Advertisement

அத்தியாயம் 33
வெட்டி வீராப்பு காட்டி வீரவசனம் பேசி போலீஸ் என்ற திமிரை காட்டும் ரகமல்ல விஷ்வதீரன். பொறுமை எல்லை கடந்தாலும், சட்டுன்னு கையை நீட்டுபவனல்ல. புத்தியை தீட்டும் சாணக்கியன். பல்லவன் விஷயத்திலும் அவ்வாறே நடந்து கொண்டான். அவன் சாகும் தருவாயில் கூட ஆரோஹி தனக்கு யார்? பழிவாங்கவும் சேர்த்துதான் உன்னை வச்சி செய்கிறேன் என்று சொல்லி இருக்க முடியும். அதை கூட சொல்ல மாட்டான். தான் பார்க்கும் வேலை எவ்வளவு ஆபத்தானது. எப்படி பட்ட குற்றவாளிகளோடு மோத வேண்டி இருக்கும் என்று நன்கு அறிந்து செயல் படுபவன். ஆரோஹியை கரம் பிடித்த பின் அவளோடு சந்தோஷமான வாழ்க்கையை வாழ வேலை ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று முடிவெடுத்தவன் தான், அதன் படி குடும்பத்தார் மீது யாரும் கைவைக்க கூடாதென்பதில் மிக கவனமாக வேலை பார்க்கலானான். 
ஒருவழியாக பெண்களின் தொடர் கொலைவழக்கு முடிவடைந்தாலும் மெஸ்மரிஸத்தை சப்லை பண்ணுபவனை கண்டு பிடிக்க வேண்டி உள்ளது. அது மட்டுமல்லாது அது டில்லியிலும் சப்லை பண்ணுவது  அங்கே இறந்து போன பெண்களின் மூலம் அறியக் கிடைக்க, அங்கேயும் விசாரிக்கும் படி சொல்லியிருக்க பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லை. 
இதற்கிடையில் பாடசாலையும் விடுமுறை வழங்கப்பட ஆரோஹியோடு தேனிலவுக்கு செல்லலாம் என்று திட்டமிட குழந்தைகளை ஆயிஷா பார்த்துக் கொள்வதாக  சொல்ல வீட்டாரிடம் விடை பெற்று இருவரும் கிளம்பி இருந்தனர். 
தீரமுகுந்தன் பிங்கியிடம் கெஞ்சிக் கொஞ்சி காலில் விழாத குறையாக  கேட்டுப்பார்த்தும், முதல்ல ஒழுங்கா காதல் பண்ணு அப்பொறம் ஹனிமூன் போலாம் என்று கறாராக சொல்ல, வேலை விஷயமாக காஷ்மீர் கிளம்பியிருக்க பிங்கித்தான் அவனில்லாது திண்டாடலானாள். 
தீரமுகுந்தன் பிங்கியோடு கடுப்பில் தான் கிளம்பி இருந்தான். சொல்லிச் சொல்லி புரிய வைப்பதல்ல காதல். உணர்த்துவதே காதல் அதை சரிவர அவன் செய்யத்தவறினான். அதற்க்கு காரணம் பல்லவனின் கேஸும் தான். வீட்டுக்கே வர முடியாத சூழ்நிலை. இதில் அவளிடம் பேசுவதெப்படி. அவள் சிறு பிள்ளை போல் செல்லம் கொஞ்சவும். அவளோடு நேரத்தை செலவிடவும் எதிர்பார்க்க, அவனின் போலீஸ் வேலை அதற்க்கு நேரத்தை ஒதுக்க விடவில்லை. 
அவளின் ஆசையும் நியாயமானதே! லோங் ட்ரைவ், வீகெண்ட் சினமா, டின்னர் அவுட் தன்னவனோடு நேரம் செலவிட நினைப்பது தவறா? பிங்கி முறைக்க 
“அதுக்கு தாண்டி காஷ்மீர் போறோம்” 
“ஹனிமூனா போறோம்? நீ வேல விஷயமா போற. கொசுறா நா எதுக்கு? தனியா ரூம்ல அந்த குளிர்ல சாகுறதுக்கா? முதல்ல உன் வேலைய விட்டுத் தொல” 
என்ன நீ வேலைய விட சொல்லுற? புவ்வாவுக்கு என்ன பண்ணுறதாம்? மகாராணி சொத்து சேர்த்து வச்சிருக்கீங்களோ! ஒண்ணும் இல்ல. படிப்பும் கோட்ட விட்டிருச்சு” கிண்டலாக  சொன்னவன் இறஞ்சும் குரலில் “நா போனா மூணு மாசத்துக்கு வர முடியாது. மூணு மாசம் யார் தொந்தரவும் இல்லாம நாம மட்டும். நல்லா என்ஜோய் பண்ணலாம் வரும் போது எல்லாருக்கும் கிஃப்டா குட்டி பிங்கி பேபிய கொண்டு வரலாம்” அவளை அணைத்தவாறே சொல்ல 
படிப்பை பற்றி பேசியதில் கடுப்பான பிங்கி, அவனை தள்ளி விட்டு “பேசாம போறியா? இல்ல நா என் அம்மா வீட்டுக்கு போகவா? 
இவ்வளவு பேசியும் புரிந்துக் கொள்ளாதவளை அடிக்கும் வெறியில் இருந்தவன் “என்ன வேணாலும் செய்” என்று கிளம்பிச்சென்றவன் தான் நல்ல படியா வந்து சேர்ந்ததை கூட சொல்ல அவளை அழைக்க வில்லை. 
“விஷ் நாங்க ஹனிமூன் எங்க போக போறோம்?” டில்லி விமான நிலையத்தை வந்தடைந்த ஆரோஹி விஷ்வதீரனை கேள்வியாக ஏறிட,
“சஸ்பென்ஸ். இங்க கொஞ்சம் வேல இருக்கு அதையும் முடிச்சிட்டு போலாம். இங்கயே நிறைய  சஸ்பென்ஸ் காத்துக் கிட்டு இருக்கு” என்றவன் அவளை அழைத்துக் கொண்டு சென்றது அவளை சந்தித்த ஹோட்டலுக்கு அதே அறையை பதிவு செய்திருந்தான். 
அவனை ஒரு மார்க்கமாக பார்த்தவள் எதுவும் பேசாது அறைக்கு வர முற்றாக மாறுபட்ட அறையாகவே இருந்தது. நிறப்பூச்சு முதல் திரைசீலை வரை மாற்றப்பட்டிருக்க 
“என்ன விஷ்வதீரா உங்க போலீஸ் மூள அதே அறைக்கு வந்தா பழசெல்லாம் நியாபகத்தில் வரும்னு சொல்லிச்சா? பெட்ட கூட இந்த பக்கம் போட்டு இருக்காங்க இப்போ என்ன செய்வதாம்?”  குறும்பாக சிரித்தவாறே நாடகபாணியில் சொல்ல 
“ஹனிமூன் கொண்டாடிட வேண்டியதுதான், வேற என்ன செய்வதாம்?” என்று அவனும் சொல்லியவாறே அவளை அணைத்துக்  கொள்ள 
“குளிச்சிட்டு வரேன் விஷ்”
“இப்படியே ஏதாவது சொல்லிக் கிட்டே இரு” என்றவன் அழைப்பு வரவே அலைபேசியை காதில் வைக்க பேச்சு நீண்டு கொண்டே போனது ஒழிய அவனை ஆரோஹியின் பக்கம் திரும்ப விடவில்லை. 
குளித்து விட்டு வந்தவள் ஒரு பெருமூச்சு விட்டவாறே ஆயிஷாவுக்கு அழைத்து குழந்தைகளோடு பேச 
“மம்மி வரும் போது மறக்காம குட்டி பாப்பா கூட்டிக் கிட்டு வாங்க” அஜய் சொல்ல 
“பாப்பாவா?” ஆரோஹி யோசனையாக கேக்க 
“தங்கச்சி பாப்பாவே கூட்டிட்டு வாங்க, ரெண்டு தூக்கிட்டு வர முடியலைன்னா ஒன்னு கொண்டு வாங்க நாங்க பைட் பண்ணாம விளையாடுவோம்” விஜய் தெளிவாகவே சொல்ல 
“பிங்கி” என்று பல்லை கடித்தவள் “சித்தியா சொன்னா?” 
“டாடியும் சொன்னாங்க, சித்தப்பாவும் சொன்னாங்க” இருவரும் மாறி மாறி சொல்ல ஆரோஹியால் விஷ்வதீரனை முறைக்க மட்டுமே முடிந்தது. அவனோ கணனியில் மூழ்கி இருந்தான்.
அவளுக்கு என்ன தெரியும் அவளை தேன்நிலவுக்கு அழைத்து வர அவன் பட்ட பாடு. பிறந்ததிலிருந்தே ஆரோஹியை பிரிந்திராத குழந்தைகள் அவளின் பயணத்துக்கு தடையாக மாற கெஞ்சி கொஞ்சி கடைசி ஆயுதமாக தங்கையை கூட்டிக் கொண்டு  வருவதா சொல்லி சம்மதிக்க வைத்திருக்க, ஆரோஹியோ தான் சொன்ன உடன் குழந்தைகள் கேட்டுக் கொண்டதாக நினைத்து பெருமையடைந்தாள். 
அலைபேசி கைமாறவே ஆயிஷா பேசினார். 
 
“ரூஹி எல்லாருக்கும் வாழ்க இனிமையா இருக்காது. அத இனிமையாக்குறதும் பாழாக்குறதும் நம்ம கைல தான் இருக்கு. ஏதாவது பிரச்சினை இருந்து கிட்டே தான் இருக்கும். என் புருஷன் மிலிட்டரில இருந்ததால அவர் கூட இருக்கவே முடியல. சிலருக்கு கூட்டு குடும்பத்தால் பிரச்சினை, சிலருக்கு புருஷனே பிரச்சினை. சகிச்சு கிட்டு வாழறாங்கல்ல. என் பசங்க போலீஸ் வேலைல இருக்குறவங்க எப்போ வீடு வருவாங்கண்ணே தெரியல. அவங்க வெளில எந்த மாதிரி பிரச்சினைகளை சந்திச்சிட்டு நிம்மதியா இருக்க வீட்டுக்கு வந்தா பொண்டாட்டி இன் முகமா வர வேற்க்கணும். மாறாக நம்ம பிரச்சினைய அவங்க தலேல இறக்கி வைக்க கூடாது. புரிஞ்சுதா” 
விஷ்வதீரனை போலவே தீரமுகுந்தனும் ஆயிஷாவை ஆயிஷாம்மா என்றழைக்க மனம் குளிர்ந்து தான் போனார் அவர். அலைபேசியில் ஆரோஹியிடம் புத்திமதிகளை வாரி வழங்கினாலும் பார்வை முழுவதும் அருகில் இருந்த பிங்கியின் மீதே இருந்தது. தீரமுகுந்தன் சந்தோசமாக பிங்கியும் தான் காஷ்மீர் போகிறாள் என்று அவரோடு பகிர்ந்துக்க கொள்ள, அவன் இறுக்கமான முகத்தோடு தனியாக கிளம்பிச் சென்றது மட்டுமல்லாது அவளோ இங்கே முகம் வாடி பசலை நோயால் பாதிப்படைந்திருக்க, அவள் வீண் பிடிவாதம் பிடிப்பதாகவே அவருக்கு தோன்றியது. 
“என் புருஷன் மனசு கோணாம நான் நடந்து கொள்ளுறேன். நா கேட்டதுக்கு உங்க பதில் என்ன” 
அரோஹி எதை பற்றி கேக்கிறாள் என்று அறிந்தாலும் அறியாதது போல் “எந்த விஷயம்? எதுவானாலும் வந்து பேசுவோம்” என்று மழுப்ப 
“ஆயிஷாம்மா சலீம்பாய் உங்கள காதலிச்சாரு என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமல்ல, இந்த வயசுலயும் துணை தேவை என்று உணர்ந்து தான் சொல்லுறேன் ப்ளீஸ் யோசிங்க” ஆரோஹி இறைஞ்சலாக சொல்ல ஆயிஷா மௌனம் காத்தார். 
விஷ்வதீரன் சலீம் பாய் ஆயிஷாவை விரும்பியதாக கூற ஆரோஹி அவரிடம் நேரடியாகவே பேசி விட்டாள். 
முதலில் திகைத்தவர் “அப்படி எதுவும் இருக்காது, அவர் பார்வையில் கண்ணியம் இருக்கு, மரியாதையாக தான் நடந்து கொள்கிறார். வேறு யாராவதாக இருக்கும்” என்று மறுக்க, ஆரோஹி புரியும் படி சொல்லவும் ஆயிஷாவோ மறுத்து விட்டார். விஷ்வதீரன் தீரமுகுந்தன், பிங்கி என்று அனைவரும் மாறி மாறி பேசியும் அவர் மனதை கரைக்க முடியவில்லை. கடைசியில் ஆரோஹி தொடர்ப்பு கொண்டது அமெரிக்காவில் இருக்கும் ஆயிஷாவின் மகள் நஸீஹாவுக்கு.
“என்னமா? அப்பா கூட நீ என்ன சந்தோஷமான வாழ்க்கையா வாழ்ந்த? ஐஞ்சு வருஷம் வாழ்ந்திருப்பியா? வருஷத்துக்கு ஒரு மாசம் தான் எங்க கூட இருப்பாரு. எப்போ வாச்சும் உன் நிலமைல இருந்து யோசிச்சு பேசி இருப்பாரா? எல்லாம் அவங்க அம்மா சொன்ன படி தானே செஞ்சாரு? உனக்குன்னு ஒரு வாழ்க இருக்கு புரிஞ்சிக்க” 
“கட்டைல போற வயசுல இருக்கேன். வாழ்க்கையை பத்தி பேசாத?” 
“வயசான காலத்துல தான் துணை ரொம்ப முக்கியம்”
“ஊரு உலகமே கேவலமா பேசும். மருமகன் என்ன நினைப்பார்?”  தனது மகளுக்கு புரியவைக்க முயன்றார் ஆயிஷா. 
“அவரும் இங்க தான் இருக்கிறார்” நஸீஹா சொல்ல அலைபேசியை வாங்கிய நஸீஹவின் கணவன் பஷீர் “அத்த உங்களுக்கு வெளிநாட்டுக்கு வர விருப்பம் இல்ல. எனக்கு இங்க இருக்குறது  தான் பிடிச்சிருக்கு. உங்கள நாங்க வற்புறுத்தல, அவங்க அவங்க பிடிச்ச வழியில போய் கிட்டு இருக்கோம். மத்தவங்க என்ன சொல்வாங்க? என்ன நினைப்பாங்கனு பாத்தா? நாம வாழ முடியாது. இப்போவாச்சும் உங்க வாழ்க்கைய நீங்க  விரும்புறமாதிரி வாழுங்க” அவன் பேசவும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தவர்
“எனக்கென்ன குறை நா சந்தோஷமாக தானே இருக்கேன்” என்று சொல்லிக் கொண்டார். இன்று ஆரோஹி நியாபகப் படுத்தவும் பிறகு பேசலாம் என்று தள்ளி போட்டு அலைபேசியை அனைத்திருந்தார். 
“என்ன அத்தையும், மகளும் என்ன  ரொம்ப நேரமா பேசின மாதிரி இருக்கு?” விஷ்வதீரன் அவள் கழுத்து வளைவில் வாசம் பிடித்தவாறே கேக்க 
“அவங்க போலீஸ் மகன நல்லா கவனிக்க சொல்லுறாங்க”
“எங்..க? வீட்டுல ஹனிமூன் கொண்டாடலாம்னு பாத்தா அதான் ஹனிமூன் போக போறோமே! அங்க போய் பாத்துப்போம் னு சொன்ன, இங்க வந்தா போனும் கையுமா அலையுற” விஷ்வதீரன் குறை பட 
“யாரு நானா” அவளால் முறைக்க மட்டுமே முடிந்தது. 
“ஆரா நைட் வெளிய வேல இருக்கு. நா வர லேட்டா ஆகும் ஏதாவது சாப்டுட்டு தூங்கு. ஓகேவா”  
 
குறும்பாக புன்னகைத்தவாறே “பத்திரமா போயிட்டு வாடா விஷ்வதீரா. சேதாரமில்லாமல் வந்து சேர். நீ என் உடமை” 
“அப்படியா மகாராணி, தாங்கள் உத்தரவு நான் எக்காலமும் மீரா மாட்டேன்” என்றவன் சில, பல முத்தங்களை வாரி வழங்கியும், பரிசாக பெற்றுக்கொண்டுமே விடை பெற்றான்.
மண்ணைச்சேரும் முன்னே அடி மழைக்கு லட்சியம் இல்லை
மண்னைச் சேர்ந்த பின்னே அதன் சேவை தொடங்குமடி…
உன்னைக் காணும் முன்னே என் உலகம் தொடங்கவில்லை
உன்னைக் கண்ட பின்னே என் உலகம் இயங்குதடி…
மண்ணிலே செம்மண்ணிலே என் இதயம் துள்ளுதடி
ஒவ்வொரு துடிப்பிலும் உன் பெயர் சொல்லுதடி
கனவுப் பூவே வருக! உன் கையால் இதயம் தொடுக!
எந்தன் இதயம் கொண்டு 
நீ உந்தன் இதயம் தருக!
ஹோ ஹோ ஹே ஹே
மெல்லினமே மெல்லினமே 
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி 
அதை வானம் அண்ணந்து பார்க்கும்
தீரமுகுந்தன் காஸ்மீர் வந்து ஒரு வாரமாகி இருந்தது. அவனுக்கு கொடுக்கப்பட்டிருந்த மிஷன் தீவீரவாதிகள் பயன் படுத்தும் உயர் தொழில்நுட்ப நெட்வொர்க்கை கண்டு பிடிப்பதும். இராணுவ தகவல் தொழில்நுட்ப வலையமைப்பை மேலும் பாதுகாப்பானதாக மாற்றியமைப்பதுமே. 
அதற்க்கு அவன் பாடசாலை ஆசிரியர் போல் தான் போய் இருந்தான். அதுவும் இந்த வருடம் பொதுத் தேர்வுக்கு அமரும் மாணவர்களுக்கான சிறப்பு கணனி ஆசிரியராக சென்றிருந்தான். அவனுக்கென்று ஒரு தனி வீடு வழங்கப்பட்டிருக்க ஒரு அறையை படுக்கையறையாகவும். மற்றுமொரு அறையை காரியாலயமாகவும் மாறியிருந்தான். 
வந்த அன்றிலிருந்து வேலையில் இறங்கியவன் காலையில் பாடசாலையிலும் மாலையில் காரியாலயத்தில் என்று பொழுதை கழிக்க இரவில் பிங்கியின் நியாபகம் அவனை வாட்டி வதைக்க அவளுக்கு அழைக்கலாமா வேண்டாமா? என்று மனதோடு பட்டி மன்றம் நடத்துவதும், “அப்படியென்ன அவளுக்கு ஈகோ நான் அழைத்து வரவும் இல்லை. நான் தான் இறங்கிப்போகணுமோ?” என்று அவனுடைய ஈகோ தலை தூக்க அலைபேசியை வைப்பது என்று நாட்களை கடத்த 
இன்றும் பாடசாலையிலிருந்து வந்தவன் காரியாலயத்தில் புகுந்து வேலையில் மூழ்கிக் கிடைக்க அவனுடைய செல்ல ராட்சசியின் நியாபகம் அவனை படுத்தியெடுக்க, பொறுத்த்துப் பொறுத்து பார்த்தவன் இன்று அவளுக்கு அழைத்து விட்டான். அலைபேசி நீண்ட நேரமாக அடித்து ஓய்ந்தும் அவள் பதில் அளிக்கவில்லை என்றதும் கடுப்பில் அவளை திட்டித் தீர்த்தவாறே அருகில் இருந்த புத்தகத்தை எடுத்து எழுத ஆரம்பித்தான். 
அது அவன் இங்கு வந்ததிலிருந்து தொடங்கிய புதுப்பழக்கம். பிங்கியின் நியாபகம் வரும் போதெல்லாம் ஸ்ரீ ராம ஜெயம் போல் ஐ லவ் யு, என்றும், அவளை அணைக்கவும், முத்தமிடவும் தோன்றும் போது ஐ மிஸ் யு என்றும், ஈகோ தலை தூக்கும் போது, ராட்சசி என்றும் மூன்று புத்தகங்களில் எழுதி வருகிறான். 
இன்றும் அதே போல் எழுத ஆரம்பித்தவன் அறையில் எதோ மாற்றம் போல் தோன்ற, கண்களை கூர்மையாக்கி பார்க்க சில பொருட்கள் இடம் மாறி இருப்பது போல் தோன்றியது. அவனின் போலீஸ் மூளை விழித்துக் கொள்ள, யாராவது சந்தேகப்பட்டு உள்ளே நுழைந்து அறையை பரிசோதித்து இருப்பார்களா? என்ற எண்ணம் தோன்ற பின்னாடி யாரு இருப்பதாக தோன்றிய ஒரு கணம்  நொடி நேரமும் தாமதிக்காது வேகமாக சுழன்று திரும்பியவன் கண்ணிமைக்கும் நொடியில் பின்னால் இருந்தவளை இழுத்து கீழே சரித்து அவளின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்திருந்தான். 
நான் என்று சொன்னாலே நான் அல்ல நீ தான்
நீ இன்றி வாழ்ந்தாலே நீர் கூடத் தீ தான்
உன் சுவாசக் காற்றில் வாழ்வேன் நான்
எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயெனப் புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே
நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்களாகும்
நீ என்னை நீங்கிச் சென்றாலே
வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்களாகும்
நீ எந்தன் பக்கம் நின்றாலே
 தீரமுகுந்தன் பிங்கியை அழைத்து பேசாத கடுப்பில் இருந்தவள் ஈகோ தலை தூக்க தானும் அழைக்காது இருக்க பகல் பொழுது அஜய், விஜய்யோடு கழிந்தாலும் இரவில் தீரனின் அணைப்பு இல்லாமல் தூக்கம் கூட தூர ஓட செய்வதறியாது கண்ணீரில் கரைய ஆயிஷா பேசியது தனக்குத்தான் என்று புரிந்துக் கொண்ட பிங்கி
 “ஓவரா தான் பண்ணுறோமோ?” யோசிக்கலாகினாள். “இப்படியே இருந்தால் ஒன்னும் வேலைக்காகாது நான் தானே அவனை லவ் பண்ணுறேன். அவன் என்ன லவ் பண்ணவே இல்ல.  நானே இறங்கிப் போறேன்” பெருந்தன்மையாக இறங்கி வந்தவள் வீட்டாரிடம் விடை பெற்று தீரன் இருந்த இடம் நோக்கி பயணித்தாள். 
அவனுக்கு தகவல் சொல்ல வேண்டாம் என்று தீரமணியிடம் சொன்னவள் அவன் இருக்கும் வீட்டை ஒருவாறு தேடி கண்டு பிடித்து வந்து சேர அவன் பாடசாலை கிளம்பி சென்றிருக்க, 
“சரியான பங்சுவாலிட்டிக்கு பொறந்தவன். இந்த குளிரிலும் எப்படித்தான் டைமுக்கு போறானோ!” சிரித்துக்  கொண்டவள். சாவியை இங்கு எங்கயாவது வைத்து விட்டு போய் இருப்பானோ என்று தேடிப்பார்க்க அது இல்லை. 
“பிங்கி வர வர உனக்கு புத்தி மங்கிப் போச்சு. அவனே போலீஸ் திருடனுக்கு ஹெல்ப் பண்ண சாவிய விட்டுட்டு தான் போவான்” கழுத்தை நொடித்தவள் தலையில் இருந்த பின்னை உருவி கதவை திறந்தவள் அதே போல் பூட்டியும் விட்டு, வீட்டை அலசலானாள். 
ஒரு குட்டி வாசல் வாசலோடு சமையலறை வலது புறம் இரண்டு அறைகள் நடுவில் குளியலறை. ஒரு அறைக்கதவை திறக்க அது படுக்கையறையாக இருந்தது. மிகவும் நேர்த்தியாக படுக்கை விரிப்பு இருக்க அதுவே சொன்னது அவன் அங்கே தூங்கவே இல்லை என்று. ஒரு பெருமூச்சு விட்டவள் அடுத்த அறைக்குள் புக அது காரியாலயமாக தோன்ற ஒரு சோபாவும், டீவியும்,  மேசை விளக்கோடு ஒரு பெரிய மேசையும் இருந்தது. சோபாவில் படுக்கை விரிப்பும், தலைகனையும் இருக்க மேசையில் நிறைய புத்தகங்கள். 
சமயலறைக்குள் புகுந்தவள் சாப்பிட என்ன இருக்கு என்று பார்க்க பெரிதாக ஒன்றும் இல்லை. வீட்டில் இருந்து கொண்டு வந்த கொஞ்சம் பொருட்களை வைத்து இலகுவான சமையலை முடித்தவள், ஒரு தட்டில் இட்டு டிவியையும் இயக்க அதில்  ஒரு பென்ட்ரைவ் இணைக்கப் பட்டிருக்க, அதில் இருந்தது முழுக்க முழுக்க பிங்கியின் புகைப்படங்களே! 
சந்தோஷமாக அதிர்ந்தவளுக்கு விக்கல் கூட வந்து கண்களில் இருந்து கண்ணீர் வழிய விக்கியவாறே அனைத்து புகைப்படங்களையும் பார்த்தவள் அதிகமான புகைப்படங்கள் அவளுக்கு தெரியாமலேயே எடுக்கப் பட்டிருக்க உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவள் தண்ணீர் அருந்தி விட்டு வந்து மேலும் அவ்வறையை பரிசோதிக்க அவன் கைப்பட எழுதிய புத்தகங்கள் கண்ணில் சிக்கின. 
“ஐயா வாயால சொல்ல மாட்டாராம். விடலை பையன் மாதிரி புக்குல கிறுக்கி வச்சிருக்கான்” உள்ளுக்குள் சிலிரிப்பு ஓட “ஆளு தான் வளந்திருக்கானே ஒழிய, லவ்ல ஏ, பி, சி ல இருந்தே ஆரம்பிக்கிறான். சரியான லூசு போலீஸ்” மனதுக்குள் அவனை கொஞ்சிக் கொண்டவள் வீட்டை பூட்டிக் கொண்டு வெளியேறினாள். 
சமையலுக்காக பொருட்களை வாங்கியவள், அங்கே இருந்த பூக்கடையில் ரோஜாக்களை வாங்கி கொண்டு வீடு வந்து இரவு சமையலையும் முடித்து விட்டு ரோஜா இதழ் கொண்டு கட்டிலையும் அலங்கரித்தவள்  குளித்து விட்டு தீரன் வரும் வரை ஒரு குட்டித்த தூக்கம் போடலாம் என்று கண்ணயர்ந்து விட்டாள். 
வீடு வந்த தீரமுகுந்தன் காரியால அறைக்குள் புகுந்திருக்க பிங்கி வந்தது அவனுக்கு தெரியவில்லை. அவன் வீடு வந்ததும் பிங்கிக்கு தெரியவில்லை. அலைபேசி அதிர்வு நிலையில் இருக்க வீட்டுக்குள் இருக்கும் அலைபேசி அடித்தது இருவருக்கும் தெரியவில்லை. 
வாசலில் அமர்ந்து அவன் வரவுக்காக காத்திருந்தவள் காரியால அறையில் சத்தம் கேக்கவே “ஓஹ் உள்ளதால் இருக்கியா? குளிர்ல உன் மோப்ப மூக்கு என்ன கண்டு பிடிக்கல போல” என்று சொல்லிக் கொண்டவள் மெதுவாக அடியெடுத்து காரியால அறைக்கதவை திறக்க தீரமுகுந்தன் சுவரை வெறித்து அமர்ந்திருந்தான். 
“என்ன பண்ணலாம்? கண்ண மூடலாமா? இல்ல முதுகுல ஏறிக்கலாமா?” விரலை கடித்து யோசித்தவள் மெதுவாக அடியெடுத்து வைக்க சுழன்று கீழே விழந்தது மட்டுமல்லாது நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்திருந்த தீரமுகுந்தனின் சிவந்த கண்களும், ஆவேசமாக மூச்சை இழுக்கும் கூர் நாசியுமே!  அவளின் முகத்துக்கு நேராக கணாக் கிடைத்தது.
இழுத்து சரிக்கும் போதே அது ஒரு பெண்ணென்று உணர்ந்துக் கொண்டவன் கண்கள் பயத்தால் விரிந்த, அதிரிச்சியால் உதடுகள் திறந்திருந்த பிங்கியை காணவும் காதல் பெருக்கெடுக்க அவள் மேலேயே சரிந்து ஒருவாரமாக அவனை படுத்தியெடுத்ததுக்கான தண்டனையாக அவளின் இதழ்களை வன்மையாக முத்தமிடலானான்.     
அடடா இது என்ன இது என்ன 
எனக்கு ஒன்னும் புரியலையே புரியலையே 
அடி எனக்கென்ன எனக்கென்ன 
நடந்துச்சு தெரியலையே தெரியலையே…… 
நிழலாக கிடந்தேன் நான் 
நிசமாவே நிமிர்ந்தேன் நான் 
உன்னப்பாத்து தொடுவானா ஒசந்தேன் நான்
ஆசை அலை பாயுது பாயுது 
ஆள போலி போடுது போடுது 
ஏனோ ஒரு மாதிரி ஆகுதடி 
தேகம் குடை சாயுது சாயுது 
பார்வை பட காயுது காயுது தானா உயிர் தீயில வேகுதடி 
 
மோகம் ஒரு நாடம் போடுது வேணாம் அத பாக்காதே 
சூடா பல செய்தியும் பேசுது நீயும் தலை ஆட்டாத
மொத்த ஜென்மம் ஓய்ஞ்சு போச்சே 
ஒத்த பார்வையில…

Advertisement