Advertisement

மினியும் நதியாவும் அவர்களுக்கு பிடித்த இடமான ஓடக்கரையில் அமர்ந்து ஒரு மாத விஷயங்களை பேசி கொண்டிருந்தார்கள்.
மினி “ஏன்டி ரொம்ப நாளா வீட்டிற்கு வரலை?  உன் கிட்ட பேச எனக்கு ஆயிரம் கதை இருக்கு”
நதியா “அது ஒரு பெரிய கதை டி.. நீ முதலில் உன் விஷயத்தை சொல்லு.. அண்ணா எப்படி இருக்காங்க?”
“நல்லா இருக்காங்க… ஆனால் எனக்கு தான் மனசே சரி இல்லை டி… ஏதோ தப்பு பண்ற மாதிரி இருக்கு”
“ஏன் மினி என்ன ஆச்சு?”
நடந்த அனைத்து விஷயங்களையும் நதியாவிடம் கூறியவள்,
“நான் அதிகமா ஆசை பட்டுட்டேனா, அந்த நிஷாக்கா ரொம்ப பேசிட்டாங்க என்னால் தாங்க முடியல டி… நான் வேற காலேஜ் கூட போகல.. “
“அடி லூசே.. காலேஜ் முடிச்சா மட்டும், இங்க யாருக்கு டி வேலை கிடைக்குது? நூத்தில் பத்து பேருக்கு வேலை கிடைக்கிறதே பெருசு.. நாம நிறைய சுய வேலை வாய்ப்பு இல்லாட்டி தற்சார்பு தொழில் ஏதாவது பண்ணனும் டி.. அப்ப தான் நமக்கும் நல்லது, நம்ம நாட்டுக்கும் நல்லது”
“அது என்ன தற்சார்பு தொழில் அமைப்பு?”
“நம்ம பழங்காலத்து முறை தான், முன்னாடி எல்லாம் நமக்கு தேவையான காய்கறி, பழங்கள், தாணியங்கள், நாமலே விளைவிச்சோம்.. அதை பண்ட மாற்று முறை படி நம்ம காட்டில் விளையாதவற்றை மற்ற நிலத்தவர் கிட்ட மாத்தி கிட்டோம்.. அது தான் தற்சார்பு வாழ்க்கை முறை  சொல்லுவாங்க..
அதுவே இப்ப இந்த காலத்திற்கு ஏத்த மாதிரி நம்ம காட்டிலோ, தோப்பிலோ விளையும் பொருட்களை வைத்து ஊறுகாய் போட்டு விற்பது, நர்சரி வச்சி  செடி விற்பது, இன்னும் ஏன் வெண்டை செடி வளர்பது எப்படி , புதினா , கொத்தமல்லி வீட்டிலே வளர்ப்பது எப்படினு நம்ம காலங்காலமா உரம் இல்லாமல் வளர்த்த விதத்தை யூ டியூபில் வீடியோ போட்டு சம்பாதிக்குறாங்க.. இந்த மாதிரி சின்ன சின்ன வேலையை தான் தற்சார்பு தொழில்னு சொல்றாங்க.. இது அவங்கவங்க வாழ்ற இடத்தை பொருத்து மாறும்… நம்மளோடது விவசாய பூமி..  அப்ப அது சார்ந்த வேலை/தொழில் பார்த்தா எல்லாருக்கும் நல்லது.. இது படிப்புக்கு சம்மந்தமில்லை டி.. எல்லாருமே வேலைக்கு போகனும்னு நினைச்சா யார் வேலை கொடுப்பாங்க “
“ஏய் சூப்பர் டி.. என் வீட்டில் கூட தோட்டம் இருக்கே.. அதில் கொஞ்சம் காய் கறி கூட வளர்க்கிறோம்… பூ செடி தான் இருக்காது நாம ஏன் ட்ரை பண்ண கூடாது ? “
“செய்யலாம் டீ .. அதுக்கு சில அடிப்படை தேவை இருக்கு.. நல்ல கேமரா வாங்கனும்.. மண் கலவை ரெடி பண்ணி வைக்கனும்…. வீடியோ எடிட் பண்ண நல்ல சாப்ட்வேர் தெரிஞ்சு வைக்கனும்.. லாப்டாப் இருக்கனும்”
“இப்போதைக்கு என் கிட்ட லாப்டாப் மட்டும் தான் இருக்கு.. அதுவும் நம்ம ஸ்கூலில்10தில் முதல் மார்க் வாங்குனதுக்கு நம்ம பிரின்ஸிபால் கொடுத்தது..”
“என் கிட்ட ஒரு பழைய கேமரா இருக்கும் டி, நம்ம போனை விட க்ளாரிட்டி நல்லா இருக்கும்… அந்த ஓவியன் கிட்ட கேட்டா வீடியோ எடிட் பண்ண சொல்லி தருவான். நான் போன் பண்ணி கேக்குறேன்.. “
“சரி டி.. “
நதியா ஓவியனை அழைத்து விஷயங்களை கூற, அவன் தன் மடிக்கணினி எடுத்து கொண்டு அவர்கள் இருக்கும் இடத்திற்கே வந்து விட்டான்.
“பரவாயில்லை ரெண்டு பேரும் நல்ல விதமா தான் யோசிக்கிறீங்க… நீங்க ஆரம்பிக்கும் முன் சில எச்சரிக்கைகளை சொல்லிடுறேன்… அதுக்கெல்லாம் தயாரா இருந்தா ஸ்டார்ட் பண்ணலாம் நீங்க..”
“1. நீங்க ஆரம்பித்ததும் ஆகா ஓகோனு பிச்சிகிட்டு வ்யூஸ் வந்து பணம் பார்க்க முடியாது, சக்ஸஸ் ஆக பல மாதங்கள் ஆகலாம்
2. நெகட்டிவ் கமண்ட் போடவே சில பேர் இருப்பாங்க, அவங்களை கண்டுக்க கூடாது…
3. வ்யூஸ் வாங்க தவறான விஷயங்களை சொல்ல கூடாது..
இதுக்கெல்லாம்  ஒத்து கிட்டா நான் உதவி செய்றேன்.. “
“கண்டிப்பா ஒத்துக்கிறோம் அண்ணா.. இது ஒரு முயற்சி தான் முடியாட்டி நாங்க வருத்த பட மாட்டோம்”
ஓவியன் உதவி செய்ய, அடுத்த நாள் முதல் பதிவாக கருவேப்பிலை பற்றி போடலாம் என்று முடிவு செய்தார்கள்.
தேவிற்கு அழைத்து மினி நடந்தவற்றை கூறினாள்
“சூப்பர் மினு குட்டி… அப்படியே சப் டைட்டில்ஸ் போடவும் கத்துக்கோங்க.. அப்ப தான் நீங்க சொல்ல போற விஷ்யம் எல்லாரையும் சேரும்”
“ஓகே தேவ்”
“என்னடி தேவ்னு மரியாதையே இல்லாமல் பேரை சொல்லி கூப்பிடுற..”
“ம்ம் அப்புறம் எப்படி கூப்பிடறதாம்.. “
“ம்ம்ம் நீயே யோசி.. நாளைக்கு சொல்லு.. சரி நான் பிறகு கூப்பிடுறேன்.. பை”
தேவ் ஓவியனிற்கு அழைத்தான்,
ஓவி “ நீ கூப்பிடுவேனு எனக்கு தெரியும் டா “
“ப்ளான் சக்ஸஸ் டா ஓவி.. ரொம்ப தாங்க்ஸ் டா… “
“போடா டேய்… என்ன நேரா மினி கிட்ட பேச சொன்னாவே நான் பெசி இருப்பேன்.. அந்த மரமண்டு நதியா கிட்ட பேசி புரிய வைக்கறதுக்குள்ள என் பாதி உயிர் போச்சு.. “
“நான் உயிர் தோழன் இல்லயா.. எனக்காக இந்த கஷ்டம் கூட பண்ண மாட்டியா?”
“நீ உயிர் நண்பன் இல்லைடா உயிரை எடுக்குற நண்பன்.. என்ன அவ கூட கோத்து விடுறயே..”
“ஹஹஹா.. அது உன் தலை எழுத்துடா.. நான் எதுவும் பண்ண முடியாது.. சரி எனக்கு வேலை இருக்கு.. நாளைக்கு பேசுறேன்.. பை”
ஓவியன் உதவியுடன் மினியும் நதியாவும் சேர்ந்து யூ டியூப் சானல் (MN Gardens) ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் கம்மியான நபர்களே பார்த்தனர்.. பிறகு ஒரு 6 மாதத்தில் அவர்கள், இயற்கை காய்கறிகள் விளைவிப்பது மட்டுமில்லாமல், தங்கள் தோட்டத்திலிருந்தே நாட்டு விதைகள் விற்கவும் ஆரம்பித்தனர்.. இதனால் மாதம் ஆயிர கணக்கில் பணமும் சேர்ந்தது.. அது அவர்கள் ஆரம்பித்த ஜாயின்ட் அக்கவுன்டில் அவ்வப்போது பணத்தை மாற்றி கொண்டார்கள்..
*****************************************
ஓராண்டு கழித்து….
ஓவியன் ஓராண்டு கஷ்ட பட்டாலும், மாப்பிள்ளை சம்பா, கவுணி அரிசி, கார் அரிசி போன்ற பாரம்பரிய அரிசி வகைகளை இயற்கை முறையில் விளைவித்தான்.. முதலில் சொதப்பினலும், பல நுணுக்கங்களை கற்று கொண்டு அடுத்த அறுவடையில் சாதித்தான். தனது டிகிரியையும் நல்ல படியாக முடித்தான்.
நதி எல்லா வார இறுதியில் ஊருக்கு வந்து விடுவாள்.  மினியுடன் இணைந்து வீடியோ எடிட் செய்வது, விதை கேட்பவர்களுக்கு விதை அனுப்புவது என பிசியாக இருந்தாள்
தோட்டம் ஓரளவுக்கு நன்றாக அமைய, மினி வேலையை விட்டு விட்டாள், முழு கவனமும் தோட்டத்தில் தான், அடுத்த கட்டமாக நர்சரி வைக்க கூட ஆசை வந்தது அவளுக்கு, கொஞ்சம் பணம் சேர்ந்ததும் ஆரம்பிக்க நிநைத்தாள். சிறிய இடமாக இருந்தாலும், எப்படி தோட்டம் அமைத்தால் வீட்டிற்கு தேவையான செடிகள் வளர்க்கலாம் என்ற வீடியோவில் தான் இருவரும் பிரபலம் ஆனார்கள். இப்பொழுது அந்த ஏரியாவில் மின்மினி யார் என்று கேட்டால், தோட்டக்கார மின்மினியா என்று கேட்கும் அளவிற்கு பிரபலமானாள்.
ரகு நன்றாக படித்து, பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மாணவனக திகழ்ந்தான்.. இன்னம் சில மாதங்களில் வரும் பப்ளிக் பரிட்சைக்காக தயாராக இருந்தான்.
தேவ் தனது நான்காம் ஆண்டில் இருந்தான், அடுத்த மாதத்தில் இருந்து மெடிக்கல் ப்ராக்டீஸ் எடுக்க வேண்டும். அவன் திருச்சியில் ப்ராக்டீஸ் செய்ய போவதாய் கூற, தீபக் மற்றும் நிவியும் இணைந்து கொண்டார்கள்.
நிஷாவை அவர்கள் இந்த ஓராண்டில் பார்க்கவே இல்லை.. டீசி வாங்கி கொண்டு வேறு கல்லூரியில் படிப்பதாக கேள்வி பட்டனர். அவர்கள் அவளை கண்டு கொள்ளவில்ல்லை.. அப்படி ஒரு ஆள் இருந்ததையே மறந்தனர்.
நிஷா இவர்களை மறந்தாளா ?
  • — மின்னுவாள்..

Advertisement