Advertisement

                                                     அத்தியாயம் 9
விஜய்யை தூக்கிக் கொண்டு அறைக்கு வந்தவன் சட்டையை கழட்டி விட்டு லுங்கியோடு வர
“வாவ் டாடி உங்களுக்கு ஆர்ம்ஸ் இருக்கா? மம்மி சொல்லவே இல்ல” என்றவன் அவனின் கையை தொட்டு தொட்டு பார்க்க
“ஆரா என்ன பத்தி சொன்னாளா? அப்போ ஏன் என்ன தெரியாத மாதிரி நடிக்கிறா?”   கோபம் கட்டுக்கடங்காமல் தலைக்கேறினாலும் அவள் அவனை பத்தி என்ன சொன்னாள் என்று அறியும் ஆவல் தலைத்தூக்க “மம்மி என்ன சொன்னா?” என்று அவனை கட்டிலில் கிடத்தி தானும் தலையணையின் மேல் தலையை வைத்து வலது கையால் அஜய்யையும் அணைத்தவாறே “இப்போ சொல்லு மம்மி என்ன சொன்னாங்க?”
“ம்ம்” என்று யோசித்தவன்  “ஸ்கூல்ல பிரெண்ட்ஸ் எல்லாம் டாடி நேம் என்னனு கேட்டாங்க தெரியாதுன்னு சொன்னா சிரிச்சாங்க, அப்பொறம் வீட்டுக்கு வந்து மம்மி கிட்ட கேட்டா விஷ் னு சொன்னாங்க அப்பொறம் ரொம்ப டால் னும் சொன்னாங்க” என்று யோசித்து யோசித்து சொல்ல
“வேற எதுவும் சொல்லலையா?”
“இல்ல மம்மி அழுது கிட்டு இருந்ததால பாட்டி டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு கூட்டிட்டு போய்ட்டாங்க”
விஷ்வதீரன் என்ன மாதிரி உணர்ந்தான் என்றே அவனுக்கு தெரியவில்லை.
“பாட்டிக்கு என்ன பத்தி தெரியுமா?”
“ஆமா பாட்டி தான் நீங்க ஆர்மில இருக்கிறதா சொன்னாங்க.  ஆனா நீங்க போலீஸ். எப்போ ஆர்மில இருந்து போலீஸ் ஆனீங்க?
“எப்போவும் நான் போலீஸ் தான்டா பாட்டிக்கு தெரியாம சொல்லி இருப்பாங்க”
“இப்போ தான் எல்லா வேலையும்  முடிஞ்சதா? இனிமேல் எங்கள விட்டுட்டு போகமாட்டீங்களே!” விஜய்யின் ஏக்கமான குரலில் அவனின் நெற்றியில் முத்தமிட்டவன்
“இல்ல இனிமேல் நாம எல்லாரும் ஒண்ணா ஒரே வீட்டுல இருப்போம். சரி தூங்கலாமா” என்று விஜய்யை தூங்க வைத்தவன் பல கேள்விகளோடு குழம்பியவாறே யோசிக்கலானான்.
அவனின் மனதில் ஆயிரம் கேள்விகள் எழ முதல் கேள்வியாக ஆரோஹி தன்னை அடையாளம் தெரியாமல் இருப்பது ஏன் என்ற கேள்வியே முன்னின்றது.
தீரமுகுந்தன் கேட்டதை மனதில் ஓட்டிப்பார்த்தவன் அன்று டில்லியில் அந்த ஹோட்டல் பாட்டிக்கு போன நாளின் நியாபகம் வரவே அன்று நடந்ததை நினைவில் கொண்டு வர முயற்சி செய்தான் விஷ்வதீரன்.  
விஷ்வதீரன் டில்லியில் ஒரு காலேஜில் நடந்த கொலை கேஸை விசாரிக்க காலேஜ் மாணவன் போல் அந்த காலேஜிக்குள் நுழைந்த தருணம் அது.
கொலையின் துப்பு துலக்க பாருக்கு சென்ற நேரத்தில் அங்கே ஆரோஹி கையில் மதுக்கோப்பையோடு கூடவே ஆகாஷும் இன்னொரு பெண்ணும். ஆரோஹி முழுவதுமாக போதையில் இருக்க ஆகாஷ் அவளை விட்டு விட்டு அடுத்த பெண்ணை சமாளிப்பது தெரிய ஆரோஹியின் மேல் தான் விஷ்வதீரனுக்கு கட்டுக்கடங்காத  கோபம் வந்தது.
அவள் அணிந்திருந்த கையில்லாத குட்டை கவுனும் அவளின் அங்கங்களை அப்பட்டமாக எடுத்து காட்ட, தனக்கு மட்டும் சொந்தமான அழகை கடைபரப்பிக் கொண்டிருப்பவளின் மேல் கோவம் வந்தாலும்  விஷ்வதீரனின் நாடி நரம்பெங்கும் காதல் தீ மூட்டத்தான் செய்தது.   அவளை அணுவணுவாக அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்க, தன்மீதே கோபம் கொண்டவனின் கோபம் எல்லையை கடக்க அவளின் கையிலிருந்த கோப்பையை பிடுங்கி வாயில் சரித்துக் கொள்ள ஆரோஹி அவன் பக்கம் திரும்பி சண்டையிட ஆரம்பித்தாள். அதுவரை தான் அவனுக்கு தெளிவாக நியாபகத்தில் இருந்தது.
அவன் கண் விழித்தது ஆரோஹியின் முகத்திலேயே இன்னும் போதை தெளியவில்லை, கனவு  என்று முணுமுணுத்தவன் குளியலறைக்குள் புகுந்து குளித்து விட்டு வர அப்பொழுதுதான் தான் எங்கே இருக்கிறோம் என்று  சுற்றி முற்றி பார்க்க அது ஹோட்டல் அறை என்று புரிய
அவன் ஆரோஹியை அணைத்தவாறு நடப்பதும், கட்டிலில் இருவரும் ஒருத்தரை ஒருத்தர் அணைத்தவாறு தூங்குவதும், அவளை முத்தமிடுவதும் தெளிவில்லாமல் இருக்க, ஆரோஹியை தேடியவனுக்கோ அவள் அங்கே இல்லாததால் கனவு என்று முடிவு செய்தவன் அங்கிருந்து கிளம்பினான். அன்றிலிருந்து சரியாக பத்து மாதங்கள் கடந்த நிலையில் தான் ஆரோஹியை மீண்டும் மாலில் பானை வயிற்றோடு…. ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று கணக்கு போட்டவன், எழுந்து அமர்ந்து தலையை பிடித்து உலுக்கியவாறே ஹோட்டல் அறையில் நடந்ததை நியாபகத்தில் கொண்டு வர முயற்சிக்க அந்தோ பரிதாபம் போதையில் நடந்தது அன்றே நியாபகத்தில் இல்லாத போது ஆறு வருடங்கள் கடந்த நிலையில் நியாபகத்தில் வருமா?
அப்படி என்னத்த குடிச்சா? நானே ஒரு கிளாசுக்கு குறைவா தான் குடிச்சேன். ரெண்டு பெக் இருக்குமா? நடந்தது எதுவும் சுத்தமா நியாபகத்தில் இல்ல. அப்போ ஆராவின் நிலம கண்டிப்பா தனக்கு என்ன நடந்ததுன்னு கூட தெரியாம இருந்திருப்பாளே” கலவையான உணர்வுகளில் மாட்டிக் கொண்டு முழிக்க
“அப்போ அன்னைக்கி அவ கூட  மாலில் இருந்தவன்” என்ற கேள்வி தோன்ற
“கூட இருப்பவனெல்லாம் புருஷனா? எந்த ஊரு நியாயம்டா இது?” மனசாட்ச்சி அவனை திருப்பிக் கேக்க  
குழந்தையை சுமந்து அவள் என்ன மாதிரியான இன்னல்களை அனுபவித்தாலோ என்ற எண்ணம் தோன்றி கவலையில் ஆழ்ந்தான் விஷ்வதீரன்.     
அப்போ அன்னைக்கி நான் செஞ்ச தப்பால ஆரோஹி அஜய்யையும் விஜய்யையும், பெத்தெடுத்தாளா? என்ற சந்தோச பூரிப்பில் இருந்தவனின் போலீஸ் மூளை கேள்வி கேட்டது.
அப்போ அது என் குழந்தைனு தெரிஞ்சி தான் அப்பான்னு என் பேர சொல்லி இருக்கா,  என் மேல இருக்குற கோபத்தில் தான் என்ன தெரியாத மாதிரி இருக்கிறாளா? என்ன ஆபீசில் கண்டு கோவம் வரவுமில்லை, அதிர்ச்சியடையவுமில்லை. அப்போ அவளுக்கு ஏற்கனவே நான் தான் டிஜிபி னு தெரிஞ்சிருக்கு. தெரிஞ்சும் என் கிட்ட வந்து உதவி கேட்டிருக்கா” என்றவனின் மனசாட்ச்சியோ
“அவ நீ போலிஸ்னு தான் வந்திருப்பா, இல்லனா உன் பசங்கனு சொல்லாம இருப்பாளா” என்று தருணத்தில் நியாபகப் படுத்த
“அவள பலி வாங்கணும்னு நான் நினச்சா அவ என்ன நல்லா வச்சி செஞ்சிட்டா” என்று புலம்பியவன் இரண்டு குட்டி  சிங்கங்களை பார்க்க அஜய் வட நாட்டவரின் நிறத்தில் சிவப்பாகவும் விஜய் மாநிறமாக விஷ்வதீரனின் நிறத்திலும் இருக்க “என்ன ட்வின்சுன்னு  ரெண்டு பேரும் ஒவ்வொரு மாதிரி இருக்கானுங்க” என்ற கேள்வி தோன்ற
அவனின் மனசாட்ச்சியோ காறித்துப்பாத குறையாக “இவரு பெரிய பிஸ்தா போலீஸு கேக்குற கேள்வியை பாரு, ஏன் டா ஏன். நீயும் ட்வின்ஸ் தானே! நீங்க ரெண்டு பேரும் ஒரே மாதிரியாவா இருக்கீங்க, குணத்தாளையும் பழக்க வழக்கத்தாலையும் வேற வேற துருவங்களா தானே டா இருக்கீங்க” நடிகர் வடிவேலின் குரலில் கதற விஷ்வதீரனின் அடர்ந்த  மீசைக்குள் ஒழிந்திருந்த உதடுகளில் புன்னகை எட்டிப் பார்த்தன.
எனக்கே எனக்கா..
நீ எனக்கே எனக்கா..
ஹைர ஹைர ஹைரப்பா ஹைர ஹைர ஹைரப்பா” விஷ்வதீரனின் வாயோ சந்தோசமாக பாட ஆரம்பித்தது. கூடவே ஆரோஹியை சமாதானப் படுத்துவது எப்படி என்றும் மனம் யோசிக்கலானது.
அந்த தெருமுனையில் பிங்கிக்காக காத்திருந்தான் தீரமுகுந்தன். மணி பத்தை தாண்டியும் அவள் வெளியே வராமல் போக கடுப்பில் உச்சத்துக்கே சென்றவன் அவளின் அலைபேசிக்கு அழைக்க
பிங்கி தூக்க கலக்கத்திலேயே  “நீங்கள் அலைக்கும் வாடிக்கையாளர் தூங்கிக் கொண்டிருப்பதால் பதினொருமணிக்கு பிறகு தொடர்ப்பு கொள்ளவும்” என்று அழைப்பை துண்டிக்க
“சரியான கும்பகர்ணி” என்று அலைபேசியை பார்த்து திட்டியவன் “பேசாம அவ படுக்கையறைக்கே போய் பேச வேண்டியதுதான்” என்று பைக்கை விட்டு இறங்கியவன்.
“தூங்குறேன்னு வேற சொல்லுறா, குட்டச்சி என்ன நிலமைல இருக்காளோ” என்று யோசித்தவன் மீண்டும் அவளுக்கு அழைப்பு விடுத்து அவள் பேசும்முன் “உன் வீட்டுல தான் இருக்கேன் உங்கம்மா காபி செமயா இருக்கு கீழ வரியா இல்ல நான் மேல வரட்டுமா” என்று நாக்கை தட்டி சத்தம்  செய்ய
அடித்துப் பிடித்து எழுந்தமர்ந்தவள் தீரனின் குரலை அடையாளம் கண்டு கொண்டு “எதுக்கு இப்போ வீட்டுக்கு வந்திருக்கிறான்” என புலம்பியவாறே அறையின் கதவை திறக்க தான் அணிந்திருந்த இரவுடையை பார்த்தவள் “இப்படியே போன உன் மானத்த வாங்கிடுவான்” என்று குளியலறைக்குள் புகுந்தவள் குளித்தேன் என்று கையில் கிடைத்ததை அணிந்துக் கொண்டு கீழே வர அங்கே தீரனில்லை.    
நகத்தை கடித்தவாறே யோசிக்க அவளின் அலைபேசி இசைக்க அதை காதில் வைத்ததும் வெளியே வருமாறு தீரமுகுந்தன் சொல்ல “தூக்கத்தை கெடுத்ததுக்கு உன்ன வச்சிக்கிறேன்” என்று அவனை திட்டியவாறே அவனிருக்கும் இடத்துக்கு வர
தீரமுகுந்தன் அவளை பாராது எடுத்த எடுப்பிலேயே “தனியாக பேசணும்”
தலையை சுத்தி எதையோ தேடியவள் “உன் பேரென்ன” என்று நிறுத்த
ஏனோ கெத்தாக தீரன் என்று சொல்ல தோன்றாமல் “முகுந்தன்” என்று சொல்ல
“அதோ அங்க ஒரு முட்டுச்சந்து இருக்கு பாரு. யாரும் வரமாட்டாங்க போய் தனியா பேசு. இல்ல முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா முகுந்தா னு பாடு” என்றவள் திரும்பி நடக்க
அவள் சொன்ன விதத்தில் சிரிப்பு வர அவளின் கையை பிடித்து இழுத்தவன் அவள் என்ன நடந்தது என்று யோசிக்கும் முன் பைக்கில் இருத்தி பைக்கை வேகமாக கிளப்பி இருந்தான்.
“மெதுவா போடா” என்ற அவளின் குரல் காற்றோடு தான் கலந்து பறந்தது.
பிங்கியை இழுக்காத குறையாக கையை பிடித்துக் கொண்டு வந்தவன் அந்த பூங்காவிலுள்ள சிமெண்டு பெஞ்சில் அமர்த்த
“எதுக்கு இப்போ என்ன கடத்திட்டு வந்திருக்க” கண்ணை சுருக்கினாள் பிங்கி
“சத்தியமா உன்ன கல்யாணம் பண்ண இல்ல. உங்கக்காவ பத்தி தெரிஞ்சிக்க”
யாரை பத்தி கேக்கின்றான் என்று அறிந்தாலும்  “இவன் எதுக்கு ரூஹிகாவை பத்தி கேக்குறான்” என்று பொறாமை உண்டாக “எனக்கு ஒரு தம்பி மட்டும் தான் அக்கா எல்லாம் இல்ல” அவனை முறைத்தவள் முகத்தை திருப்ப
அவளின் கண்களில் வந்த பொறாமை தீயை உணராதவன் “ஆரோஹி உன் அக்கா தானே என் அண்ணன லவ் பண்ணி ஏமாத்தி கட்டின தாலியையும் கழட்டி கொடுத்துட்டு போனவ” தீரமுகுந்தன் பிங்கி சொன்னதில் எரிச்சலடைந்தவனாக எகிற  அவனின் கழுத்தை பிடித்திருந்தாள் பிங்கி.
அவன் சொன்னதை கேட்டு அவனுடனான பசுமையான கிராமத்து நினைவுகள் மனதில் வந்து போனாலும் “டேய் பனமரம் வேணாம். என் அக்காவ பத்தி ஒரு வார்த்த தப்பா பேசாத அப்பொறம் போலீஸுன்னும் பாக்க மாட்டேன் அடி பின்னிடுவேன்” என்று அவன் மேல் பாய
அவளின் கையை இழுத்து உதறியவன் “இப்போ மட்டும் அக்கா எங்கிருந்து வந்தா? உண்மைய சொன்னா கோவம் வருதா?” வெறுப்பாகவே ஒலித்தது அவன் குரல்    
“போட்டு வாங்கிட்டாண்டா போலீஸு” அவனை நொந்த பார்வை பார்த்தவளாக “டேய் அரலூசுங்களா? தாலினா என்னானு தெரிஞ்சா தானே அவ அதுக்கு மதிப்பு கொடுக்க, அவளுக்கு மஞ்சள் கயிறுன்னா என்னான்னே தெரியாது,  இதுல உன் நொண்ணன் தாலி கட்டினானாம், அத அவ கழட்டி எறிஞ்சாலாம்”  கோபம் கனக்க பொரிந்தவள் அவனை உறுத்து விழிக்க
தீரனுக்கு ஏதோ புரிவது போல் இருக்க “அப்போ அவ என் அண்ணன விரும்புறதாக சொன்னது” முகுந்தன் புருவம் நீவியவாறே “இதுக்கு என்ன சொல்ல போற?”  என்ற பார்வையை  வீச
“ஐயோ கடவுளே! உனக்கு முதல்ல இருந்து சொன்னா தான் புரியும்” பிங்கி சொல்லலானாள்.  
எங்க அப்பா ஊர்தான் திருச்சி, அம்மா சென்னை. பெரியம்மா காலேஜ் படிக்கும் போது டில்லில பேனா நண்பரா இருந்த ஒருத்தர லவ் பண்ணி வீட்டை விட்டு ஓடி போய் கல்யாணம் பண்ணி இருக்காங்க, குடும்பத்தோட தொடர்ப்பு விட்டு இருந்தவங்க திடீரென போன் பண்ணி அம்மா கிட்ட அழுது ரூஹிகாவ நீ தான் பாத்துக்கணும்னு சொல்லி அனுப்பிவச்சப்போ ஊர் திருவிழான்னு அவளையும் கூட்டிட்டு ஊருக்கு வந்தோம். வந்த அன்னைக்கே தான் உன் அண்ணனோட அறிமுகம்
தமிழ் பேசுவா, எழுத வாசிக்க தெரியாது. சில வசனங்களுக்கு அர்த்தமே தெரியாது. அப்படி அவ தமிழ் இருக்க என் கிட்ட வந்து ஐ லைக் யு னு தமிழ் ல  எப்படி சொல்றதுன்னு கேட்டா நான் தான் அர்த்தம் சொன்னேன். அத அவ உங்கண்ணன் கிட்ட சொல்ல போய்,  அக்கா அவர லவ் பண்ணுறதா நினைச்சி தாலிய கட்டிட்டாரு. தாலினா என்னன்னே அவளுக்கு தெரியாது, அம்மா தங்கத்துல போட்டிருந்தா, பெரியம்மாவ போட்டோல தான் பாத்திருக்கேன் அவங்க நோர்த் இந்தியா ல போடுற மங்கள் சூத்ரா தான் போட்டிருந்தாங்க. ஆகாஷ் கூட டெய்லி நைட்ல பேசுவா “என்னக்கா லவ்சா னு” கேட்டப்போ ஆகாஷ் என் கூடப் பொறக்காத அண்ணன்னு சொன்னா. அன்னக்கி ஆகாஷ் ஏன் வந்தார்னு தெரியல, எங்கம்மா வேற தாலியால தான் பிரச்சினைனு சொன்னதும் கழட்டி கொடுத்துட்டு போய்ட்டா. போனவ ஒரு வாரம் கழிச்சு போன் பண்ணப்போ அவள பேசவே விடாம, எங்கம்மா கண்ட படி திட்டி போன வச்சிட்டா.
ஆறு மாசம் கழிச்சு பெரியம்மாக்கு போன் பண்ணா அவங்க இறந்து விட்டதாகவும். வீட்டை வித்துட்டு அப்பாவும் பொண்ணும் அமெரிக்கா போய்ட்டதாக சொன்னாங்க. அதன் பின் அக்காவ பத்தி எந்த தகவலும் இல்ல. பெரியம்மா இறந்ததை பத்தி சொல்ல தான் போன் பண்ணி இருப்பாளோ னு தோணுது.  டில்லில என்ன நடந்ததுன்னு அவ தான் சொல்லனும், பெரியப்பாவையும், ஆகாஷையும் விட்டுட்டு ஏன் தனியா இங்க வந்தானு தெரியல. நாங்க இங்க இருக்குறதும் அவளுக்கு தெரியல, எங்களை ஏன் தொடர்ப்பு கொள்ளலனும் புரியல. அவ வாய  தொறந்தா தான் உண்டு. நேத்து தான் பாத்தோம். குழந்தையை கடத்தின டென்ஷன்ல ஒண்ணுமே பேசமுடியால. அக்காவ பத்தி சொன்னதிலிருந்து அம்மா வேற அழுது கிட்டே இருக்கா. அவள பாக்க இப்போவே கூட்டிட்டு போனு டாச்சர் வேற நைட் தூங்கவே ஒரு மணியாகிருச்சு. தூங்க விடாம நீ என்ன தூக்கிட்டு வந்து கதற கதற கத கேட்டுட்டு நிக்கிற” என்றவள் அவனை உறுத்து விழிக்க
மறுமுனையில் கேட்டுக் கொண்டிருந்த விஷ்வதீரனின் மனமோ அவனிடம் ஆயிரம் கேள்விகளோடு ஆரோஹியை சந்தித்த நாட்களில் நடந்தவைகளை ஓட்டிப் பார்த்தது.
ஆரோஹி அவனிடம் சகஜமாக, உரிமையுடன், எந்த ஒரு விஷயத்தையும் தெளிவாக பேசினாள். ஆகாஷை பற்றி பேசும் போது தீரன் பொறாமையோடு “யாரவன்” என்று கேக்க  
“ஹி இஸ் எ பிரென்ட்  அதுக்கும் மேல்னு சொன்னா அண்ணனு தான் சொல்லணும்” அன்று அவள் பேசிய ஆங்கிலம் கலந்த தமிழ் ஸ்டைல் என்று நினைத்தவன், இன்று பிங்கி சொன்னவற்றில் உண்மை புரிய மண்டை வெடித்து விடும் போல் இருக்க கண் மூடி அமர்ந்து விட்டான்.
இங்கே அலைபேசியை துண்டித்த தீரமுகுந்தன் “எனக்கென்னமோ குழந்தைகள் எங்கண்ணனோட குழந்தைகளோனு தோணுது” அவன் சொல்லி முடிக்கவில்லை
“என்ன டி.என்.ஏ  டெஸ்ட்டு பண்ணி பாத்துடலாமா?” என்று பிங்கி கண்ணடிக்க
அவளை முறைத்தவன் “அவங்களுக்குள்ள என்ன நடந்ததுன்னு அவங்களுக்கு மட்டும் தெரிஞ்சா போதும். அண்ணி அண்ணன தெரியாத மாதிரி நடிக்கிறதா அண்ணன் நினைக்கிறான். அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கணும். அத பத்தி பேச தான் உன்ன கடத்திட்டு வந்தேன்” என்று புன்னகைக்க
“சேர்த்து வச்சா எனக்கு என்ன கொடுப்ப” பிங்கி டீல் பேச
“போலீஸ் கிட்டயே பேரம் பேசுறியா? உன்ன” என்று அவளின் காதை திருக வலி தாங்க முடியாமல் கத்தியவளின் மூக்கையும் சுண்டி விட அவனை அடிக்கத் துரத்தினாள் பிங்கி.   
நேற்று இரவு நெடு நேரம் தூங்காது மொட்டை மாடியில் உலாத்தியவனை அதிகாலையிலேயே எதிர்பார்க்காத தீரமுகுந்தன்
“நைட்டு நீ தூங்கவே இல்லையா?” தீரமுகுந்தனின் குரலுக்கு திரும்பிப் பார்த்த விஷ்வதீரன்
“எல்லாமே குழப்பமாக இருக்கு. ஆரோஹிய அணுகும் முன் எல்லாம் தெரிஞ்சா நல்லா இருக்கும்” என்று சொல்ல
“நா வேணா டில்லி போய் விசாரிக்கவா”
“அதுக்கு டைமில்ல பிங்கி கிட்ட கேக்கலாம், எல்லாவிஷயமும் இல்லனாலும், சில விசயமாவது தெரிஞ்சிருக்கும்” விஷ்வதீரன் யோசனையாக சொல்ல
பிங்கி என்றதும் ஊரில் நடந்தவைகளை நினைத்து புன்னகைத்தவன். “எப்படி இருக்கா அவ” என்று கேக்க
“என்ன நக்கலா நேத்து அவளையும் கூட்டிகிட்டு தானே குழந்தையை காப்பாத்த போன” என்று சொல்ல
புருவம் நீவி யோசித்தவன் சத்தமாக சிரிக்க விஷ்வதீரன் என்ன என்ற பார்வையை வீச
“அதான் எங்கயோ பாத்தா முகம்னு தோணிருச்சா” என்று முணுமுணுத்தவன் காலையிலேயே பிங்கியை சந்திக்க கிளம்பி இருந்தான்.  
    
விஷ்வதீரனுக்கு  நியாபக சக்தி அதிகம் என்றால் தீரமுகுந்தனின் மூளையே அவனுடைய கணனி. அண்ணனின் காதலால் பாடம் கற்று காதலையே விலக்கி வைத்து விட்டான். இதுவரை எந்த பெண்ணிடமும் அதிக உரிமை எடுத்துக் கொண்டதில்லை பிங்கியை தவிர. அதை கூட அண்ணனுக்காக என்றிருந்தவன் இன்றும் அவளை அடையாளம் காணாத போதும் {அவன் உள்மனம் அடையாளம் கண்டு கொண்டதோ!} வம்பு வளர்த்து நெருங்கி இருப்பதை உணராமலேயே போனான். அவனுடைய உறைந்த இதயத்தில் காதல்தீயை பிங்கி மூட்டுவாளா?  
ஆரோஹி அழைத்து விஷ்வதீரனிடம் குழந்தைகளை அழைத்து கொண்டு வீட்டுக்கு வருமாறு சொல்ல தான் மருத்துவமனைக்கு வருகிறேன் என்று சொன்னவனை “இல்ல நீங்க வீட்டுக்கு வாங்க” என்றவள் போனை அமர்த்தி இருக்க
அவளை பற்றி அறியாதவனாக இருந்திருந்தால் அவன் சொன்னதை தான் செய்திருப்பான். ஏனோ இன்று ஆரோஹி புதிதாய் தெரிய புன்னகைத்தவன். “அது சரி வீட்டுக்கே போனா மனம் விட்டு தனியாக பேசலாம்” என்று சொல்லிக் கொண்டவன் விசிலடித்தவாறே குழந்தைகளை சலீம் பாயிடம் விட்டு விட்டு. தந்தை மற்றும் தாத்தாவின் கேள்விகளுக்கு “வந்து சொல்லுறேன்” என்றவன் ஆரோஹியை காண கிளம்பினான்.
ஆயிஷாபேகத்தை வீட்டுக்கு அழைத்து வந்தவள் அவரின் மாத்திரைகளை கொடுத்து தூங்க வைத்து குழந்தைகளுக்காக காத்திருக்க, வீட்டு அழைப்பு மணி அடிக்கவே ஆவலாக கதவை திறந்தவளுக்கு காதல் பார்வையுடன் இருந்த விஷ்வதீரன் மாத்திரம் இருக்க குழந்தைகள் எங்க என்று கேக்க வந்தவளை இழுத்து அணைத்து அவன் முத்த மிட முயல, திமிறி விலக்கியவள் அவனை அறைந்திருந்தாள்.  

Advertisement