Advertisement

                                                      அத்தியாயம் 2
கயல்விழி ஏஜ் 23, மெடிகல் ஸ்டுடன்ட்,   இறப்பு:- அதிக போதைப்பொருள் உட்கொண்டமை. உடலில் உள்ள காயங்கள்? மர்மம்.
அமுதா ஏஜ் 28, துணை நடிகை, இறப்பு:-  பாலியல் பலாத்காரம், போதைப்பொருள் பாவனை.  உடலில் உள்ள காயங்கள்? பாலியல் பலாத்காரத்தால் நேர்ந்தது.  
ஜோதி ஏஜ் 25, ஆசிரியை, இறப்பு:- தற்கொலை, உடலில் உள்ள காயங்கள்? மர்மம்
நித்யா ஏஜ் 20, ஆர்ட்ஸ் காலேஜ் ஸ்டுடன்ட், இறப்பு:- தற்கொலை, உடலில் காயங்கள் எதுவுமில்லை.
மற்ற நான்கு பெண்களும் புதைக்கப் பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட அது கண்டிப்பாக கொலை தான் என்று உறுதியானாலும், உடல் அதிக சேதமடைந்ததால் போஸ்டமாட்டம் ரிபோட்டில் தெளிவான தகவல்கள் இல்லை.
விஷ்வதீரன் இறந்துபோன பெண்களின் புகைப்படங்களையும், இறப்புக்கான காரணங்களையும் மாறி, மாறி பார்த்தவாறே ஒற்றுமைகளை தேட அவர்களுக்குள் எந்த ஒற்றுமையும் இல்லை. இதுவரை எட்டு பெண்கள் இறந்திருக்க, அதில் மூவர் சென்னையை சேர்ந்தவர்கள். இங்கே வந்து இறந்ததன் காரணம் புரியவில்லை. மீண்டும் அலசியவனுக்கோ உண்மை கண்முன்னே இருப்பது போலவும், அது கண்ணில் சிக்காது ஆட்டம் காட்டுவது போலவும் இருக்க கதிரையில் தலை சாய்த்து அமர்ந்தவன் யோசனைக்குள்ளாக அவனின் கண்ணுக்குள் ஆரோஹி வந்து சிரிக்க அந்த மீசைக்குள் ஒழிந்திருந்த உதடுகள் புன்னகையை பூசிக்கொண்டது.
“ஏய் விஷ் வந்துட்டியா? வா வா உன் ஹைட்டு தான் சரி அங்க பாரு மங்கா பழுத்து தொங்குது பிச்சி தறியா? ப்ளீஸ்” கண்ணை சுருக்கி கெஞ்சும் அவளின் அழகில் மயங்கியவன்
“இந்த ஒரு காய் போதுமா? இன்னும் வேணுமா?” என்றவன் மரத்தில் ஏறி இருக்க அவன் லாவகமாக மரத்தில் ஏறியதை வாயை ஆவென திறந்து பாத்திருந்த ஆரோஹி அவனின் குரலிலேயே சுயநினைவுக்கு வந்தாள்.
“தாவணிய விரிச்சு பிடி, நான் போடுறேன்”
தவணியை முற்றாக கழட்டி கையில் எடுத்தவள் அதை எப்படி விரிப்பதென்று தடுமாற, மரத்தின் மேல் இருந்த விஷ்வதீரனை  அவளின் மொத்த அழகும் பித்தம் கொள்ள செய்ய……  தலையை  உலுக்கிக்  கொண்டவன் நேராக நிமிர்ந்து அமர,  தீரமுகுந்தன் உள்ளே நுழைந்தான்.
அவனை பார்க்காமலேயே “போன விஷயம் என்ன ஆச்சு?” விஷ்வதீரன் கேக்க
“கடைசியா இறந்த ஜோதி ஸ்கூல் டீச்சர், இன்னொரு டீச்சர் கூட தங்கி இருந்தாங்க ஜோதியின் சாவை பாத்து அந்த வீட்டை விட்டு போனவங்க, எங்க போனாங்கனு எந்த தகவலும் இல்ல. அவங்க தங்கி இருந்த ரூம்ல சந்தேகப்படும் படியான எந்த தடயமோ, போதைபொருள் பாவிக்கிறதுக்கான எந்த ஒரு தடயமோ இல்ல. அவங்க பலாத்காரமா உடலுறவுல  ஈடு படத்துக்கான அறிகுறியும் இல்ல. இத எப்படி கொலனு சொல்லுற” முகுந்தன் தான் சென்ற வேலை தோல்வியில் முடிந்த ஆதங்கத்தில் பேச
அவனை கூர்மையாக பார்த்தவன் “அவ தற்கொலை பண்ணது உண்மை. அதன் காரணம் மத்த கொலைகளுக்கான காரணமா இருக்கும் என்பது என் ஊகம்” விஷ்வதீரன்
“அப்போ அந்த காணாமல் போன டீச்சரை தேடுறது தான் என் வேல எங்குற?” புன்னகைத்தவாறே முகுந்தன்
“நீ எத கண்டு பிடிக்க போனியோ அத கண்டு பிடிச்சிட்டு தான் வந்திருப்ப, நீ கொண்டு வந்த சீசீடிவி  புட்டேஜ் எங்க?” உன்னை நானறிவேன் என்ற பார்வையில் விஷ்வதீரன் சுவிங்கமொன்றை வாயில் திணித்து மென்றவாறே கேக்க  
சபாஷ் என்று கண்ணாலேயே சொன்னவனின் கண்ணுக்குள் சுவிங்கம் மென்றவாறே வாயாடும் பிங்கி வந்து போக அவளை புறம் தள்ளியவன், வேலையில் கண்ணாக அந்த காணொளியை இயக்க, அதில் ஜோதி பதட்டமாக பிளாட்டின் மின்தூக்கியினுள் செல்வதும், அறையினுள் செல்வதும் காணக்கிடைத்தது. அடுத்த சில மணித்தியாலங்களில் அவள் இறந்து போக அதுவும் கை நரம்பை  துண்டித்து இறந்து போய் இருக்க, அவர்களின் வீட்டின் முன் உள்ள சீசீடிவியில் கதவை திறந்த தோழி  அதை கண்டு அலறி அதிர்ச்சசியில் மயங்கி விழ அதன் பின் கூட்டம் கூடியது. அதை இடைநிறுத்தம் செய்த முகுந்தன்
“தெளிவா தெரியுது தற்கொலைனு”
“பதட்டம் ஓகே, பிகாஸ் அவங்க கொஞ்சம் பயந்த சுபாவம் உள்ளவங்க, அப்படி பட்டவங்க கைய கட் பண்ணிக்கிட்டது ஏத்துக்க கூடியதா இல்ல” விஷ்வதீரன்
“சம்திங் பிஷி. இந்த சிட்டியோட மொத்த சீசீடிவியையும் அலசனும்” என்று சொன்னவன் எழுந்துக் கொண்டு  “ரெண்டு நாளா ஆபீசே கதின்னு இருக்க, எப்போ வீட்டுக்கு வரப்போற?” என்று சகோதரனாக கேக்க
“இன்னைக்கி வரேன்” என்று விஷ்வதீரன் பதிலளிக்க
“நீ வருவது சந்தேகம் தான்” என்ற பார்வையை வீச
“நம்ம சிட்டில குழந்தைகளை கடத்துற குரூப் ஒன்னு சுத்துது அதையும் கண்டு பிடிக்கிறது உன் பொறுப்பு” இந்த வேலையும் நீயே தான் பார்க்கணும் என்று அவனை ஏறிட
‘தனது  காற்சட்டை பாக்கெட்டினுள் கையை விட்டவன் போன தடவ கடத்தின குழந்தை கிடைச்சப்போ அந்த குழந்தையை விட்டுட்டு போன ஏரியாவ தரவா செக் பண்ணப்போ சந்தேகப்படும் படியா இருந்தவன் இதுல இருக்கான், யாரு என்னனு கண்டு பிடிக்கிறது உன் பொறுப்பு” என்று ஒரு பென்ட்ரைவை மேசையின் மேல் வைத்து விட்டு தீரமுகுந்தன் எழுந்துகொள்ள.  
அவன் சொன்னதை ஒரு புன்னகையை வீசியவாறே கேட்டிருந்த விஷ்வதீரன்  “ஸ்மார்ட்” என மெதுவாக கூற
“அத கொஞ்சம் சத்தமாகவே சொல்றது” என்று கண்சிமிட்டியவன் “இங்க வந்த உடனேயே இங்க நடக்குற எல்லா விதமான கிரைம், இல்லீகல் ஏக்டிவிடீஸையும் அலசி ஆரஞ்சேன், குழந்தைகளை கடத்துறவனுங்க பணக்கார பசங்கள பாத்து, பெரிய தொகையும் கேக்காம கடத்துறானுங்க, அதனாலேயே பெற்றோர்களும் போலீஸ் கம்பளைண்ட் கொடுக்காம பணத்தை கொடுத்து குழந்தைகளை மீட்டிடுறாங்க” புருவம் நீவியவாறே
“அதிக ரிஸ்க் எடுக்காம வேல பாக்குறானுங்கனு சொல்லுற?” விஷ்வதீரன் புன்னகைமுகமாகவே சொல்ல
“குழந்தைகளை கொலை செய்யவுமில்லை சோ, பொண்ணுங்க கொலை பண்ண குரூப்பும் இந்த குரூப்பும் வேற வேற” என்று தீரமுகுந்தன் கண்சிமிட்ட   
“நா வந்து பாக்க எந்த வேலையுமில்லாம எல்லா வேலையையும் நீயே பாத்து வச்சிருக்க, அந்த ஆளு எதுக்கு என் கைல கேச ஒப்படைச்சாரு” என்று மீசையை முறுக்கியவாறே எழுந்துகொள்ள {முதலமைச்சரை தான் பா அந்தாளுனு சொல்லுறானுங்க}
“அந்தாளுக்காக ஒன்னும் நான் வேல பாக்கல, என் அண்ணண் பாரத்த  குறைக்க தான் நான் வேல பார்த்தேன்” என்று தீரமுகுந்தன் முறுக்கிக்கொள்ள
“அப்போ என்ன அண்ணனா ஏத்துகொள்ளுற” குறும்புப் புன்னகையை உதட்டோரம் கசிய விட்டவன் தீரமுகுந்தனை ஏறிட
“ரெண்டு நிமிசத்துக்கு முன்னாடி பொறந்தவனையெல்லாம் அண்ணான்னு சொல்ல வச்சிட்டியே! கடவுளே! இது நியாயமா தர்மமா” என்று புலம்பியவாறே அவ்வறையை விட்டு அகல
“டேய் பதில் சொல்லிட்டு போடா” என்ற விஷ்வதீரனின் குரல் கதவுக்கு உள்ளே கேக்க தனக்குள் முறுவலித்தவன் முகத்தை விறைப்பாய் வைத்துக்கொண்டு நகன்றான் தீரமுகுந்தன்.  
*******************************************************************
“புதைக்க தெரியாம பொதச்சு இப்போ அந்த டிஜிபி  எல்லாத்தயும் தோண்ட போறான்”  அந்த பாரில் இருந்து சரக்கை வாயில் ஊற்றியவாறே ஒருவன் சொல்ல
“அவனால எதையும் கண்டு பிடிக்க முடியாது  நாம சப்லை பண்ணுற சரக்கு அப்படி” என்று அடுத்தவன் சொல்ல
“ஐயாவுக்கு தெரியுமா?”
 “நாம பொதச்சதுதான் வெளிய வந்திருக்குனு தெரியாது, தெரிஞ்சா என்ன கொண்டே போட்டுடுவாரு?”
“ஒரு வேல அந்த டிஜிபி கண்டு பிடிச்சிட்டானா?”
“ஹாஹாஹா  அவனால கண்டுபிடிக்கவே முடியாது, மார்கெட்டுல “மேஸ்மரிசம்”னு எந்த போதைப்பொருளும் இல்ல அது ஐயாவோட ஹோட்டல்ஸ்ல மட்டும் தான் கிடைக்கும், அப்படியே அவன் அத கண்டு பிடிச்சாலும் ஐயாவ நெருங்க முடியுமா” என்று சொல்லிச் சிரிக்க
யோசனைக்குள்ளானவன் “அந்த டிஜிபி வந்ததால ஐயா பொண்ணுங்க மேட்டர கொஞ்சம் நாளைக்கு தள்ளி போட சொல்லி இருக்காங்க”
“அவர் அப்படிதான் சொல்லுவாரு, அவரே போன் பண்ணி ஏற்பாடு பண்ணுனு சொல்லுவாரு. அதனால புது பீசா ரெடி பண்ணி வை”
“புதுசா ஒன்ன தொட்டு ரொம்ப நாளாச்சு” என்று போதையேறிய விழிகளோடு சொன்னவன் “இந்த தடவ எந்த காலேஜ் பொண்ணு?” என்று எழுந்து கொள்ள
“காலேஜ் பொண்ணெல்லாம் இல்ல குடும்ப பொண்ணாம், டீடைல்ஸ் அண்ணன் கிட்ட இருக்கும் போய் வாங்கிக்க”  என்றவன் கிளாசில் சரக்கை ஊற்றலானான்.
*******************************************************************
காலேஜ் மாணவியான நித்யா இறந்து கிடந்த பூங்காவினுள் ஸ்கூபியுடன் நுழைந்தான் தீரமுகுந்தன்.
அதிக மன உளைச்சலின் காரணமாக தற்கொலை செய்துகொள்வதாக கடிதம் எழுதிவிட்டு அந்த பூங்காவில் உள்ள ஒரு பெஞ்சில் தூக்க மாத்திரைகளை முழுங்கி விட்டு நிரந்தரமாக  தூங்கியவள் தான் நித்யா. சீசீடிவியிலும் அவள் அழுதவாறே பூங்காவினுள் நுழைவது மாத்திரமே இருக்க, அவள் இறந்து போனது அடுத்த நாள் காலையில் தான் தெரியவந்தது. கிராமத்திலிருந்து படிக்கவென வந்த மாணவிக்கு மூன்றே மாதத்தில் அப்படி என்ன மன உளைச்சல் வரும்படியாக நடந்து விட்டது?
ஸ்கூபியுடன் அலைந்த தீரமுகுந்தன் ஏதாவது தடயம் கிடைக்குமா என்று தேட ஒன்றும் கண்ணில் சிக்கவுமில்லை. அதிக நாட்கள் கடந்தமையால் ஸ்கூபியின் மூக்கிற்கும் நித்தியாவை பற்றி எதுவும் கிடைக்கவில்லை. கிடைத்தது தன் தோழியின் சுகந்தம் அதை நுகர்ந்தவன், தீரமுகுந்தனை அம்போ என விட்டு விட்டு ஓடி பிங்கியை அடைய,
தீரமணியும் ஸ்கூபியும் அடிக்கடி இந்த பூங்காவிற்க்கு வருபவர்கள், பிங்கி அடிக்கடி வருபவளல்ல, ஆனால் அவளை கண்டாலே ஓடி வந்து செல்லம் கொஞ்சுவது ஸ்கூபியின் வேலை. அப்படித்தான் தீரமணியும் பிங்கியும் அறிமுகமானார்கள். தன் நண்பனை அணைத்துக் கொண்டவள்
“ஹேய் ஸ்கூபி இங்க என்னடா பண்ணுற? தனியாகவா வந்த? இருக்காதே? தாத்தா எங்கடா?” பிங்கி ஸ்கூபியிடம் கேள்விகளை அடுக்க அது முன்னங்காலை உயர்த்தி பிங்கியின் மேல் ஏறி ஒரு நல்ல நண்பனாய் அவளை அணைத்துக் கொண்டது.
ஸ்கூபியை தேடிவந்த தீரமுகுந்தன் அது பிங்கியிடம் இருப்பதை கண்டு யோசனையாக வர ஸ்கூபி அவனை கண்டு குறைக்க ஆரம்பித்தது. அதில் அவனை நிமிர்ந்த்துப் பார்த்து அவனை அடையாளம் கண்டு கொண்டு முறைத்தவள் ஸ்கூபியுடன் செல்லப் போக
“ஏய் நில்லு எங்க போற?”  “ஸ்கூபியை கொடுத்துட்டு போ” என்று சொல்ல வருவதற்குள்  
“என்ன? என்ன பாலோவ் பண்ணுறியா? டேய் வேணாம் என் கிட்ட வம்பு வழக்காத ஸ்கூபிய விட்டு கடிக்க விடுவேன்” பிங்கி எகிற
தன்னை அடையாளம் கண்டு பிங்கியின் மூக்கு நுனி பிங்க் நிறத்துக்கு மாறுவதை கண்டவன்  சுவாரசியம் கூட  இதோடா இவ உலக அழகி அப்படியே நா இவ பின்னாடி லோலோனு அலைய சும்மா கடுப்படிக்காம போடி” என்று வம்பிழுக்க
ப்ரியங்வதனி மாநிறம், ஐந்தடி மூன்று அங்குலம் கொஞ்சம் பூசினால் போன்ற உடலமைப்பை கொண்டவள், அது அவள் குள்ளம் என்பதாலேயே அன்றி குண்டானவள் அல்ல, அவளின் தோழிகள் அவளை விட உயரம் அதிகமாக இருக்க ஹை ஹீல்ஸ் போட்டு வளம் வரும் மோர்டன் தேவதை
இன்று வெளியே போகும் போதே புஷ்பா சொன்னது தான் “வதனி உனக்கு நாக்குல சனினு  இன்னைக்கு ராசிபலன்ல போட்டிருக்கு யார்கிட்டயும் வம்பு வச்சிக்காதேன்னு” ஏற்கனவே தீரன் பேசியதில் கடுப்பில் இருந்தவள் இன்றும் ஏதாவது பேசி வீன் வம்ப வளர்ப்பான் என்றும், அம்மா சொல் கேக்கும் நல்ல பிள்ளையாய் ஒதுங்கிப்போக அவன் அழகை பற்றி பேசியதும் கடுப்பில் உச்சத்துக்கே சென்றவள்
“போய்கிட்டு இருந்தவளத்தாண்டா ஏய் நில்லுன்னு வம்பு வளத்துக்கு கிட்டு இருக்க. நான் உலக அழகியானு வேற கேக்குற? எனக்கென்ன கொறச்சல்? நீ தாண்டா சுமார் மூஞ்சி குமாரு. பொத்திக் கிட்டு  போறியா” என்று நடையை தொடர
வாயா? வங்காளவிரிகுடாவா? தீரன் வியந்து நோக்கி ஸ்கூபியின் கழுத்து  பாட்டியை பிடித்து இழுத்தவன் “நாய விட்டுட்டு போ” என்று சொல்ல
“ஓஹ் நீ நாய் பிடிக்கிறவனா? இது ஒன்னும் அனாத நாய் இல்ல எனக்கு தெரிஞ்சவரோட நாய் தான். நானே கொண்டு போய் விட்டுடுறேன்” என்று சொல்ல   
அவளை அடுத்து சந்திக்கும் போது நாய்களோடு  இருக்கப் போவதை அறியாமல் “யாரப் பாத்து நாய் பிடிக்கிறவன் என்று சொன்ன?” என்று பல்லை கடித்தவன் “எங்க வீட்டுக்கு வரியா வாடி வா வச்சிக்கிறேன் உன்ன” என்று மனத்தால் நினைத்தது விட்டு எதுவும் பேசாமல் திரும்பி நடந்தான்.
“என்ன நெட்டுக்கொக்கு நெடுமாறன் அமைதியா போறான் ஏதோ சரியில்ல” என்று முணுமுணுத்தவாறே பிங்கி ஸ்கூபியோடு செல்ல
“இதுங்க ரெண்டும்  எப்போ காதலிச்சு? கல்யாணம் பண்ணுறது? செம்ம ஜோடின்னு சேர்த்து வைக்கப் பார்த்தா? ஏற்கனவே முட்டி, மோதிக்கிட்டு  உடைஞ்சி கிடக்குதுங்க. ஒட்ட வைக்க ரொம்ப கஷ்டம் போலயே” என்று ஸ்கூபியின் மனசாட்ச்சி புலம்பியவாறே பிங்கியின் பின்னால் சென்றது.
பெண்களோடு போட்டி போடும் ஆண்கள் இங்கு யாரு
கூந்தலோட மல்லு கட்டும் மீச ஜெயிக்காது
மல்லிகைப்ப்பூ வச்சி வந்தா உங்க மனசு காத்தில் ஆடும்
வட்ட விழி சுட்டு விட்டா ஆம்பிளைக்கு வழியும் வழியும்
ஹே தள்ளு தள்ளு தள்ளு தள்ளு வா பாக்கலாம் வா
ஆண்களோடு போட்டி போடும் பெண்கள் இங்கே யாரு
மீசையோடு மல்லுகட்டும் கூந்தல் ஜெயிக்காது
மணப்பது மல்லிகைதான் உங்களுக்கொரு வாசம் இல்ல
சுட்டதெல்லாம் அப்பளம் தான் அடுப்படியில் தெரியும் தெரியும்
பலே பலே பலே பலே வா பாக்கலாம் வா
*******************************************************************
ட்ராபிக் சிக்னலில் சிக்கியவாறே வண்டியில் இருந்து அலைப்பேசி  மூலம் உத்தரவிட்டுக் கொண்டிருந்த விஸ்வதீரனின் கழுகுப் பார்வை தனது வலது புறமுள்ள வண்டியினுள் செல்ல அங்கே அமர்ந்திருந்தவளை கண்டு புருவம் சுருக்கினான்.
அங்கே  ஆரோஹி வண்டியை செலுத்திக் கொண்டிருக்க அவளின் கவனம் முழுவதும் பாதையில், சீக்கிரம் வீட்டுக்கு  செல்லனும் என்ற எண்ணமே! தலைதூக்கி இருக்க பின்னாடி உறங்கும் தனது இரு குட்டி சிங்கங்களை பார்த்தவள்
“ஸ்கூல்  விட்டதும் நல்லா ஆட வேண்டியது, வண்டில ஏறினதும் தூங்க வேண்டியது” என்று புன்னகைத்தவள் ஒருவர் மேல ஒருவர் சாய்ந்து  உறங்கும் அவர்களை பாத்திருந்தவள் சிக்னல் விழும் வரை காத்திருக்க அங்கே ஒருவன் தன்னை கழுகுக்கு கண்களால் நோட்டம் விடுவதை காணத்தவறினாள்.  
“ஆரோஹி இங்க என்ன பண்ணுறா? டில்லியிலிருந்து எப்போ வந்தா?” என்று யோசித்தவன் அவளின் வண்டியின் எண்னை குறித்துக் கொண்டு யாருக்கோ அனுப்பி வைத்து “இந்த வண்டி யாருடையது? அந்த  நபர், அவருடைய குடும்பம், எல்லா டீடைலும் என் டேபிளுக்கு உடனே வந்தாகணும்” என்று உத்தரவிட்டவன்.
“வாடி என் மாஜி பொண்டாட்டி. உன்ன விட்டுடலாம்னு தான் நினச்சேன். உன்ன பார்த்தாலே நீ எனக்கு பண்ண துரோகம் தான் கண் முன் வருது. நீ டில்லில இருக்கிறதா நினைச்சி அமைதியாக இருந்தேன் எப்போ நீ என் ஊருக்கே வந்தியோ உன்ன வச்சி செய்றேண்டி” என்று கருவிக்கு கொண்டவன் சிக்னல் விழ வண்டியை கிளப்பினான்.
அன்று மாலையே ஆரோஹியின் கோப்பு தீரனின் கையில் அரோஹி ஏஜ் 26 , சிங்கள் மதர் என்று இருக்க உதடு வளைத்து புன்னகைத்தவன்
“வசதியா போச்சு, புருஷன விட்டுட்டு வந்துட்டியா? அதானே பார்த்தேன் அண்ணன்னு சொல்லிக் கொண்டு ஆகாஷ் பின்னாடி சுத்தின, எவனையோ கல்யாணம் பண்ணி இருந்த இப்போ அவனையும் விட்டுட்டியா? இங்க யார பிடிக்க வந்திருக்க?”  என்று கோப்பில் உள்ள ஆரோஹியின் புகைப் படத்திடம் கேட்டவன்
“உன்ன விட மாட்டேண்டி” என்று ஆரோஹி அணைத்துக் கொண்டிருந்த குழந்தைகளின் புகைப் படத்தை பார்த்து நெற்றி சுருக்கி யோசித்தவன் என்ன பண்ணனும் என்று முடிவெடுத்தவனாக
“உன் பசங்கள தூக்குறேண்டி, என் காலுல… இல்ல இல்ல என் படுக்கைல நீ இருப்ப” என்று கர்ஜிக்க
தண்ணீர் அருந்திக் கொண்டிருந்த ஆரோஹிக்கு புரையேற அவளின் தலையை தட்டினார் ஆயிஷா பேகம்.
தீரனின் திட்டம் அறியாமல் ஆரோஹி சுதந்திரமாக தனது அன்றாட வாழ்க்கையை தொடர அவள் உயிராய் நினைக்கும் குழந்தைகளின் ஒன்று காணாமல் போக அடுத்த கணமே தீரனின் முன் நின்றாள்.
பலிவாங்கும் வெறியில் இருக்கும் விஷ்வதீரனின் வாழ்க்கையில் ஆரோஹி செய்த துரோகம் தான் என்ன?  

Advertisement