Advertisement

மின்னொடு வானம் நீ…
20 
அகிலனை இந்த மூன்று நாளாக தேடிக் கொண்டிருக்கிறாள்… அபி, கண்ணில் படவில்லை அவன். இரண்டு நாள் லீவ்விற்கு பிறகு இன்றுதான் எக்ஸாம். எனவே… அபி ரெடியாக நிற்க… தன் அண்ணன் வரவில்லை ட்ரோப் செய்ய… முகத்தை தூக்கி வைத்துக் கொண்டேதான் எக்ஸாம் எழுத சென்றாள்.
மாலையில் வந்தவுடன்.. அழைத்திருந்தான் அமர்… “என்ன எக்ஸாம் எப்படி பண்ணிருக்க… “ என்றான்.
அபி “ம்.. பரவாயில்ல…” என ஏதோபோல்… ஒரு பதில் சொன்னாள்.
“என்னாச்சு… ஏதாவது ப்ரோப்லம்மா…” என்றான்…
“அகில் ண்ணா… எங்கிட்ட பேசவேயில்லை… மூணு நாளாச்சு…” என்றாள்.. கரகரத்த குரலில்…
“அதுக்கு நான் என்ன செய்யறது… 
சரி… நான் அப்புறம் பேசறேன்” என வைத்துவிட்டான்.
அபிக்கு அமர் சட்டென வைத்தது, தாங்கவே முடியவில்லை.. உடை மாற்றிக் கொண்டு கீழே வந்தாள்.. இன்னும் யாரும் ஹாலில் வந்திருக்கவில்லை. எனவே அப்படியே ஷோபாவில் அமர்ந்து எதையோ பார்த்துக் கொண்டிருந்தாள் டிவியில்..
ஒருமணி நேரம் சென்று அகிலன் வந்தான்.. உள்ளே. அபி கிட்டத்தட்ட.. ஓடி சென்றாள் அவனிடம் “ண்ணா… நில்லு, ஏன் என்னை ட்ரோப் பண்ண வரல” என்றாள் எடுத்த உடன்.
அகிலன் தன் தங்கையை எரிச்சலாக பார்த்தான்… மகா இவர்களின் சத்தம் கேட்டு, தன் மாமியார் அறையிலிருந்து வெளியே வந்து பார்த்தார் “அகில், மதியம் ஏன் டா சாப்பிட வரல…” என்றார்.
“இல்ல அர்ஜெண்டா ஒரு மீட்டிங்… அதான் வரமுடியல, போனும் பேச முடியல, வெளிய சாப்பிட்டேன் ம்மா” என்றான் பொறுப்பாய்.
அபி “ண்ணா… நான் கேட்டதுக்கு பதில் சொல்லுண்ணா” என்றாள்.
அமர்ந்து கொண்டான் சோபாவில் தலையை பின்பக்கம் சாய்த்து அமர்ந்து கொண்டான்.. ஏதும் பேசவில்லை. அபி..”என்ன ண்ணா… என்னை அவாய்ட் பன்றதானே” என்றாள்.
வெடுக்கென நிமிர்ந்தான் “இல்ல அபி, அப்படியெல்லாம் இல்ல, சாரி எதோ யோசனை… வேற ஒன்னுமில்லா டா…
எப்படி எக்ஸாம் செய்த…
இன்னும் எத்தனை எக்ஸாம் இருக்கு” என்றான் பொதுவாக..
அபிக்கு அவன் கேட்டதே போதுமானதாக இருக்க… பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.. “ஒகே… ண்ணா… இன்னும் மூணு இருக்கு….” என்றாள்.
அகிலன் “அங்க… அங்க போய் படிப்பியா… இல்ல, அவ்வளவுதானா” என்றான் ஒருமாதிரி குரலில்.
அபி அகிலனின் அருகில் வந்தாள்…”அண்ணா… கோவமா” என்றாள்..
அமர் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடிக் கொண்டான்… இன்னும் அமரை தன் தங்கையுடன்.. பொருத்தி பார்க்க முடியவில்லை.. அதற்காக இந்த இரண்டு நாட்களாக முயன்று கொண்டிருக்கிறான்… பலன்தான் கிடைக்கவில்லை.
இப்போது அபி இப்படி கேட்கவும் என்ன சொல்வது என தெரியவில்லை.. அவளுடைய விருப்பத்தையும் மதிக்க வேண்டுமே.. என்ற எண்ணம் மட்டுமே இப்போது அகிலனிடம் “அப்படியெல்லாம் இல்ல அபி,
எதோ… ப்ளீஸ்… இதபத்தி நாம பேச வேண்டாமே… 
வேற பேசலாமே…
சொல்லு எங்க போலாம்….
‘ipaco..’ போலாமா… எதோ ஆபர்… இருக்கு… 
போலாமா டா அபி, ஈவ்னிங் அப்பா பார்த்துக்காங்க… 
நான் ப்ரீ…” என்றான் அவளை சமாதானபடுத்தும் எண்ணத்துடன்.
அபி மௌனமானாள்… இனி தன் அண்ணனிடம் கேட்டு பலனில்லை.. என உணர்ந்தவள்… “ ச்சு… போ ண்ணா… நான் வரல… நீ எப்போ சரியா பேசுரீயோ… அப்பத்தான் வருவேன்..“ என சொல்லியவள்.. எழுந்து சென்றுவிட்டாள்.
அகிலன் “ஹேய்… நில்லு டா… அபி…” என்றான். காதிலே வாங்கவில்லை.. அபி சென்றுவிட்டாள். அகிலனும் ஒன்றும் சொல்லாமல் அமர்ந்து கொண்டான்.
அபிக்கு எப்போதும் போல நாட்கள் சென்றது… அவளின் நாட்கள் மட்டும் பறப்பதாக தோன்றியது… அபிக்கு. அமருடன் அதிகம் பேச்சு இல்லைதான்… இரவு மட்டும் அழைப்பான் அவன்.. பொதுவாக பேசுவர்.. அதுவும் மறுநாள் எக்ஸாம் இருக்கும் என்றால்… அமர் அளவாய் பேசி வைத்துவிடுவான்.
அகிலன் தன் தங்கையை எப்போதும்போல், கல்லூரியில் ட்ரோப் செய்து பிக்கப் செய்தான்… ஆனால் அபிக்கு இன்னும் கோவம் தீரவில்லை… முன்பெல்லாம் எதற்கெடுத்தாலும் அவனை நாடுபவள்… இப்போது, ஒதுங்கியே இருந்தாள்.. அகிலன் என்ன செய்வது என தெரியாமல் அவளுடன் பேச… நினைத்து… அமைதியாகிவிடுவான்… எதோ தடுக்கிறது அவனை…
இப்படி அண்ணன் தங்கைக்கான உறவு தவிர மற்ற எல்லோரிடமும் அபிக்கு… நல்ல உறவே தொடர… அபி பொறுப்பாக மாறினாள்.. ம்.. தொட்டதுகெல்லாம் அகிலனை எதிபார்ப்பதை நிறுத்த தொடங்கினாள்.. தனியாகவே சென்றாள் எங்கும்.. அம்மாவிடம் அதிகம் ஒன்றினால்..
இதெல்லாம் அகிலனுக்கு புரிகிறது… இருந்தும் விட்டுவிட்டான்… திருமணமாகி செல்ல வேண்டியவள்.. மேலும் அவனுடன்… அப்புறம் எல்லாத்தையும் அவள்தானே பார்த்துக்கணும்… இருக்கட்டும்.. என் தங்கை.. தைரியமாகவே இருக்கட்டும் என மனதுள்ள சொல்லிக் கொண்டான்… அருகில் நெருங்கவில்லை… பிக்கப் ட்ரோப் செய்வதை தவிர… 
அபிக்கு எல்லா எக்ஸாம்களும் முடிந்து.. அமர் அதற்காகவே காத்திருந்தான் போல.. அன்று மதியம் பனிரெண்டு மணிக்கு அழைத்தான் அபியை “அபி… இன்னும் கொஞ்ச நேரத்தில் வருவேன்… வெளியே போகனும்… ரெடியாகு” என்றான்.
அபி “அய்யோ அண்ணன் திட்டுவான்” என்றாள் எடுத்தவுடன்…
அமர்… “ஏய்… நான் பேசிக்கிறேன், அபி… 
நீ அவன் பேரை சொல்லாத, கிளம்பு…” என்றான்.. 
சிரித்துக் கொண்டே “ம்…” என்றாள்..
சுவாமிக்கு போன் செய்து பெர்மிஷன் வாங்கியிருந்தான் அமர்… அடுத்த அரைமணி நேரத்தில் வந்தான் அவளை அழைக்க… 
சரியாக இப்போதுதான் அகிலன், உள்ளே நுழைந்தான்… இவர்கள் வெளியே வந்தார்கள்… அபி “ண்ணா லஞ்ச்க்கு வெளியே போறோம்… ண்ணா” என்றாள் அமரை முன்னே அனுப்பி வைத்துவிட்டு, நாகரீகம் கருதி…
அகிலனின் மனம் கேட்க நினைக்கவில்லை, ஆனாலும் “எங்க” என்றான்.. அனிச்சையாய்.. சட்டென… இயல்பு போல…
“தெரியல… இப்போதான் வந்தாங்க கோச்..” என்றாள் தயங்கி… “கேட்டு சொல்லவா…” என்றாள் அப்பாவியாய்… அகிலன் முனகிக் கொண்டான் “ஆமாம் நீ கேட்டுவுடனே சொல்லிடுவான்” என தனக்குள் சொல்லிக் கொண்டு… “பைய்…” என்றான் உதடு பிரியாமல்.
அமர் அவளை காரில் ஏற்றியவுடன் கேட்ட முதல் கேள்வி “எப்படி அபி, உன் அண்ணன் மட்டும் பழைய பட போலீஸ் மாதிரி சரியாய் கிளம்பும் போது வரான்… “ என்றான் நக்கலாய்..
அவனே தொடர்ந்து “என்ன சொன்னான்” என்றான்.
ஒன்றும் சொல்லவில்லை அபி… அமர் “ம்…” என்றான் விடாது, கேள்வியாய்…
“விட மாட்டீங்களா… எங்க போறோம்னு கேட்டான்” என்றாள்.. மெல்லிய குரலில்.
“எதுக்கு… துணைக்கு வரானாமா…” என்றவன், “ம்.. சொல்லு எங்க போலாம்ம்..” என்றான் ஆசையாக…
அபிக்கு இப்போதுதான் தெம்பானது “தெரியலை… உங்க சாய்ஸ்” என்றாள்.
அமர் அந்த குஷியிலேயே காரை செலுத்தினான்… சிட்டி தாண்டி, வண்டி பாலக்காடு ஹைவேயில்  தவழ்ந்தது… ஒரு ஹோட்டலில் உணவை முடித்துக் கொண்டனர்…
சிறிது தூரம் சென்று ஒரு கிளை ரோட்டில் வண்டி செல்ல தொடங்கியது மெதுவாக… 
அமர்.. தென்றலாய் காரை செலுத்தினான்.. மெதுவாக பேசியபடியே. மாலையை நெருங்கிக் கொண்டிருந்த… மதிய பொழுது… ஆனால் மேகமூட்டமாய்… இருந்தது அந்த வழி… 
அழகான மரங்களுக்கு நடுவே.. சென்றது சாலை.. அபி, தன் போனை கைகளில் சுற்றி விளையாடிக் கொண்டிருந்தாள்.. அமர் “உன் போடோஸ் சிலது அனுப்பேன் அபி” என்றான்.
“எதுக்கு…” என்றாள் வேண்டுமென்றே… அவளின் போனை எட்டி பறித்துக் கொண்டான்.. உடனே, அவனின் மொபைலை டேஷ் போடிலிருந்து எடுத்துக் கொண்டாள்.
அமர் “ஹேய்… பாய்ஸ் போனை கேர்ள்ஸ் பார்க்க கூடாது… தெரியாதா” என்றான் சிரித்தபடியே..
“அவ்வளோ.. டிரட்டியா நீங்க” என்றாள்.
கூடவே “அததானே பார்க்க்க போறேன்…” என்றவள் எதையோ தேட தொடங்கினாள்…  அவனின் போனில்…
ஒரு மரத்தடியில் வண்டியை நிறுத்தி அமர்… தன் போனை பார்க்கும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்… “என்ன ஏதாவது கிடைச்சுதா” என்றான் ஒரு மாதிரி குரலில். 
“இருங்க…. கோச்” என்றாள் போடோஸ்சில் ஆர்வமாக…
தன் சீட்டில்லிருந்து லேசாக சாய்ந்து “எண்ணத்த பார்க்கற அபி..” என்றபடி அவளின் தோள்லில் தலை சாய்த்துக் கொள்ள.. அபியின் விரல்கள்… லேசாக நடுங்கியது… போனின் டிஸ்ப்ளேயில்.. 
அமர் அந்த விரல்களை பற்றிக் கொண்டு தன் விரல்களுடன் பிணைத்துக் கொண்டு… “இது நான் கொல்கட்டா… போன போது, இவங்கதான் அப்போ தமிழ்நாடு டீம்மோட… கேப்டன்… “ என அந்த போட்டோஸ்க்கு எக்ஸ்ப்லைன் செய்து கொண்டிருந்தான்…
ஆனால், அபி அவஸ்த்தையில் நெளிய தொடங்கினாள்… தோள்வளைவில் அவன், அவனின் சின்ன.. சின்ன.. உதட்டசைவில்… இவளின் தேக தங்கம் உருகிக் கொண்டிருந்தது.. 
அபி கண்மூடிக் கொள்ள… அமர் பேச்சை மாற்றினான் “எப்போ வருவ அபி” என்றான்.
“இன்னும் சிக்ஸ்மன்த் ஸ்டடீஸ் இருக்கு… “ என்றாள் மந்திரத்துக்கு கட்டுண்டவளாக… 
“அம்மா, அது முடிச்சிதான் கல்யாணம், சொல்லிட்டாங்க” என்றான்.
“ம்…” என்றாள். 
அமர் “அபி, வித் யுவர் பெர்மிஷன்… “ என்றவன் அவளை யோசிக்க விடவில்லை, அவளின் உதட்டில் சின்ன முத்தம் வைத்து நிமிர்ந்தான்.. அந்த அதிர்ச்சியின் அவளின் கண்கள் திறக்க.. 
அமர் “அபி, ஆம் கொலாப்ஸ்டு..(குழம்பியிருக்கேன்) வித் யூ… டி.. 
ப்ளீஸ், சீக்கிரமா… சரி செய்துடு…” என்றான் ஏக்கமாக.
அபி திருதிருவென விழித்தாள்… அமர் “புரியுதா…” என்றான் அவளை ஆழமாக பார்த்து.
அபி விழித்தே நின்றாள்.. அவனை புரியும்தான்.. தெரியும்தான்.. அதுவும் இந்த பத்துநாளாக.. பேசி.. பேசி.. தெரியும்தான்… 
ஆனால் இந்த முத்தத்தையும், அவனின் அடுத்த வார்த்தையையும் சத்தியமாக எதிர்ப்பார்க்கவில்லை அவள். அவனின் வார்த்தையில் அவளின் கன்னங்கள் சிவக்க… அமரின் பெருவிரல் அழகாக அதை வருடியது…
அமர் “ப்ளீஸ் ஒரே ஒரு போட்டோ எடுக்கவா” என்றான்.. தன்னை மீட்டுக் கொண்டு.. அபி, மெல்ல தலையசைக்க… வெளியே இறங்கி இருவரும் செல்பி எடுத்துக் கொண்டனர்…
பின், மெதுவாக.. மீண்டும் வண்டி, தவழ தொடங்கியது… மீண்டும் மீண்டும் அமரின் பேச்சு… “மிஸ் யூ அபி…”,  “நீ போற…” என்பதாகவே இருந்தது… 
வீடு வந்து இறக்கிவிட… மணி எட்டு என காட்டியது… அமரின் கண்கள் லேசாக சோர்வை காட்டியது… வீட்டு வாசலில் காரில் சாய்ந்து நின்று பேசிக் கொண்டிருந்தான் அவளிடம் “எத்தனை மணிக்கு வர… ஏர்போர்ட்டுக்கு” என்றான் கரகரத்த குரலில்.. 
அபி கண்களை துடைத்துக் கொண்டு.. “டுவல் பிப்டீன்னுக்கு ப்லைட்… நீங்க எப்பவேணா வாங்க” என்றாள்.. அசால்ட்டாக.. இப்போது அவனின் காதலில் கர்வம் வந்தது பெண்ணவளுக்கு.
அமர் லேசாக சிரித்தபடியே.. “போடி… போ, தூரமா போறேல்ல… அதான் தைரியமா பேசுற… எல்லாம் உன் அண்ணன் கொடுக்கிற தைரியமா..” என்றான் அவளை வம்பிழுக்க… இந்த நாட்களில் அவனின் வார்த்தைகளுக்கு பழகியிருந்தாள்.
அபி “இருங்க…” என சொல்லி தன் கைபையிலிருந்து ஒரு சின்ன அவுவ்ன்ஸ் சென்ட் பாட்டிலை எடுத்தாள்… “இந்தாங்க.. அப்போ வரும்போது வாங்கிட்டு வந்தேன்…
கொடுக்க முடியலை… இப்பவும் எடுத்து வந்தேன்…
உங்கள பார்த்து மறந்திட்டேன் போல” என சொல்லி அவனிடம் கொடுக்க வாங்கவில்லை அவன்…
“போடி… இதெல்லாம் வேணாம் எனக்கு…
மொத்தமா நீதான் வேணும்னு சொல்றேன்…
இப்படி இத்துணுண்டு பாட்டில கொடுக்கற…
போ…” என்றான் பிடிவாதமாக.. கையை கட்டிக் கொண்டு… முகத்தை உர்ரென வைத்துக் கொண்டு. காதல்… மொத்தமாக அவளை பார்த்த நாள் தொட்டு… அவளுக்காகவே அவளை பிடித்தவனது காதல்.. இது அது என காரணமில்லாத காதல் அமருடையது…
இப்போது பிரிகிறாள் எனும் போது… ஒன்றுமே செய்யமுடியாத நிலையில் அமர், அதனால் சட்டென வந்த கோவம் இது… அவளின் கிப்ட்டை மறுத்துவிட்டான்.
அபி எதிர்பார்த்தது என்னமோ.. அமர், போகாதே என சொல்லுவான் என்பதுதான்.. அமர் அதை சொல்லவில்லை.. இதுவரை. 
எனவே, அபிக்கு இன்னும் தன் கோச்சை பிடித்தது… அபி “கோச்… பாவம் நானு,. உள்ள வாங்க பேசலாம்…” என்றாள் சமாதானப்படுத்தும் எண்ணத்துடன்…
அமர் “வேணாம் டி… நேரம்மாக ஆக… 
ஆம் நாட் கண்ட்ரோல்… 
நீ உள்ள போ….
உங்க அப்பா இவ்வளோ நேரமாகியும் போன் பண்ணவேயில்ல.. 
என்னோட மாமனார். குட்தான்…
நான்தான் பேட்…
ஏதாவது வேணுமா….ம்…” என்றவன்… சுற்றியும் பார்த்தான்…  
ஏனோ… இந்த பிரிவை தாளவே முடியவில்லை அவனால்… தொண்டையில் எதையோ விழுங்கிக் கொண்டான், வேறு ஒன்றும் சொல்லாமல் “கூப்பிடுறேன்..
பைய்… அபி” என்றவன் காரில் ஏறிவிட்டவன் “கொடு” என்றான்.
அவள் கையிலிருந்த.. சென்ட் பாட்டிலை வாங்கிக் கொண்டான் “பை டா… அபி…” என்றான்.. சென்றுவிட்டான். அபி சற்று நேரம் அந்த வழியை பார்த்துக் கொண்டிருந்தாள்…(காதல் சுகமானது)…
“மழை மேகமாய்… உருமாறவா…
உன் வாசல் வந்து…
தினம் தூவவா…
மணம் வீசிடும்…  மலராகவா…
உன் கூந்தல் மீது… 
தினம் பூக்கவா..
கண்ணாக கருத்தாக உனைக்காப்பேன் உயிராக…
உனை கண்டேன்… கரைந்தே… கனிந்தேனே…
அட உன்னுள் உறைந்தேனே….
இன்று என்னுள் மாற்றம் தந்தாயே… 
உன்னை என்றும் மறவேனே…”
#%#%#%%%#%#%#%%#%%%#
அபி, அப்ராடு செல்லும் நாளும் வந்தது. அகிலன் காலையில் வந்தான் அபியின் அறைக்கு.. இப்போது, தானே பேக் செய்து கொண்டிருந்தாள்.. 
எப்போதும் அண்ணன்தான் வேண்டும் இதற்கெல்லாம்.. அந்த நினைப்பே அபிக்கு மனதை பிசைய… இப்போது ஊருக்கு செல்வது வேறு சங்கடத்தை தர… அத்தோடு அமரின் பிரிவும் சேர்ந்து கொள்ள… எல்லாம் சேர்ந்த, ஆற்றாமையாக வெளிவர… அதை ஏனோ… தன் வேளையில் செலுத்தி…. பெட்டியினுள் எதையோ திணித்துக் கொண்டிருந்தாள்.. 
அதுவா.. ‘உள்ளே செல்வேனா..’ என அடம்பிடித்துக் கொண்டிருக்க.. இவளும் தன் பலம் முழுவதையும்… அதன் மேல் காட்ட… ம்கூம்… இன்ச் நகரவில்லை அது உள்ளே.. 
ஏனோ கண்களில் நீர் வந்தது… எதோ கோவம் வந்தது… “ச்சு போ…” என அந்த பெரிய பெட்டியை, கட்டில் மேலிருந்து கீழே தள்ளினாள் கோவத்தில்… அது அவளின் கால் மேலேயே விழும் நேரம் அகிலன் “ஹேய்.. அபிம்மா..” என வந்தான் ஆனாலும் பலனில்லை… அவளின் காலில் மொத்த எடையுடன் பெட்டி விழுந்தே விழுந்தது.
அபி “ஆ…” என கீழே அமர்ந்தாள் வலி தாளாமல்…
அகிலன் பெட்டியை நகர்த்தி.. அவளின் பாதத்தை ஆராய.. சிவந்து போய் விட்டது… “பொறுமையா பண்ணமாட்டியா அபி” என கடியே.. கோவமே வந்தது அபிக்கு “நீ போ… அகி ண்ணா… போ” என அவனை தள்ளினாள்.. நெஞ்சில் கை வைத்து..
அகிலன் நகர்ந்து எதோ ஸ்ப்ரே எடுத்து வந்தான்… கண்ணீருடன் அமர்ந்திருந்தாள் தங்கை.. அவளின் அருகில் அமர்ந்து பாதத்தில் ஸ்ப்ரே செய்து… நீட்டிவிட்டான் கால்களை…
பெட்டியை நிமிர்த்தி.. எல்லாவற்றையும் அடுக்கினான்… பேசவேயில்லை அவன்.. எல்லாம் பொறுமையாக செய்தான்.. வேலையை முடித்து “என்ன ஆச்சு… அமர்ர விட்டு போக முடியலையா…” என்றான் அருகில் அமர்ந்து…
அபிக்கு லேசாக முகம் சிவந்த போதிலும்… கண்ணீர் நிற்காமல் வழிந்தது.. ஆனாலும் 
“ஏன்… நான் உன்னை நினைச்சிதான் அழறேன்” என்றாள்.
கூடவே “நாளைக்கு உனக்கும் கல்யாணம் ஆகும், அப்போ… இதே மாதிரிதான்… 
நான் அமரை பார்க்க மாதிரி நீ, அவங்களை பார்ப்ப… 
அப்போ நான்… இப்போ நீ, செய்யற மாதிரி செய் மாட்டேன்…
என் அண்ணனுக்கு பிடிச்சவங்கள… எனக்கும் பிடிக்கற மாதிரி பார்த்துப்பேன்… நான் உன்னை மாதிரி செய்ய மாட்டேன்…” என சொல்லியவள்… அண்ணன் முகத்தை ஆசையாக பார்க்க… 
எந்த பிரதிபலனும் இல்லை அவனிடம் லேசான சிரித்து… “பார்க்கலாம்” என்றான் அமைதியாக.
அபிக்கு கேவல் வெடித்தது… அண்ணன் இன்னும் தன் அமரை ஏற்கவில்லையே என… என்ன செய்வது.. பேசாமல் இருந்து பார்த்தால், பேசி பார்த்தாள், அழுதும் பார்த்தால்… எதற்கும் அகிலன் அசையவில்லை தன்னிடத்திலிருந்து.. ஒன்றே மதியாய்…
இரவு ப்ளைட்… அபியின் குடும்பம் இருந்தது… கூடவே இப்போது அமர் நின்றிருந்தான் சுவாமியுடன் பேசியபடியே.. தன்னவளை விழியால் விழுங்கியபடியே… 
அபி அவளின் அண்ணனுடன் நின்று பேசிக் கொண்டிருந்தாள்.. அகிலன் வேண்டுமென்றே அவளுடன் நின்றிருந்தான்.. அமரை முறைத்தபடியே  உள்ளுக்குள் ‘இவன யாரு வரசொன்னா… ரொம்ப நல்லவந்தான்… வந்துட்டான்.. இவ்வளோ நாளாச்சே.. வந்து பெண்ணு கேட்க வேண்டியது தானே… ஆர்பாட்டம் எல்லாம் செய்து அபி மனச கெடுத்துட்டு அமைதியா இருக்காங்க…’ என எண்ணிக் கொண்டிருந்தான்.
நல்லவேளை அகிலனுக்கு போன் வந்தது.. அவன் போனை எடுத்துக் கொண்டு நகரவும்தான் வந்தாள் தன் தந்தையிடம்.. அபி.
சுவாமி இருவரையும் தனித்து விட்டு… தன் மனைவியுடன் பேச தொடங்கினார்..
அமர் “எதையும் யோசிக்காத… உங்க அண்ணன் சரியாகிடுவான்… 
அடி, என்னையும் கொஞ்சம் பாருடி…” என்றான் ஏக்கமாக.
அபி கலங்கிய கண்களில் பார்க்க… “விடுடி அவன… 
சும்மா… எப்போ பாரு… அவனை தூக்கி வைச்சிக்க வேண்டியது…
நான் இருக்கவா… போகவா” என்றான் கடுப்பாக…
அபி “கோச்…”என அதட்டினாள்… அவளின் கையை பற்றிக் கொண்டான்..
“நீ போய் ஒழுங்கா படிச்சு முடிச்சிட்டு… சீக்கிரமா வா… “ என தொடங்கி அவளிடம்  நல்ல மனநிலையில் பேசினான்… நேரம் சென்றது.. சின்ன நெற்றி முத்தம் வைத்து, அழகாக அவளை வழியனுப்பி வைத்தான் அமர்…
 
  

Advertisement