி அபியிடம் பேசிக் கொண்டிருந்தான் அமர் முகம்கொள்ளா புன்னகையுடன்.. 
பின்னணியில் எதோ ஆங்கில பாடல் ஒலிக்க… மெல்லிய குரலில் ஓர் ஓரமாக வந்து அமருடன் கதைத்துக் கொண்டிருந்தாள் அவனின் காதலி. நேரம் கடந்தும் பேசி முடிக்கவில்லை இருவரும்… இப்படி அழகான நிகழ்வுகளால்… இருவரின் பிரிவும் இனிமையாக கழிந்தது.

Advertisement