Advertisement

அத்தியாயம் 30
விஷ்வதீரன் டிடெக்டிவ் மூலம் அறிந்த விஷயம் தான் ஆரோஹி, ஆகாஷின் தொடர்ப்பின் காரணமாக நிஷா தற்கொலை பண்ணிக்க கொண்டதும், ஆகாஷ் ஆக்சிடண்டில் இறந்து விட்டான் என்றதும். அதை அவனால் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இன்னும் தீர விசாரிங்க என்று சொல்ல, ஆகாஷ், நிஷாவின் காதல், கல்யாணம் இரண்டிலும் ஆரோஹி நெருங்கிய தோழி. அப்படி இருக்க நிஷா ஏன் தற்கொலை பண்ணிக் கொண்டாள்? அதற்க்கு காரணம் ஆகாஷின் நடவடிக்கைகளே! என்று அறியவரா, அவனுக்கு என்ன பிரச்சினை இருந்திருக்கும்?  என்று விசாரிக்க அதை பற்றி எந்த தகவலும் சரிவர கிடைக்கவில்லை. ஆக்சிடண்டில் அவன் அலைபேசியும் தொலைந்து போனதுதான் கண்டு பிடிக்க முடியாமல் போனதுக்கு ஒரு காரணமாக இருக்க, அவன் சந்தேகப்பட்டது போல ஒரு குழந்தை ஆகாஷின் குழந்தை என்று நினைத்திருக்க, பல்லவனின் வாக்கு மூலம் மறைந்த அத்தியாயத்தை வெளிச்சம் போட்டு காட்டி இருந்தது.  
நிஷா கத்தவும் ஆகாஷ் தள்ளாட அடித்து பிடித்து ஓடி இருந்தாள் ஆரோஹி. அங்கே அவள் கண்ட காட்ச்சியில் கால்கள் பலமிழக்க தரையில் வீழ்ந்தாள் அவள். 
ஆரோஹிக்கு மேலே இருந்து கிழே பார்த்தால் தலை சுற்றி, மயக்கம் வரும். பால்கனியின் அருகில் கூட செல்ல மாட்டாள். நிஷாவோ பால்கனியின் விளிம்பில் ஏறி இருந்தாள். 
“ஆகாஷ் சீக்கிரம் வா நிஷாவை காப்பாத்து” ஆரோஹியால் கத்த மட்டுமே முடிந்தது. ஒரு இன்ச் கூட கால்களை நகர்த்த முடியவில்லை. 
ஆகாஷ் தள்ளாடியவாறே வர 
“ஐ லவ் யு ஆகாஷ், நா உன்ன மட்டும் தான் காதலிச்சேன். இன்னொரு ஜென்மம் இருந்தா உன்ன மட்டுமே காதலிக்கனும் ஆகாஷ், உன் கூட சேர்ந்து நூறு வருஷம் வாழனும். ஐ லவ் யு லோட்.  ஆகாஷ் என்ன மன்னிச்சுடு, உன் வாழ்க்கைல வந்து, உன் வாழ்க்கையை நாசமாக்கிட்டேன். யாரோ தொட்ட உடம்பு எனக்கு வேணா, சொல்லி இருக்கலாம்ல, சொல்லி இருந்தா எப்போவோ” கண்ணீர் ததும்ப இறுகிய குரலில் பேசிக்கொண்டிருந்தவள் பால்கனியிலிருந்து குதித்திருந்தாள்.  
“ஆரோஹி மயக்கம் போட்டு விழ, ஆகாஷ் “நிஷா” என்று கத்தியவாறே கீழ் தளத்தை நோக்கி ஓடினான்.
முடிந்தது எல்லாம் முடிந்தது. நிஷா உலகை விட்டு சென்று இன்றோடு மூன்று நாட்களாகி இருக்க, குழந்தை வேறு அழுத வண்ணமே இருந்தது. ஆரோஹி குழந்தையையும், ஆகாஷையும் பார்த்துக்கொள்ள நிஷாவின் தற்கொலைக்கான காரணத்தை தேடி போலீஸ் வீட்டுக்கு படையெடுக்க அந்த குடியிருப்பு மக்கள் சொன்னது ஆரோஹியோடு கள்ள தொடர்ப்பில் ஆகாஷ் இருந்தமையால் நிஷா தற்கொலை பண்ணிக்க கொண்டாள் என்பதே!  
நிஷாவுக்கு நடந்த கொடூரம், அவள் சாவுடனையே போகட்டும், உண்மையை  தோண்டியெடுத்து அவளை மேலும் சீரழிக்க ஆரோஹி தயாராக இல்லை. 
ஆகாஷ் முற்றிலும் உடைந்து நடை பிணமானான். சதா நிஷா, நிஷா என்று புலம்புபவன் நன்றாக குடித்து விட்டு வண்டியோட்டி அக்சிடண்டில் போய் சேர்ந்து விட்டான். அப்படித்தான் போலீஸ் ரெகாடில் இருந்தது.
ஆனா உண்மையில் நிஷா இல்லாத உலகத்துல இனிமேலும் வாழப்பிடிக்காம வேண்டுமென்றே நன்றாக குடித்து விட்டு வண்டி ஓட்டி இருக்கிறான்.  எதிரே வந்த லாரில போய் பலமா மோதி… சற்று நேரம் அமைதியானவள் “சாகும் போது போன்ல என்ன கூட பேசி கிட்டு தான் இருந்தான். குழந்தைய அனாத ஆசிரமத்துல விட்டுட சொன்னான். எல்லாரும் இருந்தும் நானும் ஒரு அநாத. அவன் தான் எனக்கு உறுதுணையானான். அவனுக்காக வாழனும் னு முடிவு பண்ணேன். டில்லில இருக்க பிடிக்காம மும்பாய் போய்ட்டேன். ஒரு தடவ பைக்ல இருந்து விழுந்துட்டேன். அப்போ ஹாஸ்பிடல்ல வச்சி இன்னொரு குழந்தையையும் தத்தெடுத்தேன். குழந்தைய போட்டுட்டு போக அந்தம்மாக்கு எப்படி மனசு வந்ததுன்னு தெரியல, என்ன கஷ்டமோ! 
“ஹாஸ்பிடல்ல வச்சி இன்னொரு உண்மையையும் எனக்கு கிடைச்சது. அது குழந்தை ஆகாஷோட குழந்தைனு. குழந்தைக்கும், ஆகாஷுக்கும் ரேர் பிளட் குரூப். தன்னோட குழந்தைனு தெரியாமலேயே ஒதுக்கி, முகத்தை கூட பாக்காம போய் சேர்ந்துட்டான்.     
“எதுக்கு டாக்டர் லவ் பண்ணுறாங்க சந்தோஷமா சேர்ந்து வாழத்தானே! வீட்டையும் எதிர்த்து, சொந்தபந்தங்களை பகச்சிக்  கிட்டு ரெண்டு பேரும் ஒருத்தர் மீது ஒருத்தர் வைத்த நம்பிக்கைலதானே காதலிக்கிறாங்க? காதல்னா என்ன? ஜஸ்ட் உடல் இச்சையை தீர்த்துக்கிறதா? ஆக்சிடண்ட்டுல கையோ, காலோ போனா கூட கடைசி வரைக்கும் உன் கூடவே இருப்பேன்னு சொல்லுற காதல், கற்பு பறிபோனா மட்டும் ஏத்துக்க மாட்டேங்குறது ஏன்?”
இதே ஆகாஷ்  கல்யாணத்துக்கு முன்னாடி  தப்பு பண்ணானே? அதுக்கும் ஒரு வெறிபிடிச்ச மிருகம் பண்ணதுக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கு? ரெண்டு பேர் விரும்பி செஞ்சா பரவால்ல, பொண்ணோட விருப்பமில்லாம குதறியெடுத்தா அவ பாவப்பட்டவளா? கற்பு பறிப்போச்சா? தீண்ட தகாதவளா? புரியல எனக்கு சுத்தமாக புரியல?” 
“என்னையும் ஒருத்தன் நாசம் பண்ணிட்டான்னு நினைச்சி கிட்டு இருந்தேன். அன்னைக்கி போதைல ஒருத்தன் என்ன கிஸ் பண்ண பாத்தான் அவன் முகம் கூட தெளிவா நியாபகம் இல்ல. அவன தடுக்கவும் என் உடம்புல தெம்பில்லை. அவன் என்ன கிஸ் பண்ணும் போதே நா மயங்கிட்டேன். கண் முழிச்சி பாத்தா யாருமே அங்க இல்ல. ஒருவேளை கனவோன்னு தோணிச்சு, நா எப்படி இந்த ரூம்க்கு வந்தேன்னு குழப்பம் வேற, நா உடுத்தி இருந்த ப்ரோக் மெட்டீரியல்  வேற ஸ்ட்ரெச்சபல் இடுப்புக்கு மேல ஏறி இருந்துச்சு.  ஒருவேளை தூக்கத்துல உருண்டு புரண்டதால.. குழம்பியவாறே தான் வீட்டுக்கு போனேன். பத்து மாசம் கழிச்சு நிஷாக்கு அப்படியொரு அநியாயம் நடந்ததுன்னு தெரிஞ்சப்போ யாரோ பிளான் பண்ணி பண்ணி இருக்காங்கனு நினச்சேன். என் கற்பு பறிபோச்சேனு கதறிக்கிட்டு இருக்க என்னால முடியல, அதுக்கு நேரமும் இருக்கல,   நிஷா, ஆகாஷ் னு எல்லாரும் என்ன விட்டு போனப்போ குழந்தையும் நானும் தான் எஞ்சினோம். விஷ் என்ன கல்யாணம் பண்ண கட்டாயப்படுத்தினப்போ இந்த விஷயத்த சொல்லி கல்யாணத்த நிறுத்தணும்னு தான் நினச்சேன். அத சொல்ல தைரியம் வரல, அத சொன்னா கூட அவன் கல்யாணத்த நிறுத்தமாட்டான். ரெண்டு குழந்தைக இருக்குனு தெரிஞ்சிக்கிட்டு தானே கல்யாணம் பண்ண பாத்தான்னு குழந்தைகளை காரணம் காட்டி கல்யாணத்த நிறுத்த பாத்தேன்.  ஆனா அன்னைக்கி என்ன கிஸ் பண்ணவன் அவன் தான்னு தெரிஞ்சப்போ அலையடிச்சு கிட்டு இருந்த என் மனசுல அப்படியொரு அமைதி வந்துச்சு. 
“ஏன் அப்பா கூட என் அம்மாவ ரொம்ப லவ் பண்ணாரு, அவங்கள மாதிரி காதலர்கள் இந்த உலகத்துலேயே இல்லனு நினச்சேன். அம்மா செத்து ஒருவருஷத்துல இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. வேணான்னு சொல்லல, தனிமைல அம்மாவ நினைச்சி கிட்டே அவரு வாழணும்னும் நா சொல்ல மாட்டேன். என் கேள்வி அப்போ அவர் அம்மா மேல வச்ச காதல் பொய்யா? உடல் தேவைக்காக கல்யாணம் பண்ணிகிட்டாரோ? மனத்தேவைக்காக கல்யாணம் பண்ணிகிட்டாரோ? அந்த பெண்ணை முழுமனஸா காதலிப்பாரா?” கண்களில் நீர் வழிய நின்றவள் மேலும் பேச முடியாமல் தொண்டையை அடைக்க 
தண்ணீரை பருகி நீண்டதொரு மூச்சை இழுத்து விட்டு “There is no such thing as love in this world. Everything is illusion. Only selfishness. {இந்த உலகில் காதல் என்று எதுவும் இல்லை. எல்லாம் மாயை. சுயநலம் மட்டுமே} உடல் தேவை தீர்ந்தபின் காதல் அழிஞ்சிடும். இதுதான் என் மனசுல ஆணித்தரமாக பதிஞ்சு இருந்தது டாக்டர். அத மாத்தவேனு ஒருத்தன் வந்தான். என் விஷ். என் விஷ்.  பத்து வருஷமா என்ன லவ் பண்ணுறானாம்” சொல்லும் போதே வலி நிறைந்த புன்னகையை சிந்தியவளின் கண்ணுக்குள் விஷ்வதீரனின் சிரிக்கும் முகம். 
அர்ச்சனா மீண்டும் ஒரு தடவை கேமராவை பார்க்க, திரையில் ஆரோஹியை பார்த்துக் கொண்டிருந்த விஷ்வதீரனின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து ஆரோஹியின் படம் தெளிவில்லாமல் விழுந்திருந்தது. 
“சாரிடி, அவசரப்பட்டு உன் கழுத்துல தாலிய கட்டி, உன்ன தேடியும் வராம, போதைல இருக்குறத பார்த்து, போலீஸா இருந்தும் என்ன நடக்குதுன்னு புரிஞ்சிக்காம, இன்னைக்கு வரைக்கும் அந்த ரூம்ல என்ன நடந்ததுன்னு தெரியாம எவ்வளவு வேதனை பட்டிருப்ப? மால்ல பார்த்தப்போ நா வந்து பேசி இருந்தா எல்லா குழப்பமும் தீர்ந்திருக்கும். உன்ன பழிவாங்கனு வேற கிளம்பி. சாரி டி. உன் மனசுல வேதனை இருக்கு என் காதல் உன்ன காதலிக்க வைக்கும்னு மட்டுமே நினச்சேனே ஒழிய உன் வேதனை என்னனு ஒருதடவை கூட கேக்காம விட்டுட்டேன்! கேட்டிருந்தா கொட்டித்தீர்த்திருப்பியே! கண்களை பரபரவென துடைத்துக் கொண்டவன் ஆரோஹியை பார்க்க 
“நா என் விஷ் கூட சந்தோஷமா வாழனும், நூறு வருஷம் சேர்ந்து வாழணும்னு சில்லித்தனமா சொல்ல மாட்டேன். நா உசுரோட இருக்குற வர அவன் கூட முழுமனஸா  காதலிச்சு, ஒவ்வொரு நொடியையும் அனுபவிச்சு வாழனும். பயமா இருக்கு வார்த்தைகளால் அவனை ரொம்ப காயப்படுத்திட்டேன். எங்கே என்ன கை விட்டுடுவானோ? நம்பாமல் போவானோ? நிஷாக்கு  நடந்த மாதிரி எனக்கும் நடந்தா விட்டுட்டு போவானோ? பயமா இருக்கு ரொம்ப பயமா இருக்கு ஐ நீட் ஹிம் வெரி பேட்லி. ஐ லவ் ஹிம் லோட். அவன் அப்படி பண்ண மாட்டான்னு புரியுது, ஆனா மனசு ஏத்துக்கொள்ள மாட்டேங்குது, எங்க வார்த்தையால அவனை கஷ்டப்படுத்தி அவன் நிம்மதிய இல்லாம ஆக்கிடுவேனோனு பயமா இருக்கு. அடிக்கடி கனவு வேற வந்து தொல்லை பண்ணுது. சமீபகாலமா கொஞ்சம் குறைவு. ஐ திங்க் ஐ நீட் மெடிக்கல் டிரீட்மென்ட்” கண்ணீரோடு புன்னகைக்க அர்ச்சனாவின் தொண்டையும் அடைத்தது. 
உந்தன் நெற்றி மீதிலே
துளி வேர்வை
வரலாகுமா
சின்னதாக நீயும்தான்
முகம் சுழித்தால்
மனம் தாங்குமா
உன் கண்ணிலே
துளி நீரையும்
நீ சிந்தவும் விடமாட்டேன்
உன் நிழலையும்
தரை மீதிலே
நடமாடவும் விடமாட்டேன்
ஒரே உடல்,
ஒரே உயிர்,
ஒரே மனம்
நினைக்கையில் இனிக்கிறதே
நீயே என் இதயமடி,
நீயே என் ஜீவனடி
ஒரு முறைபிறந்தேன்,
ஒரு முறைபிறந்தேன்
உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன்
மனதினில் உன்னை
சுமப்பதினாலே
மரணத்தை தாண்டி
வாழ்ந்திருப்பேன்
என் கண்ணில் உனை வைத்தே
காட்சிகளை
பார்ப்பேன்
ஒரு நிமிடம் உனை மறக்க
முயன்றதிலே
தோற்றேன்
நீயே என் இதயமடி,
நீயே என் ஜீவனடி
அர்ச்சனா விஷ்வதீரனின் பின்னால் சுத்தும் போது கூட ஆரோஹியை பற்றி அவன் சொன்னதில்லை. காதல் மட்டும் வாழ்க்கையில்லை. வாழ்க்கையில் சாதிக்க வேண்டியவை நிறைய என்று படிப்பில் கவனம் செலுத்தியவள் விஷ்வதீரனின் சாதனைகளை டிவி, பத்திரிக்கையின் மூலம் அறிந்து கொண்டு அவனுக்கு சரி சமமாக தன்னை வளர்த்த பின்னே அவன் முன்னாடி போய் நிற்க வேண்டும் என்ற பிடிவாதத்துடன் தன்னை வளர்த்துக் கொண்டு அவன் முன் நின்றாள். அவள் காதலை நேரடியாகவும், மறைமுகமாகவும் சொல்லியும் விலகுபவனை என்ன செய்வது? எங்க போய்ட போறான் என்றிருக்க விஷ்வதீரனின் திடீர் கல்யாணம் கேள்விப்பட்டவள் ஆடித்தான் போனாள். ஆரோஹியை கண்டு அப்படி ஒன்றும் உலக அழகியல்ல, என்று நொடித்துக் கொண்டவளுக்கு அறியக்கிடைத்தது ஆறு வருடங்களுக்கு முன்பே கல்யாணம் நடந்து விட்டது, ஐந்து வயதில் ட்வின்ஸ் இருக்கிறார்கள். “சொல்லி இருந்தால் என் மனசுல ஆசைய வளர்த்திருக்க மாட்டேனே என்று அவன் மேல் கோபம் கொண்டாலும். அவளோ மனநலமருத்துவர் அவளின் மனதுக்கு மருந்து கொடுக்க அறியாதவளல்ல. 
இன்று ஆரோஹியை கண்டதும் முதலில் நினைத்தது அவளோடு சண்டை போட வந்து விட்டாளென்று. அதனால் தான் விஷ்வதீரனை அழைத்து வெறுப்பேத்தினாள். ஆனால் ஆரோஹி பேசப் பேச உண்மையில் காதல் எனறால் என்ன என்று அவளுக்கு புரிந்து விட்டது. பத்து வருடங்களாகியும் ஆரோஹியை மறக்க முடியாமல் தவித்த விஷ்வதீரனும், அவனை காதலித்தும் ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கும் ஆரோஹியும். அவளின் சந்தோஷத்துக்காக எதையும் செய்ய நினைக்கும் அவன். அவனின் நிம்மதி முக்கியம் என்று நினைக்கும் இவள். இதுதான் காதல்” உதட்டில் மெல்லிய புன்னகை மலர 
“ஆரோஹி இங்க பாருங்க உங்க அனுபவம் தான் உங்க பயத்துக்கு காரணம், சின்ன விஷயம் தான் வாரத்துல மூணு நாள் என்ன வந்து மீட் பண்ணுங்க, நா தார மெடிசின் மறக்காம எடுங்க எல்லாம் சரியா போய்டும் ஓகே வா” என்று அவளுக்கான மருந்துச்சீட்டை எழுதளானாள்.
ஆரோஹி பாடசாலைக்கு லீவ் சொல்லி விட்டு தான் மருத்துவமனைக்கு வந்திருந்தாள். பாடசாலை விடும் நேரம் கூட நெருங்க மீண்டும் பாடசாலைக்கு சென்று குழந்தைகளை அழைத்துக் கொண்டே வீடு செல்லலாம் என்ற முடிவோடு அலைபேசியை உயிர்ப்பிக்க விஷ்வதீரனிடமிருந்து அழைப்பு வந்ததாக காட்ட 
“எதுக்கு அழைத்தானோ!” என்று அஞ்சியவளாக அவனை  திருப்பியழைத்தாள். 
“சொல்லு ஆரா” 
“என்ன விஷ் குரல் ஒரு மாதிரி இருக்கு,  உடம்புக்கு ஏதும்” குரலில் பதட்டம் தொற்றிக் கொள்ள 
தொண்டையை செருமி “ஒரு குட்டி தூக்கம் போட்டேன் அதான் ஒரு மாதிரி இருக்கு” 
“மிஸ்ட் கோல் பாத்தேன், ஸ்கூல் டைம்ல கால் பண்ண மாட்டியே என்ன விஷயம்” ஆரோஹியும் சாதாரணமாக பேச 
“உன் கூட பேசணும் போல இருந்துச்சு அதான் எடுத்தேன், வேற ஒன்னும் இல்ல, இன்னைக்கி எர்லியா வர பாக்குறேன் ஓகே வா?” அவ்வளவு நேரம் இருந்த இறுக்கம் மறைந்து தாபம் எட்டிப் பார்க்க அவன் குரலும் குழைந்து ஒலிக்க
அவன் குரலில் உடல் சிலிர்க்க வெக்கம் பிடிங்கித்தின்ன  “ஓகே பாய்” உடனே அலைபேசியை நிறுத்தினாள்.
“பாய் டி பொண்டாட்டி”   
புன்னகை முகமாக போனை அனைத்தவள் ஆர்ச்சனாவிடம் விடை பெற, மருந்து சீட்டை கொடுத்தவள் 
“ஆரோஹி.. நீங்க சொன்னதை வச்சு பாத்தா உங்க ரெண்டு பேருக்குள்ளேயும் இன்னும் ஒண்ணுமே நடக்கலைனு மட்டும் தோணுது. ஒரு டெஸ்ட் எடுத்து பாத்தா அன்னைக்கி உங்க பஸ்ட்நைட்டு நடந்ததா? இல்லையானு தெரிஞ்சிடும்” அர்ச்சனா சிரித்தவாறே கண்ணடிக்க 
அவள் கிண்டல் செய்கிறாள் என்று புரிந்துக் கொண்டவள் “வேணாம் டாக்டர் கண்டிப்பா நடந்தாலும், நடக்காட்டிலும் என் புருஷன் கூடத்தான் இருந்திருக்கிறேன். எனக்கென்னமோ ஒண்ணுமே நடக்கலைனு தோணுது” என்று கிண்டலாக புன்னகைத்தவள் “அன்னைக்கி என்ன நடந்ததுன்னு அவருக்கு நியாபகம் இல்ல. அது மட்டுமில்ல இத சொல்லியே அவர வெறுப்பேத்த நல்ல சான்ஸ், உண்மை என்னனு தெரியாதவரைக்கும் ஓகே” என்றவள் பாடசாலைக்கு கிளம்பிச்சென்றாள்.  
அவளின் தலை மறைந்ததும் விஷ்வதீரன் இருந்த அறை கதவு திறக்கப்பட்டு அவன் வேக நடையோடு அர்ச்சனாவின் அறையை அடைந்தான்.
“ஈஸ் ஷி ஓல் ரைட்” அவளின் மேஜையின் இருபுறமும் கைகளை ஊண்டியவாறே கேக்க
“பதட்ட படாம முதல்ல உக்காருங்க மிஸ்டர்  விஷ்வதீரன்” 
அவசரமாக கதிரையை இழுத்து போட்டு ஆசிரியையிடம் பெறுபேறுக்காக காத்திருக்கும் மாணவன் போல் அவளை ஏறிட அர்ச்சனாவின் முகத்தில் பெரியதொரு புன்னகை. 
“ஐம் ரியலி சாரி விஷ்வா. உன்ன லவ் பண்ணுறேன்னு டாச்சர் பண்ணி, உன் கல்யாணம் நடந்தத தெரிஞ்சிக்க கிட்டு உன் மேல காண்டுல தான் இருந்தேன்.  ஆரோஹிய இங்க பாத்தப்போ முதல்ல என்ன கூட சண்டை போட வந்திருப்பாங்களோனு தான் நினச்சேன்” என்று புன்னகைக்க 
“டாக்..ட..ர்.. என் வைப் பத்தி மட்டும் பேசுவோமா? என் மனைவிக்கு ஏதாவது ப்ரொப்ளமா?” பற்கள் நறநறவென அரைபட கோபத்தை அடக்கியவன்
“ஓகே ஓகே கூல். ஆனா அவங்க டர்ன் வரும் வர வெயிட் பண்ணவும் நீயும் அவங்க மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சி கிட்டா நல்ல இருக்கும்னு தோனுச்சு, அதான் உன்ன அந்த அறையில அடச்சீ வச்சேன்” யோசனையாக சொன்னவள், டாக்டராக மாறி உன்.. அவங்களுக்கு உங்க லவ் ஒன்னே போதும். உங்கள இழந்திட கூடாதுனு மனதால் உறுதியா இருக்காங்க. அதுவே பாதி வெற்றி தான். உங்க அருகாமைல அவங்க ரொம்ப தைரியமா இருக்காங்க. அவங்களே புரிஞ்சிக்கிட்டு ட்ரீட்மென்ட் எடுக்கணும்னு நினைச்சது பாராட்டத்தக்கது. அவங்க பேசினத  பாத்தா உங்க சைட்ல எல்லாம் ஓகே னு தான் தோணுது. பட் அவங்க கூட அதிக நேரம் டைம் ஸ்பென்ட் பண்ண முடிஞ்சா இன்னும் நல்லா இருக்கும், உங்க வேலையால அது கொஞ்சம் கஷ்டம் தான் பட் ட்ரை பண்ணுங்க.  மெடிஸின்ஸ் அதிகமா ஒன்னும் இல்ல. கரெக்ட்டா பாலோவ் பண்ணா மூனே  மாசத்துல எல்லாம் சரியாகிடும். ஐ திங்க் ஷி ஹாஸ் சாம் கைன்ட் ஒப் போபியா.  உயரத்த பாத்தா பயம். அதுக்கும் ஒரு வழி பண்ணலாம் டோன்ட் ஒர்ரி. வேற ஒன்னும் இல்ல” 
“தாங்க்ஸ்” என்றவன் எழுந்துக்க கொள்ள 
“மிஸ்டர் விஷ்வதீரன் கூடிய விரைவில் என் கல்யாண பத்திரிகை வரும். மறக்காம மனைவியோட வந்து வாழ்த்திட்டு போங்க” என்று வணக்கம் வைக்க ஒரு தலையசைப்பிலேயே விடை பெற்றான் விஷ்வதீரன்.  
“ஒரு நிமிஷம் நீ கிடைக்க ஆரோஹி கொடுத்து வச்சிரக்கனும்னு நினச்சேன், ஆனா ஆரோஹி கிடைக்க நீயும் தான் கொடுத்து வச்சிருக்கணும்” இன்முகமாகவே சொல்ல அதற்கும் மௌனமே அவன் பதிலாய் இருந்தது.
வளையாமல் நதிகள் இல்லை
வலிக்காமல் வாழ்க்கை இல்லை
வருங்காலம் காயம் மாற்றும்…
நிலா ஒளியை மட்டும் நம்பி நிலை இல்ல வாழ்வதில்ல
மின்மினியும் ஒளிகொடுக்கும்….
தந்தையையும் தாயையும் தாண்டிவந்தாய்… தோழியே…
இரண்டுமாய் என்றுமே நான் இருப்பேன்
தோளிலே நீயுமாமே சாயும் போது…
எதிர்வரும் துயரங்கள் அனைத்தயும் நான் எதிப்பேன்
வெண்ணீரில் நீ குளிக்க விறகாகி தீ குளிப்பேன்…
உதிரத்தில் உன்னை கலப்பேன்
விழிமூடும் போதும் உன்னை பிரியாமல் நான் இருப்பேன்
கனவுக்குள் காவல் இருப்பேன்…
நான் என்றால் நானே இல்லை நீ தானே நானாய் ஆனேன்…
நீ அழுதால் நான் துடிப்பேன்
உனக்கென இருப்பேன்…உயிரையும் கொடுப்பேன்….
உன்னை நான் பிரிந்தால்
உனக்கு முன் இறப்பேன்
கண்மணியே…கண்மணியே
அழுவதேன்…கண்மணி….
வழித் துனையாய் நானிருக்க
வழித் துனையாய் நானிருக்க
வழித் துனையாய் நானிருக்க

Advertisement