Advertisement

தேவ் , தீபக் இருவரும் ரூம் எடுத்து தங்கி கொள்ள, நிவேதா லேடீஸ் ஹாஸ்டலில் சேர்ந்தாள். ஒரு வருடம் இன்டர்ன்ஷிப் செய்ய திருச்சியில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் சேர்ந்தார்கள். முதல் நாள் அங்கு உள்ள தலைமை மருத்துவரை சந்திக்க செல்ல, எதிரே என்றும் குறையாத திமிருடன் நிஷா வந்து கொண்டிருந்தாள்.
நிஷாவை முதலில் பார்த்தது நிவி தான், முதலில் அதிர்ச்சியடைந்தவள், பின் சுதாரித்து, 
“தீபக், தேவ் அங்க பாருங்க நிஷா…”
“இவ எங்க இங்க வந்தா…. “ 
அவர்கள் முன் வந்து நின்ற நிஷா,
“என்ன செல்லங்களா.. நல்லா இருக்கீங்களா? ஒரு வருஷமா ஆள் இல்லாததும் நிம்மதியா இருந்தீங்களா??”
நிவி “ ஏன் நிஷா அப்படி பேசுற?”
“நீ வாய மூடு டி துரோகி..”
தேவ் “ நிஷா.. நீ டூ மச் ஆ போற.. உன் கூட பேச எங்களுக்கு இஷ்டம் இல்ல.. நீ உன் வேலையை பாரு.. வாங்க போலாம்”
“ஏய் உங்களால் எவ்வளவு கஷ்டம் அனுபவிச்சேன் நான்.. அதெல்லாம் திருப்பி தர வேண்டாம்??? “
தேவ், “உன்னால் முடிஞ்சதை பாரு டி” என்று முறைத்து கொண்டே சென்று விட்டான்.
தீபக் மற்றும் தேவிற்கு நியுரோசர்ஜன் ஆக ஆசை, நிவேதாவிற்கு பீடியாட்ரிசியன் ஆக வேண்டும்.. 
தலைமை மருத்துவரான ரத்தின குமார் இவர்களை வரவேற்த்து, அவர்களின் ஆசையை தெரிந்து கொண்டார்.
“வெரி குட்.. முதல் 6 மாசம் எமர்ஜன்சி பிரிவிலும், சர்ஜரி பிரிவிலும் கற்று கொள்ளுங்கள், பிறகு 6 மாசம் உங்க ஸ்பெஷலிஸ்ட் பிரிவில் வேலை பார்க்கலாம்.. சரி தானே?”
“எஸ் டாக்டர்.. தேங்க் யூ சோ மச்.. “
அவர்கள் அவசர சிகிச்சை பிரிவுக்கு செல்ல, அங்கே நிஷா ஏற்கனவே இருந்தாள், கூடவே டாக்டர் முரளி.. 
முரளி “ வெல்கம்.. உள்ள வாங்க.. “
முறைபடி தன்னை அறிமுகம் செய்து கொண்டவர், தினந்தோறும் செய்ய வேண்டிய விஷயங்களையும், முதலுதவி செய்ய வேண்டிய முறைகளையும் கற்று கொடுத்தார். அதனை நால்வரும் ஆர்வமுடன் கற்றனர்.
ஒரு வாரம் நல்ல முறையில் வேலை பார்த்தார்கள். சில நேரம் ஆக்ஸிடன்ட் கேஸ் வரும் பொழுது கலக்கமாகவும் பயமாகவும் இருந்தாலும், பழகி கொண்டார்கள். வார இறுதியில் மூவரும் தேவ் வீட்டிற்கு வந்தார்கள். ஞாயிறு அன்று மட்டும் விடுமுறை கிடைத்தது அவர்களுக்கு. சகுந்தலாவும் ராமசாமியும் அவர்களை நல்லபடியாக கவனித்தார்கள். 
தேவ் ஊருக்கு வந்ததே மின்மினியை பார்க்க தான். அவளை பார்த்து கிட்ட தட்ட 6 மாசம் ஆனது.. கடைசி வருட பரிட்சை கடினமாக இருப்பதால் அவ்வளவாக ஊருக்கு வரவில்லை தேவ்.. தினமும் போனில் 5 நிமிடம் பேசுவான் அவ்வளவே.. ஆனால் வாரம் தவறாமல் தன்னவள் போடும் வீடியோக்களை பார்த்து விட்டு, அதன் நிறை குறைகளை கூறுவான்.
ஓவியன் தேவை பார்க்க வந்தவன், தீபக் மற்றும் நிவேதா நன்றாக பழகியதும், குறுகிய காலத்தில் நெருங்கிய நண்பன் ஆகி போனான்.
ஓவி “ டேய்.. வயக்காட்டுக்கு வரீங்களா? என் சோலார் பம் செட்டில் ஜோரா தண்ணி வருது.. நீ தான் ஊர் பக்கமே வரலை.. இனி எப்ப வருவியோ?”
நிவி “ஐ… அதெல்லாம் நான் படத்தில் மட்டும் தான் பார்த்திருக்கேன்.. தேவ் ப்ளீஸ் போலாம் யா ?”
தேவ் “ம்ம்ம் போகலாம் நிவி.. தீபக் நீயும் வரியா ?”
“ம்ம் வரேன் டா.. கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கும்”
“சரி இரு வரேன்.” தன் போனை எடுத்து கொண்டு வெளியே சென்றான் தேவ்.. எங்கே போகிறான் என்று யோசநையுடன் பார்த்த தீபக்கிடம் நிவி , “அவன் ஆளு கிட்ட பர்மிஷன் வாங்க போயிருப்பான்”
ஓவியன் “ அட நீங்க வேறங்க, அவன் அந்த பொண்ண அங்க வர சொல்லுவான் “
இவர்கள் பேசும்போதே தேவ் உள்ளே வர, “ வாங்கடா போகலாம்”
தீபக் “என்ன டா க்ரீன் சிக்னல் வந்தாச்சா ?”
“டேய்.. ரொம்ப வாய் பேசாமல் வந்து தொலை.. “
தீபக்கும் தேவும் ஒரு தேவ் வண்டியில் போக, நிவி ஓவியன் வண்டியில் சென்றாள். இருவரும் ஏதோ பேசி சிரித்த படி செல்ல,  இதை கண்ட ஒரு ஜோடி கண்கள் போறாமையில் பொங்கியது.. வேற யாரு? நம்ம நதியா தான்.. 
“சாப்பாட்டு ராமன் என்ன பார்த்தா தான் எரிஞ்சு விழுவான்  ஊரில் உள்ள எல்லார் கிட்டயும் ஜாலியா தான் பேசுவான்” என்று மனதில் அவனை கழுவி ஊற்றினாள். அப்போது அவள் வீட்டிற்கு வந்த மினி, அவளுடன் பம்ப் செட்டிற்கு வருமாறு கூற, ஓவியன் மேல் இருந்த கடுப்பில்,
“நான் அவன் காட்டுக்கெல்லாம் வர மாட்டேன் டி. “
மினி “ ப்ளீஸ் டி.. நான் அவரை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு, அதான் கூப்பிடுறேன்”
மினியை பார்க்கவும் பாவமாய் இருக்க, “சரி வா”
நதியாவின் ஸ்கூட்டியில் இருவரும் சென்றார்கள். அங்கு ஏற்கனவே நால்வர் இருக்க, இவர்களும் சென்றதும் அந்த இடமே கலகலப்பானது.. 
தேவிற்கு மினியை விட்டு தன் கண்களை திருப்ப முடியவில்லை.. எவ்வளவு அழகாக மாறிவிட்டாள். குழந்தை தனம் முற்றிலும் மாறி, நல்ல வளர்ந்த பெண்ணாய் தெரிந்தாள். 
“ஏன் என்ன இப்படி பார்க்கிறான்” என்று விழித்து கொண்டிருந்தாள். மினிக்கு கூச்சமாக இருந்தது..
அங்கு ஓடிய தண்ணீரை கையில் பிடித்து தேவ் முகத்தில் தெளித்தான் தீபக் 
தேவ் “டேய் என்னடா?”
“அதே தான் நானும் கேட்கிறேன் என்ன.. நாங்களும் இங்க தான் இருக்கோம் அந்த நினைப்பு இருக்கா உனக்கு?”
“ஹிஹிஹி.. “
“ரொம்ப வழியுது டா.. துடைச்சிக்க”
2 மணி நேரம் கிண்டலும் கேலியாக சென்றது.. நிவேதா , மினி, நதியா மூவரும் நெருங்கிய தோழியாகினர். வயற்காட்டில் காலாற நடந்து, பம்ப் செட்டில் குளித்தது நிவேதாவிற்கும் தீபக்கிற்கும் புது அனுபவமாக இருந்தது, 
நதியா ஓவியனை முறைத்து கொண்டே இருந்தாள், அவனிடம் சரியாக பேசவும் இல்லை.. மினியும் தேவும் பல நாட்கள் பிரிவிற்கு பிறகு சந்தித்ததால் மகிழ்ச்சியாக இருந்தனர். 
தேவ் “ நதியா , நான் மினி கூட கொஞ்ச நேரம் சுத்திட்டு அப்புறம் வந்து விடுறேன்.. 1 மணி நேரத்திற்குள் கண்டிப்பா வந்துடுவோம் “
“சரிங்கண்ணா.. நான் பார்த்துக்குறேன்.. “
ஓவியன் “ குட்டச்சி இந்த வேலை எல்லாம் கரக்டா பார்ப்பா டா.. நீ கிளம்பு… “
நதியா அவநை முறைத்தாளே தவிர எதுவும் பேசவில்லை. மினியும் தேவும்  கிளம்பியதும், 
ஓவியன் “ பக்கத்தில் எங்க மாந்தோப்பு இருக்கு அவங்க வர வரைக்கும் அங்க இருக்கலாம்.. காத்து நல்லா இருக்கும் வாங்க..”
நடந்தே அந்த தோப்பை அடைந்தார்கள். நிவேதா “வாவ்.. காத்து செம்மையா வருதுப்பா.. இப்ப ஒரு கட்டில் மட்டும் இருந்தா நல்லா தூங்கலாம்.. “
ஓவியன், “கயத்து கட்டில் தான் இருக்கும் பரவாயில்லையா..”
“எதுனாலும் ஓகே எனக்கு.. “
ஓவியன் 2 கயற்று கட்டிலை கொண்டு வந்து போட, நிவேதா அதிலொன்றில் படுத்தவள் சிறிது நேரத்தில் உறங்கியும் போனால். நதியா, நிவி கால் அருகில் கட்டிலில் அமர்ந்திருந்தாள்.
ஓவியனும்  தீபக்கும் மற்றொரு கயிற்று கட்டிலில் அமர்ந்து பைக்குகள் பற்றி தீவிர அரட்டையில் இருந்தனர். நதியாவிற்கு போர் அடிக்க மெல்ல அந்த தோப்பை சுற்றி நடக்க ஆரம்பித்தாள். 
கொஞ்ச தூரம் நடந்து சென்றவள் ஒரு மாமர கிளை கீழே வலைந்திருக்க, அதில் ஏறி அமர்ந்தாள்,  மனம் தவிப்புடன் இருக்க அவள் மனதை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. 
“இங்க என்ன பண்ற “ என்ற குறலில் திடுக்கிட்டு பார்க்க, அங்கே ஓவியன் முறைத்து கொண்டிருந்தான்
“சொல்லிட்டு வர முடியாதா உனக்கு ? நீ பாட்டுக்கு இங்க வந்து உட்கார்ந்திருக்க ?” என கேட்டதும் பதில் பேசாது நடக்க 
“உடம்பு முழுக்க திமிர் குட்டச்சிக்கு.. “ என ஓவியன் நினைக்க
“என் மேல் மட்டும் எரிந்து விழுவான் ஏணி மரம் “ என நதியா முறுக்கி கொண்டாள்
“என்னடி கேள்வி கேட்டா பதில் சொல்லாமல் போற?”
“நான் எதுக்கு உனக்கு பதில் சொல்லனும்?”
“ஏய் குட்டச்சி.. உன்னை காணும்னு தேடி வந்தா இப்படி பேசுற?”
“ஓ உன் கண்ணுக்கு எல்லாம் நான் தெரியுறேனா ?”
“தெரியாமல் இருக்க நீ என்ன பேயா? இல்லை ரத்த காட்டேரியா? ஹஹஹா.. “ 
ஓவியன் சீண்டியதும் இன்னம் கடுப்பானவள், வேகமாக சென்று அமர்ந்து கொண்டாள்
*************************************************** 
தேவ் மினியை  ஊருக்கு வெளியில் இருக்கும் அவனுக்கு சொந்தமான சோள காட்டிற்கு கூட்டி வந்தான்.
“இங்க ஏன் கூட்டி வந்தீங்க? யாராவது பார்க்க போறாங்க..”
“ஷ்ஷ்ஷ்ஷ்..”
அவளை தன் மடியில் சாய்த்து தன் பைக் அருகே அமர்ந்து கொண்டு மென் குறலில் பாட ஆரம்பித்தான்..
மறுவார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கனவாய் நீ மாறிடு
மயில் தோகை போலே
விரல் உன்னை வருடும்
மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்
விழி நீரும் வீணாக
இமைத்தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாக கண்ணானதே
மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாளில்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய்யில்லையே
கண் மூடி சிறிது நேரம் அந்த பாடல் வரிகளை ரசித்தாள்
“சூப்பரா பாடுறீங்க.. “
“ம்ம்ம்.. முன்ன விட ரொம்ப அழகா தெரியுற டி.. 1 வருஷத்தில் பெரிய பொண்ணு மாதிரி இருக்க.. “
“கின்டல் பண்ணாதீங்க.. “
“நெஜமா தான் டி”
“சரி என்ன எப்படி கூப்பிடுவ சொல்லு.. “
“தேவ்.. “
“அடிங்க புருஷன பேர் சொல்லியா கூப்பிடுவ?”
“அப்படி தான் டா கூப்பிடுவேன்”
“அடிப்பாவி டா வேற சொல்லுவியா ? உன்ன.. “
மினி எழுந்து ஓட ஆரம்பித்தாள்.. அவளை துரத்தி கொண்டே ஓடியவன் ஒரு கட்டத்தில் பிடித்து விட, இருவருக்கும் மூச்சு வாங்கியது.. 
அவளருகே வந்தவன் “ டா சொன்னதுக்கு பனிஷ்மன்ட் வேண்டாமா ?”
“டாக்டரே.. இதுக்கு பனிஷ்மன்ட் எல்லாம் கிடயாது…  “
“உண்டு செல்லக்குட்டி… ஒரு ஐ லவ் யூ சொல்லு விடுறேன்.. இல்லாட்டி எவ்வளவு நேரம் ஆனாலும் இங்க தான் இருக்கனும்”
“ப்ளீஸ் தேவ் விடுங்க.. “
“முடியாது டி.. “ 10 நிமிடம் வரை அமைதியாக இருந்தாள்.. அவள் கையை அவளால் விடுவிக்க முடியவில்லை.. பின் தலையை குனிந்து கொண்டே “ஐ லவ் யூ மாம்ஸ்.. “
“லவ் யூ டூ மினு குட்டி.. தேங்க் யூ.. சரி வா போகலாம் நேரம் ஆச்சு..  “
“இவ்வளவு நேரம் அது தெரியலயா ?”
“ம்ம்ம் நீ தான் டைம் வேஸ்ட் பண்ண “
“சரி சரி அது என்ன மாம்ஸ்னு கூப்பிடுற?”
“அது அப்படி தான் வாங்க போகலாம்” 
“சொல்லுடி… என்ன வெட்கமா ?” தேவ் சிரித்து கொண்டே அவள் கையை பிடித்து கொண்டு தன் பைக்கை நோக்கி நடந்தான். இவர்கள் தோட்டதிற்கு சென்று, அங்கிருந்து அனைவரும் அவரவர் வீட்டிற்கு சென்றனர்
************************************************** 
திங்களன்று ஹாஸ்பிட்டல் சென்றதும் , டாக்டர் முரளி நால்வரையும் அழைத்து,
“ஒரு வாரத்தில் ஓரளவிற்கு அநைத்தும் கத்திருப்பீங்கனு நிநைக்கிறேன்.. அதனல், உங்களை 2 பாட்ச்சா பிரிச்சு இருக்கிறேன்.. காலை ஷிப்ட் 2 பேர் நைட் ஷிப்ட் 2 பேர் பாருங்க.. அடுத்த வாரத்தில் அப்படியே மாத்திக்கலாம் ஓகே ?”
தேவும் தீபக்கும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். 
“தீபக் , நிவேதா நீங்க மார்நிங் ஷிப்ட் வந்திடுங்க, தேவ் நிஷா நீங்க நைட் ஷிப்ட்.. “
தீபக்  “நான் நைட் ஷிப்ட் வரேன் டாக்டர், நிஷா கூட.. “
முரளி “ ஏன் பா… நிஷா கொஞ்சம் ரத்தத்தை பார்த்தா எமோஷனல் ஆகுறாங்க, தேவ் பக்குவமா இருப்பார் அதனல் தான் அவங்க 2 பேரையும் ஒரு பாட்ச் போட்டேன். எநி ப்ராப்ளம்?”
தேவ் “ நத்திங்… நான் நைட் ஷிப்ட் பார்க்கிறேன் டாக்டர்.. நோ ப்ராப்ளம் “
நிஷா ஒரு வெற்றி புன்னகை புரிய, தேவ் அவளை ஒரு நக்கல் பார்வை பார்த்து கொண்டே சென்றான். 
— மின்னுவாள்..

Advertisement