Advertisement

    காலையில் எழுந்ததிலிருந்து ராமசாமி கத்தி கொண்டிருந்தார். எழுந்து நிற்க கூட  அடுத்தவர் உதவி தேவைப்பட்டது . வீட்டிற்குள்ளே இருப்பது மிகுந்த வேதனையாக இருந்தது.. பற்றாகுறைக்கு மது வேறு இல்லாமல் அவரால் இருக்க முடியவில்லை. 
தேவ் அமைதியாக இருந்தான். அவன் தந்தையை கண்டு கொள்ளவில்லை. சகுந்தலா தன் கணவனிற்கு அனைத்து பணிவிடைகளும் செய்து அதற்கு அவரிடம் திட்டும் வாங்கி கொண்டார். ஓவியன் வந்து தன் மாமாவின் நலன் விசாரித்து விட்டு தேவுடன் வெளியே சென்றான்.  
“அடுத்து என்ன பண்ண போறோம் டா தேவ்”
“ அவரால் கண்டிப்பா ஒரு 2 மாதம் வெளிய வர முடியாது.. காலில் எலும்பு முறிவு பலமாக தான் இருக்கு.. எலும்பு கூடி வர நாளாகும் டா.. ஆமாம் தோப்பு வீட்டுக்கு வந்தாளே அது யார் தெரியுமா ?”
“அவ பக்கத்து ஊர் காரி டா.. அந்த பொம்பளை சரியான தண்ணி வண்டியாம். அது தான் மாமாவுக்கு சரக்கு வாங்கிட்டு வருமாம். “
“அவருக்கு அடி பட்டது அந்த பொம்பளைக்கு தெரிந்திருக்குமா?”
“தெரியலையே டா.. “
“தோப்பு வீட்டு சாவி என் கிட்ட தான் இருக்கு.. வா போய் பார்க்கலாம் “
இருவரும் தேவ் வண்டியில் தோப்பு வீட்டிற்கு சென்றார்கள். தோப்பு வீடு ஊருக்கு ஒதுக்கு புறத்தில் இருந்தது. சுற்றிலும் மாந்தோப்பும் , தென்னந்தோப்பும் இருந்தது. மாமரத்திற்கு பக்கத்தில் இருவரும் அமர்ந்திருந்தனர். இவர்கள் எதிர்பார்ப்பு பொய்யாக்காமல்  அவளும் வந்து சேர்ந்தால், கையில் 2 பாட்டிலோடு.. 
வேக வேகமாக நடந்து வந்தவள், “என்ன ஐயாவோட வண்டியை காணும்” என யோசித்து கொண்டே வீட்டு படி கட்டில் அமர்ந்தாள். அவளுக்கு சுமார் 35 வயதிருக்கும். கணவன் இவள் நடத்தை பிடிக்காது வேறு ஒரு பொண்ணுடன் ஓடி விட்டான். இவள் அதற்கெல்லாம் அஞ்சவில்லை. பணக்காரர்களை வளைத்து போட்டு நல்ல சுகமாக வாழ்ந்து வரும் ஈன பிறவி இந்த ராதா. 
அப்போ தேவ் “ யாருமா நீ இங்க என்ன பண்ணுற ?”
“நீ யாரு டா என்ன கேள்வி கேட்க.. இது என்ன உன் அப்பன் வீட்டு இடமா கேள்வி கேட்குற ?” என திமிராகவே பதில் அளித்தாள்.
“நீ சொன்னாலும் சொல்லாட்டியும் என் அப்பன் வீட்டு இடம் தான், உனக்கு இங்க என்ன வேலை ?”
“ஓஓ நீ தான் டாக்டருக்கு படிக்கிற பையனா?.. நான் பெரிய பண்ணையை பார்க்க வந்தேன். போ போய் ஐயாவை கூப்பிடு”
“ஐயாவை பார்க்க முடியாது.. என்ன விஷயம் என் கிட்ட சொல்லு..”
“ராதா வந்திருக்கேன் சொல்லு.. பாஞ்சு வருவார் அவரு..”
“எதுக்கு வந்திருக்க நீ ? இன்னும் என் கிட்ட சொல்லவே இல்லையே ?” என தன் பின்னால் மறைத்து வைத்திருந்த உருட்டு கட்டையை கையில் எடுத்து தட்டியவாறு மிரட்டினான்.
“ நீ என்ன கேள்வி கேட்குற என்னை.. “
“இவ கிட்ட என்ன டா பேச்சு.. அவள் கையிலிருக்கும் பையை வாங்கு” என ஓவியன் கூறினான்.
“பையை குடு இங்க.. “
“தம்பி அது உங்க அப்பாவுக்காக வாங்கினது.. இப்படி கலாட்டா பண்ணின உனக்கு தான் கஷ்டம்.. உங்க அப்பா பத்தி தெரியும்ல ?”
“ஓ என்னயே மிரட்டுற நீ ?” 
அவள் வைத்திருந்த பையை கட்டையால் ஒரு அடி அடித்தான். பாட்டில்  நொறுங்கி சரக்கு எல்லாம் கீழே கொட்டியது.. 
“நீ தான் தினமும் குடிக்க வச்சு எங்க வீட்டில் பிரச்சனை உண்டு பண்ணுறதா? இப்படி எத்தனை பேர் குடிய கெடுப்ப நீ ?”  
“உன் ஆத்தா காரி நல்ல படியா கவனிச்சா என்ன ஏன் டா தேட போறாரூ.. என்ன கேள்வி கேட்கிறத விட்டுட்டு உன் அம்மாவிற்கு புத்தி சொல்” என்று எகத்தாலமாக பேச..
“என் அம்மாவை பத்தி பேசுன.. “ என்று கட்டையால் காலிலே அடிக்க ஆரம்பித்தான். 
“அடேய் உன் அப்பனை அடக்காமல் என் மேல ஏன் டா கையை வைக்கிற என கத்தி கொண்டே ஓடினாள். ஓவியன் அவள் வெளியே போகாதவாறு பார்த்து கொண்டான்.
“இனி இந்த பக்கம் வருவியா? இப்படி கேவளமான பொழப்பு நடத்துவியா “ என விலாசினான் அவன். 
அடி தாங்க முடியாமல் கதறியவள் “இருடே என்ன அடிச்சனு போலீசுல மாட்டி கொடுக்குறேன்”
“அப்படியா போய் சொல்லு போ.. நீயும் சொத்துக்கு ஆசை பட்டு எங்க அப்பாவை சரக்கு ஊத்தி கொடுத்து  கொல்ல பார்த்தேன் நானும் புகார் குடுக்குறேன். என் கிட்ட அத்தாச்சி கூட இருக்கு “ என்று தன் போனில் உள்ள போட்டோவை காட்டினான்.
“ஐயோ !! என்ன விட்டுடு தம்பி.. அப்படி ஏதும் பண்ணிடாத.. “
“ம்ம்ம் இனி யார் குடும்பத்திலாவது உன்னால் சண்டை சச்சரவு ஆனது.. அப்புறம் ஜெயில் தான் கலி தான்”
“இனி இந்த பக்கமே வர மாட்டேன் “ என்று ஓட தொடங்கினாள். 
கட்டையை கீழே போட்டு விட்டு ஓய்ந்து அமர்ந்தான் தேவ். 
“இந்த பொம்பளையை துரத்தியாச்சு ஆனால் மாமா சும்மா இருக்கனுமே டா”
“அவர் திருந்த தான் இந்த 2 மாதம் வீட்டிலே இருக்க வச்சிருக்கேன். திருந்தாட்டி நிரந்தரமா காலை எடுக்க வேண்டி தான்”
“அடப்பாவி டேய்.. டாக்டர் மாதிரி பேசாமல் ஏதோ ரௌடி மாதிரி பேசுற ?”
“இத்தனை நாள் அவர சும்மா விட்டதே தப்பு டா.. இன்னும் எத்தனை பாவம் பண்ணி வச்சிருக்கரோ..“
“சரி விடு டா.. அந்த கம்ப்ளைன்ட் என்ன ஆச்சு.. ?”
“அவன் எதுவும் ஆக்ஷ்ன் எடுக்க மாட்டான் டா.. தெரிந்து தான் கம்ப்ளைன்ட் கொடுத்தேன்”
“இப்ப என்ன பண்ணுறது.. ?”
“ஏதாவது குறுக்கு வழி தான் யோசிக்கனும் .. 2 நாள் போகட்டும் “
“சரி வா போகலாம் வீட்டுக்கு.. அத்தை இன்னைக்கு நண்டு சமைக்க போறதா சொன்னாங்க.. வாடா”
“தீனி பண்டாரம்.. வந்து தொலை.. “ என இழுத்து கொண்டு வீட்டிற்கு சென்றான். 
************************************************************** 
மினி வழக்கம் போல் மெடிக்கல் கடையில் வேலை பார்த்து விட்டு மாலை பேருந்தில் வந்து விடுவாள். காலையில் 10 மணி வரைக்கும் இப்பொழுது புதிதாக ஷேர் ஆட்டோக்கள் ஓடுகிறது, அதனால் சிரமம் இல்லாமல் வேலைக்கு சென்று வர முடிகிறது அவளால். இது யாரால் நடந்திருக்கும் என ஓரளவிற்கு யூகிக்க முடிந்தது அவளுக்கு.
பேருந்தை விட்டு கீழே இறங்கியதும் அவனையே கண் தேடியது.. ஏனோ அவள் எண்ணத்தின் நாயகன் இன்று காட்சியளிக்க வில்லை. அவனை நினைக்காதே மனமே என 1000 முறை தனக்குள் சொல்லி கொண்டாலும் அவள் மனது கேட்பேனா என்று அடம் பிடித்தது.. வீட்டிற்கு வந்ததும் நதியா வீட்டு வாசலில் அமர்ந்திருந்தாள்.
“நதியா… “
“வாடி.. ரொம்ப களைப்பா தெரியுற மினி”
“அப்படிலாம் இல்லை .. நல்ல பெரிய கடையில் தான் மாமா சேர்த்து விட்டுருக்கார் டி.. 6000 சம்பளம்.. 6 மாசம் கழிச்சு சம்பளம் கூட்டி தரேன் சொன்னார் முதலாளி.. நாங்க 4 பேர் வேலை பார்க்கிறோம். தெரியாததை அவங்க சொல்லி தராங்க டி.. மருந்து கடை ஒரு ஹாஸ்பிட்டலில் கீழ் இருப்பதால் நல்ல வருமானம் வருது போல.. எங்கள நல்லா பார்த்துக்குறாங்க.. வேலை கஷ்டமா இல்லை டி.. அங்க ஏசி குட போடுறாங்க டி.. “
“சரி டி.. சரி டி.. நீ கஷ்ட படாமல்  இருந்தா அதுவே போதும் டி .. நீ இல்லாமல் எனக்கு தான் போர் அடிக்குது.. எங்க கதிர காணும்”
“அப்பா 2 நாளா வேலைக்கு எங்கேயும் போகலை டி.. வயிறு வலி போல.. நான் ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போக சொன்னேன் இன்னும் வரலை டி.. “
“6.30 பஸ்ஸும் போயிடுச்சு டி.. எப்படி வருவாங்க.. “
“நைட் 10.30 பஸ்ஸில் வருவாங்க டி.. அது சில தடவை ஆள் இல்லாட்டி வர கூட மாட்டான்.. எப்படி வருவாங்கலோ.. “
“உன் போன் என்ன ஆச்சு டி.. “
“ரீச்சார்ஜ் பண்ணலைடி.. வேற போன் கூட வாங்கனும்.. கதிருக்கு.. 2 பேரும் வேலைக்கு போறோமா.. போன் இருந்தால் கொஞ்சம் வசதியாக இருக்கும்”
“ம்ம்ம் இன்னும் ஒரு மாசம் தானே டி.. அப்புறம் கதிருக்கு ஸ்கூல் இருக்கும்ல.. “
“சனி, ஞாயிறு வேலைக்கு போவான் டி “
“ம்ம்ம் இந்தா உனக்கு பிடித்த கேழ்வரகு புட்டு.. அம்மா குடுத்து விட்டாங்க.. அதை குடுக்க வந்திட்டு கதை பேசிட்டு இருக்கேன் நான். சரி டி.. நான் நாளைக்கு வரேன். நாளைக்கு லீவ் தான ?”
“ஆமாம் டி.. நாளைக்கு பார்க்கலாம் “ 
நதியா குடுத்த புட்டை சாப்பிட்டு விட்டு இரவு உணவு செய்தாள்.
இரவு 10.30 பேருந்தில் வீட்டை அடைந்த இருவருக்கும் முகமே சரியில்லை..  மினி “ ரெண்டு பேரும் குளிச்சிட்டு வாங்க சாப்பிடலாம்”
சாப்பிட்டதும் ரகு எதுவும் பேசாது போய் படுத்து கொண்டார். கதிர் சாப்பிட்டு பின் வாசலில் அமர்ந்திருந்தான். 
“கதிர் டாக்டர் என்ன சொன்னாங்க “
“கடவுள் நம்ம ரொம்ப சோதனை பண்றார் அக்கா.. “
“ஏன் டா இப்படி சொல்ற ?”
“அப்பாக்கு லிவர் டாமேஜ் ஆகிருக்கு மருந்து குடுத்திருக்காங்க.. உப்பு கம்மியா சாப்பிடனுமாம்.. நிறைய டயட் பாலோ பண்ணனுமாம். ரெகுலரா மருந்து சாப்பிடனுமாம். முடிஞ்சா லிவர் ட்ரான்ஸ்பலான்ட் பண்ணலாம் ஆனால் அதுக்கு செலவு ஆகும்.. இப்போதைக்கு மருந்தால கட்டு படுத்த முடியும் முயற்சி பண்ணலாம் அதுக்கு அப்பாவோட ஒத்துழைப்பு கண்டிப்பா வேண்டும்”
“என்ன பண்ணனும் சொல்லு டா.. நான் அப்பாவை பண்ண வைக்கிறேன்”
“ஒரு சொட்டு கூட இனி அவர் குடிக்க கூடாது.. அவர் அப்படி குடிச்சா நாம அநாதை ஆகிடுவோம் கா.. “ என்று அவளை கட்டி கொண்டு அழ ஆரம்பித்து விட்டான். மினியும் கண் கலங்கினாள். ஆனால் தைரியத்தை கை விட வில்லை. 
“கதிரு அழாத டா.. அப்பாவை குடிக்காமல் பார்த்துகிறது என் பொறுப்பு.. அம்மாவை தான் காப்பாத்த முடியலை.. அப்பாவை நம்மால் காப்பாத்த முடியும் டா நீ வருத்த படாதே” கதிரை சமாதானம் செய்து தூங்க வைத்தவளுக்கு தூக்கம் தூர போய் விட்டது. தன் விதியை நினைத்து நொந்தவள் எப்பொழுதும் போல் தன் வீட்டு தோட்டத்தில் அமர்ந்திருந்தாள். அப்பொழுது அவள் மேல் யாரோ கல் எறிந்தார்கள். பயத்தில் திரும்பி பார்த்தாள். யாரும் தென் படவில்லை.. சரி.. வீட்டிற்குள் சென்று விடலாம் என்று நினைக்கும் போது,
”மினு” என்ற குறலில் அப்படியே நின்று விட்டாள்.
 வேலியை எகிரி குதித்து உள்ளே வந்த தேவ், “ மினு இதில் அப்பாவிற்கு தேவையான மாத்திரை மருந்து எல்லாம் இருக்கு ஒரு 3 மாதத்திற்கு வரும்.. என்ன சாப்பாடு குடுக்கனும் அதையும் எழுதி இருக்கேன்… நீ பயப்படுற அளவிற்கு ரொம்ப பெரிய பிரச்சனை இல்லை.. கொஞ்சம் கண்ட்ரோலா இருந்தா குணமாகிடும்.. “
“வேண்டாம்.. இதல்லாம்.. “
“இதெல்லாம் வாங்கி குடுக்க நீ யாருடானு கேட்குற அதான.. நான் யார்னு உன் மனசும் சொல்லும்.. இந்த மருதாணி செடியும் சொல்லும்.. அது மட்டுமில்ல.. உங்க நிலத்தையெல்லாம் எங்க அப்பா ரொம்ப கம்மி விலைக்கு வாங்கிட்டாருனு தெரியும்.. அந்த குற்ற உணர்ச்சியும் இருக்கு.. ப்ளீஸ்.. வாங்கிக்கோ.. உன் தம்பி கிட்டையே குடுத்திருப்பேன்.. ஒரு சில மருந்து அங்க கிடைக்கல.. திருச்சி போய் வாங்கிட்டு வந்தேன்.. அதனால் லேட்.. “
“இல்லை.. அது.. “
“ப்ளீஸ் புரிஞ்சுக்கோடி.. என்னால் ரொம்ப நேரம் இங்க நிக்க முடியாது.. யாராவது பார்த்தால் வம்பாகிடும் ப்ளீஸ் வாங்கிக்கோ.. “
தயக்கத்தோடு அதை வாங்க.. “மினு அதில் என் நம்பர் எழுதி இருக்கேன்.. தேவை பட்டால் எனக்கு கூப்பிடு.. பை டி.. “ என்று கூறிவிட்டு மறுபடியும் வேலியை தாண்டி ஓடி விட்டான்.
அவன் சென்ற பாதையை பார்த்து கொண்டு சிறிது நேரம் அப்படியே நின்றவள், பிறகு உள்ளே சென்று விட்டாள்.
— மின்னுவாள்..

Advertisement