Advertisement

நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா 
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய் விடு 
ஓ தென்றலே என் தனிமை கண்டு நின்று போய் விடு..
காலை வேளையில் சுசிலாவின் பாடலில் மெய் மறந்து அமர்ந்திருந்த மினியின் முதுகில் காய்ந்த இலை சருகு விழுந்ததில் நிஜ உலகிற்கு வந்தாள் மினி. ரகு இப்போது தான் எழுந்து வந்தார். அவருக்கு கஞ்சி காய்ச்சி கொடுத்து விட்டு காலை உணவை சமைக்க தொடங்கினாள்.
ரகு, “சரி மா.. நீ சமைச்சு முடிச்சுட்டு பாத்திரம் எல்லாம் போடு.. நான் கழுவிக்குறேன்.. வீடு சுத்தம் பண்றதெல்லாம் என் பொருப்பு.. நீங்க கிளம்புங்க.. “
“சரிப்பா.. “
மினிக்கும் கதிருக்கும் தந்தையின் பேச்சு மகிழ்வை தந்தது.. ஆனாலும் மினிக்கு தன் காதல் விஷயத்தை கூறினால் எப்படி எடுத்து கொள்வார்கள் என்ற பரி தவிப்பு இருந்து கொண்டே தான் இருந்தது..
மினி தேவிடம் இயல்பாக பேச தொடங்கி விட்டாள். தேவ் அவளை பேச வைத்திருந்தான். இன்றும் மதிய வேளையில் அவன் அழைப்பிற்காக காத்து கொண்டிருந்தாள் மினி. அவன் எப்பவும் விட சிறிது நேரம் கழித்தே போன் செய்தான்.
மினி, “ஹலோ.. ஏன் இன்னைக்கு 10 நிமிஷம் லேட் போன் பண்றதுக்கு? “  
“அடிப்பாவி, தினமும் டைம் வேற நோட் பண்றியா நீ .. பசி எடுத்ததுனு சாப்பிட்டு வந்து போன் பண்றேன் டீ?”
“ஓ சரி சரி.. எப்ப வரீங்க ஊருக்கு?”
“வந்துட்டா மட்டும் மேடம் என்ன பார்த்து ஓடறதுலே இருப்பீங்க.. அப்புறம் என்ன கேள்வி.. “
“ம்ச்ச்ச்.. சொல்லுங்க.. “
“அடுத்த புதன் அங்க இருப்போம்.. ஆனால் மீட் பண்ண முடியுமா தெரியாது.. கூட ப்ரண்ட்ஸ் எல்லாம் இருப்பாங்க.. முடிஞ்ச வரை பார்க்க வருவேன். ஓகே ?”
“ம்ம் சரி.. எத்தனை நாள் இங்க இருப்பீங்க?”
“சண்டே கிளம்பிடுவோம் மா.. ஏன் இத்தனை கேள்வி கேட்கற மினு குட்டி.. “
“சும்மா தான் கேட்டேன்”
“சரி சரி உன் போட்டோ ஒன்னு எனக்கு அனுப்பு… “
“எதுக்கு?”
“சும்மா தான் டி.. 1 வருஷமா உன்னை பார்க்காமல் எப்படி இருந்தேன் தெரியலை… ஆனால் ஒரு வாரம் கூட இப்ப தாக்கு புடிக்க முடியலை.. சீக்கிரம் அனுப்பு.. நான் வைக்குறேன்..  பை.. “
தேவ் பேசிய அனைத்தும் தூண் மறைவில் நின்று கேட்டு கொண்டிருந்த நிஷா “ஓ பார்க்காமல் இருக்க முடியலையோ.. தேவ், நீ அவளை இனி பார்க்கவே கூடாதுனு நான் முடிவு எடுக்க வைப்பேன்.. புதன் கிழமை வரைக்கும் ஜாலியா பேசிக்கோ.. அதற்கப்புறம் உன்னால் முடியாது.. “ என்று மனதில் சபதம் எடுத்து கொண்டாள். 
மினி ஒரு 3, 4 ஸ்டில் எடுத்தவள், கடைசியாக எடுத்த போட்டோ திருப்தி அளிக்க, அதை அனுப்பி விட்டு தன் வேலை பார்க்க சென்றாள். 
தீபக், நிவேதா , தேவ் மூவரும் இன்றும் ஆடிட்டோரியத்தில் கூடி இருந்தனர்.
தேவ், “சொல்லு நிவி.. ப்ளான்ல எதாவது மாற்றம் இருக்கா ?”
நிவி,“ ஆமாம் டா.. அவள் முன்னாடி என்ன ப்ளான் போட்டாள்னா, சனி கிழமையோட முகாம் முடியுது, டாக்டர்ஸ் எல்லாம் கிளம்பிடுவாங்க, நைட் எல்லாரும் உங்க தோப்பு வீட்டில் புட் பார்ட்டி கொண்ட்டாடலாம்னு  சொன்னதால் அவ உனக்காக தூக்க மாத்திரை எடுத்து வச்சிருந்து அதை உன்னை எப்படியாவது சாப்பிட வச்சு உன்னை அவ ரூமுக்கு கூட்டி போய் படுக்க வச்சிட்டு காலையில் ட்ராமா போட போறேன் சொன்னால் ஆனால் இப்ப அதுக்கு முன்னாடியே ஏதாவது செய்வாள்னு தோணுது.. “
தீபக் “ஏன் அப்படி சொல்ற நிவி?”
“இன்னிக்கு எல்லாரும் ஈவிநிங் ஜெனரல் வார்ட் விசிட் போறப்ப, அவள் மட்டும் வரலை, தலை வலிக்குதுனு க்ளாஸில் உட்கார்ந்திருந்தாள், நான் வீட்டுக்கு கிளம்ப பேக் எடுக்க போகும் போது, அவள் நோட்டில் ‘மினு ‘னு பேஜ் புல்லா எழுதி அப்புறம் பேனவால அந்த பேரை வெறி தனமா அடுச்சு கிட்டு இருந்தாள்.. நான் போய் அவ கிட்ட கேட்டப்போ.. ஒன்னும் இல்லைனு நோட்ட மூடி வச்சிட்டா.. அதான் சொல்லுறேன்.. “
தீபக் “ஏன் டா அவ இப்படி இருக்கா ? அவ்வளவு லவ்வா என்ன உன் மேல ?”
நிவி, “லவ் எல்லாம் இல்லை.. அவளை ஒருத்தன் ரிஜக்ட் பண்ணத அவளால் தாங்கிக்க முடியலை அவ்ளோ தான்.. உண்மையா லவ் பண்ணுனா, தான் லவ் பண்ணவங்க சந்தோஷத்துக்காக எல்லாத்தையும் விட்டு கொடுப்பாங்க.. அவ அப்படி கிடையாது.. “ 
தேவ் “ம்ம்ம்ம்…. பேசாமல் டீன் கிட்ட சொல்லிடலாமா ?”
நிவி, “வேண்டாம் டா.. அவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்.. அப்புறம் அவ ஏதாவது ஏடாகூடமாக செஞ்சிட போறா..”
தேவ் “சரி.. நாம கொஞ்சம் கேர்புல்லா தான் ஹாண்டில் பண்ணனும் அவ விஷயத்தை..  “
நிவி “ஆமாம் உன் ஆள் பேரு தான் மினு வா ? அவளுக்கு எப்படி தெரியும் “
தேவ் ஒரு புன்னகையுடன் “அவ பேரு மின்மினி.. எனக்கு மினு.. மதியம் நான்  போன்  பேசினதை கேட்டிருப்பா நிஷா“
நிவி “ ம்ம்ம் .. நைஸ் நேம்.. சரி டா நான் கிளம்புறேன்”
தீபக் “பார்த்து போ.. நிவி “
“பை” என்று முதலில் அவள் வெளியே வந்தாள், சிறிது நேரம் கழித்து தீபக்கும் தேவும் வந்தார்கள். 
*********************************************** 
இப்படி அப்படி என்று முகாம் ஆரம்பிக்கும் நாளும் வந்தது.. முதலில் தேவின் கிராமத்திலே ஆரம்பித்தார்கள். நிஷா, நிவேதா இருவரும் பரிசோதனைக்கு வருவோர்களின் பேர், முகவரி ஆகியவற்றை எழுதி கொண்டு, முதற்கட்ட பரிசோதனை நடக்கும் இடத்திற்கு அனுப்பி வைத்தனர். கூட்டம் அலை மோதவில்லை என்றாலும், மக்கள் ஒவ்வொருவராக வந்து கொண்டு தான் இருந்தார்கள். 
தேவ் பேசியதை கேட்டதிலிருந்து மினு இந்த ஊர் தான் என்று தெரிந்து கொண்டாள். அந்த மினு அப்படி என்ன என்னை விட அழகு, அவள் எப்படியும் வருவாள் ,அவளை பார்த்தே தீர வேண்டும் என்றே ரிஷப்ஷன் ஏரியாவில் அமர்ந்தாள், அவளை கண்காணிக்க நிவியும் கூட சென்றாள்.
தேவும் தீபக்கும் அனைவருக்கும் தேவைப்படும் உதவிகளை செய்து கொண்டிருந்தார்கள். மணி காலை 11 ஆக, எல்லாருக்கும் இளநீர் கொடுத்தார்கள் இருவரும். அப்போது நிஷாவின் ஆசையை நிறைவேற்ற மின்மினி அங்கு வந்தாள்.
தேவ் பல முறை கூறியும் அவன் பேச்சை கேளாது இங்கு வந்து கொண்டிருக்கும் தன்னவளை தூரத்தில் இருந்தே முறைத்து கொண்டிருந்தான். தீபக் அவனை பல முறை அழைத்தும் திரும்பாததால்,
“டேய் தேவ்” என்று முதுகில் தட்டினான்.
“என்னடா ?”
“எவ்வளவு நேரமா கூப்பிடறது? மீதி இருக்கும் இளநீரை என்ன பண்றது ?“
“வீட்டிலிருந்து ஆள் வந்து எடுத்துப்பாங்க டா.. அங்க பாரு“
“யாருடா ? மின்மினி தங்கச்சியா ?”
“ஆமாம்”
“ம்ம்ம் என்ஜாய் மச்சி.. “
“போடா அவளை வர வேண்டாம்னு சொன்னா பேச்சை கேட்காமல் வந்து நிக்குறா?”
மின்மினி அங்கு நிஷாவிடம் சென்று தன் பெயர் மற்றும் முகவரி கூறி ரிஜிஸ்டர் செய்து கொண்டாள். நிஷாவின் கவனம் முழுதும் மினு என்ற பெயரிலே இருக்க, அவளை கண்டு கொள்ளவில்லை ஆனால் நிவேதாவிற்கு தெரிந்தது அவள் யாரென்று.. நிவி தேவை திரும்பி பார்க்க, அவன் மினியை முறைத்து கொண்டு இருந்தான்.. ஏதோ ஊடல் என நினைத்து கொண்டு தன் வேலையை தொடர்ந்தாள் .
மினி கிட்ட வந்ததும் “ அறிவிருக்காடி உனக்கு… இங்க வர வேண்டாம்னு தான சொன்னன்… என் பேச்சை கேட்குற ஐடியாவே இல்லயா?”
“ஹலோ டாக்டர் சார் பார்த்து நாள் ஆச்சுனு வந்தால் ரொம்ப தான் பண்றீங்க.. நான் கோவமா போறேன்”
“இருடி.. அதான்  வந்துட்டல்ல அப்புறம் என்ன?“ 
அவன் கோபமாக பேசியதும் அவள் முகம் வாடியது.. 
“ம்ம்ச்ச்ச்.. ஏன் இப்படி மூஞ்சு போகுது.. சரி வா.. “
தீபக்கை அழைத்து “இவளை பத்திரமா செக்கப் முடிச்சு பின்னாடி வழியா வெளியில் அனுப்பி விடு மச்சி அந்த நிஷா கண்ணில் பட கூடாது இவ..”
மினி “யாரு அந்த நிஷா? நான் ஏன் அவ கண்ணில் பட கூடாது?”
தேவ் “அப்புறம் எல்லாம் உனக்கு விளக்கமா சொல்றேன்.. நீ முதலில் போடி”
தீபக் “வாம்மா… “
மினி ஒரு குழப்பத்துடனே தீபக்குடன் சென்றாள். 
நிஷாவிற்கு ஏன் அவள் வரவில்லை? ஒரு வேளை நான் கவனிக்கவில்லையா.. என்று யோசித்தவள், மீண்டும் ரெஜிசஸ்டரை  தேடும் போது மின்மினி என்ற பேரை பார்த்து திடுக்கிட்டாள். ஒருவேளை இவள் தான் மினுவோ… என்று யோசித்து கொண்டிருந்தாள். அவள் பெயர் கடைசி 5 பேர்களில் இருக்க, எப்படியும் அவள் உள்ளே தான் இருப்பாள் என்று நினைத்தாள். நிவியிடம், “நிவி ஒரு 10 நிமிஷம் பார்த்துக்க வந்திடுறேன்.. “ என கூறி விட்டு உள்ளே சென்றாள். 
தேவ் இவளை கண்டு கொள்ளாது தெரிந்தவர் யாரோ ஒரு பெரியவரை  பரிசோதனை செய்யும் இடத்திற்கு அழைத்து சென்று கொண்டிருந்தான். மினு வந்திருந்தால் இவன் அவ பின்னாடி போகாமலா இருப்பான்.. அப்ப  மினு வரவில்லை என்ற முடிவுக்கு வந்தவள், பாத்ரூம் சென்று விட்டு போகலாம் என பின் வாசலுக்கு சென்றாள். அங்கே தீபக் மினியுடன் தனியாக மாட்டி கொண்டு முழித்தான்.
மினி “சொல்லுங்கண்ணா யாரு அந்த நிஷா? ஏன் என்ன இங்க வந்ததுக்கு திட்றாங்க?”
தீபக் “அவனே சொல்லுவான் மா.. ப்ளீஸ் இப்ப கொஞ்சம் கிளம்பு மா”
“நீங்களும் என்ன விரட்டுறீங்களா?”
“அப்படி இல்ல.. இங்க நிலமை சரி இல்லை.. அது தான் சொல்றேன்”
“சரி நான் போறேன்.. அவர் கிட்ட சொல்லிடுங்க.. “ என வருத்தத்துடன் சென்றாள்.
அப்போது சரியாக அங்கு வந்த நிஷா அவள் பின் தோற்றத்தையே பார்க்க நேர்ந்தது.. 
“தீபக் .. யாரது ? ஏன் பின் வாசல் வழியாக போறாங்க ?” என்ற குறலில் திடுக்கிட்டு திரும்பியவன்
“நிஷா நீ என்ன பண்ற இங்க?”
“முதலில் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு.. யாரது?”
இப்போது அவளுக்கு சந்தேகம் வலுவானது.. மின்மினி தான் மினு என்று..
“எனக்கு எப்படி தெரியும் நிஷா.. அவளுக்கு என்ன அவசரமோ.. முழுசா செக்கப் கூட முடிக்காமல் போறா.. அதான் ஏன் போறனு கேட்க வந்தேன்.. அவள் பதில் கூட சொல்லாமல் போறா.. “ என்று உளறினான்.
அவளுக்கு நன்றாக புரிந்து விட்டது, மின்மினி தான் மினு என்று…
“ஓ சரி..சரி.. “
நிஷா மீண்டும் ரிஷ்ப்சன் சென்று அமர்ந்தாள். ரிஜிஸ்டரில் மின்மினி என்ற பெயர் மற்றும் முகவரியை யாரும் அறியாது போட்டோ எடுத்து கொண்டாள். பின் மாலை 5 மணி வரை முகாம் தொடர்ந்தது. அறுவை சிகிச்சை பெற வேண்டியவர்களை தனியாக லிஸ்ட் எடுத்து ஒரு வாரம் கழித்து அழைத்து செல்வதாக முடிவெடுத்தார்கள். அடுத்த நாள் பக்கத்து கிராமத்திற்கு செல்ல வேண்டும் என்று திட்டமிட்ட அனைவரும் அவரவர் தங்கும் அறைக்கு சென்றனர். உணவு அவரவர் அறைக்கே வந்து விட , உண்டு விட்டு களைப்பில் உறங்க சென்றார்கள், நிஷாவை தவிர.. நிவியுடன் நிஷா தூங்குவது போல் நடித்தவள், நிவி நன்றாக உறங்கியதும், மினியின் வீட்டு விலாசத்தை ஏற்கனவே ஒரு ஊர் காரரிடம் விசாரித்து வைத்திருக்க, மினியை சந்திக்க யாருக்கும் தெரியாமல் சென்றாள்.
அங்கு மினி தேவின் வரவிற்காக தன் தோட்டத்தில் காத்து கொண்டிருந்தாள்.
— மின்னுவாள்..
  

Advertisement