Advertisement

                                                   அத்தியாயம் 6
தூங்கிக் கொண்டிருந்த ஆரோஹியையே கண்ணிமைக்காமல் பாத்திருந்தான் விஷ்வதீரன். அவனின் எண்ண அலைகள் அவளை முதல் முதலாக பார்த்த நாளுக்கு மனம் அவனை இழுத்து சென்றது.
ஊரில் திருவிழாவிற்கு சென்றிருந்த தருணம். தீரமுகுந்தனை விட்டு விட்டு ஊரில் ஒரு ரவுண்ட் போலாம்னு நடையை எட்டிப் போட்டவன்  கடைவீதிக்குள் நுழைய ஒரு பெண்ணின் சிரிப்பு சத்தம் அவனை ஈர்க்கவே அந்த பக்கம் சென்றவனின் கண்ணில் விழுந்தாள் ஆரோஹி.
எங்கேயோ  பார்த்த மயக்கம்
எப்போதோ  வாழ்ந்த நெருக்கம்
தேவதை  இந்த சாலை  ஓரம்
வருவது  என்ன மாயம்  மாயம்
கண்  திறந்து  இவள் பார்க்கும்  போது
கடவுளை  இன்று நம்பும்  மனது
இன்னும்  கண்கள் திறக்காத  சிற்பம்
ஒரு  கோடி பூ  பூக்கும் வெட்கம்
தாவணியில், ரெட்டை ஜடையில், குங்கும பொட்டிட்டு மல்லிகை சாரம் சூடி அவளின் அழகோ விஷ்வதீரனின் கண்ணை நிறைத்தது. பல பெண்களோடு சாதாரணமாக பேசி பழகி இருந்தாலும் எந்த பெண்ணிடமும் தோன்றாத ஈர்ப்பு ஆரோஹியை பார்த்த உடன் மனதில் தோன்றிய பரவசம் காதல் தான் என்றே முடிவு செய்திருந்தான் தீரன். கனவுகளை சுமந்த பத்தொன்பது வயதில் விஷ்வதீரனின் மனதுக்குள் நுழைந்தாள் ஆரோஹி.
எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ அது ஏதோ அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது
அதை அறியாமல் விட மாட்டென்
அது வரை உன்னை தொட மாட்டேன்
தீரனின் மனமோ பாடல் பாட ஆரம்பிக்க எங்கே இருக்கிறோம் என்பதையும் மறந்து அவளை ரசிக்கும் வேலையை மட்டும் செவ்வனே என்று செய்ய ஆரம்பித்தான்.
குல்பி ஐஸ் ஐ சுவைத்தவாறே அவள் தலையை ஆட்டி ஆட்டி ஆங்கிலம் கலந்த தமிழில் பேசும் விதம், முதல் முதலாக எல்லாவற்றையும் பார்ப்பது போல் ஆர்வமாக பார்க்கும் அவள் கண்ணில் வந்து போகும் ஆச்சரியங்கள், யாராவது ஏதாவது சொல்வார்களோ! என்று அஞ்சாமல் அனைவருடனும் பேசி சத்தமாக சிரிக்கும் விதம் என்று அவளின் வித்தியாசமான பரிமாணங்களில் முற்றாக அவள் காலடியில் விழுந்தான் விஷ்வதீரன்.
ஒரு குட்டிப் பொண்ணு வேற அவள் செய்வதெல்லாம் செய்தவாறே அவளோடு ஜோடி போட்டுக் கொண்டு சுத்த இவன் அவர்களின் பின்னால் பாடிகார்ட் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.
“அக்கா அங்க பாரு ராட்டினம்” அந்த குட்டி சொல்ல
“நா இங்கயே இருக்கேன், நீ போ என்று குல்பியை ருசித்தவாறே அவள் சொல்ல அந்த குட்டி கெஞ்சலானாள்   
இந்த மாதிரி உயரத்துல போய் கீழ பாக்கும் போது தலசுத்தும், என்னால முடியாது நீ போ” என்று ஆரோஹி சொல்லியும் கெஞ்சிக் கூத்தாடி அவளை ராட்டினத்தில் ஏற்றி இருந்தாள் அந்த வாலு.  ராட்டினம் சுற்ற ஆரம்பித்ததும் ஆரோஹி கத்திய கத்தலில் குட்டி அரண்டு விட அங்கே இருந்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.   
அவள் ஏற மாட்டேன் என்றதும் “இதுல அப்படி என்ன இருக்கு” என்று அவர்களையே பாத்திருந்த தீரனுக்கு அவள் பயத்தில்  கத்தியதும் முதலில் சிரிப்பு வந்தாலும் ராட்டினத்தை நிறுத்த சொன்னவன் அவளை கீழே இறக்கி, உரிமையுடன் கையை பிடித்து அழைத்து வந்து, அமர்த்தி சோடாவை புகட்ட பயத்தில் நடுங்கி கொண்டிருந்தவளோ! அவனின் இடுப்பை இறுக கட்டி அணைத்துக் கொண்டாள். அந்த  கூட்டத்தில் இவர்களை கவனிக்க எவருமில்லை.
அவளின் இச்செய்கையால் முதலில் அதிர்ந்தவன்  “அவளுக்கில்லாத உரிமையா” என்று முகம்கொள்ள புன்னகையுடன் அவளின் தலையை தடவ
“அக்கா ஆர் யூ ஓகே? சாரி” என்ற வண்ணமிருந்தாள் அந்த சின்ன சிட்டு.  
ஒருவாறு சமநிலைக்கு வந்தவள் குட்டியை அணைத்து கொண்டு “எனக்கு ஒண்ணுமில்ல டி. மேல ஏறினா கொஞ்சம் பயமா இருக்கு” என்று மாத்திரம் சொன்னவள் அப்பொழுது தான் அங்கே நின்று கொண்டிருந்த விஷ்வதீரனை பார்த்து சினேகமாக புன்னகைத்து நன்றி சொல்ல
“நன்றியெல்லாம் எதுக்கு. ஐம் விஷ்வதீரன்” என்று அறிமுகப்படுத்திக் கொள்ள
டில்லியில் பிறந்து வளர்ந்த ஆரோஹிக்கு ஆண், பெண் நண்பர்களும் அதிகம், பாகுபாடின்றி சினேகமாக பழகுபவளுக்கு தானாய் வந்து உதவி செய்த தீரனை பிடித்து போக
சுவிங்கத்தை மென்றவாறே பேசும் விதம் அவளை ஈர்க்க, அவனின் கையை பிடித்து குலுக்கியவாறே “ஐம் ஆரோஹி” என்று சொல்ல
அவள் கையை பிடித்ததில் வானில் பறந்து கொண்டிருந்த விஷ்வதீரேனோ! “ஆரோஹி… என் ஆரா” என்று சொல்லிப் பார்த்துக் கொண்டவன் சிறிதும் கையை விடும் எண்ணமில்லாமல் அவளிடம் பேச்சை வளர்க்கலானான்.
அவர்களின் கையை இழுத்து பிரித்து விட்ட அந்த வாலு “இப்படியே பேசிக்கிட்டு இருந்தா? வா அந்த பக்கம் போலாம், அம்மா தேடும் முன் வீட்டுக்கு வேற போனும்” என்று சினுங்க தீரனின் முகம் தொங்கி விட்டது.
“ஏய் விஷ் நீயும் எங்க கூட வரியா?” அவள் தோழமையாக கேக்க
தனது பெயரை சுருக்கி செல்லப்பெயர் வைத்து விட்டாளா? ஒரு வேல அவளுக்கும் என்ன பார்த்த உடனே பிடித்து விட்டதா என்று அவனின் மனம் குத்தாட்டம் போட அவர்களுடன் கிளம்பினான்.
பாவம் அவன் அறியாதது ஆரோஹி தமிழில் பேசினாலும் தமிழ் நாட்டுக்கு வந்த உடனே சித்தியுடன் ஊருக்கு புறப்பட்டு வந்து விட்டாள் என்றும், தமிழர்களின் பழக்க வழக்கங்கள், சாத்திர சம்பிரதாயங்கள் எதுவும் அறியாமல் இருக்கிறாள் என்றும். ஆண் பெண் பேதமின்றி தோழமையாய் எல்லாரிடமும் பழகுபவள் விஷ்வதீரனின் நீண்ட பெயரை சுருக்கி கூப்பிட இலேசாக ஆங்கில பெயர் போல் கூப்பிட்டது டில்லியில் அனைவரும் அந்த மாதிரி ஆங்கில பெயரோடு திரிவதாளையுமன்றி வேறெந்த எண்ணமும் அவள் மனதில் இல்லை என்பதுமே.    
இதை எதையுமே அறியாமல் அவளை பார்த்த உடன் அவள் அணிந்திருந்த உடை, பேச்சில் கவரப்பட்டு காதலில் விழுந்தது விஷ்வதீரனின் குற்றமா?  உதவி செய்தவனை உடனே தோழனாக ஏற்றது ஆரோஹியின் குற்றமா?
“இந்த விஷ்வா காலையிலேயே சொல்லாம கொள்ளாம எங்க போறான்னு தெரியலையே இன்னைக்கு வேவு பாக்க வேண்டியது தான்”
கடந்த இரண்டு நாட்களாக அண்ணன் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டிலிருந்து காலையில் போறவன் மாலையில் தான் வீடு வருகிறான். ஊருக்கு போனா போர் அடிக்கும் என்று சொன்னவன் காலையிலேயே எங்கே போகிறான் என்று சந்தேகம் வர அவனுக்கு முன்னாள் கிளம்பி அவன் வரும் பாதையில் மறைந்திருந்தவன் அவன் கடந்து சென்றதும் அவனை பின் தொடரலானான் தீரமுகுந்தன்.
அண்ணனை தொடர்ந்து வந்தவன் அவன் ஒரு பெண்ணிடம் சகஜமாக பேச “இதானா மேட்டரு” என்று புன்னகைத்தவன் அதிரடியாக அவர்கள் முன் தோன்ற வேறு வழியில்லாது தம்பியை அறிமுகப்படுத்திவைக்க ஆரோஹி அவனுக்கும் கை கொடுத்து அறிமுகப் படுத்திக்க கொள்ள விஷ்வதீரனின் காதில் புகை வராத குறை தான்.
“என் தம்பி என்றதால் தான் கை கொடுத்திருப்பா” என்று தன்னையே சமாதானப் படுத்திக்க கொண்டவன், ஏற்கனவே மனச விட்டு பேச முடியாம குட்டி வாலு பின்னாடியே வருது, இதுல இவன் வேற என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொள்ள
அண்ணனின் முகத்தை வைத்தே அவன் மனதை கணித்தவன், அருகில் இருந்த குட்டிப் பெண்ணிடம் உன் பேரென்ன” என்று கேக்க
“பிங்கி” என்றவள் “அக்காதான் பேர் வச்சாங்க நல்லா இருக்கா?” சினேகமாக சிரிக்க
“வா அந்த பக்கம் நிறைய பொம்மை இருக்கு வாங்கித் தாரேன்” என்று சொல்ல
அவனை நன்றாக முறைத்தவள் “பொம்மைகளோடு விளையாடுற வயசா எனக்கு” என்று கேக்க
அவளை மேலும் கீழும் பார்த்தவன் “எட்டு வயசு தானே இருக்கும் உனக்கு, இந்த வயசுல பொம்மைகளோடு விளையாடாம வேற எதோட விளையாடுவ” கேலியாகவே கேக்க
பிங்கி பன்னிரண்டு வயதிலும் எட்டு வயது போல் இருக்க புஷ்பா அவளை டாக்டரிடம் அழைத்து செல்ல “உயரம் குறைவெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லமா, பதினஞ்சு வயசாகோயும் வயசுக்கு வரலைன்னா வாங்க” என்று சொல்லி விட பிங்கி சுத்தந்திரமாக சுத்தி திரியலானாள்.
“எனக்கு எட்டு வயசுன்னு நான் சொன்னேனா? நீ பனமரத்துல பாதி வளர்ந்தா அது உன் தவறு, எனக்கு பன்னண்டு வயசு” என்று சொன்னதும்
சத்தமாக சிரித்த தீரமுகுந்தன் “குட்டச்சி குட்டச்சி” என்று கேலி செய்ய அவனை பிங்கி அடிக்கத் துரத்த விஷ்வதீரனையும் ஆரோஹியையும் சுற்றிவந்தவன்
“நீ உன் வேலைய பாரு இந்த குட்டச்சிய நான் பாத்துக்கிறேன்” என்று அண்ணனை கட்டியணைத்தவாறே சொல்லி விட்டு ஓட பிங்கி அவனை துரத்த ஆரம்பித்தாள்.
தீரமுந்தன் விஷ்வதீரனுக்கும், ஆரோஹிக்கும் இடையில் தடையாய் இருந்த பிங்கியை வம்பிழுத்து பிரித்து அகன்று விட ஆரோஹியிடம் இன்னும் நெருங்கிப் பழகலானான் விஷ்வதீரன்.
ஆரோஹி சகஜமாக எல்லாவற்றையும் பேசினாலும் தோழமை என்ற எல்லையை கடந்து செல்லவில்லை. ஆனால் அவள் டில்லியில் பிறந்து வளர்ந்ததினாலோ! ஆகாஷிடம் உரிமையாக பழகுவதினாளையோ! அல்லது விஷ்வதீரனை கண்ட நொடியில் பிடித்து போனதாலையோ! அவனின்  கையை உரிமையுடன் பிடித்து பேசவும் தயங்க வில்லை.
அவளுக்கு சாதாரண செயலாக இருந்து அனைத்தும் விஷ்வதீரனுக்கு காதலாக தெரிய தன் காதலை அவளிடம் சொல்லி விட முடிவு செய்தவன் அவளை மாந்தோப்புக்கு வர சொல்ல மாம் பழம் பறித்து தர சொன்னவளின் அழகில் மயங்கி நின்றவன் காதலை சொல்லாமலேயே ஒரு வித மயக்க நிலையிலேயே வீடு திரும்பினான்.
“டேய் விஷ்வா அந்த பொண்ண பார்த்து ஒரு வாரம் கூட இல்லையே லவ் னு அலையுற அப்படி என்ன தான் இருக்கோ இந்த பொண்ணுங்க கிட்ட சும்மா லோலோனு அலையுறானுங்க” என்று தீரமுகுந்தன் நக்கலடிக்க
“நீயும் ஒருத்தி பின்னால சுத்தும் போது வச்சிக்கிறேன் உன்ன” என்று விஷ்வதீரன் தம்பியை முறைக்க
“யாரு நானு? அந்த குட்டச்சி பின்னால உனக்காக தான் அலையிறேன். என்னமா பேசுறா? எனக்கு வர்ற கோவத்துக்கு அவள உரிச்சு உப்பு கண்டம் போட்டுடுவேன்” என்று மிரட்ட  
“பாத்துடா அவ உன்ன உப்பு கண்டம் போடாம இருந்தா சரி” விஷ்வதீரன் பதிலுக்கு வார
“ஆனாலும் குட்டியா கியூட்டா பொம்ம மாதிரி தான் இருக்கா” என்று மனதுக்குள் பிங்கியை ரசிக்க
“பாத்துடா, என்ன சொல்லிட்டு நீ முந்திக்க போற” இவர்களின் பேச்சு இப்படி இருக்க
அங்கே ஆரோஹி பிங்கியிடம் “ஐ லைக் யு னு தமிழ்ல எப்படி சொல்லுறது?” என்று கேக்க
“நான் உன்னை விரும்புகிறேன். அவ்வளவுதான்” பிங்கி வரப்போகும் விபரீதம் அறியாமல் அர்த்தத்தை  மாத்திரம் சொல்ல அது சந்தர்ப்ப சூழ்நிலையால் சொல்வோர்க்கிடையிலும் அர்த்தம் மாறும் என்று சொல்ல தவறினாள், அல்லது அதை சொல்லும் பக்குவத்தை அவள் அடையவில்லையோ?   ஆரோஹி அதை மனதில் சொல்லி பாத்துக்கொண்டிருந்தாள்.
ஊர் திருவிழாவும் நல்ல படியாக நடந்து கொண்டிருக்கும் பொழுது பூஜை முடிந்து தன் காதலை ஆரோஹியிடம் சொல்ல வேண்டும் என்றிருந்தவனிடம் திருவிழா முடிந்த உடன் ஊர் திரும்புவதாக ஆரோஹி சொல்ல
“ஆரா நான் உன்ன விரும்புறேன்” என்று பட்டென்று சொன்னனவனிடம்
“ஹேய் நானும் உன்ன விரும்புறேன்” என்று அவனின் தலையை கோதி விட்டு அகன்றாள் ஆரோஹி.  
அவளும் தன்னை விரும்புவதாக எண்ணி இருந்தவன் காதலை சொன்ன போது அவள் நானிக் கோணி மறுப்பாள் அல்லது மறைப்பாள் என்று நினைத்திருக்க அவளும் பட்டென்று ஒத்துக்க கொண்டது அவனின் அடுத்த செயலுக்கு வித்திட்டது.
பூஜையும்  நல்ல படியாக நடந்து முடிந்த நல்ல நேரத்தில் ஆரோஹியையே பாத்திருந்த விஷ்வதீரனுக்கு அவளை விட்டு ஒரு காலமும் இருக்க முடியாதென்று தோன்ற கோவிலின் வெளியில் சுற்றி வரும் போது வெளிப்பிரகாரத்தில் வீற்றிருந்த அம்மனின் கழுத்தில் கட்டி இருந்த தாலியை எடுத்தவன் கண் இமைக்கும் நேரத்தில் ஆரோஹியின் கழுத்தில் கட்டியிருந்தான். அது என்னவென்றே அறியாத அவள் ஏதோ ஊர் திரும்புக்குறேன் என்று சொன்னதால் நண்பன் மாலையொன்றை பரிசாக தந்தான் என்று நினைக்க, புஷ்பாதான் தலையில் அடித்தவாறே கத்த ஆரம்பித்தாள்.
தீரமணியின் ஒன்னுவிட்ட அண்ணன்  வழி வந்தவர்கள் பிங்கியின் குடும்பம் தீரமணியின் செல்வாக்கு அங்கே ஓங்கி இருக்க அவரிடமே நியாயம் கேக்கலானாள் புஷ்பா
“உங்க குடும்பம் செல்வாக்கான குடும்பம் இஷ்டத்துக்கு உங்க பேரன் இப்படி பண்ணலாமா? அவளுக்கு இப்போது தான் பதினாறு வயசு, கல்யாணம் பண்ணுற வயசா ஐயா? பொண்ண புடிச்சிருந்தா போதுமா முறைப்படி செய்ய வேணாமா? இப்படியா பண்ணுவாங்க?  அத்தான் அனுப்ப மாட்டேன் என்று சொல்லியும் அக்கா பிடிவாதமாக அனுப்பி வச்சாங்களே! என் அக்காக்கு நான் என்ன பதில் சொல்வேன்” என்று புலம்ப அங்கே நடப்பது என்னவென்று ஆரோஹியால் சுத்தமாக புரிந்துக்கொள்ள முடியவில்லை.
“இரும்மா கொஞ்சம் அமைதியாக இரு” என்றவர் விஷ்வதீரனிடம் திரும்பி “நீ பண்ணதுக்கு சரியான விளக்கம் இருக்கா” என்று கேக்க
“நாங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் விரும்புறோம். அவ இன்னைக்கி ஊருக்கு போறதா சொன்னா எனக்கு வேற வழி தெரியல” என்று நிமிர்வாகவே சொல்ல
ஆரோஹியின் பக்கம் திரும்பி “நீ இவன விரும்புரியா” என்று கேக்க
“வி ஆர் ஜஸ்ட் பிரெண்ட்ஸ்” என்று புன்னகைக்க விஷ்வதீரனின் காலடியில் பூமி நழுவியது.
புளியம் பழம் பறிக்கவென அன்னை கண்ணை மூடியிருந்த தருணம் எஸ்ஸான பிங்கியும் வந்து சேர
அதன் பின் அங்கே வாக்கு வாதங்களும், சமாதானங்களும் அரங்கேற ஆகாஷ் வண்டியிலிருந்து இறங்கி அங்கே வர அவனிடத்தில் ஓடிய ஆரோஹி அவனை கட்டி அணைத்து நலம் விசாரிக்க, “எல்லா ஆண்களிடமும் இவள் இப்படித்தான் இருக்கிறாளா?” விஷ்வதீரன் அவளை வெறுப்பாக பார்க்க
எங்கே அண்ணன் கோபத்தில் ஏதாவது செய்து விடுவானோ என்று அஞ்சிய  தீரமுகுந்தன் தன் அண்ணனிடம் வந்து அவனை இழுத்து தன் பக்கம் நிறுத்திகொள்ள
ஆகாஷ் என்ன சொன்னானோ! புஷ்பாவிடம் வந்து நின்ற ஆரோஹி இப்போவே ஊருக்கு போகணும் என்று அடம்பிடிக்க
“இவ ஒருத்தி இங்க என்ன நடக்குது கொஞ்சமேனும் அறிவில்லாம” என்று அவளை சரமாரியாக திட்டியவள் “எல்லாம் அந்த பையன் உன் கழுத்துல போட்ட இந்த மஞ்சக்கயிறால தான்” என்று அவள் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த தாலியை காட்ட
அம்மன் கழுத்திலிருந்து எடுத்து கட்டியது தான் பிரச்சினைக்கு காரணம் என்று புரிந்து கொண்டவளாக, அதை கழட்டி விஷ்வதீரனின் கையில் திணித்தவள், மீண்டும் ஊருக்கு வரும் போது சந்திக்கலாம் என்று சொல்லியவாறே ஆகாஷோடு வண்டியில் ஏறி கிளம்பி விட
காதலை சொன்னவள் அவன் எனக்கு நண்பன் தான் என்று சொன்னது மட்டுமல்லாது தாலியையும் கழட்டி கையில் கொடுத்து விட்டு சென்றதும் தனது உலகமே இடிந்து விழுந்ததை போல் அதிர்ச்சியில் நின்று விட்டான் விஷ்வதீரன்.
விஷ்வதீரனின் மனநிலையை அறியாமல் திருமாறனும், தீரமணியும்
“மானம் போச்சு, மரியாதை போச்சு, ஒரு பொண்ணு நெருங்கி பழகினால் காதல்னு எண்ணி இருக்க முட்டாள் முட்டாள்” என்று திட்டி விட    
மேஜர் ஆகாத பொண்ணு கழுத்தில் தாலிய கட்டி பிரச்சினைய இழுத்து  விட்டுட, அந்த பொண்ணு தாலிய கழட்டி கொடுத்து பிரச்சினைய  முடிவுக்கு கொண்டு வந்துட்டா” விஷ்வதீரனின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளாமல் மேலும் பேச
அவர்களிடமும் ஒதுக்கம் காட்டியவன் அந்த நேரத்தில் NATIONAL DEFENCE ACADEMY  இல் படித்துக் கொண்டிருக்க அங்கேயே தங்கி விட்டான். அண்ணனை பிரிந்திருக்க முடியாமல் தீரமுகுந்தனும் அவனுடனையே தங்கி விட
இருபத்தி நான்கு வயதிலேயே ACP யாக பதவியேற்று பல சாதனைகளை படைத்தவன் டில்லியில் மறுபடியும் ஆரோஹியை சந்தித்தது விதியோ!
இதற்கிடையில் வீட்டிலிருந்து கல்யாணம் பண்ண சொல்லி வற்புறுத்தி தாத்தாவும், அப்பாவும் அவன் இருந்த ஸ்டேசனுக்கே போன் பண்ணி கல்யாணத்தை பற்றி பேச
“ஒங்க குடும்பத்துக்கு இனி ஒரே வாரிசுதான் அவனுக்கே கல்யாணம் பண்ணி அழகு பாருங்க” என்று சொன்னவன்
ஊர் ஊராய் சுற்றி பத்து வருடங்கள் கடந்த பின் தான் ஊருக்கும், வீட்டுக்கும் வந்து சேர்ந்தான்.
வீட்டுக்கு வந்தவனுக்கு எல்லாவற்றையும் மறந்து தனது வாழ்வை மீண்டும் புதிதாய் துவங்க விடாமல் மீண்டும் அவன் வாழ்வில் ஆரோஹி.
முழுவதாய் ஒரு மாதம் கூட ஆகாதா காதலால் போதும் போதும் என்ற அளவுக்கு வலியை அனுபவித்தவனின் நெஞ்சம் முழுவதும் ஆரோஹியின் மீது வெறுப்பே எஞ்சி இருக்க அவளை பலி வாங்கும் எண்ணமே மேலோங்கி இருந்தது.    
தக்க தருணம் பாத்திருந்தவனின் திட்டம் தோல்வியுற்றதில் ஒரு டிஜிபி யா அவனது கடமையை செய்து கொண்டிருந்தாலும் ஆரோஹியை வெறித்து பாத்திருந்தவன் அவளை பலி தீர்ப்பது எப்படி என்ற சிந்தனையில் இருக்க ஆரோஹியிடம் அசைவு தெரியவே  அவ்வறையை விட்டு  வெளியேறி இருந்தான்.  
கண்ணவிழித்து பார்த்த ஆரோஹி தான் எவ்வாறு தூங்கினேன், எவ்வாறு இந்த அறைக்கு வந்தேன் என்று யோசிக்க விடாமல் விஜய் விழித்து அஜய்யையும் ஆயிஷாபேகத்தையும் தேட அவனை சமாதானப்படுத்தலானாள்.
உண்மை தெரியவரும் போது…

Advertisement