Advertisement

அத்தியாயம் 34
மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய் என் ஆசை ஒசை கேளாய்
மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய் என் ஆசை ஒசை கேளாய்
மாலையில் பொன் மார்பினில் நான் துயில் கொள்ள வேண்டும்
காலையில் உன் கண்களில் நான் வெயில் காய வேண்டும்
சகியே……… சகியே………. சகியே……
என் மீசைக்கும் ஆசைக்கும் பூசைக்கும் நீ வீண்டும்.
“விடுடா தடிமாடு. விடுடா” பிங்கி தீரனிடமிருந்து விலக முற்பட அவளை விட சிறிதும் எண்ணமில்லாது மேலும் மேலும் அவளுள் புதைய அவனின் கன்னத்தை கடித்து விட்டாள் பிங்கி.  
“ஆ… ராட்சசி” என்றவாறே விலக 
கோபமூச்சுக்களை விட்டவாறே மூக்கு சிவக்க அவனை முறைத்தவள் “துப்பாக்கியவச்சு பயங்காட்டினதும் இல்லாம, வன்கொடுமை பண்ணுறியா? இரு உன்ன போலீஸ்ல புடிச்சு கொடுக்குறேன்” என்றவள் அவனை தள்ளி விட்டு எழுந்து கொள்ள 
அப்பொழுதுதான் கவனித்தான் அவளின் இதழ்களில் இரத்தம் கசிவதை “சே” தன்னையே நொந்து கொண்டவன் அவளை கைகளில் ஏந்திக் கொள்ள அவனின் தோளில் அடிக்க ஆரம்பித்தாள் பிங்கி. 
அவ்வளவு அடிகளையும் தாங்கி கொண்டவன் அவளை சோபாவில் அமர்த்தி இரத்தத்தை துடைக்க மென்மையான வருடலில் தன்னிலை மறந்து அவனையே பாத்திருந்தாள். 
“என்ன” என்று புருவம் உயர்த்தி தீரன் கேக்க கண்ணிமைக்காது அவனைத்தான் பாத்திருந்தாலே ஒழிய பதில் சொல்லவில்லை. 
“சாரி டி வேணும்னே பண்ணல உன்ன கண்டதும்..”
“எனக்கு ரொம்ப பசிக்குது, குளிர் வேற தாங்க முடியல, வா சாப்பிடலாம்” அவனின் பதிலையும் எதிர்பார்க்காது சமயலறைக்குள் நுழைந்துக் கொள்ள புருவம் நீவியவாறே தீரனும் பின்னால் சென்றான். 
எவ்வளவு பெரிய வீடா இருந்தாலும் குழந்தைகளின் சத்தமும், யாராவது பேசும் சத்தமும் இருக்கும். இங்கே  தன்னவனோடு யாருமில்லா தனிமை பிங்கியின் மனம் தாறுமாறாக அடிக்க, அந்த உணர்வை கட்டு படுத்தும் வழியறியாதவள், அவளின் இயல்பான குணத்தினாலேயே! பசி என்று சொல்லி சம்யலறையினுள் புகுந்து கொள்ள, பின்னால் வந்த கணவனிடம் முக மாற்றத்தை மறைக்க பெரும் பாடு பட்டவாறே! சமைத்தவைகளை மேசையில் எடுத்து வைக்க தீரன் அவளை தான் பாத்திருந்தான். அவனை பாராது அமர்ந்து கொண்டவள் அவனுக்கும் பறிமாறிவிட்டு தனக்கும் பரிமாறிக் கொண்டவள் சாப்பிட ஆரம்பிக்க தீரனும் அமைதியாக அவள் எதிரே அமர்ந்து சாப்பிடலானான். 
இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. “தேடி வந்தவளை இப்படித்தான் இரத்த காயம் வரும்வரை கடிச்சி வைப்பியா?’ தீரனின் மனம் கேள்வி கேக்க மெதுவாக அவளை தலை உயர்த்தி பார்க்க காரம் பட்டதில் எரிந்துக் கொண்டிருந்த உதடை நாவல் தடவியவாறே சாப்பிட்டுக் கொண்டிருக்க அவளை பார்க்க பாவமாக இருந்தது. ஏதாவது பேசப் போய் ஏடா கூடமாக பேசி சண்டையை இழுத்து விடுமோ என்று அஞ்சியவனாக அவளை பாராது இருக்க. 
“சாப்பாடு நல்லா இல்லையா?” தான் சமைத்ததை முதல் முதலில் சாப்புடுகிறான் ஏதாவது சொல்வானா என்று ஆவலாக காத்திருந்தவள் அவன் ஏதும் சொல்லாது இருக்கவே! அவளே கேட்டு விட 
“நல்லா இருக்கு, நீயா சமைச்ச?” 
“இல்ல சலீம் பாய் வந்து சமைச்சி வச்சிட்டு போய்ட்டாரு” அவள் குறும்பு தலைத்தூக்க தீரனின் முகத்திலும்  புன்னகை.
“நல்லாத்தான் இருக்கு. இதயாச்சும் ஒழுங்கா கத்து  கிட்டியே!” சொல்லிவிட்டு அவன் அவள் முகம் பார்க்க “டேய்  உனக்கு உன் வாய்தான் எமன் அடங்கு” என்று மனசாட்ச்சி ஓலமிட 
அவனால் உண்டான உணர்ச்சி பெருக்கால் அவன் சொன்னது அவள் கவனத்தில் இல்லை போலும் “புஷ்பா மண்டைல குட்டி குட்டியே சொல்லித்தந்து. அவ்வளவு சீக்கிரத்துல மறக்குமா?. என்ன என் திறமையை காட்ட சந்தர்ப்பம் தான் அமையல” அலுப்பாக பிங்கி சொல்ல 
அவள் சொன்ன விதத்திலேயே “அத்த ரொம்ப டெரர் போல” என்று நினைத்தவன், அவளின் முக பாவங்களை ரசித்தானே தவிர வேறெதுவும் பேசாது அமைதியானான்.
சாப்பிட்டு முடித்ததும் அவளுக்கு ஹெல்ப் பண்ணுறேன் பேர்வழி என்று அவளை இடித்துக் கொண்டு குழாய் அருகில் தட்டை கழுவ அவன் கையிலேயே கொடுத்து விட்டு சமையல் மேடையில் அமர்ந்தவாறு கதையளக்கலானாள் பிங்கி. 
அவள் செய்கைகளை ரசித்தவன் “சரி போய் தூங்கு கொஞ்சம் வேல இருக்கு” என்றவன் சமையலறையை தாண்டும் போது கையை நீட்டி தடுத்தவள் 
“இங்க வரும் போது என்ன சொன்ன” 
எதை கேக்கிறாள் என்று புரியாதவன் “என்ன சொன்னேன்” திருப்பிக் கேக்க 
“காலைலதான் வேல நைட்டு முழுக்க உன் கூடத்தான் நல்லா என்ஜோய் பண்ணலாம். அப்பொறம் போகும் போது குட்டி பிங்கி வேற கூட்டிட்டு போகணும்னு சொன்னியே! சொன்ன சொல் மாற மாட்டேன்னு நினச்சேன். இப்படி பண்ணிட்டியே” முகத்தை சுருக்க 
அவளின் குறும்புக்குணம் வெக்கப்பட்டு சொல்ல வேண்டியதை ஆதங்கமாகவும் அதட்டலாகவும் அவளை சொல்ல வைக்க, அவள் சொன்னதை புரிந்தவன் சிரித்தவாறே உதடை தடவி விட்டு காயம் ஆறட்டும்” என்று நகர அவன் முதுகில் தொங்கியவள் 
“இப்படியெல்லாம் சொன்ன நீ கேக்க மாட்ட, என்ன ரூம்ல விட்டுடு” 
அவனும் அவளை சுமந்தாவாறே அறையை அடைய ரோஜாவால் மாத்திரம் அலங்கரிக்கப்பட்டிருந்த அறையை கண்டு வாய் பிளந்து நின்றான் தீரன். 
“ஏய் இதெல்லாம் எப்போ பண்ண? ஆமா நீ எப்போ வந்த?”
“ரொம்ப சீக்கிரம் கேட்டுட்ட”  
“சொல்லு நா தனியா தூங்கவா? இல்ல நீயும் வரியா” 
“ஒரு மார்க்கமா தாண்டி பேசுற” என்றவன் அவளை கட்டிலில் கிடத்தி அவளை ஆழத்துவங்கினான். 
இத்தனை நாள் ஈகோ என்ற பெயரில் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அடங்காத ஆசைகள். அவளை கண்டதும் கொழுந்து விட்டெறிந்த தாபத் தீயை   அவன் மனமே அடக்கினாலும் அவளே தூண்டி விட்டிருக்க, அவள் உடலையே  மஞ்சம் ஆக்கி   தன்னோடு அரவணைத்து  முத்தத்தில் ஆரம்பித்து பித்தம் கொள்ள செய்ய, பிங்கி மேலும் அவனை தன்னுள் இறுக்கிக் கொண்டாள். 
அது அவனை மேலும் தூண்டி விட அவன் கைகளோ அவளை மேலும் உணர முன்னேற, அவளின் மறுப்புகளும், கூச்சங்களும், சற்று நேரத்திலேயே சிணுங்கல்களும், முனகலுமாக அந்த யாருமற்ற ஓசையில்லா இரவில் அவள் ஓசைகள் சங்கீதமாய் அவனை தீண்ட  இவள் என்னவள் என்ற உரிமை அங்கே நிலைக்க, தாம்பத்திய சுகம் என்னவென்று அந்த குறும்புக்காரிக்கு கற்றுக்கொடுக்கலானான் அந்த காவலன். 
காதலால் மட்டும் நிறைந்து வழிந்த  கூடல் பொழுதை அளப்பரிய இன்பத்தோடு ஆண்டு முடித்து. ஒருவரில் ஒருவராய் ஒரே உடல்போல் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த தம்பதியர் இருவரையும் பிரிக்கும் சூழ்ச்சியில் முயன்று. முழுதாய் தோற்று விலகிப்போனது சிலுசிலுவென்று வீசிய காஷ்மீர் காற்று
ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா
ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா
அன்பே இரவைக் கேட்கலாம்
விடியல் தாண்டியும் இரவே நீளுமா
என் கனவில் ஆ.. நான் கண்ட ஆ.. நாளிதுதான் கலாபக்காதலா
பார்வைகளால் ஆ…. பலகதைகள் ஆ… பேசிடலாம் கலாபக்காதலா
இரண்டு நாட்கள் வேலை என்று சொன்னாலும் நான்கு நாட்களாக வேலை விஷ்வதீரனை இழுத்துக் கொண்டது. டில்லியில் சப்லையாகும் மெஸ்மரிசம் ப்ளூமூன் ஹோட்டலை போல் ஒரேயொரு ஹோட்டலில் தான் சப்லை பண்ண படுகிறது. யாரையோ பழிவாங்கணும்னு செய்யப்படும் செயலாக கருதிய விஷ்வதீரன் பல்லவனுக்கு டில்லியில் உள்ள ஹோட்டல் மெரின் குஈனுக்கும் என்ன சம்பந்தம் என்று தேட பல்லவனின் காலேஜ் தோழன் சுனில் பாண்டேயின் ஹோட்டல் என்றதும் அவனது விசாரணையின் கோணம் மாறியது.
ஆறு வருடங்களுக்கு முன் சுனில், பல்லவன், ஆரோஹி அனைவரும் ஒரே காலேஜ் என்றதும் ஆரோஹியிடமும் அவன் சில விடயங்களை கேட்டு உறுதி படுத்திக்க கொண்டான். 
அது நீது  என்னும் பெண்ணின் மரணம். காலேஜை உலுக்கி இருந்த மரணம் சுற்றுலா சென்ற இடத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்து போய் இருக்க, காலேஜ் பெயர் கேட்டு போய் வீடாக கூடாதென்று தவறி விழுந்து செத்துவிட்டாள் என்று கேஸ் மூடப்பட்டது. பணமும் கணிசமான அளவு கை மாறி இருப்பது விஷ்வதீரனின் விசாரணையில் தெரியவர, தோண்ட ஆரம்பிச்சது தான் இன்னும் முடிந்த பாடில்லை. 
நீத்துவுக்கு கூட பிறந்தவர்கள் யாருமில்லை என்ற நிலைமையில் அவளின் மரணத்துக்காக யாரோ பழிவாங்க தான் இதை செய்வதாக விஷ்வதீரன் உறுதியாக நம்ப, நீத்துவுக்கு காதலன் இருந்தானா என்ற கேள்வியும் முன் வந்து விசாரிக்க, அவள் யாரையும் காதலிக்கவில்லை. என்றே பதில் வந்தது. 
மண்டை காய்ந்து அடுத்து என்ன என்ற கேள்வியோடு விஷ்வதீரன் குழம்ப அவனது அலைபேசி அடித்தது. 
“ஹலோ விஷ்வதீரன் ஹியர்”
“ஹலோ சார் என்ன கண்டு பிடிக்க இவ்வளவு டைம் வேஸ்ட் பண்ணனுமா? உங்க எனர்ஜியெல்லாம் வீணாகுதே! புதுப்பொண்டாட்டிய இப்படி தவிக்க விட்டுட்டு என் பின்னாடி ஓடுறீங்களே! அவங்கள யாரு காப்பாத்துவாங்க? பாவம் அவங்களுக்கு வேற உயரத்துல இருந்தா பயம் இப்போ கூட பால்கனில ஒரு கதிரையை போட்டு அமர்ந்து கண்ண மூடிக்கிட்டு இருக்காங்க. கால் வேற கொஞ்சம் நடுங்குற மாதிரி இருக்கு. தவறி விழுந்துட்டா?’ என்றவன் அலைபேசியை அனைத்திருக்க விஷ்வதீரன் உடனே ஆரோஹிக்கு அழைத்து விட்டான். 
பயத்தை போக்க கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி செய்தவள் கால் நடுங்கினாலும் பரவாயில்லை. ஒரு ஐந்து நிமிடமாவது பால்கனியில் அமரனும் என்று கதிரையில் அமர்ந்தவாறே அதை இழுத்து இழுத்து வந்து பால்கனியில் அமர்ந்திருக்க அலைபேசி அடித்ததும் திடுக்கிட்டவள் மீண்டும் பின்னாடி தள்ளி தள்ளி சென்று அலைபேசியை இயக்கி காதில் வைத்தாள்.  
அவள் பதில் சொல்லும் வரை பதட்டத்தில் இருந்த விஷ்வதீரன் முதலில் சொன்னது பால்கனி கதவை மூடு என்பதே! விஷ்வதீரன் குரல் கேட்டதும், பயம் பதட்டமெல்லாம் பறந்தோட கதவை மூடிவிட்டு வந்தவள் 
“என்ன விஷ். என்ன பிரச்சினை?”
நொடியில் சமநிலைக்கு வந்தவன் “என்ன பண்ணிக் கொண்டிருந்த?” என்று கேக்க அவளின் முயற்சியை பற்றி சொல்ல ஒரு கணம் திகைத்து விட்டான் விஷ்வதீரன். 
போனில் பேசியவன் சொன்னது போல் தான் ஆரோஹி இருந்திருக்கிறாள். அப்போ அவன் நாங்க இங்க வந்ததிலிருந்து எங்களை பலோவ் பண்ணி கிட்டு இருந்திருக்கணும். விசாரணை கோணம் மாறியதால் எங்கே அவனை கண்டு பிடித்து விடுவேனோ! என்று பயந்து போய் ஆரோஹியை கண்காணித்து என்னை பயமுறுத்த பார்க்கின்றான்” தனது விசாரணை கோணம் தப்பாகவில்லை என்று புன்னகைத்து கொண்டவன். 
“நா வந்து கிட்டே இருக்கேன் பொண்டாட்டி” என்று அவளுக்கு குறிப்புக் காட்டிவிட்டு அவனுடைய டீமை அழைத்து சில உத்தரவுகளை இட்டவன் ஹோட்டல் அறைக்கு திரும்பினான். 
இந்த இரண்டு நாட்களாக ஆயிஷாவும் சலீம்பாயை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார். ஆரோஹி விஷ்வதீரனோடு தேனிலவுக்கு புறப்பட்டு போனதிலிருந்து முழுநேர வேலையாக குழந்தைகளை கவனிக்க வீட்டில் மற்ற எல்லா வேலைகளும் சலீம்பாயே பார்க்கவேண்டியிருக்க ஆயிஷா அவரிடம் மன்னிப்பு கேக்கலானார். 
“அட விடு ஆயிஷா, இந்த வீட்டுல எல்லா வேலையையும் நா தனியா பார்த்தவன் தான். என்ன சத்தமே இல்லாம இருந்த வீடு இப்போ குழந்தைகளால் நிறைஞ்சு இருக்கு. அது போதும். சந்தோசமா இருக்கேன்”   கடைசி வார்த்தையை அவர் ஆயிஷாவை பார்த்தவாறே தான் சொன்னார். ஆனால் அதை கண்டுகொள்ளத்தான் அவர் தயாராக இல்லையே!
குழந்தைகள் வெளியே ஓடி விளையாட “தண்ணீர் தொட்டி பக்கம் பாசி கட்டியிருக்கு பாத்து” என்று சலீம் பாய் சொல்ல வர அஜய் அப்பக்கமாக ஓட ஆயிஷா அவனை பிடிக்கப் போய் வழிக்கி விழுந்து விட்டார். கால் வேற பிசகி இருக்க அவரால் எழுந்து கொள்ளவே முடியவில்லை. குழந்தைகள் இருவரும் அழத்துவங்க, ஆயிஷா விழுவதை பார்த்துக் கொண்டே வந்த சலீம் பாய் கத்த, ஸ்கூபியும் தாவிவந்து குறைக்க ஆரம்பித்தது. 
சலீம்பாய் ஆயிஷாவை தூக்கிக் கொண்டு வர குழந்தைகளும் பின்னாடியே வந்தனர். அந்நேரத்தில் வீட்டில் யாரும் இருக்கவுமில்லை. ஆயிஷா விழும் போது நல்ல வேலையாக கையை ஊன்றி இருந்தார் இல்லையெனில் அடி இடுப்பில் பட்டிருக்கும். இந்த வயதில் அவருக்கு அது பெரிய கஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கும். 
டாக்டரை அலைபேசியில் அழைத்திருந்த சலீம் பாய் குழந்தைகளையும் ஆயிஷாவின் கட்டிலுக்கு அருகே உள்ள சோபாவில் அமர்த்தி அவருடைய காலை பரிசோதிக்க கால் வீங்கி இருந்தது, இரண்டு சொட்டு கண்ணீர் ஆயிஷாவின் பாதம் நனைக்க துணுக்குற்றார் ஆயிஷா. 
டாக்டர் வந்து பார்த்து விட்டு கட்டுப்போட்டு இரண்டு நாளைக்கு அசைக்க கூடாதென்று சொல்லி விட்டு செல்ல, ஆயிஷாவுக்கு சேவகம் செய்யலானார் சலீம் பாய்.
இந்த இரண்டு நாட்களாக ஒரு வித இறுக்கத்திலேயே அவர் முகம் இருக்க, ஆயிஷாவோடு அதிகம் பேசவும் இல்லை. கழிவறைக்கு போகவேண்டிய போது கூட தயங்காமல் தூக்கிச்சென்று விட சங்கடமாக உணர்ந்தாலும், வேறு வழியில்லை என்பதால் மௌனமாகவே இருந்தார் ஆயிஷா. 
ஆரோஹி இருந்தால் பார்த்து பார்த்து செய்து இருப்பாள். அவளின் வாழ்க்கையில் இப்பொழுதுதான் ஒரு நல்லது நடந்திருக்கு அவளை தொந்தரவு செய்யக்கூடாது என்று முடிவெடுத்தவர் வழுக்கி விழுந்ததை அலைபேசியில் சொல்லாது ஆரோஹியிடமிருந்து மறைத்து விட்டார். 
“பேசாம நஸீஹ கிட்ட அமெரிக்கா போய் விடலாமா?’ என்ற எண்ணமும் தோன்ற “போறதுக்கு கால் சரியாகணுமே!” அலுப்பாக நினைத்துக் கொண்டார்.    
கையிலும் கொஞ்சம் வலி இருந்தது அதை சொல்லாது இடது கையால் சாப்பிட அதை கவனித்த சலீம் பாய் சாதத்தை பிசஞ்சு கரண்டி போட்டு கொடுக்க “ஏன் ஊட்டி விட மாட்டாராமா?” ஆயிஷாவின் மனம் கேள்வி கேக்க ஒருகணம் திகைத்து விட்டார். 
இந்த இரண்டு நாட்களாக ஒரு குழந்தையை பார்த்துக் கொள்வது போல் பார்த்துக் கொள்ள அனைவரும் சொல்வது போல் ஒரு துணை தேவைதானா என்ற எண்ணம் ஆயிஷாவின் மனதில் எழ ஆரம்பித்தது.
விஷ்வதீரன் அறைக்கு வந்த உடன் ஆரோஹியை அழைத்துக் கொண்டு தேன்நிலவுக்காக சிம்லா புறப்பட்டான். வரும் போது முகம் இறுகி இருக்க அவர்களுக்கிடையில் எந்த பேச்சு வார்த்தையும் இருக்கவில்லை. சிம்லா வந்த உடன் அப்படியே மாறிப்போனான். 
சிம்லாவை அடைய நடு இரவு நெருங்கவே வழியிலேயே உணவை முடித்துக் கொண்டவர்கள் ஏற்கனவே பதிவு செய்திருந்த ஹோட்டல் அறையை வந்தடைந்தனர்.
அறைக்கு வந்த உடனேயே ஆரோஹி கத்துவதையும் கணக்கில் எடுக்காது  தூக்கி தட்டாமாலை சுற்ற ஆரோஹியோ கண்களை மூடி அவனது தோள்களை இறுக்கிப் பிடித்திருந்தாள். 
ஒருவாறு அவளை கீழே இறங்கியவன் கைகளில் ஏந்தி கட்டில் கிடத்தி அவனும் கூடவே சரிய ஆரோஹியின் உடலில் மெல்லிய நடுக்கத்தை உணர்ந்தவன்
“மூணு அடி கூட தூக்கல இதுக்கு இப்படி நடுங்குறியே” விஷ்வதீரன் அவளின் காதில் கிசுகிசுத்தவாறே அவளை அணைத்துக் கொள்ள ஆரோஹியும் அவனுள் புதைத்தாள். 
இதமான காலநிலையும், ஆருயிர் காதலியும் ஒன்று சேர கிடைத்திருக்க விஷ்வதீரன் மெதுவாக முன்னேற 
“இப்போ வென விஷ் அப்பொறம் பாத்துக்கலாம்” ஆரோஹி முனகியவாறே சொல்ல 
“முடியாது, முடியாது அப்பொறம் எவனாச்சும் போன் பண்ணி சீக்கிரம் கிளம்பி வா னு சொன்னாலும் சொல்லுவான்” என்றவன் அவளை மேலும் பேச விடாது காதல் பாடம் கற்றுக் கொடுக்க 
ஆரோஹி வாய் வார்த்தையால் மறுத்தாலும், அவனோடு இழைய காத்திருக்கும் மனதை அவள் முகமே காட்டிக் கொடுக்க அவளின் கண், காது, மூக்கு, கழுத்து என்று முத்த ஊர்வலத்தை தொடங்க கண்கள் சொக்க அதை அனுபவித்தவள் கைகள் தானகாவே அவனை இறுக்கிக் கொள்ள அவளின் சம்மதம் கிடைத்து விட்ட கர்வத்தில், பத்து வருட காதலையும் ஒட்டு மொத்தமாய் காட்டி விடும் வேகம் கூட வன்மையாக அவளின் உதடுகளை சுவைக்க ஆரம்பித்தான் விஷ்வதீரன்.
முத்தமிட்ட மூச்சு திணறவைத்தவனின் முத்தத்திலேயே கரைந்து உருகி, அவனுள் புதைந்தவள் வெக்கம் வந்து தடுத்தாலும் மறுப்பேதும் சொல்லவில்லை. அவன் கொடுத்த வலிகளை கூட ஆழ்ந்து அனுபவிக்கலானாள் ஆரோஹி. 
காதல் பாடத்தை யார் கற்று கொடுத்தார்கள், யார் வெற்றியடைந்தார்கள் அவர்கள் இருவரும் மட்டுமே அறிவர்.  
அஜந்தா குகையின் சுவரோவியம் போல் காதலால் நிறைந்து வழிந்து கூடலில் இன்பம் கண்டவள் மன்னவன் மார்பை மஞ்சம் ஆக்கி துயில் கொண்டிருந்த  பெண்ணவளின் உறக்கத்தை கலைக்கவெனவே சூரியன் முயற்சித்தாலும், சிம்லாவின் காலநிலை அவர்களை இனிமையான கனவோடு தூங்க வைத்திருக்க பொறாமை கொண்ட பறவைகள் இசைமீட்டின.
பத்து நாட்களாக யார் தொந்தரவும் இல்லாது, எந்த வேலையும் இல்லாது, சிம்லாவை சுற்றி உள்ள எல்லா இடங்களையும் சுற்றி பார்த்தவர்கள் விசேஷமாக ஜாகூ குன்றில் உள்ள நூற்றி எட்டு அடி உயரமுள்ள ஹனுமார்  சிலையையும், சூரிய அஸ்தமனத்தை பார்வையிட சிம்லாவைச் சுற்றியுள்ள பள்ளத்தாக்கு மற்றும் பனி மூடிய மலைகள் அனைத்தையும் கவர்ந்திழுக்கும் ஸ்கேண்டல் பாயிண்ட் என்று பிரபலமாக அழைக்கப்படும் இந்த தட்டையான விசாலமான தளத்திற்கும், வட இந்தியாவின் இரண்டாவது தேவாலயமான கிறிஸ்து தேவாலயத்துக்கும் செல்ல மறக்கவில்லை. 
ஆரோஹியின் பயம் அறிந்து அவளை தன் கைவளைவிலேயே வைத்திருந்த விஷ்வதீரன் பத்து வருட காதலையும் ஒட்டு மொத்தமாக திரட்டி திகட்ட திகட்ட காதல் பாடம் நடத்தலானான்.
மீனம்மா அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே
அம்மம்மா முதல் பார்வையிலே சொன்ன வார்த்தையெல்லாம் ஒரு காவியமே
சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும்
மின்னல் போல வந்து வந்து போகும்
மோதல் வந்து ஊடல் வந்து முட்டிக்கொண்ட போதும்
இங்கு காதல் மட்டும் காயம் இன்றி வாழும்
இது மாதங்கள் நாட்கள் செல்ல
நிறம் மாறிடும் பூக்கள் அல்ல
ஒரு சின்னப் பூத்திரியில் ஒளி சிந்தும் ராத்திரியில்
இந்த மெத்தை மேல் இளம் தத்திக்கோர் புது வித்தை காட்டிடவா
ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பார்ப்பதற்கு
அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டு தீண்டுவதா
மாமன் காரன் தானே மால போட நானே
மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம்
மீனம்மா மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிர் காய்ச்சல் வரும்
அம்மம்மா வெயில் உன்னை அணைத்தால் இங்கு எனக்கல்லவா உடல் வேர்த்து விடும்

Advertisement