Advertisement

மினி, தேவ் வருகைக்காக தன் தோட்டத்தில் காத்து கொண்டிருந்தாள். கதிரும் ரகுவும் நல்ல உறக்கத்தில் இருந்தார்கள். 
வேக வேகமாக நடந்து வந்த நிஷா, தன்னை யாரோ தொடர்வது போல் இருக்க திரும்பி பார்த்தாள். யாரும் தென்படவில்லை.. பிறகு நடக்க ஆரம்பித்தாள். மினியின் வீட்டின் முன் வந்து நின்றவள் , எப்படி அவளை வர வைப்பது என யோசித்தாள். வீட்டிற்கு பின் தோட்டம் இருப்பதால், பின் வாசல் வழியாக உள்ளே செல்லாம் என்று அங்கு போனல், அவள் அதிர்ஷ்டம் மினி அங்கு வெளியே அமர்ந்திருந்தாள். 
“மினு” என்று பொருமையாக அழைத்தாள் நிஷா. அவள் காதில் விழவில்லை. பிறகு, கொஞ்சம் சத்தமாக அழைத்ததும், குரல் வந்த திசை நோக்கி சென்றவள் அதிர்ந்தாள். 
“நீங்க யாரு ?”
“பயப்படாதே மின்மினி, நான் நிஷா, தேவுடைய ப்ரண்டு..”  “ஓ.. அவங்க வரலையா ? “
அவனுக்காக தான் காத்திருக்கியா .. இருடி மவளே என்று மனதில் கருவி கொண்டு
“அதை பத்தி தான் பேசனும் கொஞ்சம் தனியா வரியா ப்ளீஸ்”
“யாராவது பார்த்தாள் வம்பாகிடும்.. நான் வரலை.. அவருக்கு எப்ப முடியுமோ அப்ப வர சொல்லுங்க.. நீங்களும் சீக்கிரமாக போங்க… நேரம் 10 தாண்டிடுச்சு..”
“ஷ்ஷ்ஷ்.. மினு நான் சொல்ல போற விஷயம் ரொம்ப முக்கியமானது.. நான் பேசியே ஆகனும் வா.. தேவ் கண்டிப்பா இந்த விஷயத்தை சொல்லிட்டு வர சொன்னான்.. வா “ 
“சரி.. முன்னாடி போய்வா நில்லுங்க.. நான் வரேன்”
நிஷா, அப்பாடி வந்த வேலையில் பாதி முடிந்தது என நினைத்து  வீட்டின் வாசலில் நின்றாள்.
மினி வேகமாக வந்து, 
“வாங்க கொஞ்ச தூரம் போனால் ஓடக்கரை வரும், அங்க இப்ப யாரும் வர மாட்டாங்க..”
மினி வேகமாக நடக்க, அவள் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் பின் தொடர்ந்தாள் நிஷா. மினி சென்று ஒரு வேப்ப மரத்திற்கு பின் நின்றதும் அங்கு வந்த நிஷா, 
“மினி எவ்வளவு ஸ்பீடா நடக்குற நீ.. “ என மூச்சு வாங்கிய படி நின்றாள்.
“சீக்கிரம் விஷயத்த சொல்லுங்க, எங்க அப்பா எழுந்தா அவ்வளவு தான்”
“ம்ம்ம் சொல்றேன்.. அது உனக்கு கஷ்டமா தான் இருக்கும்.. பட் உன் நல்லதுக்காக தான் சொல்றேன்”
“சொல்லுங்க.. “
“நான் 2 வருஷமா தேவ லவ் பண்றேன்.. “
“என்ன.. நீங்க ????” என்று அதிர்ச்சியானாள்
“ஆமாம்… அவன் கிட்ட சொன்னேன்.. அவனுக்கு என்ன மாதிரி பொண்ணு வெள்ளையா அழகா இருக்குற  பொண்ணு எல்லாம் வேண்டாமாம்.. உன்னை மாதிரி கருவாச்சியா.. ஊர் நாட்டான் போல இருக்குற ஆள் தான் வேண்டுமாம்.. “
“இங்க பாருங்க கண்ட நேரத்தில் ஏதேதோ வந்து ஏதேதோ பேசாதீங்க.. ஆமாம் நான் கருப்பு தான் அது அவருக்கு பிடிக்கலலைனா தான் நான் கவலை படனும்.. உங்களுக்கு என்ன??”
“ரொம்ப ஸ்மார்ட்டா பேசறதா நினைப்போ… உனக்கு என்ன ஒரு 16 இல்ல 17 வயசு இருக்குமா? அதுக்குள்ளயே டாக்டர் ஆகப் போறவன வளச்சி போடுற அளவு உனக்கு யாருடி ட்ரைநிங் கொடுத்தா?”
அவள் வார்த்தையில் மிகவும் காயப்பட்டு போனால் மினி.. 
“ எனக்கு 18 வயசு முடிந்தது.. நான் யாரையும் வளச்சி போடலை..  உங்க கிட்ட பேச வேண்டிய அவசியம் எனக்கில்லை.. நான் போறேன்.. “
“ஹலோ.. மேடம்.. நான் பேசறத முதலில் கேளு.. அப்புறம் போ.. இல்லாட்டி இப்பவே உங்க அப்பாவை எழுப்பி எல்லாத்தையும் சொல்ல வேண்டி இருக்கும்”
“ஐயோ!!! “ என்று பதறியபடி அப்படியே நின்றாள்.
“அது.. உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? அவன் தான் காதல் மயக்கத்தில் இருக்கான் உனக்கு எங்க போனது புத்தி.. நம்ம ரெண்டு பேருக்கும் ஒத்து வராது, பணத்தில் , படிப்பில் எல்லாம் வித்தியாசம் அதிகம் வேண்டாம் அப்படினு ஒதுங்கி போறதில்ல.. மரியாதையா எனக்கு நீ வேண்டாம்னு சொல்லிடு அவன் கிட்ட.. அவன் எப்படி இருக்கான்.. நீ அவனுக்கு மேட்சா இருக்கியானு ஒரு தடவை கூட யோசிக்கலயா? அப்படி எதை காட்டி மயக்குன டி என் தேவை.. ம்ம்ம்…  ?” 
மினி வாய் திறக்கும் முன் அங்கு வந்த தேவ் ,ஒரு அறை விட்டிருந்தான்.
“இன்னும் ஒரு வார்த்தை ஏதாவது பேசின .. உனக்கு அவ்வளவு தான் மரியாதை சொல்லிட்டேன். ச்ச்சி நீயெல்லாம் ஒரு பொண்ணா?”
“தேவ்.. இவளை விட நான் எந்த விதத்தில் குறஞ்சிட்டேன்.. ஏன் “
“வாய மூடு நிஷா.. இதுக்கு மேல ஏதாவது பேசின வாய உடச்சிடுவேன்.. எப்ப இருந்தாலும், எனக்கு அவ தான் மனைவி.. அதை தடுக்க நீ இல்லை அந்த கடவுளே வந்தாலும் முடியாது.. உன்னை கொல்றதுக்குள்ள மரியாதையா ஓடி போய்டு.. “
“நான் ஏன்டா போகனும்… என்ன இவ முன்னாடி அவமான படுத்திட்டல்ல.. இப்பவே போய் இவ அப்பா கிட்ட போய் சொல்றேன்.. “
“ஹஹஹா.. போய் சொல்லு போ.. எனக்கும் இவளுக்கும் எல்லாம் முடிஞ்சது.. நாங்க தெரியாமல் தப்பு பண்ணிட்டோம்னு காலில் விழுந்தா அவங்களே கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க… எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல.. போடி.. “
அவன் கூறியதில் கடுப்பானவள் ஏதும் பேசாது நிக்க.. மினியிடம் திரும்பி,
“சாரி மினு.. அவ பேசுனதை மனசில் வைக்காதடா.. ப்ளீஸ்.. நாளைக்கு கண்டிப்பா வரேன் உன்னை பார்க்க.. இப்ப ரொம்ப லேட் ஆச்சு வீட்டுக்கு போ.. முதலில்.. “
அவள் முகம் அப்பவும் தெளியாமல் இருக்க, அவள் அருகே வந்து, அவள் கையை பிடித்தவன், தன் அருகே இழுத்து அனைத்து கொண்டான். 
இதை பார்த்த நிஷா கடுப்பில் முகத்தை திருப்பி கொண்டாள்.
சிறிது நேரம் அப்படியே இருந்தவர்கள், “இங்க பாரு மினு.. நீ இப்படி முகத்த வச்சு கிட்டால் என் மேல் நம்பிக்கை இல்லனு ஆர்த்தம்.. யாராவது வந்து இப்படி பேசினா என் புருஷன நீ ஏன்டி லவ் பண்ணுறனு சப்புனு ஒரு அறை விடுறதில்ல? ம்ம்??” மினு பதில் பேசவில்லை.. அவள் குழப்பத்தில் இருந்தாள்.
“என்னடி நான் பேசி கிட்டே இருக்கேன் பதில் பேச மாட்டேங்குற ?.. நேரமாகுது வா போலாம்”
இருவரும் நடக்க ஆரம்பிக்க மினி நிஷா நின்ற இடத்தை திரும்பி பார்த்தாள். அங்கு அவள் இல்லை.. அதை புரிந்து கொண்டவன், “அவ அப்பவே போயிட்டா.. நீ வா.. “ இருவரும் கை கோர்த்து நடந்து சென்றார்கள்.
அவள் வீடு இருக்கும் தெரு வந்ததும் அவன் நின்று கொண்டான். அவள் வீடு செல்லும் வரை நின்றவன் தன் வீடு செல்ல திரும்ப அவனை எதிர் கொண்டு நின்றான் கதிர்.. 
“கதிர் நீ எப்படி இங்க ?”
“மினிக்காக தான் மாமானு கூப்பிட சொன்னிங்களா ?”
“அப்படி இல்லை கதிர்.. நான் உன் மேல இருக்கும் அன்பால் தான் சொன்னேன்… “
“நான் எல்லாத்தையும் கேட்டிட்டேன்.. அந்த நிஷா அக்கா சொல்றதெல்லாம் உண்மை தான.. மின்மினி கஷ்ட படுறத என்னால் பார்த்து கிட்டு இருக்க முடியாது.. அவ ஏற்கனவே ரொம்ப கஷ்ட பட்டுட்டா.. அவ எதிர் காலமாவது நல்லா இருக்கனும்..”
“கதிர் எப்படி சொல்றதுனு தெரியலை.. என்ன நம்பு.. நான் உன் அக்காவை நல்லா பார்த்துக்குறேன்.. அவ எந்த கஷ்டமும் பட நான் விட மாட்டேன்.. என் மேல் ப்ராமிஸ்… ஒரு 2-3 வருஷம் ஆகட்டும் எல்லாம் சரி பண்ணிடுறேன் “
“எங்க அக்கா ரொம்ப பாவம்.. அவ கண்ணை பார்த்தாலே தெரியுது அவளுக்கு உங்களை ரொம்ப பிடிக்குதுனு.. “
“கதிர், நீங்க 2 பேரும் இநி என் பொறுப்பு… என்ன நம்பலையா நீ?”
“உங்களை மட்டும் தான் நம்புறேன்”
இருக்கம் தலர்ந்து ஒரு புன்னகை புரிந்தவன் “டேய்.. அப்ப நீ மாமானு கூப்பிடு டா”
“சரிங்க மாமா.. “
“சரி நாளைக்கு பார்க்கலாம் நீ போ..”
************************************************ 
நிஷா கோவத்துடன் தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றவள், குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டு இருந்தாள். நிவி நன்றாக உறங்கி கொண்டிருந்தாள். நிஷாவிற்கு  அவமானமாக இருந்தது.. எப்படி அவள் முன் என்ன அசிங்க படுத்தலாம்.. எப்படியாவது 2 பேரையும் பழி வாங்க வேண்டும் என யோசித்து கொண்டே இருந்தவள், வெகு நேரம் கழித்தே உறங்க சென்றாள்.
அடுத்த நாள் காலை உணவு உண்ணும் போது தான் நிவேதா , நிஷா ஊருக்கு போய்விட்டதாய் அனைவரிடமும்  கூறினாள்.
தேவ் “என்னாச்சு?”
நிவேதா “உடம்பு முடியலைனு சொன்னால் டா.. தெரியலை..”
தேவ் இரவு நடந்த அனைத்தும் கூறினான். 
“அவ அடிப்பட்ட பாம்பு டா.. சும்மா இருக்க மாட்டாள். காம்ப் முடியும் முன் போயிருக்கான்னா ஏதோ பண்ண போறா… “
நிவி “இவ என்னடா இப்படி இருக்கா? நாம படிப்ப கவனிப்போமா இல்ல இவ அடுத்து என்ன பண்ண  போறானு யோசிப்போமா? “
“நான் டீன் கிட்ட பேச தான் டா போறேன்.. “
“ம்ம்ம் சரி.. வா வேலையை பார்ப்போம்.. இன்னைக்கு வேற ஊருக்கு போகநும்”
“டேய் மதியம் ஒரு 1 மணி நேரம் நான் இருக்க மாட்டேன்.. நீயே பார்த்துக்க தீபக்”
“சரி மச்சி.. “
************************************** 
காம்ப் அடுத்த ஊரில் நடந்து கொண்டிருக்க, மினி இன்று சமர்த்தாய் வேலைக்கு சென்று விட்டாள். மதிய உணவு இடைவேளையில் தேவ் அவளை அழைத்தான்.
“சொல்லுங்க.. “
“சாப்டியாடி?”
“ம்ம்ம்ம்.. நீங்க”
“சாப்பிட்டேன்.. கொஞ்சம் வெளிய வரியா? போகலாம்?”
“ஐயோ.. நான் வர மாட்டேன்.. இங்க தான் என் மாமா கடை வேற இருக்கு.. யாராவது பார்த்தால் வம்பு தான்..”
“அடியேய்.. உங்க மாமா மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு போயிருப்பாங்க.. அங்க கடையில் ஒரு 1 மணி நேரம் பர்மிஷன் கேட்டுட்டு வா.. இல்லாட்டி மதியம் லீவ் போட்டுடு.. “
“லீவா? நான் ஏற்கனவே நேத்து லீவ் போட்டுட்டேன்.. இன்னைக்கும் என்னல முடியாது.. “
“1 மணி நேரம், உன்னால முடியுமா முடியாதா?”
“எல்லாருக்கும் லஞ்ச் ப்ரேக் 1 மணி நேரம் தான்.. எனக்கு 1-2… இப்ப மணி 1.15 ஆகுது.. அந்த தெரு முக்குல நில்லுங்க வரேன்.. ஆனால் அரை மணி நேரம் தான் டைம்..”
“சரிங்க மேடம்.. நான் அங்க தான் இருக்கேன்.. சீக்கிரம் வாங்க..”
கடையில் இருந்து வெளியே வந்தவள், தன்
துப்பட்டாவை கொண்டு முகத்தை மூடி கொண்டு தேவின் வண்டியில் ஏறி அமர்ந்தாள். பின் இருவரும் அருகில் இருக்கும் ஒரு பாலடைந்த கோவிலுக்கு சென்றார்கள். அந்த கோவில், ஊருக்கு ஒதுக்கு புறமாக இருப்பதோடு, பலர் அங்கு பேய் இருப்பதாய் கட்டு கதை கட்டி விட்டதால், பகலிலும் வெறிச்சோடி காணப்பட்டது.. ஒரு மரப்பலகையில் அமர்ந்ததும் 
மினி “இங்க ஏன் கூட்டி வந்திருக்கீங்க?”
“ம்ம்ம் சும்மாதான்.. ஊரில் உன் கிட்ட பேசவே முடியறதில்ல.. அதான்”
“சொல்லுங்க.. யார் அந்த நிஷா? ஏன் அப்படி என் கிட்ட நடந்துக்கிறாள்?”
நிஷாவை பற்றி அனைத்தும் கூறியவன். “அவ பிரச்சனையை நான் பார்த்துக்கிறேன் சரியா.. நீ எதுக்கும் கவலை படாதே.. ஓகே?”
“ம்ம்ம் அவ சொல்ற மாதிரி நான் உங்களுக்கு மாட்சா இல்லையா?”
“ச்சி லூசு.. அவ ஒரு ஆளுனு அவ சொல்றதுக்கெல்லாம் மரியாதை கொடுக்காத.. நீ எப்பவுமே என் ஏஞ்சல் தான் ஒகே”
“ம்ம்ம்ம் “
“எப்படி நீங்க கரக்டா வந்தீங்க அங்க ?”
“உன்னை பார்க்க தான் போனேன்.. பின் வாசலில் நீ இல்லை, ஆனால் லைட் எரிந்து கொண்டிருந்தது சரி நாம் எப்பவும் சந்திக்கும் இடத்திற்கு போய் பார்க்கலாம்னு வந்தேன்”
“ஓ சரி.. சரி.. நல்ல வேளை நீங்க அங்க வந்தீங்க..”
சிறிது நேரம் கதை பேசி விட்டு மினியை கடையில் விட்டு தன் வேலையை கவனிக்க சென்றான்.
நான்கு நாட்கள் மெடிக்கல் காம்ப் வெற்றிகரமாக முடிந்து,அனைவரும் சென்னைக்கும்  வந்து விட்டார்கள். இத்தனை நாள் போன் செய்தும் நிஷா நிவியின் அழைப்பை எடுக்காததால் அடுத்து என்ன செய்வாள் என்ற குழப்பம் இருந்தது..
 — மின்னுவாள்..

Advertisement