Advertisement

                                                               அத்தியாயம் 7
அந்த பஸ் தரிப்பிடம் இரவு ஏழு மணி என்றாலும் நன்றாகவே இருட்டி இருக்க ஆரோஹி தனது கைப்பையை இறுக பிடித்தவாறே மருண்ட பார்வையோடு சுற்றும் முற்றும் பார்க்க, விஷ்வதீரன் காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியாக அவளுடன் தொடர்ப்பில் இருக்க அவன் சொல்வதை சாவி கொடுத்த பொம்மை போல் செய்யலானாள்.
அவளின் போன் அடிக்கவே கைகள் நடுங்கியவாறே அதை இயக்கி காதில் வைக்க மறுமுனை
“என்ன டீச்சரம்மா பணம்  கொண்டு வந்துட்டீங்களா?”
ஆரோஹி பயத்தில் வாய் தந்தியடித்தவாறே “ஆமாம். என் பையன் எங்க?” எனக் கேக்க
முயன்று  ஒரு வில்லச் சிரிப்பை உதிர்த்தவன் “பையன் வருவான் முதல்ல பணம் வரட்டும், பக்கத்துல ஒரு கடை இருக்கு பாரு அங்க இருக்குற குப்பைத் தொட்டில போடு” என்று போனை அமர்த்த
அவன் சொன்னவற்றை கேட்டுக்கொண்டிருந்த விஷ்வதீரனோ “ஆரா பயப்படாம போய் போடு” என்றதும்
அவனின்  குரலில் இருந்த ஆளுமையில் தைரியம் வரப்பெற்றவளாக அந்த குப்பைத்தொட்டியை அடைந்தவள்  சுற்றும் முற்றும் பார்த்தவாறே பணத்தை போட அவளின் போன் மீண்டும் அடித்தது.
“அதான் பணத்த போட்டாச்சில்ல கிளம்பு கிளம்பு பூதம் மாதிரி அங்கனையே நின்னு கிட்டு, உன் பையன் வர வேணாமா? வீட்டுக்கு போ” என்று திட்ட விஷ்வதீரனின் பொறுமை எல்லையை கடந்தது.
“யாரோ ஒரு பொடிப்பய என் ஆராவ திட்டுறதா” மனம் வெம்ப “ஆரா உன் வண்டியில ஏறி நான் சொன்ன இடத்துக்கு போ” என்று உத்தர விட ஆரோஹியும் வண்டியில் ஏறி இருந்தாள்.           
ஆரோஹி சென்றதை உறுதி செய்தவன் குப்பை தொட்டியை நெருங்க, கடை  ஊழியன் குப்பை தொட்டியை சுமந்தவாறே அதை வீச நடக்க, இவனும் பின் தொடர்ந்தான். அது கொஞ்சம் இருட்டான இடமாக இருக்க அவன் வீசிச்சென்ற குப்பையை கிளறியவாறே பணத்தை தேட அங்கே இரண்டு கால்கள். திடுக்கிட்டு நிமிர்ந்தவனின் கன்னத்தில் அறைந்திருந்தான் விஷ்வதீரன்.
“இவன அரெஸ்ட் பண்ணி ஜீப்ல ஏத்துங்க” விஷ்வதீரனின் குரலுக்கு கடை ஊழியன் போல் வேடமணிந்த போலீஸ் “எஸ் சார்” என்று சொல்ல
விஷ்வதீரன் அடித்த அடியில் பொறி கலங்கி நின்றவன் “அரெஸ்ட்” என்றதும் பயந்து “சார் என்ன விட்டுடுங்க, தெரியாம பண்ணிட்டேன். இனிமேல்  இப்படி பண்ண மாட்டேன்” என கெஞ்ச விஷ்வதீரன் அசைந்தானில்லை.   
அவனை ஏற்றிக்கொண்டு சென்ற இடமோ அவன் வசிக்கும் குடியிருப்புக்கு.
மாலை மரத்தடியில் இருந்து வேவு பார்த்த தீரமுகுந்தன் அந்த மதில் சுவரை லாவகமாக ஏறி குடியிருப்பு பக்கமாக குதிக்க இந்த பக்கமிருந்து  பிங்கி கத்தலானாள்.
“டேய் நெட்ட கொக்கு, எங்கடா போற? திருட போறியா?” அவளின் கத்தலில் கடுப்பான தீரமுகுந்தன் மீண்டும் அவள் இருக்கும் பக்கம் தாவி
“இப்போ  என்ன வேணும் உனக்கு” என்று பல்லை கடிக்க
ஹிஹிஹி என்று இளித்தவள் “நீ இங்க என்ன செய்ய வந்த? நானும் உன் கூட வரேன்” என்று கண்ணை சுருக்க  
“நான் போலீஸ் டி, ஒரு கிட்னப் கேஸ்க்காக வந்தேன். நீ உன் வேலைய பாத்து கிட்டு போ” என்று அவளை பிடித்து திருப்பியவாறே சொல்ல
அவன் புறம் திரும்பியவள், அவனை மேலும்  கீழும் பார்த்து விட்டு “யாரு நீ போலீஸா? உன்ன பாத்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு, இல்ல நீ வேற ஏதோ பண்ண போற உன்ன நம்ப முடியாது, “ஐம் வாட்ச்சிங் யு” என்று இரு விரல்களை அவளின் கண்களின் புறம் கொண்டு வந்தவள் அவன் புறம் நீட்ட
தலையில் அடித்துக் கொண்டவன் “வந்து  தொல, தொல்ல புடிச்சவ” என்று மதில் மேல் ஏற
“டேய் என்னால ஏற முடியாதுடா” என்று மீண்டும் கத்த
“அந்த பக்கம் கேட் இருக்கு வா” என்று சொல்ல
“குட் ஐடியா” என்றவள் “ஆமா நீ ஏன் கேட் பக்கம் வராம சுவரேறி குதிக்கிற” அதி முக்கியமான  சந்தேகத்தை கேக்க
அவளின் யோசிக்கும்  பாவனையில் புன்னகை எட்டிப்பார்க்க, கீழே குதித்தவன் அவளின் இடுப்பில் கைவைத்து தூக்கி மதில் மேல் அமர்த்தி இருக்க அவனின் தொடுகையில் கூச்சத்தில் நெளிந்தவள்
கையில் மிதக்கும் கனவா நீ…
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே…
நுரையால் செய்த சிலையா நீ…
“டேய் என்னடா பண்ணுற? எதுனாலும் சொல்லிட்டு செய்டா” என்று கத்த அந்த பக்கம் குதித்தவன் மீண்டும் இடுப்பை  தொட்டு தூக்கி இறக்கி விட்டிருக்க இனம் புரியாத உணர்வுக்குள் கட்டுண்டவள் தீரனை இமைக்காது பாத்திருக்க அவளின் கையை பிடித்து இழுத்து  அமர்த்தி “சத்தம் செய்யாதே” என்று அவளின் வாயில் விரலை வைத்திருக்க அவனின் தொடுகையில் தன்னிலை மறந்தாள் பிங்கி.
காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் என்பதை அறியாது..
உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்.
பசியோ வலியோ தெரியாது…
காவலாளியின் கண்களில் சிக்காது குடியிருப்புக்குள் புகுந்தவர்கள், தீரனை விசாரித்த பசங்க இருவரும் குடியிருப்புக்குள் செல்வதை கண்ட தீரமுகுந்தன் பிங்கியை இழுக்காத குறையாக அவர்களை பின் தொடர அவன் இழுத்த இழுப்புக்கு சென்றாள் பிங்கி.  
அவர்கள் மின் தூக்கியினுள் புகுந்து ஏழாவது மாடியின் எண்ணை அழுத்தி இருக்க படியில் தாவி ஏறலானான் தீரமுகுந்தன். ஹை ஹீல்சோடு ஏறிய பிங்கி மூன்றாவது மாடியிலேயே மூச்சு வாங்க
“ஏன்டா லிப்ட் மீண்டும் வந்த பின் லிபிட்டிலேயே போய் இருக்கலாமில்ல” என்று கேக்க
“அவனுங்க எந்த வீட்டுக்கு போனானுங்கனு பாக்கணும், லிப்ட்ல போனா கதவு திறக்குறப்போ அந்த சத்தத்துல நம்மள பாத்துட்டானுங்க உசாராவானுங்க” என்று சொல்ல
“நிஜமாவே நீ போலீஸா” என்று கேட்டவள் “நீ போ நான் இங்கயே இருக்கேன்” படியில் அமர்ந்து  விட அவளை உப்பு மூட்டை தூக்கியவாறே படிகளில் ஏறலானான் தீரமுகுந்தன்.
படியில் அமர்ந்திருந்தவளின் பக்கம் குனிந்தவன் அவளின் இருகால்களையும் இழுத்து தனது இடுப்போடு மாட்ட அனிச்சையாக பிங்கியின் கைகள் அவனின் கழுத்தை பிடித்தருக்க அவளை சுமந்து கொண்டு படிகளை ஏற என்ன நடந்தது என்று பிங்கி ஒரு கணம் திகைத்தவள் , மறுகணம் அவனை இறுக பற்றியவாறே கண்களை மூடி அனுபவிக்க
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு
சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி
பேசுறது கண்ணில் தெரியுமா
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு
சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி
பேசுறது கண்ணில் தெரியுமா
உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாது
உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே
உண்ணாமல் உறங்காமல்…
“சவாரி முடிஞ்சதம்மா இப்போவாச்சும் கீழ இறங்கிரியா?” என்று அவளை இறக்கிவிட ஒரு கண்ணை திறந்து பார்த்தவள்
“அதுக்குள்ள வந்திருச்சா? ஒரு  சாங் பாட கூட விடல,  செம்ம ஜாலியா இருந்துச்சு. போகும் போதும் என்ன உப்பு மூட்ட தூக்கிட்டு போ” என்று சொல்ல
அவளை நன்றாகவே முறைத்தவன் “இம்ச இம்ச” என்று அவள் காது பட மூணுமுணுத்தவன் “சத்தம் கித்தம்  போட்டு அவனுங்கள வெளிய வரவச்சிடாத” கடுப்பாக சொன்னவன் ஏழாம் மாடிக்கான படிகளை மெதுவாக ஏறி மின் தூக்கியை நோட்டம் விட அது கீழே சென்று கொண்டிருக்க  
“சே இந்த குட்டச்சியால…….. அவனுங்க எந்த பிளாட்டுக்குள்ள போனாங்கன்னு  தெரியலையே!” அவளை திட்ட முடியாமல் முணுமுணுக்க
“ஆறு வீடு தானே, நா வேணா போய் எல்லா வீட்டுலயும் காலின் பெல்ல  அழுத்திட்டு வரவா” சூழ்நிலை புரியாமல் குழந்தை போல கேப்பவளை உறுத்து  விழித்தவன் மொட்டை மாடிக்கு செல்ல பிங்கியும் ஒன்றும் புரியாமளையே அவனை பின் தொடர்ந்தாள்.
மொட்டை மாடியை அடைந்தவன் நாளா புறமும் சென்று குனிந்து வீடுகளின் ஜன்னல்கள் தெரிகிறதா என்று பார்க்க நன்றாகவே தெரிந்தது. கழிவு  நீர் குழாயில் தொங்கி சறுக்கி இறங்கியவன் ஜன்னலினூடாக ஒவ்வொரு வீடாக பார்க்க, ஜன்னல்கள் அனைத்தும் அறைகளோடு சம்பந்த பட்டிருக்க ஆறு வீட்டிலில் இரு வீடுகளில் குழந்தையை தூங்க வைத்திருந்தனர்.
ஒரு வீட்டில் வேலை செய்யும் பெண் சுத்த படுத்திக் கொண்டிருக்க இன்னொரு வீட்டில் ஒரு பெரியவர் டிவி பாத்துக்க கொண்டிருப்பது அறைக்கதவு திறந்திருப்பதால் தெரிய, அடுத்த வீட்டு ஜன்னலுக்கு தாவினான். அங்கே ஆள் நடமாட்டம் இல்லாதிருக்க பிங்கியை கீழே வரும் படி சைகை செய்ய
“லூசா நீ” என்று முறைத்தவள் எவ்வாறு கீழே இறங்குவது என்று யோசிக்க தீரன் குழாய் வழியாக மேலேறி வந்து இடுப்பில் இருந்த பெல்ட்டை கழட்டி குழாயில் பொருத்தியவன் அவளை உப்பு மூட்டை தூக்கிக் கொண்டு குழாய் பக்கம் இறங்க என்ன நடந்தது என்று நினைக்கும் முன் ஜன்னலின் அருகில் இருந்தனர் இருவரும்
“இப்போ நீ குதிச்சியா?” பிங்கி அவனை இறுக அணைத்தவாறே கேக்க
அவளை மெதுவாக இறக்கி ஜன்னல் புறம் நகர்த்தியவன் கையில் இருந்த ரிமோட்டை அழுத்த கயிறு போல் நீண்டிருந்த பெல்ட் மேலேறியது.
“ஆ” வென பாத்திருந்த பிங்கி  “நெஜமாவே நீ போலீஸா?” என்று பிங்கி தீரனின் செயலை ரசித்தவாறே கிசுகிசுப்பாக கேக்க அவன் செய்து கொண்டிருக்கும் வேலையையும் மறந்து அவளின் குரலில் புன்னகைத்தவன்
“இனிமே தான் அதிரடி சரவெடி” என்றவன் காற்சட்டையில் இருந்த பேனா போன்ற ஏதோ ஒன்றை எடுத்தவன் நொடியில் ஜன்னல் கம்பியின் ஆணிகளை கழற்றி ஜன்னலை அறையினுள் நகர்த்தியவன் பிங்கியை உள்ளே நுழைவித்து தானும் நுழைந்தவன் அவளை கட்டிலில் அமர்த்தி விட்டு “அசையாதே” என எச்சரிக்கை செய்து வீட்டை அலச அது காலியாக இருந்தது.
பூன நடை போட்டு தீரனின் அருகில் வந்த பிங்கி அவனின் முதுகை சுரண்ட “கொஞ்ச நேரம் அமைதியா இரு” என்று விட்டு அலைபேசியை கையில் எடுக்க
“நீ திருட தானே வந்த? இதுல போலீஸ்னு பொய் வேற, ஆனாலும் ஹைடெக் திருடன்டா நீ” என்று அவனின் டிஷர்ட்டை பிடித்து தன்பக்கம் இழுத்திருக்க அவன் அழைப்பு விடுத்த நபர் அழைப்பை ஏற்றிருக்க எங்கே இருக்கிறான் என்று சொன்னவன்
பிங்கியின் கண்களை பார்த்தவாறே அவள் புறம் சாய்ந்து “தீரா குழந்த கண்டிப்பா அடுத்த பிளாட்டில் தான் இருக்கணும், என்ன நிலைமைன்னு தெரியல நான் இன்னும் கொஞ்சம் நேரத்துல போன் பண்ணுறேன்” என்று சொல்ல
“நிஜமாவே குழந்தையை கடத்திட்டங்களா?” என்று பிங்கி கண்கள் விரிக்க
“அதைத்தான் வந்ததிலிருந்தே சொல்லிக் கிட்டு இருக்கேன். கடுப்படிக்காம வாடி” என்று நகர
“ஐயோ மீண்டும் சர்க்கஸ் குரங்கு  மாதிரி தொங்க முடியாது கதவு வழியா  போலாம்” கண்ணில் பயத்த தேக்கியவாறே சொல்ல
“குரங்கு மாதிரி  தொங்கி கிட்டு சொகுசா வந்துட்டு பொய்யா பயப்படுது பாரு குட்டச்சி” என்று உள்ளுக்குள் திட்டியவன். “அப்போ இங்கயே இரு நான் போய் அந்த வீட்டுல பாத்துட்டு வரேன்” என்று சொல்ல
“தனியாவா போற? அவனுங்க துப்பாக்கி  வச்சிருந்தா? உன் கிட்ட துப்பாக்கி இருக்கா? சுடுமா?. எனக்கு கராத்தே தெரியும் நானும் வரேன்” என்று சரவெடியாக பொரிந்தவள் ஜன்னலை தாண்டி இருக்க
“அப்பா இப்போவே கண்ண கட்டுதே!” என்று வடிவேல் போல் சொல்லியவன் ஜன்னலை தாண்டி அதை பொறுத்த
“ஆமா அந்த பெல்ட் எப்படி  கீழ வரும்? ஏதாவது மந்திரம் சொல்லனுமா?”
“இப்போ எதுக்கு லூசு மாதிரி பேசி கிட்டு இருக்க?” தீரன் அவளை முறைக்க
“டென்ஷன் பா… டென்ஷன். டென்ஷன குறைக்க, டென்ஷன்ல நீ இவனுங்களுக்கு பதிலா என்ன போட்டு தள்ளிட்டுட்டேனா? ” ஈ என்று இளிக்க
“உண்மையிலேயே உன்ன இங்க இருந்து கீழே தள்ளிடுவேன் என்று சொல்லி முடிக்கும் முன் அவனின் முதுகில் தொங்கி இருந்தாள் பிங்கி.
ரிமோட்டை இயக்கி பெல்ட்டை கீழே வரவழைத்தவன் அவளுடன் மேலேறி பெல்ட்டை பொருத்தி கடத்தல் காரர்களின்  வீட்டு ஜன்னலுக்கு அருகில் செல்ல அங்கே அஜய் வீடியோ கேம் விளையாடிய வண்ணம் இருக்க புருவம்  நீவி யோசித்தவன் அங்கே நடப்பதை கவனிக்கலானான்.
வீடியோ கேமையும் கொடுத்து சாப்பிட விதவிதமான உணவுப்பொருட்களை கொடுத்து வைத்திருக்க வீட்டாரை மறந்து அதில் லயித்திருந்தான் அஜய்.
“இது தான் அந்த குழந்தையா?” பிங்கி கிசுகிசுப்பாக கேக்க
“ஆமா, அங்க பாரு அழ கூடாதுண்ணு என்னெல்லாம் வாங்கி குமிச்சி இருக்கானுங்க” என்று சொல்ல யாரோ வரும் அரவம் கேட்டு குனிந்தவர்கள் கவனிக்கலானார்கள்.
“இந்தாடா நீ கேட்ட ஐஸ் கிரீம்” என்று ஒரு பையன் அஜய்யிடம் ஐஸ் கிரீமை நீட்ட அதை பெற்றுக் கொண்டவன்
“எனக்கு பிசா வேணும் அதுவும்  நிறைய சீஸ் போட்டது” என்றவன் ஐஸ் கிரீமை சுவைக்க பிங்கிக்கும் அவனின் செயலில் சிரிப்பு பொத்துக் கொண்டு வர தீரன் அவளை வாயை அடைத்திருந்தான்.
அவனின் ஸ்பரிசத்தில் தன்னிலை மறந்து அவனை ரசிக்க  
மறந்தேன் எனை மறந்தேன்
உன் அருகில் மெய்மறந்தேன்
விழுந்தேன் காதலில் விழுந்தேன்
உன் இதயமெனும் குழியினுள் விழுந்தேன்.
“என்ன கொடுமடா சாமி இவன கடத்தி இவங்கம்மா கிட்ட காச வாங்க பிளான் பண்ணா,  பூரா காசையும் பய புள்ள  சாப்பிட்டே செலவு பண்ணிடுவான் போலயே!” என்று முணுமுணுத்தவன் வாசலுக்கு சென்று யாரிடமோ  புகார் வாசிக்க “கேட்டதை கொடு” என்று மட்டும் குரல் கேட்டது .
அது ஒரு வளர்ந்த  ஆணின் குரலாக இருக்க புருவம் நீவிய  தீரன் பிங்கியை பார்த்து “ரைட் டைம் டு கோ” என்று சொல்ல
“என்ன” என்று அவள் சத்தமாக கேக்க அதில் அஜய் ஜன்னலின் அருகில் வர
வாயில் விரலை வைத்து தீரன், பிங்கி இருவரும் “ஸ்ஸ்…” சொல்ல அஜய் சமத்தாக தலையை ஆட்ட, ஜன்னலை கழற்றிக் கொண்டு இருவரும் உள்ளே நுழைய அஜய் கதிரையில்  சென்று அமர கதவருகில் சென்றிருந்தான் தீரன்.
“நீங்க ரெண்டு பேரும் போலீஸா?” என்று அஜய் பிங்கியிடம் ரகசிய குரலில் கேக்க அவனின் கன்னத்தில் முத்தமிட்டவள் “ஆமாம்” என்று தலையசைக்க அவளை இறுக அணைத்தவன் “தேங்க்ஸ்” என்றான்.
கதவின் இடுக்கில் இருந்து தீரன் நோட்டம் விட
“மணி ஆறு முப்பது இப்போ போனா தான் சரியா இருக்கும், கமலேஸ போய் பணத்த எடுத்துட்டு வர சொல்லு” காலேஜ் மாணவன் போல் இருந்தவன் சொல்ல தீரனை விசாரித்த இருவரில்  ஒருவன் வெளியேறினான்.
“பையன எப்படி ஒப்படைக்க போறோம்” அடுத்தவன் கேக்க
” இப்போ போனா தான் சரி. பணம் கிடைச்சது என்று செய்தி வந்ததும், அந்த டீச்சரோட வீடுள்ள ஏரியால இறக்கி விட்டுடலாம்” சொன்னவன் அறையினுள் புக பிங்கியை கண்டு “ஏய் யார் நீ என்று சொல்ல அவனுடைய நெற்றியில் துப்பாக்கியை வைத்திருந்தான் தீரன்.
அவனின் கால்கள் நடுங்க அறையில் கிடந்த துணியால் அவனின் கைகளை கட்டியவன் “அவனை அறைக்குள்ள கூப்பிடு” என்று சொல்ல
நடுங்கியவாறே அந்த பையனின் பெயரை பல தடவை அழைக்க “வரேன்னா” என்றவாறு கையில் மொபைலும், காதில் ஹெட் சேட்டோடும்  வந்தவனை துப்பாக்கி முனையில் நிறுத்தி கைகளை கட்டி மண்டியிட வைக்க போன் பண்ண சென்றவனும் வந்து சேர அவனையும் பிடித்து கட்டிப்போட பிங்கியும் அஜய்யும் கட்டிலில் அமர்ந்தவாறே வேடிக்கை பார்க்கலானார்கள்.  
விஷ்வதீரனுக்கு போன் பண்ணி “ஆல் கிளியர்” என்றவன் அவர்களை விசாரிக்க ஆரம்பிக்க
“எல்லா பிளானும் இந்த அண்ணா தான் போட்டு கொடுப்பாங்க, அவர் சொல்லுற படிதான் எல்லாமே பண்ணுவோம்” என்று ஒருவன் காலேஜ் பையனை கோர்த்து விட அவனை அறைந்தான் தீரமுகுந்தன்.  
இதுவரை எத்தனை குழந்தைகளை கடத்தி இருக்கிறார்கள், எவ்வளவு பணம் பெற்றார்கள், அந்த பணத்தை என்னவெல்லாம் செய்தார்கள் என்று சொல்ல சொல்ல அதை தனது அலைபேசியில் பதிவு செய்த தீரன்
“உன் அப்பா நம்பர் சொல்லு” என்று கேக்க
“வேணாம் சார் அப்பாக்கு தெரிஞ்சா அடிப்பாரு, இனிமேல் செய்யமாட்டேன்” என்று கதற
“அப்போ கைல  விலங்கு மாட்டி, படி வழியா இழுத்துட்டு போய், போலீஸ் ஜீப்ல ஏத்தி, ஸ்டேஷனுக்கு கொண்டு போய், முட்டிக்கு முட்டி தட்டி ஜட்டியோட போட்டோ எடுத்து அத பத்திரிக்கையில,டிவில  போடுறேன். அப்போ உங்கள பெத்தவங்க தெரிஞ்சிக்கட்டும், ஊரே காரி துப்பும். இது கூட நல்லா தான் இருக்கு” என்று புருவம் நீவி யோசனையாக சொல்ல
அவன் சொல்ல சொல்ல கற்பனையில் அதை கண்டவர்கள் உடல் உதற வீட்டு அலைபேசி எண்களை சொல்ல அவர்களின் பெற்றோர்களை அழைத்து மாடி வீட்டுக்கு வரும் படி சொல்ல அவர்கள் அடித்து பிடித்து வந்து சேர்ந்தனர்.
அங்கே பாசமாக வளர்த்த பசங்க கைகள் கட்டப்பட்ட நிலையிலும், தீரன் துப்பாக்கி ஏந்தி இருப்பதையும் கண்டு என்ன எது என்று புரியாதவர்களாக திகைத்து நிற்க விஷ்வதீரணும் ஆரோஹியோடு கைது பண்ண சொன்ன பையனையும் அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தான்.  
ஆரோஹியும் பிங்கியும் சந்தித்தால்?

Advertisement