Advertisement

மாலை 6 மணி அளவில் தீபக்குடன் பூங்காவிற்கு சென்றான் தேவ். அங்கு நிஷா ஏற்கனவே வந்திருந்தாள்.
தீபக் “நான் இங்க இருக்கேன் டா.. நீ போய் பேசு.. எதுவா இருந்தாலும் பேசு கை நீட்டிடாத.. அவ நம்ம காலேஜ் டீன் பொண்ணு அத மட்டும் நியாபகம் வச்சிக்கோ”
தேவ் “ம்ம்ம் சரி டா “
தேவ் அங்கு சென்று “ என்ன விஷயம் நிஷா ஏன் என்ன வர சொன்ன ?”
“உனக்கே புரிஞ்சிருக்குமே தேவ்… உன்னை 2 வருஷமா பாலோ பண்றேன். நீ தான் கண்டுக்க மாட்டேங்குற.. காலேஜில் பாதி பேரு என்ன ஜொல்லு விட்டு பார்த்துகிட்டு இருக்காங்க.. ஆனால் நீ மட்டும் என்ன கண்டுக்கவே மாட்ட..  அதனால் தான் என்னவோ என் மனசு உன்னை தான் சுத்தி வருது.. ஏன் தேவ்? நான் அழகில்லையா ? என்னை ஏன் உனக்கு பிடிக்க மாட்டேங்குது.. க்ளாசில் மத்த பொண்ணுங்க கூடலாம் நல்லா தான பேசுற ஏன் என்ன பார்த்தால் எரிஞ்சி விழற?  “
“இங்க பாரு நிஷா..  எனக்கு சும்மா டைம் பாஸ் பண்ணுவதில் இஷ்டம் இல்லை.. மத்த பொண்ணுங்க எல்லாம் என் கிட்ட நட்பா பழகுறாங்க.. அதனால் அவங்க கிட்ட நான் பழகுறேன்.. நீ அப்படி இல்லைனு புரியுது அதான் விலகி போறேன். அது புரிஞ்சு நீயா மாறிடுவேனு நினைச்சேன். பட்…“
“டைம் பாஸ் இல்லை தேவ்.. ஐ அம் சீரியஸ்.. ப்ளீஸ் என்ன புரிஞ்சுக்கோ. ஐ அம் இன் லவ் வித் யூ”
“நிஷா… அம் இன் லவ் வித் சம் ஒன் எல்ஸ் (I am in love with some one else). என் மேல வந்திருப்பது வெரும் ஈர்ப்பு தான்.. “
“பொய் சொல்லாத தேவ்.. அவ யாரு எப்படி இருப்பா? நம்ம காலேஜா ? சொல்லு.. “ என கோபமாக கேட்டாள்.
“நான் உண்மையா தான் சொல்றேன். அவளை பத்தி உன் கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்லை நிஷா.. தட்ஸ் மை பெர்ஸனல். நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்.. இனி தொல்லை பண்ணாத..  ஓகே.. நான் வரேன்” என்று கூறி சென்று விட்டான்.
அங்கேயே அமைதியாக அமர்ந்திருந்த நிஷா தன்னை ஒருத்தன் நிராகரிப்பதா?நான் எவ்வளவு ஆசையாக இருந்தேன்… என்ன வேண்டாம் என சொல்லிட்டான் எவ்வளவு திமிர் அவனுக்கு.. முதலில் யார் அந்த பொண்ணு கண்டு பிடிக்கனும் அப்புறம் அவளை ஒட விடனும்.. அப்ப தெரியும் என் கஷ்டம்  என்று மனதில் திட்டமிட்டவள் பின் தன் வீட்டிற்கு கிளம்பினாள்.
அவள் சென்ற சிறிது நேரம் கழித்து அந்த செடி மறைவில் இருந்து வெளியே வந்த தீபக் தேவிற்கு அழைத்தான்.
“சொல்லுடா அவ போய்டாளா?”
“ஹப்பா என்ன கொசு கடி டா சாமி.. நீ சொன்ன மாதிரி வீடியோ எடுத்துட்டேன் டா.. அவ இப்ப தான் போனா“
“சரி டா எனக்கு ஒரு மெயில் அனுப்பு.. சீக்கிரம் வா சாப்பிட போலாம்“
“சரி டா”
தீபக், தேவ் இருவரும் உணவு உண்டு திரும்ப ஹாஸ்டல் வந்தனர்.
தேவ் “தீபக் நாளைக்கு காலேஜ் முடிஞ்சதும் வெளியே போகலாமா ?”
தீபக் “ எங்க டா?”
“என் ஆளுக்கு பிறந்த நாள் வருது.. கிப்ட் வாங்கனும்”
“எப்போ பிறந்த நாள்?”
“அடுத்த வாரம்.. திங்கள் கிழமை”
“டேய்.. வெள்ளி கிழமையே கிளம்பிடுவியா ? நான் 2 நாள் தனியா இருக்கனுமா ?”
“இல்லை டா.. வீட்டுக்கு போகலை.. நான் அவளை பார்க்க தான் போறேன். ஞாயிறு நைட் ..தான் கிளம்புவேன்.. ஒரு வாரத்தில் வீட்டிற்கு போனால் வீட்டில் நிறைய கேள்வி வரும்.. கொஞ்ச நாள் எங்க விஷயம் வெளிய தெரியாமல் இருப்பது தான் நல்லது. “
“சரி டா  போகலாம்.. என்ன வாங்க போற?”
“புடவை வாங்கலாம் டா.. ”
“சரி ஓகே.. நான் கூட நிஷா கிட்டே இருந்து எஸ்கேப் ஆக கப்ஸா விடுறேனு நினைச்சேன் டா “
“அடிங்க.. அந்த அடங்கா பிடாரி கிட்ட நான் ஏன் பொய் சொல்லனும்.. அவளுக்கு என் மேல லவ்வெல்லாம் இல்லை.. அவ கண்ணுல ஒரு நாள் கூட லவ்வ பார்க்கல.. அப்புறம் ஏன் என் பின்ன சுத்துறானு கண்டு பிடிக்கனும் டா.. “
“ம்ம்ம்ம்”
இருவரும் சில விஷயங்களை ஆலோசித்து விட்டு தூங்க சென்றார்கள்.
**************************************************** 
கதிர் ஒரு வாரம் வீட்டில் இருந்தவன் 11ஆம் வகுப்பு பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தான். ரகு வீட்டில் முடிந்தளவு மினிக்கு உதவி செய்தார். மினியும் வேலைக்கு சென்று வந்தாள். அவ்வப்போது தேவின் நியாபகம் வரும்.. போன் செய்து பேசலாமா என்ற எண்ணம் கூட வரும். வேண்டாம் அது தவறு என்று அவள் இன்னொரு மனமும் கூற அமைதியாக இருந்து விடுவாள். இத்தனை நாள் மனதிற்குள் பூட்டி வைத்திருந்த காதல், அவன் வந்து பேசி விட்டு போனதும், கூட்டை விட்டு சிறகை விரித்த பறந்த பறவை போல் அவள் காதலும் பூட்டை விடுத்து வெளியே வந்தது.. 
இன்று காலையிலிருந்து தேவிடம் பேச மனம் ஏங்கியது.. இன்று மினியின் பிறந்த நாள்.. காலையில் ஊரில் உள்ள கோவிலுக்கு போய் வந்தாள். வேலைக்கும் விடுப்பு எடுத்திருந்தாள். எப்பொழுதும் தாவணி அணியும் மினி, இன்று சுடிதார் அணிந்திருந்தாள். கதிர் பிறந்த நாள் பரிசாக வாங்கி கொடுத்தான். எப்பொழுதும் போல மாலை ஆனதும் அவள் ஓடக்கறைக்கு சென்றாள். அங்குள்ள வேப்ப மரத்தின் நிழலில் அமர்ந்ததும், மேலிருந்து ஒரு பேப்பர் பறந்து வந்து அவள் மேல் விழுந்தது.. அதில்,
பூவுக்கு பொறந்த நாளு
ஒன்னா கன்னி மறந்த நாளு
வயசு புள்ள ரெட்ட வாலு
வாழ்த்துவதே இங்கிலீஷ் ஆளு
கலர் கலரா மெழுகுவர்த்தி ஏத்துவேன்
உன் காதுக்குள்ளே ரகசியமா வாழ்த்துவேன்!!! 
என்று எழுதி இருந்தது..
அவள் உடனே மேலே பார்த்தாள். அங்கு யாரும் இருப்பதாய் தெரியவில்லை.. அவள் மனம் தேவ் வந்து விட்டான் என்று அடித்து கூறியது.. அவள் மேலேயே பார்த்து கொண்டிருக்க.. தேவ் அவள் முன் வந்து, “மினு குட்டி.. ஹாப்பி பர்த்டே.. “ 
அவனது குறலில் திடுக்கிட்டவள் “தேங்க்ஸ்.. எப்ப வந்தீங்க?”
“ம்ம்ம்ம இப்ப தான்.. ஒரு 2 மணி நேரமா.. நீ எப்ப வருவனு காத்து கிட்டு இருக்கேன்.. புது ட்ரெஸ் சூப்பரா இருக்கு மினு..”
“அப்படியா.. தேங்க்ஸ்.. கதிர் வாங்கி கொடுத்தான்?”
“ம்ம்ம் பர்த்டே பேபிக்கு என்ன கிப்ட் வேணும்”
“எனக்கு எதுவும் வேண்டாம்.. நீங்க விஷ் பண்ணதே போதும்.. போங்க இங்கிருந்து.. யாராவது பார்த்திட போறாங்க..“
“அடிங்க.. எப்ப பாரு போ போனு சொல்லுற.. முடியாது டி.. ஏன்  ஒரு போன்  கூட மேடம் பண்ண மாட்டீங்களோ“
“அது.. தயக்கமா இருந்தது..”
“ம்ம்ம்ம் உன் போன குடு.. ?”
அவள் போனை வாங்கி தன் நம்பருக்கு ஒரு கால் செய்து விட்டு திருப்பி குடுத்து விட்டான். 
“இனி தினமும் லஞ்ச் டைமில் போன் பண்ணுவேன்.. நீ பேசுற.. “
“இல்ல அது வந்து.. “
“வந்து போயினுலாம் கதை சொல்லாதே.. என்ன இன்னும் என் மேல நம்பிக்கை வரலயா ?”
“ஐயோ அப்படி இல்ல.. உங்களை நம்புறேன்.. “
“ம்ம்ம்… உனக்காக ஒரு கிப்ட் “ என்று தான் வாங்கி வந்த புடவையை குடுத்தான்
“இதெல்லாம் வேண்டாம் ப்ளீஸ்.. யாரு வாங்கி குடுத்ததுனு வீட்டில் கேட்டா நான் என்ன சொல்வேன்.. வேண்டாம்.. “
தேவ் வாய் திறக்கும் முன், 
“ம்ம்ம்ம் நான் வாங்கி தந்ததுனு சொல்லுடி..” என்று நதியாவின் குறல் கேட்க, பயத்துடன் முழித்து கொண்டிருந்தாள் மினி.. 
நதியா “அடிப்பாவி.. நீ தான் என் பெஸ்ட் பிரண்டுனு காலேஜெல்லாம் சொல்லிட்டு இருக்கேன்.. நீ எனக்கே தெரியாம இந்த வேலை பார்க்குற.. எத்தனை நாளா இந்த நடக்குது?” என்று கோபத்தில் கேட்டாள்.
“நதி அப்படிலாம் இல்லைடி.. நான் எதுவும் மறைக்கல.. சந்திரப்பம் அமையல டி”
“நம்ப முடியலையே.. “
தேவ், “நதியா.. அவளை எதுவும் கோவிக்காத மா… இது தான் ரெண்டாவது முறையா நான் அவள மீட் பண்றேன்.. மீதி விஷயத்த அவ கிட்டையே நீ கேட்டுக்க.. நான் வந்ததை எங்க வீட்டில் சொல்லிடாதே.. ப்ளீஸ்..”
“அண்ணா நீங்க வந்தது வீட்டிற்கே தெரியாதா?”
“ஆமாம்.. ஓவிக்கு கூட தெரியாது.. என் பிரண்டு காரை எடுத்து வந்தேன்.. மேடம் பர்த்டேக்காக.. சரி எனக்கு நேரம் ஆகுது நான் கிளம்புறேன்.. இந்த கிப்ட நீயே அவ கிட்ட கொடு.. வரேன் மா.. “ மினியிடம் ஒரு தலையசைப்புடன் சென்று விட்டான். 
தோழியர் இருவரும் பேசி கொள்ளட்டும் என்று கிளம்பி விட்டான். கொஞ்ச நேரம் கழிச்சு வரக்கூடாது.. என்னலாமோ பேசனும்னு நினைச்சேன்.. எல்லாத்தையும் கரடி மாதிரி வந்து கெடுத்துட்டாள் என்று மனதிற்குள் வசை பாடி கொண்டே சென்றான் தேவ்.
நதியா “ஏன் டீ ஆடு திருடியவள் மாதிரி இந்த முழி முழிக்குற.. அதான் கத்திரிக்கா முத்திடுச்சே.. கடை தெருவுக்கு வந்து தான ஆகனும்.. சொல்லு.. ?”
“என் மேல கோபமா நதி.. என்ன தப்பா நினைக்காத ப்ளீஸ்..”
“தப்பாலாம் நினைக்க மாட்டேன்.. நீ சொல்லு விஷயத்தை..”
மினி “நாம +2 படிக்கும் போது தான் முதலில் அவரை பார்த்தேன் டி.. எங்க நிலத்தை வித்துட்ட நினைப்பு இல்லாமல் குடி போதையில் அங்க போய் எங்க அப்பா சத்தம் போட்டுட்டு இருந்தார் அவர் நிலத்தில் யாரோ பயிர் போட்டுருக்காங்கனு ஒரே கத்து அப்பா.. அவரை எல்லாரும் அடிக்க வந்துட்டாங்க.. அப்போ அவர் தான் வந்து அவங்க ஆளுங்கள அடக்கி அப்பாவை கூட்டிட்டு போக சொன்னார்..  அப்பவே எனக்கு அவரை பார்த்ததும் பிடிச்சது டி.. அதுக்கு பேரு காதலா இல்லையானு எனக்கு தெரியல.. நான் திரும்பி திரும்பி அவரையே பார்த்து கிட்டு இருந்தேன்”
நதியா “ம்ம்ம் அப்புறம்.. “
“அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு எங்க வயலில், ஒரு ஓரத்தில் மருதாணி செடி இருக்கும்ல.. அது நல்லா சிவக்கும்.. அதை போட்டுக்க ஆசையாக இருந்தது.. நான் ஒரு நாள் வயலுக்கு போய் அங்க மேவேலை பார்க்குற கேசவன் கிட்ட கேட்டேன் கொஞ்சம் மருதாணி இலை பறிச்சுக்கவானு.. அவன் கண்டபடி திட்டி விட்டான்.. நான் அழுது கிட்டே ஓடி வந்துட்டேன்.. அடுத்த நாள் ஸ்கூல் முடிஞ்சு வீட்டிற்கு போனதும் வாசலில் ஒரு மருதாணி செடி இருந்தது.. 
யாருனு தெரியாமல் முழிச்சிட்டு இருந்தேன் அப்போ..
******************************************************** 
தேவ் “உங்க வயலில் இருக்கும் செடி தான்.. விதை கொட்டி சின்ன செடி முளச்சிருந்து.. உனக்காக கொண்டு வந்தேன்”
“தேங்க்ஸ்..”  அதை எடுக்க போனதும்
“வெயிட் வெயிட்.. அது உனக்கு வேணும் அப்படினா ஒரு கண்டிஷன் இருக்கு.. “
“என்ன அது.. “
“என்ன புடிச்சிருக்குனு சொல்லிட்டு அதை கையில் எடு.. “ 
“இல்லாட்டி.. “
“இல்லாட்டி இப்பவே தூக்கி போட்டுட்டு வேற வாங்கி நட்டுக்கோ..” 
******************************************* 
“நான் எதுவும் பேசாமல் வீட்டிற்குள் ஓடிட்டேன். எனக்கு பிடிச்சு இருந்தது ஆனால் அது சரியா தவறானு தெரியலை.. அதனால் நான் பதில் சொல்லாமல் ஓடிட்டேன்.. அதுக்கப்புறம் கொஞ்ச நேரம் கழித்து வந்து பார்த்தா, அவரை காணும்.. செடி மட்டும் அங்க இருந்தது.. அதை எடுத்துட்டு வந்து நட்டு வச்சுகிட்டேன்.. அதற்கப்புறம் 1 வருஷம் நான் அவங்களை பார்க்கவே இல்லை டி.. என்ன மறந்துட்டாங்கனு நினைச்சுக்குவேன் “
நதியா “என்னது பார்க்கவே இல்லையா ?”
“ஆமாம்.. திருவிழா அப்ப வந்தப்ப கூட என் கிட்ட பேசல.. அப்ப தான் அவர் உயரம், பணம், அந்தஸ்த்து எல்லாம் தெரிந்தது.. மனசுக்கு கஷ்ட்டமாக இருந்தாலும், அவரை நினைக்க கூடாதுனு 1000 தடவை சொல்லிக்குவேன்.. ரொம்ப கஷ்டமா தான் இருந்தது.. அது மட்டுமில்ல.. கதிரையும் அப்பாவையும் பார்த்துக்குற கடமை இருக்கு அதிலிருந்து தவறி விடுவோமோ அப்படிங்குற பயமும் இருந்ததால் நானும் மறக்க முயர்ச்சி செய்தேன்.. இந்த லீவுக்கு வந்த போது.. அப்பாவுக்கு உடம்பு சரி இல்லாததை தெரிஞ்சு மாத்திரை மருந்து எடுத்துட்டு வந்து என் கிட்ட பேசுனங்க.. நான் முடியாதுனு தான் சொன்னேன்.. அப்புறம் ஊருக்கு போறதுக்கு முன்னாடி வந்து பேசும்போது எனக்கு பிடிச்ச்துனு அவருக்கே தெர்ஞ்சிடுச்சி.. கதிர் என் பொருப்புனு சொன்னார் டி..”
நதியா “ம்ம்ம்ம்…. அவ்வளவு தான் உங்க கதையா ?”
மினி “ம்ம்ம்”
நதியா “ தேவ் அண்ணாவும் சகுந்தலா பெரியம்மாவும் நல்லவங்க தான்டி.. ஆனால் அந்த பெரியப்பாவை நினைத்தாள் கொஞ்சம் பயம் தான்.. அண்ணா பார்த்துக்குவார் கவலையை விடு..  “
“நதி.. நீ எதுவும் என்ன தப்பா நினைக்கலயே?” 
“ச்சி.. இதுல என்னடி தப்பா நினைக்க இருக்கு.. கடவுளா நீ படுற கஷ்டத்தை பார்த்து தேவ் அண்ணா மாதிரி ஒரு ஆள் அனுப்பி இருக்காங்கன்ற சந்தோஷம் தான்.. இது என் பிறந்த நாள் பரிசு” என்று ஒரு சுடிதாரை தந்தாள்.  
“தேங்க்ஸ் டி.. “
பிறகு இருவரும் வீடு வந்து சேர்ந்தார்கள்.
கதிரும் பள்ளி விட்டு வந்து தன் அக்காவிற்காக கேக் வாங்கி வைத்து கொண்டு காத்திருந்தான். 
அன்றய நாள் இனிமையாக கழிந்தது அனைவருக்கும்..
தேவும் அடுத்த நாள் கல்லூரிக்கும் வந்து விட்டான். 
வகுப்பு நடந்து கொண்டிருந்தது, வழக்கம் போல் தீபக் தூங்கி கொண்டும், தேவ் நோட்ஸ் எடுத்து கொண்டும், நிஷா இவர்களை முறைத்து கொண்டும் இருந்தார்கள். அப்போது உள்ளே வந்த ப்யூன்,
“சார் ஸ்டூன்ட்  தேவ் , அவரை டீன் கூட்டிட்டு வர சொன்னார் “
தேவ் எழுந்து சென்றதும் ஒரு வெற்றி புன்னகையை புரிந்தாள் நிஷா..
— மின்னுவாள்..

Advertisement