Advertisement

                                                     அத்தியாயம் 3
தீரமுகுந்தன் விறு விறுவென வீட்டுக்குள் ஓடி வரவும்
“டேய் முகுந்த் எங்கடா ஸ்கூபி?” என்று திருமாறன் கேக்க
அவருக்கு பதில் சொல்லாது உள்ளே சென்றவன் குளியலறைக்குள் புகுந்து குளித்தேன் என்று இரண்டு நிமிடங்களில் வெளியேறி அலுமாரியை குடைந்து இருக்கிறதுலே எடுப்பான டி ஷர்ட்டை அணிந்து கொண்டு வாசலுக்கு வர  
“திரும்ப எங்கடா போக போற?” அவரின் கேள்வியை பொருட்படுத்தாது காலுக்கு மேல் காலை போட்டு அமர்ந்தவன் பத்திரிக்கையை கையில் எடுத்து முகத்தை மறைத்தவாறே வாசிக்க உள்ளே நுழைந்தாள் பிங்கி.
“ஹாய் அங்கிள், நல்லா இருக்கீங்களா? ஸ்கூபி தனியா பார்க்குல இருந்தான் அவனை கூட்டிட்டு வந்தேன் என்று சொல்ல
அவளை சொடக்கிட்டு அழைத்த தீரமுகுந்தன் “நீ பாத்த வேலைக்கு காசு வாங்கிட்டு போ” என்று சொல்ல பிங்கியின் முகம் கோவத்தில் சிவக்க அதை கண்டு சத்தமாக சிரித்தான் தீரமுகுந்தன்.
“அப்படி என்னதான் பத்திரிக்கையில் போட்டு இருக்கு, காலைலயே ஒரு எழுத்து விடாம படிப்ப, காலைல இல்லாத செய்தியை பாத்து மாலைல சிரிக்க” என்று திருமாறன் கேக்க
தீரமுகுந்தன் அசடுவழிய “கற்பனையா?” என்று பத்திரிக்கையாலேயே தலையில் அடித்துக் கொள்ள
“முகுந்த் நீ வர வர என்ன மதிக்கிறதே இல்ல” அப்பா பொரும, ஸ்கூபி ஓடி வந்து அவனின் காலை சுற்றி சத்தமெழுப்பி குற்ற பத்திரிகை வாசிக்க அதன் தலையை தடவியவாறே வெளியே எட்டிப்பார்க்க தாத்தா  யாருக்கோ டாடா காட்டி விட்டு கேட்டை பூட்டுவது தெரிந்தது.
“சே குட்டச்சி மிஸ் ஆகிட்டா” ஏதோ ஒரு ஏமாற்றம் தீரனுள். அலைபேசி அடிக்கவே அதை எடுத்து காதில் வைத்தவன் கேட்டை திறந்து விட விஷ்வதீரனின் வண்டி உள்ளே நுழைந்தது.
“ஏதோ பொண்ணு பாக்க போறமாதிரி குளிச்சி நீட்டா டிரஸ் பண்ணான். எல்லாம் அவன்கண்ணன வரவேற்கத்தானா?” திருமாறன் தீரமுகுந்தனை முறைத்தாலும் விஷ்வதீரனை கண்ணில் நிறைத்து பார்க்க
விஷ்வதீரன் யாரிடமும் எதுவும் பேசாது உள்ளே நுழைய அப்பாவும், தாத்தாவும் அவனை ஏக்கமாக பார்த்தனர். அவர்களை கண்டு கொள்ளாது சலீம் பாயிடம் நலம் விசாரித்தவன் குடிக்க கொண்டுவரும் படி சொன்னபடியே தனதறைக்குள் புகுந்து கதைவடைத்துக் கொள்ள ஏக்க பெருமூச்சு விட்டார் திருமாறன்.
“அவனை அவன் பாட்டுல விடுங்க டேட், அவனே புரிஞ்சிப்பான்” என்று தீரமுகுந்தன் சொல்ல
“அப்போ நீயாச்சும் கல்யாணம் பண்ணிகடா” கெஞ்சாத குறையாக
“பாத்தியா….. இதான் வேணாங்குறது கல்யாணம் பண்ணிக்க னு அவன டோச்சர் பண்ணுற..ன்னு தான் அவன் வீட்டு பக்கமே வரல என்னையும் துரத்த பாக்கிறியா? என்று கோபமாக பேசியவன் அவரின் கலங்கிய கண்களை கண்டு உடனே மனமிரங்கி “சரி பொண்ணு பாரு கட்டிக்கிறேன்” என்று சொல்ல அவனை கட்டிப்பிடித்தவர்
“பொண்ணெல்லாம் ரெடி நீ ஒரு தடவ போய் பாத்துட்டு வந்துடு”  
அவரை தள்ளி நிறுத்தி முறைத்தவன் “விட்டா தாலிய கைல கொடுத்து கட்ட சொல்லுவ போலயே! பொண்ணு பாக்குறது கேன்சல்” என்று தனதறைக்குள் புகுந்துக் கொள்ள   
“இந்த வருஷத்தோடு முப்பது முடிய போகுது, இன்னும் கல்யாணம் பண்ண எண்ணம் தோன்றாம இருக்கானுங்க” என்று முணுமுணுத்தவர் தீரமணியை ஏறிட
அவ்வளவு நேரம் அமைதியாக அங்கே நடப்பவைகளை பாத்திருந்தவர் “எல்லாம் நல்லதாகவே நடக்கும்” என்று வளமை போல் சொல்லி விட்டு அகன்றார்.
அறைக்குள் வந்த விஷ்வதீரன் பத்து வருடங்களாகியும் அறையில் எந்த மாற்றமும் இல்லாதிருக்க துணி கூட மாற்றாமல் கட்டிலில் விழுந்தவனின் எண்ணமெல்லாம் ஆரோஹியின் நினைவுகளே! இரட்டை ஜடையில், தாவணியில், நெற்றிப் பொட்டோடு மல்லிகை சாரம் சூடி….. அவள் ஒரு அழகான தேவதை.
“தேவதை இல்ல  அவள் ஒரு ராட்சஷி. என்னை கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளும் ராட்சஷி” விஷ்வதீரன் ஆரோஹியின் நினைவுகளை துரத்தி விட்டு குளியல் அறைக்குள் புக, தண்ணீர் உடம்பில் ஓட, ஓட மனதில் உள்ள ரணமெல்லாம் குறைவது போல் தோன்ற அதிக நேரம் ஷவருக்கடியில் நின்றவன்  தீரமுகுந்தன் வந்து கதவை தட்டவும் இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு கதவை படீரென திறந்து
“நிம்மதியா குளிக்க கூட விட மாட்டியா” என்று கடிந்து கொள்ள
“பெருசும், அரசும் சாப்பாட்டு மேசையில் வைட்டிங், எனக்கும் ரொம்ப பசிக்குது, உன் கூட சேர்ந்து சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு” என்று புன்னகை முகமாகவே சொல்ல அதற்க்கு மேல் விஷ்வதீரனால் கோவத்தை இழுத்து பிடிக்க முடியவில்லை. அமைதியாக அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டவன் தாத்தாவும், அப்பாவும் கேட்ட எந்த கேள்விக்கும் பதிலளிக்கவில்லை.
“இன்னும் எத்தனை நாட்களுக்கு இவன் இப்படியே இருக்கப் போறானோ!” என்ற பெருமூச்சுடனே திருமாறன் அவனை ஏக்கப் பார்வை பார்க்க
“தீரா இந்த முகுந்துக்கு ஒரு கல்யாணத்த பண்ணனும், இவன் சரினு சொல்ல மாட்டேங்குறான் கொஞ்சம் என்னனு கேளு” தாத்தா தான் வாய் திறந்தார். முகுந்த் விஷயத்தை பேசினாலாவது சகஜமாக பேசுவான் என்று புரிந்துகொண்டவராக சொல்ல பதில் தீரமுகுந்தனிடமிருந்து வந்தது.
“மிஸ்டர் தீரமணி என் பேரும் தீரன் தான்” என்று அவரை உறுத்து விழிக்க
“இவன் ஒருத்தன்” என்று அவரால் முணுமுணுக்க மட்டுமே முடிந்தது.
“அதானே கல்யாணம் என்ற உடன் அண்ணன், தம்பி இருவருக்கும் மூக்கு மேல கோவம் வருமே!” அங்கே பரிமாறிக் கொண்டிருந்த சலீம் பாய் முணுமுணுக்க அதை புரிந்துக் கொண்டது போல் அங்கே ஓரத்தில் படுத்துக்க கொண்டிருந்த ஸ்கூபி தலையை தூக்கி பார்த்து விட்டு சத்தம் எழுப்பிய வாறே திரும்பி படுத்தது.
“என் அப்பத்தா தான் பா உங்களுக்கு பேரு வச்சாங்க, அவங்க ராஜஸ்தான் ராஜவம்சம். அவங்க தாத்தா ஒருத்தர் அரசனோட தளபதியா இருந்தப்போ”
“ஆரம்பிச்சிட்டியா? எங்கடா இன்னும் சொல்லயேன்னு பார்த்தேன். நீ இன்னொரு தடவ வாளு, அரசன்னு பேசின நா வீட்டை விட்டு ஓடி போய்டுவேன்” தீரமுகுந்தன் அப்பாவை முறைத்தவாறே சொல்ல
“இவனுங்கள பெத்ததுக்கு பேசாம ஆர்மில போய் நாட்டுக்காக உயிரை விட்டிருந்திருக்கலாம். என் பொண்டாட்டி இருந்தவரைக்கும் ஒரு வார்த்த எதிர்த்து பேசமாட்டா. இவனுங்க நான் என்ன பேசினாலும் என் வாய மூடுவாங்க” என்று சலீம் பாயிடம் குசுகுசுக்க    
தீரமணியோ “நீ வக்கீல் இல்ல உன் பொண்டாட்டிய எங்க பேச விட்டிருப்ப? அதான் மகராசி உன் தொல்ல தாங்க முடியாம போய் சேர்ந்துட்டா” எங்கே மகன் மருமகளை நினைத்து வருந்துவானோ என நக்கலடிக்க
இவர்களின் பேச்சு காதில் விழுந்தாலும் விழாதவாறு “பலநூறு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவங்களை நேரில் பார்த்தவர்கள் சொல்ல அடுத்த தலைமுறைக்கு கதையாகவும், அடுத்து அடுத்து வரும் தலைமுறைக்கு கட்டுக் கதையாகவும் மாறும். அதுக்காக அப்படி ஒரு சம்பவமே நடக்களனு சொல்லிட முடியாது” விஷ்வதீரன் சாப்பிடுவதை நிறுத்தி பேச
திருமாறன் சொன்னதுக்கு அவர் பக்கம் பேசியதாக அவரின் முகம் மலர தீரமுகுந்தன் அண்ணனை முறைக்க அவனின் பக்கம் சாய்ந்து
“உண்மையிலேயே அந்த பரம்பரையில் வந்த ஒருவன் ராஜஸ்தானில் இருக்கிறான், அந்த வாள் தொலைந்து போச்சுன்னு கிட்டத்துலதான் கண்டு பிடிச்சிருக்கிறான். இத அவர் கிட்ட சொல்லிடாத ராஜஸ்தான் போகணும்னு கிளம்பிடுவாரு, அவரோட அப்பத்தா கிழவி ஓடிப்போய் கல்யாணம் பண்ணதால தான் வாள் தொலைஞ்சதுனு கடுப்புல இருக்கான். அந்த கிழவியோட வாரிசுன்னு போய் இறங்கினா துப்பாக்கி தோட்டா மழை தான் வரவேற்கும்”   என்று சொல்லி முடிக்க
“அப்போ அப்பா சொன்னது கதையல்ல நிஜமா?” என்ற பார்வைதான் தீரமுகுந்தனிடம். சாப்பாட்டை முடித்து கொண்டு அனைவரும் தங்களது அறைக்குள் ஒதுங்க “கேஸ் விஷயமா ஏதாச்சும் பேசணுமா?” தீரமுகுந்தன் கேக்க
“இல்ல நாளைக்கு ஆபீஸிலேயே பேசலாம்” என்று விஷ்வதீரன் அகல தீரமுகுந்தன் அவனது அறையிலுள்ள வெண்பலகையில் ஒட்டியிருந்த இறந்து போன பெண்களின் புகைப்படங்களின் முன் ஒரு கதிரையை இழுத்து போட்டு அமர்ந்தவன்  உன்னிப்பாக அதை கவனிக்கலானான்.
*******************************************************************
I love you, I love you                    I love you, I love you
I love you, I love you                    I love you, I love you
Saaton janam mein tere            In all your seven rebirths
Main saath rahunga yaar         I’ll be there with you my beloved
Mar bhi gaya toh main tujhe          Even if I die
Karta rahunga pyar                        I’ll still keep loving you
Sapna samajh ke bhool na jaana Don’t forget me like a dream
O dilwale saath nibhana                       O lover, be there with me
Saath nibhana dildaar                     Beloved, be there with me
பின்னணியில் காதல் மெல்லிசை மனம் மயக்க ஆகாஷின் அணைப்பில் நிசா மெதுவாக அவ்வறையினுள் ஆடிக்கொண்டிருக்க
“என்ன நிசா இப்போவாச்சும் கல்யாணம் பண்ணிக்கிலாமா? இன்னும் எவ்வளவு நாள் வெயிட் பண்ண வைக்கிற”
“ஆரோஹி கல்யாணம் பண்ண பிறகு தான் நம்ம கல்யாணம் னு யாரோ சொன்ன நியாபகம்” நிசா தலை நிமிர்ந்து ஆகாஷை பார்க்க தூரத்தில் ஆரோஹியின் குரல்
“ஆகாஷ், போகாத, போகாத”
“இங்கயும் வந்து இம்ச பண்ணுறா” என்று இருவரு ஆரோஹியை பார்க்க அவளோ தண்டவாளத்தில் ஓடி வந்து கொண்டிருந்தாள் ஆகாஷும், நிஷாவும் தண்டவாளத்தின் நடுவில்…. ரயில் அவர்களை நோக்கி
“ஆகாஷ்………”  ஆரோஹி திடுக்கிட்டு எழுந்தமர ஆயிஷாவும் எழுந்து மின்குமிழை போட வியர்வையில் குளித்திருந்தாள் ஆரோஹி.
“மீண்டும் கனவா? இந்தா தண்ணி குடி” என்று ஆரோஹிக்கு நீரை புகட்டி தடவி கொடுத்தவர் “யா அல்லாஹ் இந்த குழந்தைக்கு விடிவு காலமே இல்லையா?” என்று கண்கள் கலங்க, அவரை அணைத்து கொண்டு அழுது கரைந்தாள் ஆரோஹி.
ஆரோஹி கனவு கண்டு திடுக்கிட்டு விழிக்க இங்கே விஷ்வதீரனும் எழுந்தமர்ந்தான்.
“சே ராட்சஷி எதுக்குத்தான் என் கண் முன்னாடி வந்து தொலச்சாலோ! அவள பாத்ததிலிருந்து  அவ நியாபகமாகவே இருக்கு, கனவுலவேற தொல்ல பண்ணுறா” என்றவன் தூக்கம் வராது  டிரெட்மில் ஏறி ஓடலானான்.
      
உலகத்தில் எத்தனை பெண்ணுள்ளது
மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது
ஒருமுறை வாழ்ந்திடத் திண்டாடுது
இது உயிர்வரை பாய்ந்து பந்தாடுது
பனித்துளி வந்து மோதியதால்
இந்த முள்ளும் இங்கே துண்டானது
பூமியில் உள்ள பொய்களெல்லாம்
அட புடவைகட்டி பெண்ணானது
ஏ புயல் அடித்தால் மலை இருக்கும்
மரங்களும் பூக்களும் மறைந்துவிடும்
சிரிப்புவரும் அழுகைவரும்
காதலில் இரண்டுமே கலந்துவரும்
ஒரு முறை தான் பெண் பார்ப்பதினால்
வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை
நடு இரவிலும் அந்த மயான அமைதியை கிழித்துக் கொண்டு எங்கோ வானொலி பாடியது.
*******************************************************************
விஷ்வதீரனின் கட்டிலில் தாவி ஏறி தனது நாக்கால் அவன் முகமெங்கும் நக்கியவாறே அவனை எழுப்பிக் கொண்டிருந்தான் ஸ்கூபி. அதிகாலையில் கட்டிலில் விழுந்ததால் ரொம்ப நேரம் தூங்கியிருக்க மணியை பார்த்தவன் அது பதினொன்று என காட்டவும் அடித்துப் பிடித்து எழுந்தமர ஸ்கூபியை கண்டவன்
“ஹாய் ஸ்கூப்,  நல்லா இருக்கிறியா?” என்று  அதன் மூக்கோடு மூக்குரச
“நேத்து நைட்டும் நான் இந்த வீட்டுக்குள்ள தான் இருந்தேன். என் கிட்ட வந்து பேசினியா?” என்று குறைபட்டவனாக ஏதோ சத்தம் செய்து “உன்ன எழுப்ப சொல்லிட்டு தான் உன்  தம்பி போனான் அதான் உன் அறைக்குள்ளேயே வந்தேன்” என்ற பார்வையோடு அவனை பாவமாக  பார்த்து விட்டு வெளியே ஓடியது.
ஒரு பெரு மூச்சு விட்டவன் குளியலறைக்குள் புகுந்து காக்கி சட்டையில் வெளியே வர வீட்டில் சலீம்  பாயை தவிர வேற யாருமில்லை.
“எல்லாரும் அவங்க அவங்க வேலைய பாக்க போய்ட்டாங்க, நீ வந்து சாப்பிட்டுடு போ பா” என்றவர் சாப்பாட்டு மேசையில் உள்ள தட்டை திருப்பி வைக்க
“நீங்க சாப்பிட்டீங்களா?” என்று கேட்டவாறே அமர்ந்து சாப்பிட்டவன் அவரிடம் விடைபெற்று செல்ல
“மத்யானத்துக்கு அங்கேயே  சாப்பாட்ட கொண்டு வந்து தரவா” என்று அவனை ஏறிட்டார் சலீம் பாய்
ஒரு சுவிங்கத்தை வாயில் போட்டு மென்றவாறே “உங்க இஷ்டம்” என்றவன் அலுவலக வண்டியில்  ஏறி கிளம்பினான்.
அந்த ட்ராபிக் சிஃனலில் மாட்டிக் கொண்டவன் பிங்கியின் வண்டியை நிறுத்தி விசாரிப்பதை கண்டு போனில் அந்த ட்ராபிக் போலீசை அழைத்தவன் என்ன ஏதென்று விசாரிக்க
“லைசன் எக்ஸ்பயர்ட்  சார்” என்று சொல்ல
“எனக்கு தெரிஞ்ச பொண்ணுதான்  இன்னும் ஒரு வாரத்துல வந்து எல்லாம் சப்மிட் பண்ண சொல்லி  இந்த தடவ வார்ன் பண்ணி அணிப்பிடுங்க” என்று சொல்லியவன் கிளம்பிச்செல்ல
“என்னம்மா டிஜிபி உனக்கு வேண்டியவரா? அடுத்த வாரம் வந்து எல்லா பேப்பர்ஸையும் சப்மிட்  பண்ணு” என்று முறுவலிக்க
“எவன் அவன்” என்று பிங்கி பார்வையை வீச விஷ்வதீரனின் வண்டி கிளம்பி இருந்தது. “வந்தவரைக்கும் லாபம்”  என்று முணுமுணுத்தவள் சுவிங்கத்தை மென்றவாறே “சரி சார், கண்டிப்பா சார், ஓகே சார்” ஆயிரம் சார்களை போட்டவள் வண்டியை கிளப்பினாள்.
*******************************************************************
விஷ்வதீரன் ஆபீஸ் செல்லாது சென்ற இடமோ சீக்ரட் மிஷன் எனும் நான்கு மாடிகளை கொண்ட கட்டிடத்துக்கு.  வெளிப்பார்வைக்கு அடுக்கு மாடி வீடு போலும், ஏதோ ஆபீஸ் கட்டிடம் போலும் அது தோற்றமளித்தது.
உள்ளே செல்ல அங்கே இருந்த காவலாலி சாலியுட் வைக்க கதவோடு ஒட்டி மாடிப்படிக்கட்டும், மின்தூக்கியும் இருந்தது. படி  வழியாக மேலே செல்ல அங்கே தீரனோடு போஸ்டமோட்டம் செய்யும் டாக்டர் அன்புச்செல்வன் வயது 58, போட்டோகிராபர் மிதுன் வயது 25  இருவரும்  இருக்க அவர்களுக்கு ஒரு “ஹாய்” வைத்தவன் நேரடியாக விசயத்துக்கு தாவினான்.
” நானே நேரடியாக இறங்கி இருக்கிறதால இந்த கேசில் நாங்க நாலு பேர் மட்டும் தான் வேல பாக்க போறோம். உதவின்னு தேவ படும் போது நம்பிக்கையான எங்க டிபார்ட்மென்ட் ஆட்கள் மூலமா நான் செஞ்சிக்கிறேன்.  உங்கள பத்தி சொல்லுங்க” என்று மிதுனை ஏறிட
“நான் இந்தியாவின் ‘த இந்தியா டுடே’ பத்திரிகையின் க்ரைம் செக்சன் போட்டோகிராபர் பிணங்களை மட்டுமல்ல, எத்தனை மாடி கொண்ட கட்டிடமானாலும் உள்ளே புகுந்து போட்டோ எடுக்குறதுல ஸ்பெசலிஸ்ட் அண்ட் என் கமெராக்களை நானே தான் தயாரிப்பேன்” என்று சொல்லி முடிக்க உருவத்துக்கு வேலைக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்றே தோன்றியது விஷ்வதீரனுக்கு.
மிதுன் சொல்லி முடித்ததும் அன்புச்செல்வன் “பிணங்களுடனேயே என் வாழ்க்கை ஓடி விட்டது” என்று பெருமூச்சு விட்டவர் “நீங்க கொடுத்த எட்டு பிணங்களின் ரிபோட்டும் இதுல இருக்கு என்று ஒரு கோப்பை கையில் கொடுக்க அதை விரித்து படித்தவனின் தலை வலிப்பது போல் இருந்தது.
அதிலே இருந்தது உடலில் உள்ள காயங்கள் எல்லாமே ஏதோ ஒரு தட்டையான பலகையால் அவர்களை அடித்ததனால் இரத்தம் உறைந்து அவ்விடத்தில் காயம் போல் உண்டாகி இருப்பதாகவும், அது ஒருவகை பாலியலில் வன்மையான முறையில் ஈடு படுவோரின் செயல் எனவும், ஏதோ ஒரு புதுவகையான போதை மருந்து உட்கொண்டிருப்பதாகவும் அது என்னவென்று இன்னும் கண்டறியப்படவில்லை என்பதே. மேலும் அதை விரிவாக படிக்க தோன்றாமல் கோப்பை மூட
தீரமுகுந்தன் பேச ஆரம்பித்தான் “செத்து போன அனைவருக்கும் ஒரு அன்னவ்ன் நம்பரிலிருந்து கால் வந்திருக்கு, எல்லாம் வெவ்வேறு நம்பர் ஆனால் டீச்சர் ஜோதி, மற்றும் நித்யா இருவருக்கும் ஒரே நம்பரிலிருந்து ஒவ்வொரு தடவ வந்திருக்கு என்ன பேசினாங்கனு “மொபைல் வாய்ஸ்” ல கேட்டிருக்கேன் கிடைச்ச உடன் அடுத்த மூமென்ட் தான். எல்லா அன்னவ்ன் நம்பரும் திருட்டு போன செல்லுல இருந்து பண்ண கால்ச” என்று முடிக்க
{ “மொபைல் வாய்ஸ்” என்பது மக்கள்  மேற்கொள்ளும் அத்தனை போன்காலும் ரெகார்ட் செய்து சேமிக்கும் இடம்}
“கூடிய விரைவில் குற்றவாளியை நெருங்கி விடுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று மட்டும் கூறி அவர்களிடமிருந்து விடை பெற்றான் விஷ்வதீரன்.
*******************************************************************
“குட்டி சும்மா புசுபுசுனு இருக்கா” அவ்வறையில் சுயநினைவில்லாது கட்டிலில் இருந்த மாலாவை பார்த்து அந்த மினிஸ்டர் சொல்லியவாறே சரக்கை கிளாசில் ஊற்றிக் குடிக்க அவளிடத்தில் எந்த அசைவும் இல்லை. அவளை நெருங்கி அவரின் தேவையை தீர்த்து கொண்ட பின் அவர் கிளம்பிச் செல்ல  
அங்கே வந்த அன்று பாரில் சரக்கடித்து கொண்டிருந்த இருவரும் கையிலிருந்த பையிலிருந்து சில பொருட்களை மேசையில் வைக்க, அதில் சிறு கசை, டென்னிஸ் ராக்கட் போன்ற தட்டையான பலகை, மற்றும் சில பொருட்கள் இருக்கவே! சிறு கைப்பிடியுள்ள டெனிஸ் ராக்கட்  போன்ற பலகையினால் அவளை அடித்து காயப்படுத்தியவாறே பாலியல் பலாத்காரம் செய்ய சுயநினைவில்லாத நிலையிலையே உயிரை விட்டிருந்தாள் மாலா.  
மேற்கத்திய நாடுகளில் பாலியலை புனிதமாக கருதாது கேளிக்கை கூத்தாக மாற்றியதுமல்லாது அதை வெரி பெயின்புள் செக்ஸ் என்று உடம்பை காயப்படுத்திக் கொண்டு நடாத்தும் இழிசெயலை  விளையாட்டாகவும் மாற்றி இருக்க அதை இணையதளத்தில் பார்த்த இவ்விருவரும் அதை செயல் படுத்த இன்று பலி கொடுத்தது மாலாவை.
{ஆகாஷ், நிஷா} யார் இவர்கள்?

Advertisement