Advertisement

காம்ப் போய் வந்த அசதியில் தீபக்கும் தேவும் காலை 8 மணி வரை நன்றாக தூங்கி கொண்டிருக்க, நிவி தேவ் போனிற்கு அழைத்து கொண்டே இருந்தாள். அது எடுக்க படாமல் போக, தீபக்கிற்கு அழைத்தாள். 
அவன் தூக்க கலக்கத்தில் பேச,
“டேய் தீபக்.. எமர்ஜன்சி டா. ரெண்டு பேரும் என்ன பண்றீங்க? “
“நிவி.. செம்ம தூக்கத்தில் இருக்கோம்.. என்ன வேணும் உனக்கு ?”
“ம்ம்ம்.. அங்க தேவ் மேல கம்ப்ளைன்ட் கொடுக்க போறாங்க.. நீங்க நல்லா தூங்குங்க.. “
திடுக்கிட்டு எழுந்தமர்ந்த தீபக் “ஏய் என்ன சொல்ற? அவன் மேல என்ன கம்ப்ளைன்ட்? யாரு கொடுக்க போறா?”
“அந்த நிஷா க்ளாஸ் பொண்ணுங்க 2 பேரை  சேர்த்துகிட்டு காம்ப் போன இடத்தில் அவங்க கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணுனதா சொல்ல போறா.. அதில் ஒருத்தி என்னை கூப்பிட்டா, நான் பொய்யா எதுவும் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டேன்.. அவங்க காலேஜ் வந்ததும் முதல் வேலையா அதை தான் செய்ய போறதா சொல்லி கிட்டாங்க.. எதாவது பண்ணுங்க டா.. நான் காலேஜ் கிளம்பி வந்து கிட்டு இருக்கேன்”
“சரி நிவீ இதோ நாங்க கிளம்புறோம்..”
தீபக் தேவை எழுப்பி நடக்க போகும் விவரத்தை கூற, இருவரும் வேகமாக கிள்மபினர். 
“தீபக் , நீயும் நிவியும் எப்படியாவது அவங்க டீன் ரூம் வருவதை கொஞ்சம் தாமதம் செய்.. நான் முதலில் அவரை பார்த்து பேசிட்டு வரேன்.. “
“சரிடா.. “
காண்டீனில் அமர்ந்திருந்த நிவி, தீபக் மட்டும் வருவதை பார்த்தவள், “எங்கடா தேவ்..?”
“அவன் டீனை பார்க்க போயிருக்கான்.. அவங்க எல்லாம் எங்க ?”
“அதோ அங்க பார்க்கிங் ஏரியாவில் ட்ராமாக்கு ஒத்திகை பார்த்திட்டு இருக்காளுக.. அதுவும் நல்லது தான் , இவளுக போறதுக்கு முன்னடி தேவ் பேசிடுவான் “
“உன்னை எப்படி கூப்பிடாமல் விட்டா நிஷா? உனக்கு எப்படி விஷயம் தெரிந்தது?”
“நிஷாவிற்கு என் மேல் சந்தேகம் வந்திருக்கும் அதனால் கூப்பிடாம்ல் இருந்திருப்பா, என் போன் கூட எடுக்கல 4 நாளா.. அவ கூடவே சுத்திட்டு இருப்பாளே வைஷாலி அவ தான் எனக்கு பண்ணின, நீயும் வரியானு”
“அவளுக்கு என்ன காண்டு தேவ் மேல?”
“தேவ் மேல காண்டில்ல, நிஷாவை காக்கா புடிச்சு வச்சுகிட்டா அவளுக்கு நிறைய உதவி கிடைக்கும்நு தப்பு கணக்கு போட்டு சுத்துறா.. நிஷாவோட தேவை முடிஞ்சா கழற்றி விட்டுடுவானு தெரியலை அவளுக்கு.. பாவம்”
“ம்ம்ம் பாவம் அந்த மினி பொண்ணு.. அவளை ரொம்ப கஷ்ட படுற மாதிரி பேசிட்டு வந்திருக்கா இந்த நிஷா.. “
அங்க பாரு தேவ் வரான், அவனை கூப்பிடு, தீபக் தேவை அழைத்து காண்டீனுக்கு வர சொன்னான்.
அங்கு வந்த தேவ் “தீபக் முதலில் எல்லருக்கும் டிபன் வாங்கிட்டு வா பயங்கரமா பசிக்குது”
தீபக் எழுந்து செல்ல, நிவியும் கூட சென்றாள். தேவ் மிகவும் சோர்வாக இருந்தான். மினியுடன் பேச வேண்டும் போல் இருக்க அவளுக்கு அழைத்தான், ஆநால் அவளோ எடுக்கவில்லை. டிபன் வந்ததும் மூவரும் அமைதியாக சாப்பிட்டனர்.
தீபக் “சொல்லுடா.. என்ன நடந்தது ?”
“நான் நிஷாவை பத்தி எல்லாத்தையும் சொன்னேன். அவர் அமைதியா கேட்டுட்டு இருந்தார், நான் ஆதாரமா அந்த வீடியோ கூட காட்டினேன். அந்த வீடியோவை அவர் மெயில் ஐடிக்கு அனுப்ப சொல்லிட்டு என்னை போக சொல்லிட்டார்.. “
“வேற ஏதும் சொல்லலையா ?”
“இல்லை டா.. எனக்கு தெரிஞ்சு அவருக்கு ஏற்கனவே சில விஷயங்கள் அவருக்கு தெரியும்னு நினைக்குறேன். பார்ப்போம்…”
********************************* 
நிஷா வைஷாலி மற்றும் வீணா மூவரும் டீன் ரூமிற்கு சென்று அவர் அனுமதிக்காக காத்திருந்தனர். ப்யூன் வந்து உள்ளே அழைத்து சென்றார். 
வைஷாலி , “சார் நாங்க எதுக்காக வந்திருக்கோம்னா அது வந்து “ என்று அந்த ஏஸி அறையிலும் வேர்த்து வழிந்தாள்.
அவள் பேச்சை தடுத்தவர் “ நானே உங்க 3 பேரையும் மீட் பண்ணநும்னு நினைச்சேன்.. பரவாயில்லை நீங்களே வந்துட்டீங்க.. வெயிட்”
தன் டேபிள் மேல் இருந்த பைலில் இருந்த சில பேப்பரை எடுத்து, “யாரு வீணா ?”
“நான் தான் சார்”
“ம்ம்ம் இந்தாங்க  சஸ்பன்ஷன் லெட்டர். சஸ்பன்டட் பார் 2 வீக்ஸ்” (suspended for 2 weeks)
“வைஷாலி,  உங்களோடது.. “
“சார் நாங்களே ஒரு பிரச்சனையில் வந்திருக்கோம்.. எங்களை ஏன் சஸபன்ட் பண்ணி இருக்கீங்க?”
“ஷட் அப் யூ இடியட்ஸ்.. இது என்ன காலேஜ்னு நினைச்சீங்களா? இல்லை என்ன நினைப்பு இருக்கு உங்களுக்கு.. மெடிக்கல் படிக்கிறது பல பேர் கணவு.. சீட் கிடைக்காமல் எத்தனை பேர் கஷ்ட படுறாங்கனு தெரியுமா உங்களுக்கு? சில பேர் செத்து கூட  போயிருக்காங்க ஆசை பட்டது படிக்க முடியாம. ஆனல் உங்களுக்கு எல்லாம் கிடச்சும் புத்தி படிப்பில் இல்லாமல் எங்க இருக்கு.. இது தான் உங்களுக்கு லாஸ்ட் வார்நிங்.. இனி எதாவது இந்த மாதிரி குறுக்கு புத்தி வச்சி கிட்டு ஏதாவது பண்ணீங்க, டிஸ்மிஸ் பண்ண வேண்டி வரும், வேற எங்கயும் படிக்க முடியாத மாதிரி ஆக்ஷன் எடுத்திடுவேன்.. ஜாக்கிரதை.. வாணி & வைஷாலி கேன் லீவ் நவ்”
அவர்கள் இருவரும் நிஷாவை திரும்பி பார்த்து கொண்டே சென்றனர்.
இதுவரை சேரில் அமர்ந்து பேசி கொண்டிருந்தவர், எழுந்து நிஷாவின் அருகே வந்து பளார் என்று ஒரு அறை விட்டார்.
“பொண்ணா நீ? உன்னை இப்படியா நான் வளர்த்தேன். எவ்வளவு கீழ் தனமான வேளை பார்க்க இவ்வளவு தைரியமா வந்துட்ட? அன்னைக்கு மட்டும் அந்த 3 பேரும் ஆடிட்டோரியத்தில் பேசுறத கேட்காமல் போன நான் உன்னை நம்பி எவ்வளவு பெரிய தப்பு பண்ணி இருப்பேன்.. நல்ல காலமா தேவ் அப்புறம் மற்ற 2  பேரும் பேசி கிட்டு இருந்தது என் காதில் விழுந்தது.. அப்ப தான் மாநேஜ்மன்ட் கூட அந்த ஊருக்கு காம்ப் போறதை கண்பார்ம் பண்ணிட்டு வந்தேன்.. மறுபடி மாத்த சொன்ன நல்லா இருக்காது,  எதற்கும் இருக்கட்டும்னு உன்ன பாலோ பண்ண ஒரு வாரமா ஆள் வச்சது நல்லதா போச்சு.. நீ பாதியில் வரும் போதே தெரியும் கேவலமா எதாவது பண்ணுவேனு.. “
“டாடி அது “
“ச்சி என்ன அப்படி கூப்பிடாதே.. இந்தா உன் சஸ்பென்ஷன் லெட்டர்.. 1 மாசம் என் கண் முன்ன வந்திடாத.. கெட் அவுட் யூ இடியட்”
நிஷா அப்பவும் திருந்த வில்லை.. மறுபடியும் தேவிடம் தோற்றதாகவே நினைத்தாள்.
தீபக் , தேவ் , நிவி காலை வகுப்புகளை அட்டன் செய்ய வில்லை,  மதியம் க்ளாஸிற்கு சென்றவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.. 
அங்கு இருந்த நோட்டீஸ் போர்டில் நிஷா , வாணி, வைஷாலி மூவரும் சஸ்பன்ட் ஆகி இருப்பதாய் போட்டிருந்தார்கள். 
*********************************** 
மின்மினி மாலை தன் வேலை முடித்து வந்தவளை இனிப்புடன் வரவேற்றான் கதிர். 
“என்னடா ஸ்வீட் எல்லாம் வாங்கி வச்சிருக்க.. ?”
“2  குட் நியூஸ் இருக்குக்கா.. அதற்கு தான் ஸ்வீட்”
“என்ன குட் நியூஸ்?”
“ஒன்னு எனக்கு ஸ்பான்சர் கிடச்சிருக்காங்க.. என் படிப்பு முடியும் வரை அவங்க பொருப்பாம்”
“ஸ்பான்சரா என்னடா சொல்ற?”
“ஆமாம் கா.. என்னட 10த் மார்க் வச்சி நம்ம மேத்ஸ் மேடம் ஷீலா  ஏதாவது ஸ்பான்சர் ஏற்பாடு பண்ண முடியுமானு அவஙக தம்பி கிட்ட கேட்டு இருந்தாங்களாம்.. அவங்க தம்பி ஹெல்ப் பண்ண ஒத்துகிட்டாங்களாம்.. அதுக்கான பார்மாலிட்டீஸ் அப்பாவை கூட்டிட்டு போய் முடிச்சாச்சு..”
“சூப்பர் டா.. எப்படியோ நீ நல்லா படிச்சா அதுவே எனக்கு போதும்… இரண்டாவது நல்ல விஷயம் என்ன?”
“அப்பாக்கு சீக்கிரம் குணமாக போகுது…. நல்ல முன்னேற்றம் இருப்பதா டாக்டர் சொல்லியிருக்காங்க”
“ரொம்ப சந்தோஷம் டா… “
“ஆமாம் கா.. நீ இனி வேலைக்கு போக தேவையில்ல.. நீயும் படிக்கலாம் காலேஜ் போய்”
“இப்ப எப்படி டா முடியும்.. நான் காலேஜ் எல்லாம் போகலை.. வீட்டிலே இருந்து படிக்கறேன்… “
“ஏன் அக்கா?”
“அப்பாக்கு முடியலை, நான் வேலைக்கு போன சாப்பாட்டு பிரச்ச்நை வராமல் இருக்கும், எல்லா மாதமும் நம்ம மாமாவை தொல்லை பண்றது சரி இல்லை டா”
“உனக்கு கஷ்டமா இல்லையா?”
“எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை கதிர்.. அப்பாக்கு உடம்பு சரி ஆன பிறகு ஏதாவது வேலை பார்க்க முடிந்தா நான் வேலையை விடுறேன் சரியா?”
“ம்ம்ம் சரிக்கா.. “
“அப்பா எங்க?”
“நல்ல கொல்லிடம் தண்ணீர் வருதாம்.. குடம் எடுத்து கிட்டு போயிருக்கார்.. நான் வரேன் சொன்னேன்.. வேண்டாம் சொல்லிட்டாரு.. “
“சரிடா.. நான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன்” 
“அக்கா நான் என் ப்ரண்டு வீட்டுக்கு போயிட்டு வரேன்” என கதிர் ஓடி விட்டான். 
அவன் சென்றதும் தன் மகிழ்சியை பகிர்ந்து கொள்ள தேவிற்கு அழைத்தாள் 
தேவ் “சொல்லுங்க மேடம் இந்த நேரத்தில் போன் பண்ணி இருக்கீங்க?”
“நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் தேவ்”
“அப்படியா? அடிப்பாவி நான் ஊருக்கு வந்தது அவ்வளவு சந்தோஷமா இருக்கா? போ மினு குட்டி”
“ஐயோ. அது இல்ல.. கதிருக்கு ஸ்பான்ஸர் கிடச்சிருக்கு… அவன் படிப்பு எந்த வகையிலும் தடை படாமல் தொடரும், அவனும்  கஷ்டபடாமல் படிப்பான்.. “
“ஓ அப்படியா.. நல்ல விஷயம் தான்.. “
“ம்ம்ம் சரி வச்சிடவா?”
“அடியேய் என்ன விளையாடுறயா? மரியாதையா கொஞ்ச நேரம் பேசு.. “
அவர்களின் ஸ்வீட் நத்திங்க்ஸ் பேச்சு ரகு வரும் வரை தொடர்ந்தது.. 
தேவ் போன் பேசி முடிக்கும் வரை அவனை முறைத்து கொண்டே இருந்த தீபக், 
“எப்படி டா? இது உலக மகா நடிப்புடா சாமி… “
“டேய் நான் என்ன நடிச்சேன்?”
“பின்ன, அந்த ஷீலா மேடத்துகிட்ட பேசினது நீ தான், ஸ்பான்சரும் நீ தான், உன் ப்ரண்டு பேரை வச்சி எல்லா பார்மாலிட்டீஸும் முடிச்சிட்ட ஆனால் உனக்கு எதுவுமே தெரியாத மாதிரி எப்படி டா நடிக்கிற?”
“டேய் நான் தான் ஸ்பான்சர்னு சொன்னா அவ ஒத்துக்க மாட்டாள், ரொம்ப ரோஷக்காரி, அது தான் இப்படி பண்ண வேண்டியதா போச்சு.. “
“ம்ம்ம் சரி டா.. நீ நடத்து” 
என கலாய்த்து கொண்டிருந்தான்.
*********************************************  

Advertisement