Advertisement

                                                         அத்தியாயம் 4
தன்னந் தனிமையில் ஒரு காதலை வளர்த்தவன்
யாரும் அறியும்முன் அதை உயிருடன் புதைக்கிறேன்
எனுள் நுழைந்திடும்போது அதிர்வின்றியே நுழைந்தாயடி
வெடிக்கிடம் விடும்போதோ தொடர்பூகம்பம் விழைத்தாயடி
யாரோடு வாழ்ந்தாலும் நீ இன்பம் காணுவாய்
என்றேனும் ஓர் நாளில் என் காதல் காணுவாய் மறந்து வாழ்
முன்னாள் காதலி
முன்னாள் காதலி
உன் பொய்கள் தந்த தித்திப்பில் மயங்கிக் கிடந்தேன்
முன்னாள் காதலி
முன்னாள் காதலி
உண்மைக் கசக்கும் வேளையில் மயக்கம் தெளிந்தேன்
ஏய் முன்னாள் காதலி என் முன்னாள் காதலி
உன் காதல் இன்றியும் நான் வாழ்வேன் பாரடி
எவனோடோ போகிறாய் போய் நீயும் வாழடி
வலி இருந்தும் சோகம் இல்லை
உன்மேல் துளி கோபம் இல்லை
பெண்ணே நீ இல்லாமல் என் எதிர்காலம் தூரம் இல்லை
முன்னாள் காதலி
விஷ்வதீரன் தனது மேசையிலுள்ள ஆரோஹியின் கோப்பை வெறித்துக் கொண்டிருந்தான். அரோஹி ஏஜ் 26 , சிங்கள் மதர். அவனின் கண்ணுக்குள் அன்று டில்லியிலுள்ள பெரிய ஷாப்பின் மாலில் ஆரோஹி பானை வயிற்றை தள்ளிக் கொண்டு யாரோ ஒருவனுடன் சிரித்து பேசியது  வந்து போக
“புருஷன விட்டுட்டு தனியா வாழ உனக்கு எவ்வளவு தெனாவட்டு. உன் கிட்ட மாட்டினவன் உன் டாச்சர் தாங்க முடியாம விட்டுட்டு போய்ட்டானா?” என்று அவள் புகைப் படத்திடம் கேட்டவன்,
அவள் அணைத்துக் கொண்டிருந்த இரண்டு ஆண்  குழந்தைகளையும் பார்த்து அவர்களின் முகத்தில் இருந்த சந்தோச சிரிப்பை கண்டு தானும், தீரமுகுந்தனும் சிறுவயதில் இப்படித்தான் இருந்தோம் என்று தோன்ற அவனின் இறுகிய தாடைகள்  வலுவிழந்து புன்னகை முகத்தில் பூக்க ஆசையாக அவர்களை பார்க்க நடுவிலிருந்த ஆரோஹியின் புன்னகை முகம் அவனின் கோபத்தை தூண்ட
“என் வாழ்க்கைல சந்தோஷத்தை தொலைச்சிட்டு நிக்கிறேன். நீ மட்டும் சந்தோசமாக இருக்கலாமா? கூடாதுடி… புருசனும் இல்ல உன் பிள்ளைகளும் இல்லனா? உன் பசங்கள தூக்குறேன் டி.  நீ என் கால்ல வந்து விழனும்” என்றவன், “இல்லடி உன்ன என் படுக்கைக்கு கொண்டு வரேன்டி அப்போயாச்சும் என் மனசுல இருக்கும் ரணம் போகுதான்னு பாப்போம்” என்று தனக்குள்ளேயே  பேசிக்கொண்டிருந்தான்.
கதவை தட்டிக் கொண்டு தீரமுகுந்தன் உள்ளே நுழையவும், தீரமுகுந்தனின் கண்ணில் படாதவாறு ஆரோஹியின் கோப்பை அப்புறப் படுத்தியவன் சுவிங்கமொன்றை வாயில் திணித்துக் கொண்டவாறே “சொல்லு” என்று சைகை செய்ய
“இதுவரைக்கும் திருச்சில காணாமல் போன பொண்ணுங்களோட லிஸ்ட் எடுத்து பார்த்தா இருபது பொண்ணுங்க காணாம போய் இருக்காங்க. அதுல அஞ்சு பொண்ணுங்க நம்ம கேஸ்ல இன்வோல் ஆகி இருக்காங்க மத்த பதினஞ்சு பொண்ணுங்களும் பதினெட்டுல இருந்து முப்பது வயசுக்குள்ள இருக்கிறவங்க, தமிழ் நாடு மட்டும் நூத்துக்கு மேலயும் இந்தியா முழுவதும் ஆயிரம் பொண்ணுங்க என்ற கணக்குல வந்து நிக்குது” என்று சொல்லி முடிக்க
“காணாம போன எல்லா பொண்ணுங்களும் நம்ம கேஸ்ல சம்பந்த பட்டிருக்காங்கனு சொல்ல வரியா?”
“பெண்களை பாலியல் தொழிலில் ஈடு படுத்துவது வயதெல்லை இல்லாமல் நாடெங்கும் நடைபெறும் குற்றம் என்பதால் காணாமல் போனா பொண்ணுங்க லிஸ்ட இந்தியன் போலீஸ் டேட்டா பேஸ்ல இருந்து எடுத்தேன். கண்டிப்பா பாலியல் தொழில்ல ஈடு படுத்த  பொண்ணுங்கள கடத்தி இருப்பானுங்க, ஆனா இந்த மாதிரி  காய படுத்தி மிருகத்தனமான நடந்துக்கிறது குறிப்பிட்ட சிலருடைய வேலை. அவனுங்க தமிழ்நாட்டுல  மாத்திரம் தான் இத செய்றானுங்களா? வேற ஸ்டேட்ஸ்லயும் பண்ணுறானுங்களானு தெரியாத பட்சத்துல நமக்கிருக்குற ஒரே ஆதாரம் திருச்சி, மற்றும் சென்னை பொண்ணுங்க. அவனுங்கள இங்க இருந்துதான் கண்டு பிடிக்கணும். மத்த ஸ்டேட்ஸ்லயும் இந்த மாதிரி காயமுள்ள பொண்ணுங்களோட பாடி கிடைச்சதானு விசாரிச்சிக்கிட்டு தான் இருக்கேன்”
“குட் மூவ்” என்றவன் “நித்யாவுக்கும், ஜோதிக்கும் போன் பண்ணவன் இங்க உள்ள ப்ளூமூன் ஹோட்டலில் உள்ள பாரிலிருந்து தான் பேசி இருக்கான். அத பத்தி விசாரிச்சியா?” என்று சுவிங்கத்தை மென்றவாறே ஏறிட
“அந்த பாருக்குள்ள  போக ஜோடி வேணுமாம் யாராச்சும் பொண்ண ஏற்பாடு பண்ணு, போறதுக்கான ரிஸவேசன் பாஸ் அடுத்த வாரம் தான் கிடைக்குது” என்று புருவம் நீவியவாறே  கதவை திறக்க ஸ்கூபி தாவிவந்து விஷ்வதீரனின் மேசையின் மேல் ஏறி அமர்ந்தது.
“ஹேய் ஸ்கூப் என்னடா இந்த பக்கம்” என்று விஷ்வதீரன் ஸ்கூபியின் தலையை தடவ சோகமான முகத்தை வைத்து கொண்டு மெதுவாக சத்தம் செய்ய “என்னடா?” என்று அதனிடம் கேட்டவன் தீரமுகுந்தனிடம் திரும்பி “என்னவாம்” என்று மீண்டும் கேக்க   
“ஐயாக்கு இன்னைக்கி இன்ஜெக்சன் போடும் நாள் அதான் கூட்டிட்டு வந்தேன் வெளிய வச்சிட்டு உன் கிட்ட பேசிட்டு போலாம்னு சொல்லிட்டு தான் வந்தேன், எப்படியோ மோப்பம் பிடிச்சிக்கிட்டு வந்து உன்கிட்ட புகார் பண்ணுது” என்று சிரிக்க விஷ்வதீரனின் முகத்திலும் புன்னகை
“நீ நல்லாவே ட்ரெயின் பண்ணி இருக்க, அது சொல்லுறதையும்  புரிஞ்சிக்கிற பேசாம நம்ம டிபார்ட்மெண்ட்டுல சேர்த்துடலாமா?” என்று விஷ்வதீரன் கேள்வி எழுப்ப   
“வேணாம் அவன் நம்ம கூடயே இருக்கட்டும்” என்று தீரமுகுந்தன் சொன்னது தான் தாமதம் அவனின் மேல் தாவி இருந்தது ஸ்கூபி.
“நான் உனக்கு அண்ணண்னா இவன் உனக்கு தம்பியா இருக்கான்” என்று விஷ்வதீரன் சிரிக்க அண்ணனின் புன்னகையை மெய் மறந்து பாத்திருந்த தீரமுகுந்தன் அவனின் கன்னத்தில் முத்தமிட்டே அகன்றான்.
அந்த கால்நடை மருத்துவமனையினுள் புகுந்த தீரமுகுந்தன் பொறுமையாக அமர்ந்திருந்து டாக்டரை சந்தித்து ஸ்கூபிக்கு மருந்தையும் உட் செலுத்த அவனை பிடித்து கொண்டு கதையளக்க ஆரம்பித்தார் அவர்.
சிரித்த முகமாகவே அவரிடம் விடை பெரும் சமயத்தில் அவசரமாக வெளியே செல்ல வேண்டும் என்று வந்தவர் அவரின் வண்டி பஞ்சர் என்றதும் தீரனிடம் லிப்ட் கேக்க, தான் வந்தது பைக்கில் என்றதும் சாவியை வாங்கிக்கொண்டு பறந்தவர், நாய்களை கொண்டு செல்லும் வண்டியில் தீரனை டிராப் செய்யுமாறு சொல்லவும் மறக்கவில்லை.  
தீரன்  சென்று ஸ்கூபியுடன் முன்னாள் அமர “இந்தா சாரே பின்னாடி உக்காரு வண்டி கதவை மூட முடியாது” என்ற ட்ரைவர் கதவை உள்ளாள் தள்ளி அவனை வண்டியின் பின் பக்கத்தில் அமர்த்தி இருக்க அவனின் நீண்ட கால்களோ தரையை தொட விளிம்பில் இருந்தது.
வண்டிக்குள் சில நாய்கள் கம்பியிலான கூண்டில் அடைக்கப்பட்டு இருபுறமும் வைக்கப்பட்டிருக்க “சாரே பெட்டி  நகராம பாத்துக்க” என்று வண்டியை கிளப்ப ஸ்கூபி குறைக்க ஆரம்பித்தது.
ஒரு ஆட்டோ பிடித்து வீடு போகாம தேவையா  உனக்குன்னு” கத்துறியா? நான் பாக்குற வேலைக்கு இதெல்லாம் ஜுஜுபி” என்று தீரமுகுந்தன் ஸ்கூபியை பார்த்து அது போலயே குறைக்க, மற்ற நாய்களும் குறைக்க ஆரம்பித்தன. வண்டியும் மெயின் ரோட்டை அடைந்திருக்க பிங்கியின் வண்டியும் அந்த வண்டியின் பின்னால் வந்து சேர்ந்தது.
தீரமுகுந்தனை கண்டு சுவிங்கத்தை மென்று கொண்டிருந்தவள் விசில் அடிக்க அவளை கண்டு கண்கள் விரிந்தவன் இருக்கும் இடம் மறந்து “ஹாய்” சொல்ல    
“அப்போ நெஜமாவே நீ நாய் புடிக்கிறவனா?” என்று சத்தமாக கேக்க தீரமுகுந்தனும் தான் இருக்கும் இடம் உணர்ந்து சுற்றி முற்றி பார்க்க
“நாய்  புடிக்கிறவன் இல்ல திருடனா? ஸ்கூபிய தூக்கிட்டு போற” என்று முகத்தில் கோபத்தை கொண்டு வர அவள் அணிந்திருந்த தலை கவசம் அவளுக்கு எடுப்பாக இருந்ததென்றே தோன்றியது அவனுக்கு.
“டேய் தடிமாடு நெட்டுக்கொக்கு நெடுமாறா வண்டிய நிறுத்துடா” என்று கத்த முகுந்தன் அவளின் முகத்தில் வந்து போன முகபாவங்களை ரசித்தானே ஒழிய  பதில் பேசவில்லை.
அவள் வண்டியை அந்த வண்டியின் முன் நிறுத்தி வண்டியை நிறுத்தி இருக்க ஓட்டுநர் அவளை வசைமாரி பொழிய ஆரம்பிக்க அவருடன் சரிசமனாக பேசிக்கொண்டிருந்தாள் பிங்கி.
வண்டியை விட்டு இறங்கிய தீரமுகுந்தன் கதவை பூட்ட வழி தேட உள்ளே ஒரு துண்டுக்கு கயிறு இருக்கவே கதவை இழுத்து பிடித்து கட்டி விட்டவன்
ஸ்கூபியின் பக்கம் திரும்பி நீ அவ கூடவே வீட்டுக்கு போ நான் ஒரு முக்கியமான வேலையா போறேன். அவ கூட சண்டை போடுற மூட்ல நானில்லை” என்றவன் ஸ்கூபியிடமிருந்து விடைபெற்று பாதையில் செல்லும் ஆட்டோவில் ஏற ஸ்கூபி பிங்கியிடம் சென்றது.
“இதோ எங்க நாய்,  எங்க கடத்திட்டு போற? எங்க அவன்? வர சொல்லு அவன” என்று பிங்கி எகிற கூட்டம் கூடவே அந்த ஓட்டுநர் கொஞ்சம் பயந்து போய்
“இதோ பாரம்மா நா ஒன்னும் நாய் திருடனில்லா. இது வெட்னரி ஹாஸ்பிடல்ல இருந்து போலீஸ் ட்ரைன்னிங் சென்டருக்கு கொண்டு போய் கிட்டு இருக்கேன்” என்று குரலை தாழ்த்த
“அப்போ எங்க நாய் உன் வண்டில என்ன செய்து? மத்த நாய்களுக்கு ட்ரைன்னிங் கொடுக்குதா?” என்று பிங்கி குரல் உயர்த்த
“அந்த சார் டிராப் பண்ண சொன்னாரு” என்று தீரமுகுந்தனை தேட அவன் அங்கே இல்லை. “பெட்டிகளை பாத்துக்க சொல்லி பின்னாடி உக்கார வச்சதுக்கு வச்சிட்டாண்டா ஆப்பு”  ஓட்டுநர் தலையை சொரிய
தீரமுகுந்தனை விட்டு விட்டு அவளுடன் மல்லு கட்டிய ஓட்டுனரை பிடித்துக் கொண்ட பிங்கி “வா போலீஸுக்கு போலாம்” பிங்கி சொல்லும் போதே ட்ராபிக் போலீஸ் அங்கே வந்து கூட்டத்தை களைத்து நடந்ததை விசாரிக்க, இருவரும் சொல்லியதை கேட்டவர் ஓட்டுனரின் ஆவணங்களை சரி பார்த்து விட்டு
“இவர் சொல்லுறது உண்மை தான்மா, நீங்க உங்க நாய கூட்டிட்டு போய் வீட்டுல உள்ளவங்கள விசாரிங்க, அப்படியே யாராச்சும் கடத்த பாத்திருந்தா போலீஸ்ல ஒரு கம்ளைண்ட் கொடுங்க” என்று இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைக்க பிங்கி ஸ்கூபியோடு தீரனின் வீடு நோக்கி பறந்தாள்.  
கேட்டை திறந்து கொண்டு உள்ளே வந்தவள் வீடு திறந்திருக்கவே உள்ளே செல்ல உள்ளே தீரமிகுந்தன் இருப்பதை உணர்ந்து கொண்ட ஸ்கூபி குறைக்க
“பாத்தியா வீட்டை பெப்பரப்பே னு தொறந்து போட்டுட்டு இவங்க என்ன பண்ணுறாங்க” என்றவள் வாசலில் இருந்து குரல் கொடுக்க மாடியில் சத்தம் கேட்டது. மெதுவாக படிகளில் ஏறியவள் சத்தம் வந்த அறையினுள் நுழைய அந்த கதவு மூடிக்கொண்டது. திடுக்கிட்டு திரும்பியவள் அங்கே தீரமுகுந்தன் மார்புக்கு குறுக்காக கையை கட்டிக்க கொண்டிருப்பதை பார்த்து
“ஓ நீயா? இங்க என்ன திருட வந்த?” என்று அசால்டாக கேக்க
ஸ்கூபியை பிங்கியிடம் விட்டு விட்டு முக்கியமான வேலை என்று வந்தவன், வீட்டில் வைத்திருந்த பென்ட்ரைவின் நியாபகம் வரவே எடுத்துக் கொண்டு போகலாம்னு வீட்டுக்கு வந்தவன் வெளியே வர அங்கே பிங்கியை கண்டு
“அட குட்டச்சி… இவள ஏதாச்சும் பண்ணலாம் என்று முடிவெடுத்தவனாக சத்தம் செய்து அவளை தனதறைக்கு வர வைத்தவன் கதவை மூட எதிர் பார்த்தது அவள் பயந்து கத்துவாள் என்று ஆனால் அவளோ அவனையே கேள்வி கேக்க
“கொஞ்சமாச்சும் பயமிருக்கா? அதென்ன என்ன பாத்தா திருடன் மாதிரியா இருக்கு, இல்ல நாய் புடிக்கிறவன் மாதிரியா?” என்று நின்ற இடத்திலிருந்தே கேக்க அப்பொழுதுதான் அவனை ஆராய்ந்தாள் பிங்கி.
ஜீன்ஸோடு ஒரு ஷார்ட் அணிந்திருந்தான். அதை வைத்து அவனின் உத்தியோகத்தை கணிக்க முடியா விட்டாலும் கண்டிப்பா நாய் புடிக்கிறவனல்ல என்று மட்டும் தோன்ற “பிங்கி உன் லுக்க மாத்து இவன் வேற ஹீரோ மாதிரி இருக்கான்” மனம் கூவ நொடியில் அவளின் ரசிக்கும் பார்வை எள்ளல் பார்வையாகி   
“நீ யாரா வேணா இருந்துட்டு போ, ஸ்கூபிக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்” என்று கேக்க
அவளின் முகபாவங்களை ரசித்தவன் வலது புறம் தீரன் கை காட்ட பிங்கி இடது புறம் திரும்ப அங்கே ஸ்கூபியோடு தீரமுகுந்தனின் புகைப்படங்கள்.
“அப்போ அந்த தாத்தா சொல்லும் பேரன் இவனா?” என்று யோசித்தவள் “ஐயோ கண்ட படி பேசிட்டேனே!  ஒரு வேல தாத்தா கூட எடுத்த போட்டோவ காட்டி இருப்பாரு அத பாத்துட்டு தான் பய புள்ள என்ன எங்கயோ பாத்திருக்கேன்னு சொன்னானா?” என்று அசடு வழிந்தவாறே திரும்ப தீரனின் மேல் மோதி விழப்போக அனிச்சையாக அவளின் இடையோடு அணைத்திருந்தான் தீரமுகுந்தன்.
அவளின் முகபாவங்களை இவன் ரசிக்க
வளையோசை கல கல கலவென
கவிதைகள் படிக்குது குளு குளு
தென்றல் காற்றும் வீசுது
சில நேரம் சிலு சிலு சிலு என
சிறு விரல் பட பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது
சின்ன பெண் பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம்
கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம்
பிங்கியின் மனமோ  பாடல் பாட, ஸ்கூபி கதவின் மேல கீறல் போட தீரன் அவளை நேராக நிறுத்தி இருந்தான்.
கதவை திறந்து விட்டவன் ஸ்கூபியிடம் “எங்கள திருடன்னு சொல்லிட்டு என் ரூமில் இருந்து ஏதாவது திருடிட போறா ஜாக்கிரதையாக பாத்துக்கோ” என்று சொல்லி விடை பெற அவனை முறைத்தாள் பிங்கி.
அவள் அருகில் வந்து அவளின் மூக்கை சுண்டி விட அது அவளுக்கு நன்றாகவே வலிக்க கோபம் இன்னும் அதிகரிக்க முகம் பிங்க் நிறமாக மாற “இப்போ தான் நீ அழகா இருக்க” என்றவன் படிகளில் இறங்கி ஓட
பிங்கி வசைமாரியை பொழிந்தவாறே அவனின் பின்னால் வர
அவளின் இடுப்பை தொட்டதில் கிறங்கி நின்றவளை நினைத்து முகம் புன்னகையயை தத்தெடுக்க “அப்பா இப்போ தான் நீ நீயா இருக்க” என்றவன் தலையை சிலுப்பி விட்டு பைக்கில் பறந்து விட
சுத்தம் இதுங்க ரெண்டும் முறைப்போர் சங்கத்துல ஆதி குடியுரிமை பெற்றதுங்க போல இருக்கே! எப்போ ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சிக்க போகுதுங்களோ!” ஸ்கூபி முனகியவாறே தீரனின் அறையிலுள்ள புகைப்படங்களின் முன் நின்று புலம்பிக் கொண்டிருந்தது.  
*******************************************************************
“நான் உடனே டிஜிபி ய பாக்கணும்” கண்கள் கலங்கியவாறே பதட்டத்துடன் ஒரு குழந்தையையும் சுமந்து கொண்டிருந்த  ஆரோஹியை கண்டு சிறிதும் மனமிளகாமல் இது போல் நிறைய பேர் இங்கே வருவது தான் என்ற பார்வையுடன் அந்த ஏட்டு
“என்ன இருந்தாலும் அங்கே போய் சொல்லுங்க” என்று ஒரு அமர்ந்திருக்கும் போலீஸை கை காட்ட”
“நான்  டிஜிபியை தான் பாக்கணும்” பிடிவாதக் குரலில் கூற அப்பொழுதுதான் உள்ளே நுழைந்தான் விஷ்வதீரன்.
ஆரோஹியை கண்டு புருவம் சுருக்கியவன் கூலர் அணிந்திருந்த படியால் அவனின் கண்கள் அவளை ஆசையாக பார்த்தனவா? வன்மையாக பார்த்தனவா? அவனே அறிவான். சுவிங்கத்தை மென்றவாறே கையால் என்னவென்று கேக்க அவனை கண்டு சலியூட் வைத்தவர் பேச முன்
“நீங்க தான் டிஜிபி யா?  சார் நான் உங்க கிட்ட தான் பேசணும்” என்றவள் கண்கள் கலங்கியவாறே அவனை நேருக்கு நேராக பார்க்க
“உள்ள வா” என்றவன் தனதறைக்கு செல்ல அவன் ஒருமையில் அழைத்தது அவளின் கருத்தில் பதியவில்லை.
கதிரையில் அமர்ந்தவன் அவளை அமரும் படி சொல்லவுமில்லை, அவள் தன்னை அடையாளம் கண்டு கொள்ளவில்லையா? இல்ல அறிந்தும் அறியாமல் நடிக்கிறாளா? என்ற குழப்பத்தில் விஷ்வதீரனிருக்க,  அவள் கழுத்தில் தூங்கி கொண்டிருந்த விஜய்யை அங்கே இருந்த சோபாவில்  கிடத்தியவள் அவன் முன் அமர்ந்து
“சார் என் பையன் அஜய்யை காணோம்” என்று குலுங்கிக் குலுங்கி அழ அவளின் கண்ணீரை துடைக்க கைகள் பரபரத்தாலும் கைகளை இறுக்கி தன் கட்டுக்குள் வைத்தவன் முகத்தில் எந்தவொரு உணர்ச்சியையும் காட்டாது  மேலே சொல்லும் படி சைகை செய்ய
“என் அத்தையோட பசங்க கடைக்கு போனாங்க யாரோ வண்டில வந்து அத்தைய அடிச்சி போட்டு அஜய்ய தூக்கிட்டு போய்ட்டாங்க, விஜய் ஓடிப்போய் கடைல இருந்தவங்கள கூட்டிட்டு வந்திருக்கான். அத்த இப்போ ஹாஸ்பிட்டல்ல இருக்காங்க” என்று மீண்டும் கண்ணீர் வடிக்க
” அத்தயா?” என்று யோசித்தவன் அவளை பற்றிய கோப்பில் இருந்த மற்றுமொரு பெண்ணை பற்றி தான் தெரிந்து கொள்ள முனையாததை பற்றி நொந்து கொண்டவனாக “ஒருவேல அவ புருசனோட அம்மாவா இருக்குமோ?” என்று விஷ்வதீரனின் எண்ணம் போக ஆயிஷாபேகம் எந்த ஹாஸ்பிடலில் அனுமதிக்க பட்டிருக்கிறார் என்று கேட்டறிந்தவன் ஒரு இன்ஸ்பெக்டரை அழைத்து அவர் கண் முழித்ததும் வாக்கு மூலம் பெற்று கொள்ளும் படி உத்தரவிட்டவன் தன் புறமுள்ள தண்ணீர் கிளாஸை ஆரோஹியின் புறம் நகர்த்த அவள் அதை எடுத்து பருக்கலானாள்.
நெடுநாள் கழித்து காணும் காதலியை அருகிலேயே பார்த்ததில் அவளின் ஒவொரு சைகையையும், அசைவையும் அணுஅணுவாய் ரசித்து பாத்திருந்தவன் அக்கணம் அவள் அவனை தூக்கி எரிந்து விட்டு சென்றதை மறந்தான்.
“கடத்தினவங்களோட மோட்டிவேஷன் என்னனு தெரியல பணத்துக்காக கடத்தி இருந்தா இந்நேரம் போன் பண்ணி இருப்பானுங்க” என்று சொல்ல
“எவ்வளவு பணம் கேட்டாலும் நான் தரேன் என் பையன் எனக்கு வேணும்” ஆரோஹி மீண்டும் அழ  
“பணம் தான் கேப்பாங்கனு என்ன நிச்சயம் வேறேதாவது கேட்டா?” விஷ்வதீரன் ஒரு எள்ளல் புன்னகையை உதிர்த்தவாறே சொல்ல
அவளின் இரு கைகளையும் நீட்டி விஷ்வதீரனின் வலது கையை பற்றியவள் “அவங்க என்ன கேட்டாலும் நான் தரேன், எனக்கு என் பையன திருப்பி கொடுங்க” என்று அவனின் கண்களை பார்த்தவாறே சொல்ல
அவள் தொட்டதில் உள்ளுக்குள் மனம் உடைந்து உருகிக் கரைந்தாலும், பொய்த்து போன காதலி தொட்டதும் தாடைகள்  இறுக உடல் விறைக்க கைகளை இழுத்துக் கொண்டவன்
“கல்யாணம் பண்ணிக்கிறியா?” விஷ்வதீரன் கேக்க ஆரோஹி வாயடைத்து நின்றாள்.
விட்டுச்சென்ற காதலி/மனைவி மீண்டும் வந்ததால்? விஷ்வதீரனின் நிலை

Advertisement