Advertisement

                                                           அத்தியாயம் 8
வண்டியை ஓட்டிக்கொண்டிருந்த ஆரோஹி பதட்டத்தில் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தி இருக்க போலீஸ் வண்டியில் வந்த விஷ்வதீரன் வண்டியை நிறுத்தச் சொல்லி போலீஸ் ஜீப்பை ஸ்பாட்டுக்கு வரச்சொன்னவன் ஆரோஹியின் வண்டியின் அருகில் வர
ஸ்டீயரிங் வீலில் தலை சாய்ந்து ஆரோஹி  கண்ணீர் வடித்துக் கொண்டிருக்க, அவளை பார்த்தவாறே கண்ணாடியை தட்ட  பரபரவென கண்களை துடைத்துக் கொண்டவள் அங்கே விஷ்வதீரனை கண்டு கதவை திறந்து கொண்டு கீழே இறங்க  
அவளை அணைத்தவாறு அழைத்து வந்தவன் மறுபக்கமுள்ள இருக்கையில் அமர்த்தி வண்டியை ஸ்பாட்டுக்கு செலுத்த வண்டியில் மயான அமைதி நிலவியது.
வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே…
ஒரு நெஞ்சம் திண்டாடுதே…
வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன?
பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன?
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே…
ஒரு நெஞ்சம் திண்டாடுதே…
தூங்கி எழுந்த ஆரோஹி விஷ்வதீரனிடம் பணம் ஏற்பாடு செய்ய வீட்டுக்கு போக வேண்டும் என்று சொல்ல பணக்கட்டை அவளின் கையில் திணித்தவன் தான் ஏற்பாடு செய்ததாக சொல்லி பஸ் தரிப்பிடத்துக்கு அவளின் வண்டியிலேயே அனுப்பி இருக்க விஜயை இரு பெண் கான்ஸ்டபளிடம் ஒப்படைத்தான்.
அஜய்யை மீட்க வேண்டும் என்றிருந்தவளுக்கு விஷ்வதீரனின் செயல்கள் ஒவ்வொன்றும் கருத்தில் பதியவே இல்லை. பணத்தை குப்பை தொட்டியில் போட்டவள் வண்டியை குடியிருப்பு பகுதிக்கு கிளப்பி இருக்க பணத்தை பெற்றுக் கொண்டு குழந்தையை ஏதாவது செய்து விடுவார்களோ என்று அச்சம் தோன்றி மனம் பதை பதைக்க கண்ணில் நீர் நிறைந்து வண்டியும் ஆட்டம் காண வண்டியை நிறுத்தியிருந்தாள்.
அவனின் தொடுகையை கூட உணர முடியாத மனநிலையில் கண்ணீர் சிந்தியவாறே வர அவளை திரும்பி, திரும்பி பார்த்தவன் உணர்ச்சி துடைத்த முக பாவனையில் அமர்ந்து வண்டியை செலுத்தி குடியிருப்புக்குள் வர அங்கே மக்கள் கூடி விட ஆரோஹியின் வண்டியிலிருந்து இறங்கியவன் அவளின் கையை பிடித்த இறக்கி கையை விடாது கெட்டியாக பிடித்தவாறே நடக்க
போலீஸ் ஜீப்பில் இருந்து இறங்கிய கமலேசை பார்த்து குடியிருப்பு வாசிகள் கிசு கிசுக்க அவன் வெக்கித்தலை குனிந்தான்.
“குழந்தையை காப்பாத்தி உங்க வீட்டிலையா வச்சிருக்க” என்று சத்தமாக சொன்னவன் கூட்டத்தை கலைத்து விட்டு அவனையும் ஆரோஹியையும் அழைத்துக் கொண்டு ஏழாம் மாடிக்கு மின் தூக்கியில் நுழைய கூட்டம் சலசலப்போடே கலைந்தது.
எந்த வீடு என்று கேட்டுக்கொண்டு அவனை முன்னால் அனுப்ப கதவு திறந்ததும் ஆரோஹி அவனையும் தள்ளிக்கொண்டு உள்ளே சென்று அங்கே இருப்பவர்களை பொருட்படுத்தாது “அஜய், அஜய்” என்ற வாறே அறையினுள் புக அன்னையின் குரல் கேட்டு  கட்டிலில் அமர்ந்திருந்த அஜய் துள்ளிக் குதித்து ஓடி வந்து அன்னையை அணைத்திருக்க பிங்கி ஆரோஹியை அதிர்ச்சியாக பார்த்தாள்.
விஷ்வதீரன் பெற்றோர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள அவர்கள் கேள்வி  மேல் கேள்வி கேட்க அவர்களின் எந்த கேள்விக்கும் பதிலளிக்காதவன் சோபாவில் அமர ஓய்ந்து போனவர்களாக
“எங்க பசங்க என்ன தப்பு பண்ணாங்க” என்ற கேள்வியை ஒருவர் கேக்க
“குட். இது கேள்வி” என்றவன் கமேலேஷின் வாக்கு மூலத்தையும், மற்ற பசங்களின் வாக்கு மூலத்தையும் தீரமுகுந்தன் அவர்களுக்கு ஒளிபரப்பு செய்ய அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்ற பெற்றோர்கள் பசங்களை அடிக்க ஆரம்பிக்க தீரன்ஸ் அவர்களை தடுக்க  வில்லை.
ஆரோஹியும் அஜய்யும் அறையில் தன் உலகில் இருக்க பிங்கி ஜன்னலின் அருகில் இருந்தவாறு அவர்களை கண்கள் கலங்க பாத்திருக்க அஜய் அவளை அருகில் அழைத்து அன்னைக்கு போலீஸ் என்று அறிமுக படுத்தி வைக்க ஆரோஹி அவளின் கைகளை பிடித்து நன்றி கூற ஆரோஹியின் கைகளிலேயே தலையை வைத்து கண்ணீர் விட்டவள்
“பெரியம்மாவின் சாவுக்கு கூட வரமுடியலையே! என்று கண்ணீர் சிந்த “யார் இவள்” என்ற பார்வை தான் ஆரோஹியிடம்.
“யார் நீங்க” என்று ஆரோஹி கேக்க கண்களை விரித்து அவளை ஏறிட்டாள் பிங்கி.
ஆரோஹியை கண்டதும் தீரமுன்னுந்தனுக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது.  அண்ணனிடம் இப்போது எதுவும் கேக்க முடியாத சூழ்நிலையால் அமைதி காத்தவன் அங்கே நடக்கும் பசங்களுக்கான வைத்தியத்தை பாத்திருக்க
காலேஜ் பையனிடம் திரும்பிய விஷ்வதீரன் “உன் பெற்றோர் எங்க” என கேக்க அவன் பதில் சொல்லும் முன் பசங்களின் பெற்றோர் அவனை குற்றவாளி கூண்டில் ஏற்றி இருந்தனர்.
“ஏன் இவன் இப்படி பண்ண சொன்னதும் பால் குடிக்கும் பாப்பாங்க செய்ஞ்சிருச்சோ! உங்க பசங்கள நீங்க சரியா வளத்திருந்தா எல்லா விஷயத்தையும் வீட்டுல சொல்லி இருப்பாங்க, அதிகமா செல்லம் கொடுக்குறது, கேட்ட உடனே எல்லாம் வாங்கி கொடுக்குறதுனு நீங்க ஆசைகளை எதிர் பார்ப்புகளை வளர்த்து  வழி கெடுத்து விட்டு இவன குறை சொன்னா” என்று அவர்கள் மீது காய்ந்தவன்
“இனிமேல் உங்க பசங்க உங்க பொறுப்பு. பண்ண குத்ததுக்கு தண்டனையா விடுமுறை காலத்துல அனாத ஆசிரமங்களில் தங்கி இருந்து அங்க இருக்குற பசங்களுக்கு எல்லா விதமான உதவியும் பண்ணனும். அந்த குழந்தைகளின் எல்லா வேலைகளிலும் பங்கெடுக்கணும். அவங்களுடைய பொறுமை, சகிப்பு தன்மை எல்லாம் கத்துக்கணும். வாக்கு மூலம் கொடுத்தது என் கிட்டயே இருக்கும்” என்று அவர்களை அனுப்பியவன்,
காலேஜ் பையனிடம் திரும்பி “உன் பேரென்ன? உண்ண பெத்தவங்க எங்க இருக்காங்க?” என்று கேக்க
பயத்தில் நடுங்கியவாறே பெயரை சொன்னவன் “அமெரிக்காவில் ஜாப் செய்றாங்க, நான் இங்க தனியா வீடெடுத்து தங்கி இருக்கேன்” என்று சொல்ல
“அப்பா, அம்மா சம்பாதிச்சு அனுப்புறது பத்தாதென்று குழந்தைகளை கடத்தி சம்பாதிக்கிறியா?” என்று ஒரு சுவிங்கத்தை வாயில் திணித்தவன். “அவனுங்க மைனர் ஆனா நீ மேஜர் கேஸ உன் மேல போட்டா எத்துன வருஷம் சிறை தெரியுமா?” என்று யோசிக்கும் முக பாவனையை கொடுக்க
“இந்த ஒரு கேஸ் மட்டுமா? கஞ்சா, அபின்” என்று தீரமுகுந்தன் இழுக்க
“சார் நீங்க என்ன சொன்னாலும் செய்றேன் சார், அந்த பழக்கத்தால காசு தேவ பட்டதால பசங்கள கூட்டு சேர்த்து கிட்டு குழந்தைகளை கடத்தினேன். மத்த படி அவங்கள ஒன்னும் பண்ணல” என்று சொல்ல
“அப்போ அபின், கஞ்சா பழக்கமும் இருக்கு, பசங்களுக்கும் பழக்கி விட்டியா?’ என்று விஷ்வதீரன் கோபக் குரலில் கேக்க
வாய் தந்தியடிக்க “அபின், கஞ்சா இல்ல சார் இது வேற ஹோட்டல் ப்ளூமூன் பார்ல மட்டுமே கிடைக்கிற மெஸ்மரிசம். ரொம்ப காஸ்டலி. பசங்களுக்கு இது பத்தி தெரியாது” என்று எல்லாவற்றையும் சொல்ல
ஹோட்டல் ப்ளூமூன் என்றதும் தீரன்களின் பார்வை ஒருவரை ஒருவர் தொட்டு மீள
“உனக்கு யார் கொடுப்பாங்க” என்று தீரமுகுந்தனிடமிருந்து கேள்வி வர
“பாருக்கு போய் ஒரு கோர்ட் வார்ட் சொல்லணும்”
“கோர்ட் வோர்ட் எதுக்கு” விஷ்வதீரனின் பார்வை அவனின் மேல் கூர்மையாக விழ
“அந்த சரக்கு மார்க்கட் வராது, அத யார் தயாரிக்கிறாங்க, எங்க இருந்து கொண்டு வாரங்க எல்லாம் தெரியல, சரக்கு வேணும்னா மொதநாளே பணம் கட்டணும். போலீஸ் மோப்பம் பிடிக்க கூடாதுன்னு  ரெகுலர் கஸ்டமருக்கு பாருக்குள்ள போகும் பொது கோர்ட் வார்ட் சொல்லப் படும்.
“புதுசா யாராவது அத கேட்டா?”
“உடனே அவனை புடிச்சி அடிச்சி அதன் பின் தான் அவனை பத்தி விசாரிப்பாங்க பணக்கார பையன்னா மாத்திரம் அத விப்பாங்க” என்று சொல்ல
இப்போ உன் கிட்ட மெஸ்மரிசம் இருக்கா? நிறுத்தி நிதானமாக கேக்க
“இல்ல வாங்க கைல காசு இல்லாததால தான் குழந்தையை கடத்தினேன்” தலை குனிந்தவாறே சொல்ல  
“தீரா இவன நம்ம இடத்துக்கு கொண்டு போய் ரகசியமா டிரீட்மென்ட் பண்ணு” என்று சொல்ல அவன் அலறியே விட்டான்.
“மெடிக்கல் டிரீட்மென்ட்ட பய புள்ள போலீஸ் டிரீட்மெண்ட்டுன்னு தப்பா புரிஞ்சிகிட்டான்” என்று விஷ்வதீரனை பார்த்து கண்சிமிட்டியவன் அவனின் கழுத்தில் ஒரு அடி கொடுக்க அவன் மயங்கி விழ அவனை தூக்கிக் கொண்டு நகர்ந்தவன் விஷ்வதீரன் பக்கம் திரும்பி
“உள்ள குட்டச்சி இருக்கா அவள பத்திரமா அவ வீட்டுக்கு நீயே கொண்டு போய் விடு” என்றவன் பிங்கியின் அலைபேசியையும், வண்டிச் சாவியையும் விஷ்வதீரன் மீது எறிய
இரண்டையும் இரண்டு கைகளால் கைப்பற்றி “யாரடா அது” என்று விஷ்வதீரன் யோசிக்க
“குட்டச்சி உண்ண பெத்த வங்க உன்ன வச்சி  செய்ய போறாங்க” என்று கேலிப்புன்னகையுடனையே மின்தூக்கியை நோக்கி நடந்தான்.
ஆரோஹி “யார் நீங்க” என்று கேட்டதும் அஜய்யின் பக்கம் திரும்பி
“பார்டா உங்கம்மாக்கு என்ன தெரியலயாம். நான் உன் சித்திடா” என்று அவனை அணைக்க ஆரோஹி முற்றாக குழம்பிப் போய் பார்க்க
“ரூஹி தீதி நான் பிங்கி” என்று கண்ணீரோடு புன்னகைக்க பிங்கி என்றதும் கண்களை விரித்தவள்
“ஹேய் பிங்க் நீ வளந்துட்ட டி” என்று அவளை அணைத்து கொண்டவள் நலம் விசாரிக்க
“போ.. கா.. உன்னால என்ன அடையாளம் கண்டுக்க முடியல ஒரு கணம் உனக்கு அம்னிசியாவோன்னு நினைச்சிட்டேன்” என்று நக்கல் குரலில் சொல்ல
அவளில் முதுகில் அடித்தவள் அவளை அணைத்துக் கொள்ள அவர்களை விஷ்வதீரன் சுவிங்கத்தை மென்றவாறே கண்ணிமைக்காது பாத்திருக்க அவனை கண்டு அஜய் “டாடி” என்று கத்தியவாறே அவனின் கால்களை கட்டிக்க கொள்ள அதிர்ச்சியில் உறைந்தனர் ஆரோஹியும், விஷ்வதீரணும்.
சுவிங்கம் மெல்லும் விஷ்வதீரனை அடையாளம் கண்டு கொண்ட பிங்கியின் வாய் “அட நம்மாளு” என்று முணுமுணுக்க அஜய்யிடம் சென்றவள்  அவனை தூக்கிக் கொண்டு கீழே செல்ல “சாரி” என்ற ஒற்றை வார்த்தையோடு ஆரோஹி அவனை கடக்க குழந்தை சொன்ன ஒற்றை வார்த்தையில் ஸ்தம்பித்து நின்று விட்டான் விஷ்வதீரன்.
வண்டியில் வளவளன்னு பேசும் பிங்கி கூட மௌனமாகவே வந்தாள்.  அவளின் சிந்தனையோ “அக்காக்கு இவங்க யாறென்னே தெரியாது போல இருக்கே! இவரு வேற தாலிய கட்ட,  ஒரே நாள்ல அத கழட்டிட்டா என்ன மனநிலைமைல இருக்காரோ? யோசிக்கிறது பார்த்தா என்ன செய்ய போறாரோன்னு பயமா இருக்கு. அக்கா கல்யாணம் பண்ணி குழந்தை வேற இருக்கே! கடவுளே வை?  வை? வை? வை இப்படி பண்ணிட்ட” என்று இருவரையும் மாறி மாறி பார்க்க
அஜய் ஆரோஹியின் மேல் தூங்கி இருக்க ஆரோஹியியும் கண்களை மூடி இருக்கையில் சாய்ந்திருக்க விஷ்வதீரன் பலத்த யோசனையோடு வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான்.
பிங்கியை வீட்டில் இறக்கி விட ஆரோஹியை வீட்டினுள் வரும் படி வற்புறுத்தலானாள் பிங்கி.
“இல்ல பிங்க் வேறொருநாள் வரேன்” என்றவளை
“அம்மா மேல கோவமா? அதான் உள்ள வராம போறியா” கவலையாக கேக்க
“இல்ல பிங்க் விஜய் வேற தனியா இருப்பான், அத்த வேற ஹாஸ்பிடலில்” என்று இழுக்க
“ஹேய் ட்வின்சா சூப்பர்” என்றவள் விஷ்வதீரனை  பார்க்க அவனின் முகம் வெறுமையாக இருந்தது. ஆரோஹியின் அலைபேசி எண்ணை பெற்றுக் கொண்டவள் அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு “அட மணி ஒம்பது தாண்டிரிச்சு பிங்கி இன்னக்கி நீ செத்த”  வீட்டினுள் வர
“ஏம்மா ஒரு குழந்தையை காப்பாத்த போய் இருக்க போன் பண்ணி சொல்லி இருக்கலாம்ல” தங்கதுரை ஆதங்கப்பட்டு சொல்ல
“அவ போன் தான் சுவிட்ச் ஆப்னு வருதே! நாங்க இங்க பயந்துகிட்டு இருக்கோம் நல்ல வேல டிஜிபி யே போன் பண்ணி சொன்னாரு” புஷ்பா சொல்ல
அகில் அவளை அணைத்து “வருக வருக வீர மங்கையே” என்று வாழ்த்து சொல்ல
“நாம எப்போடா போன சுவிட்ச் ஆப் பண்ணோம், என் போன் எப்போ விஷ் கிட்ட போச்சுன்னே எனக்கு தெரியல, இறங்கும் போது தானே கொடுத்தான்.  அவன் தான் டிஜிபி யா” முகம் மலர்ந்தவள் ஆரோஹியை பற்றி சொல்ல புஷ்பா அழுது கரையலானாள்.   
ஆரோஹியுடன் தனிமையில் ஒரு பயணம், கண்ணாடியை கொஞ்சமாக திறந்தவனின் தலைமுடியை  குளிர் காற்று தீண்டிச்செல்ல சூடேறிய மூளைக்கு இதமாக இருந்தது, என்ன தான் அவளை பலி வாங்க நெஞ்சம் துடித்தாலும் அவளின் அருகாமையை ரசிக்கவே செய்ய கண்கள் மூடி அமர்ந்திருந்த அவள் தோற்றத்தை ரசித்தவன் ஓய்ந்து  போய் இருந்த அவள் தோற்றம் கண்ணில் பட மூளையயும் மனமும் அவளுக்காக அவனோடு சண்டையிட ஆரம்பித்தது.
ஒளியிலே தெரிவது தேவதைய
உயிரிலே கலந்தது நீ இல்லையா
இது நேசமா நெசம் இல்லையா
உன் நெனவுக்கு தெரியலையா
கனவிலே நடக்குத கண்களும் காண்கிறதா காண்கிறதா (ஒளியிலே )
சின்ன மனசுக்கு வெளங்க வில்லையே நடந்தது என்னென்ன
என்ன எண்ணியும் புரியவில்லையே நடப்பது என்னென்ன
கோவில் மணியை யாரு அடிக்கிற
தூங்க விளக்கை யாரு ஏத்துற
ஒரு போதும் அணியாம நின்று ஒளிரனும் (ஒளியிலே )
ஆரோஹியை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு வந்த விஷ்வதீரன் ஆரோஹியின் மடியில் தூங்கி கொண்டிருந்த அஜய்யை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு நடந்தவாறே “விஜய்ய இங்க கூட்டிட்டு  வர சொல்லிட்டேன். உன் அத்தைய நாளைக்கி தான் டிஸ்டாஜ் பண்ணுவாங்கலாம். வீட்டுக்கு போறியா? இல்ல இங்கயே” என்று இழுக்க
விஷ்வதீரன் அஜய்யை தூக்கி தோளில் போட்டதும் குழந்தைகளுக்கு தந்தை இருந்திருந்தால் இப்படித்தான் இருந்திருப்பான் என்று தோன்ற அவன் பேசியதில்
“அவங்க இல்லாம நா தனியா இருந்ததே இல்ல இங்கயே இருக்கேன்” என்றவளை வெறுப்பாக பார்த்தான் விஷ்வதீரன்
“புருஷன் வேணாமாம் அவன் அம்மா மட்டும் வேணுமாம்” என்று அவளை முறைத்தவன் “அப்போ பசங்கள நான் என் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன், காலைல கூட்டிட்டு வாரேன்” என்று சொல்ல
ஒரு கணம் அதிர்ச்சியாக பார்த்தவள் “உங்களுக்கு எதுக்கு சார் வீன் சிரமம், நான் பாத்துக்கிறேன்” தன்மையாக சொல்ல
அதற்கும் அவளை முறைத்தவன், ஆயிஷாபேகத்தின் அறை வந்த உடன்  அவளை விட்டவன், கான்ஸ்டபிளுடன் விஜய் வரவே அவர் கொண்டு வந்த உணவுப்பொதியை அவள் கையில் திணித்து விட்டு “அவங்களுக்கு ஒண்ணுமில்ல நீ சாப்பிட்டுட்டு நல்லா தூங்கு” விஜய்யையும் ஒரு கையில் பிடித்தவாறு அவளின் பதிலையும் எதிர்பார்க்காது திரும்பி நடக்கலானான்.  
அவனை ஆச்சரியமாக பார்த்தவள் இப்படியும்  நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் என்று நன்றி கலந்த பார்வையோடு அவன் செல்வதையே பாத்திருந்தாள்.   
குழந்தைகளோடு வீடு நோக்கி சென்று கொண்டிருந்தவனின் சிந்தனையெல்லாம் ஆரோஹியை பலி வாங்க அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதே!
“என்னமா நடிக்கிறா அவளை தொட்டு பேசினாலும் கண்டுக்காம இருக்கிறா” ஏதோ ஒரு கெட்ட வார்த்தையால் அவளை திட்டியவன்  “உன் பசங்கள  தூக்கி உன்ன என் காலுக்கு கீழ விழ வைக்கணும்னு நினச்சேன் முடியாம போச்சு, உன் பையன் “டாடி” னு கூப்பிட்டு அடுத்த பிளானுக்கு வழிய போட்டு தந்துட்டான். புருஷனுமில்லாம இருக்க உன் பசங்களுக்கு அப்பாவானா என்ன தப்பு? என் பக்கத்துலயே உன்ன வச்சி தினம், தினம் டோசேர் பண்ணுறேண்டி” மனம் முழுவதும் ரணமாக கொதிக்க புலம்பியவனின் சிந்தனையை கலைத்தான் விஜய்
“அங்கிள் நாம இப்போ எங்க போறோம்”
“வீட்டுக்கு” என்றவன் வீட்டாரை எப்படி சமாளிப்பது என்று யோசிக்க
“யார் வீட்டுக்கு”
“நம்ம வீட்டுக்கு, இமிமேல் என்ன டாடினே கூப்பிடு”
“டாடியா?” விஜய் அவனை நன்றாக உற்று பார்த்து விட்டு சந்தோசமாக தலையசைத்தவன்
“உங்க நேம்”
“விஷ்வதீரன்”
“விஷ்” என்று சொல்லிப் பார்த்தவன்  “நைஸ் நேம்” அடுத்து என்ன கேட்டிருப்பானோ வீடும் வரவே வண்டியை நிறுத்தி விட்டு இறங்கியவன் அஜய்யை தூக்க
“யார் பசங்க டா இது” என்றவாறு திருமாறன் வெளியே வர
“என் பசங்க” என்றவன் விஜய்யை அழைத்துக் கொண்டு உள்ளே செல்ல அவன் பின்னாலேயே வந்தவர்
“என்னடா சொல்லுற?” அவனின் முக பாவனையில் அங்கே வந்த தீரமணியிடம் “அப்பா இவன் என்னென்னமோ சொல்லுறான்” என்று புகார் வாசிக்க
“என் டாடிய கேள்வி கேக்க நீங்க யாரு” விஜய் அவரை முறைக்க
“அவனை பெத்தவன் டா” என்று பதிலுக்கு குழந்தையை முறைத்தவரை
“அப்போ கேளுங்க” என்ற பார்வையோடு “டாடி பசிக்குது” என்று விஜய் சொல்ல அங்கே வந்த சலீம் பாய் அவனை தூக்கியவாறே சாப்பாட்டறைக்கு செல்ல விஷ்வதீரன் அஜய்யை தூக்கிக் கொண்டு தனதறைக்கு சென்றான்.
அவனும் எதிர் பார்க்காதது அவன் சொன்ன உடன் விஜய் ஏற்றுக் கொள்வான் என்று “அது சரி அவங்கம்மா போலயே இருக்கானுங்க, எவன அப்பன்னு  சொன்னாலும் ஏத்துக்கிறானுங்க” குழந்தை என்றும் பாராது ஆரோஹியை திட்ட சந்தர்ப்பம் பாத்திருந்தவன் திட்டித்தீர்த்தவாறே குளியலறைக்குள் புகுந்து குளித்து விட்டு வர விஜய் ஸ்கூபியோடு விளையாடிக் கொண்டிருக்க சாப்பாட்டு மேசையில் அமர்ந்து சாப்பிடலானான்.
திடீரென இரண்டு குழந்தைகளை கூட்டிக் கொண்டு வந்ததுமில்லாது அவர்களுக்கு தான் தான் அப்பா என்று சொல்லும் மகனை என்ன சொல்வது? அப்போ இவர்களின் தாய் என்ன ஆனாள்? என்ற கேள்வியோடு அப்பா, தாத்தா இருவரும் யோசனையில் விழ
அங்கே வந்த தீரமுகுந்தனிடம் விஷயம் பகிரப்பட்ட அது யார் குழந்தைகள் என்று அறிந்துக் கொண்டவன் விஷ்வதீரனிடம் “இந்த சினிமால வர்ற மாதிரி நீ டில்லி போன இடத்துல கசமுசாவாகி,  அதனால குழந்த பொறந்து, இத்துன வருஷம் கழிச்சு தான் உனக்கு தெரிஞ்சதா?” என்று கண்சிமிட்ட ஒரு வேல அப்படியும் இருக்குமோ என்ற எண்ணம் விஷ்வதீரனின் மனதில் தோன்ற சாப்பிட்டு கொண்டிருந்தவனின் கை வாயருகே தானாய் நின்று விட்டது.

Advertisement