Advertisement

கதிர் பன்னிரண்டாம் வகுப்பில் இருந்ததால் நிறைய சிறப்பு வகுப்புகள் இருந்தது, இன்னும் 5 மாதத்தில் பரிட்சை.. கதிர் இப்பொழுதே தயாராக இருந்தான், மெக்காநிக்கல் எஞ்சிநியரிங் படிக்க வேண்டும் என்ற தன் ஆசையை நிறைவேற்றி கொள்ள அவன் நன்றாக உழைத்தான்.
ரகு இப்பொழுது தன் முழு கவனத்தையும் தோட்டத்தில் செலுத்தினார்.. அவ்வப்போது வீட்டு வேலையும் பார்த்து கொள்வதால் மினிக்கு படிக்க நிறைய நேரம் கிடைத்தது.. கரஸில் படித்தாலும், 70 சகவீதம் மேல் மதிப்பெண்கள் அனைத்து பரிச்சையிலும் பெற்றாள்
மினி தன் சிறிய தோட்டத்தில் நிறைய மரபு வழி செடிகள் மற்றும் காய்கள் வளர்த்து வந்தாள். ரகுவும் கதிரும் மினிக்கு உதவி செய்தார்கள்.  அதில் வளரும் காய்களை சிறு கடை போன்று வீட்டின் முன் விற்று வந்தார் ரகு. நதியா வார இறுதியில் மினியுடன் சேர்ந்து வேலை புரிவாள். இன்று அவர்களுக்கு புதிதாய் ஒரு ஆர்டர் கிடைத்தது, அவர்கள் பக்கத்து ஊரில் இருந்து வந்த விவசாயி ஒருவர்,  200 மிளகாய் நாற்று வேண்டும் என்று கேட்டு கொண்டார். 
நர்சரி அமைக்கும் தன் கனவிற்கு முதல் படிக்கட்டாய் நினைத்து, அதற்கான மண் கலவையை தயார் செய்தாள் மினி. அடுத்து அதை பற்றி குறிப்பும் ஒரு சிறிய காணொளியாக செய்தாள்.
இன்று விதை போடுவதற்கு நதியாவிற்காக காத்திருந்தாள். மாலை ஆகியும் அவள் வராமல் இருக்க, மினி அவள் வீட்ட்டிற்கு சென்றாள். நதியாவின் அம்மா வெளியே அமர்ந்திருக்க அவரிடம், 
“அத்தை நதியா எங்க, மதியம் வீட்டிற்கு வரேன்னு சொன்னா.. “
“அவளுக்கு என்ன ஆச்சு தெரியலமா.. காலையிலிருந்து படுத்தே இருக்கா.. கேட்டால் தலை வலினு சொல்றா.. சாப்பிட கூட இல்லை.. “
“நான் போய் பார்க்கிறேன் அத்தை.. “
நதியா தலை முதல் கால் வரை இழுத்து போர்த்தி கொண்டு படுத்திருந்தாள். 
மினி “நதி.. ஏய் நதி“
மெல்ல கண் திறந்து பார்த்த நதியின் முகம் அழுதழுது வீங்கியிருந்தது..
“ஏன் டி .. என்ன ஆச்சு?”
“ஒன்னும் இல்லை.. தலை வலிக்குதுடி..”
“பொய் சொல்லாத.. முகத்தை கழுவிட்டு வா.. சாப்பிடலாம்“ நதியா சாப்பிட்டு வந்ததும் இருவரும் மினி வீட்டிற்கு சென்று விதை விதைத்தார்கள்.
நதியா சோர்வாகவே இருக்க மினி “என்ன ஆச்சு உனக்கு ?”
“எனக்கே என்னனு தெரியலை டி.. குழப்பமா இருக்கு”
“என்ன குழப்பம்?”
“ஓவியன் கொஞ்ச நாளா என்ன தவிர்க்குற மாதிரி தெரியுது.. எரிஞ்சு விழுறான் என் மேல் மட்டும்.. அந்த நிவேதா கூட மட்டும் மணி கணக்கா போன் பேசுறான்… எனக்கு கடுப்பா இருக்கு..”
“ஹாஹாஹா.. நதி பேபி.. எனக்கு புரிஞ்சு போச்சு.. “
“உனக்கு என்ன டி புரிஞ்சது?”
“நீ ஓவி அண்ணாவை விரும்பிரியா ?”
“ச்சி.. அப்படிலாம் இல்லை…”
“வாய் தான் அப்படி சொல்லுது.. கண் வேற கதை சொல்லுதே.. “
“போடி.. நான் வீட்டுக்கு போறேன்” ஓடி விட்டாள்.
மினி இன்று தேவிடம் இதை பற்றி பேச வேண்டும் என்று நினைத்தாள். 
************************************************ 
நிஷாவிற்கு தேவ் மீது வன்மம் அதிகரித்து கொண்டே போனது.. கடந்த ஒரு வருடமாக தன் தந்தை தன்னிடம் பேசவில்லை, தாய் மட்டும் எப்போதாவது பேசுவார், இதற்கெல்லாம் காரணம் தன் முட்டாள் தனம் என்று எண்ணாமல் தேவ் மற்றும் மினியின் பேரில் குற்றம் சாற்றி வந்தாள்.  இப்போது அவளுக்கு தேவ் தேவையில்லை ஆனால் அவன் காதல் பிரிந்து அவன் தவிக்க வேண்டும், அவன் கஷ்ட பட வேண்டும் என்பதே அவள் நினைப்பாக இருந்தது.. அதற்கான சந்தரப்பம் எதிர் பார்த்து காத்திருந்தாள்.
இன்று நைட் ஷிப்ட் வந்த நிஷாவும் தேவும் எதுவும் பேசி கொள்ள வில்லை.. அவரவர் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள் இரவு நேரத்தில் அவசர சிகிச்சைக்காக வருவோர் மிகவும் குறைவு … பெரும்பாலும் தேவ் மினியுடன் மொக்கை போடுவான் அல்லது புத்தகம் படிப்பான்..  நிஷா தூங்கி விடுவாள். இன்றும் அதே நடந்தது..  அப்போது அவர்கள் அறை தட்டப்பட்டு செவிழியர் ஒருவர் உள்ளே வந்து, 
“டாக்டர், நம்ம சீஃப் டாக்டர் சன் டாக்டர்.ஹரீஷ் உங்க ரெண்டு பேரையும் மீட் பண்ண வெயிட் பண்றார் வரீங்களா ?”
அப்போது தான் கண் விழித்த நிஷா தூக்கத்த்லே செவிழியர் பின் செல்ல, தேவ் அவர்களை தொடர்ந்தான்.
ஹரிஷ் ஒரு பிரபலமான கார்டியாலிஜிஸ்ட்.. ஆளும் பார்க்க 6 அடி உயரத்தில் மாநிறத்தில் ஹீரோ போன்று இருப்பான். இவர்கள் அவன் அறைக்கு வந்ததும்.
“ஹலோ தேவ் & நிஷா … ஒரு கான்பிரன்ஸ் விஷ்யமா லண்டன் போயிட்டு னைட் தான் திரும்பி வந்தேன்.. மார்நிங் உங்க ப்ரண்ட்ஸ மீட் பண்ணிட்டேன்.. ஜஸ்ட் வான்டட் டூ மீட் யூ காய்ஸ்.. இங்க எல்லாம் ஓகே வா.. ஆர் யூ காய்ஸ் கம்பர்ட்டபல் ?”
தேவ் “ வீ ஆர் குட் டாக்டர்… தேங்க்ஸ் பார் ஆஸ்கிங்”
“என்ன நிஷா நீங்க ஏதும் சொல்ல மாட்டீங்களா ?”
அப்போது தான் நிமிர்ந்து ஹரீஷை பார்த்தாள்.. பார்த்து கொண்டே இருந்தாலே தவிர எதுவும் பேசவில்லை.. சிறிது நேரம் அவளை ரசனையோடு பார்த்தவன் பிறகு,பின் சுதாரித்து,
“ஓகே.. உங்களுக்கு ஏதும் உதவி தேவைப்பட்டால் கண்டிப்பா எனக்கு சொல்லுங்க… என்னால் முடிஞ்சத செய்றேன்.. யூ காய்ஸ் கேரி ஆன்”
தேவ் “தேங்க்ஸ் டாக்டர்.. “ என கூறிவிட்டு நகர, நிஷா தேவ் பின்ன சென்றாள். சிறிது நேரம் அவள் சென்ற திசையை பார்த்து கொண்டு நின்றவன் பிறகு உற்சாகமாய் தன் வீட்டிற்கு கிளம்பினான்.
************************************ 
நாட்கள் அதன் போக்கில் செல்ல நதியாவிற்கு சமஸ்ட்டர் பரிட்சை ஆரம்பித்தது, அதலால் அவள் இரு வாரம் அவள் தன் சொந்த ஊருக்கு செல்ல முடியவில்லை.. நன்றாக படிப்பவள் இல்லை என்றாலும் இது நாள் வரை பரிட்சை எதிலும் பெயில் ஆகாமல் இருப்பாள். ஆனால் இப்பொழுது எந்த பாடமும் சரி வர எழுதாதது போல் அவளுக்கு எண்ணம் இருந்தது, இன்று கடைசி பரிட்சை முடித்து விட்டு வெளியே வர, அவளுக்காக காத்திருந்தான் ஓவியன்.
அவனை பார்த்த ஒரு வினடி சந்தோஷ பட்டவள், பிறகு முறுக்கி கொண்டு சென்றாள். அவள் பின்ன வந்த ஓவியை கண்டு கொள்ள வில்லை. 
ஓவியன் “ஏய் குள்ளச்சி.. உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன் நீ பாட்டுக்கு போற ?”
“ஓ அது எப்படி எனக்கு தெரியும் ? ஒரு வேளை ஊருக்கு வந்தா என்ன திட்டுறது பத்தாதுனு காலேஜ் வந்து திட்ட வந்தீங்களா ?”
“ஏய்.. ஏன் அப்படி பேசுற ?”
“நான் எப்படியும் பேசலை..  நான் போறேன் வழியை விடுங்க “
“என் கூட என் பைக்கில் வாடி.. போகலாம்”
“நான் உன் கூட வர மாட்டேன் டா.. மணி கணக்கா ஒருத்தி கிட்ட கடலை போட்டியே.. அவளை கூட்டிட்டு போறது தான?”
“நான் யார் கிட்டையும் கடலை போடல…. உன் கிட்ட கொஞ்சம் பேசனும் ப்ளீஸ் வாடி குள்ளச்சி.. “
“போடா.. நெட்ட மரம்”.. அவளை கெஞ்சி கொஞ்சி அருகில் உள்ள கல்லணை கூட்டி சென்றான்
************************ 
ஷிப்ட் முடிந்து காலையில் மினியுடன் பேசி கொண்டிருந்தான் தேவ்.
மினி “எப்போ ஊருக்கு வரீங்க?”
“தெரியலை மினு.. ரொம்ப டயர்டா இருக்குமா.. சண்டே ஒரு நாள் தான் லீவ் அடுத்த வாரம் டே சிப்ட் வேற போகனும்”
“ம்ம்ம் சரி “ அவள் குறள் உள்ளே சென்றது.. 
“மினு அடுத்த வாரம் கண்டிப்பா வருவேன்.. நீ உம்முனு முகத்தை வைக்காதே.. “
“ம்ம் சரி.. உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்.. நதியா பற்றி…”
“அவ ஓவியனை லவ் பண்றா அது தான “
“ஆமாம் உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா ?”
“தெரியும் டீ.. அது நதியா அப்பாவிற்கும் தெரிஞ்சிருக்கு.. ஓவியனை கூப்பிட்டு பேசி இருக்கார் ஒரு  வருஷம் முன்னவே.. அதற்காக தான் நதியாவை இவன் அவாய்ட் பண்ணி இருக்கான்”
“ஆனால் நதியா ரொம்ப பீல் பண்றா”
“எனக்கு தெரியும் டீ.. நான் அவன் கிட்ட பேசிட்டேன்.. அவன் இன்னைக்கு நதியாவை சரி பண்ணிடுவான்.. நீ கவலை படாதே.. “
“ஐஐ.. தேங்க்ஸ் மாம்ஸ்”
அவர்கள் கதை பேசி விட்டு அவரவர் வேலை பார்க்க சென்றார்கள்.. தேவ் நல்ல தூக்கத்தில் இருக்க, மினி தன் தோட்டத்திற்கு தண்ணீர் விட சென்றாள். 
***************************  
தீபக்கும் நிவேதாவும் வேலை முடிந்து கிளம்பும் போது,
“நிவி…  பக்கத்தில் இருக்கும் காபி ஷாபிற்கு போயிட்டு அப்புறம் கிளம்பலாமா, உன் கிட்ட கொஞ்சம் பேசனும்?”
நிவிக்கு தெரியும் என்றாவது ஒரு நாள் இப்படி கேட்பான் என்று.. அவளும் சரி என்று ஒப்புக்கொண்டாள்.
இருவரும் ஒரு கோல்ட் காபி ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்தார்கள்
“சொல்லு தீபக் என்ன விஷயம்?”
“நிவி.. அது வந்து.. ரொம்ப நாளா உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லனும் நினைச்சு கிட்டு இருந்தேன்.. இன்னைக்கு தான் சான்ஸ் கிடைச்சிருக்கு.. ஐ திங்.. ஐ அம் இன் லவ் வித் யூ”
அதை கேட்டதும் தன் கைப்பையை தூக்கி நன்றாக அடிக்க ஆரம்பித்தாள். அவளை தன் கைகளால் தடுத்த படி
“நிவி.. ஏன்டி அடிக்கிற.. எல்லாரும் பார்க்குறாங்க.. “
அவள் நிறுத்தவில்லை, இன்னும் நன்றாக சாத்தினாள்.. 
“ப்ளீஸ் நிவி.. நிறுத்து டி.. எல்லரும் பார்க்குறாங்க என் மானம் போகுது.. “
நன்றாக அடித்து விட்டு ஓய்ந்து  அமர்ந்தவள்,
“இதை சொல்ல உனக்கு இத்தனை நாள் தேவைப்பட்டதாடா ?”
“அது வந்து நிவிவி.. கொஞ்சம் பயமா இருந்தது.. உன் பதிலை யோசிச்சு சொல்லு “
“போடா ட்யூப் லைட்டு.. நான் போறேன்..”
“நிவி ப்ளீஸ் எதாவது சொல்லிட்டு போ.. “
“போடா.. “ தன் பையை எடுத்து கொண்டு வேகமாக சென்று விட்டாள்
குழப்பத்தில் அமர்ந்திருந்தவநின் பல்ப் தாமதமாய் எரிய, “ஓஓஓ…. நான் முன்னாடியே பிரபோஸ் பண்ணுவேன்னு எதிர்பார்த்தா போல, அதான் அப்படி சொல்லிட்டு போறா, சை.. நிவி நீ சொன்ன மாதிரி நான் ட்யூப் லைட் தான்.. இதோ வரேன்”
ஆர்டர் பண்ண காபியை இருவரும் குடிக்காமல் சென்று விட்டார்கள்.. ஆர்டரை எடுத்து வந்த சர்வர் இருவரும் காணாததால் தலையில் அடித்துகொண்டு திரும்ப எடுத்து சென்றார்.
— மின்னுவாள்..

Advertisement