Advertisement

மின்னொடு வானம் நீ…
16
அழகான பெரிய வரவேற்பறை.. மிக பிரமாண்டமான ஷோபா… இந்த பக்கமும் அந்தபக்கமும்… என எதிரெதிரே… கூடவே வண்ண மயமான குஷன்ஸ்… தாராளமான வெளிச்சத்துடன் அந்த இடம் இதுவரை மின்னியது…
அமர் உள்ளே வந்த நொடி முதல் தகிக்க தொடங்கியது… “அபி.. அபி..” என உரிமையுடம் கூடிய அழைப்பு அபியின், காதில் விழவில்லை போல..
திடு திடுவென யாரோ வரும் சப்தம் கேட்க… அகிலன் வந்திருந்தான், ஓங்கி ஒலித்த அமரின் குரல் கேட்டு… அங்குதான்… காபி அருந்தியபடியே டைனிங் அறையில் இருந்தான்… நேரே வந்தவன், சற்றும் எதிர்பார்க்கவேயில்லை அமரை அங்கு, என அவனின் முகம் காட்டிக் கொடுக்க… 
அமரின் கழுத்தை பிடித்திருந்தான்… “என்ன டா, வந்து.. சத்தம் போட்ற,
எவ்வளோ தைரியம்..
வெளியே போடா…” என மரியாதை என்பதேயில்லாமல் ஒரே சத்தம்தான் அகிலன்.
அமரும் சரிக்கு சரி அவனின் சட்டையை பிடித்திருந்தான்… கூடவே “என்ன டா… என்ன, 
எங்கிட்ட விளையாடுறீயா…. 
எங்க டா அபி… கூப்பிடு, அவள பார்க்கணும்…. 
கூப்பிடு…. 
இல்ல நானே போய் பார்ப்பேன்…” என எகிற தொடங்கினான்.. அமர்.
அகிலன் “இங்க எதுக்கு வந்த அமர்… 
எதுக்கு வந்த… 
நீ சத்தம் போட இது ஒன்னோட இடம் இல்ல…. 
போ வெளிய” என அவனின் நெஞ்சில் கை வைத்து தள்ளினான் அகிலன்.
அமர் “என்ன… எனக்கு தெரியாம அபிய ஒழிச்சு வைக்கிறீயா…
முடியுமா உன்னாலா….
போன்ன வாங்கி வைச்சிட்டா…
நான் விட்டுடுவேன்னு நினைச்சியா…
மாட்டேன் டா…
வருவேன்… புரியுதா… 
இதே மாதிரி… வீட்டுக்கே வருவேன்… அகிலன்…
தேவையா இது உனக்கு…” என சொல்லி அகிலனின் கழுத்திலிருந்து கையை எடுத்தவன் எள்ளலாக சிரித்தபடியே ‘பொத்’யென சோபாவில் அமர்ந்தான். என்னை என்ன செய்துவிடுவாய் என்ற பார்வை பார்த்து.. அமருக்கு மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கியது…
அகிலன் “எவ்வளவு திமிர்… போடான்னு சொல்லியும் உடார்ந்திருக்க…” என அவனை வெறுப்பேற்றும் எண்ணத்துடன் பேச…
அமர் “அப்ப, சீக்கிரம் உன் தங்கையை வர சொல்லு” என்றபடி நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டான். ஏதோ பெண்பார்க்க வந்த மாப்பிள்ளை போல, அகிலனுக்கு அப்படியே அவனை தூக்கி வீசும் கோவம்தான் வந்தது, என்ன செய்வது இவனை… புரியவில்லை.. வெட்கமே வராதா… என அகிலனும் அமர்ந்து கொண்டான். அவனை செக்யூரிட்டியை அழைத்து வெளியே தள்ளும் அளவுக்கு தைரியம் வரவில்லை… மேலும் அங்கிருந்தும், வெளியே சென்றாலும் கத்துவான் போல… அப்படிதான் தோன்றியது அகிலனுக்கு…  
வீட்டில் யாரும் இல்லை… மகா… சம்பூரணத்திற்கு மதியம்தான் டாக்டரிடம் அப்பாயின்மென்ட்….எனவே  மகா, அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருந்தார். 
பேசலாம் என்றால், என்ன பேசுவது அமரிடம், ஏதோ ‘நான் குற்றம் செய்தது போல.. அமர்ந்து கொண்டிருக்கிறான்… அபியை பார்க்காமல் போகமாட்டேன் என…’ என அகிலன் பல்லை கடித்துக் கொண்டு அமர்ந்த்திருந்தான்.
அபிக்கும் இவன் வந்தது தெரியாது, வெளியே வரவில்லை… மேலும் இவனிடம் அவளை அழைத்து வரவும் முடியாது… அது நம்பிக்கையை கொடுக்கும்… பார்க்கலாம்.. என எண்ணி கிட்டத்தட்ட ஒரு அரைமணி நேரம்… எங்கும் நகரவில்லை அகிலன்… அவனை முறைத்தபடியே அமர்.. என இருவரும் அமர்ந்திருந்தனர்… 
அபி அங்கே மேலேதான் இருக்கிறாள்.. சொல்லபோனால் அவள் அறையில் இங்கே கீழே அமர்ந்திருக்கும் தன் அமரை நினைத்தபடியேதான்  இருக்கிறாள்.. அவளுடன் கூடவே சத்தமாக சங்கர்மகாதேவன்….
“ஒரு ஜீன்சனிந்த சின்ன கிளி 
ஹலோ சொல்லி கைகொடுக்க… 
தங்க முகம் கருகிவிட்டாள்….
அந்த கள்ளி பிரிந்து சென்றால்…
நான்.. ஜீவன்னுருகி நின்றேன்….
அந்த கள்ளி பிரிந்து சென்றாள்…. 
நான்ன்ன்… ஜீவனுருகி நின்றேன்…
சின்னதொரு காரணத்தால்…
சிறகடித்து மறைந்துவிட்டால்…” என ஓடிக் கொண்டிருக்க… அபி அப்படியே படுத்திருந்தாள்… கண்களில் எதோ கனவு… கீழே சண்டையிடுவது தெரியாத அளவுக்கு கனவு… 
நான்கடுக்கு வீடு… முதலில் வெளிமனிதர்கள் வந்து செல்லும் வரவேற்பறை… அதற்கடுத்து ஹால்… அதற்கடுத்து… மாடிக்கு செல்லும் பெரிய ஹால், அதனருகில் மூன்று ரூம்… அதற்கடுத்து டைன்னிங் ஹால்… அதற்கடுத்து கிட்சென்… நாலாபுறமும் வாசல் என பழையது போன்ற, புதிய வீடு. எனவே காது கேட்பது என்பது அரிது… 
அகிலன், அமரை முறைத்தபடியும் அமர்… நகரவே மாட்டேன் என்ற திமிருடனும் நேரம் சென்றது… நாற்பது நிமிடங்கள் கடந்த பின்… மெல்ல மகா தன் மாமியாரை கை பிடித்து அழைத்துக் கொண்டு வந்தார்… கூடவே, சுவாமி வந்தார்.. அவர்களை அழைத்துக் கொண்டு…
மகா முதலில் கண்ட காட்சி… அமர், அகிலன் எதிரெதிரே அமர்ந்து கடுப்பில் இருக்கும் காட்சியைத்தான்.. வந்த யாருக்குமே அமரை முதலில் அடையாளம் தெரியவில்லை. ஆனால் மகாக்குள் சுருக்கென எதோ பட்டது.. ஆனால் எப்படி முடியும் என எண்ணி பார்க்காமல் சென்றார்.
அமர் சட்டென பாட்டியின் தள்ளாமையை பார்த்து எழுந்து நின்று கொண்டு ஒரு மரியாதை புன்னகை செய்தான். சம்பூரணமும் ஒரு களைப்பான புன்னகை செய்து அவர்களை கடந்து சென்றார்..
அகிலன் கடுப்பாக அப்படியே அமர்ந்த படியே அவர்கள் கடப்பதற்காக காத்திருந்தான்…. சுவாமிக்கு இது யாரோ அகிலனின் நண்பன் என தோன்றினாலும்.. கூடவே தன் மகனின் முகம் எதோ போல் இருக்கவும்… ஆராய்ச்சியாக பார்த்து சினேகமாக, புன்னகை சிந்தி உள்ளே சென்றார்.
சற்று பொறுத்து அவர்கள் சென்றதும் அகிலன் “கிளம்பு அமர்… விளையாடாத… 
வயதானவங்க இருக்கிற இடம்… நீ போ, “ என கொஞ்சம் குரலை இறக்கி பேசினான்.
அமர்க்கு அதுவே புது நம்பிக்கையை கொடுக்க… “போ, சத்தம் போடாமா… அபியை கூப்பிடு “ என்றான் கிண்டலான குரலில்.
அகிலன் “என்ன அமர் புரியாதா… இது விளையாட்டில்ல அமர்… போங்க… அப்புறம் பேசலாம்” என்றான்..
ஆனால் அமருக்கு அவனின் பார்வையும் திடீர் மரியாதையும் சந்தேகத்தை தர… அவனின் பேச்சை காதில் வாங்காமல்… “அபியை பார்க்காமல் போக மாட்டேன்… எவ்வளவு நேரமானாலும் சரி” என அறிவிப்பு போல சொல்லியவன்… தன் போன் எடுத்து பார்க்க தொடங்கினான்..
அகிலன் “டேய்… கிளம்பிடு… இந்த பிரச்சனைக்குதான் டா… உனக்கு அபியை கொடுக்க கூடாதுன்னு முடிவு பண்ணேன்… இப்படி ஒரு அடாவடி.. என் தங்கைக்கு செட்டாகுதுடா…
அவ குழந்தை போல….
அவள உன்னால பார்த்துக்கவே முடியாது அமர்…
ப்ளீஸ், இது சரிவராது அமர்…
கிளம்பு” என இயலாமையான குரலில் அகிலன் விளக்க…
அமர் ஸ்தம்பித்தான்… அது வரை அமருக்கு தோன்றவில்லை… அபியை யார்க்காவது இவன் திருமணம் செய்ய கூடும் என தோன்றவில்லை… 
அண்ணனாக, என்னை பிடிக்காமல் தள்ளி வைக்கிறான் என புரிந்ததே தவிர , முற்றிலும் தன்னை ஒதுக்க கூடும் என நினைக்கவில்லை… எனவே அபியை கல்லூரியில் பார்த்ததும் விடாபிடியாய் வந்துவிட்டான் அவ்வளவுதான்.
இப்போது அகிலன் சொல்லும் போது… இவன் எதோ பெரிதாக யோசிக்கிறான் என தோன்றியது. எனவே இன்றே பேசிவிட வேண்டும் என்ற எண்ணம் அமருக்கு அந்த ஷணம் வந்தது…
அமர் அவசரமாக சபரி அண்ணனுக்கு மெசேஜ் செய்தான்… தான் அபி வீட்டில் இருப்பதாக… உடனே வாருங்கள் என்றான்.. அந்த நொடியே…
தனது அம்மா அப்பா ஊரில் இல்லை தெரியும்… ஆனால் அதை யோசிக்க கூடிய மனநிலையில் இவன் இப்போது இருக்கவில்லை… அகிலனிடமும் பேசவில்லை அடுத்த வார்த்தை. அமைதியாக இருக்க தொடங்கினான்…
அடுத்த பத்து நிமிடத்தில்… அமரின் செல்போனிலிருந்து மெசேஜ் வருவதற்கான சப்தம் மட்டுமே அந்த விசாலமான அறையில் ஒலிக்க தொடங்கியது… 
நரேனும், சபரியும் மாறி மாறி இவனுக்கு மெசேஜ் செய்ய  எதற்கும் பதில் சொல்லாமல் பார்த்தபடியே அமர்ந்திருந்தான்..
அமரின் பிடிவாதம் அகிலை எரிச்சல் பட செய்தது… அகிலன் கையிலிருந்த குஷனை சோபாவில் எரிந்து விட்டு உள்ளே தன் தந்தையை நோக்கி சென்றான். 
மகாவும் தன் மாமியாரை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு தங்களது அறைக்கு வர… அகிலன் தன் தந்தையிடம் “ப்பா, அவன் அமர், வந்திருக்கான் ப்பா… அபியை பார்க்காமா போக மாட்டேன்னு சொல்றான் ப்பா” என்றான் கையை பிசைந்தபடியே..
இதென்ன இப்படியொரு வம்பு எனதான் முதலில் தோன்றியது சுவாமிக்கு “என்ன டா, 
எப்போ வந்தான்… 
இதென்ன டா இப்படி
எனக்கு, அப்போவே போன் செய்திருக்கலாம்ல..” என சொல்லி உட்கார  வந்தவர், பரபரப்பாக வந்தார் வரவேற்பறை நோக்கி… தங்கள் பெற்றோர் அறையை எட்டி பார்த்து சாற்றிவிட்டுதான் வந்தார்.
வந்தவர் அமர் அமர்ந்திருந்த தோரனையை பார்த்தே சற்று… அதிர்ந்து போனார். அசால்ட்டாக அமர்ந்திருந்தான்.. ‘இங்கே பிரச்சினையா’ என்பது போன்ற முகபாவம், உடல்மொழி என அசால்ட்டுதான் அவனிடம் தெரிந்தது.
எங்கு வந்திருக்கிறோம்… அடுத்தவர் வீட்டில் இருக்கிறோமே என்ற எண்ணமேயில்லாதா நிலையில் அமர் அமர்ந்திருந்தான்.
சுவாமி எப்படி இவனை பேசி அனுப்புவது என்று எண்ணிய படியே வந்து அமர்ந்தார்… சுவாமிக்கு புரிந்தது…. இவன் தன் மனைவியின் அண்ணன் மகனென… 
இப்போதுதான் பார்க்கிறார்… மகாவும் இப்போதுதான் பார்க்கிறார். சுவாமிக்கு, மகா சொல்லுவாள் எப்போதாவது… ஆனால், இப்படி நிமிர்ந்து நின்று என் மகனை எதிர்பானேன்று…  அதுவும் என் வீட்டில் வந்து நின்றா.. இப்படியா.. என எண்ணியபடியே வந்தார்.. கூடவே மகா வந்தார் பதறியவராக.
சுவாமி “வாப்பா… 
அமர்… கரெக்ட்..? “ என கேள்வியாக நிறுத்த..
அமர் “ம்… சர், அமர்நாத்” என்றான் அமைதியான குரலில். அமருக்கு இதுவரை அகிலனிடம்  பேசியது தெரியவில்லை… இப்படி அமைதியாக உபசரிக்கும் சுவாமியை அவன் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை… எனவே தடுமாறினான் இப்போது.
மெதுவாக மகா “எப்படி ப்பா இருக்க “ என்றார். அமர்க்கு இப்போதுதான் தான் எங்கு வந்திருக்கிறோம்… எனக்கு, என்ன உறவு இவர்கள், என புரிந்தது… என்ன சொல்வது என தெரியவில்லை நிமிர்ந்து பார்த்தான்… கொஞ்சம் கோவமும் வந்தது, தன் அத்தையை  பார்த்து…
“ம்…” என மெல்ல முனு முணுத்தான்… 
அதற்குள் அகிலனை அங்கு காணவில்லை… சுவாமிக்கு பெண்ணை பார்க்காமல் போகமாட்டேன் என சொன்னதும் பயமாகத்தான் வந்தார்… ஆனால், அவனின் ஒற்றை வரி பதில் அவரை ஈர்த்தது. சொந்தமென சொல்லவில்லை.. சர் என்ற அழைப்பு… அவரை பொறுமைகாக்க சொல்லியது…
சுவாமி.. “என்ன சாப்பிடுற அமர்” என்றார்… ஏதோ செய்தது அந்த குரல் அமரை, இருந்த இறுக்கமெல்லாம் தளர்வது போல் இருந்தது… சற்று சாய்ந்து அமர்ந்தான்.. ஒன்றும் சொல்லவில்லை..
சுவாமி “காபி தர சொல்லவா அமர்” என்றார் பொறுமையான குரலில் என்ன குரலது… வாஞ்சையா… அக்கறையா… இல்லை குழந்தையிடம் கேட்கும் கனிவா எதோ ஒன்று அவனை ஈர்த்தது… அவனும் தலையசைத்தான்.
மகா உள்ளே சென்று எடுத்து வந்து, கொடுத்தார்… பொறுமையாக… அமரும் சுவாமியும் காபியை குடித்து முடித்தனர்… என்ன மெதுவாக தலை குனிந்து குடித்த போதும் காபி தீர்ந்துதானே போகும்… 
அமர்க்கு இப்போது, தான், என்ன பேசுவது என்றே தெரியவில்லை… அகிலனின் கோவம் அவனை இங்கே இட்டுவந்ததுதான்.. ஆனால் இந்த பெரியவர்களிடம் என்ன கேட்பது என புரியவில்லை..
ஆனால் இயல்பான அவனின் துணிவு கைவர “அபியை கூப்பிடுங்க சர், நான் பார்க்கணும்” என்றான் அவரை பார்த்து…
இப்போது சுவாமி அதிர்ந்தார்.. என்னிடமே தைரியமாய்… ‘கூப்பிடுங்க அபியை என சொல்லுவான்’ என்று எதிர்பார்க்கவில்லை அவர்… திரும்பி தன் மனைவியை பார்த்தார்… மகா முகத்தில் சந்தோஷமா… இல்லை சங்கடமா என தெரியாத பாவம்… மகா தன் கணவரை சங்கடமாக பார்த்தார். 
இப்போது அகிலன் வந்தான்.. டேபிள்லில் இருந்த காபி கப் பார்த்து… தன் தந்தையை முறைத்தான். மீண்டும் அதே குரலில் அகிலன் “அமர்… இங்க பிரச்சனை பண்ணாதா… 
கிளம்பு… இது நீ வம்பு பண்ற இடமில்ல… 
எங்க வீடு… கிளம்பு… அப்புறம் பேசலாம்” என்றான்.. தன் அன்னையை கருத்தில் கொண்டு. அவரின் கண்களில் நீர் இப்போவோ அப்போவோ என நின்றதை பார்த்து.
அமர் “ஏன் பயப்படற அகிலன்… 
நான் உன் தங்கையை என்ன பண்ணிடுவேன்னு பயப்படற… 
கூப்பிடு அவள, 
நான் பார்த்துட்டு போறேன்… 
நீதானே போனை அவகிட்டயிருந்து வாங்கி வைச்ச… 
குடுத்திடு… நான் போன் பேசிக்கிறேன்…” என்றான் அனைவரையும் ஆழமாக பார்த்தபடி.
அகிலனுக்கு “டேய்… என்ன வம்பு பண்றீயா… 
அவ சின்ன பொண்ணுடா… அவள் பெயரை கூட நீ சொல்லாதா…
நீ கிளம்பு…. போ..” என அமரின் தோள் பிடித்து தள்ள… அமர் தோளில் இருந்த அகிலனின் கையை பார்த்து முறைக்க… சுவாமி “அகில்… அமைதியா இரு… பேசிக்கிட்டிருக்கேன்ல்ல” என்றார் அதட்டிய குரலில்.
கையை உதறியபடியே அமர் மீதிருந்து எடுத்தவன் குறுக்கும் நெடுக்கும் நடக்க தொடங்கினான்… அவனால் அமர முடியவில்லை…
அமர் நேரே சுவாமியிடம் பேசினான் இயல்பான குரலில்… “நான் உங்க பொண்ணை விரும்பறேன்…. 
அவ போன் சுவிட்ச் ஆப்ன்னு வருது… 
அதான் பார்த்துட்டு போலாம்ன்னு வந்தேன்” என்றான் சின்ன குரலில்… ‘என்ன கேட்கிறேன் நான்’ என புரிகிறதுதான் அமருக்கு.. ஆனால் இதைவிட வேறு நேரம் சரியாக இராதே… தன்னிலை பற்றி சொல்ல. எனவே, பெற்றோரிடம் கேட்பது தவறில்லை என தெரிந்து சொல்லிவிட்டான்….
இதே என் வீட்டில் இப்படி வந்து யாரேனும் அமர்ந்திருந்தால்… நான் என்ன செய்திருப்பேன், நான் அவர்களின் அண்ணன் மகன் என்பதால்தானே இந்த மரியாதை என புரிகிறதுதான் அதனால் தயங்கிய குரலில் தெளிவாகவே சொன்னான்.. 
சுவாமிக்கும் மகாக்கும் வாயடைத்துத்தான் போனது… இந்த தைரியம் முப்பது வருடத்திற்கு முன் எங்களுக்கு இல்லையே… என.. ஆனாலும் சுதாரித்த சுவாமி..  லேசாக சிரித்தபடி “உங்கள பத்தி சொல்லவேயில்ல” என்றார்.
அமர் “நான் புட்பால் ப்ளையர்…”  என முதலில் அவனின் அடையாளத்தைதான் சொன்னான் அமர். 
“உங்க பொண்ணு படிக்கிற கல்லூரிலதான், புட்பால் டீம் 
கோச்சா இருக்கேன்.. வொர்க் பண்றேன்… 
அங்கதான் MBA படிச்சேன்…
ஒரு ஒன்னரை வருடமாக… எங்க கிளாச்சிக் பிரிண்டிங்க பார்த்துக்கிறேன்… 
முரளிதரன் பையன்… அமர்நாத்… கேள்விபட்டிருபீங்க எங்க கம்பெனிய பத்தி” என்றான் இளம் வயதுக்கே உண்டான.. படபடப்புடன்… கொஞ்சம் பெருமையாகவே சொன்னான் .
சுவாமி மேச்சுதலாக பார்த்துக் கொண்டிருந்தார் ஏதும் பேசவில்லை… சிறிய இடைவெளி விட்டு.. “ம்… தெரியும்… 
நல்லா தெரியும்… இப்போ கூட எதோ… 
அந்த மோகன்… எதோ, செய்துட்டு போயிட்டார்னு கேள்விபட்டேன்…” என்றார்.
அமர் “ம்… அது இப்போ கொஞ்சம் சால்வ் ஆகிடிச்சி சர்” என்றான் இப்படி இவர்கள் அடுத்த அரைமணி நேரம் பிசினஸ் பேச… மகா உணர்ந்தது என்ன, எந்த இடத்திலும் என் உறவுமுறை வரவேயில்லை, என்னை அவனிற்கு தெரியாதா… எனதான் தோன்றியது.
பார்த்திருந்த அகிலனுக்கு கோவமே தன் அப்பாவை நினைத்து… விருட்டென சென்றுவிட்டான் அங்கிருந்து.
  

Advertisement