Advertisement

                                                     அத்தியாயம் 5
“கல்யாணம் பண்ணிக்கிறியா?” என்று விஷ்வதீரன் கேட்டதும் முன்ன பின்ன தெரியாதவ கிட்ட என்ன கேக்குறாரு அவனை ஒரு புரியாத பார்வை ஆரோஹி பார்த்து வைக்க,  அவளின் குழப்பமான முகத்தை பார்த்தவன் தொண்டையை கனைத்து தன்னை சமன் செய்து உணர்ச்சிகளை கட்டுக்குள் கொண்டு வந்தவன்
“நாடு ரொம்ப கெட்டு கிடக்கு பணம் டிமாண்ட் பண்ணாம, வேறேதாவது கேட்டா?” என்ற கேள்வியோடு அவளின் உடலை கண்ணால் மொய்க்க அவன் சொல்ல வருவதை புரிந்த்துக் கொண்டவள் உடல் உதற கைகைளை கோர்த்து இறுக்கிக் கொண்டாள்.     
அவளின் மேனி நடுங்குவதை குரூரமாக பார்த்தவன் “சொன்னதுக்கே இப்படின்னா? நடக்கும் போது?” என்று முகத்தை சாதாரணமாக வைத்திருந்தவன், உள்ளுக்குள் கேலியாக சிரிக்க
அவனின்  பேச்சின் தாக்கத்தால் ஆரோஹி அமைதியாகி விட அவள் யோசிக்கட்டும் என்று விஷ்வதீரன் அமைதியாக, அவ்வறை குளிரூட்டப் பட்ட அறை என்பதால் மயான அமைதி நிலவ, விஜய் சினுங்க ஆரம்பிக்க ஆரோஹி குழந்தையின் அருகில் ஓடி இருக்க விஷ்வதீரனின் போன் அடித்தது.
அதில் ஒளிர்ந்த எண்ணை கண்டு புருவம் சுருக்கியவன் இயக்கி காதுக்கு கொண்டு வர மறுமுனையோ
“சார் நீங்க சொன்ன பசங்கள கடத்த நாங்க திட்டம் போட்டா வேற குரூப் அதுல ஒரு பையன தூக்கிட்டாங்க” என்று சொல்ல
“என் வேலைய எவன்டா பார்த்தது” என்று முணுமுணுத்தவன் குழந்தையை நினைத்து மனதில் சிறு பதட்டம் தொற்றிக் கொள்ள ஆரோஹி விஜய்யை சமாதானப் படுத்த முடியாமல் தடுமாறியவாறே கண்கள் கலங்க தனது நீண்ட கால்களை எட்டிப் போட்டவன் அவர்களை அடைந்து குழந்தையை தூக்கி இருந்தான் விஷ்வதீரன்.
“ஹேய் விஜய் நீ பிக் பாய் இல்ல, எதுக்கு அழுகை இப்போ? பாரு மம்மி வேற அழுறாங்க, நீ தானே அவங்கள பாத்துக்கணும், அஜய் வந்துடுவான் டோன்ட் ஒர்ரி” என்று சொல்லியவன் ஏதேதோ பேசி அவனை சமாதானப் படுத்தி இருக்க ஒருவாறு சமாதானமடைந்தவனை கதிரையில் அமர்த்தி மொபைல் கேமை போட்டு கொடுக்க எல்லாம் மறந்து விஜய் அதில் லயிக்க ஆரோஹி அவர்களையே கண்ணிமைக்காமல் பார்த்திருந்தாள்.
அஜய், விஜய் தந்தை இல்லாமல் வளர்ந்தாலும் இன்று வரை அன்னையிடம் தந்தை எங்கே என்று கேட்கவில்லை. ஆயிஷாவிடம் கேட்பதை அவள் அறியவுமில்லை. விஷ்வதீரனிடம் பந்தமாக பொருந்தியவன் இனிமேலும் தந்தை எங்கே என்று கேக்காமல் இருக்க மாட்டான் என்று தோன்ற விஷ்வதீரனை பார்த்தவளுக்கோ
பத்தொன்பது  வயதில் ஒடிசலான தேகத்தோடு அரும்பு மீசையில் காதல் கொஞ்சும் குரலில் கனிவாய் பேசி கண்ணில் மின்னும் சிரிப்புடன் வலம் வரும் விஷ்வதீரனை கண்டிருந்த ஆரோஹிக்கு காக்கிச்சட்டையில் கட்டுமஸ்தான தேகத்தோடு அடர்ந்த மீசையில் எதிரில் இருப்பவனை குரலாலையே அச்சுறுத்தும் புலியின் பார்வையோடு தன்னை கூறு போடுபவனை அடையாளம் தெரியாமல் போனதில் வியப்பில்லை.    
மகனை காணாது பரிதவித்துக் கொண்டிருந்தவளின் கருத்தில் வந்ததிலிருந்து விஷ்வதீரன் அவளை ஒருமையில் அழைப்பதையும் குழந்தைகளின் பெயரை சொல்லி அழைத்ததும் பதியாமல் போனது விதியின் விளையாட்டோ?
ஆரோஹியின் அலைபேசி இசைக்க அதை பறிக்காத குறையாக வாங்கியவன் “கால் ரெக்கோர்டிங் ஆப்சன் இருக்கா?” என்று கேக்க ஆரோஹி வேகமாக தலையை ஆட்ட “பதட்ட படாம பேசு” என்றவன் காலை ஸ்பீக்கர் மூடில் போட மறுமுனையில் ரஜனி, கமல் என்று மாறி, மாறி ஒரு குரல் ஒலித்தது.
“என்ன டீச்சரம்மா? சவுக்கியமா? பையன காணாம அழுது கரஞ்சிகிட்டு இருக்கீங்களா? எங்க கிட்ட பத்திரமா இருக்கான், எங்களுக்கு வேண்டியது பணம் மட்டும் தான் அத கொடுத்தா உங்க பையன உசுரோட பாக்கலாம், போலீசுக்கு போகணும்னு நினைக்காதீங்க அப்பொறம் விளைவுகள் மோசமாக இருக்கும், மூனு லட்சம் ரெடி பண்ணி வைங்க எங்க எப்போ எப்படி கொண்டு வரணும்னு மீண்டும் தொடர்ப்பு கொள்கிறேன்” என்று ஆரோஹியின் பதிலை கூட எதிர் பார்க்காது வைத்து விட  
“பக்கா சினமா டயலொக்” என்று முணுமுணுத்தவன்  அவன் பேசிய விதம் விஷ்வதீரனின் முகத்தில் புன்னகையை தோற்று வித்திருக்க
“சார் நா எந்த கேஸையும் கொடுக்கல, நான்.. நான் பணம் ஏற்பாடு செஞ்சு அஜய்யை காப்பாத்திக்கிறேன், நீங்க இன்வோல் ஆனா என் பையன ஏதாவது பண்ணுவாங்க” என்று கெஞ்சாத குறையாக சொல்ல
ஒரு தாயாக அவளின் மனநிலை புரிந்தாலும் “ஆரா அவனுங்க இந்த மாதிரி நிறைய குழந்தைகளை கடத்தி இருக்கானுங்க, இது ஒரு நல்ல சான்ஸ் அவனுங்கள பிடிக்க”
“உங்களுக்கு இது ஒரு கேஸ் மட்டும் தான், எனக்கு என் பையன் முக்கியம்” என்றவள் விஜய்யை தூக்கிக் கொண்டு வெளியே செல்ல போக
அவளை தடுத்து நிறுத்தியவன் “விஜய்யையும் கூட்டிகிட்டு போக போறியா? காச வாங்கி கிட்டு உன்னையும் ஏதாவது பண்ணிட்டா?” ஆரோஹியிடம் பதிலில்லை.
அவளின் யோசிக்கும் முக பாவனையில் மனம் கனிந்தவன் “லெட் மீ  ஹெல்ப் யு. உன் கூட நானும் வரேன், போலீஸா இல்ல” என்றவன் அவளுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக அவ்வறையோடு இணைந்திருந்த இன்னோரறைக்குள் சென்று உடை மாற்றி வர ஆரோஹி அமர்ந்து யோசித்தவாறு இருக்க
“அவனுங்க போன்ல இடத்தை சொன்ன உடனே போலாம்” என்றவன் போனில் காபி கொண்டு வரும் படி பணிக்க ஹாஸ்பிடலுக்கு போன இன்ஸ்பெக்டர் வந்து ஆயிஷாபேகத்தின் வாக்குமூலத்தை பதிவு செய்ய
“சார் மிஸ்ஸிஸ் ஆயிஷாபேகம் சொன்னது அது ஒரு ஆம்னி வேன், முகத்தை மூடி இருந்தானுங்க, ஐஞ்சு பேர் ரொம்ப உயரமோ!, பருமனான உடல் அமைப்போ இல்ல” அவர் மேலும் பேசு முன்
“நான் பாத்துக்கிறேன்” என்றவன் ஆரோஹியின் புறம் திரும்பி “உன் அத்தையின் பெயரென்ன?”
“ஆயிஷாபேகம்”
“அப்போ நீ ஒரு முஸ்லீம் பையனையா கல்யாணம் பண்ணி இருந்த?” என்று மனதில் நினைத்தவன், அன்று பார்த்தவனை கண்முன் கொண்டு வர பல வருடங்கள் கடந்த நிலையில் அது அவன் நியாபக அடுக்கில் இருந்து மறைந்திருந்தது. மனதில் நினைத்ததை ஆரோஹியிடம் நேரடியாகவே கேட்டிருக்கலாம். மனதில் எழும் கேள்விகளை கேக்காமல் விட்டது விஷ்வதீரன் செய்து கொண்டிருக்கும் பெரும் தவறு.
காபி வரவும் இருவரும் காபியை மெதுவாக அருந்த, விஷ்வதீரனின்  பார்வை முழுவதும் அவனின் ஆராவின் மேல் இருக்க ஆரோஹியின் அழுகையும் பதட்டமும் காணாமல் போய் இருந்தது. அது விஷ்வதீரனின் அருகாமையினாளையா? அவனது ஆளுமையான, உரிமையான பேச்சாலையா??
குழந்தையை கடத்தியவன் போனில் சொன்ன இடம் மக்கள் கூடும் பஸ் தரிப்பிடம் அதுவும் மாலை ஏழு மணிக்கு  அவர்களுடைய திட்டத்தை விஷ்வதீரன் ஊகித்திருந்தான்.
பஸ் தரிப்பிடம்  மக்கள் அதிகமாக கூடும் இடம் என்பதால் அங்கே வரவழைத்து பணத்தை அங்கே உள்ள குப்பை தொட்டியில் போடுமாறு சொல்லி விட்டு ஆரோஹியை திசை  திருப்பி பணத்தை எடுப்பதே அவர்களின் திட்டம். குழந்தையை அவளிடம் எவ்வாறு ஒப்படைப்பார்கள் என்பதை அவனால் ஊகிக்க முடியாமலிருக்க தீரமுகுந்தன் சொன்னதை போல் இதுவரை எந்த குழந்தையையும் கொலை செய்யாவிடினும், பணம் கிடைக்க வில்லையென்றால் குழந்தையின் உயிருக்கு ஆபத்தை விளைவித்து விடுவார்களோ என்று அச்சம் தோன்ற தம்பியை போனில் அழைத்தான்.     
தீரமுகுந்தன் வந்து சேர்ந்ததும் விஷ்வதீரன் தனது அறையில் உள்ள வெள்ளை திரையை இயக்க அங்கே கடத்தல்காரர்கள் சொன்ன பஸ் தரிப்பிடத்தின் நிலப்படம் பெரிதாக இருக்க எங்கெங்கே குப்பை தொட்டிகளும், பணத்தை போடுமாறு சொல்லப்படும் என்று சந்தேகிக்கப் பட்ட இடங்களும் தெளிவாக இருந்தது.
“அவனுங்கள எப்படி பிடிக்கப் போற? ஒரு வேல பஸ் ஸ்டாண்டுக்கு வரவழைச்சு யாராவது பின் தொடர்ந்து வாரங்களானு செக் பண்ணிட்டு வேறு இடத்துக்கு வர சொன்னா?” என்று தீரமுகுந்தன் கேள்வி எழுப்ப
ஆரோஹியின் அலைபேசியில் பதிவான கட்டை குரலை தீரமுகுந்தனுக்கு போட்டுக் காட்ட சத்தமாக சிரித்தவன் “நான் நினைச்சதே தான் நீயும் நினைக்கிறியா?” என்று கேக்க
குழந்தையை கடத்தினவன் முயன்று பெரிய ஒருவர் பேசுவதை  போல் பேச அது டீனேஜ் பையனின் குரலென தெளிவாக தெரிந்தது. ஆயிஷாபேகத்தின் வாக்கு மூலத்தில் படி உருவ அமைப்பு பாடசாலை மாணவர்களையே குறிக்க
ஒரு சுவிங்கத்தை எடுத்து வாயில் திணித்தவன் “குழந்தைகள் கடத்தப்பட்டதும் பேரன்ட்ஸ் கம்பளைண்ட் பண்ணி இருந்தால் இவனுங்கள எப்பயோ பிடிச்சிருக்கலாம். அவங்க குழந்தை மட்டு கிடைச்சா போதும்னு நினைச்சதால, இவனுங்க தப்பு மேல தப்பு பண்ணி கிட்டு இருக்கானுங்க, பிடிச்சாலும் கேஸ் நிக்குமான்னு தெரியல, நீ கொடுத்த பென்ட்ரைவில் இருக்கிறவன் தான் இவனுங்கள கைட் பண்ணுறவனா இருக்கும்.” என்று இடுப்பில் கை வைக்க  
“இந்த தடவ யார் குழந்தைய கடத்தி இருக்கானுங்க? அவங்க கம்பளைண்ட் கொடுத்த விஷயம் தெரியாமலா இருக்கும்? அவங்கள வேவு பாக்க ஒருத்தன அனுப்பி இருந்தா?”
“அனுப்பி இருந்தா அவ என் கிட்ட பேசிக்கிட்டு இருக்கும் போது போன் பண்ணி இருக்க மாட்டானுங்க சில்லி பாய்ஸ், சினிமா பாத்து பசங்க ரொம்ப கெட்டு போய்ட்டானுங்க, சினிமா போலீஸ் போல ஸீன் என்டாகும் போது என்ட்ரி கொடுப்போம்னு நினைச்சிட்டானுங், நிறைய குழந்தைகளை கடத்திய அனுபவம் போலீஸ் கிட்ட போக மாட்டாங்கன்னு அவனுங்களே முடிவு பண்ணிட்டானுங்கனு நினைக்கிறேன், இந்த தடவ மாட்டிக்கிட்டானுங்க. அவனுங்கள அரெஸ்ட் பண்ணுறது ஒரு பெரிய விஷயமே இல்ல, மைனர் என்பதால தண்டனையும் கம்மியாத்தான் கிடைக்கும். ஆனா அவனுங்கள திருத்துறது எப்படினு புரியல, முதல்ல அவனுங்க யாருன்னு கண்டு பிடிக்கணும், பட் அதுக்கு டைமும் இல்ல” விஷ்வதீரன் சொல்லிக் கொண்டே போக
“அவனுங்க பேசின நம்பர் இருக்கா?” என்று பெற்றுக் கொண்டவன் “உனக்கு நல்லா தெரிஞ்சவங்க பையனா?” என்று மீண்டும் கேள்வி எழுப்ப
“ஏன் கேக்குற” என்ற பார்வைதான் விஷ்வதீரனிடம்
“உரிமையா அவனு சொன்னியே எவ அவனு தெரிஞ்சிக்கத்தான்” தீரமுகுந்தன் கண்சிமிட்டியவாறே  சொல்ல
“என்னதான் போலிஸ் என்றாலும் பேசும் எல்லா வசனத்தையும் இவ்வளவு டீப்பா கிரகிக்க கூடாது” என்று முணும்னுணுத்தவன் “உனக்கு தெரிஞ்சவ தான் இப்போ மணி மூனு, ஸ்பாட்டில் ஏழு மணிக்கு மீட் பண்ணலாம்”  என்று வழியனுப்ப புருவம் நீவியவாறே  விடை பெற்றான் தீரமுகுந்தன்.
காபியில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து ஆரோஹியை தூங்க வைத்திருந்தவன், தனதறையோடு ஒட்டி இருந்த இன்னொரு அறைக்கதவை பார்த்து விட்டு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை திட்டமிடலானான்.
*******************************************************************
போன் நம்பரை பெற்றுக் கொண்டு  தீரமுகுந்தன் சென்றது அந்த நம்பர் உரிமையான பூத் ஏரியாவுக்கு அது ஒரு குடியிருப்பு முடிவடையும் தெருமுனை முன்னாள் ஒரு பூங்காவும் இருக்க அந்நேரத்தில் ஆட்கள் அதிகம் இருக்கவில்லை.
ஒரே ஒரு தடவை போன் செய்ததால் அந்த ஏரியாவாக இருக்க வாய்ப்புகள் குறைவு என்றிருந்த போதும், அவனது விசாரணையில் அந்த தெருமுனை போன்பூத் நம்பர் மூறு தடவைகள் பாவித்திருந்தமையால் உள்மனம் “அங்கே போ” என்று சொல்ல இந்த இடத்துக்கு வந்து விட்டான். தெருமுனையில் உள்ள மரத்தில் சாய்ந்தவாறே ஒரு சிகரெட்டை பற்ற வைத்தவன் அதை கையில் வைத்துக் கொண்டு நோட்டம் விட சந்தேகப்படும்படியான யாரும் கண்களில் சிக்கவில்லை.
“ஒரு வேலை கடத்தப்பட்ட குழந்தை அந்த குடியிருப்பிலுள்ள வீடொன்றில் வைக்கப்பட்டிருந்தால் தேடுவதும் பெரும் கஷ்டம் தான்”  என்று சிந்தித்து கொண்டிருந்தவனின் அருகில் வந்து நின்றாள் பிங்கி
“என்ன விஐபி அவர்களே எந்த பொண்ண சைட்டடிக்க இந்த ஏரியால தவமா தவம் கிடக்குறீங்க?”
தனதருகில் பைக் வந்து நின்றதும் உசாரானவன் அது பிங்கி என்றதும் அவள் அடுத்து பேசியதில் கடுப்பாகி  
“உன் கிட்ட பேசும் மூடில் நானில்லை பேசாம போறியா” என்று எரிந்து விழ
அதை அசால்டாக புறம் தள்ளியவள் “என்ன பொண்ணு ஓகே சொல்ல மாட்டேங்குறாளா?” என்று மீண்டும் கேக்க அவளை முறைத்தான் தீரமுகுந்தன்.
“நா வேணா டிப்ஸ் தரவா மிஸ்டர் ஆர்.எஸ்.ஆர்” என்று அவனை வம்பிழுக்க
அவள் தன்னை சங்கேத வார்த்தைகளால் சாடுகிறாள் என்று புரிய “நீ இங்க என்ன பண்ணுற? எவன் கூட ஊர் சுத்த கிளம்பிட்ட? உன்ன பெத்து ரோட்ல அலையை விட்டுட்டாங்களா?” கொஞ்சம் கடினமான வார்த்தைகளை உபயோகித்து அவளை அங்கிருந்து கிளப்ப முனைய
அவன் பேசியதில் கோபம் வர “ஏதோ தெரிஞ்சவன்னு பேச வந்தா, என்ன பேச்சு பேசுறான் இடியட்” என்று திட்டி விட்டு “இனிமேல் எனக்கும் உனக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்ன எங்க கண்டாலும் தாண்டி போய்ட்டு” என்று கத்தியவாறே பைக்கில் ஏறி அமர
“அன்னைக்கி நா தெரிஞ்ச முகமா இருக்கேனு பேசினப்போ என்னெல்லாம் பேசின? நம்ம வீட்டுல சம்பந்தம் பேசி கல்யாணம் முடிவு பண்ணி வச்சிருந்தாங்களா என்ன? எந்த சம்பந்தமுமில்லைனு துண்டித்துட்டு போக? சரி தான் போடி” என்று தீரமுகுந்தனும் எகிற
பிங்கியின் முகம் பிங்க் நிறத்துக்கு மாற பைக்கில் இருந்து இறங்கியவள் கீழே இருந்த கல்லை எடுத்து அவன் பைக்கின் மேல் வீச ஒரு கண்ணாடி சுக்குநூறாக உடைந்து தெறிக்க கையிலிருந்த சிகரட்டை வீசி விட்டு அவளருகில் வந்திருந்தான் தீரமுகுந்தன்.
“இருக்கிற டென்ஷன் பத்தாதுன்னு இவ வேற தொல்ல பண்ணிக்கிட்டு” என்று முணுமுணுத்தவன் “அம்மா தாயே போறியா இல்ல போலீஸ கூப்பிடவா?” ஏதோ ஒரு பிலோவில் சொல்ல
“ஆ… கூப்பிட்டு தான் பாரேன், ஆளில்லாத இந்த இடத்துல நீ தான் என்கிட்ட தப்பா நடந்துக்க பாத்தேன்னு உன்மேலேயே புகார் கொடுத்துடுவேன்” என்றவள் பையை திறந்து கையில் கிடைத்த காசை அவன் கையில் திணித்தவள் “நீயே ஒரு வேல இல்ல பட்டதாரி {VIP} கைல காசிருக்குமோ என்னவோ! பைக்குவேற காஸ்ட்லீ மாதிரி இருக்கு எந்த நண்பன் கிட்ட இருந்து ஆட்டைய போட்டியோ! கண்ணாடி இல்லாம போனா அவன் வேற வண்டிய தரமாட்டான், அப்பொறம் உன் ரோட் சைட் ரோமியோ {RSR} வேலைய எப்படி பாக்குறது” என்று படபடவென்று பொறிந்தவள்  வண்டியை இயக்க
“இவ அடங்க மாட்டா” என்று மனதில் நினைத்தவன்.  அவளின் வண்டியை நிறுத்தி சாவியை கையில் எடுத்தவன் “நடந்தே போ அப்போவாச்சும் உன் திமிரு குறைதானு பாப்போம்” என்று சாவியை கால்ச்சட்டையின் முன்  பாக்கெட்டில் வைக்க
அவனது சைகையில் ஒரு கணம் அதிர்ந்தவள் மறுகணம் அவனது டி ஷர்ட்டின் காலரை பிடித்து தன் புறம் இழுத்து “பையன்னு பாக்கிறேன் இல்ல அடி பின்னி விடுவேன்” என்று டயலாக் பேச தீரனின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.
அவள் இழுத்த போதும் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டி இருந்தவன் அவ்வாறே அவள் புறம் சாய்ந்து அவள் கண்களில் கண்களை கலக்க விட்டவன் “நான் தேடி போகாமலேயே வழிய வந்து மாட்டி இருக்க ஏரியா வேற என்ன நடந்தாலும் யாரும் வரமாட்டாங்க போலயே! உன்ன என்ன பண்ணலாம்” என்று புருவம் நீவி யோசிக்க
அவன் பேசியதில் கலவரமடைந்தவள் அவனை விட்டு தள்ளி நின்று சுற்றும் முற்றும் பார்க்க அங்கே கண்ணுக்கு எட்டிய தொலைவில் யாருமில்லை. பயத்தை மறைத்துக் கொண்டு அவன் புறம் திரும்பியவள் “என்ன யாருன்னு நெனச்ச கராத்தேள ப்ளாக் பெல்ட் வாங்கி இருக்கேன்” என்று முகத்தை விறைப்பாக வைத்து சொல்ல
அங்கே வந்த இரண்டு பசங்களில் ஒருவன்  “என்னக்கா ஏதாச்சும் பிரச்சினையா?” என்று விசாரிக்க அவர்கள் அந்த காம்பவுண்ட் சுவரின் மறைவிலிருந்து தீரனை பார்த்ததை கண்டு கொண்டவன், பிங்கி வண்டியை கிளப்பவும் நிறுத்தி அவளிடம் வம்பு வளர்க்கலானான். மறைந்து மறைந்து வந்தவர்கள் திடீரென தோன்றி சாதாரணமாக கேப்பது போல்  விசாரிக்கவும்
“ஏன்டா அவ என்ன பேசியே கொல்லுறா நீங்க வேற அவளுக்கு சப்போர்ட் பண்ணுறீங்க” என்று தீரன் அவர்களிடமே நியாயம் கேக்க
“ஏதோ லவ் மேட்டர் டா, வா அண்ணன் கிட்ட சொல்லலாம்” என்றவாறு அவர்கள் நகர தீரனின் முகத்தில் சிறு நம்பிக்கை கீற்று.
“என்ன அவனுங்க லவ் மேட்டர் என்றதும் இந்த இளி இளிக்கிற” என்று பிங்கி மீண்டும் எகிற அவளின் இடையோடு சேர்த்து அணைத்தவன்
“லவ் பண்ணுற மூடும் இல்ல ,அதுக்கு டைமும் இல்ல, அப்படியே பண்ணாலும் உன்ன பண்ண சான்ஸே இல்ல” என்று அவளின் காதுக்குள் கிசு கிசுக்க உலகம் மறந்து போனாள் பிங்கி.
நீ கோபப்பட்டால் நானும் கோபப்படுவேன்
நீ பாக்காவிட்டால் நானும் பாக்கமாட்டேன்
நீ திட்டி முறைத்தால் நானும் திட்டி முறைப்பேன்
நீ சண்டை பிடித்தால் நானும் சண்டை பிடிப்பேன்
நீ பேசாவிட்டால் நானும் பேசமாட்டேன்
நீ என்னை மறந்தால் மட்டும்
உயிரை விடுவேன்…..
இதுங்க சண்டை ஒயாதுப்பா..

Advertisement