Advertisement

மின்னொடு வானம் நீ…
13
அதிகாலையில் அந்த மெசேஜ்  பார்த்ததுமே அபிக்கு உள்ளுக்குள் சொல்ல முடியாத சந்தோஷம்தான்… என்னை மறந்துவிடவில்லை… 
எப்போதும் அவனிடம் என் நினைவு உண்டு… என் காத்திருப்பு வீண் போகாது… தேங்க்ஸ் கோச்… என கண்ணில் நீரே வந்தது… என்னமோ அவன் தன் காதலை சொன்னது போல..
ஆனால் அவன் அனுப்பிய செய்தி ஒன்றும் பெரிதாக இல்லை… ‘குட் மோர்னிங் டா’ என பொதுவாகத்தான் இருந்தது… எதோ மூணாவது மனுஷன் நாலாவது நபரிடம் சொல்லுவது போல…
அதற்கே அபி… அந்த நாட்டில் இன்னும் கொஞ்சம் குளிர்ந்து, விரைத்து போனாள்… முதல் காதல்… முறையான காதல், ஏன் பிடிச்சுது… எதுக்காகன்னு தெரியாமையே இன்று வரை அவன் மட்டுமே மனதில் இருக்க… 
அன்று, நான் யாருக்கும் நம்பிக்கை தரவில்லை என்றவன்… இப்போது எதை சொல்ல முயல்கிறானாமாம்… 
என்னை நெருங்க எல்லோரும் தயங்கும் நேரத்தில்… என் அண்ணன் எதிரிலேயே… ‘பெயர் என்னனு கேட்டானே…’ அவங்களுகா தைரியம் இல்ல… ஏதோ… குழப்பம் போல.. சிரிப்பு வந்தது அபிக்கு.
எப்படி அபி, அவன் மேசேஜ் பார்த்த ரெண்டு நிமிஷத்துல… அவன் ரெண்டு வருஷமா… காட்டிய பாராமுகத்த மறந்துட்ட… என மனம் கேட்க, கூடவே கண்கள் கரிக்க தொடங்கியது… 
அது அப்படிதான்.. போ… இது நேசம் இல்லை என்றால், நான் எதை நம்புவேன்.. என்னை பிடிக்கும்… அவங்களுக்கு…
நம்ம குடும்ப அமைப்பு அப்படி, அதனாலதானே யோசிச்சாங்க…. 
நல்லதுதானே… யோசிக்கலைனாதான் தப்பு, பொறுமையா யோசிச்சுதானே ஒரு முடிவுக்கு வந்திருக்காங்க.. 
சரி பண்ணிடுவாங்க… எல்லாத்தையும்…  என மனம் அவளிடமே சண்டையிட்டு, சமாதானம் செய்ய.. 
அபியின் முகம் பொலிவானது.. எது எப்படியிருந்தால் என்ன… நேசம் என்றும் அழகானது… அது அவளின் கண்ணில் இப்போது மின்னியது. தபால்காரன் தெய்வமாவன்னு கவிஞர் சொன்னது போல, இப்போது வாட்ஸ்சாப் தெய்வமாகியது… அபிக்கு, இன்னும் ஏதேனும் செய்தி வருமா என பார்த்திருந்தாள்..
மீண்டும் மனம் அவனிடமே செல்ல.. அவனுக்கு சாதகாமாக சிந்திக்க என அபி… அமரானாள்… 
பாவம் அவங்களும் என்ன பண்ணுவாங்க… பெரியவங்க பேச்சை மீற கூடாதுன்னு நினைக்கிறாங்க… நல்லதுதானே… 
ஐயோ! என் பாட்டி… எப்படி எப்படி… அவங்க ஒருத்தர் போதும்… ம்…. பெரு மூச்சு வந்தது. மனம் ஒரு நிமிடத்தில் எல்லாவற்றையும் சுற்றியது….
ஆனால் காரியமாக சுற்றியது… தனவனின் குழப்பம் தெரிந்து சுற்றியது… பார்க்கலாம் என தன் வேலைகளை தொடர்ந்தாள் அபி… 
அமர் அன்று தொடங்கியது தான், இந்த மெசேஜ் செய்யும் பழக்கத்தை… குட்மோர்னிங்… குட் நைட்… நடுவில் ஏதாவது எப்போவாது கேட்பான்… எப்போ வருவ… கால் செய்யாவா என்பான்…
ஆனால் எதற்கும்.. எதற்கும், அவளிடமிருந்து பதில் வாராது… ஆனால், தான் அனுப்பிய மெசேஜ்சை அவள் உடனே பார்ப்பதற்கான அறிகுறி வர தொடங்கியது. 
அமர்க்கு அது போதுமானதாக இருந்தது, அதற்கு மேல் அவன் எதிர்பார்க்கவில்லை… அவளும் கோவமாகதானே இருப்பாள், ஆனால்  என்னை ஒதுக்கவில்லை என அர்த்தம் செய்து கொண்டான். எனவே தன் நிலையை சொல்லவில்லை… ஜஸ்ட் மெசேஜ் என்பதாக அவனுக்கும் மாதங்கள் சென்றது.
அமரின் வீட்டில்… ப்ரியாவின் நிச்சையம் முடியும் வரை… யாரும் எதுவும் அவனிடம் பேச்சு வைத்துக் கொள்ளவில்லை… தன் போல் வருவான்… உண்பான், கிளம்பிவிடுவான் தன் வேலையை பார்க்க…
ஆனால் இந்த நிலையை அமர் எதிர்பார்க்கவில்லை… என் கோவமும் மௌனமும் ஒன்றுமில்லையா உங்களுக்கு என வெறி வந்தது.
முரளி, இது பேசி.. அவனிற்கு புரியவைக்க வேண்டிய விஷயம் என அமைதியாக இருக்க செய்தார்.. அனைவரையும். 
ஆனால், அமர் புரிந்து கொண்டது… நான் விரும்புகிறேன் என சொல்லியும் இவர்கள் என்னிடம் ஏதும் கேட்கவில்லை.. அப்படினா, நான் முக்கியமில்லை, இதோ நிச்சியத்திற்கு கூட என்னிடம் ஏதும் சொல்லவில்லை… எல்லா வேலையும் அப்பாவே.. பார்க்கிறார். பார்க்கட்டும்… பார்க்கட்டும் எத்தனை நாளைக்கு என கோவம் வந்தது அவனுள்.. நாட்கள் வேகமாக சென்றது…
அன்று காலை முதல், வீடு பரபரப்பாக இருந்தது… அங்காளி பங்காளி மாமன் மச்சான் எல்லாம் காலை வந்து கை நனைத்து… தத்தம் வேலைகளை பார்க்க கிளம்பினர்.. உறவுகள் பெண்கள் மட்டும் இருந்தனர். மாலையில்தான் விழா.
வந்த அவர்கள், கேட்ட முதல் கேள்வி “எங்க ப்பா…. அமர்” என்பதுதான். முரளி அப்போதைக்கு எதையோ சொல்லி சமாளிக்க… சுமதி இதை கவனிக்கவில்லை… இங்கேதான் இருப்பான் என எண்ணியிருந்தார்.
சுமதிக்கு நேரமே இல்லை, வந்தவர்களை கவனிக்க, பேச்சு கொடுக்க… இதில் நடுவில் ப்ரியா வேறு… எதோ கேட்டுக் கொண்டிருந்தாள்.. எனவே நேரம் சென்றது. சாப்பாடு வெளியில் சொல்லிவிட்டதால்… அந்த வேலை இல்லை.. 
சுமதி, என்ன முறைகள் நம்முடையது… என பெரியவர்களிடம் பேசியபடியே, வாங்க வேண்டியது குறித்து எழுதிக் கொண்டிருந்தார் சுமதி… 
ப்ரியாவிற்கு மேக்கப் குறித்த கலக்கமே இன்னும் தீரவில்லை… இதுவா அதுவா… என சென்றது. எனவே அவளே ஒருவாரம் முன்பு… பார்லர் பெண்கள் உதவியுடன்.. எதோ ஒன்றை தேர்வு செய்திருந்தாள்.
இதில் ஒன்றுவிட்ட பெரியப்பா மகள்… இப்போதுதான் திருமணம் ஆனவள் வந்து… ‘நான் இந்த மேக்கப் தான்… போட்டேன்… சரியா இல்லை. 
ப்ரைட்.. கலர் சேரில… நீ இந்த மேக்கப் போட்டேன்னா… நைட்ல, நீதான் டல்லா தெரிவ’ என தன் பங்குக்கு சொல்லி செல்ல.. ப்ரியா… குழம்பித்தான் இருந்தாள்… இதுவரை…
இப்போது ப்ரியாவுக்கும் தோன்றியது அண்ணன் இருந்தால்… ‘உனக்கு பிடிச்சத செய்டி… மாப்பிள்ளைய எங்கயும் போகாம பார்த்துக்கறது என் வேலை’ என கலாய்த்திருப்பான்… என இயல்பாய் தன் அண்ணனை தேடியது அவள் மனம்.
குழம்பியிருக்கும் நேரத்தில்… உடன் பிறந்தோர்.. அந்த செயல் தவறோ சரியோ… இது செய்… பார்த்துக்கலாம்.. என்று சொன்னால் அதன் பலமே தனிதான்… எனவே ப்ரியா தன் அம்மாவிடம் “ம்மா… அண்ணன் எங்க” என கேட்க…
காலையிலிருந்து அமர், கண்ணில் படவில்லை. முரளிக்கு தெரியும், அவன் கடந்த பத்து நாளாக தன் வேலையையும் செய்து கொண்டிருக்கிறான் என்று, ஆனால் அதைவிட முக்கியம் இன்றைய நிகழ்வல்லவா… என முரளி யோசனையில் அமர்ந்திருக்க…
ஆனால் சுமதி பொரிய தொடங்கினார்… “எப்படி அவன் வெளியே போகலாம்… பொறுப்பில்லை… “ என தொடங்கி… எல்லாத்துக்கும் காரணம் அவர்களாகத்தான் இருக்கும்.. என அமர்ந்திருந்த முரளியிடம், புலம்ப தொடங்கினார்…
முரளி தன் மகனுக்கு அழைத்தார்… இரண்டு முறையும் அழைப்பை எடுக்கவில்லை அமர்… மூன்றாவது முறை… அழைக்க, எடுத்தான் “ஹலோ..” என்றான்.
முரளி “எங்கடா இருக்க…” என்றார் இருந்த கோவத்தை எல்லாம் தன்னுள் அடக்கி.. குரலில் நிதானம் காட்டி..
அமர் “ம்… வெள்ளலூர் குடோன்ல…” என்றான் அசித்தையாய்.
முரளி “அங்க எதுக்கு போன, குடோனல உனக்கென்ன வேல… வீட்டில் என்ன நடக்குதுன்னு தெரியுமில்ல… வந்து சேர்…” என்றார்…
“நான் எதுக்கு… உங்களுக்குத்தான் நான் தேவையில்லையே… எங்கிட்ட பேச கூடமாட்டீங்களே… 
பார்த்துக்கோங்க… அப்படியே இருந்துக்கோங்க… 
நான் யார் அந்த வீட்டில்… “ என பொறுமையாக சொல்லி தன் தந்தையின் பிபியை ஏற்றினான்…
முரளிக்கு அவனின் கோவம் புரிய… அமைதியானார்… நான் சொல்லியிருக்க வேண்டுமோ அவனிடம் என எண்ணினார்.. அவரின் அந்த சிறிது நேர அமைதி அமருக்கு கோவத்தை கொடுக்க… போனை வைத்துவிட்டான்.
திரும்பவும் தன் மகனுக்கு அழைத்தார் “டேய்… நிச்சையம் முடிந்து பேசிக்கலாம்னு இருந்தேன் டா…” என்றார் மெல்லிய குரலில். அப்பா மகனுக்கான மெல்லிய இழை…  என்னை அவனுக்கு புரியும் என்ற த்வனி கலந்து வந்தது தன்மையாக… 
அமர் அமைதியாக இருக்க… “அப்படியே விட்டுவுவேனா ப்பா, வா அமரா.. 
நீயில்லாம, எப்படி… 
எல்லாம் நீதான் எங்களுக்கு 
வாடா..” என வாஞ்சையாக அழைத்தார். பொதுவாக முரளி அவனிடம் பேசுவதே… இப்போதெல்லாம்தான், முன்பு கல்லூரி தொடங்கும் போதே… அவர் சொன்ன படிப்பை அவன் எடுக்கவில்லை… 
அத்தோடு, விளையாட்டு விளையாட்டு என… எப்போதும் பந்து பின்னாலேயே சுற்றினான்… இப்போது இந்த ஆறுமாதமாகதான், தன் மகன்… பொறுப்பாக தன் அலுவலை பார்ப்பது… அவரை சற்று நெகிழ்த்தியிறுந்தது… அதான் தாக்கம் குரலில் தெரிய… கொஞ்சம் கரகரத்தது…
மகனுக்கு புரிந்தது போல “எங்க, உங்க பொண்டாட்டி… இருக்காங்களா..” என்றான் அவரை இயல்பாக்க… 
முரளி கொஞ்சம் தளர்ந்தார்.. “இருக்கா டா… அவதான் கூப்பிட சொன்னா..” என சொல்லி போனை மனையாளிடம் கொடுக்க..
சுமதி “வர சொல்லுங்க அவன, என்ன கெஞ்சனுமா அவன்கிட்ட.. வர சொல்லுங்க.. இப்படிதான் பொறுப்பில்லாமல் இருப்பானா… 
எல்லாம், சேருவார் தோஷம்” என சத்தமாக பொரிய தொடங்கினார்.. தங்கள் அறையில்தான் இருந்தனர் இருவரும்… அதனால் சத்தம் வெளியில் செல்லவில்லை.
அதற்குள் முரளியே “வாடா… வந்து பேசு” என வைத்துவிட்டார்… பெரிய பலம் வந்தது அவரிடம்.. இன்னும் என் மகன் எங்க பிடியில்தான் இருக்கிறான்… என பெருத்த நிம்மதி, அதை அவரின் முகம் காட்டிதர… சுமதியும் அமைதியாக பார்த்திருந்தார்.
ஒருமணி நேரத்திற்குள் வந்தான் அமர்…  வந்தவன் ஹாலில் ஹோபாவில் அமர்ந்து கொண்டான்… “சுமதி… சுமதி… ஜூஸ் எடுத்துட்டு வா” என்றான்.. சத்தமாக… எல்லோரும் இவனை வேடிக்கை பார்க்க தொடங்கினர்.
சுமதி அங்கு பூஜை அறையில் இருக்க… தன் மகனின் உரத்த குரல்… கேட்கவும்… என்னாச்சு எனதான் நினைத்தார்.. முதலில் தன் கணவன் குரல் போல் இருக்கவும் சற்று… பயந்தார். யாருக்கும் ஏதோவோ என.. இப்போது இரண்டாம் முறை அழைக்ககும் போது, புரிந்தது மகன்தான் என…
வீட்டிலிருந்த உறவு பெண்மணி… ”என்ன அமர்.. அக்கா உள்ள வேலையா இருக்காங்க… என்ன வேணும் சொல்லு” என அவரும் கேட்க… மீண்டும் அழைத்தான் அமர்… இத்தனை நாட்கள் அம்மா மகனுக்குள் நடந்த சண்டை தெரியாதே இவர்களுக்கு… 
சுமதிக்கு புரிந்தது அவனின் செயல்… பொதுவில் பேசி, என்னை சமாதனம் செய்ய பார்க்கிறான் என புரிந்தது… ஆனால், அவருக்கு அவன் போல் விளையாடும் பருவமல்லவே, எல்லாம் சேர்த்து குழப்பி நின்றது… கிடு கிடுவென கிட்செனுள் சென்று… மத்துகுச்சியுடன் வந்தார் அவனை நோக்கி…
“ஏண்டா… வந்ததே லேட்… வந்தோமா… சத்தமில்லாமா… வேலைய பார்த்தோமான்னு இல்லாமா… பேர் சொல்லி கூப்பிட்டு… அலும்பு பண்றீயா…” என அவன் அருகில் வர… சுதாரித்த அமர்… எழுந்து அவர் கையை பிடித்துக் கொண்டான்… 
“ம்மா… உன் பொண்ண மட்டும்தானே கவனிக்கிற… இந்த ஒரு வாரமா… என்கிட்டே பேசவேயில்ல நீயி….” என அவரின் கண்களை பார்த்து சொன்னவன்…
சுதாரித்து… “பொண்ணு நிச்சையம்னா… என்ன, 
நீ, என்னை கவனிக்க மாட்டியா… ஜூஸ்… கொடும்மா… “ என படுசாந்தமாக கேட்டான் மகன்.
இப்படி அவன் ஜாடைமாடையாக பொதுவில் பேசுவது அவருக்கு பிடிக்கவில்லை. எனவே… “என்ன டா… நீ” என எதோ தொடங்க.. 
முரளி “விடு சுமதி… நீ ப்ரியா கூடவே சுத்திக்கிட்டு இருந்தில்ல… இந்த ஒரு வாரமா… அதான் ஏதோ கலாட்டா பண்றான் பையன்… 
நீ போய் அவனுக்கு ஜூஸ் எடுத்து வா” என சொல்லி நகர்ந்தார்… சுமதியும் ஏதும் சொல்லாமல் நகர்ந்தார்… அமரின் நிலை இன்னும் சிக்கலானது. ஜூஸ் அந்த உறவு பெண்மணிதான் கொண்டுவந்து கொடுத்தார். உறவுகள்தான் அமரின் கலாட்டா நினைத்து… ஏண்டா இப்படி படுத்தர உங்க அம்மாவ… அவளுக்கு வேலை நிறைய இருக்குடா, என பெரியவர்கள் சொல்லவும்… சிறுசுகள் எல்லாம்… ‘இந்த அம்மாக்களே இப்படிதான்… அப்போ அப்போ கட்சி மாறிடுவாங்க’ என சொல்லி சிரித்துக் கொண்டது. முரளிக்கு அப்பாடா… என்றானது.
ஆனால் அமருக்கு, புரிந்தது அம்மா தன்னிடம் விளையாட விரும்பவில்லை என…. 
ப்ரியாதான் தன் அண்ணனின் வரவை மிகவும் எதிர்பார்த்தால்.. எனவே தங்கையாக தன் அண்ணனை நோக்கி வந்தவள் “ண்ணா… எப்போ வந்த வா“ என தன்னுடன் இழுத்து சென்றாள். அதுவே அந்த நேரத்தில் அமருக்கு மிக பெரிய ஆறுதலாக இருந்தது.
அவனும் தன்னை சமாதானபடுத்திக் கொண்டு… ப்ரியாவுடன் பேச்சில்  கலந்தான்… இப்போதுதான் கவனித்தான்.. தன் புடவையை கையில் வைத்துக் கொண்டு… தன்னிடம் எதையோ கேட்டுக் கொண்டிகிறாள்… தன் தங்கை என “என்ன ண்ணா, சொல்லு… இந்த புடவை… ரொம்ப அடிக்க வருதா…” என அதுதான் இப்போதைய தலை போற… விழயம் என்பது போல் முகத்தை வைத்துக் கொண்டு கேட்கவும்… 
அமர், பட்டென சிரித்தே விட்டான்… “ஏண்டி… இப்படி வைச்சிருக்க முகத்த…. “ என சொல்லி சற்று சத்தமாக சிரித்தான்.. ப்ரியா அவனை முறைக்க தொடங்கினாள்.. 
அவனே “சரி சரி…” என்றவன்… 
“வேற என்ன புடவ வைச்சிருக்க…” என்றான்… 
உதடு பிதுக்கினாள்.. தங்கை… “அப்புறம் என்ன குழப்பம்… இதுதான் சரி… அழகான பஞ்சு மிட்டாய் கலர்… மையில்டான வெளிச்சத்துல… சூப்பரா இருக்கும்… என்ன வசந்த்தான் கொஞ்சம் மிரண்டுடுவார்…. ஐ கேன் மேனேஜ்… ஓகே” என சிரியாமல் சொன்னான் அமர்… ப்ரியா… சிரித்தபடியே.. அவன் முதுகில் ஒன்று போட்டாள்…
அமர் “சரி… ஜுவ்வல் எல்லாம் பேங்க்கில் இருந்து எடுத்தாச்சா… பத்திரமா வைச்சிறுக்கியா…. 
உன்கிட்ட இருக்கா… அம்மாகிட்டயா…” என கேட்டான்…
“அம்மா கிட்ட இருக்கு… எங்கயும் போயிடாத ண்ணா, இங்கயே இரு… என் கண்ணிலேயே பட்டுகிட்டே இருக்கணும்” என்றாள்… கொஞ்சளாக.
“ஆறு மணிக்கு மேலே சொல்லு… உனக்கு, நான் கண்ணுக்கு தெரியுறனான்னு…” என்றான் மெல்லிய குரலில், சொல்லியவன் சென்றும்விட்டான்… ப்ரியாவுக்கு, அவன் சென்ற பிறகுதான், சொன்னது புரிந்தது…
“பிரகாஷ்வசந்த் ப்ரியாதர்ஷினி…” இருவரின் நிச்சைய தருணமும் முடிந்தது… திருமணம் நான்கு மாதம் சென்று… என நாள் குறிக்கப்பட்டது. தடபுடலாக விருந்து நடந்து கொண்டிருந்தது… ப்பே முறையிலான விருந்து… நிச்சையம் பெரிய ஹோட்டலில் நடந்ததால்… அந்த ஹாலை ஒட்டிய இடத்தில் உணவு அறை… அமர் பொறுப்பாக எல்லோரிடமும் விசாரித்துக் கொண்டிருந்தான்… 
சுமதி அப்போதுதான் வந்தார் அங்கே… எல்லாம் சரியாக இருக்கிறதா… மகன் எங்கேனும் சென்றுவிட்டானா என பார்க்க வந்தார்… ஆனால், அமர் பொறுப்பாக அங்கேதான் இருந்தான்… பொறுமையாக எல்லோறிடமும் பேசியபடியே… நின்றிருந்தான்.
அமரை இப்படி பார்க்கவும், சுமதிக்கு நிறைவாக இருந்தது.. இப்படியே இருக்க வேண்டும் என் பையன், என எண்ணம் வந்தது அவரிடம்… அமைதியாக மகனின் பொறுப்பை கண்களில் நிரப்பி மேலே சென்றுவிட்டார்.
அவரின் எண்ணமெல்லாம் காதல்… விரும்புகிறேன்.. என சொன்னதும், அந்த எண்ணம் (அவனை,) மகனை பொறுப்பில்லாதவனாக காட்ட தொடங்கியது… அல்லது சுமதி தன் மகனை அந்த கண்கொண்டு பார்க்க தொடங்கினார்… எனவேதான் இந்த ஐய்யம் அவரிடம்..
மேலும்… இருபத்து ஏழு வருடங்களுக்கு முன்… இந்த காதல் என்ற ஒன்றால்… தானும் தங்கள் இரு குடும்பமும் பட்ட.. அவமானம் கொஞ்ச நஞ்சம் அல்லவே… அதுவே அவரை… தூங்கவிடாமல் செய்து கொண்டிருந்தது. எனவே தன் மகனேயானாலும்… அவனை நம்ப மறுக்கிறது தாயுள்ளம்… இப்படியாக அந்த விழா இனிதாக நிறைவானது.
@#@#@#$@#@#@     @#@#@#@#@#@ @#@#@#@#@#
அன்றைய தினம் முடிந்தது…. மறுநாள் முதல் அமர் ஒவ்வரு நாளும் எதிர்பார்த்தான்… தன் பெற்றோர் தன்னிடம் கேட்பார்கள் என… ஆனால் சுமதி அந்த தவறை… செய்யவேயில்லை.
ஒரு பத்துநாள் இப்படியே கடந்தது. அமர் எப்போதும் போல் இருந்தான்… தன் தங்கையுடன் கலகலப்பாக பேசினான்.. தந்தையுடன் வேலை விஷயங்கள் பேசினான்… ஆனால் தன் அம்மாவிடம் நெருங்கவில்லை.
அப்படியே அபிக்கும் மெசேஜ் செய்தான்… அவ டிபில கூட அவளின் புகைப்படம் இல்லை… அமரின் மனம் ‘ஒரு பிட்சர் கூட வைக்க மாட்டியா’ என அவளை திட்டி கொண்டது… 
அவளின் குரல் கேட்கவில்லை… போட்டோ இல்லை.. ஒரு பதிலும் இல்லை.. அமருக்கு, ஏதோ போல் ஆனது… ஆனாலும் தான் செய்ததும்… அதிகம்தானே என எண்ணி அமைதிகாத்தான்..
ரொம்ப பொருக்க முடியாமல், இன்று.. இவன் மாற்றினான் தன் டிபியை AA என… ஆனால் அவள் அதை இன்னும் பார்க்கவில்லை போல… எதுவும் ரிப்ளே வரவில்லை அவளிடமிருந்து.. 
அமருக்கு… ‘ஒரே ஒரு ஸ்மைலியாவது அனுப்பலாம்… நம்மள விட ரொம்ப படுத்தறா…’ என எண்ணிக் கொண்டு உறக்கத்திற்காக தயாராகினான்..
இப்போது முரளி அழைத்தார்.. அமரை, நட்ட நாடு ஹாலில் அமர் அமர்ந்திருக்க, முரளி “அமரா.. உனக்கேதான் எல்லாம் தெரியுமே… 
அவங்க… அதான் உன் அத்தை… அவர்கள் முடிந்து போன கதை… 
எனவே, அவர்களை சேர்ந்த எதுவும் வேண்டாம்டா…
உனக்கு சொல்லகூடிய செய்தியாக இருந்தால்… நாங்க சொல்லியிருக்க மாட்டோமா… உனக்கு புரியும்னு நினைக்கிறேன்…” என்றார்.
அம்ரிடம் பதில் இல்லை.. ஆக இவர்கள் என்னிடம் பேச நினைப்பது முடிவு செய்யப்பட்ட விஷயம் என புரிந்தது.. எனவே அமைதியாக கேட்டுக் கொண்டான்… ஏதும் சொல்லவில்லை…
சுமதி… தங்கள் அறையிலிருந்து வெளியே வந்தார்… “என்ன டா, அமைதியா இருக்க… 
எங்கள் பையனா… எங்கள் பேச்சை கேட்டு… நாங்க சொல்ற பொண்ண, கல்யாணம் செய்துக்கிறேன்னு சொல்லு…
சும்மா… இந்த பழைய கதைய நீ ஆரம்பிச்சு… சேர்த்து வைக்கிறேன்… அப்படி இப்படின்னு… சொல்லிக்கிட்டு இருக்காதே…
இனி ஒட்டாது… அவ்வளவுதான்…” என்றார் படபடப்பாக.
முரளி “நீ உள்ள… போ… நான்தான் பேசிட்டு இருக்கேன்ல்ல…” என்றார்.
சுமதி “ஆமாம்… நல்ல பேசுனீங்க… அவன் நம்மகிட்ட செய்தியா சொல்றானா… இல்ல அனுமதி கேட்கரானான்னு தெரியல…
நீங்க இப்படி வள வளன்னு பேசுனிங்கன்னா… வேற ஏதாவது பண்ணிக்க போறான்…
டேய்… அப்படி ஏதாவது நடந்தது… இன்.. இன்னொரு முறை அதையெல்லாம் பார்க்கர, சக்தி எனக்கில்ல… சொல்லிட்டேன்…” என அழ தொடங்கினார்.
முரளி “சுமதி… சுமதி…. என்ன பேச்சு இது” என அதட்ட தொடங்கினார்.
அமர் எழுந்து சென்றான் சத்தமில்லாமல்… எல்லாம் தெரியும்தானே எனக்கு… இந்த வார்த்தை வருமென தெரியும்தானே எனக்கு… சமாளி… சமாளி என தனக்கு தானே… சொல்லிக் கொண்டான் அமர்… ஏதும் தனக்கு சாதகமாக நினைக்க வரவில்லை… அவனுக்கு. முழுவதும் ப்ளங்… என்ற நிலை… சற்று அமர்ந்து கொண்டான்… என்ன என்ன அடுத்து என…
ஆனால் கைகள்.. இன்றும் மறக்காமல் தன்னவளுக்கு… குட் நைட் மேசேஜ் அனுப்பியது… கூடவே ஒரு பிங்க் வண்ண ஹார்ட்டும் அனுப்பினான்… 
எந்த பதிலும் இதுவரை.. தன்னவனுக்கு அனுப்பவில்லை அபி… அதற்காக அவனை ஒதுக்கவில்லை. எப்போதடா அவனின் மெசேஜ் வரும் என காத்திருந்தாள், அவனுக்கும் காத்திருக்க சொல்லி தந்தாள். 
அவனின் ஓவ்வரு… வாழ்த்தும் அவளுக்கு ஸ்பெஷல்தான்… ஆனால், அதை சொல்லவில்லை அவள். அபி எல்லாவற்றிலும் தெளிவாக இருந்தாள் இனி ஒரு ஏமாற்றத்தை அவள் ஏற்க தயாராக இல்லை.. 
இந்த தனிமையான நாட்களும், வெளிநாட்டு பயணமும் அவளிடம் நிறைய தெளிவை கொடுத்திருந்தது.. 
நாட்கள் ஈரம் பட்ட கற்கண்டாய் கரைந்தது… அன்று அமருக்கு, அபியிடமிருந்து ஒரு மெசேஜ் வந்திருந்தது… 
அமர் அதை பார்த்தவுடன்… மெல்லிய கோவம் தலை தூக்கினாலும் என்ன முயன்றும்… உதடுகள் தன்போல் சிரித்தது… லேசாக கண்களில் கண்ணீர் துளிர்த்தது… 

Advertisement