Advertisement

  மினி, நதியா இருவரும் இன்று திருச்சி சென்றிருந்தார்கள். விவசாயிகள் பலர் மிளகாய் , கத்திரி , தக்காளி போன்ற நாற்றுகள் அதிக அளவில் கேட்பதால் தங்கள் நர்ஸரிக்காக சிறு க்ரோ பேக்ஸ், செம்மண் போன்றவை வாங்க இருவரும் சென்றார்கள்.
ஓவியன் அவர்கள் செல்ல வேண்டிய கடைக்கு முன்னமே சென்று விசாரித்து வைத்திருந்தான். இவர்கள் சென்று அட்வான்ஸ்  கொடுத்ததும், அடுத்த வாரம் மெட்டீரியல் அனுப்புவதாய் ஒத்துக்கொண்டார் கடைக்காரர்.
வேலை முடிந்ததும் தேவிற்கு அழைத்தான் ஓவியன்.. நைட் ஷிப்ட் முடிந்து நன்றாக தூங்கி கொண்டு இருந்தான் தேவ். போன் அடித்ததும் விழித்தவன், 10 நிமிடத்தில் வருவதாய் சொல்லி விட்டு கிளம்பினன். 
தேவ் தன் காரில் மூவரையும் எற்றி கொண்டு அருகில் இருக்கும் மாலிற்கு சென்றார்கள்.
“டேய் ஓவி.. சாயங்காலம் 4 மணிக்கு பார்க்கிங் வந்திடு.. இநி நீ யாரோ.. நான் யாரோ.. பாய்..” 
மினியை ஓடாத ஒரு படத்திற்கு கூட்டி சென்று 3 மணி நேரம் அவள் மடியில் படுத்து நன்றாக தூங்கி விட்டான்  தேவ்.. மனதில் தேவை நன்றாக வறுத்தெடுத்தாள் மினி.. எப்பவாவது தான் சந்திக்க நேரம் கிடைக்கிறது அப்போதும் இப்படி தூங்கி வழியும் தேவை நன்றாக சாத்த வேண்டும் என நினைத்தாள்
ஓவியன் கடை கடையாய் கூட்டி சென்று ஷாப்பிங் செய்தான். ஒரு மணி நேரத்தில் கலைத்து போன நதியா..
“ஏய் ஓவி.. என்னால் முடியலை எவ்வளவு ட்ரஸ் தான் வாங்குவ நீ.. பொண்ணு நானே இவ்வளவு வாங்கினது இல்லை.. “
“காலங்காலமாக பொண்ணுங்க இப்படி தானே பசங்களை ஷாப்பிங் என்ற பேரில் அலைய விடுறீங்க.. நான் ஒரு நாள் பண்றதே ஓவரா தெரியுதா?”
நதியா பாவமாய் பார்க்க.. 
“சாரி நதிக்குட்டி ப்ளீஸ்.. உனக்கு ஒரே ஒரு புடவை வாங்கிட்டு போகலாம் வா”
இருவரும் ஷாப்பிங் முடிந்து மூவரையும் தேவ் பஸ் ஏற்றும் வரை பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் உடனடியாக ரகுவிடம் பேச வேண்டும் என்று சென்றார்
************************************************* 
நிஷா வழக்கம் போல் காலை 8 மணிக்கு மருத்துவமனை வந்தாள். இன்றிலிருந்து தேவிற்கும் அவளுக்கும் டே ஷிப்ட். 
பொதுவாக கலகலப்பான பெண் தான் நிஷா கடந்த ஒரு வருடமாய் யாரிடமும் பேசாமல் தன் கூட்டுக்குள் ஒடுங்கி கொண்டாள்.. அது தேவிற்கும் தெரிந்து தான் இருந்தது.. ஆனால் தவறு அவன் மேல் இல்லாததால் அப்படியே விட்டுவிட்டான்
என்ன தான் கெத்தாக வெளியில் திரிந்தாலும் உள்ளுக்குள் தனிமையும் சோர்வும் அவளை ஆட்கொண்டது.. அந்த கடுப்பிலே அவள் வர, அங்கு தேவ் மினியுடன் கடலை வறுத்து கொண்டிருந்தான்.. அதை பார்த்த நிஷாவின் கோபம் இன்னும் எகிரியது.. 
என்ன செய்வது என்று யோசித்தவள், நேராக ரெஸ்ட் ரூமிற்கு சென்றாள் கையில் ஒரு பேப்பரை எடுத்து, இரவு நேரத்தில் பாலியல் ரீதியாக தொல்லை தருகிறார் என்று  ஒரு செவிழியர் எழுதுவது போல்  தேவ் மீது புகாரை எழுதியவள் வேகமாக கம்ப்ளைன்ட் பாக்ஸ் நோக்கி சென்றாள்.
காலை நேரத்தில் அந்த ரூமில் யாரும் இல்லாததால் அந்த பேப்பரை பாக்ஸ் உள்ளே போடும் போது ஒரு கை அவளது கையை பற்றியது, திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள் நிஷா.. அங்கு ஹரிஷ் அவளை முறைத்து கொண்டு நின்றான்
“இங்க என்ன பண்றீங்க மிஸ்.நிஷா?”
“அது சும்மா வந்தேன்”
“கையில் என்ன பேப்பர்?”
“அது ஒன்னும் இல்லை.. “
“இங்க கொடுங்க…. “
“அது ஒன்னும் இல்லை.. நான் போறேன்” என நடக்க ஆரம்பித்தாள். அவள் கையை பிடித்து எழுத்தவன், அந்த பேப்பரை பிடுங்கி கிழித்து குப்பையில் போட்டான்.
நிஷா அவனை முறைத்து கொண்டே சென்று விட்டாள்
ஹரீஷிற்கு கோவமாக வந்தது.. இவள் ஏன் இப்படி இருக்கிறாள் என்று.. 
நைட் ஒரு ஆப்ரேஷன் முடியவே இரவு 1 மணி ஆனது.. அதனால் வீட்டிற்கு செல்லாமல் இங்கேயே படுத்து விட்டான் அவன்.. காலை வீட்டிற்கு கிளம்பும் போது தான் நிஷாவை பார்த்தான். இன்று அவளிடம் பேச வேண்டும் என்ற முடிவுடன் கீழே வந்தான். 
நிஷா செய்ய துணிந்த காரியம் அவனை ரொம்ப வருத்தியது.. மீண்டும் தன் அறைக்கு  வந்து அமர்ந்தவன்  பழகிய நிஷா இவள் இல்லை என யோசித்தான். மெல்ல அவன் நியாபகம் பாலிய பருவத்திற்கு சென்றது… 
நிஷாவின் தந்தையும் ஹரீஷின் தந்தையும் பக்கத்து வீட்டுக்காரர்கள்.. பெரியவர்கள் அவ்வளவாக பழகவில்லை என்றாலும், நிஷாவும் ஹரீஷும் சேர்ந்தே விளையாடினர்கள். எப்போதும் அருகில் உள்ள பார்க்கில் தனியாக விளையாடும் நிஷாவை பார்க்க பாவமாக இருக்கும் ஹரீஷிற்கு.. அப்போது அவன் வயது 9.. நிஷாவிற்கு 5 இருக்கும்.. 
ஒருவாரம் கவனித்தவன் , இன்று அந்த குட்டி பெண்ணிடம் பேச வேண்டும் என நினைத்தான். 
இன்றும் அவள் தனியாக விளையாட ஹரீஷ் “ பாப்பா.. உன் பேர் என்ன? ஏன் தனியா பார்க் வர ? “
“என் பேரு நிஷா.. நான் தனியா வரலை.. என்ன பார்த்துக்குற ஆயா தோ அங்க இருக்காங்க “ என காண்பித்தாள். அவள் காண்பித்த திசையில் ஒரு நடுத்தர வயது பெண்மணி நன்றாக பார்க் பெஞ்சில் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.
“ உங்க அம்மா எங்க பாப்பா?”
“ அம்மா டாக்டர் வேலைக்கு போயிருக்காங்க “ என்று அப்பாவியாய் பதில் சொல்லும் நிஷாவை ரொம்ப பிடித்தது ஹரீஷிற்கு
“சரி.. இனி என் கூட விளையாட வரீயா??”
“ம்ம்ம்ம்ம் வரேன்.. அப்போ என்ன ஊஞ்சல் ஆட்டி விடுறயா ?”
“ ஓகே.. “
அன்று முதல் இருவரும் ஒன்றாக விளையாடுவார்கள்.. கள்ளம் கபடம் இல்லாமல் பழகும் அவனது உயிர் தோழியானள்.. இரு வருடம் கழித்து, ஹரீஷின் தந்தை தன் சொந்த ஊரான திருச்சிக்கு குடும்பத்துடன் வந்து விட ஹரீஷ் நிஷாவின் நட்பு துண்டானது.. 
நிஷா காலப்போக்கில் ஹரீஷை மறந்து விட, ஹரீஷ் மனதில் நிஷா ஆழமாக பதிந்தாள். நாட்கள் ஆண்டுகளாக உருண்டோட, நிஷாவை சமூக வளைதளத்தில் கண்டு பிடித்தான் ஹரீஷ்.. அவள் எங்கே இருக்கிறாள், என்ன படிக்கிறாள் எல்லாம் விரல் நுணியில் வைத்திருந்தான்.. சென்ற வருடம் திருமணம் பற்றி பேச்சு எடுத்ததும், முதலில் வந்தது நிஷாவின் முகம் தான். தந்தையிடம் சில நாட்கள் அவகாசம் கேட்டவன் நேரே நிஷாவின் வீட்டிற்கு சென்றான்.
நிஷாவின் தந்தையிடம் முறையாக அறிமுக படுத்தி கொண்டு நிஷாவை மணந்து கொள்வதாய் கூற, அவர் நிஷாவின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றினார். அதை கேட்ட ஹரீஷின் மனம் வருந்தினாலும் தான் பார்த்து கொள்வதாய் கூறி நிஷாவை தன் ஹாஸ்பிட்டலுக்கு பயிற்சசிக்கு அவள் தந்தை மூலம் வர செய்தான். 
நிஷாவிற்கு தேவ் அங்கே சேர்வது முன்பே தெரிந்திருக்க எந்த தகராறும் பண்ணாது ஒப்புக்கொண்டாள்.
கதவு தட்டிய ஒலியில் நிஜத்திற்கு வந்தவன், தன் முகத்தை இயல்பாக வைத்துக்கொண்டு
“எஸ் கம் இன்”
நிஷா தன் முன் வந்து நின்றதும் சடுதியில் அவன் முகம் மீண்டும் இறுகியது
“என்ன விஷயம் நிஷா?”
“நான் டிஸ்கண்டிநியூ பண்ணிக்கிறேன்.. நான் எங்க வீட்டுக்கு போகநும் “
“வாட்???? “ என அதிர்ந்தான்
“ஆமாம்… அதுக்கு என்ன பார்மாலிட்டீஸ் இந்த ஹாஸ்பிட்டலில்?”
“இடியட் மாதிரி முடிவு எடுக்காத நிஷா? அர் யூ மாட்??”
“ஆமாம் நான் இடியட் தான்.. ஐ கான்ட் டேக் எவரித்திங் இன் ஹெட்.. “ என அழ ஆரம்பித்தாள்
அவள் கண்ணில் கண்ணீரை பார்த்ததும் ஹரீஷின் கோவம் தூரம் ஓடியது.. எழுந்து வந்து அவளருகில் நின்று “ப்ளீஸ் காம் டவுன்.. என்ன பிரச்சனை சொல்லுங்க.. ஐ வில் ட்ரை டு சால்வ்.. “
அவள் மௌனமாக இருக்க,
“என்ன ஆச்சு ?”
“நான் தோத்துகிட்டே வரேன் அது எனக்கு பிடிக்கல.. என்னால் இங்க இருக்க முடியும்னு தோணலை… நான் போறேன்.. “
“எனக்கு புரியலை நிஷா” 
தேவ் பற்றி முழுதும் கூறியவள் “ அவன் என்ன ஒரு பொருட்டாவே மதிக்கலை.. நான் அவன் கிட்ட தோத்துட்டேன்”
“நீங்க தோக்கலை நிஷா.. நீங்க ஜெயிக்க இன்னும் வாய்ப்பு இருக்கு.. “
“என்ன சொல்றீங்க?? “
“நீங்க நிஜமா தேவை லவ் பண்ணலை ஏதோ ஒரு அட்ராக்ஷ்ன் அவ்வளவு தான்.. இப்ப அவன் மேல இருப்பது பழி வாங்கும் எண்ணம் தான் உங்களுக்கு..  தேவ் மேல தப்பு இருக்கோ இல்லையோ.. உன்னை நிராகரிச்சவன் மேல கோவம் வருவது நியாயம் தான்.. ஆனால் அவனை எப்படி பழி வாங்க போறோம் அப்படிங்கறது தான் புத்திசாலி தனம்.. ஒன்று எப்படி அவனை கஷ்டப்பட வைக்கலாம்னு யோசிச்சு தன் வாழ்க்கையை கெடுத்துக்கிறது ரெண்டாவது அவங்க முன்னாடி நம்மள விரும்புறவங்களை கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழ்ந்து காட்டுறது.. நீங்க முதலாவதை பண்றீங்க.. நான் ரெண்டாவதை பண்ண சொல்றேன்”
“ம்ம்ம் சரி.. முயற்சி பண்றேன்.. “
“தட்ஸ் குட் கேர்ள்”
“தாங்க் யூ.. ரொம்ப ரிலாக்ஸ்டா இருக்கு இப்ப..”
“ஓகே.. ஆமாம் உங்கள்ளுக்கு ஹரீஷினு ப்ரண்டு யாராவது இருக்காங்களா?”
“ம்ம்ம் இருக்காங்களே.. என் சின்ன வயசு ப்ரண்டு.. பழகின கொஞ்ச நாளில் காணாம போயிட்டான்.. அவன் இப்ப எங்க இருக்கானு தெரியும்”
“தெரியுமா? எங்க இருக்கான்” என்று தவிப்புடன் கேட்டான்
“ம்ம்ம்ம்ம்ம் என் முன்னாடி பேந்த பேந்த முழிச்சுகிட்டு இருக்கான்”
“ஏய்ய்ய்ய்… “
“ஹஹஹஹா.. உங்களை பார்த்த முதல் நாளே கண்டு பிடிச்சிட்டேன்… அப்புறம் எங்க அம்மாவும் சொன்னாங்க.. அதை வச்சி கன்பார்ம் பண்ணிட்டேன்”
“அப்புறம் ஏன் தெரியாத மாதிரி நடந்துகிட்ட”
“அது சும்மா தான்..”
“சரி வெளிய போய் சாப்பிட்டு வரலாமா ரொம்ப பசிக்குது”
“வாங்க டாக்டர் சார்”
“ஏய் வாலு… “
இருவரின் இறுக்கம் தளர்ந்து மகிழ்சியாக சென்றார்கள்…
************************ 
ரகு அங்கு வீட்டில் குதித்து கொண்டிருந்தார்.. மினி வந்ததும் நன்றாக விசாரிக்க வேண்டும்.. என் பொண்ணை பார்த்து என்ன பேச்சு பேசுறான்.. 
ஆநால் உண்மை அறிந்த கதிரோ சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்தான். தன் தமக்கைக்கு எதுவும் கெட்டது நடக்க கூடாது என்று வேண்டுவதை தவிர வேறு வழி தெரியவில்லை அவனுக்கு..
— மின்னுவாள்..

Advertisement