Advertisement

மினி தன் வேலையை முடித்து விட்டு வெளியே வந்த போது தேவ் அங்கு நின்றிருந்தான். 
“மினு உன் கிட்ட பேச வேண்டும் “
“யாராவது பார்த்து விட போகிறார்கள் உங்களிடம் பேச எனக்கு ஒன்னும் இல்லை.. தயவு செஞ்சு போங்க”
“ ப்ளீஸ்.. ஒரு 10 நிமிஷம் தான் என்ன புரிஞ்சிக்கோ.. நாளைக்கு நான் ஊருக்கு போய் விடுவேன்.. என் தொல்லை இல்லாமல் கொஞ்ச நாள் இருக்கலாம் துப்பட்டாவை கட்டி கிட்டு வண்டியில் உட்கார்”
அவனை முறைத்து கொண்டே வண்டியில் ஏறினாள்.  தேவ் அவன் சொந்த சோள காட்டிற்கு கூட்டி சென்றான். வண்டியை நிறுத்தியவுடன் இறங்கியவள்,
“அப்படி என்ன பேசனும் உங்களுக்கு?”
“என்ன முடிவு எடுத்திருக்க”
“எதை பத்தி”
“சும்மா ஒன்னும் தெரியாத மாதிரி பேசிட்டு இருந்த அறைஞ்சிடுவேன் பார்த்துக்க .. சரி ஸ்கூல் போற பொண்ணு அவ கிட்ட போய் காதல் அது இதுனு பேச எனக்கே கூச்சமா இருந்தது.. தப்பா பட்டுது.. அதனால் தான் 1 வருஷம் முன்னாடி 2 நாள் பேசினதோட அப்படியே விட்டுட்டேன், அதுக்காக உன்னயே விட்டுட்டேன் அப்படிங்குற அர்த்தமில்ல.. “
“அப்ப சொன்ன பதில் தான் இப்பவும் “
“அப்படினா?”
“உங்களுக்கும் எனக்கும் ஏணி வச்சாலும் எட்டாது.. அது மட்டுமில்ல, என் தம்பியை நான் தான் படிக்க வைக்கனும், கடமை நிறைய இருக்கு.. எனக்கு இந்த காதல் பண்ண எல்லாம் நேரம் இல்லை.. “
“சரி காதல் பண்ண வேண்டாம்.. அட்லீஸ்ட் கல்யாணம் பண்ணிக்குவியா ?”
“விளையாடுறீங்களா.. உங்களுக்கு நீங்க பேசுறது சரியா படுதா ? நீங்க டாக்டருக்கு படிக்கிறீங்க, நான் வெறும் +2, ஊரில் உள்ள பாதிக்கு மேல் உங்க நிலம் தான், எங்க வீட்டை தவிர வேற சொத்து இல்லை எனக்கு.. நமக்கு எப்படி செட் ஆகும்.. அப்படியே நான் ஒத்து கிட்டாலும், ஊர் என்ன சொல்லும், வேண்டாம் விடுங்க”
அவள் பதிலில் கோவம் கொண்ட தேவ் “அப்புறம் எதுக்குடி நான் குடுத்த மருதாணி செடியை இப்படி பொத்தி பொத்தி வளர்த்திருக்க ?”
“ம்ம்ம்ம்.. அது எங்க வயலில் இருந்தது.. நீங்க வெட்டி குடுத்தீங்க அவ்வளவு தான் “
“ஓ அப்படிங்களா மேடம்.. மத்த விஷயங்களை விடுடி காசோ படிப்போ எனக்கு முக்கியமில்ல.. அது உனக்கும் தெரியும்..  நிஜமாவே என்ன பிடிக்கலையா மினு?” என்று காதலை தன் கண்ணில் தேக்கி வத்து கேட்டான்.
சிறிது நேரம் யோசித்தவள் “ஆமாம்.. நீங்க இப்படி பண்ணுவது பிடிக்கலை“
அவளது பதிலில் கோபமுற்றவன் “சரி இனி உன் முன் வந்து பேசுவது இது தான் கடைசி.. நீயா கூப்பிடாமல் நான் வர மாட்டேன். ஊர் வரை கொண்டு வந்து விடுறேன் வா.. “
“வேண்டாம் நான் போய்க்கிறேன்”
“ம்ம்ம் சரி”
அவள் திரும்பி சென்றதும் அப்படியே அவனது பைக்கில் சாய்ந்து படுத்து விட்டான்
மினிக்கு கஷ்டமாக இருந்தது, தன் உயிராக நேசித்த ஒருவனை பிடிக்கவில்லை என்று கூற வைத்த விதியை நொந்தாள். சிறிது தூரம் சென்றவள் பின்பு நியாபகம் வந்தவளாய் மீண்டும் அவன் முன் நின்றாள். அவன் கண் மூடி படுத்திருந்தான் , அவள் தொண்டையை செருமினாள். எழுந்து அவளை பார்த்தவன் திரும்ப கண் மூடிக்கொண்டான். அதில் காண்டானவள், ”இந்த சோள காட்டுக்குள் நிறைய பாம்பு இருக்கும் “
தேவ் பதில் அளிக்கவில்லை.. 
“சீக்கிரம் கிளம்புங்க..”
அவன் கண்டு கொள்ளவில்லை.. 
“ப்ளீஸ் கிளம்புங்க.. “
“என்ன தான் உனக்கு பிடிக்காதே.. அப்புறம் பாம்பு கடிச்சா என்ன, தேள் கொட்டினா உனக்கு என்ன.. உன் வேலையை பார்த்துட்டு போடி.. வந்துட்டா பாம்பு பூராணு..”
அவள் எதுவும் பேசவில்லை, வரப்பில் அவளும் அமர்ந்து கொண்டாள். 
“ஓய்.. போடி இங்கிருந்து.. பிடிக்காதவன்  முகத்தை பார்த்துகிட்டு இருக்க?“
“ஐயோ திரும்ப திரும்ப அப்படி சொல்லாதிங்க “
“நீ சொன்னதை தான் சொல்றேன்”
“இல்லை.. நீங்க பண்ணுறது தான் பிடிக்கலை சொனனேன்.. உங்களை இல்ல.. “
“ஐ.. மினு குட்டி.. அப்படினா.. என்ன பிடிக்குமா? “
 “பிடிக்கும் ஆனால் “
“நீ இதுக்கு மேல ஒன்னும் பேசாத பழைய டேப் ரிக்கார்டு மாதிரி.. அதையே திருப்பி திருப்பி சொல்லி கிட்டு.. என்ன பிடிக்கும்னு சொல்லிட்ட அதுவே போதும், மீதிய நாங்க பார்த்துக்குறோம்.. நீ கிளம்பு”
“நீங்க ..”
“அடிங்க.. போடினா போமாட்டியா.. நான் வண்டியில் தானே வந்திருக்கேன்.. நான் சீக்கிரம் போய் விடுவேன்.. நீ கிளம்பு.. “
அவனுடன் வண்டியில் செல்ல மனம் துடித்தது ஆனாலும் மனதை கட்டு படுத்தி கொண்டாள்.. அவனை விட்டு தூரம் செல்ல வேண்டும் என்று அறிவு எச்சரித்தாலும் மனசு கேட்கவில்லை. 
சிறிது தூரம் சென்றிருப்பாள், பின்னால் வண்டி சத்தம் கேட்டு திரும்பினாள். தேவ் அவளை முறைத்து கொண்டு வண்டியை நிறுத்தினான்
“சில டைம் நம்ம மனசு கரக்டா தான் சொல்லும், ஆனால் அதை நம் அறிவை கொண்டு ஆராய்ச்சி செய்தால் குழப்பம் தான் அதிகரிக்கும் “
“இவன் என்ன சொல்றான் “ என திரு திருவென முழித்தாள்.
“மேடம் ஊருக்குள் போக இந்த பக்கம் போகனும் நீங்க எதிர் பக்கமா நடக்குறீங்க.. “
பிறகே சுற்றி வழியை பார்த்தாள்.. ஆத்தி இது சுடுகாடு போற வழியாச்சே என திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.
“ஏய் நில்லுடி.. ஏறுடி வண்டியில்”
“வேண்டாம்..”
“அம்மா தாயே ஊர் எல்லையில் உன்னை இறக்கி விடுறேன்.. நல்லா இருட்டிடுச்சி, நீ என் கூட வரது யாருக்கும் தெரியாது வா.. “
பிறகு வண்டியில் ஏறினாள்.. தேவிற்கு கடந்த ஓராண்டு காலமாக இருந்த இருக்கம் தளர்ந்து மனசு லேசானது போல் உணர்ந்தான்.. மினிக்கும் அவனுடன் செல்வது இதமாக தான் இருந்தது.. ஆனாலும் ஒரு தயக்கமும் குழப்பமும் கூடவே வந்தது.. 
வண்டியை நிறுத்தியவன் அவள் இறங்கியதும், “இங்க பாரு டீ.. நீ ஊர பத்தியோ, சொத்து கணக்கு பத்தியோ நீ கவலை பட தேவையில்லை.. எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்.. நீ எதையும் நினைத்து கவலை படாதே.. வேலைக்கு போக கஷ்டமா இருந்தா சொல்லு..மாற்று ஏற்பாடு எதாவது பண்ணலாம்.. ஆனால் நீ மருந்து கடையில் வேலை பார்த்தால் எனக்கு நல்லது தான்.. ப்யூட்டர்ல நமக்கு உதவும் அதான் அப்படியே விட்டுட்டேன்.. நான் காலையில் கிளம்பிடுவேன்.. பார்த்துக்க.. பை.. “
“பை” என தலையாட்டி விட்டு அவள் நடக்க ஆரம்பித்தாள். அவன் சிறிது நேரம் அங்கேயே நின்றவன் பின் தன் வீட்டிற்கு சென்றான்.
*************************************************** 
நதியா மிகவும் குழப்பத்தில் இருந்தாள். 2 வாரமாக எப்பவும் தன்னை சுத்தி சுத்தி கிண்டல் பண்றவன் ஏன் பேச கூடவில்லை என யோசித்தாள். அவனிடமே இன்று கேட்டு விடலாம் என்று வெகு நேரமாக ஓடக்கரையில் அமர்ந்திருக்கிறாள்.. ஆனால் அவனை தான் காணவில்லை.. தன் மொபைலை 100வது முறையாக எடுத்து பார்த்தாள், அவளின் மெசேஜை படித்து விட்டதிற்கு ஆதாரமாய் ப்ளூ டிக் தான் வந்திருந்தது… ஏன் பதில் கூட வரவில்லை என நினைக்கும் போது ஓவியன் நடந்து வந்து கொண்டிருந்தான்.
நதியா அருகே வந்ததும், “என்ன பேசனும் உனக்கு.. இந்த நேரத்தில் இங்க வந்து நிக்குறியே உனக்கு அறிவு இருக்கா.. ஒரு நாள் போல எல்லாம் நாளும் இருக்காது.. “
“அது அது வந்து.. நீங்க “
“உளறாமல் பேசு என்ன விஷயம் ”
“நீங்க ஏன் என் கிட்ட பேச மாட்றீங்க.. “
“பேசி கிட்டு தானே இருக்கேன்” என எரிந்து விழுந்தான். 
“இல்லை முன்ன மாதிரி ஏன் பேசுறதில்லை..” அவளுக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியவில்லை 
“என்ன முன்ன மாதிரி பின்ன மாதிரினு உளறி கிட்டு இருக்க.. முதலில் வீட்டுக்கு போ.. கவனம் படிப்பில் மட்டும் இருக்கட்டும் நதி… போ முதலில் இங்கிருந்து.. “ என கோவத்தில் கத்தினான்..
“போடா.. உன் கிட்ட வந்து பேச வந்தேன் பாரு “ என கோவித்து கொண்டு சென்றாள்.
அவளை திட்டியதற்காக தன்னயே நொந்தவன், “இன்னும் கொஞ்ச நாள் தான் டி.. பொருத்துக்கோ.. “ என மனதில் நினைத்தான். பிறகு அங்கிருந்து சென்று விட்டான். இயற்கை விவசாயத்தை பற்றி கற்று கொள்ள சென்றான்.. திரும்ப நேராக இங்க வந்து விட்டான். பசி கண்ணை கட்டியது.. 
“அம்மா பசிக்குது.. “
“வாடா.. தோசை சுட்டு தரேன்.. “
“சரி மா.. நான் குளிச்சிட்டு வரேன் மா.. “
சாப்பிட்டு விட்டு தூங்கியும் போனான் ஓவியன்.. இங்கு நதியாவோ “சாரி “ என்ற அவனின் ஒற்றை மெசேஜிற்காக காத்திருந்து தூக்கம் வராமல் முழித்து கொண்டிருந்தாள்.
அடுத்த நாள் காலை தேவ் புறப்பட்டு சென்னை சென்றான்.
— மின்னுவாள்..

Advertisement