தேவ், டீன் அறை வாசலில் நின்று, “மே ஐ கம் இன் சார்?”
ராஜசேகர் (டீன்) “எஸ்… “
“சார் வர சொன்னிங்களா ? என்ன விஷயம் சார்.. “
“ஆமாம் பா.. எனக்கு ஒரு உதவி செய்யனும்.. நீ”
“சொல்லுங்க சார்”
“எல்லா வருஷமும் நம்ம காலேஜோட ஹாஸ்பிட்டல் சார்பாக கண் அறுவை சிகிச்சை 100 பேருக்கு இலவசமாக பண்ணுவோம் இல்லையா ? அதை இந்த வருஷம் 500 பேருக்கு பண்ணலாம்னு முடிவு பண்ணி இருக்காங்க.. அது மட்டுமில்ல.. எப்போதும் சென்னை இல்ல அதை சுற்றி இருக்குற இடங்களுக்கு போய் இலவசமா எல்லாருக்கும் டெஸ்ட் எடுத்து தேவைப்படும் ஆட்களுக்கு மட்டும் ஆப்ரேஷன் பண்ணுவாங்க, இந்த வருஷம் கிராம புறங்களுக்கு போய் பண்ணலாம்னு கமிட்டி மெம்பர்ஸ் முடிவு செஞ்சாங்க.. அதை பத்தி வீட்டில் டிஸ்கஸ் பண்ணும்போது நிஷா தான் ஐடியா குடுத்தாள், உங்க ஊர் திருச்சி பக்கத்தில் இருக்கும் கிராமம் தானே.. அங்கு சுத்தி உள்ள கிராமத்தில் டெஸ்ட் பண்ணி அவங்களுக்கு பண்ணலாம்னு சொன்னா.. எனக்கும் சரினு பட்டது..”
“ஓகே சார்.. கண்டிப்பா பண்ணிடலாம்.. “
“நம்ம டாக்டர்ஸ் & வாலண்டியர்ஸ் தங்க ஏற்பாடு பண்ண முடியுமா? ஏதாவது லாட்ஜ் .. இல்ல வாடகை வீடு இருந்தால் கூட போதும்.. “
“சார் அதெல்லாம் தேவை இல்ல.. எங்க தோப்பு வீடே இருக்கு.. தாராலமா 40 பேரு தங்கலாம்.. மொத்தம் எத்தனை பேர் வருவாங்க சார்?”
“ஐ டாக்டர்ஸ் ஒரு 15 பேர், நர்ஸ் 20 பேர்.. வாலண்டியர்ஸா உங்க க்ளாஸ் ஸ்டூடன்ட்ஸ் யார் யார் வராங்களோ அவங்க கவுண்ட் எடுக்கனும்.. குறைஞ்சது 30 பேர் தேவை படுவாங்க. “
தேவிற்கு இப்போ தான் நிஷாவின் திட்டம் ஓரளவிற்கு புரிந்தது..
“டாக்டர்ஸ் , நர்ஸ் எல்லாம் அங்க தங்க வச்சிட்டா, மீதி ப்ரெண்ட்ஸ் தானே சார்.. எங்க வீட்டிலே தங்க வச்சிக்கலாம்.. “
“ஆர் யூ ஸ்யூர் தேவ்.. நான் மாநேஜ்மன்டில் பேசிடலாமா ?”
“ஸ்யூர் சார்.. “
“ஒரு 2 வாரம் கழித்து என்னை வந்து பாரு, நான் சில டீடைல்ஸ் தரேன்.. ஊரில் கொஞ்சம் நோட்டீஸ் ஒடிட்டா போதும்ல பா.. “
“போதும் சார்.. 2 நாள் முன்னாடி ஒட்டினா கூட போதும், நீங்க சாம்பிள் குடுங்க, என் ப்ரண்ட்ஸ் வச்சி நான் நோட்டீஸ் ஒட்ட வைக்கிறேன்”
“தேங்க்ஸ் தேவ்.. இன்னும் 3 வீக்ஸ் கழித்து இந்த முகாம் நடக்கும்.. “
“ஓகே சார்.. “
“டன்.. யூ கேன் லீவ் தேவ்.. தேங்க்ஸ் வெரி மச் பார் த ஹெல்ப்”
நிவேதா “நிஷா நீ சொல்ற ஐடியா எல்லாம் வொர்க் அவுட் ஆகுமா ? உன்னை புடிக்காத ஒருத்தரை எப்படி கல்யாணம் பண்ணிக்க ஆசை படுற ? தேவ் வேற ஒரு பொண்ணை விரும்புறேன்னு சொல்லியும் நீ இப்படி ப்ளான் பண்றது சரி இல்லை டி.. “
“நிவி.. இது வரைக்கும் எனக்கு நிறைய பேர் ப்ரொபோஸ் பண்ணி இருக்காங்க.. எனக்கு யாரையும் பிடிக்கலை டி.. தேவ் ரொம்ப பிடிக்குது எனக்கு.. எப்போதும் அமைதியா எல்லா விஷயத்தையும் பெர்பக்டா செய்வான்.. அது மட்டுமில்ல, என்னை எப்படி ஒருத்தன் ரிஜக்ட் பண்ணலாம்.. இந்த நிஷா ஆசை பட்ட எல்லாம் கிடச்சாச்சு.. தேவும் கிடைப்பான்”
“ஆசை பட்ட பொருளை வேணும்னா அடையலாம் நிஷா.. ஆனால் காதல் , கல்யாணம் எல்லாம் வேற.. உனக்கு ஏன் இதெல்லாம் புரிய மாட்டேங்குது.. “
“அப்பா கிட்ட கேக்கனும் டீ.. அவருக்கு ஓகே நா வருவேன்”
“ம்ம்ம் சரி.. வா க்ளாஸுக்கு போகலாம்”
க்ளாஸில் போய் அமர்ந்த நிவேதா , தேவை பார்த்து தன் கட்டை விரலை கீழ் நோக்கி காண்பித்து, ப்ளான் ப்யில் என சிக்னல் காண்பித்தாள்.
**************************************
ராமசாமி வீட்டிலேயே முடங்கி கிடந்தார். இந்நாள் வரை பெரிதாக யாரையும் மதித்ததில்லை.. காசு , பணம் இருந்தால் போதும் என்று நினைத்தார் ஆனால் இப்போது மனைவியின் அருமையும் சொந்த பந்தத்தின் அன்பும் புரிந்தது… தன் பணத்திற்காக சுத்தி வந்த பெண்களுக்கும் மனைவிக்கும் 1000 வித்தியாசங்கள் இருப்பதை உணர்ந்து கொண்டார்.. இது வரை சகுந்தலாவை வார்த்தையால் வதைத்தவர், பொருமையாக பேச தொடங்கினார். அவருக்கு உணவு பரிமாறினால், சாப்பிட்டாயா என கேட்டார், தேவ் பற்றி அவ்வப்போது விசாரித்து கொண்டார். இவரது மனமாற்றத்தை எண்ணி சகுந்தலாவின் மனம் குளிர்ந்தது.. இது இப்படியே தொடர வேண்டும் என்று கடவுளை வேண்டி கொண்டார். அப்போது அவருக்கு தேவ் அழைத்தான்.
“ஹலோ.. தேவ் நல்லா இருக்கியா கண்ணு?”
“ம்ம்ம்.. நல்லா இருக்கேன் மா.. நீ சாப்பிட்டியா ?”
“சாப்பிட போறேன் கண்ணு..“
தேவ் கண் பரிசோதனை முகாம் பற்றி கூறியவன் “ தோப்பு வீட்டை சரி பண்ணி வைங்க மா.. நம்ம வீட்டிலையும் மாடியில் இருக்கும் ரூம் எல்லாத்தையும் ஆள் விட்டு சுத்தம் பண்ணி வைங்க.. இன்னம் 2 வாரம் கழிச்சி எல்லாரும் வருவோம்.. “
“சரி பா.. ரொம்ப சந்தோஷம் பா.. நம்ம ஊரில் நடக்கிறது..”
“சரி மா .. பார்துக்கோங்க.. நான் அப்புறமா கூப்பிடுறேன்” என்று வைத்து விட்டான்.
***********************************************
மினி உணவு இடைவேளையில் தன் போனை பார்த்து கொண்டு இருந்தாள். நாமே கூப்பிடலாமா வேண்டாமா என யோசித்து கொண்டிருந்தாள், அப்போது அவள் போன் ஒலிக்க, தேவ் தான் அழைத்திருந்தான்,
“ஹலோ.. “
“சொல்லுங்க மேடம், சாப்பிட்டாச்சா?”
“ம்ம்ம் நீங்க?”
“இல்லை… இனி தான் மினு குட்டி”
அவள் குட்டி என்று அழைத்தது அவள் உயிர் வரை சென்று தித்திதது.. அதற்கு அடுத்து அவள் எதுவும் பேசவில்லை..
“ஹலோ.. மேடம் லைன்ல இருக்கீங்களா?”
“ம்ம்ம் “
“இன்னம் 2 வாரம் கழிச்சு நான் நம்ம ஊருக்கு வருவேன் … ஒரு 4 நாள் தங்குவேன் .. ஒரு முகாமுக்காக.. மேடம் ஒரு நாள் மட்டும் ஒரு 2 மணி நேரம் எனக்காக ஒதுக்க வேண்டும்..“
“எதுக்கு ?”
“சொன்னா தான் வருவியா?”
“அப்படி இல்ல சும்மா தெரிஞ்சுக்க தான்.. “
“அது சஸ்பன்ஸ் பேபி.. “
என்னது பேபியா? என்ன குட்டிங்குறான், பேபிங்குறான் இப்படி தான் எல்லாரும் பேசுவாங்களோ என்று மனதில் யோசித்து கொண்டிருக்க, தேவ் “மேடம் லைன்ல தான் இருக்கீங்களா?”
“ம்ம் இருக்கேன்.. “
“போன்ல பேச வைக்கவே இவ்வளவு பண்ண வேண்டி இருக்கே.. உன்ன லவ் பண்ணி , கல்யாணம் பண்ணி.. அப்பப்பா.. நினைச்சாவே தலை சுத்துது மினு.. “
“ஏன் இன்னும் சாப்பிடாமல் இருக்கீங்க?”
“பசி இல்லை மா.. உனக்கு எங்க ஹாஸ்டல் சாப்பாட்டு கஷ்டம் எல்லாம் தெரிய போகுது.. இடிலியை சுவத்தில் தூக்கி அடிச்சா அது திருப்பி வந்து நம்ம தலையை உடைக்கிற அளவு கல்லு மாதிரி இருக்கும் .. “
அவள் கல கலவென சிரிக்க..
“அடி பாவி.. சிரிக்கிற.. நான் கூட கவலை படாதீங்க நான் சமைச்சி தரேன் அப்படினு சொல்லுவேனு நினைச்சேன்.. “
“ம்ம் அது கல்யாணத்துக்கு அப்புறமா செய்வேன்.. “
“சரி அப்பாக்கு எப்படி இருக்கு? கதிர் ஒழுங்கா ஸ்கூல் போறானா ?”
“அப்பா நல்லா இருக்காங்க.. கதிர் ஸ்கூல் போறான்.. “
அப்போது தீபக் வந்து “டேய் உன் கடலையை அப்புறம் வருத்துக்கடா.. எனக்கு பசி எடுக்குது.. “ என கூறியதும்,
தேவ் ” சரி நாளைக்கு போன் பண்றேன்.. பாய் மினு”
“ம்ம்ம் பாய்”
மினி “என்ன இப்படியெல்லாம் பேசுறான்.. ஆனால் நம்ம மனசும் சந்தோஷமா உணறுதே.. கடவுளே.. என் தேவ் மட்டும் என் கூட கடைசி வரைக்கும் இருக்க வேண்டும் “என்று வேண்டி கொண்டு தன் வேலையை பார்க்க சென்றாள்.
சாப்பிட்டு வந்ததும் இவர்கள் வரவிற்காக காத்து கொண்டு இருந்தாள் நிவேதா.. தீபக் ஒரு லவ்ஸ் பார்வையை அவள் மீது வீச, வழக்கம் போல் முகத்தை திருப்பி கொண்டாள் நிவேதா..
தேவ், “நிவி எதாவது சொல்லனுமா ?”
“ஆமா தேவ்.. நிஷா ஒரு கேவளமான ப்ளாண் போட்டு இருக்கா.. அதை பத்தி சொல்ல வேண்டும்… போனில் சொல்ல முடியாது அதுதான்.. “
“சரி நீ க்ளாஸ் முடிஞ்சதும் ஆடிட்டோரியம் வந்துடு.. நான் வரேன்”
“சரி நீ போ.. நாம ஒன்னா போன அவளுக்கு டவுட் வரும்.. “
“ஓகே” என இருவரும் செல்ல சிறிது நேரம் கழித்து நிவேதா க்ளாஸிற்குள் சென்றாள். ***************************************************
ஓவியன் இன்னும் 3 மாதத்தில் தன் படிப்பு முடிவதால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என மனதில் முடிவெடுத்து கொண்டான். வகுப்பு புடிந்து தன் ரூமிற்கு செல்லும் போது அவன் போன் ஒலித்தது
“ஹலோ.. மாமா.. “
“மாமாவா யாரு மா நீ?”
“நான் நதியா பேசுறேன்.. “
“ஓ சொல்லு நதி.. மாமா எப்படி இருக்கார்? “
“அப்பா நல்லா இருக்கார்.. நீங்க உடனே சத்திரம் பஸ் ஸ்டான்ட் வர முடியுமா? ப்ளீஸ்.. “
“நீ எதுக்கு இப்போ திருச்சி வந்த ? அடுத்த வாரம் நான் வரும்போது வந்திருக்கலாம் இல்ல.. எதாவது பிரச்சனையா?”
“காலேஜ் ரொம்ப நாள் லீவ் போட வேண்டாம்னு அப்பா தான் அனுப்பினார்.. யாரோ 2 பசங்க என் பின்ன வர மாதிரியே இருக்கு.. பயமா இருக்கு மாமா.. “
“ஓ அதான் மாமானு மரியாதை எல்லாம் தரியா?.. சரி பயப்படாதே.. நீ அங்கயே இரு நான் வரேன்..”
ஒரு 20 நிமிடத்தில் அங்கு சென்றவன், நதியா ஒரு ஓரமாக அமர்ந்திருப்பதை பார்த்ததும் அவளை நோக்கி சென்றான்.
“ஏய்.. குள்ளச்சி.. “
ஓவியன் குறல் கேட்டதும், “மாமா.. எனக்கு ரொம்ப பயமாக இருக்கு.. அங்க பச்சை சட்ட போட்ட பையனும் அவன் கூட இருக்குறவனும் ரொம்ப நேரமா என் பின்ன வர மாதிரி இருக்கு “ என்று அழு குறலில் கூற,
ஓவியன் “ஷ்ஷ்ஷ்.. சின்ன பிள்ளை மாதிரி 2 பேர் பின்னாடி வரதுக்கா இப்படி பயப்படுவ? என்னடா வேணும்னு கேட்க வேண்டி தானே? என் கிட்ட வாய் காது வரைக்கும் நீளும்.. யார் அது ?”
அதே இடத்தில் கொஞ்சம் தூரத்தில் இருவர் நின்று கொண்டு இவளையே பார்த்து கொண்டு இருக்க.. அவர்களை காட்டினாள் நதியா.. ஓவியன் அவர்களை முறைத்தான்..
“சரி வா நான் உன்னை ஹாஸ்டலில் விடுறேன்.. ”
ஓரு ஆட்டோவை பிடித்து இருவரும் அதில் ஏறினார்கள்.
நதியா மனதிற்குள் முணு முணுத்துக்கொண்டு வந்தாள். “இவன் ஒரு ஆளுனு இவனுக்கு போய் போன் பண்ணுனேன் பாரு.. அவனை ஒரு நாலு சாத்து சாத்திருக்க வேண்டாம் ?”
ஓவியன் “என்னடி குள்ளச்சி தனியா பேசி கிட்டு வர ?”
அவன் கேள்வியில் முறைத்தாள் நதியா.
“வார்த்தைக்கு வார்த்தை மாமா மாமானு கூப்பிட்டயே.. எப்படி டீ.. உனக்கு கூட மரியாதை எல்லாம் தெரியுது ?”
“போடா தடியா.. ஏதோ பயத்தில் அப்படி கூப்பிட்டேன்.. அப்படியே எல்லா நாளும் கூப்பிடுவேனு நினைக்காத..”
“அடிப்பாவி… உனக்கு போய் உதவி செய்ய வந்தேன் பார்த்தியா? என் புத்தியை.. “
“செருப்பு வேண்டுமா?”
“எதுக்கு ?”
“உன் புத்தியை செருப்பால அடிச்சுக்க.. “
“ஏய்.. ஒரு வார்த்தை இனி பேசுன.. ஆட்டோவிலிருந்து கீழ தள்ளி விடுவேன்.. வாயை மூடிக்கிட்டு வாடி குள்ளச்சி.. “
“போடா தடியா.. “
கல்லூரி வரும் வரையில் எதுவும் இருவரும் பேசி கொள்ளவில்லை.. கல்லூரி வந்ததும் இறங்கியவர்கள்,
“ஏய் குள்ளச்சி .. ஊருக்கு போனால் எனக்கு சொல்லு நான் வந்து கூட்டிட்டு போறேன்”
“இத்தனை நாள் எப்படி போனனோ அதே மாதிரி நான் போவேன்.. யாரும் வர தேவை இல்லை” என்று முறுக்கி கொண்டாள்.
“எப்படி.. உன் கூடவே ஒரு ஏணி மரம் வருமே.. அது கூட பஸ் ஸ்டான்ட் வரை வந்துட்டு.. பேந்த பேந்த முழிச்சுகிட்டு நிப்ப பஸ் வர வரைக்கும்.. பஸ் வந்ததும், டிரைவர் சீட் பின்னாடி போய் உக்காந்துட்டு ஊர் வர வரைக்கும் நல்லா தூங்கி கிட்டே வருவ? ஒன்னும் தேவையில்லை.. என் கூடவே வா.. நான் மாமா கிட்ட பேசிக்குறேன்.. இல்லாட்டி மாமாவை வந்து பார்த்துட்டு போக சொல்றேன்.. சரி பாய்.. நல்லா படி..”
“ம்ம்ம்ம்” நான் நிலா கூட ஊருக்கு போறது எப்படி இவனுக்கு தெரியும்.. ஒரு வேளை இவனும் அதே பஸ்ஸில் தான் வரானோ.. என யோசித்து கொண்டே சென்றாள்.
[இதான் உன் டக்காமா ?”]
அவள் சென்றதும் தன் நண்பனுக்கு அழைத்தான் ஓவியன்.
“டேய் ராம், அந்த பசங்க 2 பேரும் எங்கடா ?”
“அவங்க நம்ம காலேஜ் தான் டா.. செகண்ட் இயர் பசங்க.. நம்ம ரூமில் தான் பிடிச்சு வச்சிருக்கேன்.. “