Advertisement

                                                    அத்தியாயம் 10
“என்னப்பா இப்படி சொல்லிட்டு போறான்” திருமாறன் தீரமணியை ஏறிட
“எதுவுமே சொல்லாம இருந்தவன், சொல்லிட்டு போறானேன்னு சந்தோச படு. ஆமா நிஜமாகவே இந்த ரெண்டு பசங்களும் அவன் பிள்ளைகளா? பாத்தா அப்படி தெரியலையே!” என்று தாத்தா யோசிக்க
“அவங்கம்மா மாதிரி இருக்கும்” ஸ்கூபியோடு விளையாடும் அஜய், விஜய்யை பார்த்து வாஞ்சையாக கூற
“அவன் இவ்வளவு பெரிய தப்ப பண்ணுவான்னு நினைக்கல, ஒரு பொண்ணு கழுத்துல தாலி கட்டி அவ நினைப்பாவே சுத்தி கிட்டு இருந்தான், சீக்கிரம் கல்யாணம் பண்ணி வச்சா அதிலிருந்து  மீள்வான்னு பாத்தா, இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ணாம குழந்தை” என்று யோசிக்க
அனுபவம் வாய்ந்த தீரமணிக்கோ விஷ்வதீரன் சொல்வதில் கிஞ்சித்தும் நம்பிக்கையில்லை. ஏனெனில் இப்படியொரு தப்பை அவன் கண்டிப்பாக செய்திருக்க மாட்டான் என்பது அவர் எண்ணம். பேரன் மது அருந்தியதன் விளைவு இன்று வரை தொடர்வதை அறிந்தால் அவரின் நம்பிக்கைக்கு பங்கம் வருமோ?
“அப்பா ஏன் இன்னொரு பொண்ணுன்னு  சொல்லுறீங்க ஒரு வேல அதே பொண்ணா இருந்தா” முகம் பளிச்சென்று பிரகாசமாக தான் ஒரு வக்கீல் என்று நிரூபிக்க
“கண்டிப்பா முகுந்த்க்கு எல்லாம் தெரிஞ்சிருக்கும்” யோசனைக்குள்ளானார் தாத்தா.
இங்கே தீரமுகுந்தனிடம் விடை பெற்று வீட்டுக்குள் நுழைந்த பிங்கியை புஷ்பா கேள்விகளால் துளைக்க அது ஏதும் அவள் கருத்தில் இல்லை முகம் கொள்ளா புன்னகையில் தீரமுகுந்தனை சந்தித்த அந்த நாட்களை எண்ணியவாறே கட்டிலில் விழுந்தாள்.
ஆரோஹியை கண்ட முதலிருந்தே அக்கா என்று ஒட்டிக் கொண்டவள் தான். அகில் அம்மாவின் சேலையை பிடித்து தொங்கி கொண்டிருக்க ஆரோஹியுடன் ஊர் சுற்றலானாள்.
ராட்டினம் சுற்ற ஆரம்பித்ததும் அக்கா போட்ட கூச்சலில் எங்கே ராட்டினம் கழன்று விழுந்து விடுமோ என்றிருந்தவள் விஷ்வதீரனை கண்டு “என்னா ஸ்டைலு, பக்கா ஹீரோ மாதிரி” ஆவென பாத்திருக்க அவனோ அக்காவின் மேல் பார்வையை வீசிக் கொண்டிருந்தான். அன்றிலிருந்து பிங்கி விஷ்வதீரனின் விசிறியானாள்.
இரண்டு நாட்களாக அக்காவுடன் ஊர் சுத்த விஷ்வதீரனும் தங்களுடன் வர அவனை அணுவணுவாக காபி செய்யலானாள். அவன் சுவிங்கம் மெல்லும் ஸ்டைலே தனி தான். இன்றுவரை அதை விடாது இருப்பவள். அவன் சொல்லும் கதைகளை கேட்டு தானும் கராத்தே கிளாஸ்ல சேரனும் என்று முடிவெடுத்தாள்.
தீடிரென வந்து அவளை வம்பிழுத்து இழுக்காத குறையாக கூட்டிக் கொண்டு போக தீரமுகுந்தனின் மேல கடுப்பில் இருந்தவள், அவள் சொல்வதையெல்லாம் அவன் செய்ய “சிக்கினாண்டா ஒரு அடிமை” என்று அவனை வச்சி செய்ய
“உன்ன விட  ஒரு இன்ச் வளர்ந்து  உன் மண்டைலயே! கொட்டால என் பேரு பிங்கி இல்லடா” அன்று விட்ட சபதம் நியாபகத்தில் வந்து “பாதி பனமரமா இருந்தவன் இன்னைக்கு தென்னைமரமா வளந்துட்டான். அடையாளமே தெரியல, அவனுக்கு என்ன தெரிஞ்சிருக்கு அதான் வம்பு வளர்த்தான் போல, பிங்கி நீ ஹீல்ஸ் போட்டாலும் அவனை கொட்ட முடியாது” தனது  தலையில் கொட்டிக் கொண்டவள்,  அவன் அவளுக்காக செய்த ஒவ்வொன்றும் கண்முன் தோன்ற
அவளை இடுப்பில் தூக்கி சுமக்காத குறை தான். “குட்டச்சி என்னமா அடம் பிடிப்பா, அந்த பலூன் சுடும் கேம்ல பத்து பலூன் சுட்டா பொம்மை கிடைக்கும்னு இழுத்துட்டு போய், சுட சொல்லி துப்பாக்கியையும் கைல கொடுத்துட்டா” தீரனின் மனம் பைக்கில் பறந்தவாறு நினைத்து பார்க்க
“என்னமா துப்பாக்கி எடுத்து டப்பு டப்புனு சுட்டான். அப்பவே பய புள்ள போலீஸ்ல இருந்திருப்பான் போல. எப்படியோ பொம்மை கிடைச்சதே” என்று இன்றும் கட்டிக்க கொண்டு தூங்கும் அந்த கரடி பொம்மையை ஆசையாக தடவ
காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்
காதலை யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயிலிறகாக
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை
நெஞ்சே என் நெஞ்சே செல்லாயோ அவனோடு
சென்றால் வரமாட்டாய் அது தானே பெரும்பாடு
தன்நன் நானான… தன்நன் நானான…
தன்நன் நானான…
பிங்கியின் மனமோ “எத்தன தடவ அவன் மேலயே தூங்கி இருப்ப? உப்பு மூட்ட தூக்கிட்டு போய் வீட்டுலயே இறக்கி விட்டானே, நீ ரொம்ப தான் அவனை படுத்தி எடுத்து இருக்க” என்று வசை பாட
“என் புருஷன் நான் படுத்தினேன். சும்மா போவியா” என்று அதனை அடக்கியவன் “புருஷன்” என்றதில் அதிர்ந்து
“லவ் பண்ணுற மூடும் இல்ல ,அதுக்கு டைமும் இல்ல, அப்படியே பண்ணாலும் உன்ன பண்ண சான்ஸே இல்ல” தீரனின் கணீர் குரல் காதுக்குள் ஒலிக்க
“ஏற்கனவே அவனை படுத்தி இருக்கேன், போதாததுக்கு வம்பு வளர்த்து வெறுப்பேத்தி விட்டேன். ரூஹிகாவ விஷ் கூட சேர்த்து வைக்கணும்னு தான் என் கூட பேசிட்டு போறான்” எல்லாவற்றையும் நினைத்து குழப்பிக் கொண்டவள்  “அவன் நம்மள லவ்லாம் பண்ண மாட்டான்”  சாதாரணமாக எடுத்துக் கொண்டவள் பெற்றோருக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மறந்தாள்.
பிங்கி அன்றும், இன்றும் செய்த சேட்டைகளை மனதில் ஓட்டிப்பார்த்த தீரமுகுந்தன் “குட்டச்சி மாறவே இல்ல” என்று சொல்லியவாறே வீட்டின் முன் பைக்கை நிறுத்தி இறங்க, மேலும் பிங்கியை பற்றி யோசிக்க விடாமல் உள்ளே நுழைந்தவனை அப்பாவு, தாத்தாவும் வழியை மறித்து நிற்க அவர்களை கேள்வியாக ஏறிட்டவன் புருவம் நீவ
“உண்மைய சொல்லுடா யார் பசங்க இவங்க ரெண்டு பேரும்” தாத்தா சற்று கோபமாகவே
ஸ்கூபியோடு விளையாடுபவர்களை ஒரு நொடி கண்கள் தொட்டு மீள “அதான் தீரா சொன்னானே அவன் பசங்கனு. அவன் சொன்னா சரியா தான் இருக்கும்” என்றவன் உள்ளே போக
“குழந்தைகளோட அம்மா எங்கடா? அது அந்த பொண்ணா?” திருமாறன் எதிர்பார்ப்போடு கேக்க
“எந்த பொண்ணு?” திருப்பி அவரையே கேட்டான் தீரமுகுந்தன்.
“தீரா விளையாடாத, உண்மைய சொல்லு தாலிய கழட்டி கொடுத்துட்டு போனவ திரும்ப எப்படி வந்தா? உங்கண்ணன் அவ கிட்ட தப்பா நடந்து கிட்டானா?”
“தாத்தா…..” அவர் கேட்ட கேள்வி தான் அவன் மனதிலும் எழுந்தது, அண்ணனே எதுவும் சொல்லாத போது கண்ட படி கற்பனை செய்வது தவறு, எதுவானாலும் அவனே வந்து சொல்லட்டும் என்றிருக்க அதை தாத்தாவே கேக்கும் போது கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்க
“எனக்கு என்ன தெரியும், காலேஜ்கு அப்பொறம் நாம ரெண்டு பேரும் வேற வேற ஊர்லதானே இருந்தோம்” என்றவன் “என் கிட்ட எது கேட்டாலும் பதில் தெரியாது” என்ற பார்வையோடு தனதறைக்கு செல்ல
“சித்தப்பா” உங்களுக்கும் ஆர்ம்ஸ் இருக்கா” என்று  அஜய் மற்றும் விஜய் அவனின் சட்டையை உருவும் வேலையில் இறங்கினர்.
விஷ்வதீரன் ஆரோஹிக்கு பிடித்த பூவையும், பழங்களையும், ஸ்விட்ஸ் என்று வாங்கி குவித்தவன், விசிலடித்த படியே வண்டியை செலுத்த அவளுடன் பேசி இன்றே எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து அவளை விட்டு பிரியாது இருக்க சீக்கிரம் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உறுதியாக அவன் மனக்கண்ணில் கற்பனை காட்ச்சிகள் படமாக விரிய உள்ளுக்குள் ரசித்தவன் அழைப்பு மணியை இசைக்க
அவனின் வரவுக்காவே காத்திருந்தது போல் கதவை திறந்தவளின் விரிந்த புன்னகை அவனின் காதல் நெஞ்சை நிறைக்க மற்றவைகள் மறந்து போக அவன் கண் முன் அவன் காதல் தேவதை. அவளை இறுக அணைத்தவன் அவளின் இதழ் பருகும் ஆவலில் மதிமயங்கி அவளின் இதழ் நோக்கி குனிய அவனிடமிருந்து திமிறி விலக்கியவள் அவனை அறைந்தாள்.  
குழந்தைகளை எதிர்பார்த்து கதவை திறந்தவள் விஷ்வதீரன் இழுத்து அணைக்கவும் அதை சற்றும் எதிர் பார்க்காதவள் அதிர்ச்சியடைய அவன் அடுத்து அவளை முத்தமிட போவதை உணர்ந்து “தனக்கு பார்த்து பார்த்து உதவியது தன்னிடம் தப்பாக நடந்து கொள்வதற்கா?”  கோபம் தலைக்கேற அவனிடமிருந்து திமிறி வெளியேறியவள் வளர்ந்த ஆண் மகன் என்றும் பாராமல் அடித்தாள். தனது கை எரியவே தனது அடியின் வேகம் எவ்வாறு என்று உணர்ந்தாள்.
எரியும் கையை மற்ற கையால் தேய்த்துக் கொண்டவள் “வெளியே போ” என்று கத்த அவள் அடித்ததற்காக கோபப்படாமல் உள்ளே வந்து கதவை தாளிட்டவன், கதவின் மேல் சாய்ந்து கைகளை கட்டிக்க கொண்டு சுவிங்கத்தை மெல்லலானான்.
எதோ வேகத்தில் அடித்து விட்டாள் தான் அவன் கோபம் கொள்ளாது, கதவை தாளிட்டு சுவிங்கத்தை மெல்லும் விதம் அவள் மனதில் குளிரை பரப்ப, அடி வயிற்றில் பயப்பந்து உருள, ஆரோஹியின் உடல் வியர்வையில் குளிக்க, இவனிடமிருந்து எப்படி தப்புவது என்று கண்களை சுழலவிட்டாள்.
அவள் அடித்தது கூட வலிக்க வில்லை. அவளின் மருண்ட பார்வை அவன் காதல் நெஞ்சை குத்திக் கிழிக்க  “ஆரா  நான் செஞ்சது தப்பு தான், அதுக்காக என்ன தெரியாத மாதிரி இருந்து என் பசங்கள என் கிட்ட இருந்து பிரிச்சிடாத” விஷ்வதீரன் அவளுக்கு புரியவைக்க முயல
அவன் சொல்வதை கவனத்தில் எடுத்து கேக்கும் மனநிலையில் அவளில்லை. ஒரு வேலை கேட்டிருந்தால் முக்கியமான பிரச்சினைக்கு தீர்வு கிடைத்திருக்கும். எங்கே தன்னிடம் தவறாக நடந்து கொள்வானோ? தன்னை காப்பது எப்படி என்று கலங்கி இருந்தவள் செவிகளை அவன் சொன்னது தீண்டவே இல்லை. அவள் பார்வையோ அறையின் பக்கம் செல்ல
அவள் செய்ய போவது என்ன என்று புரிந்து கொண்டவன் அவள் அறையின் பக்கம் ஓடும் போது தாவி அவளை இழுத்து அறையினுள் புகுந்தவன் கதவை தாளிட்டிருந்தான்.  
தனக்கு நடக்க போவதை இனிமேல் யாராலும் தடுக்க முடியாது என்ற எண்ணம் தோன்ற மயங்கி அவன் கைகளிலேயே விழுந்தாள் ஆரோஹி.
அவள் மயங்கி விழுவாள் என்று எதிர்பார்க்காதவன் அவளை தாங்கி பிடித்து கட்டிலில் கிடத்தியவனோ அன்று நடந்தது ஆரோஹியை பொறுத்த வரையில் பாலியல் பலாத்காரம். அது எவ்வாறான கொடுமை என்று அறிந்தவன் இன்றும் அவளின் மனதில் ஆழமான காயம் மறையாது அவளை வாட்டி வதைப்பது புரிய கண்கள் கலங்க அவளை பாத்திருந்தான்
ஆரோஹி மெதுவாக கண்களை திறக்க வாசலில் மெதுவான பேச்சுக்கு குரல்கள் கேட்க தலை பாரமாக வலிப்பதோடு விஷ்வதீரன் தன்னிடம் நடந்து கொண்ட விதம் நியாபகத்தில் வரவே அதிர்ச்சியாக தன்னை ஒரு தடவை முழுவதாக பார்த்துக் கொண்டவள் தனக்கு எதுவும் ஆகவில்லை என்று உறுதியான பின்பே ஆசுவாசமாக மூச்சை இழுத்து விட்டாள்.  
வாசலில் ஆயிஷாபேகத்தோடு விஷ்வதீரன் தான் பேசிக் கொண்டிருக்கிறான் என்று அறிந்துக் கொண்டவள், அவன் தன்னிடம் அவ்வாறு நடந்து கொண்டது ஏன் என்று புரியாது யோசித்தவாறே வாசலுக்கு வர அங்கே அவன் சோபாவில் சட்டமாக அமர்ந்து காபி சாப்பிட்டுக் கொண்டிருக்க
“என்ன ரூஹி, தம்பி உன் பிரெண்டாமே, ஊர்ல நீங்க ரெண்டு பேரும் சுத்தாத இடமே இல்லயாம், சொல்லவே இல்ல. விஷ் தம்பி பசங்க என்ன பண்ணுறாங்க? நீங்க இருந்து சாப்பிட்டுத்தான் போகனும்” என்ற ஆயிஷா விஷ்வதீரனிடம் “இனிமேல் ஆரோஹி உங்க பொறுப்பு” என்ற பார்வையோடு அவர்களுக்கு தனிமையை வழங்கியவராக சமயலறைக்குள் புகுந்து கொள்ள
அவருடன் பேசியதில் சில குழப்பங்களுக்கு பதில் கிடைத்தாலும் இன்னும் சில கேள்விகளுக்கு பதிலை யாரிடம் கேப்பது” என்று குழம்பினாலும், ஆரோஹியுடன் ஆரம்பிக்க போகும் புது வாழ்க்கையை எண்ணி மனம் குளிர்ந்தவன் அவள் அங்கு வரவே எழுந்துக்க கொள்ள
அவர் அழைத்த விஷ் என்பதிலேயே! தனது நண்பனை கண்டு கொண்டவள், நேற்று அவன் “ஆரா” என்று அழைத்ததும் நியாபகத்தில் வரவே தன்னை அடையாளம் கண்டு விளையாடி இருக்கிறான் என்று நினைத்து, அவனை விழிவிரித்து பார்த்து புன்னகைத்தவாறே கண்ணீர் வடிக்க, அவளருகில் வேக எட்டெடுத்து தாவி வந்து அவளை இறுக அணைத்திருந்தான் விஷ்வதீரன்.  
“ஏன் டா சொல்லல நீதான் என் விஷ் னு நேத்து ஏன் டா சொல்லல” அவனின் மார்பில் அடித்தவாறே ஆரோஹி கதற அவளுக்கு உண்மையிலேயே தான் யார் என்பது தெரியாது என்பதை அறிந்து கொண்டவன் சற்று முன் தான் செய்ய இருந்த காரியத்தை நினைத்து அவன் மேலேயே கோபம் வந்தது.
அவளின் கைகளை பிடித்து நெஞ்சில் வைத்துக் கொண்டு “உனக்கு நான் இருக்கேன் டி” அவளை தன்னுள் இறுக்கிக் கொண்டான்.  
எவ்வளவு நேரம் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டிருந்தார்களோ! ஆரோஹியின் மழையை சுமந்த மேகம் போல்  கனத்த மனம் தான் சேரவேண்டிய இடம் இதுதான் என்றறிந்ததோ அவனின் பரந்த மார்பில் மேல் கன்னம் பதித்து முழுவதுமாக அழுது கரைந்து தெளிவான வானம் போல் அவள் மனம் மாறும் வரை விஷ்வதீரன் அவளை காப்பது போல் தன்னுள் இறுக்கி இருக்க அவனுள் மேலும் புதைந்து போனாள் ஆரோஹி.
அவளை ஒரு வார்த்தையாவது சமாதானம் செய்யாது அழ விட்டவன் அவளின் முதுகை தடவி விட்ட படியே இருந்தான்.
என்னவோ என்னவோ என்வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தையில்லை
உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்
உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்
என்னோடு நீயாக உன்னோடு நானாகவா – ப்ரியமானவளே
என்னவோ என்னவோ என்வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தையில்லை
விஷ்வதீரனின் அலைபேசிதான் இசைத்து. அதை இயக்கி காதில் வைத்தவன் ஆரோஹியை பார்த்தவாறே “ஈவினிங் வந்தா போதுமா?” என்று கேக்க மறுமுனை என்ன சொன்னதோ விஷ்வதீரன் புன்னகைக்க
அவனின் புன்னகையை மெய்மறந்து பாத்திருந்த ஆரோஹி ஊரில் சந்தித்த விஷ்வதீரனின் சிரிக்கும் கண்களை தவிர அவன் அடையாளம் தெரியாத அளவு மாறி இருப்பதை ரசிக்க
“ம்க்கும்” விஷ்வதீரன் அவளை சுயநினைவுக்கு அழைக்க
“என்ன விஷ் யாரு போன் ல, உன் வைப்பா?” ஆரோஹியின் கேள்விக்கு பதில் சொல்லாது
“கோவிலுக்கு போயிட்டு வரலாமா?” என்று கேக்க
“எனக்கு சாமி மேலயே நம்பிக்கை இல்ல” வெறுமையான குரலில் ஆரோஹி
அவளின் குரலில் தன்னையே நொந்து கொண்டவன் “எனக்காக வர மாட்டியா?”
ஏக்கமான அவன் பார்வையில் மறுக்க தோணாமல் தலை தானாக ஆட இருவரும் ஆயிஷாவிடம் சொல்லிக் கொண்டு கோவிலுக்கு கிளம்பி சென்றனர்.
விஷ்வதீரன் அழைத்ததும் வந்து விட்டாள் தான் அது அவன் மேல் அன்று இருந்த நம்பிக்கையா? அவள் நண்பன் என்பதாலயா?
ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் கண்ணில் விழுந்தாய்
ஏன் ஒரு பாதி சிரித்தாய்
என் உயிர் பூவை எரித்தாய்
முதல் நாள் பார்த்தாய் உறக்கம் கெடுத்தாய்
முறையா என்றேன் கண்கள் பறித்தாய்
என் வலி தீர ஒரு வழி என்ன
என் பனிப் பூவே மீண்டும் பார்த்தால் என்ன
“ரெண்டு குழந்தைகள்ல ஒன்ன அவ தத்தெடுத்தா இதுல எது உங்க குழந்தை?” வண்டியில் ஏறியதிலிருந்தே ஆயிஷா பேகம் சொன்னவைகள் தான் விஷ்வதீரனின் காதில் ஒலித்தது. அவர் சொன்னவைகளை பற்றி யோசிப்பதை தள்ளி வைத்தவன் ஆரோஹியிடம் எவ்வாறு பேச வேண்டும் என்று யோசிக்க
ஆரோஹி அவனை பற்றி கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுக்க ஒரு புன்னகையை மட்டும் வீசி பதிலளிக்காது அமைதிகாத்தான்.
“விஷ்  என்ன நீ இன்னைக்கு மௌனவிரதமா? என்ன கேட்டாலும் சிரிச்சே சமாளிக்குற”
“உன் தமிழ்  முன்னைய விட நல்லா இருக்கு”
“ஆயிஷா அத்த சொல்லித்தந்தாங்க, இப்போ எழுத வாசிக்க கூட தெரியும்”
“குட்” கோவிலின் முன் வண்டியை நிறுத்தியவன் “இறங்கு உள்ளே போலாம்” என்று சொல்ல
“நான் வந்தே ஆகணுமா?”  தான் அழைத்த உடன் வந்துவிட்டவளின்  கேள்வியே அபத்தமாக தெரிந்தாலும் “ஆமாம்” என்று தலையை மேலும் கீழும் ஆட்டியவனின் பார்வையோ வந்தே ஆகணும் என்றிருக்க மேலும் பேசாது வண்டியிலிருந்து இறங்கியவளிடம்
“அக்கா பூ வாங்கிக்க” என்று ஒரு சிறு பெண் வந்து பூ விற்க சாமிக்கென்று மட்டும் வாங்கியவளை
“என்னம்மா புருஷன்  கூட கோவிலுக்கு வந்துட்டு பூ கூட வைக்காம, என்ன தம்பி நீங்க கூட சொல்ல மாட்டிங்களா?, படிச்ச பசங்கன்னா சாத்ர சம்பிரதாயங்களை மதிக்காம இருக்குதுங்க” ஒரு வயதான பெண்மணி முணுமுணுத்தவாறே அவர்களை கடந்து கோவிலுக்குள்ளே செல்ல
அவர் விஷ்வதீரனை தன்னோட புருஷன் என்றதில் அதிர்ச்சியடைந்த ஆரோஹி அவன் என்ன நினைப்பானோ என்று அவனை ஏறிட அவனோ அந்த  சிறு பெண்ணிடம் மல்லிகை பூவை வாங்கி
“இந்த ஆரா வச்சிக்க” என்று பூவை நீட்ட   
திருதிரு என்று முழித்தவள் “எனக்கு பழக்கமில்ல சம்டைம் அத்த வச்சி விடுவாங்க” என்று சொல்ல
“இனிமேல் பழகிக்க” என்றவன் அவளை தொட்டு  திருப்பி உரிமையுடன் பூவை வச்சி விட அவனின் தொடுகையில் மேனி சிலிர்த்தாள் ஆரோஹி.
நீ சூடும் ஒரு பூ தந்தால்
என் ஆஸ்தி எல்லாம் கொடுப்பேன்
உன் வாயால் என் பேர் சொன்னால்
உன் காலடியில் கிடப்பேன்
தூக்கத்தை தொலைத்தேனே துடிக்குது நெஞ்சம்
தலை போன சேவல் போல் தவிக்குது அங்கம்
இரண்டில் ஒன்று சொல்லிவிடு
இல்லை நீயே கொள்ளியிடு
அவனை தொட்டு பேசாதவளுமல்ல, ஏன் சற்றுமுன் கூட அவனை கட்டிக் கொண்டு நின்றவள் தான். ஆனால் ஏதோ ஒரு மாற்றம். இனம் புரியாத ஒரு உணர்வு. அது என்ன என்று யோசிக்க விடாது விஷ்வதீரனின் குரல்
“வா உள்ள போலாம்” அவனின் குரலில் கட்டுண்டவள் அவனோடு உள்ளே செல்ல வாசலில்  இருந்த மரமும் பூ தூவி அவர்களை வரவேற்றது.
நோகாமல் பிறர் காணாமல்
உந்தன் ஆடை நுனி தொடுவேன்
என்ன ஆனாலும் உயிர் போனாலும்
ஒரு தென்றல் என்றே வருவேன்
நீ என்னைப் பார்த்தால் தான் துடிக்குது உள்ளம்
நீ என்னைப் பிரிந்தாலோ உள்ளம் வெறும் பள்ளம்
இமயம் கேட்கும் என் துடிப்பு
ஏனோ உனக்குள் கதவடைப்பு
ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் கண்ணில் விழுந்தாய்
ஏன் ஒரு பாதி சிரித்தாய்
என் உயிர் பூவை எரித்தாய்
முதல் நாள் பார்த்தாய் உறக்கம் கெடுத்தாய்
முறையா என்றேன் கண்கள் பறித்தாய்
என் வலி தீர ஒரு வழி என்ன
என் பனிப் பூவே மீண்டும் பார்த்தால் என்ன

Advertisement