Advertisement

அத்தியாயம் 2
தேவும்  ஓவியனும் தீவிரமாக பேசி கொண்டு சென்றதால், நதியாவையும் மினியையும் கவனிக்கவில்லை. அவர்கள் கொஞ்சம் தூரம் சென்றதும் ,
நதியா, “அப்பாடி போயிட்டான் . கூட போறது  அந்த பெரிய பண்ணை மகன் தேவ் அண்ணன் டி.. அந்த குரங்கோட  மாமா மகன்.. அவங்க அப்பா மாதிரி இல்லை ரொம்ப நல்ல டைப்னு அம்மா சொல்லும்”
“ம்ம்ம்ம்” 
“அடுத்தது என்ன செய்ய போற மினி ?”
“பக்கத்துல லால்குடிக்கு வேலைக்கு போகலாம்னு இருக்கேன் டி. எங்க மாமா கிட்ட சொல்லிருக்கேன். எதாவது மெடிக்கல் ஷாப், காய்கறி கடை , கம்ப்யூட்டர் சென்டர், கணக்கு எழுதும் வேலை இருந்தா சொல்ல சொல்லியிருக்கேன்”
“உங்க அப்பா என்ன சொல்றாங்க?”
“அவர் சொல்ல என்ன டி இருக்கு.. எங்க கிட்ட சரியா பேச மாட்டார். ஏதோ எங்க பாதுகாப்புக்கு கூட இருக்கார் அவ்வளவு தான்.”
“சரி டி கவலை படாதே. எல்லாம் சரி ஆகும்”
“பார்க்கலாம் டி.. சரி வா போகலாம்”
******************************************************************************* 
தேவ் “ஓவி அப்புறம் ஊர் எல்லாம் எப்படி இருக்கு?”
“அப்படியே தான் டா இருக்கு.. நமக்கு காவிரி தண்ணி வந்தால் தான் விவசாயம் நல்லா இருக்கும்.. போர் , மோட்டார் இருக்குறவங்க கரும்பு போட்ருக்காங்க.. எங்க காட்டில் கரும்பு தான் டா போட்ருக்காங்க.. உங்க வயலில் நெல், கரும்பு ரெண்டும் போட்டு இருக்கு “
“எங்களோடதா… அட போடா.. பாதி ஊரை ஏமாத்தி புடுங்கினது.. என் கைக்கு வரட்டும் எல்லாம்.. யார் யாருக்கு சேரனுமோ பார்த்து குடுத்துடுவேன் நான். எங்க அம்மாவுக்கு சீராக வந்த தென்னந்தோப்பு போதும் டா எனக்கு.. “
“விடு டா.. அது அப்புறம் பார்க்கலாம்.. ஏதாவது பிஸ்னஸ் ஐடியா குடு தேவ்”
“யாருக்கு டா?” 
“எனக்கு தான் டா.. “
“ஏன் டா.. நீ எம்.பீ.ஏ (MBA) படிக்க சென்னை வரேன் சொன்ன?”
“அப்படி தான் ப்ளான் பண்ணி இருந்தேன் ஆனால் இப்ப கொஞ்ச நாளா அப்பா உடம்பு சரி இல்லை டா.. ரொம்ப கஷ்ட படுறார். “
“என்ன ஆச்சு டா மாமாவிற்கு.. “
“சரியா சாப்பிடாம அல்சர் வந்துட்டது, எற்கனவே ஹார்ட் பிரச்சனை வேற.. அம்மாக்கு ரொம்ப பயம் அதுதான் இன்னம் ஒரு 5 மாதம் தானே காலேஜ் முடிந்ததும் ஏதாவது இங்கயே பண்ணலாம்னு யோசிக்கிறேன்”
“சரி டா.. யோசிப்போம்.. உனக்கு வருத்தமா இல்லையாடா?”
“கரஸ்ல படிக்கலாம்னு இருக்கேன் டா.. அம்மா அப்பாவுக்கெல்லாம் வயசு ஆச்சு.. அவங்க கூட இருக்கனும் இனி.. நாம ரெண்டு பேருமே ஒத்த பிள்ளையா போய்ட்டோம் டா…”
“நான் கூட இங்கே தான் திருச்சியில் ப்ராக்டிஸ் பண்ணலாம்னு இருக்கேன். பார்க்கலாம் அதற்கு இன்னம் நாள் இருக்குது…”
“சரி டா.. வா வீட்டுக்கு போகலாம்.. அத்தை ஏதாவது ஸ்பெஷல் ஐட்டம் செஞ்சிருப்பாங்க நல்லா மொக்கிட்டு என் வீட்டுக்கு போறேன்”
தேவ் சிரித்துவிட்டான்  “டேய் சாப்பாட்டு ராமா.. “
“எனக்கு சோறு தான் முக்கியம்.. வாடா.. “
இருவரும் வீட்டிற்கு வந்ததும் சகுந்தலா, “ஏன் டா பட்ட பகலில் போய் ஊர சுத்திட்டு வரீங்க.. என் புள்ள கருத்துட போறான் “
ஓவியன் “ஓஹோ உன் புள்ள இப்ப எம்ஜிஆர் மாதிரி தக தகனு மின்னுறான் இல்லை அத்தை??”
“டேய் என் புள்ள கலர கிண்டல் பண்ணின சோறு கிடையாது சொல்லிட்டேன்”
“ஐயோ அத்தை நான் தெரியாம பேசிட்டேன்.. சட்டுனு சோத்துக்கு ஆப்பு வச்சிடாத .. சீக்கிரம் சோத்த போடு”
“பரக்காவட்டி அலையாத டா.. வந்து உட்காரு.. “
தேவும் ஓவியனும் சாப்பிட அமர்ந்ததும், சிக்கன் வருவல், மீன் குழம்பு என மெனு தயாராக இருக்க, ஓவியன் ஒரு வெட்டு வெட்டினான். வெளியே புல்லட் சத்தம் கேட்டதும்..
“ஆத்தி எம்டன் வராரு போலவே.. நான் எஸ்கேப்.. “ பின் வாசல் வழியாக ஓடிவிட்டான் ஓவியன். ஏனோ சிறு வயது முதல் தன் தாய் மாமனை கண்டால் பயம்.. அவர் இல்லாத நேரம் வந்து தன் அத்தையை பார்த்து விட்டு ஓடி விடுவான்.
அவர் உள்ளே வந்து கொண்டிருந்தார்,
 தேவ் “அம்மா அத்தை வீட்டிற்கு கொஞ்சம் மீன் குழம்பு குடுங்க நான் சாப்பிட்டு அவனுக்கு எடுத்துட்டு போறேனு.. பாவம் நல்லா சாப்பிட வந்தான்”
“சரி கண்ணு.. நீ நல்லா சாப்பிடு பா” என வாஞ்சையுடன் தேவின் தலை கோதினார்.
ராமசாமி வந்து டைநிங் டேபிலில் அமர்ந்தார். மல்லிகை மணமும் அவர் சட்டையில் இருந்த குங்குமம் கறையும் கூறியது அவர் எங்கு சென்று வந்திருக்கிறார் என்று. அதை கண்ட தேவின் முகம் கோபத்தில் மேலும் கருத்தது. அவன் அன்னையை பார்க்க, அவரோ தன் மகனையே பார்த்து கொண்டிருந்தார். அவர் முகத்தில் வருத்தத்தின் சாயல் கொஞ்சமும் இல்லை. அது சரி முதல் முறை நடந்தால் அவருக்கு கோபமோ இல்லை வருத்தமோ வரும்.. இது 20 வருடங்களாக தொடர் கதை என்பதால் அவர் கண்டு கொள்ள வில்லை. தேவ் ஒற்றை பிள்ளையாய் நின்றதற்கு இதுவும் ஒரு காரணம்.
இதற்கு மேல் அங்கு அமர்ந்திருக்க முடியாமல் எழுந்து சென்று விட்டான்.
சகுந்தலா தன் கணவனுக்கு பரிமாற வந்தார். அதை தடுத்தவர், “நான் சாப்பிட்டேன்.. உன் பிள்ளைக்கு என்ன அவ்வளவு கோவம் வருது.. நான் என்ன ஊரில் உலகத்தில் நடக்காததையா செய்றேன் .. ரொம்ப சிலிர்த்துகிட்டு போறான். சொத்துல ஒரு பைசா தர மாட்டேன்.. “ இன்னம் என்னவோ போதையில் உளறி கொண்டிருந்தார். அதை யாரும் கண்டு கொள்ள வில்லை. 
தனது அறைக்கு வந்த தேவின் உள்ளம் கொதித்தது.. தன் அம்மாவிற்காக மிகவும் வருந்தினான். அவர் ஏதும் சாப்பிட்டுருக்க மாட்டார் என தெரியும்.. அதனால் இவன் அடுப்படி சென்றதும் வீட்டு வேலை பார்க்கும் ராக்கம்மாளிடம் சென்று,
” ராக்கு கொஞ்சம் சாப்பாடு.. “ தேவ் முடிக்கும் முன்
“இந்தாங்க சின்ன தம்பி.. அம்மா சாப்பிடாமல் அறைக்கு போவதை பார்த்தேன்.. எப்படியும் நீங்க வருவீங்க தெரியும் முன்னாடியே எடுத்து வச்சிட்டேன்”
“நன்றி ராக்கு”
தன் தாய் அறைக்கு சென்ற தேவ், அவர் மறுத்தாலும் கெஞ்சி உணவை ஊட்டி விட்டு வந்தான். ராமசாமி உணவு மேஜையில் போதையில் உளறி கொண்டிருந்தார். தேவ் அவரை திரும்பியும் பார்க்காது சென்று விட்டான்.
******************************************************************** 
மினி தன் தம்பிக்கு குழி பணியாரம் செய்து கொண்டிருந்தாள். கதிருக்கு மிகவும் பிடித்த திண்பண்டம் இது தான். 
கதிர், “அக்கா அக்கா.. “ என்று கத்தி கொண்டு வந்தான்.
“என்ன கதிர்? அடுப்படியில் இருக்கேன் வா”
கதிர் மிகவும் மகிழ்ச்சியுடன், “அக்கா இங்க பாரு… “ என ஒரு கவரை காட்டினான்.
“என்னடா அது?”
“நீயே பிரிச்சு பாரு”
“இரு வரேன்”
தன் கைகளை சுத்த படுத்தி கொண்டு அந்த கவரை பிரித்தாள்.
அதில் பாரதிதாசன் பல்கலை கழகத்தின் தொலைதூர கல்விக்கான விண்ணப்ப படிவம் இருந்தது.
“டேய் கதிர் எப்படி டா? இதுக்கு எவ்வளவு ஆச்சு?”
“ 500 ரூவாய் கா.. வேலை பார்க்கிற மெகாநிக் கடையில் சம்பளம் குடுத்தாங்க, அதில் கடையில் தெரிஞ்ச பையன் கிட்ட சொல்லி வாங்கிட்டு வந்தேன் “
“உன் காலேஜ் படிப்புக்காக பேங்கில் போட சொன்னாத அதில் அப்பிளிகேஷன் வாங்கிட்டியா?”
“அக்கா உனக்கு படிக்க ஆசை இருக்குநு தெரியும் அதான்.. இது செலவு கம்மி தான் கா… இன்னம் எக்ஸாம் பீஸ் கட்டணும் அப்புறம் புக் வாங்கநும்.. வருஷத்திற்கு 6000 மேல செலவு ஆகாது.. என் அக்கவுன்ட்டில் 12000 இருக்கு கா போதும்.. ”
“வேண்டாம் கதிரு”
“அக்கா நான் காலேஜ் சேர இன்னம் 2 வருஷம் மேல் இருக்கு.. அதுக்குள்ள நாம ரெண்டு பேரும் சேர்ந்து வேலை பார்த்து பணம் சேர்த்திடலாம் கா..” “அது “
“ப்ளீஸ் கா வேண்டாம் சொல்லாதே.. “
“சரி டா உனக்காக பி.காம் படிக்கிறேன் சரியா ?”
“ சரி கா.. “
அப்போது உள்ளே வந்த ரகு தன் பிள்ளைகள் பேசியதை கேட்டதும் குற்ற உணர்ச்சியுடன்   “கதிர்.. “
அவன் பதில் பேசாமல் திருப்பி கொண்டான்.
மினி “என்ன பா ?”
“நீயும் நதியா கூட காலேஜ் சேருமா நான் பார்த்துக்கிறேன் “
“இல்லை பா காலேஜ் போக இஷ்டம் இல்லை.. கதிருக்காக தான் படிக்க போறேன்.. நீங்க வருத்த படாதிங்க.. “
கதிர், “ அக்கா இவர் ஒரு படத்துல ஆட்டோ ஓட்டுற வடிவேலு மாதிரி மாலை 6 மணிக்கு முன், 6 மணிக்கு பின் 2 பேர் மாதிரி நடந்துப்பார்.  இவர் பேச்சை எல்லாம் கேட்டு முடிவு எடுக்காத.. “
“கதிரு…. “
ரகு எதுவும் பேசவில்லை, மெல்ல வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.  இந்த குடியை விட வேண்டும் என்று மனது நினைத்தாலும் முடியவில்லை அவரால். 
************************************************************************************ 
நதியா மினி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தாள். அவளை பார்த்த ஓவியன், 
“ஓய் கத்திரிக்காய் எங்கடி ஊர் சுத்துற ?”
“டேய் நெட்டை கொக்கு.. நான் எங்க போனால் உனக்கு என்னடா.. “
“அடிங்க.. வாய் கொழுப்பு கூடி போச்சுடி ?? “
“டேய் சும்மா சும்மா டி சொன்ன அவ்வளவு தான்டா “
“அப்படி தான் சொல்லுவேன் .. காலேஜ் பீஸ் எல்லாம் கட்டி அட்மிஷன் போட்டாச்சு போல”
“ம்ம் ஆமாம்”
“ஏன் டி என் கிட்ட நீ சொல்லலை “
“ நான் ஏன் சொல்லனும்”
“திமிர் டி உனக்கு”
“போடா” என கூறிவிட்டு ஓடிவிட்டாள். பின்ன, நின்றால் கொட்டுவானே.
அவள் ஓடுவதை பார்த்து கொண்டே நின்றவன் பின் தன் வீட்டிற்கு சென்றான்
**************************************************************************************** 
ஓவியன் வீட்டிற்கருகே தேவ் இருந்தான். இவன் வந்ததும் இவனை முறைத்தான். 
“தேவ் என்ன ஏன் இப்படி பார்க்கிற?”
“ஏன் டா அவ பின்னாடியே போய் தொல்லை பண்ணிட்டு வர?”
“சும்மா டா.. நீ சீரியஸ் ஆகாத”
“ம்ம்ம் இந்தா மீன் குழம்பு உனக்காக தான் எடுத்துட்டு வந்தேன் “
“சூப்பர் டா.. சரியா சாப்பிடலைனு வருத்தத்தில் இருந்தேன்
ஆமாம் நீ ஏன் டா டல்லா இருக்க”
தேவ் வீட்டில் நடந்த விஷயத்தை கூறினான்.
“ம்ம்ம்ம் மாமா ஏன் இப்படி பண்ணுறார். அவரை திருத்த முடியாது”
“ம்ம்ம்ம் ரொம்ப சங்கடமா இருக்குடா அம்மாவை பார்க்க.. என் கூட வர சொன்ன முடியாதுனு மறுக்குறாங்க..”
“நீ முடிஞ்சளவு சீக்கிரம் இங்க வர பாருடா.. அது தான் நல்லது .. உங்க அப்பாவையும் கொஞ்சம் அடக்கி வை.. நீ பேசாமல் இருக்கிறதால் ஒரு யூசும் இல்லை.”
“ம்ம்ம்ம் சரி டா”
அப்போது வெளியே வந்த ஓவியன் தாய் சித்ரா , “ஏய்யா ஏன் அங்கயே நிக்கற.. உள்ளே வா”
“சும்மா பேசி கிட்டு இருக்கேன் அத்தை.. “
“சாப்பிட்டு போகலாம் வா”
“சாப்பிட்டாச்சு அத்தை அம்மா மீன் குழம்பு குடுத்து விட்டாங்க.. “
“காபியாவது குடிப்பா.. இரு போட்டுட்டு வரேன்”
காபி குடித்து விட்டு மாலை வரை ஓவியநுடன் அரட்டை அடித்து விட்டு தன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தான். அவ்வழியே குடி போதையில் தள்ளாடிய படியே ரகு சென்று கொண்டிருந்தார். எதிரே வந்து கொண்டிருந்த டவுன் பஸ்ஸை பார்க்காது அவர் ஏதோ பேசியபடி நடந்து கொண்டிருந்தார். நொடியில் சுதாரித்த தேவ் விரைந்து சென்று அவரை தன் பக்கம் இழுத்து கொண்டான். பஸ் டிரைவர் கண்டபடி திட்டி கொண்டே சென்றார். பிறகு அவர் வீடிருக்கும் தெரு வரை கூட்டி சென்றான். 
மிநி வீட்டின் வாசலில் தன் தம்பி மற்றும் தந்தையின் வருகைக்காக காத்து கொண்டு இருந்தாள். இன்று கதிர் வர நேரமாகும் என்று கூறி இருந்தான். தன் தந்தையை நினைத்து பயந்து கொண்டிருந்தாள்.
ரகு ஏதோ உளறி கொண்டே வந்தார். கூடவே வந்த தேவை பார்த்ததும் மினி ஒரு நொடி மகிழ்ச்சியை காட்டி பிறகு பார்வையை தாழ்த்தி கொண்டாள்.
தேவ் தலை முதல் கால் வரை ஒரு ஆராய்ச்சி பார்வை பார்த்தவன், பின் திரும்பி தன் வீட்டிற்கு சென்றான். செல்லும் வழி எல்லாம் அவனையும் மீறி சில விஷயங்கள் நியாபகம் வர, புன்னகை புரிந்தவாரே சென்றான்.
மினி முகத்தில் எதுவும் காட்டி கொள்ளவில்லை தன் தந்தையை கை பிடித்து வீட்டிற்குள் சென்றாள்.
— மின்னுவாள்..

Advertisement