Advertisement

நதியா தன் தாய் தந்தையருடன் (கண்ணன் – மீரா) துணி கடைக்கு செல்ல தயாராகி இருந்தாள். 
மீரா, “ நதியா கிளம்பியாச்சா? அப்பா வண்டி எடுக்க போகிறார்.”
“ம்ம்ம் கிளம்பிட்டேன் மா.. “
கண்ணன் புல்லட் வைத்திருந்தார். மூவர் செல்வது கொஞ்சம் சிரமம் தான், அதனால் போகும் போது ஒன்றாக செல்வர். திரும்பும் போது, மீரா பஸ்ஸில் வந்து விடுவார்.  மூவரும் வெளியே வந்த சமயம், அங்கு வந்து சேர்ந்தான் ஓவியன். 
“மாமா வெளிய கிளம்பிட்டீங்களா ? அம்மா கருப்பட்டி பணியாரம் குடுத்து விட்டாங்க.. “
“ஆமாம் ஓவி நதியா காலேஜ் போறால்ல கொஞ்சம் துணி வாங்கலாம்னு திருச்சி வரைக்கும் போறோம். “
“மாமா 3 பேரு போக கஷ்டமாக இருக்காதா ?”
“முடியாட்டி உன் அத்தையை பஸ்ஸில் ஏத்த வேண்டி தான்”
பணியாரத்தை உள்ளே வைத்து விட்டு வந்த மீரா “ அதான பார்த்தேன்… எப்பவும் இதே பொழப்பு.. அப்பாவும் பொண்ணும் அப்ப கடைக்கு போங்க.. நான் எதுக்கு ?”
“அத்தை.. நீங்க எதுக்கு அப்படி சொல்றீங்க.. நான் லீவ்ல தானே இருக்கேன்.. நான் கூட்டிட்டு வரேன் விடுங்க.. “
“வேண்டாம் பா ஓவி… உங்க அத்தை இப்படி தான் பேசுவா.. அவளை கண்டுகாத.. “
“பரவாயில்லை மாமா.. “
மீரா சென்று ஓவியன் வண்டியில் ஏறி கொண்டார். ஓவியன் ஒரு முறை கூட நதியாவை கண்டு கொள்ளவில்லை.. அப்பா இருந்தால் கூட என்ன வம்பு இழுத்து கொண்டு திரிவான்.. என்ன ஆச்சு இவனுக்கு என யோசித்து கொண்டே வந்தாள். கடையில் அவனிடம் கேட்டு கொள்ளலாம் என நினைத்தாள்.. ஆனால் அவன் உள்ளே வரவில்லை.. 
“மாமா.. நான் என் பிரண்டு வீட்டுக்கு போயிட்டு வரேன்.. நீங்க கிளம்பும் போது எனக்கு போன் பண்ணுங்க.. “ என கூறி விட்டு சென்றான்.
நதியா நாம என்ன செய்தோம்.. ஏன் இப்படி நடந்துக்கிறான் என குழம்பினாள்.
*********************************************** 
கதிர் சீக்கிரமாக எழுந்தவன் மருந்து பையை பார்த்து விட்டு “அக்கா அக்கா.. “ என அழைத்தான். 
மருந்து பையையும் கதிரையும் மாத்தி மாத்தி பார்த்தாள். என்ன சொல்லி சமாளிப்பது என யோசிக்கும் போது.. 
“தேவ் மாமா குடுத்தாரா ?”
“என்னடா மாமானு சொல்லுற? “
“நேற்று அவரை ஹாஸ்பிட்டலில் பார்த்தோம்.. அவரோட சீனியர் அங்க வேலை பார்க்கிறார். அவரை பார்க்க வந்தாராம்.. நம்ம அப்பாவை விசாரிச்சிட்டு ரொம்ப கண்டிச்சு பேசினார் கா.. நம்மள ஏமாத்தி வாங்கின நிலத்தை கூட திருப்பி தரதா சொன்னார்..  நம்ம அப்பாவை கூட உறவு முறை சொல்லி தான் கூப்பிட்டார், நான் ஐயானு தான் சொன்ன அவர் அப்படி கூப்பிட விடலைக்கா.. “
“சரி சரி எல்லார் முன்னாடியும் அப்படி சொல்லிட்டாதே”
“சரிக்கா.. அவர் தான் மருந்து சீட்டை வாங்கிட்டு மருந்து கொண்டு வந்து தருவதாக சொன்னார்.. இப்ப தான் வந்தாரா..?”
“ம்ம்ம் ஆமாம் நீ நல்லா தூங்கிட்டு இருந்த “ என பாதி உண்மையும் பாதி பொய்யும் கூறினாள்.
“சரிக்கா நீ கிளம்பு.. நேரமாகுது பாரு “ 
“சாப்பாட்டை மறக்காமல் எடுத்துட்டு போ.. அப்பா எழுந்ததும் சாப்பிட வை, மாத்திரை எடுத்து குடுத்துட்டு கிளம்பு”
“சரிக்கா நான் பார்த்துக்கிறேன்”
இதை அனைத்தையும் கேட்டிருந்தவர் இந்த சின்ன வயதில் எவ்வளவு பக்குவமாக நடந்து கொள்கிறார்கள்.. நாம் கடமையில் தவறிட்டோமோ.. காலம் கடந்து யோசித்தார் ரகு.
******************************************** 
2 வாரம் அப்படியே நகர, ராமசாமிக்கு நாட்கள் நரகமாக நகர்ந்தது… சகுந்தலா நன்றாக கவனித்து கொண்டாலும், அவருக்கு போதை இல்லாமல் இருக்க முடியவில்லை.. இன்று எப்படியாவது குடித்து விட வேண்டும் என்று கேசவனை அழைத்தார்..
“சொல்லுங்க ஐயா”
“டேய் நம்ம ஊரில் உள்ள கடையில் 2 பாட்டில் வாங்கிட்டு வாடா “
“ஐயா.. அது வந்து..“
“என்ன டா வந்து போயினு கதை சொல்லிட்டு இருக்க??”
“நீங்க இன்னும் செய்தி பார்க்கலையா ?”
“மடையா பைத்தியமா நீ.. நான் என்ன கேட்கிறேன்.. நீ என்ன சொல்ற ?”
அப்போது அவருக்கு காலை உணவை கொண்டு வந்த சகுந்தலா, “அவன் சாதாரண நாளிலே உங்களை பார்க்கவே பயப்படுவான்.. இப்ப எதுக்கு அவன் கிட்ட கோவப்படுறீங்க..நம்ம ஊரில் இருக்கும் மது கடை நைட் எரிஞ்சி போச்சு “
“என்ன சொல்ற… என்ன ஏமாத்த இந்த கதை சொல்றியா ?”
“நான் ஏன் பொய் சொல்ல போறேன்.. இருங்க லோக்கல் கேபில் சேனலில் அதை தான் போட்டுகிட்டே இருக்கான்.. “ என்று அவர் அறையில் உள்ள தொலைகாட்சியை உயிர்பித்தார்.
“எத்தனை பேர் புகார் குடுத்தாலும் அதை மூட வைக்காமல் நான் பார்த்துகிட்டேன். அதுக்கு போய் இந்த நிலமை வந்துடுச்சே.. இனி டவுன் ஏரியாக்கு போயி வாங்கனும்.. “
“ம்ம்ம் போவீங்க போவீங்க.. அதையும் நான் பார்த்துக்கிறேன்”
“என்னடி ரொம்ப கொழுப்பு கூடி போச்சு.. என்னால நடக்க முடியாது, உன்னை நம்பி இருக்குற எகத்தாலமா? கொஞ்ச நாள் தான் அப்புறம் பார்த்துக்கிறேன் உன்னை.. “
“என்ன அப்புறம் பார்த்துக்கலாம்.. இப்ப சாப்பிடுங்க..  “ என்று டேபிளை பெட் பக்கத்தில் இழுத்து போட்டு விட்டு சாப்பட்டை எடுத்து வைத்து விட்டு வெளியே வந்து விட்டார். எப்பொழுதும் உணவை பரிமாறி, அவர் உண்டதும், கை கழுவி விட்டு, அவருக்கு தண்ணீர் குடுத்து விட்டே செல்வார். இப்போ கொஞ்ச நாளாக அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை.
இவளுக்கு ரொம்ப தான் தைரியம் வந்துடுச்சி.. எல்லாம் புள்ள இருக்கிற தைரியம்.. பார்த்துக்கிறேன் என மனதில் நினைத்தவர், சாப்பிட ஆரம்பித்தார்.
சகுந்தலா வருவதற்காகவே காத்திருந்த தேவ், ”சூப்பர் மா… இப்படி தான் நடந்துக்க சொன்னேன்.. நீ நல்லா பணிவிடை செஞ்சா அவருக்கு உன் அருமை தெரியாது… அவர் கால் குணமாகும் போது, மனசும் திருந்தி இருக்கனும் அது தான் என் ஆசை… “
“நீ சொன்ன சரிப்பா.. அவர் திருந்தி வந்தா போதும்.. “
“சரிமா.. நான் ஓவியனை பார்த்துட்டு வரேன்”
**************************************************** 
தேவும் ஓவியனும் தோப்பு வீட்டிற்கு சென்றார்கள். இப்பொழுது அந்த வீடு தான் இவர்களுக்கு சந்திக்கும் இடமாயிற்று.. 
தேவ் நேற்று நடந்ததை யோசித்து கொண்டிருந்தான். நேற்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கிய பின் தேவும் , ஓவியனும் கோவிலுக்கு அருகே இருக்கும் கடைக்கு சென்றார்கள்.. நேரம் நள்ளிரவு 1 மணியை நெருங்கி இருக்க, அக்கம் பக்கம் பொருமையாக சுற்றி பார்த்தார்கள், ஆள் அரவம் ஏதும் தென்படவில்லை.. பிறகு மது கடையின் பின் புறம் சென்றார்கள். அவர்கள் ஏற்கனவே அங்கு மறைத்து வைத்திருந்த ஏணியை எடுத்து வந்து முதலில் தேவ் ஏறி ஓட்டை பிரித்து உள்ளே குதித்தான், ஓவியனும் அவனை தொடர்ந்து உள்ளே சென்றான். அங்கு குடிக்க வருவோருக்கு  சைடிஷ் ஆம்லேட், சிக்கன் ப்ரை செய்வதற்கு அடுப்பு இருந்தது.. அந்த கேஸ் சிலின்டரை திறந்து விட்டான் தேவ். தான் கொண்டு வந்திருந்த சிகரட் துண்டை பத்த வைத்தான் ஓவியன். அது சரக்குகள் அடிக்கி வைத்திருக்கும் பக்கம் ஒரு துண்டும், அடுப்பு பக்கம்  ஒரு துண்டும் வீசினான். பிறகு வேக வேகமாக கொண்டு வந்திருந்த கயிற்றை மேலே கட்டி அதை பிடித்து கொண்டு  இருவரும் மேலே வந்து, எடுத்த ஓடுகளை திருப்பி வைத்து விட்டு கீழே  குதித்தார்கள். தாங்கள் கொண்டு வந்திருந்த கயிற்றையும் ஏணியையும் ஓவியன் எடுத்து சென்றான். தேவ் அங்கே மறைந்து, நெருப்பு புகை நன்றாக வரும் வரை இருந்தவன், பிறகு ஓடி விட்டான்.
“தேவ் நம்ம ப்ளான் சக்ஸஸ்டா.. இந்த கடையை எரிச்சிட்டோம்.. எப்படியும் அவன் திரும்பி கடையை கட்டி ஆரம்பிக்கும் போது இதே டெக்நிக் யூஸ் பண்ணிட்டா யாருக்கும் சந்தேகம் வராது.. ஒரு 3 தடவ கடையை சரக்கோட எரிச்சோம்னு வை.. ஒருத்தனுக்கும் தைரியம் வராது”
“எல்லாம் வெளியூர் போய் குடிப்பாங்களே டா.. “
“குடிச்சிட்டு வந்தா போலீஸ் கிட்ட மாட்டுவான்.. இல்லை வீட்டுக்கு வாங்கிட்டு வந்தா பொண்டாட்டி கிட்ட மாட்டுவான்.. அப்படி ரெண்டு பேர் கிட்ட எஸ்கேப் ஆனாலும் நம்ம ஊர் முழுக்க சிமன்ட் ஆலைக்கு தேவையான சுண்ணாம்பு கல் ஏத்திகிட்டு போற லாரி ஓடுது.. அதுல மாட்டுவான் விடு.. “
“ம்ம்ம் நான் இன்னும் 2 நாளில் கிளம்பிடுவேன்.. அம்மாவை பார்த்துக்கோடா.. “
“டேய்.. அதை நீ சொல்லஇட்மா.. நான் பார்த்துக்கிறேன்.. நீ அடிக்கடி வா முதலில்.. நீ வந்தா கொஞ்சம் ஊரே மாறுது டா.. காலையில் 2 மணி நேரம் ஷேர் ஆட்டோ ஓடுறதால ஸ்கூல் பிள்ளைங்க தொல்லையில்லாமல் டவுனுக்கு படிக்க போறாங்க, மது கடை பிரச்சனை தீர்ந்தது.. நீ இங்கயே வந்துட்டா இன்னும் ஊர் நல்லாயிருக்கும் “
“டேய் எல்லாம் நான் மட்டும் தனியா பண்ணல.. நீயும் கூட இருந்தத மறந்திடாத.. “
“ஐடியாலாம் உன்னது தானடா “
“சரி விடு.. நான்  அடுத்த மாசம் கடைசியில் தான்  வருவேன் .. நீ எப்ப திருச்சி போற?“
“நான் அடுத்த வாரம் கிளம்புவேன் டா.. கொஞ்ச நாளா இயற்கை விவசாயம் மேல ரொம்ப ஆர்வம் கூடுது.. அதுக்கான ட்ரைனிங் 2 நாள் வேளாண் கல்லூரி சார்பா நடத்துறாங்க அதை அட்டண் செய்ய போறேன்”
“ரொம்ப நல்ல ஐடியா… நிறைய அதற்கான முன் ஏற்பாடுகள் பண்ணு அப்புறம் ஆரம்பிக்கலாம் “
“ம்ம் சரிடா.. கிளம்புவோமா ?”
“வா”

Advertisement