Advertisement

மின்னொடு வானம் நீ…
19
சுமதியின் இந்த இரண்டு நாள் மருத்துவமனைவாசம்… பலத்தையும் கற்று கொடுத்தது போல… தெளிவாக்கினார்.. முக்கியமாக தன் மகனை புரிந்து கொண்டார்…
அன்று அதிகாலை மகாவின் வாழ்வில் மட்டுமல்ல சுமதியின், வாழ்விலும் மறக்க முடியாத நாள்.. ஆனால், நேற்றுபோல் அலட்டிக் கொள்ளவில்லை.. பொறுமையாக இருந்தார் சுமதி. மகாவை சமாளித்து அனுப்பினார்.
எனவே, இந்த காலை வேளையில் அசந்து உறங்க தொடங்கினார். இன்னும் தன் மகளுக்கு சொல்லவில்லையே என உணர்ந்த முரளி, ப்ரியாவை அழைத்து பேசினார். ’நீ.. வரவேண்டாம்’ என்றும் சொன்னார் முரளி.. 
நேற்றுதான் போய் விட்டு, வந்தனர்.. அதற்குள், இப்படி என்றால்… வசந்தின் வீட்டில் ஏதேனும் நினைப்பார் என எண்ணம் முரளிக்கு… ஆனாலும் ப்ரியாவிற்கு மனது கேட்குமா… ஒரே அழுகை.. வந்தே தீருவேன் என. அதற்குமேல் ஒன்றும் சொல்லவில்லை முரளி.
அமர் வீட்டிற்கும் போகாமல், எங்கும் செல்லாமல் அமர்ந்திருந்தான் மருத்துவமனையிலேயே… அவனிற்கு தன் அம்மாவை பார்க்க வேண்டும்போல் இருந்தது… 
இந்த ஆறுமாதமாக எதுவுமே பேசவில்லை அமரிடம்.. அவர் ஒதுங்கியே இருந்தார். அப்படி விட்டிருக்க கூடாதோ… என இப்போது எண்ணிக் கொண்டிருந்தான்.
முரளி தன் பெண்ணிடம் பேசிவிட்டு வந்து அமர்த்தார்… “என்னடா…  வீட்டுக்கு போயிட்டு வா… நான் பார்த்துக்கிறேன்… “ என்றார்.
“இல்லப்பா… நான் அம்மாவ பார்த்துட்டு போறேன்… 
நீங்க போயிட்டு வாங்க, 
ப்ரியா வந்தா… நீங்கதான் பார்க்கணும்… 
அவ அழுதே கறைவா…” என்றான் சலிப்பாக. முரளி தன் மகனை ஆழமாக பார்க்க.. “ப்பா… ப்ளீஸ் ப்பா” என்றான். ஒன்றும் சொல்லாமல் முரளி வீட்டிற்கு சென்றார்.
காலை பதினோரு மணி… சுமதிக்கு மீண்டும் விழிப்பு வந்தது.. சரியான மருத்துவ பரிசோதனைக்கு பிறகு… இலகுவாக அமர்ந்திருந்தார் சுமதி, நினைவு வந்தவுடன்.. ரூமுக்கு மாற்றியிருந்தனர் அவரை. அமர் நர்ஸிடம் அனுமதிவாங்கி உள்ளே சென்றான்.
சுமதியின் கைகளை பற்றிக் கொண்டு, அதை நெற்றியில் வைத்து அமர்ந்து  கொண்டான். அன்னையும் எதுவும் பேசவில்லை.. அவனாக பேசவும் இல்லை, அவரும் ஏதும் கேட்கவில்லை… ஒரு பத்து நிமிடம்…. சென்றது.
பிள்ளையிடம் அன்னை தோற்பது அழகுதானே.. தன் ட்ர்ப்ஸ் போட்ட மற்றொரு கையால் அவன் தலை கோத… “கைய கீழ வைம்மா… ட்ரிப்ஸ் போட்டிருக்குல்ல.. அசைக்காத” என்றான் தலையை நிமிர்த்தாமல் திடமான குரலில்.
சுமதிக்கு சிரிப்புதான் வந்தது… ஏதோ… பையன் அழுவான் என எதிர்பார்த்தார்… சாரி சொல்லுவான் என நினைத்தார்… இவன் எதோ கட்டளை போல் பேசுகிறான்.. என சிரிப்பு வந்தது, எல்லாம் வீம்பு என நினைத்துக் கொண்டார்.
மீண்டும் அவனே “எனக்கு உன் மேல கோவம், நீ எதுவும் சொல்லாத” என்றான் குழந்தையாக. அவரை நிமிர்ந்து பார்த்து.
அன்னையாக சுமதிக்கு… கண்ணீர் பெருக்கெடுக்க தொடங்கியது… கூடவே படபடப்பானர்.. அவனிடம் சரியாக பேசியே எத்தனை நாளாகிறது… தப்பு பண்ணிட்டனோ… என அவரின் உடல்மொழி மாற தொடங்கியது.
அந்த மாற்றம் அமருக்கு, எதையோ உணர்த்த… “அமைதியா இரும்மா… உன்னை மீறமாட்டேன்… ப்ளீஸ்… மா” என திடமான குரலில் சொல்லி, ஸ்டூலிலிருந்து எழுந்து தன் அன்னையின் அருகில் அமர்ந்தான்.
எதோ தைரியமில்லா பெண்ணில்லை சுமதி… தப்பென்றால் கையில் சாட்டை கொண்டு பிள்ளைகளை விரட்டும் ரகம்.. எனவே, அமரின் கடிந்த முகம் அவரிடம் வேலை செய்தது… தப்பு செய்த நீயே… கோவப்படும் போது, நான் கோவப்பட கூடாதா… என அவனை ஆழமாக பார்த்தார் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு..
அமர் “நான் எந்த தப்பும் செய்யல… 
ஏன்… இப்படி வந்து படுத்துகிட்ட… 
என்னிடம் கோவம், வருத்தம்னா… நீ என்னைத்தான் கேள்வி கேட்கணும்… 
இப்படி உன்னையே கஷ்ட்டபடுத்திக்க கூடாது.” என்றான் கோவமாக… எதோ அவரே வந்து மருத்துவமனையில் படுத்துக் கொண்டதை போல…
அவனிடமிருந்து தன் கையை உருவிக் கொண்டார் அவர்… “அப்போ நேத்து என்னை பத்தி… உங்க அப்பாவோட மரியாதையை பத்தி யோசிச்சி… அங்க போயிருக்கனும்” என்றார் அவரும்.
அமருக்கு அதே கோவம்… ஆனால் வேறு கோப்பைக்கு மாறியது, எழுந்து கொண்டான் அவர் அருகிலிருந்து “நான் என்ன பொண்ணா… கேட்டு போனேன்” என்றான்.
சுமதி “போனாலே, அப்படிதான் அர்த்தம்…” என்றார்.. கடுப்பாக.
“ம்மா… 
ஏன் ம்மா… நீ கூட புரிஞ்சிக்க மாட்டியா” என்றான், இப்போதுதான் குரல் இறைஞ்சியது முதல்முறையாக… அம்மா, என்னை புரிந்து கொள்ளவில்லையே  என.
பின் பொறுமையாக அருகில் வந்து அமர்ந்தவன்… “நான் சொல்றத கேளும்மா ப்ளீஸ்…” என இப்பவும் கடுப்பாக..
“நான் உன்கிட்டதானே வந்து முதல்ல சொன்னேன்… 
நீதான் பேசல என்கிட்ட… என்மேல தப்பில்ல…
எனக்கு தெரியாதே… இவதான் அவங்க பொண்ணுன்னு… அப்பையும் வேண்டாம்னுதான் இருந்தேன்…
ஏனோ… என்னால முடியல… “ என தான் எப்படியெல்லாம் அவளை தள்ளி வைத்தேன்… என தொடங்கி, நேற்று என்ன நடந்தது என எல்லாவற்றையும் தன் அன்னையிடம் சொன்னான்.. தன் தலையை கையில் தாங்கியபடியே.. பின் ஒரு பெருமூச்சு விட்டவன்… வேறு என்ன பேசுவது என தெரியாமல் நின்றான். 
அன்னையும் ஏதும் சொல்லவில்லை, இதெல்லாம் நரேன்மூலம் தெரியும் என்றாலும்… நேற்று வீட்டிற்கு சென்றது தவறே… என்று அமர்ந்திருந்தார்.. “ம்மா… 
மத்த எல்லாத்தையும் விட்டுடு… முதல்ல அபிய பாரு… 
அப்புறம் என்னை பாரு… போதும்… 
அவ உன்ன மாதிரி ஹார்டு கிடையாது… சாப்ட்” என்றான் லேசாக இதழ்களில் புன்னகை ஒட்ட…. 
இதுவரை ஏதும் சொல்லாத சுமதி இப்போது தன் மகனின் முக மாற்றத்தை பார்த்தார்… தன் முரட்டு மகன், சாந்தமாக தெரிந்தான். எதற்கும் இவ்வளவு அமைதியாய் நின்று பேசியதேயில்லையே இவன். 
பொறுமை என்பது… உன்னோட நக நுனியில் கூட இல்லையே… என எண்ணியபடியே  “அமரா” என்றார் மெல்லிய குரலில்… அவருக்கும் எதோ போலானது.. பேச்சு வரவில்லை… “ம்… சொல்லும்மா” என்றான். எதுவுமே பேசாமல் இருந்தார்… அவனை ரசித்தபடியே.
அமர் “ம்மா… நீ மகா அத்தையை  மன்னிக்கனும்னு நான் சொல்ல… ஆனால் அவங்களும் பாவம்தான்… அது உன்னோட விஷயம்…
ஆனா… அபிமேல எந்த தப்பும் இல்லம்மா… 
அவளுக்கு எதுவுமே தெரியாது… எல்லாம் என்னோடதுதான்… 
நீ அவளை தப்பா நினைக்காதே… நான்தான் அவள தேடி போனேன்…
சாரி, 
சாரி ம்மா… உன்னோட இந்த நிலைக்கு, நான்தான் காரணம்னு எனக்கு தோனுதும்மா… 
சாரி சாரிம்மா… எனக்கு அபியை பிடிக்கும்… அதே மாதிரி நீயும் முக்கியம் மா… “ என்றவன் நிமிர்ந்து அமர்ந்து கொண்டான்…
இப்போது பொறுப்பாய் “இனி நீ சொல்லு… நான் அங்க போக கூடாதா… சரி, பேச கூடாதா சரி…
ஆனால் நீ இப்படி இருக்காத… பழைய மாதிரி இரு… 
எ… எனக்கு வீட்டுக்கு போகவே பயமா இருக்கு… நீயில்லாம..” என்றான் மீண்டும் சுமதியின் கையை பிடித்துக் கொண்டு..
சுமதி அப்படியேதான் இருந்தார் அவனை சமாதனபடுத்தவில்லை… ‘சரிதான், இவன் சொல்வதும் சரிதானோ… நான்தான் கேட்கவில்லையோ… என் பையனை நான் பார்த்திருக்க வேண்டுமோ… யார் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.. அதற்காக என் மகனின் சந்தோஷத்தை பரித்துவிட்டேனோ…’ என யோசனை… 
அமர் அவரின் யோசனையை தடுக்காமல்… தள்ளி அமர்ந்து கொண்டான். நீண்ட நிமிடங்கள் கடந்து… சுமதி “பேரென்ன… அந்த பொண்ணு பேரென்ன” என்றார்.
“அபி… அபி,ராமி…” என்றான் கொஞ்சம் ரசனையாக. 
எழுந்து கொண்டான்… “ம்மா… எதையும் நினைக்காதே… 
நீ,  சங்கடப்பட கூடாதுன்னுதான் எல்லாம் சொன்னேன்… 
சொல்லலைன்னா… எனக்கும் தூக்கம் வராது, அதனால சொன்னேன்… 
நீ ரெஸ்ட் எடு… 
ஜெயந்தி அத்த வராங்களாம்… 
நான் வீட்டுக்கு போறேன்… 
உன் பொண்ணு வருவா… பாரு…” என்றான் தலையை கோதியபடியே சொல்லிக் கொண்டிருந்தான்..
சுமதி “எங்க அந்த பொண்ணு போட்டோ காட்டுடா” என்றார் யோசனையாக.. அவருக்கு ஏனோ அபியை பார்க்க வேண்டும்போல் இருந்தது… அப்படி என்னதான் இருக்கும் அவகிட்ட, இவன் இப்படி உருகி நிற்கிறான்.. என தோன்றியது.
இவனுக்கு புரியவில்லை “அதெல்லாம் இல்லைம்மா என்கிட்டே, நேத்து வந்தா… நீதான் பயங்க பிஸியா இருந்த” என்றான் அங்கிருந்த தண்ணீரை குடித்தபடியே…
“ம் கூம்… ஏன், உள்ளே வந்து என்னை பார்க்கல” என்றார் முகத்தை திருப்பியபடியே… 
அமர் “ம்மா… இப்போ வரசொல்லவா…. நேத்து நான் அவ கூட பேசவேயில்ல… பாவம்… வாடிபோயிதான் வீட்டுக்கு போனா…
இப்போ வர சொல்லவா” என்றான் அவசரமாக.
“கொன்னுடுவேன்… 
உனக்கு லவ் பண்ணவே… எவ்வளோ டைம் தேவைப்பட்டது… எனக்கும் அதே டைம் வேணும்…
அதுவும் மகாவோட பொண்ணு… அதை ஏற்கவே…” என நிறுத்திக் கொண்டார்.
அவரே இரண்டு நிமிடம் கடந்து, தொடர்ந்தார்… “உனக்கு நான் முக்கியம்னா… பொறுமையா இரு… எனக்கு டைம் கொடு” என்றார்.
அமரும் அவரின் அருகில் வந்து.. “ம்மா… எனக்கு நீங்க முக்கியம்… தெரியாதா” என்றான் சலிப்பாக. சுமதி தலையசைத்தார்.. அமைதியாய்.. 
அமர் “கிளம்பவா… ரெஸ்ட் எடுக்கிறீயா….
ரொம்ப யோசிக்காதா… ப்ளீஸ்….” என்றான்… கதவை திறந்து கொண்டு நின்றான் வெளியே செல்லாமல் இரண்டு நிமிடம்…
சுமதி “என்ன டா…” என்றார்.
“எப்போ வீட்டுக்கு வர” என்றான்… என்ன குரலது… பழைய அமரை நினைவுபடுத்தியது சுமதிக்கு…
“போடா வரேன்” என்றார். 
“சீக்கிரம் வா” என்றபடி கதவை சாற்றி சென்றான் அமர்.. அன்னைக்கு தெம்பு வந்தது போல…. இன்னும் சற்று நிமிர்ந்து அமர்ந்து கொண்டார்.
அப்போதே ஜெயந்தி வந்தார்… அமர் கிளம்பி வீடு வந்தான்..
ப்ரியாவும், அவளின் மாமனார் மாமியாரும் வந்தனர் சுமதியை பார்க்க இரவு.. வசந்துக்கு லீவ் கிடைக்கவில்லை… எனவே வரவில்லை…
பிரியா திரும்பி போகமாட்டேன்… என அழுகைதான்… சுமதிதான் தேற்றி அனுப்பி வைத்தார். 
மறுநாள் டிஸ்சார்ஜ்… மகாவும் சுவாமியும் திரும்பவும் சுமதியை, பார்க்க இன்று வந்தனர்.. சுவாமியை ஆவலாக வரவேற்றார் சுமதி  “நல்லாயிருக்கீங்களா…” என்று அவரே முன்வந்து பேசினார். எந்த சுணக்கமும் இல்லை போல, பொதுவாக பேசினார்… 
ஆனால், மகா என்ற பெயரே அவரை இறுக செய்தது போல… மகாவிடம் இயல்பாய் இருக்க முடியவில்லை அவரால்… 
முன்பே வேண்டாமென்று ஒதுக்கியே வைத்துவிட்டார் மகாவை.. இனி எல்லோரிடமும் போல், சகஜமாக பேசுவது என்பது முடியாதகாரியமாகவே பட்டது சுமதிக்கு… 
மகா கூட “அண்ணி… எ…” என எதையோ தொடங்க… சுவாமி தன் மனையாளின் கையை பிடித்தார்… தானே “எப்போ வீட்டுக்கு வரீங்கன்னு கேட்கறா…” என மறைமுகமா அழைக்கவும் செய்தார்.
சுமதிக்கு எதோ… என தெரிந்து… “வரேங்க… எல்லாம் சரியாகட்டும்… கொஞ்ச நாள் ஆகட்டும் கண்டிப்பா வரேன்” என்றார் அவரும்.
சுவாமி வீட்டிலிருந்து வரும்போதே தன் மனைவியிடம் சொல்லித்தான் அழைத்து வந்தார்… “எப்போதோ செய்ததுக்கு… நீ நிறைய சங்கட பட்டுட்ட மகா… 
இனி யார்கிட்டயும் மன்னிப்பு… அங்கே போய் அழுகை என எதுவும் இருக்க கூடாது… மகா… 
நேத்து நான் ரொம்ப அமைதியாக இருந்தேன்… 
போதும்… இத்தோட… நிறுத்திக்கோ… 
இனி நீயா எதுவும் செய்ய.. கேட்க கூடாது…” என்றார் கராராக. எனவே பட்டும் படாமல்.. பேசினார் சுவாமி.. மகா ஒன்றுமே பேசவில்லை அண்ணன்னிடம் மட்டும்..  அண்ணியின் உடல்நிலை குறித்து கேட்டார் அவ்வளவுதான். வாயே திறக்கவில்லை.
பின், முரளியும், சுவாமியும் வெளியே செல்லவும்.. தனியே அவர்கள் இருக்கவும்… சுமதி “அமர் எல்லாம் சொன்னான்… 
கொஞ்ச நாள் போகட்டுமே… 
இப்போதான் ப்ரியா கல்யாணம் முடிஞ்சிருக்கு… 
அதனால்… ஒரு ரெண்டுமாசம் ஆகட்டம்.. 
எப்போ என்னான்னு… நானும் அண்ணனும் பார்த்து சொல்றோம்.. 
உங்க வீட்டில் சொல்லிடு” என்றார். மகா ஒரு தலையசைப்புடன் கேட்டுக் கொண்டார்… பத்து நிமிடம் சென்று… மகா சுவாமி இருவரும் விடைபெற்று கிளம்பினர்.
சுமதி மாலையில் வீடு வந்தார்… 
$%%$%$%%$%%%$%$%$$$%$%$%$%$%$
அமர் இப்போதுதான் கொஞ்சம் நிம்மதியானான்.. தன் அன்னையும் வீடு வரவும்… வீடு இயல்புக்கு திரும்பியதாக எண்ணம் வந்தது அவனுக்கு. கொஞ்சம் தன் அன்னையை நெருங்கியிருந்தான் இந்த இரண்டு நாளில். முன்போல்… இல்லாமல்… ஏதோ ஒரு நெருக்கம் இருவருக்குள்ளும் இருந்தது… வீடு வந்தவுடன்… நரேன் வீட்டிலிருந்து வந்தனர்… எனவே ஹால் நிறைந்திருந்தது.
யாரும் டென்ஷன் செய்யாமல் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தனர்… ப்ரியாவை பற்றி பேச்சு சென்றது… அவள்தான் மிஸ்ஸிங்… இருந்திருந்தால் இப்படி அழுவால்… இப்படி பேசுவால் என பசங்க எல்லோரும் பேசிக்கொண்டிருந்தார்…
சுமதிக்கு கோவம் “ஏன் டா புள்ளைய சொல்றீங்க… “ என கேட்கவும்… அமர் பிடித்துக் கொண்டான் “பக்கத்திலேயே இருக்கறவன கண்ணு தெரியல…
பொண்ணு தூரத்திலிருந்து வந்து, ரெண்டு சொட்டு கண்ணீர் விட்டவுடன்… எழுந்து உட்கார்ந்து, வீட்டுக்கு வந்துட்டல்ல நீயி…” என சிரித்தபடியே சொன்னான்.
சுமதியும் அசராமல் “என்ன டா செய்யறது….
நான் இங்க படுத்திருந்தா…
அங்க அவளுக்கு மனசே இருக்காது… இப்போதுதான்… கல்யாணம் ஆகியிருக்கு… 
எனக்காக இல்லையினாலும்… பிள்ளைகளுக்காக… எல்லாம் மாற வேண்டியிருக்கே” என பல பொருளில் சொல்லி அவனை இமைக்காமல் பார்த்தார்…
“ஓ.ஓஒ….” என நரேன்… கத்த, ஜெயந்தி “அப்படி சொல்லு… சுமதி” என கூடசேர…
அமர் பொறுப்பாய் “ம்மா…. தேங்க்ஸ் ம்மா…” என்றான் எல்லாம் புரிந்ததாய். 
சௌமியும் நரேனும் மீண்டும் “ஒ….ஓஒ… “ என கத்த…
நரேனிடம் சுமதி “உன் பிரின்ட் நல்லா பேச கத்துக்கிட்டாண்டா…” என்றார்.
அமர் தன் அன்னையின் அருகில் வந்து அமர்ந்து “என்ன செய்ய… எங்க அம்மா நல்லா பேசுவாங்களே” என்றான் சிரித்த முகமாக… அழகான வசீகரிக்கும் சிரிப்பாய் இருந்தது இப்போது. 
இத்தனைநாள் இல்லாத கலை, தன் மகனின் முகத்தில் காணவும்.. சற்று கர்வமே வந்தது.. சுமதிக்கு, என் மகன் என்னை கேட்டே நடக்கிறான் என…
அன்னையின் கோவமும் அழகு… ‘தன்னால்’ என்ற கர்வம் அதைவிட அழகு போலும்… அமர் தன் அன்னையை தோளோடு சேர்த்துக் கொள்ள… இருவருக்கும் தளும்பிற்று கண்ணீர்… ஏனென்று தெரியாமல்..
நேரம் சென்றது… உணவு இங்கயே செய்திருந்தார் ருக்கு பாட்டி… எனவே உணவை முடித்துக் கொண்டே… நரேன் வீடு கிளம்பி சென்றது.
அமர் மேலே வந்தான்… எப்போதும் போல் மொட்டைமாடி தோழிகளிடம் செல்ல.. இன்று ஏனோ அதுமட்டும் போதும் என தோன்றவில்லை… தன்னவளுக்கு அழைத்தான்..  
உடனேயே எடுத்தாள் “ஹலோ…” என்க..
அமர் “என்ன ஹலோ… யாரிகிட்டயோ பேசறமாதிரி… “ என்றான்.
“ப்ளீஸ்… முக்கியமா… ஒரு பார்ட் படிச்சிட்டு இருக்கேன்… ஒரு ஹால்ப்பனவர் கழிச்சி கூப்பிடவா…” என்றாள்.
என்ன சொல்ல முடியும் “ம்… சரி… கூப்பிடனும்… வெயிட் பண்றேன்” என சொல்லி வைத்துவிட்டான்… பாவம் அதே மொட்டைமாடி, தூரத்து தோழிகள்தான்… ‘இதுக்குதான் படிக்கிற புள்ளைய லவ் பண்ண கூடாது, பாரு… படிக்கராலா…..ம்…’ என மனம் முனுமுனுத்தது…
இன்னும் எப்படியே நேரம் செல்ல அடுத்த அரை மணி நேரம், முக்கால் மணி நேரமாக மாறி… அமரின் பொறுமை பறந்து, அவனே கால் செய்தான்.. இப்போது மூன்று ரிங்கில் எடுத்தாள் அபி 
“கோச்… சொல்லுங்க” என்க…
அமருக்கு முதல்முறை தோன்றியது ‘என்ன சொல்றது…’ தெரியவில்லை.. பொறுமையாக “ம்… சாப்பிட்டியா..” என்றான்.
“ம்…” என்றாள்.
அதன்பின் இருவருக்குமே என்ன பேசுவது என தெரியவில்லை… நீண்ட அமைதி… இருவரும் கலைக்க நினைக்கவில்லை… 
மெல்ல நொடிகள் நகர… அபி “எ.. என்னாச்சு கோச்… ஏ… ஏதாவது கேட்கணுமா…” என்றாள், திக்கி திணறி…
”ம்…. ம்கூம்…” என பெருமூச்சு விட்டவன்.
“கேட்கணும்… சொல்லணும், ஆனா…. 
நீ பக்கத்தில் வேணுமே…” என்றான் ஏக்கமாக…
“ம்… ஆனா, அன்னிக்கு, நான் பக்கத்துலதான் இருந்தேன்” என்றாள் சின்ன குரலில் ரகசியமாய்..
“ம்.. இருந்த, ஆனால் எல்லோரும் கூட இருந்தாங்களே..” என்றான் இவனும் இளகிய குரலில்..
“ம்..
அதுக்கு என்ன பண்ண முடியும்…
பாரதியார் மாதிரி காணி நிலம்… தென்னை கீத்து… 
பாட்டு, இதெல்லாமா ஏற்பாடு பண்ண முடியும்…” என்றாள் கொஞ்சம் கிசு கிசுகுரலில்… 
அமர் “ஹா… ஹா… சரிதான்… 
ம்.. அப்படியிருந்தால்தான் நல்லாயிருக்குமே…
ஆனா, நான் பத்தினிபெண் மட்டும் வேணும்னுதானே சொன்னேன், 
நீ என்னேன்னமோ சொல்ற.. சரி, சொல்லு உனக்கு, என்ன எல்லாம் வேணும்…” என்றான் ஆசையாக…
தெரியலையே…
எங்கள பத்தி சொல்ல, அந்த காலத்துல… பெண்பால் புலவர் இல்லையே…. பாரதியார்தானே இருந்தார்… 
பாரதி… இல்லையே…” என்றாள்..
அமர் “ஹா… ஹா…. ம்கூம்… 
இப்போது சொல்லு அபிக்கு என்னவேணும்…” என்றான்.
யோசிக்காமல் அபி சொன்னால்  “இப்படி என்ன வேணும்னு… கேட்கற… வழித்துணை….” என.. 
அமர் வாயடைத்து போனான்… சற்று நேரம் கழித்து “போதுமா….” என காதலான குரலில் கேட்க…
அவளிடம் வெட்கமே பதிலாக வந்தது…. இன்னும் எதோ பேச்சு தொடர்ந்தது அவர்களுக்கு…. 
காதலர்களின் பேச்சு தீர்ந்ததாக சரித்திரமே இல்லையே… (காதல் செய்வீர்….)

Advertisement